கட்டுரை
அனிருத்தன் வாசுதேவன்  

வெகுஜனப் பத்திரிகை ஒன்று சமீபத்தில் என்னை ஒரு "ஓரினச் சேர்க்கையாளர்" என்று அறிமுகப்படுத்தியது. இதில் பல நிலைகளில் பிரச்சினைகள். இந்த அடையாளப் பெயர் சொல்வதற்கும் கேட்பதற்கும் எதோ செய்யும் தொழிலின் பெயர் போலத் தோன்றுகிறது "பத்திரிகையாளர்" என்பதுபோல. பத்திரிகையாளர் என்பது எந்தத் தொழில் சார்ந்த பெயர் என்ற அளவில் சந்தேகங்கள் பெரிதாக இருக்க முடியாது. ஆனால், ஒரு ஓரினச்சேர்க்கையாளரின் பணி என்ன? பணிரீதியாக ஓரினப்புணர்ச்சியில் ஈடுபடுவதா? விளங்கவில்லை. இந்த ஒப்பீடு உதவாது. ஏனெனில், ஓரினப்பாலீர்ப்பு என்பதும் அந்த ஈர்ப்பினின்றும் எழும் உடல், காதல், காமம் சார்ந்த செயல்பாடான ஓரினப்புணர்ச்சி என்பதும் சுயத்தைப் பற்றியன. ஆசை, விழைவு, காதல், காமம், புணர்ச்சி என்பவை அகம் சார்ந்த உணர்வுகள், ந

பத்தி
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

என்னுடைய முதல் எழுத்து கிரிக்கட் பற்றியது. சிறிலங்கா சிலோனாக இருந்த நாள்களில் Daily News பத்திரிகையில் இந்த விளையாட்டைப் பற்றி எழுதியிருந்தேன். பக்கம் பக்கமாகப் பத்தி அல்ல. ஒரு சின்ன பத்தி. இந்தியப் பந்து வீச்சாளர் பாபு நட்கரிணி (அந்த நாள்களில் ஏழை மக்களின் கபில் தேவ் என்று வைத்துக்கொள்ளுங்கள்) சென்னையில் நடந்த ஆங்கில அணிக்கெதிரான போட்டி ஆட்டத்தில் தொடர்ந்து ஓட்டங்கள் இல்லாமல் பந்தெறிவதில் ஒரு சாதனை புரிந்திருந்தார். கிட்டத்தட்ட நூற்றிப்பதினான்கு நிமிடங்கள் நட்கரிணி ஆங்கிலேய ஆட்டக்காரர்களான பிரயன்பாவூலுசுக்கும் கென் பாரிங்டனுக்கும் எதிராகப் பந்து வீசினார் என்று நினைக்கிறென். நட்கரிணி வீசிய சுழல் பந்தில் அவர்களால் ஓட்டங்கள் எடுக்க முடியவில்லை. மளமள என்று ஓட்டங்களைக் குவி

கட்டுரை
கண்ணன்  

கடந்த சில ஆண்டுகளில் தமிழுக்குப் பல விதங்களில் பங்களித்த ஆளுமைகளின் மறைவு தொடர்ந்து துக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது. ஒரு தலைமுறையின் மறைவு நிகழ்ந்துகொண்டிருப்பதாகவே தோன்றுகிறது. சுந்தர ராமசாமி, நகுலன், சிட்டி, ஆதிமூலம், லா. ச. ரா. என இப்பட்டியல் நீள்கிறது. சுஜாதா இவர்களில் இருந்து வேறுபட்ட வெகுஜன தளத்தைச் சேர்ந்த எழுத்தாளர். இருப்பினும் ஒரு காலகட்டத்தில் வாசகர்களுக்கு வாசிப்பு இன்பத்தைத் தந்துவிட்டு மறைந்துவிடும் பட்டியலில் ஒதுக்கிவிடக்கூடியவர் அல்ல. சுமார் 35 ஆண்டுகாலம் வெகுஜன தளத்தில் தாக்குப்பிடித்தவர்கள் தமிழில் அபூர்வம். மறையும்வரை சமகாலத்தோடு தொடர்புடனிருந்து வெகுஜன தளத்தில் நுழையும் இளம் எழுத்தாளர்களுக்கு இறுதிவரை ஒரு சவாலாக இருந்தவர் சுஜாதா. அவரோடு வெக

