கட்டுரை
சேரன்  

1 “உன்னுடைய கருத்துகளில் ஒன்றுடனோடுகூட எனக்கு உடன்பாடு கிடையாது. ஆனால் அக்கருத்துகளைச் சொல்ல உனக்கு இருக்கும் உரிமையை என்னுடைய உயிரைக் கொடுத்தாவது காப்பாற்றுவேன்” இது ஊடக வட்டாரங்களில் அடிக்கடி எடுத்தாளப்படும் ஒரு கூற்றாகும். இக்கூற்றிற்குச் சொந்தக்காரர் பிரெஞ்சு மெய்யியலாளரும் அரசியல் சிந்தனையாளரு மான வால்டயர். வால்டயரும் அவரோடு கூடவே ஜோன் லொக் (John Locke), கொட்பிறி லீப்நிஸ் (Gottfried Leibnitz), இம்மானுவல் கான்ட் (Immanuel Kant), டேவிற் ஹியூம் (David Hume) போன்றோரும் வேறு பல அறிஞர்களும் ஐரோப்பிய அறிவொளிக் காலத்திற்குச் சிறப்பாகப் பங்களித்தவர்கள். தாராளவாத ஜனநாயகம், மானிட உரிமைகள் சுதந்திரம் போன்ற கருத்தாக்கங்கள் மேல் எழவும் ஆழம்பெறவும் அறிவொள

கட்டுரை:
சிவநம்பி சண்முகன்  

அதிகாரத்திற்கும் ஊடக சுதந்திரத்திற்குமான உறவு ஒருபோதும் சமாந்தரமானதாக இருந்ததில்லை. வரலாறு முழுக்க அவை எப்போதுமே நேரெதிரானவையாகவே இருந்துவந்திருக்கின்றன. ஊடக சுதந்திரம் என்பது அடிப்படை மானுட உரிமைகளில் ஒன்றான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரத்தின் இன்றியமையாத ஒரு பகுதியாகும். கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் என்பது உண்மையான ஜனநாயகத்தின் ஒரு முக்கிய அம்சம். ஜனநாயகத்தின் அடிப்படைப் பன்மைத்துவம். பல இன மக்கள், பல மொழிகள், பல மதங்கள், பல பண்பாடுகள் என அது ஆயிரம் பூக்களாய் விரியும். இந்தப் பன்மைத்துவம் எங்கெல்லாம் மறுக்கப்படுகிறதோ எங்கெல்லாம் இந்தப் பன்மைத்துவத்திற்கு எதிராக ஏகத்துவம் வலியுறுத்தப்படுகிறதோ அங்கு எல்லாவகையான சுதந்திரங்களுக்கும் நெருக்கடி வந்துவிடுகிறது. இலங்கை

நேர்காணல்: சுனந்த தேசப்பிரிய
சந்திப்பு: கவிதா  

இலங்கையில் உங்கள் பணி பற்றிக் கொஞ்சம் சொல்லுங்கள். இலங்கையில் நான் ஒரு சுதந்திரமான (free lance journalist) ஊடகவியலாளராகப் பணிபுரிந்துவருகிறேன். கடந்த 25 வருடங்களாக ஊடகத் துறையில் செயல்பட்டு வருவதோடு சரிநிகரின் சகோதர இதழான யுக்தியா (சிங்கள நீதி)வின் ஆசிரியராகவும் இருந்திருக்கிறேன். ஊடகத் துறைக்கு வருமுன் இலங்கையில் செயல்பட்டுவரும் தீவிர இடதுசாரிக் கட்சியான ஜனதா விமுக்திப் பெரமுனாவில் (ஜே. வி. பி) செயல்பட்டு வந்தேன். 1967இல் எனது 11வது வயதில் ஜே. வி. பியில் இணைந்தேன். நாங்கள் நடத்திய கிளர்ச்சி காரணமாகத் தேசத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு ஏழு வருடங்கள் சிறையில் அடைக்கப்பட்டேன். அதன் பிறகே ஊடகத் துறைக்கு வந்தேன். அப்போதிருந்து மனித உரிமை ஆர்வலராகவும் செயல்பட்டு வருகிறேன்.

