கட்டுரை
 

இந்திய அரசு காஷ்மீர் மக்களின் சுதந்திர வேட்கையைக் குறைத்தே மதிப்பிட்டுவருகிறது. ராணுவ பலத்தால் தன் மேலாதிக்கத்தை நிறுவமுடியும் என்னும் குருட்டு நம்பிக்கை இன்னொருபுறம். லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் திரும்புகிற பக்கமெல்லாம் ஏகே47 துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினர் பள்ளத்தாக்கு முழுவதும். இவர்கள் யாரையும் கைதுசெய்யலாம், சுட்டுக் கொல்லலாம், மாயமாக மறையச் செய்யலாம். யாரும் கேள்வி கேட்கவோ நீதிமன்றங்களில் வழக்குத் தொடரவோ முடியாத வரம்பற்ற அதிகாரம் இந்த ராணுவத்தினருக்கு. அதன் விளைவுதான் லட்சத்திற்கும் அதிகமான காஷ்மீர் மக்கள் சுட்டுக்கொல்லப்பட்டிருப்பதும் காணாமல் போயிருப்பதும். சிறையில் இருப்பவர்கள் அதிகமில்லை. இப்போது காஷ்மீர்ப் பள்ளத்தாக்கில் - நகரங்களிலும் ஊர்களிலும் - விடுத

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

கடந்த செப்டம்பர் 1, 2008 தேதியிட்டு வெளியான 'அவுட்லுக்' இதழில் காஷ்மீரில் ஊடகங்களுக்கு ஏற்பட்டுள்ள நிலையைக் குறிக்கும் கட்டுரைக்கு A Pariah's Profession (பறையர் தொழில்) என்று தலைப்பிட்டு எழுதியுள்ளார் ஷபா நக்வி. இச்சொல் இந்தியாவின் தென்கோடியில் வாழும் தீண்டப்படாத சாதியைக் குறிக்கக்கூடிய ஒன்றென இந்தியாவின் முன்னணி ஆங்கில இதழான அவுட்லுக்கிற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருக்கிறது. கடந்த 2007 பிப்ரவரி ஐந்தாம் தேதி அவுட்லுக்கில் புகைபிடிப்பவர்கள் குறித்து வெளியான அட்டைப்படக் கட்டுரையில் Pariah's என்னும் சொல்லைக் கையாண்டிருந்தனர். தமிழகத்திலிருந்து தலித் அறிவுஜீவிகள், இயக்கங்கள், அக்கறையுடைய ஊடகங்கள் தெரிவித்த எதிர்ப்பினை ஒட்டி இருவாரங்கள் கழித்து இரண்டு மறுப்புக் கடிதங்களை வெளிய

பயணி  

அறிமுகம் ஒரு சில கோணங்களில், ஷிழ் சிங் எனும் பழங்காலச் சீன இலக்கியம், நம் சங்க இலக்கியத்தை எனக்கு நினைவுபடுத்துகிறது. ஷிழ் சிங், சீன இலக்கிய வரலாற்றில் இதுவரை கிடைத்துள்ளவற்றில் முதல் நூல். 305 பாடல்கள் கொண்ட தொகை நூல். பாடல்களை எழுதிய கவிஞர்களின் தகவல்கள் தொகுப்பில் இடம்பெறவில்லை. பாடுபொருள்களை அடிப்படையாகக் கொண்ட ஆராய்ச்சியின் துணையுடன், இவற்றில் சில பாடல்களின் தொன்மை கி.மு. 1000க்கும் முந்தையது என்பர். பாடலின் வரிகள் பாடல்களாகத் தோன்றிய காலமும் பாடல்கள் எழுதப்பட்ட காலமும் பாடல்கள் நூலாகத் தொகுக்கப்பட்ட காலமும் தெரியவில்லை. சீன அறிஞர் க்கொங் ஃபு ட்ஸ§ (கன்ஃபூசியஸ்) இதன் தொகுப்பாசிரியர் என்று சொல்லப்படுகிறது. க்கொங் ஃபு ட்ஸ§ இப்பாடல்களை மேற்கோள்களாகப் பரவலாகப் பயன

