கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

ஒப்பாரியும் ஓலமும் சேரிக்கு மட்டுமே சொந்தமல்ல என்று கடந்த காலங்களில் திருமாவளவன் மேடைகளில் பேசியதைக் கேட்டதுண்டு. கடந்த ஆகஸ்ட் நான்காம் தேதி மதுரை மேலூர் வட்டம், சென்னகரம்பட்டியின் தெருவொன்றிலிருந்து எழுந்த அழுகையும் கேவல்களும் அவ்வூர்ச் சேரியை எட்டியபோது அது நிரூபணமானது. 1992ஆம் ஆண்டு ஜூலை மாதம் ஐந்தாம் தேதி இரவு 10.30 மணிக்கு ஓடும் பேருந்திலிருந்த தலித் சமூகத்தைச் சார்ந்த அம்மாசி, வேலுவை வெட்டிக் கொலைசெய்தனர் ஆதிக்கச் சாதியினர். சென்னகரம்பட்டியிலிருந்த அம்மச்சி அய்யனார் மண்டு என்ற கோயிலின் பொதுச் சொத்தில் தலித்துகள் ஏலம் கேட்டனர் என்பதைப் பொறுத்துக்கொள்ள முடியாத கள்ளர் சாதியினர் செய்த கொலைகள் இவை. இக்கொலைகளில் குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கு 16 ஆண்டுகளுக்குப் பிறகு கரூர் ந

கட்டுரை
 

அண்மைக் காலத்து இலக்கிய நிகழ்வொன்று பதிப்புலகத்தில் புயலை எழுப்பியுள்ளது. ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள தமிழ்க் கேளிக்கைக் கதைகளின் (ஜனரஞ்சகக் கதைகள்) தொகுப்பு உடனடியாக அதிக விற்பனையுள்ள புத்தகமாகியிருக்கிறது. சென்னையிலுள்ள புதிய தனியார் பதிப்பகமான பிளாஃப்ட் இதை வெளியிட்டுள்ளது. 'பிளாஃப்ட் ஆந்தாலஜி ஆஃப் தமிழ் பல்ப் ஃபிக்ஷன்' (Blaft Anthology of Tamil Pulp Fiction) தொகுதியில் தமிழில் பிரபலமான பத்து ஜனரஞ்சக எழுத்தாளர்களின் கிரைம், காதல், அறிவியல் புனைவு, துப்பறியும் கதைகள் ஆகிய பிரிவுகளுக்கு உட்படும் பதினேழு கதைகள் சேர்க்கப்பட்டுள்ளன. இவை முதல்முறையாக ஆங்கிலத்தில் ப்ரீதம் சக்ரவர்த்தியால் சரளமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. பதிப்புத் துறைக்குப் புதுவரவான பிளாஃப்ட், ராகேஷ் கன்

கட்டுரை
க. திருநாவுக்கரசு, திராவிட இயக்க ஆய்வாளர்  

திராவிட இயக்கத்திற்கு இயற்கையே எதிரியாக இருந்து மூன்று அரசியல் பின்னடைவுகளை ஏற்படுத்திவிட்டது. ஆம். இயற்கை தமிழர்களின் அரசியல் வாழ்வுரிமையை, விடுதலை உணர்வை - இராஜரிகத்தைத் தட்டிப்பறித்துவிட்டது. அது தமிழினத்திற்கு ஏற்பட்டுவிட்ட மாபெரும் தீமை என்றே நாம் கருதுகின்றோம். (1) இலண்டனில் 1919ஆம் ஆண்டு டாக்டர் டி.எம். நாயருக்கு ஏற்பட்டுவிட்ட அகால மரணம். (2) 1940ஆம் ஆண்டு சர்.ஏ.டி. பன்னீர்செல்வம் சென்ற விமானம் விபத்திற்கு உள்ளாகி ஏற்பட்ட அவரது மரணம். (3) 1969ஆம் ஆண்டு நிகழ்ந்த அறிஞர் அண்ணாவின் மரணம். இம்மூன்று மரணங்கள் தமிழர்களின் அரசியல் வாழ்வுரிமைக்கு, விடுதலை உணர்வுக்கு ஏற்பட்ட மாபெரும் அரசியல் பின்னடைவுகள் ஆகும். அறிஞர் அண்ணாவுக்கு நூற்றாண்டு தொடங்கிவிட்ட இந்த நேரத்தில் திராவிட இ

