கட்டுரை
சு.வெங்கடேசன்  

இக்கட்டுரை கணினியில் ஏற்றப்படும் இன்று உத்தப்புரம் தீண்டாமைச் சுவர் இடிக்கப்பட்ட 7ஆம் நாள் (12.5.2008). இன்று வழக்கம்போல் மாவட்ட ஆட்சியர் மலையடிவார வாசிகளிடம் சமாதானம் பேசப் போவார். உசிலம்பட்டிச் சாலையில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கார் பவனி நடந்தபடி இருக்கும். உறவின்முறையினர் உணவுப் பொருள்களும் பணமும் கொண்டு போய்க் கொடுத்தபடி இருப்பார்கள். எல்லாவற்றையும் பார்த்து ரசித்து, வாங்கிக்கொண்டு சட்டைக் காலரைத் தூக்கிவிட்டபடி அவர்கள் ஊடகங்களுக்குப் பேட்டி கொடுப்பார்கள். கைவசம் 10 லட்சம் ரூபாயும் 30 நாள்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களும் இருப்பதை மறைத்துக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கும் வண்ணப் புகைப்படம் ஒன்று நாளைய பத்திரிகையில் வெளிவரும். ஆனால், தலித் மக்களோ சூழ்ந்துள்ள பதற

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் மீதான தீண்டாமை வன்கொடுமைத் தடுப்புச் சட்டம் இயற்றப்பட்ட 1989ஆம் ஆண்டு, மதுரை மாவட்டம் எழுமலைக்கு அருகில் உள்ள உத்தப்புரம் என்னும் கிராமத்தில் தாழ்த்தப்பட்ட மக்கள் வசிக்கும் குடியிருப்பையும் சாதி இந்துக்கள் வசிக்கும் குடியிருப்பையும் பிரிக்கும் நீண்ட மதில் சுவர் எழுப்பப்பட்டது. கட்புலனாகும் இந்த மதில் சுவரை எழுப்பியதன் மூலம் 'காண மறுத்தல்' என்கிற அவர்களின் பிரிவினைக் கொள்கையைக் காண்பித்திருக்கிறார்கள் சாதி இந்துக்கள். 18 ஆண்டுகளுக்குப் பிறகுதான் இந்த அவமானம் இங்கு பேசுபொருளாகியிருக்கிறது. உத்தப்புரத்தில் காவல் துறை ஆவணங்களின்படி பிள்ளைமாருக்கும் தலித்துகளுக்குமான மோதல் 1947 முதலே இருந்துவருவதாகத் தெரிகிறது. 1989இல் தாழ்த்தப்பட்ட வகுப்பாருக

கட்டுரை
அசோகமித்திரன்  

வங்காளிகள் மட்டுமல்லாமல் வட இந்தியர் எல்லாருமே டகோர் என்றுதான் அழைக்கிறார்கள். தமிழில் அது தாகூர். அது எப்படி இவ்வாறு ஒலி மாற்றம் பெற்றது? மாற்றத்துடன் முடியாமல் அச்சொல்லை வைத்து ஒரு கேலி வாக்கியமும் இருக்கிறது. தாடி வைத்தவரெல்லாம் தாகூர் அல்ல. டகோர் தாகூர் ஆனது மட்டுமல்ல. தமிழில் அவர் ரவீந்திரநாத். ஆனால், அவருடைய ஆங்கிலக் கையப்பமே ரபீந்திரநாத் என்றுதான் இருக்கிறது. மிகவும் அழகான, நேர்த்தியான கையெழுத்து. ரவீந்திரநாத் இயல், இசை, நாடகம் எல்லாவற்றையும் தேர்ந்த கலைஞன் போலக் கையாண்டார். கலைஞனுக்குச் சமூகக் கடமைகளும் உண்டு என்ற முறையில் ஒரு மாறுபட்ட கல்வி முறையை அறிமுகப்படுத்தினார். மனிதனுடைய அறிவின் எல்லைகள் அவனுடைய மொழி, நாடோடு கட்டுப்படுத்தப்படக் கூடாது என்றும் செயல்பட்டார். வ