 

15.08.2008 மதிப்பிற்குரிய முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்களுக்கு, வணக்கம். தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு தமிழ்ப் பதிப்புத் துறைக்குச் சாதகமான பற்பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டிருப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அரசுக்கும் தங்களுக்கும் நன்றி தெரிவிக்கிறோம். தமிழில் மாற்று இதழ்கள் மொழியின் மீதும் சமூகத்தின் மீதும் பண்பாட்டின் மீதும் கொண்டுள்ள பற்றுதல் காரணமாகப் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளைக் கடந்து செயல்பட்டுவருகின்றன. இந்தப் பின்னணியில் 'காலச்சுவடு' உள்ளிட்ட சில மாற்று இதழ்களுக்குத் தங்களுடைய அரசு நூலக ஆணை வழங்கியது வரவேற்கப்பட வேண்டியது. 'காலச்சுவடு' இதழ் இலக்கியத் தளத்திலும் பண்பாட்டுத் தளத்திலும் படைப்பிற்கும் சிந்தனைகளுக்கும் விவாதங்களுக்குமான களமாகக் கடந்த இருபது ஆண்டு

கட்டுரை
 

நான் மட்டும் ஒரு கவிஞனாக இருந்தால், ஐந்து விரல்களின் அற்புதத்தைப் பற்றிக் கவிதை பாடுவேன்... கைகளின் வழி அறிவுக்குக் கல்வி புகட்ட வேண்டும். தங்கள் கைகளைப் பயிற்றுவிக்காதவர்களின் ... வாழ்வில் இசையில்லை. அவர்களது அனைத்துத் திறமைகளும் வளர்க்கப்படுவதில்லை. வெறும் புத்தக அறிவு குழந்தைக்கு ஆர்வமிக்கதாக இல்லை. வெறும் வார்த்தைகளால் மூளை களைப்படைந்து விடுகிறது; குழந்தையின் கவனம் சிதறத்தொடங்குகிறது ... - மகாத்மா காந்தி, 1939 குழந்தைகளின் ஆரம்பகாலக் கல்வி, செயல்வழியிலேயே (activity based) நடைபெற வேண்டுமென்பது பல காலமாகக் கல்வியாளர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட, பெரும்பாலான நாடுகளில் வெற்றிகரமாக இயங்கும் அடிப்படைக் கோட்பாடாகும். மான்டிஸோரி முறை போன்ற புகழ்பெற்ற போதனா முறைகள் இந்தக் கோட்பாட்ட

நேர்காணல்
 

ஜே. பி. என நண்பர்களால் அழைக்கப்படும் பா.செயப்பிரகாசம் 1941இல் பிறந்தவர். எழுபதுகளின் புகழ் பெற்ற இலக்கியப் போக்குகளில் ஒன்றான கரிசல் இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய முக்கியமான சிறுகதைக் கலைஞர்களுள் ஒருவர். வானம் பார்த்த பூமியான கரிசல் காட்டு வாழ்வின் துயரார்ந்த பகுதிகளைக் கவித்துவம் ததும்பும் தன் படைப்பு மொழியில் 'உந்திக்கொடியோடும் உதிரச்சேற்றோடும்' முன்வைத்த பா.செ., தொடக்கத்தில் தன் சொந்தப் பெயரிலும் பிறகு சூரியதீபன் என்னும் புனைபெயரிலும் சிறுகதைகள் எழுதியவர். ஒரு ஜெருசலேம், ஒரு கிராமத்து ராத்திரிகள், காடு, இரவுகள் உடையும் முதலான பத்துச் சிறுகதைத் தொகுப்புகளும், வனத்தின் குரல், நதிக்கரை மயானம், தெக்கத்தி ஆத்மாக்கள், ஈழக்கதவுகள் உள்ளிட்ட ஆறு கட்டுரை நூல்களும் வெளிவந்துள்ளன. ச

