கட்டுரை
வறீதையா கான்ஸ்தத்தின்  

மீண்டும் தமிழக மீனவர்கள் இருவர் நடுக்கடலில் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கின்றனர். இம்முறை கடற்புலிகளால். தமிழக மீனவர்மீதான ஒருதரப்புத் தாக்குதலில் 13.07.2008இல் இலங்கை அரசு வெள்ளி விழா வெற்றியைக் கொண்டாடியிருக்கிறது என்று சொல்ல லாம். இலங்கை அரசு 1983இல் இதே நாளில் தனது முதல் தோட்டாவைத் தமிழக மீனவனின் உடலில் செலுத்தி வெள்ளோட்டம் பார்த்தது. வேதாரண்யம் ஆறுகாட்டுத்துறை மீனவர்கள் இருவர் 11.07.2008இல் இந்தியக் கடல் எல்லைக்குள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்; மற்றுமொருவர் படுகாயப் படுத்தப்பட்டார். 13.07.08இல் இந்தியக் கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக்கொண்டிருந்த நூற்றுக்கும் மேற்பட்ட புஷ்பவனம் மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் துன்புறுத்தப்பட்டுப் படகு - வலைகள் சேதப்படுத்தப்பட்டு விரட்டப்பட

கட்டுரை
நாகரத்தினம் கிருஷ்ணா  

வழக்கம்போல உறங்கிக் காலையில் எழும் அலுவலக ஊழியன் ஒருவன் கட்டிலில் கரப்பான்பூச்சியாகத்தான் உருமாற்றம் அடைந்திரு ப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைவதாக "காஃப்காவின் உருமாற்றம்" தொடங்குகிறது. அக்கணத்தில் வாசகராகிய நமக்குள்ள சாத்தியங்கள் இரண்டு. முதலாவது, ஆரம்பமே இப்படி முழக்கணக்கில் காதில் பூச்சுற்றுகிற அதீதக் கற்பனையாக இருக்கிறதே, அதற்குத் துணைபோவதா என்று நினைத்துப் புத்தகத்தை மூடிவிட்டு வேறு வேலைகளைப் பார்ப்பது. இரண்டாவது, பரவாயில் லையே வித்தியாசமான ஆரம்பமாக இருக்கிறதே என்று நினைத்து அதன் வசீகரப் புனைவுத் தன்மையில் மனத்தைப் பறிகொடு த்து மேலே வாசிப்பினைத் தொடர்வது. மூன்றாவதானதொரு வாசக மனநிலையுண்டு. இன்னார் இன்னாரெல்லாம் சிபாரிசு செய்தி ருக்கிறார்களே, அப்படி என்னதான்

திறந்தவெளி
பா. செயப்பிரகாசம்  

சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகளின் உயிரோட்டமான தலைமையாயிருந்த பெரியார், வன்னிய குல ஷத்திரியர், தேவேந்திர குல வேளாளர், நாடார் இனமக்கள் போன்றோர் நடத்திய மாநாடுகளில் பங்கேற்றார். இம்மாநாடுகளில் உரையாற்றுகிறபோது, தாழ்வின் பள்ளத்தில் நிற்கிற அவர்கள் தங்கள் பெயர்களை மட்டும் சிகரத்தில் கொண்டு எதை அடைய முயல்கிறார்கள் என விமர்சித்தார். பெரியார் வழியில் திமுகவின் தொடக்க காலத்தில் பகுத்தறிவு, கடவுள் மறுப்பு, மூடநம்பிக்கை எதிர்ப்பு, சாதி ஒழிப்பு போன்ற கொள்கைகள் தலைமை தாங்கின. 60களில் முழுமையாகத் தேர்தல் நீரோட்டத்தில் கலப்பது எனத் திராவிட முன்னேற்றக் கழகம் முடிவெடுத்தபின், முன்னர் அவர்கள் கைக்கொண்ட பெரியார் கொள்கைகளின் உறுதிப்பாட்டைக் கை நழுவவிடலாயினர். திராவிட தேசிய