கட்டுரை
சுகுமாரன்  

அடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படம் வெளிவந்திருக்குமானால் அந்த ஆண்டுக்குரிய மாநிலத் திரைப்பட விருதுகளில் ஒன்றுக்கும் மேற்பட்ட விருதுகளை அது பெற்றிருக்கும். கேரளத் திரையுலகில் இதுவரையிலான நடைமுறை இது. சென்ற ஆண்டு அடூர் இயக்கிய நாலு பெண்ணுங்ஙள் படம் வெளியாகி, விமர்சக அங்கீகாரத்தையும் பார்வையாளர்களின் வரவேற்பையும் பெற்றிருந்தது. எனினும் மாநில அரசின் விருதுகளில் அடூரின் படம் பின்தள்ளப்பட்டது. அதையட்டிய விவாதப் புகை எழும்பி அடங்கியும் விட்டது. அரசியல் குறுக்கீடுகளால் அடூரின் படைப்பு விலக்கப்பட்டது என்பதில் சர்ச்சைக்கு இடமுண்டு. ஆனால், நாலு பெண்ணுங்ஙள் படத்துக்குச் சிறந்த கலை இயக்கத்துக்காகவும் ஆடையமைப்புக்காகவும் வழங்கப்பட்ட விருதுகள் பற்றி எந்த எதிர்வாதமும் எழவில்லை. தி

கட்டுரைத் தொடர்
சங்கீதா ஸ்ரீராம்  

பாசன முறைகளும் நீர்வள மேலாண்மையும் நில வளம், கால்நடை வளம் ஆகியவற்றின் சரிவைப் பற்றிப் பார்த்தோம். இனி, நீர்வளம் வற்றியது பற்றியும் வறண்ட பாசன நிலங்கள் கெட்டுப்போன கதையையும் தெரிந்துகொள்ளலாம். நம் நாட்டின் நீர் வளம் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் சீரழியத் தொடங்கியது. அந்தச் சீரழிவு இன்றுவரை பலவிதங்களில் தொடர்ந்து வருகிறது. சுதந்திரத்திற்கு முன்புவரையிலான சரித்திரத்தை இக்கட்டுரையில் பார்ப்போம். சுதந்திர இந்தியாவில் கட்டப்பட்ட பிரம்மாண்டமான அணைகளைப் பற்றி அடுத்துவரும் கட்டுரைகளில் பார்க்கலாம். பாரம்பரிய முறைகள் தத்தமது பகுதிகளில் பெய்யும் மழையளவைக் கருத்தில் கொண்டுதான் விவசாயிகள் பயிர் வகைகளைத் தேர்ந்தெடுத்தனர். வறண்ட, வானம் பார்த்த நிலங்களில், மானாவாரிப் பயிர்களான குழி வெடிச

கட்டுரை
ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன்  

1978 வாக்கில் பெங்களூரிலிருந்து படிகள் சிறுபத்திரிகையைத் தொடங்கிய அந்த நாள்களை இப்போது திரும்பிப் பார்ப்பது சுவையாகவும் வேடிக்கையாகவும் இருப்பதோடு பயனுள்ளதாகவும் இருக்கும் என்ற நம்பிக்கையில் இதை எழுதுகிறேன். படிகள் பத்திரிகையைத் தொடங்கி நாங்கள் நடத்தியது ஒரு விபத்துப்போலத்தான் என்று இன்று தோன்றுகிறது. நாங்கள் என்று குறிப்பது மூன்று பேரைக் கொண்ட ஒரு சிறு குழுவையே. கார்லோஸ் (தமிழவன்), ஜி. கே. ராமசாமி மற்றும் நான். வெ. கிழார் என்ற தமிழாசிரியரையும் சேர்த்துக்கொள்வது தவறல்ல. 'காவ்யா' சண்முகசுந்தரம், ப. கிருஷ்ணசாமி போன்ற நண்பர்கள் பிறகு படிகளுடன் ஈடுபட்டனர். என்றாலும் படிகள் குழு என்பது பெரும்பாலும் எங்கள் மூவரையே குறிக்கும். கார்லோஸ் தமிழ்நாட்டிலேயே கல்வி கற்றுப் பெங்களூரில் ஆசி

