கட்டுரை
தேவிபாரதி  

26/11 என அழைக்கப்படும் மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களின் பாதிப்புகளிலிருந்து தேசம் மீண்டெழுந்துவிட்டது. இருபதே நாட்களில் புதுப்பொலிவு பெற்று மீண்டும் திறக்கப்பட்டுவிட்டன தாக்குதலுக்குள்ளான தாஜ், டிரைடண்ட் ஓட்டல்கள். வாடிக்கையாளர்களை இன்முகம் கொண்டு வரவேற்பதற்காகப் பூங்கொத்துகளுடன் தாஜ் ஓட்டலின் வாசலில் டஜன் கணக்கான அழகுப் பதுமைகள் காத்திருக்கிறார்கள். மோப்ப நாய்களும் ஆயுதமேந்திய பாதுகாவலர்களும் அதன் பாதுகாப்புக்கு உத்தரவாதமளிக்க நூற்றாண்டுப் பெருமைகொண்ட தாஜ் மீண்டும் திறக்கப்பட்டது மட்டும் தேசம் மீண்டெழுந்ததற்கான ஒரே அடையாளமல்ல. சென்னை கிரிக்கெட் டெஸ்ட்டில் இங்கிலாந்து அணிக்கு எதிராக மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் தெண்டுல்கர் அடித்த சதம்கூட அதன் அடையாளம்தான். அந்த

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

மும்பாய்த் தாக்குதல் பற்றி இங்கிலாந்து ஊடகங்கள் செய்த பதிவுகளை வைத்துச் சில எண்ணங்களைப் பகிர்ந்து கொள்கிறேன். இப்பொழுது எந்தப் பயங்கரவாதத் தாக்குதல் ஏற்பட்டாலும் அது எங்களின் 9/11 என்று சொல்வது பழக்கமாகிவிட்டது. மும்பாய்த் தாக்குதலும் இதற்கு விதிவிலக்கல்ல. அமெரிக்காவின் 9/11 தேசிய வேதனைகளின் திருவுருவாக (icon) மாற்றப்பட்டிருக்கிறது. இரட்டைக் கோபுரங்கள் முதன்முதலாகத் தாக்கப்பட்டபோது அமெரிக்காமீதும் அந்தநாட்டு மக்கள்மீதும் அனுதாபமும் பரிவும் இருந்தன. ஆனால் இன்று 9/11இன் புலப்பதிவு (perception) மாறிப்போய் இருக்கிறது. அமெரிக்க அரசின் ஆக்கிரமிப்பும் பிற நாடுகளின் அரசியலில் அமெரிக்க இராணுவத்தின் குறுக்கீடுகளும் குந்தனமே காம்பும் ஆபூ கிராப் சித்திரவதைகளும் ஆரம்பத்தில் அமெரிக்

கட்டுரை
களந்தை பீர்முகம்மது  

முஸ்லிம் தீவிரவாதிகள் இந்தியாமீது போர் தொடுத்ததற்கான ஓர் அடையாளமாகவே 26.11.2008இல் நடந்த பயங்கரவாதத்தைக் கணக்கிட வேண்டும். இது முதல்நிலை. இந்துத்துவத் தீவிரவாதிகள் எப்போதெல்லாம் கடும்நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்களோ அப்போதெல்லாம் முஸ்லிம் தீவிரவாதிகள் ஓடோடிவந்து தங்களின் “சகா”வைக் காப்பாற்றிக் கரையேற்றிவிடுகிறார்கள். இது இரண்டாம் நிலை. நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கடும்கண்டனங்களுக்கு ஆளாகி மருட்சியடைந்த சமயத்தில் அதன்மீது நடத்தப்பட்ட தாக்குதலும் மாலேகாவ் பல உண்மைகளை அம்பலப்படுத்திய சமயத்தில் மும்பையின்மீது நடத்தப்பட்ட தாக்குதலும் இரண்டு தீவிரவாதங்களுக்கும் வலுவான ஒற்றுமையாக அமைந்துள்ளன. இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் என்னை இலக்கியவுலகிற்குள் அழைத்துச்சென