கட்டுரை
 

எந்தத் துறையும் அதில் பணிபுரிபவர்கள் தங்கள் பணியின் பொருட்டு உயிரை விட வேண்டும் என்று எதிர் பார்ப்பதில்லை - ஆயுதப் படைகளையும் இலங்கையில் ஊடகத் துறையையும் தவிர. கடந்த சில வருடங்களாக சுதந்திரமான ஊடகத் துறை தொடர்ந்து தாக்குதல்களுக்கு உள்ளாகிவருகிறது. பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்கள் கொளுத்தப்படுகின்றன, குண்டுவைத்துத் தகர்க்கப்படுகின்றன, சீல்வைத்துப் பூட்டப்படுகின்றன அல்லது அதிகாரத்துக்கு இணங்கும்படி வற்புறுத்தப்படுகின்றன. கணக்கற்ற ஊடகவியலாளர்கள் துன்புறுத்தப்படுகிறார்கள்; மிரட்டப்படுகிறார்கள்; கொல்லப்படுகிறார்கள். இந்த எல்லாப் பிரிவுகளிலும் குறிப்பாகக் கடைசிப் பிரிவில் நானும் இருக்கிறேன் என்பதை எனக்குக் கிடைத்த கௌரவமாகக் கருதுகிறேன். நான் ஊடகத் துறையில் மிக நீண்

ஈழத்துச் சிறுகதை
தி. மயூரன்  

அந்த இரண்டு நாட்களாக மாதவி கல்லூரிக்குப் போகவில்லை. என்ன நோய் நொடியென்றாலும் கல்லூரிக்குத் தவறாமல் போகின்றவள். கல்லூரியிலிருந்து நண்பிகள் வந்து விசாரித்துக்கொள்கிறார்கள். குசுகுசுவென எதோ பேசிக்கொள்கிறார்கள்.. மாலையில் கூட ரியுசன் வகுப்புகளுக்கும் போகவில்லை. மாதவியின் நடவடிக்கைகளைச் சிவசுப்பிரமணியம் கவனித்துக்கொண்டிருந்தார். அவளில் எந்த நோய்நொடியும் அவருக்குத் தெரியவில்லை. தாயில்லாத பிள்ளை... எதாவது தன்னிடம் சொல்ல முடியாத...  கடுமையாக யோசித்து மெதுவாகக் கேட்டேவிட்டார். “ஏன் மாதவி? கொலிச்சுக்குப் போகேல்லை? எக்ஸாமுக்காக ஸ்டடிலீவு விட்டிருக்குதே?” “இல்லை! தலையிடி!” “ரெண்டு நாளாய் தலையிடியே? இந்தத் தலையிடி காய்ச்சலை நம்பேலாத

சிறுகதை
அசோகமித்திரன்  

சண்முக சுந்தரம் அதிகாலையிலேயே எழுந்து முகச்சவரம் செய்துகொண்டார். குளித்து உலர்ந்த வேட்டியை உடுத்திக் கொண்டு சுவரில் மாட்டியிருந்த முருகன் படம் முன்பு நின்று பிரார்த்தனை செய்தார். அன்று அவருடைய புது நாடகம் எட்டாம்முறை சென்னையில் நடக்கவிருந்தது. ஏழுமுறை நல்லபடியாக நடந்து முடிந்ததுபோல இதுவும் நடந்து முடியக் கடவுளை வேண்டிக்கொண்டார். தலையில் எங்கோ ஒரு மூலையில் சுளீரென்று ஒரு வலி தோன்றி மறைந்தது. “அண்ணே, அந்தப் பொண்ணு நம்மை ஒழிச்சுடப் போறாண்ணே” என்று சிங்காரம் கவலையோடு ஓடிவந்து சொன்னார். சிங்காரம் அந்த நாடகக் குழுவின் தையற்காரர். “யாரு? என்னப்பா சொல்லறே?” “நீங்க தலைமேலே தூக்கி வைச்சுண்டீங்களே, அந்த ஹீரோயினிதான்.” “ஏன், என்னாச்சு