சிறுகதை
எஸ். செந்தில்குமார்  

சிகாமணி இறந்தபோது அவன் அருகே அழுவதற்கென யாருமில்லை. தேனி நகராட்சியிலிருந்து கொண்டுவரப்பட்ட சவவண்டியில் எடுத்துப்போய் எரித்துவிட்டார்கள். அன்று வியாழக்கிழமை. தேனியில் வாரச் சந்தை கூடும் நாள். சந்தையைத் தாண்டித்தான் சவவண்டி நகர்ந்துபோனது. சிகாமணி இறப்பதற்கு முன், அவனாகவே யாரிடமோ சொல்வதுபோலத் தான் இறந்ததும் கார்க்கோடனும் இறந்துபோவான் என்று சொன்னான். தேனி வாரச் சந்தை முடிந்ததும் அன்று இரவு, கூட்டத்தில் தவறிவிழுந்த நாணயங்களையும் ரூபாய்த் தாள்களையும் தேடி எடுப்பவனாக இருந்தான் சிகாமணி. காக்கி நிறத்தில் அரை டவுசரும் சிவப்பு நிறத்தில் அரைக்கை பனியனும் போட்டியிருந்தான் சிகாமணி. சந்தைக்கு வருபவர்கள் கைதவறிவிடும் நாணயங்களைப் பொறுக்கி எடுப்பதற்காக வந்தபோது அவனைத் தவிரக் கார்க்கோடனும் இரு

பெருந்தேவி கவிதைகள்
 

நல்ல குருதிகாய்ந்த தம் குதத்தை இரவுபகல் பாராது கழுவிவரும் வேசிகளின் தொழில் அது அல்ல. காலைமாலை கணக்கின்றி ஆசைகளின் வியர்வை ஆறோடி நனைக்கிறது யாஹ§ அரட்டை அறைகளை. நல்ல கணவர்கள் வெப்காம் பயன்படுத்தமாட்டார்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில பெண்கள். நல்ல பெண்மணிகள் குழந்தையைப் பேணுபவர்கள் என்று நம்பிக்கொண்டிருக்கிறார்கள் இன்னும் சில ஆண்கள். நல்ல குழந்தைகள் கைகளால் எழுதமட்டுமே செய்வார்கள் என்று பல ஆண்களும் பெண்களும். தொலைக்காட்சித்திரை அத்தாட்சி வழங்கிய நல்ல குடும்பத்தின் ஒரு உறுப்பினர் கடன்வாங்கப்பட்டவர் என்று எய்யப்பட்டுவிட்டது பொறாமைக் கடிதாசி. எது எப்படியோ உன் என் மனச்சுவர்களில் ஒட்டி நகராத பல்லியை யாரும் இன்னும் நேர்காணவில்லை. n கிறுக்க

நாவல்
 

சிவன் செவ்வகில் மரக்காட்டை நோக்கிக் கடுமையாக முயன்று மலையேறிக்கொண்டிருந்தார். தனக்கு முன்பாகச் சென்றிருந்த பயணிகளின் சுவடுகளை எப்போதாவதுதான் கண்டார். தன் விழிப்பு நிலையில் வேகவேகமாகச் சென்றுகொண்டிருந்தவருக்கு இயற்கை முகமன் கூறிற்று. கடந்து செல்லும் ஒருவருக்குச் சரணா லயமொன்றுக்குப் போகும்போது வழியைத் தவறவிட்ட ஒரு யாத்ரிகனைப் போலவோ அல்லது ஒரு பிச்சைக்காரனைப் போலவோ தோன்றியிருப்பார் அல்லது தன் பாதங்களில் இருந்து கண்களை உயர்த்தி இருந்தால், மலையில் ஒளிந்துகொள்ளப்போகும் கொள்ளைக்காரனைப் போல் தெரிந்திருப்பார். உலகத்திற்குள் இருந்து கொண்டு உலகத்தைப் புறக்கணித்தபடி இருக்கும் ஒரு இடத்தை, தானே தனக்குப் போதுமானதாக இருக்கும் அந்த ஒரு இடத்தை, அவர் தேடிக்கொண்டிருந்தார். சிலவேளைகளில் புதரிலிர

திரை
கே.முரளிதரன்  

படம்: சுப்ரமணியபுரம் நடிகர்கள்: சசி, ஜெய், கஞ்சா கருப்பு, ஸ்வாதி, மாரி, சமுத்திரக் கனி இயக்கம்: எம். சசிக்குமார் தான் இயக்கிய ஹே ராம் படத்தின் சிறப்புக் காட்சி முடிந்ததும் பத்திரிகையாளர்களிடம் பேசிக்கொண்டிருந்தார் கமல்ஹாசன். "ஹே ராம் கலைப் படமா இல்லையா?" என்றார் ஒரு பெண் பத்திரிகையாளர். அவருக்கு சினிமாத் துறை புதிது. அதற்குள்ளேயே இந்த வார்த்தைகளெல்லாம் பழகியிருந்தார். கமல் அவரைத் திரும்பிப் பார்த்து முறைத்தார். "இந்தப் படம் வர்த்தகரீதியாக வெல்லுமா?" என்றார் பத்திரிகையாளர். "அப்படிக் கேளுங்கள். உலகத்தில் நல்ல படம், மீடியாக்கரான படம், மோசமான படம் என்றுதான் பிரிவினை உண்டே தவிர, கலைப் படம், கலை அல்லாத படம் என்றெல்லாம் கிடையாது" என்றார் கமல். ஹே ராம் வர்த்தகரீதியாக வெ