மதிப்புரை
பழ. அதியமான்  

முதுகுளத்தூர் பயங்கரம் ஆசிரியர்: டி. எஸ். சொக்கலிங்கம் பதிப்பாசிரியர்: அ. ஜெகநாதன் முதல் பதிப்பு: நவம்பர் 1957 இரண்டாம் பதிப்பு: பிப்ரவரி 2008 பக். 158 விலை ரூ. 100 கவின் நண்பர்கள் வெளியீடு ஆர்சி. நடுத்தெரு, வ. புதுப்பட்டி - 626116, விருதுநகர். 1957 பொதுத்தேர்தல் அதற்கடுத்த இடைத்தேர்தல் ஆகியவற்றை ஒட்டி இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் பகுதியில் இரு சாதிகளுக்கிடையில் கொந்தளிப்பு எழுந்தது. அதை அடக்க 1957 செப்டம்பர் 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ஏற்பாடுசெய்தார். அதில் ஒடுக்கப்பட்ட மக்கள் விடுதலை அமைப்பின் இம்மானுவேல் சேகரன் அம்மக்கள் சார்பாகக் கலந்துகொண்டார். மறவர்கள் சார்பில் உ. முத்தராமலிங்கத் தேவர். கூட்டத்தில் இம்மானுவேலின் தலைமை

கட்டுரை
அசோகமித்திரன்  

சிகந்தராபாத் மார்க்கெட் தெருவில் ஜம்ஷட் ஹால் எப்படி வந்தது? மார்க்கெட் தெரு சிகந்தராபாத் மார்க்கெட்டையும் 'கிளாக் டவர்' என்னும் கடிகாரத் தூண் பூங்காவையும் இணைப்பது. இரண்டாம் உலக யுத்தக் காலத்தில் ஏற்கெனவே மங்கலாக எரியும் தெரு விளக்குகளுக்குப் பாவாடை போன்றதைப் பொருத்தி வெளிச்சமே தெரியாது செய்துவிட்டார்கள். காரணம், ஜப்பான் எந்த நேரமும் எந்த இடத்திலும் குண்டு வீசக்கூடும். மார்க்கெட் தெருவில் முதல் ஐம்பது அடிகளுக்கு இருபக்கமும் கடைகள். அதன் பிறகு வீடுகள்தான். கடிகாரத் தூண் அருகே ஒரு ஹால் இருந்தது. அது மஹபூப் காலேஜைச் சேர்ந்தது. அங்கே எப்போதாவது உரை நிகழ்த்தப்படும். ஜம்ஷட் ஹால், மார்க்கெட் தெருவில் வீடுகளுக்கு நடுவே இருந்தது. அந்தக் கட்டடத்துக்கு நீலவண்ணம் அடித்திருப்பார்கள்.

கட்டுரை
ரவிக்குமார்  

மரண தண்டனைக்கு எதிரான இந்தக் கூட்டத்தை நடத்திக்கொண்டிருக்கும் ஆம்னஸ்டி இண்டர்நேஷனல் மற்றும் பியுசிஎல் அமைப்பினருக்கும் இங்கே வந்திருப் பவர்களுக்கும் வணக்கம். இந்தியாவில் மரண தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவது பற்றிச் சிறப்பான ஆய்வு நூல் ஒன்றை எழுதி வெளியிட்டுள்ள விக்ரம் ஜிட் பத்ராவுக்கும் சுரேஷ், நாகசைலா ஆகியோருக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த நூலில் குறிப்பிட்டுள்ளதுபோல 1998ஆம் ஆண்டு பியுசிஎல் சார்பில் மரண தண்டனைக்கு எதிரான பிரச்சாரத்தைப் பாண்டிச்சேரியில் இருந்து நாங்கள் முன்னெடுத்தோம். அப்போது நான் பாண்டிச்சேரி பியுசிஎல்லின் தலைவராக இருந்தேன். அந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ராஜீவ் கொலை வழக்கில் இருபத்தாறு பேருக்கு ஒரேயடியாக மரண தண்டனை விதிக்கப்பட்டபோது அந்தச்