கடிதம்
 

2nd December 2008 அன்புள்ள கண்ணன், சனிக்கிழமை மாலை வந்துசேர்ந்தேன். பயணத்தின்போது பலத்த மௌனம் காத்தனர் பயணிகள். போர்க்களமாகிவிட்ட ஒரு நகரத்திற்குப் போகிறோம் என்ற உணர்வு யாரையும் விட்டு அகலவில்லை என்று நினைக்கிறேன். 26ஆம் தேதியே என் மனத்தில் சோர்வு கப்பிவிட்டது. கீழே தள்ளத்தள்ள எழும் நகரம்தான் மும்பாய். ஒவ்வொரு முறை வீழ்த்தப்படும்போதும் மீண்டும் நிமிர்ந்து நின்று காட்டும். ஆனால் இம்முறை நடந்திருப்பது தாக்குதல் அல்ல. யுத்தம். வந்து சேரும்வரை தொலைக்காட்சியில் அதன் அத்தனை பிம்பங்களையும் தொடர்ந்து பார்த்ததில் மனம் கனத்துக்கிடந்தது. விமான தளத்துக்கு வழக்கம்போல் விஷ்ணுவும் குழந்தைகளும் வந்திருந்தனர். மூன்றரை வயது ஸோனுவுக்கு ஒரே சந்தோஷம். அவனுக்குப் பள்ளி விடுமுறையாம

கட்டுரை
 

பிறப்பால் அனைவரும் சமம் என்ற சுதந¢திரப் பிரகடனம், “ஆகச் சிறப்பான ஒற்றுமைக்காக ஒன்றிணையும் மக்களாக நாம் திகழ்வோம்” என்ற அரசியலமைப்புச் சட்டம், மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைக் கொண்ட அரசாங்கம் என்ற ஆபிரகாம் லிங்கனின் கெட்டிஸ்பெர்க் சொற்பொழிவு நான் ஒரு கனவு காண்கிறேன் என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் முழக்கம் ஆகியவற்றை அமெரிக்காவின் புனித சாசனங்களாக நாம் கருதிவருகிறோம். உயர்ந்த லட்சியங்களாகவும் நம்பிக்கைகளாகவும் இவை ஒன்றை மற்றொன்று கட்டமைத்தும் எதிரொலித்தும் வருகின்றன. 1963இல் லிங்கன் நினைவு இல்லத்தின் படிக்கட்டுகளில் நின்று மார்ட்டின் லூதர் கிங் கூறிய வார்த்தைகள் இவை அனைத்தையும் பிரதிபலிப்பவை போல அமைந்துள்ளன. “எந்த மகத்தான அமெரிக்

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

கொழும்புச் சபையார் திரையரங்கில் பார்த்த ஆங்கிலப் படம் ஒன்று நினைவுக்குவருகிறது. வசதியான வெள்ளை இன அமெரிக்கப் பெண் ஒரு அமெரிக்கக் கறுப்பரைக் காதலிக்கிறார். காதலன் கறுப்பாயிருந்தாலும் மத்திய தர வர்க்கத்தவர். இவருடைய பெயருக்குப் பின்னால் அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களான சீணீறீமீ மற்றும் யிஷீலீஸீs பிஷீஜீளீவீஸீs பட்டங்கள் உண்டு. இவற்றைவிடக் கூடுதலான செய்தி இவர் நல்ல அழகர். பெற்றோருக்கு அறிமுகப்படுத்த, காதலனை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வருகிறாள். என்னதான் முற்போக்கு எண்ணங்களைக்கொண்டிருந்தாலும் இந்த உறவை ஏற்றுக்கொள்ள அந்த வெள்ளைத் தாய்க்கும் தந்தைக்கும் சங்கடமாயிருக்கிறது. ஒரு கட்டத்தில் தந்தை வருங்கால மருமகனிடம் ‘உங்கள் குழந்தைகள் எதிர்நோக்கப் போகும் பிர