கட்டுரை
ந. முருகேச பாண்டியன்  

நவீன வாழ்க்கையின் நெருக்கடி காரணமாக மனிதன் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் அளவற்றவை. எல்லாக் கேள்விகளுக்கும் விடை அறிந்தது போன்ற நிலையிலும், ஒவ்வொரு தடவையும் ஆரம்பத்திலிருந்து புதிதாகத் தொடங்க வேண்டியுள்ளது. வாழ்வின் வினோதங்களையும் புதிர்களையும் அவிழ்த்து, எளிய விடைகளைக் கவித்துவமாகச் சொல்லிவிடத் துடிக்கும் கவிஞன், மின்னல் கீற்றெனத் தெறிக்கும் சொற்களைத் தேடி அலைய நேரிடுகிறது. நேற்றைய மொழியின் பழமை யும் சொற்பொருளின் இருண்மையும் வழக்கிழந்த கற்பனைகளும் கவிஞனின் இருப்பினைக் கேள்விக்குட்படுத்துகின்றன. வாழ்க்கையை எளிமையாக மதிப்பிடும் மனம் காலத்தினால் மிகவும் பின்தங்கியது. எனவேதான் நவீன கவிஞனின் பாய்ச்சல், இதுவரையிலான மதிப்பீடுகளின் போலித்தனங்களை மறுதலிக்கிறது. இத்தகு சூழலில் பெண் மொழிய

கட்டுரை
க. ம. தியாகராஜ்  

ஆண்டுதோறும் மே முதல் நவம்பர் வரை இந்தியப் பெருங்கடலின் வடபகுதியில் வெப்ப மண்டலப் பருவகாலப் புயல்கள் தோன்றுவது வழக்கம். இவ்வருடத்தின் முதல் புயல் "நர்கீஸ்". இந்தக் கோரமான புயலுக்கு "நர்கீஸ்" (உருது மொழியில்) என அழகிய மென்மையான மலரின் பெயரை பாகிஸ்தான் ஏன் சூட்டியது என்ற காரணத்தை பாகிஸ்தான் மட்டுமே அறியும். நமது இந்தியாவைப் பொறுத்தமட்டிலும் "நர்கீஸ்" என்றவுடன் நினைவுக்குவருவது 1950களில் இந்தித் திரைப்பட உலகின் மகுடம் தாங்கிய பேரரசி 'நடிகை நர்கீஸ்'தான். நர்கீஸ் நடித்து அவருக்கு இந்தியாவில் மட்டுமல்லாது அரேபிய நாடுகளிலும் ரஷ்யாவிலும் மாபெரும் ரசிகர் படையைப் பெற்றுத்தந்த படம் மதர் இந்தியா. இந்தத் திரைப்படத்தில் நர்கீஸ் படும் துன்பங்கள் கொஞ்சமல்ல. அவற்றுள் கணவன் ஏர் உழ, ஒரு பக்கம் ஒரு

சிறுகதை
கோகுலக்கண்ணன்  

ரத்தம். தொட்டால் கையில் ஒட்டிக்கொள்ளும் விதத்தில் நிஜமான ரத்தம். படுக்கை விரிப்பின் வெள¤ர்நீல வண்ணம் செக்கச்செவேலென்று மாறியிருக்கிறது. டேவிட் உற்றுப்பார்த்தான். லிஸா ரத்தத்தின் கண்போல் படுக்கையில் சுருண்டிருக்கிறாள். அவள் நெஞ்சிலிருந்து ஊற்றுக்கண் போல் ரத்தம் பொங்குகிறது. டேவிட்டுக்குத் தலைவலி நெற்றிப்பொட்டில் மின்னல் வரிகளாய்ப் பெருகுகிறது. ரத்தத்திற்கு வாசனை உண்டா. மூச்சுக் காற்றைச் சிறைப்படுத்தி நாசியை வலுவாகத் தாக்குகிறது ஒரு வாசனை. காலடியில் நிலம் நகரக் கண்ணை மூடி உட்கார்ந்தால் சற்று ஆறுதல் கிடைக்கும்போலிருக்கிறது. கண்ணுக்குள் புதைமணலாய்க் குழையும் இருளில் ஒரு குரல் அப்போது முளைக்கும் செடிபோல மெல்ல உயருகிறது. மனதுக்கு இதமாக இருக்கும் அந்த அழைப்பு ஏதோவொரு விதத்தி