எம். கே. குமார்  

"வாரும் தோழரே, அன்றைய உமது உதவிக்கு மிகவும் நன்றி. என்னுடைய இத்தனை காலம்வரை எனக்கு உடல்நிலை சரியில்லாமல் ஆனதேயில்லை. அன்று யாரோ ஒருவன் செத்துப்போன எதையோ என்னருகில் போட்டுப்போய்விட்டான். அதனால் அப்படியாகிவிட்டது. உம்மைப் பார்க்கும்போதே தென்னிந்தியன் என்று தெரிகிறது. அதனால் சொல்லுகிறேன். இந்திராகாந்தியை எனக்குத் தெரியும்; போனில் அவரோடு பேசியிருக்கிறேன். இந்தியா வருமாறு என்னை அழைத்தார்; பாஸ்போர்ட் இல்லை! இருந்தால் போகலாம். பாஸ்போர்ட் எடுப்பதற்குக் காசு வேண்டும்; அதைவிட இரண்டு ரொட்டி பரோட்டா சாப்பிட வேண்டும். பசிக்கிறது; ஏதாவது உதவி செய்ய முடியுமா?" என்றார் அவர் ஆங்கிலத்தில். நீண்ட போருக்குப்பின் நிலைதடுமாறி எல்லை தாண்டி எங்கோ சென்றுவிட்டிருந்த மாமன்னனொருவன் பிச்சையெடுப்பத

பத்தி
 

உண்மையான போலி யார்? கேரளத்தில் இப்போது மிகவும் கிறுகிறுக்கவைக்கும் செய்திகள் 'சுவாமிக'ளைப் பற்றியவை. சுவாமிகள் என்றால் சுவாமியார் வேடம் போட்டவர்கள். எல்லா மதங்களும் அவற்றின் அதிகார அக்கறைகளுக்கேற்ப, அந்தந்த மதத்தைச் சேர்ந்த புரோகிதர்களுக்கும் பிரமுகர்களுக்கும் ஆண்களுக்கு மட்டுமல்ல, பெண்களுக்கும் வெவ்வேறு வேடங்களை வழங்கிக்கொண்டேயிருக்கும். அரசர்கள் வேடம் தரிப்பது அதிகாரத்தை வெளிப்படுத்த என்பதுபோல, மதத்தலைவர்களின் வேடங்களும் தமது அதிகாரத்தை வெளிப்படுத்த உதவும் உபகரணங்கள்தாம். நான் உங்களைப் போல அல்ல; வேறுபட்டவன்; உங்களைவிட மேலானவன் என்று வேடம் புனைந்து நமக்குத் தெரிவிக்கிறார்கள். 'வாளெடுப்பவனெல்லாம் வெளிச்சப்பாடு ஆகேண்டா' (வாளெடுப்பவனெல்லாம் சாமியாடி ஆக வேண்டாம்) என்று மலையாளத்

1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை
 

இலங்கையில் வாழும் 'தமிழர்கள்' எல்லோரும் தமிழர்கள் அல்லர். இலங்கையின் தென்மேற்குப் பகுதிகளில் பிறந்து வளர்ந்த சிலர் தமிழரல்லாதோராக மாறியிருந்தனர். பெரும்பாலும் தமிழைப் பேசவோ எழுதவோ முடியாதவர்கள் அவர்கள். ஆனால், சிங்கள மொழியை அந்த மொழியின் அன்றாடப் பேச்சு வழக்கில் சரளமாகப் பேசக்கூடியவர்கள். அவர்கள் சிங்களம் பேசினால் அவர்களைத் தமிழர் என்று அடையாளம் கண்டுகொள்ள முடியாது. இனக்கலவரங்களின்போது உயிர்பிழைக்க இத்தகைய ஆற்றல் ஒரு முக்கியமான தேவையாகும். மொழி, அதனுடைய தொனி, பேச்சு வழக்கு போன்ற இயல்புகள் வாழ்வையும் சாவையும் தீர்மானிக்கக்கூடியதாக மாற்றம் பெற்றுவிடுகிற கணங்கள் அவை. தமிழரல்லாத தமிழர்களான எனது இரண்டு நண்பர்கள் ஜூலை 83இல் அந்தப் பயங்கரமான படுகொலை வாரத்தில் தப்பிப் பிழைத்தார்கள்

