கட்டுரை
 

பங்குச்சந்தை அதிபாரமான பொருள். இந்தக் கனமான விஷயம் பற்றிப் பேச எதையுமே மெலிதாக்கும் இரண்டு வர்த்தக சினிமாக்களுடன் தொடங்குகிறேன். குப்பைப் படங்களிடையே சில கொழுத்த செய்திகளைப் பொதுக் களத்தில் இலகுவாக்கும் சாதுரியம் வணிகப் படங்களுக்கு இருக்கிறது. ஒன்று ஓலிவர் ஸ்டோன் இயக்கிய ‘Wall Street’. இதில் மைக்கல் டாக்கிலசின் கதாபாத்திரம் சந்தையின் உன்னதம் பற்றிச் சின்னப் பிரசங்கம் செய்யும். அதில் வரும் ஒரு வசனம்: ‘Greed, lack of better word is good’ இது நிதி நிறுவனங்களில் வேலைபார்ப்பவர்களின் வேதவாக்கியமாக இந்தப் பங்குச் சந்தைச் சரிவுக்குமுன் கொண்டாடப்பட்டது. நேரம் இருந்தால் இதை You tube இல் பாருங்கள். மற்றது மணிரத்னத்தின் ‘குரு’. இதிலும் குருபாய் பாத்

அகவிழி திறந்து
கண்ணன்  

மாற்று என்ற சொல் ஆங்கிலத்தின் Alternative என்பதன் தமிழாக்கம்; பிரதானமான போக்கிற்கு மாற்று என்பது பொருள். தமிழில் இன்றைய காலகட்டத்தில் பிரதானமான போக்கு அல்லது மையப்போக்கு என்பது லாப நோக்கம் கொண்டது. லாப நோக்கம் கொள்வது பிழை அல்ல. லாபம் வளர்ச்சிக்குத் தேவையானது. லாபம் இன்றி எழுத்தாளனுக்குக் காப்புரிமை வழங்க முடியாது. ஆனால் மையப்போக்கு லாப நோக்கத்தை மட்டுமே கொண்டது. பண்பாடு பற்றி அது கவலை கொள்வதில்லை. மொழி பற்றிய அக்கறை அதற்கு இல்லை. மதிப்பீடுகள் இல்லை. செயல்பாட்டில் ஒரு செம்மை இருப்பதில்லை. தயாரிப்பில் கவனம் இருப்பதில்லை. உலகப் பதிப்பகச் சூழல் பற்றிய விழிப்புணர்வு அதனிடம் இல்லை. தமிழ் வாசகன் பற்றிய இந்த மையப்போக்கின் கணிப்பு மட்டமானது. வாசகனுக்குப் பிழையான மொழி பற்றிய அக்க

சிறுகதை
ஃப்ராங்க் பாவ்லாஃப்  

கால்களை ஓய்வாக நீட்டிக்கொண்டு, காப்பியைப் பருகியபடி மனத்தில் தோன்றியதையெல்லாம் சார்லியும் நானும் நிதானமாகப் பகிர்ந்துகொண்டிருந்தோம். மெதுவாக நேரம் கடந்துகொண்டிருக்கச் சில அருமையான கணங்களை அனுபவித்துக்கொண்டிருந்தோம். திடீரென, தனது நாயைத் தான் கொல்ல வேண்டி வரும் என அவன் சொன்னான். எனக்குக் கொஞ்சம் தூக்கிவாரிப்போட்டாலும் வேறு உணர்வு எதுவும் எழவில்லை. என்னைப் பொறுத்தளவில் பதினைந்து வருடங்கள் - இது நீண்ட காலம்தான்- வாழ்ந்துவிட்ட ஒரு நாய், நோயுற்றுச் சிரமப்படுவது பார்க்க வருத்தமளிக்கக்கூடிய ஒரு விஷயம். எப்படியும் ஒருநாள் அது இறந்துதான் போக வேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டுதான் ஆக வேண்டும். அதை ஒரு பழுப்பு நாய் என்று சொல்லி என்னால் ஏமாற்ற இயலாதுதானே? என்றான் சார்லி. என்ன செய்வது, லாப்

 

ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்ததாம்... ஒன்றின் சூல் விரிந்து ஆயிரம் பூ ஆனது. ஆயிரமாயிரமாயிரம் குடங்கள் அநேக கோடிப் பூக்கள். பூர்விகத்தில் பூக்களுக்கு நிறமில்லை. இரவில் கருமையும் பகலில் வெண்மையுமாய்ப் பொலிந்தனவாம். உயிர்முடிச்சின் சூட்சுமம் அவிழ்ந்ததென ஆதிப் பூ ஒன்று தன்னைப் பூ என் றறிந்தது. ஆனாலும், தான் யார் மணமா நிறமா என்று கவலை அதற்கு. நிறத்தைக் கூட்ட ஒப்பனையில் இறங்கியது. மணத்தைக் கூட்ட திரவியங்கள் பூசியது. வரிசையில் நிற்கும் பூக்கள் வரிசையை மீறும் பூக்கள் கொத்தாய்த் திரண்டு கோஷமிடும் பூக்கள் கொத்துக்கள் திரட்டி லாபமுறும் பூக்கள் தனியாய்க் கிடந்து மருகும் பூக்கள் தனிமையை ருசிக்க விலகும் பூக்கள் நந்தவனம் மெல்ல மெல்ல அங்காடியாய் மாறியது. பூக்களின் நெரிசலற்ற

சிறுகதை
அ. முத்துலிங்கம்  

அம்மாவுக்குக் கனடாவில் நம்ப முடியாத பல விசயங்கள் இருந்தன. அதில் மிகப் பிரதானமானது வீடுகளில் பூட்டு என்ற பொருளுக்கு வேலை இல்லாதது. அம்மாவின் கொழும்பு வீட்டில் அலமாரிக்குப் பூட்டு இருந்தது. தைலாப்பெட்டிக்குப் பூட்டு இருந்தது. மேசை லாச்சிக்குப் பூட்டு இருந்தது. பெட்டகத்துக்குப் பூட்டு. வாசல் கதவுக்குப் பூட்டு. கேட்டிலே பெரிய ஆமைப்பூட்டு. இப்படியாகப் பூட்டு மயம். ஆனால் கனடாவில் குளிர்சாதனப் பெட்டிக்குக்கூடப் பூட்டு இல்லாதது மன்னிக்க முடியாத குற்றமாக அம்மாவுக்குப் பட்டது. எல்லாக் குளிர்சாதனப் பெட்டிகளும் பூட்டோடு வரும் என்றுதான் அவர் நினைத்தார். கொழும்பில் இருந்தபோது அவர் ஒரு வீட்டுக்குப் போயிருக்கிறார். அங்கே வரவேற்பு அறையில் விருந்தாளிகள் உட்கார்ந்து சம்பாசணை செய்யும்போது அவர்க

கட்டுரை
அசோகமித்திரன்  

ஐந்தாறு ஆண்டுகளாகவே என்னால் பல விஷயங்களை நினைவுப்படுத்திக் கொள்ள முடியாமல் போவதை உணர்ந்திருக்கிறேன். என் குடும்பம்வரை இதை அவர்களும் உணர்ந்திருந்தாலும் என் நண்பர்கள் ஒத்துக்கொள்வதில்லை. ஒருநாள் மாலை சுமார் அரைமணி நேரத்திற்கு என் வீட்டுக்குச் செல்லும் வழி மறந்துவிட்டது. அதைவிட இன்னும் தீவிரமானது என் பெயர், முகவரி மறந்துவிட்டது. ஆனால் மொழி மறக்கவில்லை. சில வயதானவர்களுக்குப் பிறர் முகம், பெயர் முதலியன மறந்துவிடுவதை ஒரு காலத்தில் இயல்பான மாற்றமாகக் கருதினார்கள். இன்று அதை ஒரு வியாதியாகக் கருதுகிறார்கள். சுமார் நாற்பதாண்டுகளுக்கு முன்பு எனக்கு அறிமுகமான ஆல்பர்ட் ஃபிராங்க்ளின் என்பவர் எங்கள் குடும்பத்துக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர். அவருக்குத் தமிழ் எழுதப் படிக்க நன்றாகவே தெரியு