அஞ்சலி
இரா. முருகானந்தம்  

புகழ்பெற்ற காந்தியவாதியும் சமூகப் பணியாளருமான நிர்மலா தேஷ்பாண்டே தனது 79வது வயதில் கடந்த மே மாதம் முதல் தேதி தில்லியில் காலமானார். முந்தையதினம் தன்பாத் நகரில் ஒரு திருமண நிகழ்வில் கலந்துகொண்டு திரும்பிய அவருக்கு வாயுத்தொல்லையும்லேசான காய்ச்சலும் இருந்துள்ளது. வியாழன் அதிகாலை அவரின் உதவியாளர் அவர் அறைக்குச் சென்றபோது 'எனக்கு ஒன்றுமில்லை; நான் பிரார்த்தனை செய்கிறேன்' என்று சொன்ன ஒரு மணி நேரத்தில் சுமார் 4 மணியளவில் அவர் உயிர் பிரிந்துள்ளது. 1929 அக்டோபர் 27ஆம் நாள் மராட்டிய மாநிலம் நாக்பூரில் பிறந்த நிர்மலாவின் தந்தை பிரபல மராத்தி எழுத்தாளர் ஒய்.வி. தேன்பாண்டே. பத்தொன்பது வயதில் சுதந்திரப் போராட்டத்தில் பங்கேற்றதன் மூலம் தொடங்கிய அவரின் சமூகப் பொது வாழ்வு சுமார் 60 ஆண்டுகள்

கவிதைகள்
க. மோகனரங்கன்  

'சுந்தர ராமசாமி - 75' போட்டியில் முதல் பரிசு பெற்ற கவிதை 1 என் கண்ணும் கருத்தும் கூடிக் குறித்து நிற்க குறுகத் தரித்த வுன் சிறு தனங்களிலும் பெருந் தக்கது பிறி தொன்றறியேன் பெண் திருவே! பித்தூறிப் பீதிக் கனவுகள் பெருகிக் கனத்த யென் மத்தகம் குத்தியடக்கும் அங்குசமும் அவையே யென அறிந்து ஐம்புலனும் அவிந் தொடுங்கி நின்றேன் என் தேவே! 2 ஏதிலார் போல் நோக்கும் தொழில் ஒழித்து விருப்போடுன் விழிவிளை நிலம் பார்த்திருந்தேன் காத்திருந்த நொடிகள் கல்லாகி உறைய கடுத்த வதனத்தில் கனிவேது மில்லை விட்டு விலகி நிற்கவும் விதி கூடவில்லை மத்திடைப் பட்ட தயிராய் புத்தியில் நினைவுகள் திரிபட பரந்து கெடும் இவ்வுலகியற்றி யானும் அளவறியான் கரவுற்ற நெஞ்சின் நோவு. 3 கற்றும் தேறா கடையே