சிறப்புப்பகுதி
 

தன் இதழியல் செயல்பாடுகளின் ஒரு பகுதியாகக் காலச்சுவடு பல்வேறு சந்திப்புகளையும் கூட்டங்களையும் நடத்திவருவதையும் இக்கூட்டங்களில் கலை இலக்கியம் சார்ந்து மட்டுமல்லாமல் சமூக வாழ்வின் அக்கறைக்குரிய பல்வேறு கூறுகள் சார்ந்தும் விரிவான விவாதங்கள் நிகழ்த்தப்பட்டுவருவதையும் வாசகர்கள் அறிவர். ஒரு தீவிர இதழ் ஆற்ற வேண்டிய சமூகக் கடமைகளில் ஒன்றாகவே காலச்சுவடு இத்தகைய கூட்டங்களையும் சந்திப்புகளையும் கருதிச் செயல்பட்டுவருகிறது. கடந்த 14.06.2008 அன்று சென்னை புக் பாயிண்ட் அரங்கில் காலச்சுவடு நடத்திய 'கருத்துரிமையும் வாழ்வுரிமையும்' என்னும் தலைப்பிலான கருத்தரங்கும் அந்த வகையில் முக்கியமானது. ஆட்சியாளர்களாலும் அதிகார வர்க்கத்தாலும் தொடர்ந்து சோதனைகளுக்குள்ளாகிவரும் கருத்துரிமை, வாழ்வுரிமை சார்ந

சிறப்புப்பகுதி
தேவிபாரதி  

1975இல் இந்திரா காந்தி பிரதமராக இருந்தபொழுது அறிவிக்கப்பட்ட நெருக்கடிநிலைப் பிரகடனம் குறித்த நினைவுகூரல்களோடு நாம் இந்தக் கூட்டத்தைத் தொடங்கலாம் என நினைக்கிறேன். இந்திய ஜனநாயகம் என்னும் கருத்துருவம் சார்ந்து சிவில் சமூகம் கொண்டிருந்த கற்பனைகளை முற்றாக அழித்த நிகழ்வு அது. 1951இல் பிரகடனப்படுத்தப்பட்ட அரசியல் சாசனத்தை வெற்றுத்தாளாக மாற்றியிருந்தது அதிகார வெறி கொண்ட இரும்புக்கரமொன்றின் கையொப்பம். ஜனநாயக அமைப்பின் தூண்கள் ஒரு நள்ளிரவில் தரைமட்டமாக்கப்பட்டன. ஒரு நள்ளிரவுக் கனவை மற்றொரு நள்ளிரவு கொடுங்கனவாக மாற்றியிருந்தது. தேசத்தின் விடுதலைக்குத் தம்மை அர்ப்பணித்ததாகக் கூறிக் கொண்ட ஒரு குடும்பத்தின் அடுத்து வந்த தலைமுறை தன் தியாகத்திற்கு ஜனநாயகத்தையே விலையாகக் கேட்டது. ந

சிறப்புப்பகுதி
அனிருத்தன் வாசுதேவன்  

"நாம் எப்படி வாழ்வது? - என்னிடம் ஒருவர் கடிதத்தில் கேட்டிருந்தார். நான் அதே கேள்வியைக் கேட்க நினைத்த அதே நபர். எப்பொழுதும்போல, மேற்கண்டதுபோல, அசட்டுத்தனமான கேள்விகளே மிக அவசரமான கேள்விகளாக இருக்கின்றன." விஸ்வாவா சிம்போர்ஸ்கா போலிஷ் மொழிக் கவிஞர் "எவருடைய வாழ்க்கை வாழ்க்கையாகக் கணக்கில் எடுத்துக்கொள்ளப்படுகின்றது? வாழ்வதற்கான உரிமை எவரெவருக்கு உண்டு? வாழ்க்கை எங்குத் தொடங்கி எங்கு முடிகின்றது என்பதை எப்படித் தீர்மானிக்கின்றோம்? பின் வாழ்க்கையைப் பற்றி வாழ்க்கைக்கு எதிரான விதத்தில் எப்படிச் சிந்திக்கின்றோம்?" ஜூடித் பட்லர், "Undoing Gender" இன்று நான் முன்வைக்கவிருக்கும் ஒரு சில கருத்துகள் வாழ்க்கை பற்றிய இந்த இரு கேள்விகளுக்கு இடையில் இயங்குவனவாக இருக்