கட்டுரை
நாகரத்தினம் கிருஷ்ணா  

2008ம் ஆண்டு இலக்கியத்திற்கான நோபெல் பரிசு ழான்-மரி குஸ்த்தாவ் லெ க்ளேஸியோ (Jean-Marie Gustave Le Clézio) என்ற நீண்ட பெயருக்குச் சொந்தக்காரரான பிரெஞ்சு எழுத்தாளருக்கு வழங்கப்பட்டிருக்கிறது. ஒன்றுக்கு இரண்டெனப் பெயர்கள் (ழான்-மரி, குஸ்த்தாவ்) அவருக்கு உண்டென்றாலும், லெ க்ளேஸியோ (Le Clézio) என்ற குடும்பப் பெயரிலேயே சுருக்கமாகப் பிரெஞ்சு இலக்கிய உலகில் இவர் அறியப்பட்டிருக்கிறார். முதல் நாவல் 'Le Procès-Verbal' (The Interrogation) 1963ஆம் ஆண்டு வெளிவந்தபோது இவருக்கு இருபத்துமூன்று வயது. அந்த ஆண்டிற்கான ரெனொதொ இலக்கியப் பரிசினை (Prix Renaudot) அந்நாவலுக்காக வென்றார். அன்றிலிருந்து கடந்த நாற்பத்தைந்து ஆண்டுகளாக அயர்வுறாமல் எழுதிவருகிறார். இன்றைய தேதியில் சிறு

கட்டுரை
எஸ். நீலகண்டன்  

சேகோ (Sago), மலேய மொழியின் சேகு என்கிற சொல்லிலிருந்து ஆங்கிலத்துக்குச் சென்றதாகும். மெட்ரோசைலான் ஸாகு (Metroxylon Sagu) வகையைச் சார்ந்த, தெற்காசியச் சதுப்பு நிலங்களில் விளைகிற ஒருவகைப் பனைமரத்தின் ஊறலைக் (பதநீரை) காய்ச்சுவதால் கிடைக்கும் மாவுதான் சேகோ. அந்த மாவைக் கோள வடிவில் அரிசி போல் சிறிய உருண்டைகளாக்கி இந்தியாவில் விற்பனைசெய்தனர். ஜாவாவிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டதால் அது ஜாவா அரிசி எனப்பட்டது. காலப்போக்கில் ஜாவா அரிசி, ஜவ்வரிசியாக மருவிவிட்டது. ஜவ்வரிசி தமிழ்நாட்டில் பாயசம் தயாரிப்பதற்குத்தான் அதிகமாகப் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் வங்காளத்தில் அது சேகோ என்றே அறியப்பட்டு வங்க மக்களின் பிரதான உணவில் ஒரு பகுதியாக விளங்குகிறது. மஹாராஷ்டிரத்தில் சாபுதானா என்று அற

கட்டுரை
அ. ராமசாமி  

தொலைபேசியில் அழைத்த அவர் பல்கலைக்கழக இலக்கியத் துறையன்றில் பணியாற்றி ஓய்வுபெற்றவர். தலித் இலக்கியப் படைப்புகளை மதிப்பீடு செய்து நூல் ஒன்றை எழுதப்போவதாகக் கூறி, யாரையெல்லாம் படிக்க வேண்டும் எனக் கேட்டார். காலச்சுவடு பதிப்பக வெளியீடான 'தமிழினி 2000' பெருந்தொகுப்பில் இருக்கும் எனது 'தமிழ் தலித் இலக்கியம்' கட்டுரையைப் படித்தீர்களா? என்று கேட்டேன். அக்கட்டுரையை வாசித்துவிட்டேன். அதில் குறிப்பிடப்பட்டுள்ள படைப்பாளிகளின் படைப்புகளைத் தொகுத்துவைத்துள்ளேன்; வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஆனால் அதற்குப் பிறகு - அதாவது 2000க்குப் பிறகு வந்துள்ள படைப்பாளிகள், படைப்புகளின் விவரம் வேண்டுமென்றார். கவிதையில் சுகிர்தராணியும் சிறுகதையில் அழகிய பெரியவனும் ஜே. பி. சாணக்யாவும் நினைவுக்குவர அவர்க