கட்டுரை
பெருமாள்முருகன்  

'தமிழ் நாவல்களில் மட்டுமல்ல; இந்திய நாவல்களிலும் ஷண்முகசுந்தரத்தின் நாகம்மாளுக்கு ஒரு முக்கியத்துவம் உண்டு. கிராமியச் சூழ்நிலைகளை முழுவதும் உபயோகித்துப் பிராந்திய நாவல் என்கிற துறையை முதன்முதலாக இந்தியாவில் உருவாக்கியவர் அவர்தான் என்று சொல்லலாம்' என்று க. நா. சுப்ரமண்யம் எழுதியுள்ளார். அதாவது தமிழில் மட்டுமல்லாது, இந்தியாவிலேயே வட்டார நாவல் என்னும் துறை ஆர். சண்முகசுந்தரத்தின் 'நாகம்மாள்' வழியாகத்தான் தோன்றியது என்பது க.நா.சு. கருத்து. ஆனால் வட்டாரவியல் என்பது ஒரு கோட்பாடாகத் தமிழில் உருவாகவில்லை. கல்விப்புலம் சார்ந்தவர்கள் ஆராய்ச்சிப் பட்டங்கள் பெறுவதற்காக எழுதிய ஆய்வேடுகள், கட்டுரைகளில் வட்டாரவியல் என்பதை ஒரு வசதிக்காகப் பயன்படுத்தியுள்ளனர். வட்டாரப் பின்புலம், வட்டார மொழ

சங்கீதா ஸ்ரீராம்  

காலச்சுவடு இதழ் 100இல் வெளியானது நவீன வேளாண் அறிவியல் பற்றிய கதை. இந்த இதழில் வெளியாவது, அதன் அணுகுமுறையும் / வளர்ச்சியும் மனித இனத்தை, குறிப்பாகச் சுதந்திரம் பெறுவதற்குள் நம் நாட்டை எங்கெல்லாம் கொண்டுசென்றது என்பதை, பற்றிய தொடர்கதை. I - தொடக்கம் போரில் பிறந்த இரசாயனங்கள் முக்கியமான இரசாயன உரங்களும் பூச்சிக்கொல்லிகளும் முதன் முதலில் உலகப் போர்களில் பயன்படுத்துவதற்காகக் கண்டுபிடிக்கப்பட்டன. இன்று நாம் அதே உரங்களையும் பூச்சிக்கொல்லிகளையும் கொண்டு பூமியுடன் போர் புரிந்துவருகிறோம் - இந்தப் போரில் யாருக்கும் வெற்றி கிடைக்காது என்பதை உணராமலேயே. 19ஆம் நூற்றாண்டில், NPK கோட்பாடு பிரபலமான சில ஆண்டுகளிலேயே, பொட்டாஷ் (K) மற்றும் பாஸ்ஃபேட் உரங்கள் (P) உற்பத்தியாகிப் புழக்கத்திற்கு வந்த

அஞ்சலி
அசோகமித்திரன்  

சோவியத் நாடிருந்தவரை அங்குச் செயல்பட்ட ரைட்டர்ஸ் யூனியன் என்ற அமைப்பை எழுத்தாளர் சங்கம் என்று மொழிபெயர்ப்பது அந்த அமைப்பின் அசாத்திய வலிமையை உணர்த்தாது. இருபதாம் நூற்றாண்டின் இரு மகத்தான ரஷ்ய எழுத்தாளர்களின் வாழ்க்கையை அது திசைமாற்றியது. போரிஸ் பாஸ்டர் நாக்கை அவர் காலத்தில் இந்த ரைட்டர்ஸ் யூனியனின் தலைவராக இருந்த ஷோலகோவ் கடுமையாகத் தாக்கிப் பேசியபின், அந்த எழுத்தாளர் மனமுடைந்து எந்த நேரமும்¢ நாடு கடத்தப்படுவோமோ என்று அஞ்சிய வண்ணமே உயிரைவிட்டார். இந்த ஆகஸ்ட் மூன்றாம் தேதி மரணமடைந்த அலெக்ஸாண்டர் சோல்ட்னீட்ஸின் மீது அரசு நடவடிக்கை எடுத்துச் சிறையில் தள்ளியதுடன் அந்த யூனியன் அவருடைய படைப்புகளை நூலகத்திலிருந்து விலக்கியது. அவர் சிறைவாசம் முடிந்து வெளியே வந்த பிறகும் ஒரு சிறி