அஞ்சலி
பா. மதிவாணன்  

பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஒப்பிலக்கண ஆய்வெழுச்சி திராவிட மொழிக் குடும்பத்தைக் கண்டறிந்து தமிழின் தனித்தன்மையை நிலைநாட்டியதெனில், இருபதாம் நூற்றாண்டின் மொழியியல் தமிழ் இலக்கண மரபின் தனித் தன்மைகளை இனங்கண்டு காட்டியது. இந்த வரலாற்றில் சொற்றொடர் அமைப்புக் குறித்த நோம் சாம்ஸ்கியின் மாற்றிலக்கண முறையியலைக்கொண்டு தமிழ்த் தொடர்களை முதன்முதலில் ஆராய்ந்தவர் பேராசிரியர் அகத்தியலிங்கம். கணிதத்தில் இளநிலைப் பட்டமும் தமிழில் முதுகலைப் பட்டமும் பெற்றிருந்த அகத்தியலிங்கம் கணக்கியல் சார்ந்த மாற்றிலக்கண அணுகுமுறையைத் தமிழுக்கும் பொருத்திப்பார்க்கும் முன்னோடியானது தமிழுக்கு நல்லதொரு வாய்ப்பாயிற்று. 'A Generative Grammar of Tamil' எனும் தலைப்பில் பேராசிரியர் ஃபிரட் டபிள்யூ ஹவுஸ்ஹோல்டர் நெறிய

சிறுகதை
 

சனிக்கிழமை பிற்பகல் ஷாப்பிங் சென்டரில் இருந்த பேக்கரிக்குச் சென்றாள். கேக்குகளின் புகைப்படங்கள் ஒட்டப்பட்டிருந்த லூஸ்-லீஃப் பைண்டரைப் புரட்டிப் பார்த்துவிட்டுப் பையனுக்குப் பிடித்தமான சாக்லேட் கேக்கை ஆர்டர் செய்தாள். அவள் தேர்ந்தெடுத்த கேக்கில் ஒளிவீசும் வெள்ளை நட்சத்திரங்களுக்குக் கீழே ஒரு விண்வெளிக்கலமும் ஏவுதளமும் மற்றொரு மூலையில் சிவப்பு ஃபிராஸ்டிங்கில் ஒரு கிரகமும் அலங்கரிக்கப்பட்டிருந்தன. அந்தக் கிரகத்திற்குக் கீழே அவன் பெயர் 'ஸ்கூட்டி' எனப் பச்சை எழுத்துகளில் இருக்கும். அடுத்த திங்கட்கிழமை அவள் மகனுக்கு எட்டு வயது என்பதை அவள் அந்த வயதான, தடிமனான கழுத்தைக் கொண்டிருந்த ரொட்டிக் கடைக்காரனிடம் சொன்னபோது எதுவும் பதிலுக்குச் சொல்லாமல் கேட்டுக்கொண்டிருந்தான். மேலங்கியைப் போல