கட்டுரை
அரச. முருகுபாண்டியன்  

வெள்ளை எதிர்ப்பின் மனிதம் புரிய கறுப்பனாய் இருந்துபார் பார்ப்பன எதிர்ப்பின் தன்மானம் உணரப் பறையனாய் இருந்துபார் ஆதிக்கமொழி எதிர்ப்பின் வரலாறு தெரியத் தமிழனாய் இருந்துபார் வல்லாங்கு செய்யப்பட்ட பெண்ணாய் இருந்துபார் -இன்குலாப்மீண்டும் மீண்டும் தலித் இலக்கியம் கேள்விக்குட்படுத்தப் படுகிறது. 'காய்த்த மரத்தில்தான் கல்லடிபடும்' என்பார்கள். தலித் இலக்கியமும் அப்படித்தான். தலித் படைப்பாளிகள் தீவிரமாக இயங்க இது போன்ற வசையுரைகள் தேவைதான் என்றாலும் அதைச் சொல்லுகிற நபர்களின் உள்நோக்கம் வேறு. "தலித் இலக்கியங்களில் தலித், எண்ணெய் தேய்க்காமல் பரட்டைத் தலையுடன் இருப்பான், கோபப்படுவான், சண்டை போடுவான், தலித் பெண் சோரம்" போவாள் என்கிறார் சோ. தர்மன். "தலித் இலக்கியத்தை ஒப்புக்கொண்டால் பிராமண

கட்டுரை
அழகரசன்  

சோவியத் ரஷ்யாவில் 20ஆம் நூற்றாண்டின் முன்பாதிவரை, 'உற்பத்தி'யாகி வெளிவந்த எழுத்துக்கள் யாவும் ஓரளவு அறம் வழுவியவையாகவே (Morally Flawed) இருந்தன என்று பக்தின் நோய்வாய்ப்பட்டுக் கிடந்த தனது இறுதி நாள்களில் கூறினார். எதையுமே நேரடியாகச் சொல்லத் தயங்கிய தனது எழுத்துக்களும் இதன் அங்கமாகவே உள்ளது என்பார். கிட்டத்தட்ட இதற்கு இணையான ஒரு கருத்தையே பாலஸ்தீனப் போராளியாக வாழ்ந்து, மறைந்த எட்வர்ட் சையத்தும் கூறுவார். அதாவது மேலைநாட்டுப் பல்கலைக்கழகங்களிலிருந்து 'இலக்கியத் திறனாய்வு' என்ற பெயரில் எழுதப்பட்ட (புதுத்திறனாய்வு முதல் ஓரளவு அமைப்பியல்வாதம், பின் அமைப்புவாதம் உள்பட) அனைத்தும் விமர்சகர் தன் இனம், பண்பாடு இவற்றோடு கொண்டிருந்த உறவை, நேசத்தை வெளிப்படுத்துவதாகவே இருக்கிறது என்றார். ம

கட்டுரை
கி. அ. கீதா  

இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (ஐ. ஐ. டி) சேர்ந்தபொழுது பின்காலனியத்துவத்தில் ஆய்வு மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தேன். அதேசமயத்தில் தலித் மக்களின் விடுதலையை முன்வைத்து இயங்கும் தலித் அரசியலின் கோட்பாடுகளைப் பிரதிபலிக்கும் தலித் இலக்கியப் படைப்புகளின் வீரியம் என்னைப் பாதித்தது. இக்காலகட்டத்தில் இளங்கலை தொழில்நுட்ப மாணவர்களுக்கு தலித் இலக்கியப் பாடம் எடுக்கையில் தலித் இலக்கியம் பற்றிய மாணவர்களின் பல்வேறு மாறுபட்ட கருத்துகளும் குறிப்பாக அவர்கள் தலித் இலக்கியத்தை அணுகும்விதமும் இவ்விலக்கியத்தின் தாக்கம் குறித்து என்னை ஆராயத் தூண்டின. கடந்த பத்தாண்டுகளில் தமிழில் மட்டுமல்லாது, ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டு இந்திய, வெளிநாட்டுப் பல்கலைக்கழகப் பாடத்திட்டத்தின் ஒரு பகுதி யாகவும்

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

தலித் அடையாளத்தின் இன்றைய நிலை குறித்துப் பல்வேறு கருத்துகள் வெளிப்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்த விவாதங்களிலிருந்து விலகி, வேறொரு அம்சத்தைப் பற்றியும் பேச வேண்டியுள்ளது. 1990 தொடங்கி தலித் அடையாளம் தலித் அல்லாத தளங்களில் ஏற்படுத்தியுள்ள தாக்கங்கள் குறித்தும் அவற்றை தலித் அல்லாதார் எதிர்கொண்டுவரும் விதம் குறித்தும் விளங்கிக்கொள்வது மேற்கண்ட விவாதங்களின் ஒரு பகுதியாக அமையும். அரசியல் என்னும் சொல்லாடல் வெறுமனே நாடாளுமன்ற அரசியல் நடவடிக்கைகளை மட்டும் குறிப்பதாக இல்லாமல் சமூகவியல், பண்பாட்டு நடவடிக்கைகளையும் குறிக்கும் சொல்லாக மாற்றம் பெற்றது தலித் அடையாள உருவாக்கத்தின் போதுதான். இச்சொல் ஏற்கெனவே அறிவுத் துறையில் புழங்கிவந்திருந்தாலும் விரிவான பொருளில் கையாளப்பட்டது இப்போதுதான்.