சிறப்புப்பகுதி
கவிதா  

ஒவ்வொரு மனிதனுக்கும் உயிர் வாழ்வதற்கான அடிப்படை உரிமை இருக்கிறது. அந்த உரிமை சட்டத்தால் பாதுகாக்கப்படும். ஒருவருடைய உயிரைத் தன்னிச்சையாகப் பறிக்கும் உரிமை யாருக்கும் கிடையாது. - சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச ஒப்பந்தம், பிரிவு 6.1 எந்த மனிதனுடைய உயிரையும் தனிப்பட்ட சுதந்திரத்தையும் சட்டத்தால் வகுக்கப்பட்ட விதிமுறைகளுக்கு அப்பாற்பட்டு யாரும் எடுத்துவிட முடியாது. - இந்திய அரசியல் சட்டம், பிரிவு 21 வாழ்வுரிமை அருகிவரும் கால கட்டத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். நம்மிடையே சிலர் எந்தக் கேள்வியும் எழுப்பாமல் எந்த உரிமையும் கோராமல் காவல் துறையினரின் விருப்புவெறுப்புகளைச் சுமந்து கொண்டிருக்கும் துப்பாக்கிகளுக்குப் பலியாகிக்கொண்டிருக்கிறார்கள். கொல்லப்படுபவர்கள்

சிறப்புப்பகுதி
ஜி. குப்புசாமி  

இரண்டு மாத இடைவெளியில், மே 8, ஜூலை 1 ஆகிய தேதிகளில் உண்மையான ஜனநாயகத்திலும் மதச்சார்பின்மையிலும் மனித சுதந்திரத்திலும் கருத்துரிமையிலும் இப்போதும் விடாப்பிடியாக நம்பிக்கைகொண்டிருக்கும் சொற்ப நபர்களுக்குப் பெரும் நம்பிக்கையும் ஆறுதலும் ஊட்டும்விதமாக இரண்டு நீதிமன்றத் தீர்ப்புகள் வெளிவந்துள்ளன. மிகை தேசிய வெறி, ஒரே கலாச்சார, ஒரே மத அரசியல் சக்திகள் தற்போது ஊக்கம் பெற்று நாட்டின் சகலத் துறைகளிலும் ஆக்கிரமித்துவரும் சூழலிலும்கூடச் சில நீதிமன்றங்களும் சில நீதிபதிகளும் நிதானமும் அறிவமைதியும் கொண்டு நடுநிலைமையிலான தீர்ப்புகள் தருவது நம்மிடம் மிச்சமிருக்கும் அதிர்ஷ்டங்களில் ஒன்று. 1 புகழ்பெற்ற அரசியல் மனோதத்துவ விமரிசகர் அஷிஸ் நந்தியின்மீது "மதவெறியை"த் தூண்டும் விதமாக எழுதியதற்காக

சிறப்புப்பகுதி
 

ஹுசைன் சாப், உங்களுக்கு எதிரான அடிப்படைவாதத் தாக்குதல்கள் பற்றி எவ்வாறு உணர்கிறீர்கள்? இது பற்றி நான் அதிகம் கவலைப்படவில்லை. இந்தியா ஒரு ஜனநாயக நாடு. ஒவ்வொருவருக்கும் தனது கருத்தைச் சொல்ல உரிமை உண்டு. மக்கள் தங்களது கருத்தை வன்முறையின் வாயிலாக அல்லாமல் விவாதத்தின் வாயிலாகச் சொல்ல வேண்டும் என்பதுதான் என் விருப்பம். கடுமையான அறிக்கைகளை நாடி, கிட்டத் தட்ட நம்பி - ஊடகங்கள் என்னிடம் வருகின்றன. ஆனால், உண்மையில் இந்தியாவைப் பற்றி எனக்கு மிகுந்த நம்பிக்கை இருக்கிறது. இந்தப் போக்கைக் காலத்தின் ஒரு சிறிய கணமாகவே நான் பார்க்கிறேன். இது ஒரு சிறிய தடங்கல் என்று சொல்லுமளவுக்கு நம்முடைய வேலைகள் 5000 ஆண்டுகளாக வலுவான ஒரு விசையுடன் நடந்துவருகின்றன. இளைய தலைமுறை அடிப் படைவாதத்தை, பழமைவாதத்தை

