கட்டுரை
க. திருநாவுக்கரசு  

“2008 ஆம் ஆண்டு நவம்பர் 4ஆம் தேதி செவ்வாய், புகழ் வாய்ந்த நாளாக இனி என்றென்றும் நிலைத்திருக்கும். நமது முதல் ஆப்பிரிக்க - அமெரிக்க ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்பட்டது உங்களுள் சலனத்தை உண்டாக்கவில்லையென்றால், உங்களைக் கண்கலங்கவைக்கவில்லையென்றால், உங்கள் தேசத்தைப் பற்றி உங்களைப் பெருமைப்படவைக்கவில்லையென்றால் உங்களிடம் ஏதோ தவறு இருக்கிறது என்று அர்த்தம்” என்றார் முற்போக்கான அமெரிக்கப் பொருளாதார நிபுணரும் பொருளாதாரத்திற்கான இந்த வருட நோபெல் பரிசு பெற்றவருமான பால் குரூக்மேன். உண்மைதான். பாரக் உசைன் ஒபாமாவின் வெற்றிச் செய்தி கேட்டதும் அமெரிக்கக் கருப்பின மக்களின் மிக முக்கியமான தலைவரான ஜெஸ்ஸி ஜேக்ஸன் அழுததும் ஒபாமாவின் வெற்றி பற்றி சின்.என்.என். தொலைக்காட்சிக்குப்

கண்ணன்  

செக்ஸ் கவிதைகள் ‘குமுதம்’ (29.10.2008) இதழில் பெண் கவிஞர்களின் கவிதைகளுக்குக் கொடுக்கப்பட்ட அடைமொழி இது. மூன்று பெண் கவிஞர்கள் தங்கள் கவிதைகளில் இடம்பெறும் பாலியலின் அடையாளங்களை நியாயப்படுத்தும் விதமாக உருவாக்கப்பட்ட ‘சர்ச்சை’. இக்கவிதைகளின் அதிர்ச்சி மதிப்பையும் எதிர்ப்பையும் தமிழ் அறிவுச்சூழல் பெருமளவுக்குக் கடந்து வந்துவிட்டது. சமீபகாலத்தில் பெண்களின் படைப்புச் சுதந்திரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் குரல்கள் எழவில்லை. வெகுஜன இதழ்களில் பணியாற்றும் ‘இலக்கிய’ அன்பர்களுக்குத் தங்கள் இலக்கிய இருப்பை நினைவுபடுத்திக்கொள்ளவும் கற்பனை வறட்சியை மறைக்கவும் பெண்களின் அந்தரங்கங்களைச் சுரண்டவும் இலக்கியவாதிகளைக் காட்டிக்கொடுக்கவும் எப்போதும் அவசி

கண்ணோட்டம்
அசோகமித்திரன்  

இந்த ஆண்டு அக்டோபர் 20ஆம் தேதி காலமான ஸ்ரீதர் பலவிதங்களில் கே. பாலச்சந்தரின் திரைப்பட வரலாற்றை நினைவுபடுத்துகிறார். இருவரும் அரசு ‘வெள்ளைக் காலர்’ ஊழியர்கள். நாடகம் எழுதி, அது இன்னொருவரால் திரைப்படமாக்கப்பட்டதில் திரைப்படப் பிரவேசம் சாத்தியமாகிப் பத்துப் பதினைந்து ஆண்டுகளில் தயாரிப்பாளர்களாகவும் இயக்குநர்களாகவும் புகழ்பெற்றார்கள். வசனம் எழுதுவதுதான் இருவருக்கும் முதற்படி. வசைபாடுதல், அடுக்குமொழி ஒருபுறமிருக்க அந்த இயக்கத்துக்கு இணை கோடுகளாக இருவரும் செயலாற்றினார்கள். இருவரில் பாலச்சந்தர் அடுக்குமொழியில்லாவிட்டாலும் ‘ஃபைல், லைஃப்’, ‘பெண் கர்வமாயிருக்கலாம், கர்ப்பமாக இருக்கக் கூடாது’ போன்ற சொல் விளையாட்டுகளைப் பயன்படுத்தியிருக்கிறார்