குறும்படம்
ந. கவிதா  

கால்களில் சலங்கை கட்டி வாத்தியக்காரர்களோடு இறப்பு வீடுகளுக்குச் சென்று ஒப்பாரி பாடும் லட்சுமியம்மாள். கேட்பாரற்றுக் கிடக்கும் பிணங்களை வண்டியில் ஏற்றித் தள்ளிக் கொண்டு சுடுகாட்டில் அடக்கஞ்செய்யும் கிருஷ்ணவேணி. கடலில் மீன் பிடித்துக்கொண்டு கடல்மீதான மீனவர்களின் உரிமையை நிலைநாட்டிப் பேசும் சேதுராக்கு. இந்த மூவரும் தான் லீனா மணிமேகலையின் தேவதைகள். உயிரியல் ரீதியாக ஆண் பெண் வேறுபாடும் சமூக ரீதியாக ஆண்மை - பெண்மை கற்பிதமும் கொண்ட இச்சமூகத்தில் வீட்டிலும் வெளியிலும் பெண்ணுக்கான பணிகளும் ஆணுக்கான பணிகளும் முற்றிலும் வேறானவை. கண்ணுக்குப் புலப்படாத புனைவு சார்ந்த இந்தக் கற்பிதங்கள் பெண்ணின் இயங்கு வெளியை ஆணிலும் சற்றுக் குறைவானதாகவே வரையறுத்திருக்கின்றன. இவ்வெளி பெண்சார்ந்த¤ர

நாடகம்
சண்முக ராஜா  

தேசிய நாடகப் பள்ளி பொன்விழா ஆண்டுக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாகப் பத்தாவது தேசிய நாடக விழாவினை ஜனவரி 3 இல் தொடங்கி 20வரை தில்லியிலும் ஜனவரி 6இல் தொடங்கி 17வரை மும்பையிலும் நடத்தியது. தில்லியில் ஆறு அரங்குகளில் 76 நாடகங்களையும் மும்பையில் நான்கு அரங்குகளில் 26 நாடகங்களையும் நிகழ்த்தியது. கடந்த ஐம்ப தாண்டுகளில் எண்ணற்ற நடிகர்கள், இயக்குநர்கள், வடிவமைப்பாளர்கள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களை உருவாக்கி, நவீன நாடகத்தை இயக்கமாக்கியதைப் பதிவுசெய்யும் வகையில் நடந்த இந்த விழாவில் தேசிய நாடகப் பள்ளி மாணவர்களின் நாடகப் படைப்புகள் மட்டுமே தேர்வு செய்யப்பட்டன. இந்தியாவிலிருந்து மட்டுமல்லாது பங்களாதேஷ், நேபாளம், மொரிஷியஸ் ஆகிய நாடுகளிலிருந்தும் முன்னா

நிகழ்வு
தேவிபாரதி  

இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் படைப்பாளுமைகளில் சுந்தர ராமசாமியைப் போல் வாசகர்களோடு தொடர்ந்த, அர்த்தமுள்ள உரையாடல்களை நிகழ்த்தியவர்கள் அதிகப¢பேர் இல்லை. வாசிப்பில் அக்கறையுள்ள எவரோடும் தயக்கமின்றி உரையாடும் இயல்புடைய சுந்தர ராமசாமி வாசகர்களை நண்பர்களாக வளர்த்தெடுப்பதற்கும் அவர்களோடு அறிவார்ந்த விவாதங்களில் ஈடுபடுவதற்கும் எப்பொழுதுமே முக்கியத்துவம் அளித்துவந்தார். தனிப்பட்ட சந்திப்புகளில் இளம் படைப்பாளிகள் பலரோடு அவர் நடத்திவந்த உரையாடல்கள் முக்கியமானவை. தமிழ் அறிவுலகம் சார்ந்து தனக்கிருந்த பெருமிதங்களையும் விமர்சனங்களையும் ஏக்கங்களையும் பகிர்ந்துகொள்ளும்விதமான அவ்வுரையாடல்கள் அவர்களது படைப்புப் பார்வையை விரிவுபடுத்தியிருக்கின்றன. அவர் வாழ்ந்த காலத்திலும் அதற்குப் பின்ப