கட்டுரை
க.ம. தியாகராஜ்  

மகாராஷ்டிர மாநிலம் கயர்லாஞ்சியில் ஆதிக்கச் சாதியினரால் கொடூரமான முறையில் கொல்லப்பட்ட ஆறு தலித்துகளுக்கு நீதி வழங்கப்பட்டிருக்கிறது. 'கயர்லாஞ்சி தலித் மக்கள் படுகொலை வழக்கு' என அழைக்கப்பட்ட இவ்வழக்கின் முடிவை அறிந்துகொள்ள மனித உரிமை ஆர்வலர்களும் ஜனநாயகவாதிகளும் இரண்டாண்டுகளாகக் காத்திருந்தனர். கடந்த 17 மாதங்களாக நடந்துவந்த இந்த வழக்கில், கொலை செய்தது, விதிகளுக்கு மாறாகக் கூட்டமாகக் கூடியது, வன்செயலில் ஈடுபட்டது, சாட்சியங்களை அழித்தது போன்ற பல்வேறு பிரிவுகளின் கீழ் குற்றம் சாட்டப்பட்டு, குற்றவாளிகள் எனக் கண்டறியப்பட்ட எட்டுப் பேரில் ஆறு பேருக்கு மரண தண்டனையும் இரண்டு பேருக்கு ஆயுள் தண்டனையும் வழங்கப்படுவதாக பண்டாரா மாவட்டச் சிறப்பு நீதிபதி எஸ்.எஸ். தாஸ் 24.9.2008இல் அளித்த தன்

எதிர்வினை
மு. பழனி இராகுலதாசன், தேவகோட்டை  

மதிப்புரைப் பகுதியில் பழ. அதியமான் முன்னுரைச் செய்தியாகத் தந்துள்ள தகவல்கள் பொருத்தமானவை அல்ல. 1957 செப்டம்பர், 10ஆம் தேதியன்று மாவட்ட ஆட்சியர் கூட்டிய கூட்டத்தில் தேவர் “மறவர்” சார்பாகக் கலந்துகொள்ளவில்லை. இது ஒரு சாதிக் கலவரம் என்று காட்டுவதற்காக, காங்கிரசும் காங்கிரஸ் தலைவர்களும் பெருந்தலைவர் காமராசரின் அரசாங்கமும் செய்த சூட்சுமமான உபாயங்களைப் புரிந்துகொண்ட தேவர் “நான் இந்தப் பகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில்தான் கலந்துகொள்கிறேன்” என்று தெளிவுபடுத்துகிறார். “இன்று நடப்பது அரசியல்ரீதியான பிரதிநிதிகள் கலந்துகொள்ளும் அமைதிப் பேச்சுவார்த்தை; சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கேற்று, கையொப்பம் இட்டு அறிக்கை கொடுப்பதே பொருத்தம்;

எதிர்வினை
பொ. இரத்தினம், வழக்கறிஞர் மதுரை  

செப்டம்பர் 2008 இதழில் "சென்னகரம்பட்டி: அதிகாரத்தின் ஓலம்" என்னும் தலைப்பில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ள கட்டுரையில் விடுபட்டுப்போன சில அடிப்படை உண்மைகளைப் பதிவுசெய்கிறேன். தமிழகத்தில் தலித் மக்களின் விடுதலை உணர்வை வளர்க்க அம்பேத்கரின் அனுபவப் பகிர்வை உள்வாங்கியாக வேண்டும். இதற்கான தொடர் விவாதத்தைக் காலச்சுவடு நடத்த வேண்டும் என்ற நோக்கில் எழுதுகிறேன். 5.7.1992இல் தலித்துகள் இருவர் கொல்லப்பட்ட வழக்கில் 16 ஆண்டுகள் கழித்து 4.8.2008இல் தண்டனை வழங்கப்பட்டிருந்தாலும் சாதி, பணம், அரசியல், வன்முறை போன்றவற்றின் ஆதரவு எவையுமற்ற தலித் மக்கள் இத்தீர்ப்பைப் பெற்றுள்ளனர் என்பது அவர்கள் மேற்கொண்ட சட்டரீதியான போராட்டங்களின் வலிமையைக் காட்டுகிறது என்பதைக் கட்டுரையாசிரியர் சுட்டிக்காட்டிய