கட்டுரை
உமா வரதராஜன்  

ஸ்ரீதர் என்றதும் ஒரு நீரோடை இன்னமும் என் மனத்துள் சலசலத்து ஓடிக்கொண்டுதானிருக்கின்றது. மங்கிய நிலவில் காஷ்மீரத்து ஏரியின் படகொன்றிலிருந்து ‘நிலவும் மலரும் பாடுது’ எனக் காதல் வண்டுகள் இரண்டு ரீங்காரமிடுகின்றன. குயிலின் கூட்டுக்குக் குடிவந்த காகத்தின் இறுமாப்புடன் ‘தேடினேன் வந்தது’ என்றொரு பெண்குரல் துள்ளிக்குதிக்கின்றது. சிதிலமடைந்த மாளிகையின் சுவர்களிலே வௌவால்களைப் போல நிராசையின் கனவுகள் தாங்கிய ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற வரிகள் பட்டு மோதி அலைகின்றன. சிட்டிபாபுவின் வீணையின் தந்திகளில் தத்தித் தத்தி நடக்கின்ற ஒரு குயில் கேட்கின்றது ‘சொன்னது நீதானா?’ இறுதிக் கணத்தின் ஒளி நடனத்துடன் ஒரு மெழுகுவர்த்தி உருகுகின்றது ‘உ

கட்டுரை
அம்ஷன் குமார்  

‘சுப்பிரமணிய பாரதி’ டாகுமெண்டரி படம் அனைவரையும் எளிதில் சென்றடைவதாக இருக்க வேண்டும் என்று அதன் தயாரிப்பாளர் ந. முருகானந்தமும் நானும் முடிவு செய்தோம். ஒரு மணி நேரப் படமாக அது திட்டமிட்டபொழுது அதற்கான காட்சிகளைத் தீர்மானிப்பது அவ்வளவு எளிதாக இல்லை. பாரதி பற்றி நூல்கள் எழுதத் தேவையான தரவுகள் நிறைய உள்ளன. அவரது வாழ்வைக் காட்சிப்படுத்தப் போதுமான ஆவணங்கள் இல்லை. ரா. அ. பத்மநாபனின் ‘சித்திர பாரதி’யில் உள்ள புகைப்படங்கள் அவற்றிற்கு ஒரு தோற்றுவாயைத் தந்தன. எனவே இப்படத்தை எடுக்கும்பொழுதே எதிர்காலத்திற்கும் தேவையான காட்சி ஆவணங்களைத் தயாரிப்பது அவசியமென்று உணர்ந்தோம். அதன்படி பாரதியின் வாழ்க்கையுடன் சம்பந்தப்பட்ட வீடுகள், இடங்கள், கல்வி நிலையங்கள், படித்த,

சிறுகதை
கோகுலக்கண்ணன்  

திரையரங்கத்தில் கிரிமீது இருள் கவிந்தது. மத்தியில் இருந்து கிளம்பிய வெம்மை அருகாமையில் வந்துவிட்ட ஒரு காட்டு மிருகத்தின் மூச்சுக்காற்றாய்ப் பரவியது. கிரியின் கண்ணுக்குள் இருள் கெட்டியான திரவமாய்ப் பரவிப் பார்வையைக் குலைத்தது. அவனுக்குள் சற்றே அடங்கியிருந்த படபடப்பு மீண்டும் தொடங்கியது. பொறுமை தொலைத்த பார்வையாளர்களின் விசில் பாம்புகள் அரங்கத்துக்குள் சீறியெழுந்தன; குரல்கள் படத்தைப் போடச்சொல்லியும் மின்விசிறிகளை முடுக்குமாறும் கட்டளையிட்டன. ஜெனெரேட்டரின் சத்தம் கிளம்பிய கொஞ்ச நேரத்தில் பளீரென வெளிச்சம் திரையில் படர்ந்தது. இருள் இப்போது ஒரு மெல்லிய திரையாய் மாறி விளாவத் துடிக்கும் வெளிச்ச விரல்களை எதிர்ப்பின்றித் தனக்குள் அனுமதித்தது. திரையில் காட்சிகள் இடம்பெயரத் தொட