பத்தி
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

இன்றைய ஆங்கில இலக்கிய வகைமைகளில் ஆசியாவிலிருந்து புலம்பெயர்ந்தவர்களின் எழுத்துக்கள் ஒரு சிறு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கின்றன. இதை ஏற்படுத்தியதில் கணிசமான பங்கு Jhumpa Lahiri, Amy Tan போன்றவர்களுக்குப் போய்ச்சேரும். மேற்கத்திய எழுத்துலகம் எதிர்பார்த்த இனம் சார்ந்த படைப்புகளாக இவை இருந்தாலும், குறுகிய பார்வையுள்ள ஆங்கில நாவல் நிலப்பரப்பை விசாலமாக்கி ஆங்கில இலக்கியத் தன்மையைப் புத்தாக்கம்செய்த பெருமை இந்தப் புலம்பெயர்ந்த நாவல்களுக்குண்டு. இதுவரை புலம்பெயர்ந்த வங்காளிகள், பஞ்சாபியர்களுடைய பிரிவுகள், ஏக்கங்கள், அடையாளமிழத்தல்களைப் படித்து அலுத்துப்போன ஆங்கில வாசகர்களுக்கு இப்போது தமிழர்களைப் பற்றித் தெரிந்துகொள்ள இரண்டு நாவல்கள் பிரசுரமாயிருக்கின்றன. ஒன்று வாசுகி கணேசானந்

தமிழர் தாவரவியல் வழக்காறுகள்
ஆ. சிவசுப்பிரமணியன்  

மனித சமூகத்தின் ஆடைத் தேவைக்கு அடிப்படையான தாவரம் பருத்தி. தாவரவியலாளர் gossypium linn என்று இதைக் குறிப்பிடுவர். வறட்சியைத் தாங்கும் தன்மையது என்பதால் பெரும்பாலும் வளமான வயல்களில் இதைப் பயிரிடுவதில்லை. கரிசல் நிலமே இதற்கு மிகவும் உகந்ததாகக் கருதப்படுகிறது. செம்மண் நிலங்களிலும் இதைப் பயிரிடுவதுண்டு. குத்துச் செடியாக இது வளரும். தேன் சுரப்பிகள் கொண்ட இதன் பூக்கள் மஞ்சள் மற்றும் வெளிரிய கருஞ்சிவப்பு வண்ணத்தில் இருக்கும். இதன் காய் முற்றிய பிறகு அதிலிருந்து பஞ்சை எடுக்கலாம். இவ்வேலையைத்தான் 'பருத்தி எடுத்தல்' என்பர். கொடிபோல் படரும் ஒரு வகைப் பருத்தியை வீடுகளில் வளர்ப்பதுண்டு. இதன் காய்கள் சிறியதாக இருக்கும். விளக்கெரிக்கும் திரியினைத் திரிக்க வீடுகளில் இதனைப் பயன்படுத்துவர். எ