எதிர்வினை
க. திருநாவுக்கரசு  

காலச்சுவடு ஆசிரியர் திரு. கண்ணன் அவர்களுக்கு, ''பத்திரிகைகளே இல்லாமல் அரசாங்கம் மட்டும் அல்லது அரசாங்கமே இல்லாது பத்திரிகைகள் மட்டும் என்ற இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுக்க வேண்டி வந்தால் நான் அரசாங்கமே இல்லாது பத்திரிகைகள் மட்டும் என்பதையே தேர்ந்தெடுப்பேன்” என்று அமெரிக்க ஜனாதிபதி தாமஸ் ஜெபர்சன் ஒருமுறை கூறினார். ஆனால் அமெரிக்காவில் பத்திரிகைகளுக்கும் அரசாங்கத்திற்கும் வித்தியாசம் இல்லாதுபோய் வெகுகாலமாகிவிட்டது. இந்திய நிலைமையும் அதிலிருந்து மாறுபட்டிருக்கவில்லை. குரலற்றவர்களின் குரலாக இருக்கும் பத்திரிகைகள் மிகச் சொற்பம். அத்தகைய சொற்பமான பத்திரிகைகளுள் ஒன்றாக காலச்சுவடு இருப்பதாகவே கருதுகிறேன். 'காலச்சுவடுக்குத் தடை' சம்பந்தமாக இமையத்தின் எதிர்வினையையும் அதற்கான உங்கள

எதிர்வினை
மலர்மன்னன்  

சிறந்த எழுத்தாளர் என நான் கருதும் இமையம், "அரசு நினைத்தால் காலச்சுவடையே நிறுத்த முடியும்" என்று ஆணவத் தொனியில் மிரட்டல்விடுக்கிற மாதிரி எழுதியுள்ள எதிர்வினையைப் படித்து வியப்படைந்தேன். அதையட்டி ஆசிரியர் கண்ணன் அளித்த மறுமொழியைப் படித்தபோது இமையம் திமுகவில் இருப்பவர் என்பது தெரியவந்ததால் வியப்பதற்கு ஒன்றுமில்லை என உணரலானேன். 'சகவாச தோஷம்' என்பதாக ஒன்று உண்டு. அது யாரையும் விடுவதில்லை போலும். மிகக் குறுகிய காலந்தான் என்றாலும், நம் காலத்தின் தலை சிறந்த ஜனநாயகப் பண்பாளராக விளங்கிய அண்ணாவை மிக அணுக்கமாகக் காணும் அரிய வாய்ப்பினைப் பெற்றவன் நான். அவருடன் இரவும் பகலுமாகப் பல நாட்களைக் கழித்தவன். ஓர் அடைப்பக்காரனாக அவருக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பதில் அளவிலா மகிழ்ச்சியடைந்தவன். த

சு.ரா பக்கங்கள்
 

17.2.1996, சனி காலையில் சுமார் 25/30 கவிதைத் தொகுதிகளில் - 107 கவிதைகள், பசுவய்யா - நண்பர்கள் பெயரெழுதி அன்பளிப்புப் பிரதிகளுக்குக் கையெழுத்திட்டேன். எம்.கே. ஸானு எழுதிய ஸ்ரீ நாராயண குருவின் வாழ்க்கை வரலாறு படித்தேன். நாராயண குருவின் வாழ்க்கை வரலாறு என் மனதைச் சிறிது பாதித்திருப்பதை உணர்ந்தேன். பெரியாருடைய சிந்தனைகளுடன் இவரது சிந்தனையை ஒப்பிட்டுப் படித்துப்பார்க்க வேண்டும். வரலாறு சார்ந்து, சூழல் சார்ந்து படைப்புகளைப் படித்துப்பார்க்கும் பழக்கம் எனக்கு ஏற்படவில்லை. என் படிப்பிலும் சிந்தனைகளிலுமுள்ள குறைகளைச் சிறிய அளவில் உணர முடிகிறது. போகப்போக ஆழமாக உணர முடியும். என்னைச் சரிசெய்துகொள்ள முடியும். என் சிந்தனையில் விரிவும் ஆழமும் கொள்ள முடியும். சென்ற வருடம் இந்த நாளில்தான் நா