1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை
கருணாகரன்  

இலங்கை பற்றிய பொதுவான சித்திரம் வன்முறை சார்ந்ததாகவே இருக்கிறது. அழகானது, வளமுடையது என்று சொன்னாலும் இலங்கையின் வரலாறு நீளவும் தீயும் குருதியும் நிரம்பிய சுவடுகள்தான். இதிகாச காலத்திலிருந்து அப்படியரு பிம்பம் இலங்கைக்கு உண்டு. அனுமனின் லங்கா தகனம், முதல் பெரும் தீவைப்பு. தொடர்ந்து போர்களும் அழிவுகளும். மகாவம்சம் சொல்லும் துட்டகெமுனு - எல்லாளன் பகையும் போரும் அடுத்த வரலாற்றுப் பதிவு. இதுவே இன்றுவரையும் இலங்கையின் ஆழ்மனம். இந்த ஆழ்மன வெளிப்பாட்டின் புதிய வடிவமே இப்போது தொடருகிற இனப்பிரச்சினை. ஒரு அமைதித் தீர்வுக்குப் போக முடியாமல் தடுப்பதும் இந்த ஆழ்மனப் பிரம்மைதான். ஐரோப்பியரின் வருகை, அவர்களின் நானூறு ஆண்டுகளுக்கும் மேற்பட்ட காலனிய ஆட்சி, மேற்குக் கல்வி, கிறிஸ்தவம், இஸ்லாம்

1983 ஜூலை, இலங்கை இனப்படுகொலை
அம்ஷன் குமார்  

ஜூன் 1, 1981. யாழ்ப்பாணம். நள்ளிரவில் காவல் துறையினரும் அடியாட்களும் ஆயுதங்களுடன் ஒரு நெடிய வளாகத்தினுள் நுழைகின்றனர். அவர்களது நோக்கம் மனிதர்களைத் தாக்குவது அல்ல. மாறாக மனிதர்களின் பாதுகாப்பு சற்றும் இல்லாத நேரம் பார்த்து அங்குள்ள பொருள்களையும் அந்த வளாகத்தையும் நாசப்படுத்துவது. வளாகம் உலகப் பிரசித்திபெற்ற யாழ்ப்பாணப் பொதுசன நூலகம். அதிலுள்ள பொருள்கள் சுமார் 97,000 புத்தகங்கள். சில மணி நேரங்களில் இரண்டுமே தீக்கிரையாகின்றன. அன்று காலை கண் விழித்த உலகம் இக் காட்டுமிராண்டித்தனமான செயலால் அதிர்ந்துபோனது. ஒரு நூல் ஒரு தனி மனிதனின் எண்ண வெளிப்பாடு என்றால் ஒரு பெரும் நூலகம் மனிதகுல நாகரிகத்தின் கருவூலம். சிங்களவர்களாகிய தங்கள்மீது தமிழர்கள் அறிவாதிக்கம் கொண்டிருப்பதாக நினைத்து

சந்திப்பு: தேவிபாரதி  

நூலகம் எரிக்கப்பட்ட அதே 1981ஆம் ஆண்டில் மே மாதம் 11ஆம் தேதி யாழ் பகுதியைச் சேர்ந்த பருத்தித் துறையில் நான் பிறந்தேன். சரியாக 19 நாட்களுக்குப் பிறகு, 1981 ஜூன் மாதம் முதல் தேதி யாழ் நூலகம் எரிக்கப்பட்டது. அந்தக் கலவரத்தையோ அதற்குப் பின்னர் 1983 ஜூலையில் நடைபெற்ற பெரும் இனக்கலவரத்தையோ நேரில் அறிந்த தலைமுறையைச் சேர்ந்தவனல்ல நான். கால் நூற்றாண்டு காலமாக ஈழத்தில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போரைத் தொடங்கிய தலைமுறையைச் சேர்ந்தவனுமல்ல. குண்டுவெடிப்புகளினூடாகவும் இடப்பெயர்வுகளினூடாகவும் ஓரிடத்திலிருந்து மற்றொரு இடத்தை நோக்கி ஓயாமல் ஓடிக்கொண்டிருக்கும் லட்சக்கணக்காணவர்களை உள்ளடக்கிய ஒரு தலைமுறையைச் சேர்ந்த நான் எங்கள் நூலகம் எரிக்கப்பட்ட வரலாற்றை, அது எரிக்கப்பட்டுப் பல வருடங்கள் கடந்

 

ஈழத்துக் கவிதைகள் - சலனி ஈழத்துக் கவிதைகள் - எம். நவாஸ் சௌபி ஈழத்துக் கவிதைகள் - சோலைக்கிளி சிகப்பு மயில் - சோலைக்கிளி ஈழத்துக் கவிதைகள் - றஞ்சினி ஈழத்துக் கவிதைகள் - பெண்ணியா