கட்டுரைத் தொடர்
சங்கீதா ஸ்ரீராம்  

உணவுப் பிரச்சினையைத் தீர்ப்பதற்காக நவீன அறிவியல் நமக்களித்த ஒரு தொழில்நுட்பத் தீர்வுதான் (technological solution) பசுமைப் புரட்சி. அப்படியென்றால், உணவுப் பிரச்சினை பெரும்பாலும் ஒரு தொழில்நுட்பப் பிரச்சினை என்ற முடிவில்தான் இப்படி ஒரு தீர்வை முன்வைத்திருக்க வேண்டும். அந்தத் 'தீர்வின்' பலன்களை அலசி ஆராய்ந்து பார்ப்பது அடுத்த கட்டம். முதலில், இந்த முடிவின் அடிப்படை அனுமானங்களைக் கேள்விக்குட்படுத்தப்போகிறோம். இதுவரையில் நாம் ஆழமாகப் பார்த்ததுபோல, இந்திய மண் வளமிழந்தது உண்மைதான். போதிய (எருவாகிய) சாணம் கிடைக்காமல், மண்ணுக்குச் சேர வேண்டிய பிண்ணாக்குகள் ஏற்றுமதியாகி, கால்நடைகளுக்குப் போதிய உணவில்லாமல், பயிர் சுழற்சி கைவிடப்பட்டு, கால்நடைகள் லட்சலட்சமாய் மாண்டுபோய், மேல்மண் அரித்

கட்டுரை
நாகார்ஜுனன்  

அக்டோபர் 15. மறைந்த எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் மூன்றாம் நினைவு நாள். அன்றிரவு அவருக்கும் எனக்கும் எண்பதுகளின் மத்தியில் நவீன நாவல் குறித்து நடந்த உரையாடலை நினைத்துக்கொண்டிருந்தேன். வெளியில் அவ்வளவாகத் தெரியாத உரையாடல் அது. நள்ளிரவு கழிந்த நிலையிலும் காலாற நடந்தேன். மழை வரும் எனத் தெரிந்தது. அப்போதும் அந்த பிஷாரடியின் மாலைச் செம்புல ஓவியம் அகலவில்லை. 'ஜே.ஜே: சில குறிப்புகள்' நாவலில் வரும் ஓர் ஓவியம் அது. அதன் செம்புலத்தை வைத்து ஸ்பானிஷ் கவிஞன் ஃபெடரிக்கோ கார்ஸியா - லோர்க்கா பற்றி நானும் சுந்தர ராமசாமியும் நாகர்கோவிலில் பேசியதும் நினைவுக்குவந்தது. இரண்டாம் உலகப் போர்க்காலத்தில் ஸ்பெயினில் ஃபாஸிஸத்தின் கொடுங்கரங்கள் தேடிக் கண்டுபிடித்துக் கொன்றன இடதுசாரித் தரப்புக் கவிஞர்

சு.ரா. பக்கங்கள்
 

சுந்தர ராமசாமி நாகர்கோவில் 23.4.1982 அன்புள்ள புஷ்பராஜன், உங்கள் 19.4.1982 கடிதம். அதைப் படித்துவிட்டு நானும் என் குடும்பத்தினரும் மிக்க மகிழ்ச்சி அடைந்தோம். நீங்கள் வந்துபோனதில் எங்களுக்கு எவ்வளவோ சந்தோஷங்கள். எல்லாவற்றையும் உங்களிடம் கூறிக்கொண்டிருப்பது அழகல்ல. ஆனால் ஒரு உண்மையான ஜீவனை, அன்புள்ளம் கொண்ட ஜீவனைச் சந்திக்கும்போது - இவற்றைத் தேடிக் கிடைக்காமல் பரிதவித்துக்கொண்டிருக்கும்போது - கிடைக்கும் பரவசத்தை மறைப்பது அழகல்ல. எது சகல உன்னதங்களுக்கும் அடிப்படையோ அது உங்களிடம் இயற்கையில் கூடி நிற்கிறது. இதை அடிப்படையாகக் கொண்ட உங்கள் ஆளுமை முழுக்கவும் வெளிப்பட்டு நீங்கள் மிகவும் மேலான நிலைக்கு வர வேண்டும் என்று நான் உணர்ச்சிவசப்பட ஆசைப்படுகிறேன். ஏதோ சந்தர்ப்பவசத்தால் நிகழ்