சிறுகதை
சுந்தர ராமசாமி  

இருள் விலகுகிற நேரம் ஒரே மாதிரி இருப்பதில்லை. எத்தனையோ வருடங்களாக இந்தப் பள்ளிக்கு அதிகாலை நடக்கப் போய்க்கொண்டிருக்கிறேன். இருந்தும் தரை வெளுக்கும் நேரத்தை என்னால் மனதில் மட்டுப்படுத்திக்கொள்ள முடியவில்லை. அன்று காலை சரியான நேரம் என்று கணக்கிட்டவாறு நான் வெளியே வந்தேன். இருள் அடர்த்தியாக இருப்பதாகத் தோன்றியது. அங்கும் இங்குமாக மனித ஜீவன்களின் நிழல்களின் அசைவாகத் தெரிந்தன. இன்னும் புழுதி கிளப்பும் வாகனங்களின் பாய்ச்சல் ஆரம்பமாகவில்லை. இப்போது அவை முடுக்கப்பட்டுக்கொண்டிருக்கும். நான் மெதுவாக நடக்கத் தொடங்கினேன். இரு சக்கர வண்டிகளில் ட்யூஷன் படிக்கப் போகிற அன்றாடம் பார்க்கக் கிடைக்கிற முகங்கள் நினைவில் வந்தன. பிள்ளையார் கோவில் தாண்டிப் பள்ளியின் கீழ் வாசலுக்குப் போகும் வழியில்

சிறுகதை
கே. என். செந்தில்  

மூன்றாவது இரவில் பனிபெய்ய ஆரம்பித்துவிட்டது கதவுகளையும் ஜன்னல்களையும் அடைத்த பிறகும் ஓடுகளின் சன்னமான இடைவெளி வழியாகப் பனி இறங்கி சிமெண்ட் பால் ஊற்றப்பட்டு மொழுகிய தரையைச் சில்லிடவைத்திருந்தது. அங்கே கூடிக்கிடந்தவர்களின் கண்களில் ஒருவித ஆர்வமும் பின் அர்த்தபூர்வமான சலிப்பும் மாறி மாறி வெளிப்பட்டபடியிருந்தன. ராயப்பனின் சாவு மணிக்கணக்கில், அல்ல நொடிகளில் தள்ளிப்போய்க்கொண்டிருந்தது. எந்த மனிதனுக்கும் நேரக்கூடாத ஆனால் சொத்துக்கொண்ட பலருக்கும் ஏற்பட்டுவிடுகிற, பிறர் தன் மரணத்துக்காகத் தவித்துக்கொண்டிருக்கும் அவலமிக்க நிலையில் அவரிருந்தார். முன்பு அவரும் அவர் மனைவியும் கூடிக் கழித்த அறையில் வெற்றுடலில் அலட்சியமாகச் சுற்றிவிடப்பட்டிருந்த பழைய வேட்டியோடு கிடந்தார். மர வேர்கள்போல அவர

செல்மா பிரியதர்ஸன்  

பூச்சிக் கடி - பொம்மக் கடி - கல்லுக் கடி தன் வழியே சென்றாலுங்கூட ஒரு பாம்பை ஏன் அடித்துக்கொல்ல வேண்டும் என்பது குழந்தைக்குப் புரிவதில்லை கழிகொண்டு அதன் நீள உடலைத் தொங்கவிடுபவர்களைக் கண்டே குழந்தை அதிகம் அஞ்சுகிறது அவர்களோ பொம்மை வாங்கித் தருபவர்களாகவும் இருந்துவிடுகிறார்கள் ஆனால் நிர்வாணம் குறித்து பொம்மைக்கோ குழந்தைக்கோ கருத்திருப்பதாகத் தெரியவில்லை குழந்தைக்கு ஆடையைக் கட்டாயமாக்குகையில் குழந்தை பொம்மையை நிர்வாணமாக்குகிறது பிறகு பொம்மையைக் குளிப்பாட்டவோ தொட்டிலிலிட்டுத் தாலாட்டவோ வாய்வரை கொண்டுசென்ற சோற்றை தானே தின்று பொம்மையின் வயிறு நிறைப்பதையோ குழந்தை சட்டென நிறுத்திவிட்டிருந்த நாளை நீங்கள் கவனித்திருக்கமாட்டீர்கள் அப்போதுதான் கண்கள் தோண்டப்பட்டு கைகால் முறிந்த பொம