சிறுகதை
 

இந்திய நிலவியல் காட்சிகளின் விநோதங்களையும் அதிசய மனிதர்களையும் நேரில் கண்டு திரட்டு ஒன்றைத் தயாரிக்கும் பொருட்டு நெல்லைச் சீமையில் ஆளுநர் மாளிகையில் தங்கியிருந்த மூன்று ஆங்கிலேயர்களுக்கு, மதுரை ஜில்லாவிற்குட்பட்ட பாளையம் பகுதியிலுள்ள ஒரு வீடு பகல் பொழுதில் மறைந்து இரவில் மட்டும் காட்சி தருகிறது என்ற செய்தி கிடைத்தது. மூன்று ஆங்கிலேயர்களும் பிரயாணத்திற்குப் போதிய வசதிகளையும் பாதுகாப்பையும் பெற ஆளுநரிடம் அனுமதி பெற்றனர். பிறகு மூன்று குதிரை வீரர்களையும் டேவிஸ்சன் என்ற மேஜர் தங்கியிருந்த பாளையப் பகுதியின் வரைபடத்தையும் பெற்றுப் பயணத்தைத் தொடங்கினர். தொடர்ந்து ஏழு நாட்கள் பயணத்திற்குப் பிறகு மதுரைக்கு வந்து தங்கினார்கள். பிறகு மேஜர் இருந்த பாளையத்தை வந்தடைந்தனர். மூன்று ஆங்

 

சுலபமில்லை மகளே முருங்கைப் பூ உதிரும் தாழ்வாரம், இனி நமக்குச் சொந்தமில்லை மகளே. வேம்புவை மேற்கில் நட்டுவிட்டார்கள். மஞ்சள் ஓர் அரசியல் நிறமானது. ஆடாதொடை புளாப்பூ ஆவாரை பெரியாநங்கை சிறுநெல்லி பிரண்டைக்கொடி விரவிய மேய்ச்சல் நிலத்தில் வளர்ப்பு ஜீவன்கள் அருகிவிட்டன. உனக்குத் தெரியும்: சோடியம் பல்பு வெளிச்சத்தை, கீழ் படரவிடாமல் தடுத்ததற்காக நகராட்சித் தொழிலாளி மரம் வெட்ட வந்த நாளில்தான், என் பழைய வாழ்க்கைக்கு நான் முழுக்குப்போட்டதும். கோவில் காட்டில் கொட்டிய மழையில், இறைந்த மாம்பிஞ்சுகளை பொறுக்கித் தின்றவர்கள், திருட்டு மரத்தில் தப்புக்காய் பறித்தவர்கள், எல்லாம் நாகரிகப்பட்டதும். என் தெய்வம் நந்தவனம் கேட்டதும் அந்நாளில்தான். ஊர்க்குடிகள் புழங்கும் பூவல் மேட்டில் கெ

சிறுகதை
 

அவன் மலையையே பார்த்துக்கொண்டிருந்தான். நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவன் மலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு மூன்று வயதாக இருக்கும்போது அவன் அப்பாவுக்கு சிம்லாவுக்கு மாற்றலாயிற்று. சில்லென்ற காற்றும் சுற்றிலும் உள்ள மலைகளும் அவன் மனத்தில் பசுமையாகத் தங்கிவிட்டன. சிம்லாவிலிருந்து மிக விரைவில் -மூன்றே ஆண்டுகளில்-கிளம்ப வேண்டியிருந்தது என்றாலும் அந்த மூன்று ஆண்டுகளுக்குள் மலைகள் அவன் மனத்தில் அகற்ற முடியாத அளவுக்கு இடம்பிடித்துவிட்டன. எந்தப் பக்கம் திரும்பினாலும் மலை. கண்ணுக்கெட்டிய தூரம்வரை நான்கு திசைகளிலும் மலை. அண்ணாந்து பார்த்தாலும் மலையைத் தவிர்த்துவிட்டு வானத்தைத் தனியாகப் பார்க்க முடியாது. பச்சை மலைகள். சில சமயம் பளிச்சென்று தலை நரைத்த மலைகள். வீட்டைச் சுற்ற

- பொறுப்பாசிரியர்  

சென்ற ஆண்டு ஜனவரி 15ஆம் தேதி, சென்னைப் புத்தகச் சந்தை தொடங்கி ஒருவாரம் கழிந்திருக்கும். தொலை தூரங்களிலிருந்து வந்திருந்த வாசகர்களையும் நண்பர்களையும் எழுத்தாளர்களையும் சந்திக்கக் கிடைத்த வாய்ப்புகளாலும் புத்தகங்கள் தந்த உற்சாகத்தாலும் திளைத்துக்கொண்டிருந்த ஒரு தருணத்தில் அவரது மறைவுச் செய்தி கிடைத்தது. காலச்சுவடு ஜனவரி இதழில் காந்தி பற்றிய ஒரு சிறப்புப் பகுதியை வெளியிட்டிருந்தோம். அப்பகுதிக்கு நாங்கள் பயன்படுத்திக்கொண்டிருந்த ஓவியங்களில் பெரும்பான்மையும் ஆதிமூலம் வரைந்தவை. காத்திரமான படைப்புகளால் நிரம்பித் ததும்பிய அப்பகுதிக்குச் செறிவூட்டிய அவ்வோவியங்களைக் குறித்த பெருமிதங்கள் ததும்பிக்கொண்டிருந்த எங்களை அத்தருணத்தில் கிடைத்த துயரச் செய்தி நிலைகுலையச் செய்தது. பிறகு