பதிவு
அ.கா. பெருமாள்  

நெய்தல் இலக்கிய அமைப்பு அளித்துவரும் ‘இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது’ இந்த ஆண்டு பிரான்ஸிஸ் கிருபாவுக்கு வழங்கப்பட்டது. சான்றிதழும் பத்தாயிரம் ரூபாய் ரொக்கத் தொகையும் அடங்கிய இவ்விருது வழங்கிய நிகழ்ச்சி 19.10.2008 அன்று நாகர்கோவில், ரோட்டரி கம்யூனிட்டி சென்டர் அரங்கில் நடந்தது.இந்த நிகழ்ச்சிக்கு நெய்தல் கிருஷ்ணன் தலைமையேற்க, தேர்வுக்குழு அறிக்கையைக் கவிஞர் சுகுமாரன் படித்தார். தமிழவன் சு.ரா. விருதை வழங்கிச் சிறப்புரையாற்றினார். பிரான்ஸிஸ் கிருபா விருதைப் பெற்றுக்கொண்டு நன்றி கூறினார். அரவிந்தன் விழா நிறைவுரையாற்றினார். நிகழ்ச்சியை ராஜமார்த்தாண்டன் ஒருங்கிணைத்தார். “பிரிட்டனில் வட்டார மொழிகளைப் பற்றிய பதிவுகளைப் பள்ளி கல்லூரிகளில் பாடத்திட்டத்

பதிவு: ஆவணப்படம், அக்டோபர் 15, 2008. சென்னை
பெ. பாலசுப்ரமணியன்  

நவீன இலக்கியத்தில் தன் படைப்புகள்மூலம் தனக்கெனத் தனி இடத்தையும் பெரும் தாக்கத்தையும் ஏற்படுத்தியவர் சுந்தர ராமசாமி. ‘ஒரு புளிய மரத்தின் கதை’, ‘ஜே.ஜே: சில குறிப்புகள்’ முதலான நாவல்களினூடாக நன்கு அறியப்பட்டவர். 1931இல் நாகர்கோவிலில் பிறந்த இவர், ‘தண்ணீர்’ சிறுகதை மூலம் படைப்புலகுக்கு அறிமுகமானார். நாவல், சிறுகதை, கவிதை, மொழிபெயர்ப்பு எனப் பல தளங்களிலும் இயங்கிய சு.ரா., சிறந்த விமர்சகராகவும் திகழ்ந்தார். நவீன இலக்கிய உலகில் முக்கிய ஆளுமையாக விளங்கிய சு.ரா., குறித்து எடுக்கப்பட்ட ஆவணப்படம் ‘நீ யார்’ ஆர். வி. ரமணி இயக்கிய இந்த ஆவணப்படம் சுந்தர ராமசாமியின் மூன்றாம் நினைவு நாளான அக்டோபர் 15, 2008 அன்று மாலை ஏழு மணிக்கு அல்லயன்ஸ் ஃப்ரா

பதிவு
அருண்மொழி  

அக்டோபர் மாதம் மதுரையில் ‘கூடு’ பெண்கள் இயக்க அமைப்பும் மதுரைக் கல்லூரியின் தத்துவத் துறையும் இணைந்து பெண்களை மையமாக வைத்துப் பெண் இயக்குநர்களால் எடுக்கப்பட்டிருந்த ஆவண, குறும்படங்கள், முழு நீளப்படங்கள் இடம்பெற்ற இரண்டாம் உலகத் திரைப்பட விழாவை (பெண்கள்) நடத்தின. திரைப்படங்களின் மூலம் பெண்ணிற்கான தனிமொழியை வகுக்க இயலுமா? இதனை நோக்கிப் பயணித்த பெண் இயக்குநர்கள் எந்த அளவிற்கு வெற்றிபெற்றிருக்கிறார்கள்? இது போன்ற கேள்விகள் சார்ந்த விவாதத்தை நோக்கி நம்மை நகர்த்தும் விதமான திரைப்படங்களை எடுத்துள்ள சேட்டல் அக்கர்மேன், மார்த்தா மெஸ்ராஸ், மார்க்கரெட் வான்ட்ராட்டா, ஒலீனா, சோனாலி போஸ், அபர்ணா சென், தீபா மேத்தா, தீபா தன்ராஜ், லீனா மணிமேகலை போன்ற இயக்குநர்களது படங்களின் திரை