காலச்சுவடு பயணம்
அரவிந்தன்  

காலச்சுவடு நூறாம் இதழ் வெளியானதையட்டி சென்னையில் ஏப்ரல் 19 அன்று நடைபெற்ற 'ஒருநாள் பண்பாட்டு நிகழ்'வில் வாசிக்கப்பட்ட கட்டுரை இது. நிகழ்வில் கட்டுரையின் உள்ளடக்கம் ஒலி-ஒளி காட்சியாகவும் ஒளிபரப்பப்பட்டது. ஒலி-ஒளிக்காட்சியை வடிவமைத்தவர்கள் கீழ்வேளூர் பா. ராமநாதன், ந. செல்லப்பா. - பொறுப்பாசிரியர் 'கனவுகளும் காரியங்களும்'. 1988இல் சுந்தர ராமசாமி காலச்சுவடைத் தொடங்கியபோது காலச்சுவடு எப்படி அமைய வேண்டும் என்பது குறித்து எழுதிய பிரகடனம். படைப்பாக்கங்களில் மட்டுமின்றி இலக்கிய, சமூக விமர்சனங்களிலும் ஈடுபட்டுவந்த சுந்தர ராமசாமி, தனது சமரசமற்ற அணுகுமுறைக்குப் பேர்போனவர். எனவே, அவர் காலச்சுவடு இதழைத் தொடங்கியபோது சூழலில் பெரும் எதிர்பார்ப்பு இயல்பாகவே உருவாகியது. முதல் இதழுக்குக் கிடைத

மதிப்புரை
க. சீ. சிவகுமார்  

இருள்வ மௌத்திகம் ஆசிரியர்: கோணங்கி பக். : 384 விலை: ரூ. 212 முதற்பதிப்பு: டிசம்பர் 2007 வெளியீடு காதை 19, சீனிவாச ரெட்டித் தெரு, தியாகராய நகர் சென்னை - 600 053 இமையின் மீது பாரத்தைப் போட்டு விட்டு உறங்கப்போகையில் கண்ணயருவதற்குச் சற்றுமுன்னரும் பின் உறக்கக் கனவிலும் தோன்றும் காட்சிகள் பற்பல. சில கனவுகள் நினைவுக்குவந்து நாளின் முதல் காலையைச் சற்றுநேரம் அபகரித்துக்கொள்வதும் உண்டு. கோணங்கியைத் தொடர்ந்து நான் வாசித்துவருவதற்கு, அவரது புத்தகங்கள் படிக்கும் தினங்களின் இரவுகளில் விதவிதமான கனவுகள் வரும் என்பது ஒரு காரணம். இது பொது அனுபவமா

பதிவு
வெங்கட்ரமணன்  

கல்யாணசுந்தரம்: கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது லக்ஷ்மி ஹோல்ம்ஸ்ட்ராம்:  வாழ்நாள் பங்களிப்புக்கான இயல் விருது தற்பொழுது இலக்கிய உலகில் கவனம் பெற்றிருக்கும் விருதுகளுள் ஒன்றாக 'இயல் விருது' வளர்ந்திருக்கிறது. தனிப்பட்ட தெரிவுகளில் சிலருக்கு மாற்று கருத்துகள் இருந்தாலும், கனேடிய இலக்கியத் தோட்டத்தின் நோக்கத்தின் மீதும் செயல்முறைகளின் மீதும் கொஞ்சங்கொஞ்சமாக மதிப்பு உயர்ந்துவருகிறது. 2008ஆம் ஆண்டுக்கான இயல் விருது வழங்கும் விழா வழக்கம்போல டொராண்டோ பல்கலைக்கழகத்தின் பன்னாட்டு ஆராய்ச்சித் துறையின் மங்க்சென்டரில் மே மாதம் 18ஆம் நாளன்று நடந்தது. ஏழாவது ஆண்டாக வழங்கப்படும் 'இயல் விருது' தமிழ் இலக்கியப் படைப்புகளை ஆங்கில மொழியாக்கம் செய்து தமிழ் எழுத்தாளர்களை உலக அரங்கிற்கு எடு