கட்டுரை
பா. செயப்பிரகாசம்  

ஈழத் தமிழர்களின் உரிமைக்குப் போராடிய தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துக்கும் அப்போது பிரதமராக இருந்த பண்டார நாயகாவுக்கும் இடையில் நிகழ்ந்த ஒப்பந்தம் பண்டா-செல்வா ஒப்பந்தம். இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய அந்த ஒப்பந்தம் 1958ஆம் ஆண்டு ஏற்பட்டது. 1958 ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி புத்த பிக்குகள் 200 பேர் பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவதற்காக பண்டார நாயகாவின் இல்லத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். பிரதமர் பண்டார நாயகா அவர்களைக் கையெடுத்துக் கும்பிட்டு அவர்கள் விரும்பியபடி ஒப்பந்தத்தைத் தூள் தூளாகக் கிழித்து வீசியெறிந்தார். ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்த செய்தி வெளியானதும், சிங்களவர்கள் தலைநகர் கொழும்பில் தமிழர்கள்மீது தாக்குதல் தொடுத்தனர்.

கட்டுரை
வறீதையா கான்ஸ்தந்தின்  

கடலின் துயரங்கள் கரையை எட்டுவதில்லை. மன்னார் வளைகுடாப் பகுதி மீனவர்களைப் பொறுத்தவரை இது பருண்மை. தீவுகளாகிப்போன இந்தியக் கடலோரச் சமூகம் அன்றிலிருந்து இன்றுவரை முகத்தைக் கடலுக்கும் முதுகை நிலத்துக்கும் காட்டி நிற்கிறது. கடற்கரையின் அவலக்குரல் நிலம் சார்ந்த மக்களுக்குக் கேளாத் தொலைவு. நிலத்தோடு உரையாடுவது கடலோர சமூகங்களுக்குக் கைகூடாக் கனவு. காற்றில் தவழும் நீலக் கம்பளமாய்ப் புன்னகைத்து நிற்கிறது கடல். ஆழ்கடலின் ஓயாத நீரோட்டங்களும் அலைக்கழிப்புகளும் போராட்டங்களும் கண் மறைந்து கிடக்கின்றன. கடலின் மொழியை மீனவன் அறிந்திருக்கிறான். மோதல்கள் எழுந்தாலும் சிறுபொழுதில் அன்னையுடன் பிள்ளைபோல் சமரசமாகிவிடுகிறான். ஆனால் நிலமும் நிலம் சார்ந்த மாற்றங்களும் ஏற்படுத்தும் தாக்கங்கள

கட்டுரை
கவிதா  

தார்ச்சாலையில் சுள்ளென்று எரியும் சூரியனின் வெப்பத்தைப் போல இலங்கையின் வீதிகளில் பயம் பரவியிருக்கிறது. கிட்டத்தட்ட எல்லாத் தெருக்களிலுமே பாதுகாப்பு வளையங்களுக்குள் சென்று பிரச்சினையின்றி மீள்வதற்காக மக்கள் பொறுமையோடு காத்துக்கொண்டிருக்கின்றனர். அவர்களது அன்றாட நடவடிக்கைகளில் இதுவும் ஒன்று. பாதுகாப்புச் சோதனைகளுக்கான திட்டமிடுதலின்றி இலங்கையில் ஒரு பயணத்தை மேற்கொள்வது சாத்தியமல்ல. இலங்கைப் பிரச்சினையை - உள்நாட்டு யுத்தத்தை, தமிழரின் துயரங்களை இந்தியாவிலிருந்து, தமிழ்நாட்டிலிருந்து பார்ப்பதற்கும் இலங்கைக்குச் சென்று நேரடியாகப் பார்ப்பதற்கும் நிறையவே வித்தியாசங்கள் இருக்கின்றன. இலங்கையில் தமிழர்கள் கொல்லப்படுகின்றனர்; கடத்தப்படுகின்றனர்; துன்புறுத்தப்படுகின்றனர். ஆனால்