தமிழாக்கம்: எம்.ஏ.நுஃமான்  

அவன் அமைதியாக இருக்கிறான் நானும்தான் அவன் எலுமிச்சைத் தேநீர் அருந்துகிறான் நான் கோப்பி குடிக்கிறேன் (எம்மிடையுள்ள வேறுபாடு இதுமட்டும்தான். அவன் என்னைப் போலவே ஒரு தொளதொளத்த சேட் அணிகிறான் நான் அவனைப் போலவே ஒரு மாத சஞ்சிகையைக் கூர்ந்து பார்க்கிறேன் நான் அவனை ஆவலுடன் பார்ப்பதுபோல் அவன் என்னைப் பார்ப்பதில்லை அவன் என்னை ஆவலுடன் பார்ப்பதுபோல் நான் அவனைப் பார்ப்பதில்லை அவன் அமைதியாக இருக்கிறான் நானும்தான் அவன் பரிசாரகனிடம் ஏதோ கேட்கிறான் நான் பரிசாரகனிடம் ஏதோ கேட்கிறேன் ஒரு கறுப்புப் பூனை எங்களுக்கிடையே செல்கிறது நான் அதன் இருண்ட ரோமத்தைத் தொடுகிறேன் அவன் அதன் இருண்ட ரோமத்தைத் தொடுகிறான் நான் அவனிடம் சொல்லவில்லை: இன்று வானம் தெளிவாக உள்ளது அதிக நீலம் அவன்

நாடகம்
க. நவம்  

நான்கு மணிக் காட்சிக்கென்று அரங்கினுள் முதலில் அனுமதிக்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். நடுப்பகுதியில் வசதியான இருக்கை ஒன்றைப் பிடிக்கும் நோக்குடன் விரைகின்றேன். பார்வையாளர்களுக்கான இருக்கைகளின் முதல் வரிசையை அண்டி, மேடையின் முற்பகுதியில் குறுக்காகக் குரும்பசிட்டி இராசரத்தினம் நிற்கின்றார். புன்முறுவலுடன் அவரைக் கடந்து செல்கிறேன். முகமனுக்கு ஒரு சிறு பதில் முறுவல் தன்னிலும் அவரிடமிருந்து கிடைக்காத ஏமாற்றத்துடன் படியேறிச்சென்று இருக்கையன்றில் அமர்ந்துகொண்டேன். மேடையில் கனடிய தேசியக் கொடி காணப்படுகிறது. நயாகரா நீர்வீழ்ச்சி, ஒன்ராறியோ கடலேரி, சீஎன் கோபுரம் போன்ற சின்னங்கள் உட்பட, கனடாவின் அழகினைச் சித்திரிக்கும் காட்சிப் படங்கள் பல, திரையில் மாறி மாறித் தோன்றி மறைந்துகொண்டிருந்தன.

திறந்த வெளி
பா. செயப்பிரகாசம்  

1948இல் பாரதி பாடல்கள் நாட்டுடைமையாயின. குஜராத் சேட் ஒருவர் தனிப்பட்ட சொத்தாக வைத்திருந்த அதை, திரைப்பட அதிபர் ஏ.வி. மெய்யப்ப செட்டியார் வாங்கி உரிமை பெற்றிருந்தார். தனியருவரின் சொத்தாக அந்த இலக்கியச் செல்வம் பாதுகாக்கப் படக் கூடாது என எழுத்தாளர்கள் வல்லிக்கண்ணன், நாரண துரைக்கண்ணன், கவிஞர் திருலோக சீதாராம், ஜீவா போன்றோரைக் கொண்ட 'பாரதி விடுதலைக் கழகம்' நாட்டுடைமையாக்க வேண்டுமென்ற கருத்தை மக்களிடம் உருவாக்கியது. அதில் தோழர் ஜீவாவின் பணி முக்கியத்துவம் வாய்ந்தது. தமிழ்நாடெங்கணும் சென்று பரப்புரைசெய்து அப்போது தமிழக முதல்வராயிருந்த ஓமந்தூர் ராமசாமியைச் சந்தித்து நாட்டுடைமையாக்கிடும் வேண்டுகோளை முன்வைத்த பாரதி விடுதலைக் கழகம்போல் "பெரியார் விடுதலைக் கழகம்" உருவாகும் காலம் வந