சிறப்புப்பகுதி
 

குஜராத் தேர்தல் முடிவுகள் பற்றிய பரபரப்பு இப்போது ஓய்ந்துவிட்டது; இந்தத் தேர்தலில் நரேந்திர மோடி தோல்வியடைந்திருந்தாலும், அதனால் குஜராத்தின் அரசியல் கலாச்சாரத்தில் பெரிய மாற்றம் எதுவும் ஏற்பட்டிருக்காது என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மோடி தனது பணியை ஏற்கனவே செய்து முடித்துவிட்டார். அந்த மாநிலத்தின் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் பெரும்பகுதி, மதவாதத்திலும் குறுங்குழு வாதத்திலும் தொடர்ந்து சிக்குண்டுதான் இருந்திருக்கும். விஹெச்பியும் பஜ்ரங்தள்ளும் இம்மாநிலத்தின் அரசியல் போக்கைத் தொடர்ந்து தீர்மானித்துக்கொண்டுதான் இருந்திருக்கும். நாற்பது ஆண்டுகாலமாக விடாமல் செய்யப்பட்ட பிரச்சாரத்துக்குப் பலன் கிடைத்திருக்கிறது, தேர்தல் களத்திலும் சமூக அளவிலும். ஒருகாலத்தில் மொழியாலும

சிறப்புப்பகுதி
 

2003 ஆம் ஆண்டில் தமிழகப் பொது நூலகத் துறை 'காலச்சுவடு' இதழ்களை நூலகங்களில் வாங்க அனுமதியளித்தது. ஒரு சில மாவட்டங்களில் மொத்தமாகச் சில நூறு பிரதிகள் வாங்கப்பட்டுவந்தன. ஓரளவு விழிப்புணர்வுடன் இருந்த மாவட்ட நூலகர்களுக்கு இதற்காக நன்றி சொல்ல வேண்டும். 2006ஆம் ஆண்டு திமுக அரசு பதவி ஏற்றதும் அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களைச் சந்தித்து மாற்று இதழ்கள், பதிப்பகங்கள் ஆகியவற்றிற்கு ஆதரவு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டேன். நூலகத் துறையைச் சீரமைப்பது, மேம்படுத்துவது, சிங்கப்பூர் மையநூலகம்போல எல்லாத் தமிழ் நூல்களும் மற்றும் பற்பல வசதிகளும் அமைந்த ஒரு நூலக மையம் சென்னையில் அமைப்பது போன்ற பல்வேறு திட்டங்களை விவாதித்ததை இப்போது நினைத்துப் பார்க்கிறேன். 2006 ஆகஸ்ட் மாதம் முதல் 'காலச்ச

சிறப்புப்பகுதி
 

ஒரு சராசரிக் குடிமகனைப் பொறுத்தவரை, சாதாரணகதியில் கருத்துச் சுதந்திரம் ஒரு கேள்விக்குறியாவதில்லை. அப்படியொன்று இருக்கிறதா என்றுகூட அவன் வியப்படையலாம். ஏனெனில், உலகிலுள்ள சாதாரண விஷயங்கள் பற்றிக் கருத்துச் சொல்ல அவனுக்குப் பிரத்தியேகமான சுதந்திரத்தை எழுதி வைக்க வேண்டியதில்லை. அது இப்போதும் அங்கே இருக்கிறது. யாரும் அதைக் கேள்விக்குட்படுத்துவதில்லை. ஆனால், அவன் தலித்தாகவோ பிற்படுத்தப்பட்டவனாகவோ இருக்கிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். தமிழ்நாட்டில் உயர்சாதியினருக்குச் செல்வாக்குள்ள ஒரு பஞ்சாயத்துக் கூட்டத்தில் அவன் கருத்துச் சொல்கிறான் என்றும் வைத்துக்கொள்ளுங்கள். அப்போது அவனுடைய கருத்தின்மீது இரும்பு உலக்கை விழுவதைப் பார்க்கலாம். அவனை வாயை மூடும்படி சிலர் சொல்லலாம். சி