ஆ. சிவசுப்பிரமணியன்  

தமிழ்நாட்டுக் கிராமப்புறங்களில் பரவலாகப் பயிரிடப்படும் தாவரம் ஆமணக்கு. கொட்டைமுத்துச் செடி என்றும் இது அழைக்கப்படும். 'சித்திரகம்', 'ஏரண்டம்' என்பன இதன் வேறுபெயர்களாக நிகண்டுகளில் குறிப்பிடப்படுகின்றன. குத்துச் செடியாக வளரும் இதன் இலைகள் முரடாகவும் சற்று அகலமாகவும் இருக்கும். இலைகளின் விளிம்பு சற்றுக் கூர்மையாக இருக்கும். ஆமணக்குச் செடியின் முக்கியப் பயன்பாடாக அமைவது இதன் காய்கள்தான். காய்கள் பச்சை நிறமாக இருக்கும். அவை முற்றியதும் வெளிறிய வெள்ளை நிறத்துக்கு மாறிவிடும். ஆங்காங்கே கூர்மையாக முள் போன்று இருக்கும். வெயிலில் காயப்போட்டால் காய்கள் வெடித்துச் சிதறி விதைகள் வெளிப்படும். இவ்விதைகளையே, 'ஆமணக்கு முத்து', 'ஆமணக்கங் கொட்டை' என்பர். இவ்விதைகளிலிருந்தே விளக்கெண்ணெய் எடுக்

மதிப்புரை
இளஞ்சேரல்  

இரண்டாம் உலகப் போருக்குப் பிற்பாடு உலகம் நவீனக் கண்டுபிடிப்புகளின் வழியே சுழன்றது. இதில் சர்வதேச இலக்கியமும் கவிதையும் விடுதலையடைந்த நாடுகளின் புதுக்கட்டமைப்பு குறித்து எழுதவும் பேசவும் வேண்டியதாயிற்று. 2000க்குப் பிறகான சர்வ தேசியம், இந்திய எல்லை, தமிழ் மொழி வளமையின் சாத்தியம் நவீனத் தமிழ்க் கவிதையில் கைகூடியது. புதிய இளைய தலைமுறையும் நவீன மரபை எளிதில் கைக்கொண்டு புதிதான திசைகளை எட்டியது. காயசண்டிகை அடுத்த கட்டத் தொடர்ச்சிக்கான உத்திகளை வகுத்துள்ளது எனலாம். தொன்மங்களின் மீதான பிரமாணமும் செவ்வியல் கலைப் பிரதிகளின் தாக்கமும் இவரது கவிதைகளில் பதிவாகியுள்ளன. தத்துவங்களின் முரணியக்கமும் இதிகாச மரபுகளின் பரிச்சயமும் நவீனத் தமிழ்க் கவிதைகளுக்கே உரிய இறுக்கமும் பூடகமான அர்த்தமும்

அஞ்சலி
இந்திரா பார்த்தசாரதி  

போன நூற்றாண்டில், அறுபதுகளுக்குப் பிறகு அகில இந்திய கவனத்தை ஈர்த்த நாடக ஆசிரியர்களில் முக்கியமானவர் விஜய் டெண்டுல்கர் என்றாலும், பெரும்பான்மையான நவீனத் தமிழ் நாடக இயக்குநர்களின் கவனத்தை அவரது நாடகங்கள் உரிய அளவில் பெறவில்லை. பாசாங்குகளும் போலியான அறிவுஜீவித்தனமும் அவரது நாடகங்களில் இல்லை என்பது இதற்குக் காரணமாக இருக்கலாம். நாடகம் என்பது சமுதாயச் செயல். சமூக நிகழ்வுகளினால் பாதிக்கப்படுகின்ற கலைஞனின் பார்வையில், அவை கருத்துகளை முதன்மைப்படுத்துவதற்கான வடிவங்களை ஏற்று, அவனையும் சமூகத்தையும் அடையாளப்படுத்தும் கலை அனுபவங்களாகின்றன. டெண்டுல்கரின் நாடகங்கள் அனைத்தும் இவ்வகையைச் சார்ந்தவை. வடிவத்தை முதலில் தேர்ந்தெடுத்துவிட்டு, அதற்கேற்ப நாடகக் கருத்தை அவர் அமைத்ததாகத் தெ