கட்டுரை
பி. ஏ. கிருஷ்ணன்  

கால அட்டவணைகள் தயாராகிவிட்டன, ஆனால் புகைவண்டிகளைத்தான் தேட வேண்டியிருக்கிறது. - மார்டிமர் வீலர், தொல்பொருள் ஆராய்ச்சியாளர். நமது பழமையின் எச்சங்களை எவ்வளவு பின்னால் தள்ள முடியுமோ அவ்வளவு பின்னால் தள்ளிவிடுவதற்கு நமக்கு இருக்கும் ஆசை பற்றி அவர் எழுதியது இது. கால ஆராய்ச்சி ஒரு வகை ஆருடம் என்று நினைத்துக்கொண்டிருப்பவர்களுக்கும் அவர் சொன்னது பொருந்தும். உதாரணமாக, தொல்காப்பியம் 5000 ஆண்டுகளுக்கு முற்பட்டது என இன்றும் எழுதிக்கொண்டிருக்கிறவர்களுக்கு ‘ஐயா, அது கி.பி. நான்காம் நூற்றாண்டுக்குப் பின்னால் எழுதப்பட்டது’ என்று சொன்ன வையாபுரிப் பிள்ளை பெயரைக் கேட்டாலே ஆத்திரம் வந்துவிடும். நம்மாழ்வார் கலி தோன்றிச் சில நாட்களுக்குள் பிறந்தவர் (கி.மு. 3102) என்று அடித

 

நாடகம், இசை, நாட்டியம் ஆகிய துறைகளில் சிறந்து விளங்குவோருக்கு வழங்கப்படும் நாட்டின் மதிப்புமிக்க விருதுகளில் ஒன்றான ‘சங்கீத நாடக அகாடமியின் 2008ஆம் ஆண்டுக்கான விருது’ பேராசிரியர் சே. இராமானுஜம் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. நாடகத் துறையில் ஓர் இயக்குநராக அவரது பங்களிப்புகளைக் கவுரவித்து இவ்விருது வழங்கப்பட்டுள்ளது. தமிழ் நவீன நாடக ஆளுமைகளில் முக்கியமானவரான பேராசிரியர் சே. இராமானுஜம் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் நாடகத் துறைத் தலைவராக இருந்து ஓய்வுபெற்றவர். கடந்த 60 ஆண்டுகளாகத் தமிழில் இயங்கிவரும் மாற்று நாடக முயற்சிகளுக்கு இராமானுஜம் அளித்துள்ள பங்களிப்பு தனிச்சிறப்புமிக்கது. தகுதியான ஒருவருக்கு விருது வழங்கிய சங்கீத நாடக அகாடமியைக் காலச்சுவடு பாராட்டுகிறது

 

சென்ற ஆண்டுமுதல் தமிழுக்குச் சிறப்பான பங்களிப்புச்செய்த படைப்பாளுமைகளுக்கு பபாசி 1 லட்சம் ரூபாய் மதிப்புடைய பொற்கிழியும் சான்றிதழும் கொண்ட விருதுகளை வழங்கிச் சிறப்பித்துவருகிறது. 32வது சென்னைப் புத்தகக் கண்காட்சியையொட்டி கீழ்க்கண்ட படைப்பாளிகளுக்கு இந்த ஆண்டு இவ்விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. சி. மணி - கவிதை ஆர். சூடாமணி - சிறுகதை, நாவல் ந. முத்துசாமி - நாடகம் கே. நெடுஞ்செழியன் - உரைநடை கிரீஸ் கர்னாட் - கன்னட இலக்கியம் எஸ். முத்தையா - ஆங்கில இலக்கியம் தமிழ் வாசகர்களுக்கு நன்கு அறிமுகமான, தத்தம் துறைகளில் சாதனை புரிந்துள்ள இப்படைப்பாளிகளுக்கு விருதுகளை வழங்கிய பபாசி அமைப்பாளர்களுக்கும் தேர்வுக் குழுவினருக்கும் ‘காலச்சுவடு’ தன் பாராட்டுகளைத் தெரிவித்துக்கொள்கிறது