தலையங்கம்
 

பேரறிஞர் அண்ணாவின் நூற்றாண்டு விழாவினையட்டித் தமிழகம் முழுவதும் சிறையில் இருந்த ஆயுள் தண்டனைக் கைதிகளில் 1,405 பேர் விடுதலைசெய்யப்பட்டிருக்கிறார்கள். திமுகழகத்தின் நிறுவனரும் திமுக, அதிமுக உள்ளிட்ட திராவிடக் கட்சிகளின் மதிப்புமிக்க தலைவருமான அண்ணாவின் நூற்றாண்டு விழாத் தமிழக மக்களுக்கு மிக முக்கியமானதொரு கொண்டாட்டம். தன் எழுத்திலும் சொல்லிலும் செயலிலும் ஏழை எளிய மக்களின் நலன்களை முன்னிறுத்தியவர் அவர். காங்கிரஸ் முன்னிறுத்திய தேசியத்திலிருந்து முற்றாக வேறுபட்ட தொரு சமூக அரசியல் கோட்பாட்டை ஆதாரமாகக்கொண்டு அவரால் தொடங்கப்பட்ட திமுகழத்தின் ஆட்சியில்தான் 1967இல் ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசித் திட்டம் குறிப்பிட்ட அளவில் செயல்படுத்தப்பட்டது. ஏழை எளிய மக்கள் பயன்பெறத்தக்க வகையில

கண்ணோட்டம்
 

வரும் அக்டோபர் 15ஆம் தேதியோடு சுந்தர ராமசாமி மறைந்து மூன்றாண்டுகள் கடந்திருக்கும். நினைவுகூர்தலின் துயரத்திலிருந்து, அவர் விட்டுச்சென்ற பணிகளைப் பொறுப்புணர்வோடு தொடர்வதன் மூலமே விடுபட முடியும் எனத் தோன்றுகிறது. ஒரு எழுத்தாளனாக இயங்குவது குறித்து எனக்குள் நிலவிவந்த பதற்றங்களைத் தணித்தவர் என்ற வகையில் அவருக்கு நான் பெரிதும் கடமைப்பட்டுள்ளேன். 1993இல்தான் நான் அவரை முதன்முதலில் சந்தித்தேன். முதல் சந்திப்பிலேயே என் பதற்றத்தை அடையாளம் கண்டுகொண்டுவிட்டவர் அவர். தனிப்பட்ட தோல்விகளாலும் தொடர்ந்து வந்த அவமானங்களாலும் நான் அப்பொழுது மிகச் சோர்ந்துபோயிருந்தேன். வாழ்வின்மீதும் மனிதர்கள் மீதும் வெறுப்பும் வன்மமும் மண்டிய ஒரு மனநிலையில் சுந்தர விலாசின் மாடியில் எதிரெதிராக அமர்ந்துகொண்டு

 

தொடர்ந்து நடைபெற்றுவரும் ஒரு செயல் அல்லது நிகழ்வு திடீரெனத் தடுத்து நிறுத்தப்பட்டால் அதைத் 'தடை' என்ற சொல்லில் அல்லாமல் வேறு எப்படிக் குறிப்பிடுவதாம்? 'புகை பிடிக்கத் தடை' என்றால் புகையிலை பயிரிடவோ, சிகரெட் விற்பதற்கோ இங்கு தடையில்லை என்பது பாமரர்க்கும் புரியும். 'ஊர்வலம் போகத் தடை' என்றால் மனிதர்கள் நடமாடத்தடையில்லை என்பது இங்கு யாவருக்கும் புரியும். எனவே 'தடை' என்ற சொல்லைக் காலச்சுவடு பயன்படுத்தியதில் எவ்வித பாவனையும் பாசாங்கும் இருப்பதாகத் தெரியவில்லை. கருத்துகளை வெளிப்படுத்தக்கூடிய ஒரு எழுத்தாளராக இருந்தும் இமையத்திற்கு இது புரியாமல்போனது துரதிருஷ்டமே! நூலகத் துறையை நம்பி இங்கு எந்த இதழும் புத்தகங்களும் வெளியிடப்படுவதில்லை. ஆனாலும் மக்கள் வரிப் பணத்தில் தங்களது இதழும் பு