எதிர்வினை
இமையம்  

காலச்சுவடு, ஆகஸ்ட் 2008இதழில்'கருத்துரிமையும் வாழ்வுரிமையும்' என்ற சிறப்புப் பகுதியை வெளியிட்டிருக்கிறது. நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து இன்றுவரை எனக்கான தளமாகச் சிறுபத்திரிகைகள் தான் இருக்கின்றன. சிறுபத்திரிகைகளில் எழுதவே நான் ஆசைப்படுகிறேன். காரணங்களின்றிப் பெரும் பத்திரிகைகளில் (முற்றிலும் வியாபார நோக்கம் கொண்ட) எழுதக் கூடாது என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். சிறுபத்திரிகைகள் மக்களிடம் சென்று சேர வேண்டும் என்பது என்னுடைய பெரும் கனவுகளில் ஒன்று. அதேமாதிரி சிறுபத்திரிகைகள் நிறைய வர வேண்டும் என்பதிலும் இந்தக் கனவும் ஆசையும் நிறைவேற வேண்டும் என்பதிலும் உறுதியாக இருக்கிறேன். நான் விரும்புகிற, நேசிக்கிற சிறுபத்திரிகைகளின் செயல்பாடுகள் உண்மைக்கு மாறாக இருக்கும்போது, சிறுபத்திரிகை

கண்ணன்  

இமையத்தின் எதிர்வினை. ஒரு சிறுபத்திரிகை எழுத்தாளனாக எழுதியிருக்கிறார். தான் ஒரு சிறுபத்திரிகை எழுத்தாளன் என்பதால் சிறுபத்திரிகைகளின் தவறுகளைக் கவனப்படுத்துவது முக்கியம் என்று நினைக்கிறார். அவ்வாறு அவர் செயல்படுவதற்கு அவரது எழுத்து வாழ்க்கையில் முதல் சந்தர்ப்பம் 'காலச்சுவடு' வழி ஏற்பட்டிருக்கிறது. மிக்க மகிழ்ச்சி. கடிதத்தில் எழுத்தாளனின் குரல் கேட்கவில்லை. தி.மு.க. பிரமுகரின் குரலே கேட்கிறது. 'காலச்சுவடுக்குத் தடை' உண்மைக்கு மாறானது என்பது அவரது முதல் கண்டுபிடிப்பு. கடையில் காசு கொடுத்து இதழை வாங்கும் வாசகனுக்கு இதழை அச்சிட, விநியோகிக்கத் தடையில்லை என்பது தெரியாது. 'காலச்சுவடுக்குத் தடை' பற்றி எழுதப்பட்டிருந்த ஒரு பக்கக் குறிப்பைப் படித்தாலும் புரியாது. இப்போது இமையம் தெளிவ

விவாதம்
ஜி. கே. ராமசாமி  

மார்க்சியத்தைக் கீழை - மேலை மார்க்சியம் என்று நாகராஜன் பிரிவுபடுத்திப் பேசிவருவது உண்மையில் மார்க்சியத்தை வளர்த்தெடுக்க உதவுமா என்னும் கேள்வி எழுகிறது. சமுதாயக் கோட்பாடுகள் பல உண்டு என்றாலும், மார்க்சியக் கண்ணோட்டத்தில் சமூகத்தை அணுகிப் புரிந்துகொள்ள முயலும்போது பல விசயங்கள் தெளிவுபடுகின்றன. சமுதாயம் என்பது ஒரு அமைப்பு. மனிதன் அந்த அமைப்பின் வழியாகத்தான் வாழ்கிறான். இந்தச் சமுதாய அமைப்பில் பொருளாதார அமைப்பு, அரசியல் அமைப்பு, கலாச்சார அமைப்பு எனப் பல உள்ளன. இவை ஒன்றுக்கொன்று தொடர்பும் பாதிப்பும் கொண்டு செயல்படுகின்றன. பொருளாதார அமைப்பை அடிக்கட்டுமானம் என்றும் அரசியல், கலாச்சாரம், கருத்தியல் ஆகியவற்றாலான அமைப்பை மேல்கட்டுமானம் என்றும் கார்ல் மார்க்ஸ் பார்க்கிறார். பொருள் உற்பத