கட்டுரை
சு. கி. ஜெயகரன்  

நான் காதலிக்கும் தேவதையே (மலைக்கா, நாகுப்பெண்டா மலைக்கா) விதி விளையாடாமலிருந்தால் (நஷிண்ட்வா மாலி சினவே) உன்னை மணமுடித்திருப்பேன் தேவதையே (நிங்கைக்கு ஓவோ மலைக்கா!) என்ற கிஸ்வாஹிலி கீதம் உலகம் முழுவதும் விரும்பிக் கேட்கப்படும் இனிமையான பாடல். எழுபதுகளில் கோலோச்சிக்கொண்டிருந்த அப்பா (Abba) போனி. எம் (Boney. M) போன்ற மேற்கத்திய இசைக் குழுவினர் சொந்தம் கொண்டாடிய இப்பாடலை எழுதியவர் ஃபதிலி வில்லியம்ஸ் (Fadhili Williams) என்னும் கீன்யப் பாடகர். தான் காதலிக்கும் பெண்ணுக்குச் சீதனம் (Bride Price) கொடுத்து மணமுடிக்க இயலாமையை நொந்து சோகத்திலும் அவன் தன் காதலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த ‘மலைக்கா’ பாடல். என் உள்ளங்கவர்ந்த கீதம். கலிப்ஸோ (Calypvo) இசையின்

கட்டுரை
ஜி. குப்புசாமி  

இருபதாம் நூற்றாண்டின் முதல் இரு பத்தாண்டுகளில் மகாகவி பாரதியாரின் மூலம் வேர்விடத்தொடங்கிய நவீன இலக்கிய மறுமலர்ச்சி அடுத்த இரு பத்தாண்டுகளில் புதுமைப்பித்தன், மௌனி, கு.ப.ரா., க.நா.சு. போன்றோரால் தீவிரமடைந்து ‘மணிக்கொடி காலமாக’ப் பரிணமித்து வளர்ந்திருக்கிறது. தமிழில் இலக்கிய மொழிபெயர்ப்பு என்பதைப் பற்றித் தீர்க்கமான பார்வையின்றி, குழப்பமான, மேம்போக்கான கருத்தாக்கங்களே நிலவிவந்த காலகட்டத்தில் மொழிபெயர்ப்பைப் பற்றித் தெளிவான, இலக்கியப் பிரக்ஞை கொண்ட பார்வையை முன்வைத்தவர் எனப் புதுமைப்பித்தனைத்தான் கூற வேண்டும். அவர் தொடங்கிவைத்த இவ்விவாதத்தின் பலனாக மொழிபெயர்ப்பு மார்க்கத்தின் மீது கவிந்திருந்த மேகமூட்டங்கள் கலைந்து நவீன மொழிபெயர்ப்பு ஓர் இயலாகப் படைப்

கட்டுரை
பெருமாள்முருகன்  

பெரியாருடைய கட்டுரைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. குறிப்பிட்ட வகைக் கட்டுரைகள் இப்படித்தான் இருக்கும் என்று நாம் வைத்திருக்கும் பொது வரையறையைச் சுக்குநூறாக்கிவிடுபவை. அவர் பயன்படுத்தும் மொழி பேச்சுத் தொனியைக் கொண்டது. அதனால் அவர் எதிரில் இருந்துகொண்டு நமக்குச் சொல்வது போலவே தோன்றும். அது கட்டுரையின் கூடுதல் பலம். கட்டுரையை வாசிக்கும்போது கவனச்சிதறல் ஏற்படாமல் உள்ளிழுத்துக்கொள்ளும். பெரியார் எழுதிய இரங்கல் கட்டுரைகள் சில உள்ளன. இறந்தவர் பற்றிய அனுதாபம் ஏற்படும் வகையில் இரங்கல் கட்டுரை எழுதுவதுதான் மரபு. பெரியார் இயல்பாகவே இந்த மரபுக்கு எதிரானவர். அவர் மனைவி நாகம்மை இறந்தபோது எழுதிய கட்டுரை ‘மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி’ என்று முடியும். அவர் எழுதியுள்ள இர