அனார்  

மூன்று பொழுதுகளாலான பச்சைக் கண்ணாடிக்குள் நான் பச்சைக் கண்ணாடி வெளிக்குள் உள் நுழைந்தேன் கண்ணாடிக்குள் உலவினேன் நெருப்புப் பொறியெனச் சில குமிழிகள் சிதறின மெல்லிய வளையங்களாய் நீர் தளும்பியது கண்ணாடிக்குள் அலையலையாக வீசியது காற்று கண்திறந்தேன் அபூர்வமான மெழுகுக் கடல் ஓர் காலைப்பொழுதெனத் தெரிகின்றது விளையாடத் தொடங்கிவிட்டேன் புரியாதவற்றையெல்லாம் அவை தீர்ந்தபாடில்லை... பார்த்திருக்க மெழுகுக் கடல் கரைந்தோடிற்று வம்மிப் பூக்கள் இறைந்துகிடந்த கண்ணாடியுள் தொட்டாச் சுருங்கிகள் முட்களை நீட்டிச் சுள்ளெனக் குத்தின பகல் பொழுது முற்றிய வசைமொழியாய் அறைகின்றது பகலின் கதவினுள் நுழைகிறேன் வெம்மையான சிறு நிழலில் பசிதேங்கிய உடலைச் சுருக்கி மடங்கிக் கிடக்கிறேன் தனிமை ஓணான் ஒளித்

தலையங்கம்
 

நவம்பர் 12, 2008 அன்று சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் மாணவர் கூட்டமொன்று மூன்று மாணவர்களைக் கூடித்தாக்கும் கொடூரக்காட்சி ஊடகங்களில் ஒளிபரப்பானபோது தமிழகமே உறைந்து போனது. நியாயப்படுத்த முடியாத இத்தாக்குதல் கண்டிக்கத்தக்கது. விழுமியம்கொண்ட சமூகம் குறித்த கனவை முன்னெடுத்துச் செல்ல வேண்டிய மாணவர்களிடையே நடந்த மோதல் என்பதால் மட்டுமல்ல சாதி காரணமாக நடந்த மோதல் இது என்பதாலும் கண்டனத்திற்குரியது. வன்முறை, சட்டக் கல்லூரி நடவடிக்கைகளின் ஒருபகுதியாக மாறிவிட்ட சூழலில் இம்மோதலுக்கு ஊடகக் கவனம் கிடைத்ததன் மூலம் பின்னணிப் பிரச்சினைகள் குறித்த விவாதம் எழுந்துள்ளது. இதற்கான தொடர்காரணங்கள் கண்டறியப்பட்டு இது போன்ற நிலைமை ஏற்படாமல் தடுக்க வேண்டிய பொறுப்பு அரசுக்கு மட்டுமல்ல, அர

கண்ணோட்டம்
கண்ணன்  

1983இல் இலங்கையில் நடைபெற்ற படுகொலைகளை அடுத்து, தமிழகத்தில் ஏற்பட்ட மக்கள் எழுச்சி பசுமையாக நினைவிருக்கிறது. எனது தலைமுறை தமிழகத்தில் கண்ட ஒரே எழுச்சியாக அதைக் குறிப்பிடலாம். மக்களின் உணர்வுகளுக்கான செயலையும் சொற்களையும் வழங்க அரசியல்வாதிகள் திக்குமுக்காடிய காலகட்டம் அது. எந்தத் தூண்டுதலோ கொடுக்கல் வாங்கல்களோ இன்றிச் சாதி, மதம், வர்க்கம் கடந்த எழுச்சி அது. பள்ளிக் குழந்தைகள் முதல் அன்றாடம் காய்ச்சிகள்வரை தம்மை வருத்திக் கொண்டு ஈழத் தமிழர்களுக்கு ஆதரவும் ஆறுதலும் அளிக்கத் துடித்த காலகட்டம். ஈழம் பற்றிய முரண்பட்ட கருத்துகள் நம்மிடையே இல்லாத காலம். மத்திய அரசைச் செயல்பட, ஆட்சியில் பங்கில்லாதபோதும் நம்மால் நிர்ப்பந்திக்க முடிந்த காலகட்டம். உழைப்பாளிகள் மதுரையில் கறுப்புக்