குவளைக்கண்ணன்  

வாயில் காக்கும் பணிசெய்த பெய்லி ஜான்சன் என்பவருக்கும் ரியல் எஸ்டேட் ஏஜெண்டாகவும் அறுவை சிகிச்சை தாதியாகவும் இருந்த விவியன் பேக்ஸ்டர் ஜான்சன் என்பவருக்கும் ஏப்ரல் 4, 1928 அன்று மகளாகப் பிறந்த மாயாவுக்குப் பெற்றோரிட்ட பெயர் மார்கெரைட் ஆன் ஜான்சன். இவருக்கு மாயா எனப் பெயர் சூட்டியவர் இவருடைய சகோதரரான பெய்லி ஜூனியர். மாயா ஏஞ்சலோவின் வாழ்வு பற்றிய விவரங்கள் அவருடைய ஆறு சுயசரிதைத் தொடர்களிலும் எண்ணற்ற நேர்காணல்களிலும் மேடைப் பேச்சுகளிலும் கட்டுரைகளிலும் காணக்கிடைக்கின்றன. ஏஞ்சலோவிற்கு மூன்று வயதும் அவரது சகோதரருக்கு நான்கு வயதாகவும் இருக்கும்போது தந்தை அவர்களுடைய தாயிடம் அனுப்புவதற்காகத் தனியாக இருவரையும் ரயிலேற்றிவிட்டதைப் பற்றி அவருடைய முதல் சுயசரிதைப் புத்தகமான கூண்டில்

 

இருந்தும் நான் எழுகிறேன் உனது கசந்த, திருகலான பொய்களால் வரலாற்றில் என்னைக் கீழ்மைப்படுத்தி எழுதிவிடலாம், என்னைப் புழுதியில் தள்ளி மிதித்துவிடலாம் ஆனால் இருந்தும், புழுதியைப் போல், நான் எழுவேன். எனது வெட்கங்கெட்டதனம் உன்னை நிலைகுலைக்கிறதா? நீ ஏன் இருண்டு கிடக்கிறாய்? எனது அறையில் எண்ணெய்க் கிணறுகள் இரைத்துக் கொண்டிருப்பைப் போல் நான் நடப்பதாலா! நிலவுகளையும் சூரியன்களையும் போல், உயரும் அலைகளின் நிச்சயத்தன்மையோடு நம்பிக்கைகள் உயரப் பாய்வதைப் போல், இருந்தும் நான் எழுகிறேன். கண்ணீர் சொட்டுகளென தோள்கள் சரிய ஆத்மார்த்தமான கதறல்களால் சோர்ந்துபோய், குனிந்த தலையோடும் தாழ்ந்த கண்களோடும் நான் நொறுங்கிப் போவதைப் பார்க்க விரும்புகிறாயா? எனது செருக்கு உன்னைக் காயப்படுத்துகிறதா?

கட்டுரை
பெருமாள்முருகன்  

பிரபஞ்சனின் ‘அகல்யா’ நாடகம் ஆபாசமானது என்று சர்ச்சை கிளம்பியிருக்கிறது. இத்தகைய சர்ச்சையை ஏற்படுத்தியிருப்பவர்கள் வழக்கம்போலக் கல்வி நிறுவனம் சார்ந்தவர்களும் அரசியல் ஆதாயம் கொண்டவர்களும்தான். அவர்களோடு இயல்பாக வணிகப் பத்திரிகைகளும் இணைந்திருக்கின்றன. அகலிகை தனக்கு அழகான இரண்டு ஸ்தனங்கள் (முலை என்றால்தான் முகம் சுளிப்பார்கள். ஸ்தனம் என்றாலுமா?) இருப்பதாகச் சொல்வதையும் இந்திரனைப் பார்த்து அவள் ‘என்னைச் சுகி’ என்று சொல்வதையும் படித்தால் மனம் பதறுகிறதாம். அவையெல்லாம் மன்மத உணர்ச்சி பொங்கும் இடங்களாம். இதை எல்லாம் நாங்கள் வாய்விட்டுப் படிக்க முடியுமா என்று கேட்கிறார்களாம் மாணவர்கள். சரி, மனத்துக்குள் படித்துக்கொள்வதில் என்ன தடை இருக்கிறதோ தெரியவில