விமர்சனக் கட்டுரை
கே. என். செந்தில்  

சிற்றிதழ்களுக்கு இன்றுள்ளதுபோலப் பரவலான கவனம் இல்லாத நேரங்களில், இதழ் தபாலில் வரும் நாளுக்காக, அவற்றின் தோற்றம் மற்றும் உள்ளடகத்தின் வகை மாதிரிகளை மனத்தில் கற்பனைசெய்தபடி காத்திருந்தது ஒரு காலம். பிறகு, காலம் உருமாறி வழவழப்பான முன்னட்டைகளோடு கடைகளில் தொங்கும் அளவிற்கு இவ்விதழ்கள் மெல்ல, ஆனால், பலமான வாசக கவனம் பெறத் துவங்கின. இந்த வளர்ச்சியினூடாகவே இன்று பத்துக்கும் குறைவில்லாத சிற்றிதழ்கள் (மாதந்தோறும்) வெளிவருகின்றன. ஆத்மார்த்தமான உழைப்பைக் கொட்டும் ஆசிரியர் குழுக்களால் இவை இதழுருப் பெறுகின்றன. முன்னர் எழுத்தாளனுக்கிருந்த பிரசுரம் சார்ந்த தயக்கங்கள், தடைகள் அனைத்தும் இன்று ஒன்றுமேயில்லால் ஆகிவிட்டன. இச்சூழலில் விழிபிதுங்கி நிற்பவன் வாசகன். சகலத்தையும் வாசித்து முடிக்கும்

மதிப்புரை
ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன்  

கீழை மார்க்சியம் மற்றும் பிற கட்டுரைகள் ஆசிரியர்: எஸ். என். நாகராஜன் பக். : 216 விலை: ரூ. 325 முதற்பதிப்பு: 2008 வெளியீடு ஓடஸி பதிப்பகம் உதகை, நீலகிரி அஷிஸ் நந்தி தன்னை மிகவும் கவர்ந்த இந்திய இடதுசாரிச் சிந்தனையாளர்கள் என்று இருவரைக் குறிப்பிடுவதுண்டு. ஒருவர் எஸ். என். நாகராஜன். மற்றவர் சுனில் சஹஸ்ரபுத்தே என்பவர். இந்த இருவரிடையே சில ஒற்றுமைகள் உண்டு. இந்த இருவரும் மார்க்சியத்தைக் கடுமையான விமர்சனங்களோடு ஏற்றவர்கள் என்பதோடு வெறும் படிப்பாளிகள், சிந்தனையாளர்கள் என்ற வரையறையைத் தாண்டிச் செயல்பாட்டில் ஈடுபட்டவர்கள். இருவருமே விஞ்ஞானத்தில் உயர் கல்வி பெற்றவர்கள். அதில் பெரும் சாதனைகள் புரிவார்கள் என்று கருதப்பட்டவர்கள். மார்க்சியம், இடதுசாரி அரசியல் என்பவற்றால் ஈர்க

மதிப்புரை
செல்லப்பா  

உலக சினிமா வரலாறு மௌனயுகம் ஆசிரியர்: அஜயன் பாலா பக். : 176 விலை: ரூ. 150 முதற்பதிப்பு: டிசம்பர் 2007 வெளியீடு கே. கே. புக்ஸ் (பி) லிட், 19, சீனிவாச ரெட்டி தெரு தி.நகர், சென்னை 600 017 சினிமா பற்றிப் 'பல' நூல்களைத் தமிழுக்குத் தந்திருப்பதாக முன்னுரையில் பாலுமகேந்திரா குறிப்பிட்டிருக்கும் அஜயன் பாலா இதற்கு முன் சினிமா குறித்து இரண்டு நூல்கள் மட்டுமே எழுதியுள்ளதாக இந்நூலின் முதல் பக்கம் தெரிவிக்கிறது. உணர்ச்சிமிகு படைப்பாளிகளின் ஆழமான நகைச்சுவை உணர்வு வெளிப்படும் இடங்கள் நமது யூகங்களுக்கு அப்பாற்பட்ட விஷயம் என்பதைப் பாலுமகேந்திராவின் முன்னுரை உணர்த்துகிறது. ஆள்காட்டி விரலின் நுனியால் தட்டினால் கணினி ஆயிரம் தகவல்களை அள்ளி இறைத்துவிடும். ஆகவே, தொழில்நுட்ப வளர்ச்சி மிக்க

உள்ளடக்கம்