எதிர்வினை
பா. செயப்பிரகாசம்  

இதழ் 101இல் இடம்பெற்ற 'தலித் இலக்கியம் சாதி எதிர்ப்பு இலக்கியமா' கட்டுரைக்கான எதிர்வினை. கலை, இலக்கியங்களுக்கான அழகியல், கலைத் தரம், கலை நேர்த்தி, பொது மொழி போன்ற மதிப்பீடுகள் கல்வி வாய்க்கப்பெற்ற மேன்மக்களால் வளர்க்கப்பட்டவை. அனைத்துக் கலை இலக்கியங்களுக்கும் பொதுவான மதிப்பீடு இருக்க முடியாது. எல்லோரும் ஏற்றுக்கொள்கிற அழகியல் கோட்பாடு என எதுவும் இல்லை. அழகியலில் வகைமைகள் உண்டேயன்றி, வரையறுக்கப்பட்ட அழகியல் என்றெல்லாம் ஒன்றில்லை. ஒவ்வொரு கருத்தியலுக்கும் பொருத்தமான அழகியல் உண்டு. ஆனால், தமிழ்ச் சமூகத்துக்குள் ஆணையிலிருக்கும் வல்லாண்மைக் கருத்துகள், இலக்கிய வகைகள் அனைத்துக்கும் பொதுவான அழகியல் என வைப்பதன் மூலம் தமக்கான நிலை நிறுத்தலை உறுதிசெய்வதில் முனைப்புக் கொள்கின்றன. அட

எதிர்வினை
அ. ராமசாமி  

கலகம், புரட்டிப் போடுதல், தலித் மொழியில் எழுதுதல் என்றெல்லாம் பேசப்பட்ட பரபரப்பு, தலித் இலக்கியத்தைச் சரியான அர்த்தத்தில் உருவாக்காமல் திரும்பவும் இழிநிலையைப் பேசும் வடிவத்தையே பரிந்துரைத்துவிட்டது என்று இமையம் சொல்லும் கருத்துகள் விவாதிக்கப்பட வேண்டியவை. அதே போல் வெகுமக்கள் ஊடகத் தளத்திலும் சிறப்பு மலர்களிலும் தலித் எழுத்தாளர்களுக்காக இடத்தை ஒதுக்கி அவர்களைக் கொண்டே அப்பக்கங்களை நிரப்புவது என்ற சலுகை, ஒருவிதத்தில் தீண்டாமைதான் என அவர் வாதிடுவது ஏற்கத்தக்க ஒன்றுதான். எதுவுமே கிடைக்காமல் போன ஒரு கூட்டத்திற்கு, ஒதுக்கீடு ஆறுதல் அளிக்கும் கொழுகொம்பு; அதைப் பற்றிக்கொண்டு மேலே வரலாம். ஆனால், அதையே விடுதலைக்கான, தீண்டாமையை ஒழிப்பதற்கான, சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்குவதற்கான அருமருந்

சு.ரா. பக்கங்கள்
 

காலத்தின் கானல் - 6 19.10.98 திங்கள் மாலை 4 மணி தீபாவளி தினம் இன்று தீபாவளி தினம். நரகாசுரன் கொல்லப்பட்ட நாள்தானே? கொல்லப்பட்டானா? மாலை மணி நாலு. பக்கத்து வீட்டு முற்றத்திலிருந்து வெடிச் சத்தம் கேட்கிறது. குழந்தைகள் கண்ணுக்குத் தெரியாமல் வெடிச் சத்தம் மட்டும் கேட்பது ஒரு அலுப்பூட்டும் அனுபவம். அதோடு குழந்தைகளின் ஆரவாரமும் கேட்கவில்லை. மௌனமாக வெடித்துக் கொண்டிருப்பது குழந்தைகளுக்கு ஏற்ற பழக்கமில்லை என்று கவலை ஏற்படுகிறது. இறுக்கமாக இருக்கும் உலகத்தை அது மேலும் இறுக்கமாக்கும். இன்று வெயில் சற்றுக் கடுமைதான். காலையில் 9.30 மணிவாக்கில் எஸ்.எல்.பி. பள்ளிக்கூடத்திற்குப் போனபோதே வெயிலின் அன்றைய சுபாவம் வெளிப்பட்டது. பதினைந்து நாட்கள் கடுமையாக மழை பெய்தபின் இரண்டு மூன்று நாட்களாகத