கட்டுரை
மலர்மன்னன்  

அண்ணா அவர்களுடன் சிறிது காலம் இருக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றவன் என்பதோடு, அவராலேயே மிகுந்த பாசத்துடன் ‘மலர்மன்னன்’ என்று பெயர் சூட்டப்பெறும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றவன் என்பதால், ‘காலச்சுவடு’105 வெளியிட்ட அவரது நூற்றாண்டு நினைவுச் சிறப்புக் கட்டுரையை ஆர்வத்துடன் வாசிக்கலானேன். காரணம், ‘காலச்சுவடு’ இதழில் இப்படியொரு கட்டுரை வெளியாகிறது என்றால், அது திராவிட இயக்க ஏடுகளில் வழக்கமாக வருவது போன்ற வெற்றுச் சொற்களின் ஆர்ப்பாட்டமாக இருக்காது என்கிற நிச்சயம்தான். எதிர்பார்த்தது போலவே சாரமுள்ள விரிவான கட்டுரையாக அது அமைந்து விட்டிருப்பதில் மகிழ்ச்சிதான். ஆனாலும் ஏறத்தாழ நாற்பதாண்டு காலம் தமிழ்ச் சமுதாயத்தில் வியக்கத்தக்க தனிச் செல்வாக்குடனு

அஞ்சலி
மு. புஷ்பராஜன்  

கவிஞர் தா. இராமலிங்கத்தைப் பற்றிய பேச்சு, இலக்கிய உரையாடல்களில் வருகையில், தவிர்க்க முடியாதவாறு நாவலாசிரியர் ப. சிங்காரமும் கூடவே என் நினைவில் வருகின்றார். இருவருமே தம் காலத்தின் முக்கியமான இரு படைப்புகளைத் தந்துவிட்டு, மௌனமாகவே விலகி நின்றிருக்கிறார்கள். இருவர் படைப்புகளும் அவை வெளிவந்த காலத்தில் உரிய கவனத்தைப் பெறவுமில்லை. ப. சிங்காரத்தின் நாவல்களின் முக்கியத்துவம் பற்றி அவரைச் சந்தித்தவர்கள், அவரிடம் கூறியபோதெல்லாம் அப்படியா? இப்போது அதற்கென்ன? என்றவிதமாய் அது ஏதோ தனக்குச் சம்பந்தமில்லாத விடயம் போன்ற பாவனையுடன் இருப்பதை அவர்கள் பதிவுசெய்துள்ளனர். ‘அலை’ இதழை நாங்கள் நடத்திய காலங்களில் நானும் அ. யேசுராசா, இன்னும் ஒருவரும் தா. இராமலிங்கத்தை அவரது வீட்டில் ச

மதிப்புரை
மு. காளிதாஸ்  

‘அறியப்படாத தமிழக’த்தால் அனை வராலும் அறியப்பட்ட தமிழறிஞர் தொ. பரமசிவனின் பத்தாண்டு கால உழைப்பின் விளைவு ‘வழித்தடங்கள்’. இந்நூலில் 16 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கட்டுரைகளனைத்தும் பல்வேறு காலச் சூழலில் பல கருத் தரங்குகளிலும் இதழ்களிலும் வெளிப்பட்டவை. சங்க காலம் ஒரு மறுமதிப்பீடு. சங்க இலக்கியத்தில் சமூகவியல் ஆய்வுகள், சங்க இலக்கியத்தில் சாதி அமைப்பின் மூலப்படிவங்கள் போன்ற கட்டுரைகள் சங்க இலக்கியங்கள் பற்றிய நம் அனைவரின் கருத்துகளையும் புரட்டிப் போடுவதாகவுள்ளன. சங்க இலக்கியங்கள், பல கால அடுக்குமுறைகளைக் கொண்டதாகவுள்ளன என்பதோடு தெ.பொ.மீ., மு.கு. ஜகந்நாத ராஜா போன்றோர் கருத்துகளைக் கொண்டு சங்க இலக்கியம் முழுவதும் மூலப்படிவமாகாது, அவற்றுள் பல மொழ