மதிப்புரை
அதியன் கௌரி  

காந்தியச் சிந்தனைகளில் பற்றுக்கொண்டு கிராமக் களப்பணிகளில் ஈடுபாடு காட்டத் தொடங்கிய இந்திரா, தன் கிராமத்தில் ஆதிக்கச் சக்திகளால் தலித் மக்களுக்குக் குடிதண்ணீர் மறுக்கப்பட, அதை நிவர்த்திக்கும் சமூகக் கடமை இருப்பதை உணர்கிறார். அரசியல் அதிகாரம் மூலம் இப்பிரச்சினையைக் களைய முனைந்து, பல இடர்களுக்கும் தொடர் தோல்விகளுக்கும் பிறகு அதில் வெற்றிபெறுகிறார். இந்தப் போராட்டத்தின் சாரத்தைத் தன் பார்வையில் பங்கேற்பாளராகவும் முன்னெடுத்துச்சென்றவர் என்ற முறையிலும் இந்நூலில் பதிவுசெய்திருக்கிறார். ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தின் புற வர்ணனையில் ஆரம்பிக்கின்றது முதல் அத்தியாயம். கவுன்சிலர் பதவிக்குத் தேர்தல், போட்டியிடல், வெற்றிக்காகத் திட்டமிடல், ஊர்ப் பிரச்சினைகளை அறிதல், மக்களிடம் நெருங்குதல், வெ

தலையங்கம்
 

அண்மையில் மெக்ஸிகோவில் நடைபெற்ற 17வது சர்வதேச எய்ட்ஸ் கருத்தரங்கில் பேசிய மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் ஓரினச் சேர்க்கையாளர்களையும் பாலியல் தொழிலாளர்களையும் குற்றவாளிகள் என வரையறுக்கும் இந்திய அரசியல் சட்டத்தின் 377வது பிரிவு நீக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். பாலியல் தொழிலுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்கப்பட வேண்டும் என அக்கருத்தரங்கில் கோரியுள்ள அவர் எய்ட்ஸ் நோய்த் தாக்குதலுக்குள்ளாகும் பாதுகாப்பற்ற பிரிவினர்களாகப் பாலியல் தொழிலாளர்கள், அரவானிகள், ஓரினச் சேர்க்கையாளர்களைக் குறிப்பிட்டு அவர்களுக்குச் சட்ட அங்கீகாரம் வழங்குவதன் மூலம் எய்ட்ஸ் பரவாமல் தடுக்க முடியும் எனவும் கருத்துத் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலவரப்படி இந்தியாவில் எய்ட்ஸ் பாத

 

ஆகஸ்ட் இதழின் தலையங்கத்தில் ஒரு வாக்கியம். "இடதுசாரிகள் உண்மையிலேயே அணு ஒப்பந்தத்தை எதிர்ப்பதானால் அவர்கள் வேறு வகையில் போராட வேண்டும்." எதிர்ப்பினை உண்மை என்றே கொள்ள முடியும்; ஆனால் கூறப்படும் காரணம் பற்றிய தெளிவின்மை வேறுசில கேள்விகளை எழுப்புகின்றது. அமெரிக்காவுடனான 123 ஒப்பந்தத்தை மட்டும்தான் எதிர்க்கிறார்களா, ரஷ்யாவுடன் அணு உலை தொடர்பான ஒப்பந்தம் தேவை என்று கருதுகிறார்களா? அணுஆற்றல் தொழில்நுட்பத்தினால் இந்தியாவில் 'ஆக்கபூர்வமான தொழில் வளர்ச்சி' என்று ஆட்சியாளர்கள் கூறுவதை ஏற்கிறார்களா மறுக்கிறார்களா . . . அணு உலைகளின் விபரீதமான விளைவுகள் (எதிர்காலத்திலேனும்) பற்றி இடதுசாரிகள் மற்றவர்களுடன் கவலையைப் பகிர்ந்துகொள்கிறார்களா? மாற்று வழிகளில் மின் ஆற்றல் உற்பத்திக்குள்ள வாய

உள்ளடக்கம்