மதிப்புரை
தேவிபாரதி  

முற்போக்கு முகாமைச் சேர்ந்த எழுத்தாளர்களுள் ஒருவராக அறியப்பட்டிருக்கும் பவா செல்லத்துரையின் பதினோரு சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு இது. பிரச்சாரம் என்னும் பொதுவான அடையாளத்திலிருந்து விலகி, தான் தொட்டுணர்ந்த வாழ்வை, அதன் இயல்புகளோடு படைப்பாக்கும் முயற்சியை மேற்கொண்டுள்ள முற்போக்கு எழுத்தாளர்களுள் குறிப்பிடத் தகுந்தவராக, பவாவை அடையாளப்படுத்தும் சில கதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. மலையும் மலை சார்ந்த வாழ்வும் தமிழ் வாழ்வின் அறியப்படாத ஒரு பகுதி. பொதுச் சமூகத்தின் வாழ்வியல் நடைமுறைகளிலிருந்தும் மதிப்பீடுகளிலிருந்தும் முற்றாக வேறுபட்ட பழங்குடி வாழ்வைக் கலைப்படுத்துவது எந்தவொரு கலைஞனுக்கும் சவாலான காரியம். அந்தச் சவாலைச் சில கதைகளிலேனும் பதற்றமின்றி எதிர்கொண்டிருக்கிறார் பவா.

தலையங்கம்
 

ஈழப் படுகொலையின் 25வது ஆண்டை இலங்கை இனவெறி அரசு மிகக் கொடூரமான முறையில் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. தமிழீழ விடுதலைப் புலிகளை ஒடுக்கவும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளை மீட்கவும் நடத்தப்படும் போர் எனக் கூறிக்கொண்டு ஈழத் தமிழ் மக்களை ஈவிரக்கமற்ற முறையில் கொன்றுகுவிக்கிறது இலங்கை ராணுவம். 25 ஆண்டுகளுக்கும் மேலாகச் சொல்லொணாத் துயரத்தை அனுபவித்துவரும் தமிழ் மக்கள் இப்போது நடைபெற்றுவரும் தாக்குதல்களால் நிலைகுலைந்து மற்றுமொரு இடப்பெயர்வுக்கு நிர்ப்பந்திக்கப்பட்டிருக்கிறார்கள். 2001, செப்டம்பர் 11க்குப் பிறகு ஈழத் தமிழர்களைச் சந்தேகக்கண்கொண்டு நோக்கும் சர்வதேசச் சமுதாயம் புகலிடம் நாடிவரும் ஈழ அகதிகளுக்கு அடைக்கலம் அளிக்கத் தயங்கும் இச்சூழலில் தமிழக மக்களிடமிருந்து ஆதரவான கு

 

பா. செவுடனான நேர்காணலின் பெரும் பகுதியில் அவர் படைப்புகளில் கட்சிப் பிரச்சாரம் மேலோங்கி இருப்பதால் படைப்பாற்றல் நிறைவானதாக இல்லை என்ற கருத்தை அவரை ஏற்கச்செய்ய முற்பட்டது தேவையற்றது. கொள்கைச் சார்புடையோர் படைப்புகளில் கொள்கை பிரதிபலிக்கத்தான் செய்யும். இல்லையென்றால் அவை போலித் தன்மை கொண்டவை. மரண தண்டனை மட்டுமின்றி எல்லாவிதத் தண்டனைகளையும் மறு பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். தண்டனைகள், சிறைகள் எதற்கு? அவற்றினால் சமூகத்திற்கு ஏதேனும் பயனுண்டா? இவையெல்லாம் ஆராயப்பட்டுக் குற்றவியல் சட்டமே மாற்றப்பட வேண்டும். ‘அபூர்வத்திலும் அபூர்வமான’ என்ற சொற்றொடருக்கு ஒவ்வொரு நீதிபதியும் வெவ்வேறு அர்த்தங்களைக் கொண்டுதானே மரண தண்டனையை விதிக்கிறார்கள். பள்ளிகளில் கொடுக்கப்படும் தண்டனை

உள்ளடக்கம்