மதிப்புரை
செல்லப்பா  

வானிற் பறக்கின்ற புள்ளெலா நான் மண்ணிற் றிரியும் விலங்கெலா நான் கானிழல் வளரு மரமெலா நான் காற்றும் புனலுங் கடலுமே நான் -பாரதியார் இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர் நம் முன்னோர். நாகரிக வளர்ச்சி என்னும் பெயரால் இயற்கையுடனான நமது தொப்புள்கொடி உறவு மெல்ல மெல்ல அறுபட்டுக்கொண்டிருக்கிறது. தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்கும்விதமான எச்சரிக்கைக் குரல்களை அலட்சியப்படுத்தினால் அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும். “உங்கள் குழந்தைகள் உங்கள் வழியாகப் பிறக்கிறார்களே தவிர உங்களிலிருந்து பிறக்கவில்லை” என்றார் கலீல் ஜீப்ரான். குழந்தைகள் பெற்றோருடைய சொற்களிலிருந்து கற்றுக்கொள்வதைவிடச் செய்கைகளிலிருந்துதான் அதிகமாகக் கற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்

பதிவு
மா. சுப்பிரமணியன்  

‘மீண்டும் காகங்கள்’ சிறப்புக் கூட்டம் 23.11.2008 ஞாயிறு காலை 10 மணிக்கு சுந்தர விலாஸ் மாடியில் நடைபெற்றது. இதில் அறிவியல் அறிஞர் ஒய்.எஸ். ராஜன் கலந்துகொண்டார். இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றியவர். அவருடன் சேர்ந்து இந்திய முன்னேற்றம் குறித்துப் புத்தகம் எழுதியவர். துணை வேந்தராகப் பணியாற்றிய கல்வியாளர். தமிழில் கவிதை நூல்கள் வெளியிட்டவர். ஒரு குறுகிய வட்டத்திற்குள் தம்மைச் சிறைப்படுத்திக்கொள்ளாமல் வரையறைகளை உடைத்துக்கொண்டு ஆழ்ந்த தேடலில் ஈடுபட்டு வருபவர் ராஜன் எனக் ‘காலச்சுவடு’ கண்ணன் அவரை அறிமுகம் செய்தார். வரையறைகளைத் தாண்டுவது என்பது இயல்பானதே. புதிய படைப்பிற்கு இந்நிகழ்வு இன்றியமையாதது. தனித்திருந்த பல்கலைக்

பதிவு
மா. சுப்பிரமணியன்  

படைப்பாளிகளைப் பாராட்ட அரசியல் பிரபலங்களையும் செல்வப் பெருந்தகைகளையும் அழைக்கும் வழக்கம் பொதுவாகக் குமரியில் இல்லை. எழுத்தாளர்களை எழுத் தாளர்கள் பாராட்டுவதுதானே சிறப்பு! இவ்வரையறைக்கு உட்பட்டுதான் 30.11.08 ஞாயிறு மாலை நாகர்கோவில் ஏ. பி. என். பிளாசாவில் நடைபெற்ற ‘அ. கா. பெருமாள் 60 - ஆய்வரங்கு’ம் நிகழ்ந்தது. இலக்கிய வரலாற்றாசிரியரும் நாட்டாரியல் ஆய்வறிஞருமான முனைவர் அ. கா. பெருமாள் தனது முதல் நூலை வெளியிட்டபோது அவருக்கு வயது 29. இவ்வாண்டு தனது அறுபதாவது வயதை நிறைவு செய்யும் அவர் இன்றுவரை வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 52. அவற்றில் பெரும் பான்மையானவை ஆய்வு நூல்கள். ஆய்வரங்கில் எதிரொலித்த அத்தனை பாராட்டுக்குரல்களிலும் அடிநாதமாய் இருந்தது அவரது ஆய்வு நூல்களின் ச

பதிவு
சு.மு. அகமது  

காலத்தின் நீண்ட மௌனத்தை எறிந்து தங்கள் குரலைப் பதிவுசெய்து இருக்கின்றனர் தமிழின் தீவிரப் படைப்பாளிகள். அரை நூற்றாண்டாகத் துயரத்தின் மீது தகிக்கும் ஈழத்தமிழர்களின் இன்னல்கள் பதினேழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற தமிழர்களின் மனங்களில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. தொடக்க காலங்களில் இலங்கையில் வெலிக்கடைச் சிறையில் அநியாய மாகக் கொலை செய்யப்பட்ட குட்டிமணி ஜெகன் மறைவுக்குப் பிறகு ஒரு பெரும் எழுச்சி ஈழத்தமிழர் பிரச்சினையில் இங்குள்ள தமிழருக்கு ஏற்பட்டது. அது தமிழக அரசியலில் ஒரு பகடைக்காயாக மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு தமிழ்த் தேசியம் பேசும் இயக்கங்கள் மட்டுமே ஈழப் பிரச்சினையில் தொடர்ந்து அக்கறை செலுத்திவந்தன என்றால் அது தவறல்ல. கொடுங்கனவாய் முடிந்து போன