 

தலையங்கம் ஒவ்வொரு தமிழ் உணர் வாளர்தம் உள்ளக் கிடக்கையைக் காட்டியது. நாம் அனைவரும் வேண்டுவது, விடுதலைப் புலிகள்மீது கொண்டுள்ள வெறுப்பால் ஒட்டுமொத்த இலங்கைத் தமிழர்களின் நலனும் சூறையாடப்படுவதை நியாயப்படுத்தாதீர்கள். இதில் தமிழ்ச் சமுதாயம் வாளாவிருந்தால் வருங்காலம் நம்மைக் கேலிபேசும். கா. இர. குப்புதாசு, செஞ்சி தலையங்கத்தில் ஈழத் தமிழ் மக்களின் துயரத்தை எழுதியிருந்தீர்கள். இப்போது இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் உண்ணாவிரதத்தால்தான் பெரிய எழுச்சி ஏற்பட்டதென எல்லோரும் புகழ்கிறார்கள். அதைப் பற்றி ஒரு வார்த்தைகூடத் தாங்கள் கூறவில்லை. காலச்சுவடுக்கு நியாயமான உணர்வு வேண்டும். இதில் தலித்துகள் சம்பந்தமாக நடந்த கொடுமைகளைச் சிறப்பாக எழுதியிருந்தீர்கள். நாட்டில் சாதிய அமைப்பு நெ

சிறுகதை
இ. ஷேக் முகம்மது ஹஸன் முகைதீன்  

அபூபக்கர் நின்றுகொண்டிருந்தான். ஊஞ்சலின் கிரீச் ஒலியில் அவன் உம்மும்மா கால்களை மடக்கி உறங்கிக்கிடந்தாள். அந்த ஊஞ்சலுக்குப் பின்னால் ஏதோவொரு மாய உலகம் நிகழ்கால ஒப்பனைகளைக் கடந்துபோய்க்கொண்டிருப்பதை உணர்ந்தான். சிகப்புதான் அந்த உலகின் பிரதான நிறமாக இருந்தது. அபூபக்கர் ஊஞ்சலைக் கடந்து அங்கு நுழைந்தான். கும்மென்ற இரைச்சலுடன் மேகங்கள் விரைந்துகொண்டிருந்தன. உடைந்துபோன மேகத்துண்டுகளை வாரிச் சுருட்டியெடுத்தபடி முழு நிர்வாணத்துடன் ஒருவன் எதிர்ப்பட்டான். அவன் தலையில் சித்திர எழுத்துகள் எழுதப்பட்டிருந்தன. அபூபக்கருக்குப் பயம் தொற்றிக்கொள்ளவே மேகத்துண்டு ஒன்றைக் கெட்டியாகப் பிடித்தபடி பயணத்தைத் தொடர்ந்தான். வழியில் மழையும் காற்றும் மழைத்துளியின் திண்ணமும் அபூபக்கரின் உடம்பை