கட்டுரைத் தொடர்: பசுமைப் புரட்சியின் கதை
சங்கீதா ஸ்ரீராம்  

பசுமைப் புரட்சியின் கதையைப் பேசுபவர்களும் எழுதுபவர்களும் வங்காளப் பெரும்பஞ்சத்தைப் பற்றிக் கூறிவிட்டு உடனே PL-480க்குத் தாவிவிடுவது வழக்கம். ஒரு மாறுதலுக்கு, நான் இந்த இருநிகழ்வுகளுக்கும் இடையே நிகழ்ந்த பல முக்கியமான உள்நாட்டு, வெளிநாட்டு நிகழ்வுகளை, வரும் சில கட்டுரைகளில் விரிவாக விளக்கவிருக்கிறேன். அவற்றுள், சுதந்திர இந்தியாவில் முதல் பத்தாண்டுகளில் நிகழ்ந்த சில முற்போக்கான விஷயங்களைப் பற்றி இக்கட்டுரையில் பார்ப்போம். சுதந்திரம் அடைந்ததும் இந்திய அரசாங்கம் முதன் முதலில் எடுத்துக்கொண்ட முக்கியமான விஷயங்களுள் ஒன்று வேளாண்மைச் சீர்திருத்தம் / வளர்ச்சி. அப்போது, நம் நாட்டில் உணவுப் பயிர்களின் விளைச்சல் மோசமாக இருந்தது. சுதந்திர இந்தியாவின் முதல் உணவு அமைச்சராகப் பொறுப

அஞ்சலி
ஆ. இரா. வேங்கடாசலபதி  

சென்ற ஜனவரி 17ஆம் நாள் மறைந்த கமில் ஸ்வெலபில் இருபதாம் நூற்றாண்டுப் பிற்பகுதியின் தலைசிறந்த அயல்நாட்டுத் தமிழறிஞர்களில் ஒருவர். தமிழ் மட்டுமல்லாமல் பிற திராவிட மொழிகளிலும் நல்ல பயிற்சி கொண்டிருந்தவர். வடமொழி, செக் மற்றும் பிற செவ்வியல் மொழிகளும் அறிந்தவர். பெரும்பாலான பிற ஐரோப்பிய அறிஞர்கள் போலல்லாமல் வளமான ஆங்கில எழுத்து நடை கைவரப்பெற்றவர். அயல்நாட்டுத் தமிழறிஞர்கள் நெடிய தமிழ் மரபின் இரண்டொரு கூறுகளில் மட்டுமே பொதுவாகக் கவனம் செலுத்துவது வழக்கம். ஏ.கே. இராமாநுஜன் சங்க இலக்கியம், ஆழ்வார் பாடல்கள், நாட்டார் இலக்கியம், மொழியியல் முதலான துறைகளில் ஆழ்ந்த கவனம் செலுத்தினார். ஜார்ஜ் ஹார்ட் தற்கால இலக்கியத்தைக் கவனிப்பதில்லை. சங்கப் பாடல்களைச் சிறந்த ஆங்கிலக் கவிதைகளாக

மதிப்புரை
ஆ. இரா. வேங்கடாசலபதி  

காவல் கோட்டம் (நாவல்) ஆசிரியர்: சு. வெங்கடேசன் பக். : 1048 விலை: ரூ. 590 முதற்பதிப்பு: டிசம்பர் 2008 வெளியீடு: தமிழினி 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை சென்னை-14 இந்த ஆயிரம் பக்க நாவலைப் படித்து முடித்ததும் ஏற்படும் உணர்வு மலைப்பும் பிரமிப்பும்-மலைப்பூட்டுவது ஆசிரியருக்கு நோக்கமாக இல்லாத போதும். மலைப்பு நீங்காத நிலையிலேயே இம்மதிப்பீடு செய்யப்படுகிறது என்ற முன்னெச்சரிக்கையோடு தொடர்கிறேன். பி.கே. பாலகிருஷ்ணன் எழுதிய ‘நல்ல நாவலும் மகத்தான நாவலும்’ என்ற மலையாளக் கட்டுரையை- நீல. பத்மநாபன் மொழிபெயர்ப்பில்- படித்தது நினைவுக்குவருகிறது. ‘காவல் கோட்டம்’ நல்ல நாவல் என்பதில் ஐயமில்லை. மகத்தான நாவலா என்பதை இனி பார்ப்போம். ஒருவகையில் ‘காவல் கோட்