தலையங்கம்
 

மும்பை மீதான நவம்பர் 26 பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுக் கைதுசெய்யப்பட்டுள்ள அஜ்மல் கசப் தனக்குச் சட்ட உதவிகள் செய்யக் கோரி பாகிஸ்தான் தூதருக்குக் கடிதம் கொடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய உள் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து அஜ்மலின் கடிதத்தை அளித்ததாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது. கைதுசெய்யப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேலாகியும்கூட அஜ்மலுக்கு இந்தியாவிலிருந்து சட்ட உதவி கிடைக்கப்பெறவில்லை. மும்பை மாநகர வழக்கறிஞர்கள் சங்கம் குற்றம்சாட்டப்பட்டுள்ள அஜ்மலுக்காக வாதாடத் தன் உறுப்பினர்களுக்குத் தடைவிதித்து இயற்றியுள்ள தீர்மானம் அஜ்மலை நீதிக்கு முன்னால் பேச முடியாதவராக நிறுத்தியிருக்கிறது. அஜ்மலுக்காக

கண்ணோட்டம்
கண்ணன்  

தமிழகப் பொது நூலகத் துறை இன்று பல சீர்திருத்தங்களை எதிர்நோக்கியிருக்கிறது. 2006 இல் துவங்கிய திமுகவின் ஆட்சி தமிழகம் கண்டிருக்கும் சிறந்த ஆட்சிகளில் ஒன்றல்ல. முந்தைய (1996 - 2001) திமுக ஆட்சியோடுகூட ஒப்பிடும் தகுதி இதற்கு இல்லை. அது கலைஞர் தலைமையிலான ஆட்சியாக இருந்தது. இன்று நடப்பது குடும்ப ‘ஜனநாயக’ ஆட்சி. தமிழகப் பொதுவாழ்வில் குடும்ப இயல் அரசியலுக்கு மாற்றாகவும் பதவியாகவும் உருவாகி வருவது மிகக் கேடானது. இருப்பினும் தமிழ்ப் பதிப்பாளர்களுக்கும் புத்தக உலகத்திற்கும் பல நன்மை பயக்கும் செயல்பாடுகள் இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ளன. பதிப்பாளர் வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுநூலகங்களுக்கு வாங்கும் நூல் பிரதிகள் அதிகரித்துள்ளன. இன்னும் இதுபோல் பல. நூலகங்கள் ஒரு சமூகத

 

நவம்பர் 12 நிகழ்வு நாம் எந்த நூற்றாண்டில் வாழ்கிறோம் எனப் பின்னோக்கிப் பார்க்கச் செய்தது. நாட்டின் விடுதலைக்கும் தேசத்தின் வளர்ச்சிக்கும் பாடுபட்ட தலைவர்களை, சாதிய உணர்வுடன் பாராட்டும் அவலநிலை உருவாகிவருவது கொடுமையிலும் கொடுமை! அன்றைய தினம் காவல் துறையினரின் செயல் வெட்கப்பட வைத்தது. இருப்பினும் அவர்தம் மற்றோர் பக்கத்தையும் நோக்க வேண்டும். காவல் துறை முழுவீச்சுடன் ஈடுபட்டுக் கூட்டத்தைக் கலைத்திருந்தால் என்னவாயிருக்கும்? அடிபட்ட சாதியினரின் தலைவர்களும் அடித்து நொறுக்கிய சாதியினரின் தலைவர்களும் காவல் துறை அத்துமீறிவிட்டது என்றல்லவா தனித்தனியே கண்டனக் கணைகளை வீசியிருப்பார்கள்? போதாக்குறைக்குத் தமிழக வழக்கறிஞர்கள் காவல் துறையைக் கண்டித்துக் களத்தில் இறங்கியிருப்பார்கள்

 

எதிர்வினை: ராஜீவ் கொலையும் புலிகள் எதிர்ப்பும் எதிர்வினை: படைப்பாளியின் அடையாளத்தை அழிக்கும் முயற்சிகள் எதிர்வினை

உள்ளடக்கம்