நேர்காணல்: சுகுமாரன்
சந்திப்பு: பெருமாள்முருகன்  

சுகுமாரன் (11.06.1957): நவீனத் தமிழ்க் கவிதை ஆளுமைகளுள் முக்கியமானவர். எளிமையும் செறிவும் கொண்ட இவர் கவிதைகள் படிமம், உவமை, சொற்சேர்க்கை ஆகியவற்றில் தனித்துவம் மிக்கவை. வடிவம், சொல்முறை ஆகியவற்றில் வெவ்வேறு விதங்களைக் கையாண்டு புதுமைசெய்தவர். அரசியல் சார்ந்த விஷயங்களையும் கவித்துவத்தோடும் சுயபார்வையோடும் கவிதைக்குள் கொண்டுவந்தவர். சுயவிமர்சனத்தைக் கறாராக வைத்துக்கொண்டிருப்பவர். இலக்கியம், இசை, திரைப்படம் ஆகியவை இவரது முப்பெரும் காதல்கள். சிறுகதைகளும் எழுதியுள்ளார். சமீப காலமாக இவர் எழுதிவரும் கட்டுரைகள் பல தளங்களைச் சார்ந்தவையாகவும் வாசிப்புத்தன்மை கூடியவையாகவும் உள்ளன. மொழிபெயர்ப்பில் கணிசமான பங்களிப்புகளைச் செய்துள்ளார். மலையாளம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலிருந்து கவ

மதிப்புரை
ராஜமார்த்தாண்டன்  

போரைத் திணித்தவர்கள்மீதான கோபத்தின் வெளிப்பாடுகளோ எதிர்த்துப் போராடும் போராளிகளின் அத்துமீறல்கள் குறித்தான விமர்சனங்களோ இல்லாத இன்றைய ஈழத்துக் கவிதைகளைக் (புலம்பெயர்ந்தோர் கவிதைகள் உள்பட) காணுதல் பொதுவாகவே அரிதாகிப்போன சூழலில், அவை தவிர்த்து, போரினால் ஏற்படும் அழிவுகளையும் மனச்சிதைவுகளையுமே வெளிப்படுத்தும் கவிதைகளை உள்ளடக்கி வெளிவந்துள்ளது துவாரகனின் ‘மூச்சுக்காற்றால் நிறையும் வெளிகள்’ தொகுப்பு. இத்தனைக்கும் இதிலுள்ள கவிதைகள் அனைத்தும் 1996 - 2008 காலப்பகுதியில் எழுதப்பட்டவையே. தன்னிரு மாமாக்கள் இளம்வயதில் போர்ச்சூழலில் சாவுகொள்ளப்பட்ட குறிப்பும் நூலில் உள்ளது.‘சின்னப் பூ’, ‘பேதம்’, ‘எங்களூர்க் கல்யாணம்’, ‘மன

மதிப்புரை
சுகந்தி  

ஒபாமா குறித்துத் தமிழில் வந்துள்ள முதல் புத்தகம் இதுதானா எனத் தெரியவில்லை. உலகப் புகழ்பெற்றுவிட்ட அவரைக் குறித்து நூற்றியிருபது பக்கங்களில் எளிய மொழியில் ஒரு புத்தகத்தை எழுதியிருக்கிறார் செ. ச. செந்தில்நாதன். ஒபாமாவின் வாழ்க்கைக் குறிப்பை இங்கே பிறந்தார் வளர்ந்தார் என்ற பார்வையில் அணுகாமல் ஒரு ஆஃப்ரோ அமெரிக்க இளைஞனின் பெரும் அரசியல் கனவு எவ்வாறு சாத்தியப்பட்டது என்பதான ஒரு கதையோட்டத்துடன் சொல்லியிருக்கிறார். அவர் இளமைக் கல்வி ஜகார்த்தாவில் தொடங்கி, ஆசியச் சிறுவனாக வாழ்ந்து மீண்டும் ஹாவாய்க்கே வந்தது என எதையும் காலக்கிரம வரிசையில் கட்டமைக்காமல் நிகழ்வுகளாகக் கோத்திருக்கிறார். ஒபாமா இலக்கியவாதி, சமூகப் பணியாளர் என்பதை வெறும் வாக்கியங்களாக விட்டுவிடாமல் சிகாகோ சமூகப்

கட்டுரை
நாகரத்தினம் கிருஷ்ணா  

எதிர்வருகிற 28 நவம்பரில் குளோது லெவி-ஸ்ட்ற்றோஸுக்கு (Claîde Lévi-Strauss) நூறு வயது. மனிதம் - மானிடம் என்ற அறிவியல் பிரவாகத்தில் மூழ்கி எழுந்த மாபெரும் சிந்தனாவாதி. மானிடவியலை எவரெஸ்டின் உச்சத்தில் நிறுத்தியதற்கான காய்ப்புகள் அவரது வயதுக்கு நிறையவே உண்டு. இன்றைக்கு ஆசுவாசமாகக் கால் நீட்டி முதுமைத் தூணில் சாய்ந்தபடி அதன் பெருமைப் பிரவாகத்தில் மூழ்கிச் சந்தோஷிக்கிற மனிதர். மானிடவியலை அமைப்பியம் (Structuralism) ஊடாகக் கட்டுடைத்தவர் குளோது லெவி-ஸ்ட்ற்றோஸ். அமைப்பியம் அல்லது அமைப்பியல் வாதம் உண்மையில் மொழியோடு தொடர்புடையது. ‘அமைப்பியம்’ என்ற சொல்லை அறிமுகப்படுத்தியவர் ஃபெர்டினான் தெ சொஸ்ஸ¤ய்ர் (Ferdinand de Saussure) என்ற சுவிஸ் நாட்ட

எதிர்வினை
ப்ரவாஹன்  

காலச்சுவடு அக்டோபர் 2008 இதழில் ஸ்டாலின் ராஜாங்கம் எழுதியுள்ள பறையன் எனும் சொல் மீதுள்ள பகை குறித்து: பறையன் என்ற சொல் ஆங்கில அகராதிகளில் சாதி அடிப்படையைக் கொண்ட சொல்லாகத்தான் குறிப்பிடப்பட்டுள்ளது, எனவே ‘சாதியடிப்படையைக் குறிக்கும் சொல் என்று அறியாமலே பயன்படுத்தப்படுவதாகச்’ சொல்வது சரியல்ல. இன்றைக்கு அரசியல் தளத்தில் அடிக்கடியும் தலித் மக்களைச் சிறுபான்மையரோடு சேர்த்துப் பேசுவது, கிறித்தவர்களாக மாறிவிட்டவர்களுக்கு இடஒதுக்கீடும் ஏனைய சலுகைகளும் கோருவது ஒரு போக்காகும். இந்நிலையில் இச்சொல்லை அகராதிகளில் வைத்திருப்பது தொடர்பாகப் பரிசீலிக்க வேண்டுவது அவசியம். ஜே.ஏ. துபுவா (1770-1838) ‘பறையன்’ என்பதாக இழிபொருளில் பயன்படுத்தியிருப்பதை ராஜ் கெ

எதிர்வினை
கோபால் ராஜாராம்  

அக்டோபர் இதழில் இடம்பெற்ற பா. செயப்பிரகாசத்தின் நேர்காணல் குறித்து: இலக்கிய அமைப்பு ஒரு சாதிக்குச் சொந்தமானதென்று குற்றம்சாட்டி பிரம்மராஜனைக் கட்டாயப்படுத்தி விலகச் செய்ததைப் பெரும் புரட்சிபோலத் தோன்றச் செய்திருந்தார் பா.செ. இதே அளவுகோலால், கிறித்துவ, இஸ்லாமிய கட்சி சார்ந்த இலக்கிய அமைப்புகளை அவர் ஏன் அணுகவில்லை? சாதி ஒழிய வேண்டுமென நூறாண்டுகளாகப் போராடிவருகிற பாவனையைத் தொடர்ந்து ஏன் சாதி ஒழியவில்லை என்று ஆராய்ந் திருக்க வேண்டும். அது நடக்கவில்லை. எப்போது சாதி ஏற்றத்தாழ்வு கற்பித்தலுக்குப் பிராமணர்களை மட்டும் குற்றம்சாட்டி, வரலாற்றின் பிழைகளிலிருந்து தம்மை மற்ற மேல்சாதிகள் விடுவித்துக்கொண்டனவோ அன்றே சாதியின் நிரந்தரத்துவம் உறுதிசெய்யப் பட்டுவிட்டது. சாதி பற்றிய ச

பதிவு: புரிசை நாடகக் கலைவிழா
செல்லப்பா  

நமது பாரம்பரியக் கலைகளைத் தொழில்நுட்பத்தின் அசாத்திய வளர்ச்சி இரக்கமற்று அழித்துவரும் சூழலில் தெருக்கூத்துக் கலையை அழிவிலிருந்து காப்பாற்றுவதில் புரிசை முக்கியப் பங்காற்றுகிறது. பல்லாண்டுகளாகத் தெருக்கூத்தை நடத்திவரும் புரிசை துரைசாமி கண்ணப்ப தம்பிரான் பரம்பரையினர் கடும் சிரமங்களுக்கு மத்தியிலும் அக்கலையை அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு எடுத்துச்செல்வதில் தொடர்ந்து அக்கறை காட்டி வருகின்றனர். தெருக்கூத்து என்னும் சொல்வழி மலரும் சித்திரத்தில் புரிசை கிராமமும் கலைமாமணி புரிசை கண்ணப்ப தம்பிரானும் உருப்பெறுவது இயல்பு. அவரைப் போலவே அவரது வழிவந்தவர்களும் அக்கலையை நேசிப்பதால் 2004ஆம் ஆண்டு முதல் அவரது நினைவு நாளை நாடகக் கலை விழாவாகக் கொண்டாடுகிறார்கள். புரிசை துரைசாமி கண்ணப்ப தம்

பதிவு: அற்றைத் திங்கள்
என். ராஜசேகரன்  

காலச்சுவடு - ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து கடந்த 2004 முதல் 2006வரை கோவையில் நடத்திய அற்றைத் திங்கள் நிகழ்வுகளும் சென்னையில் காலச்சுவடு, மாஃபாய் அறக்கட்டளை, ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ், புக் பாயிண்ட் இணைந்து நடத்திய அற்றைத் திங்கள் நிகழ்வுகளும் பரவலான கவனத்தைப் பெற்றவை. கலை, இலக்கியம், அறிவியல், கல்வி, சுற்றுச்சூழல் முதலான பல்வேறு துறைகளிலும் சிறந்து விளங்கும் தமிழின் மூத்த ஆளுமைகள் பலரையும் சந்திக்க வாசகர்களுக்கு வாய்ப்பளித்த கூட்டங்கள் அவை. அவற்றில் பங்கேற்றவர்களில் பலர் உலக அளவில் கவனம் பெற்றவர்கள். தம் சாதனைகளுக்குப் பின்புலமான தம் வாழ்வின் பயணங்களைக் குறித்து வாசகர்களிடையே திறந்த மனத்துடன் உரையாடல்களை நிகழ்த்தி அக்கூட்டங்களைச் செழுமைப்படுத்தினார்கள். செறிவான அவ்வுரையாடல

பதிவு: Between the Lines
அருண்மொழி  

ஈழத்தமிழர் படுகொலைக்கு எதிராக அண்மையில் சென்னை லலித் கலா அகெடமியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் திரண்ட தமிழ் நவீன ஓவியக் கலைஞர்கள் ஓவியப் பட்டறைகள், விவாதங்கள், கவிதை வாசிப்பு எனப் பல்வேறு வகைகளில் தம் கவலைகளைப் பகிர்ந்துகொண்டனர். ஓவியக் கலைஞர்கள், சிற்பிகள், நாடகக் கலைஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள் எனப் பலதரப்பினரும் பங்கேற்ற, நவம்பர் 13 முதல் 16வரையிலான நான்கு நாள் நிகழ்வுகளில் அல்போன்ஸ் ராஜ், ஆர்.பி. பாஸ்கரன், எஸ்.ஜி. வாசுதேவ், பொன் ரகுநாதன், பெருமாள், சிற்பி தெட்சிணாமூர்த்தி முதலான மூத்த கலைஞர்களின் படைப்புகளோடு இளைய தலைமுறை ஓவியக் கலைஞர்களான அபராஜிதன், கணேஷ், பிரசன்னா, சிவா, பெனித்தா பெர்சியாள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட ஓவியர்களின் படைப்புகள் காட்சிக்காக வைக்கப்பட

உள்ளடக்கம்