பதிவு
தேவிபாரதி  

கடந்த சில வருடங்களில் தமிழ்ப் பதிப்புத் துறை கண்டிருக்கும் அபரிமிதமான வளர்ச்சிக்கும் சென்னை, மதுரை, ஈரோடு, நெய்வேலி, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாக்களுக்குமிடையே உள்ள நெருங்கிய தொடர்பை நேரடியாக அறிந்துகொள்வதற்கு, சென்னைப் புத்தகக் கண்காட்சியைவிடப் பொருத்தமான இடம் வேறெதுவும் இருக்க முடியாது. இந்த ஆண்டு ஜனவரி 8 முதல் 18 முடிய 11 நாட்கள் நடைபெற்ற 32வது புத்தகக் காட்சியில் அதற்குப் பல உதாரணங்கள் தென்பட்டன. பிரத்தியட்ச உதாரணம் ஜோ மல்லூரி. அவர் ஒரு கவிஞர் என்று நினைக்கிறேன். 1500 பக்கத்தில் ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்த மல்லூரி, அதைக் காட்சிக்கு வைப்பதற்காக இரண்டு கடைகள் அடங்கிய பெரிய ஸ்டால் ஒன்றை எடுத்திருந்தார

பதிவு
சுகுமாரன்  

சமீபத்திய ஆண்டுகளில் புத்தகக் கண்காட்சிக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறை சென்றதும் வளாகத்தில் அதிக நேரத்தைச் செலவழித்ததும் இந்த முறைதான். மிகக் குறைவான எண்ணிக்கையில் புத்தகங்களை வாங்கியதும் இந்தமுறைதான். இதுவே ஆரம்பத்தில் எடுத்த தீர்மானத்துக்கு எதிரானது. காலச்சுவடு பதிப்பித்துள்ள திருமாவளவனின் இருள் யாழி, நவாஸ் சௌபியின் எனது நிலத்தின் பயங்கரம், தீபச்செல்வனின் பதுங்கு குழியில் பிறந்த குழந்தை ஆகிய மூன்று ஈழத்துக் கவிதைத் தொகுதிகளை வெளியிடுவது மட்டுமே புத்தகச் சந்தைக்குச் செல்வதன் நோக்கமாக இருந்தது. எனினும் நீண்ட நாட்களுக்குப் பின்னர் இலக்கிய நண்பர்களைச் சந்திக்கும் அரிய வாய்ப்பை முன்னிட்டு மீண்டும் செல்ல நேர்ந்தது. இலக்கியக் கூட்டங்களைத் தவிர வெவ்வேறு நண்பர்களை ஒரே இடத்தில் சந

பதிவு
கடற்கரய்  

சமகாலப் பதிவுகள் எதையும் ஆவணமாகப் பார்க்கும் நோக்கு தமிழர்களிடையே இல்லை என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. நூறு இருநூறு ஆண்டுகள் எல்லாம் வரலாற்றுத் தன்மைக்கு உகந்ததல்ல எனும் மனப்பாங்கு நிறைந்தவர்கள் நாம். வழிபாட்டுத் தலங்கள்கூட இரண்டாயிரம் ஆண்டுகள் பழமைமிக்கவை என்று அறிந்த பிற்பாடே, தெய்வத்தைத் தொழுவதற்கு ஒருசேரக் கரங்களைத் தலைக்கு மேலாக உயர்த்துகிறோம். இது முற்றிலும் குறைபாடான மனப்பான்மையல்ல. ஹரப்பா போன்று நீண்ட பாரம்பரியம் மிக்க ஒரு குடியின் மனநிலை சார்ந்த விஷயம் இது, அவ்வளவுதான். ஆனால் எத்தனை காலத்திற்குத்தான் இப்படிச் சமகாலப் பிரக்ஞையற்றுக் கதை சொல்லித் திரியப்போகிறோம் என்பது ஒரு கேள்வி. ஒவ்வொரு நாளும் பொழுதும் ஆவணமாக மாறக்கூடும். அதைச் சமீப காலச் சான்றுகள் நமக்க

பதிவு
கே. முரளிதரன்  

சென்னையில் வருடாவருடம் நடக்கும் புத்தகக் கண்காட்சி பரவலான அறிமுகத்தைப் பெற்று, சுற்றுலாப் பொருட்காட்சிக்கான அந்தஸ்தைப் பெற்றுவிட்டது என்பதற்குக் கண்காட்சிக்கு உள்ளே இருந்த பஜ்ஜிக் கடையில் தென்பட்ட கூட்டமே சாட்சி. இத்தனைக்கும் ஒரு பஜ்ஜியின் விலை ரூ. 7.50! கடந்த பல வருடங்களைவிட இந்த முறை கண்காட்சி சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. குழப்பமில்லாத வடிவமைப்பு. வழக்கம்போலவே பக்தி நூல்கள் விற்கும் கடைகளில் கூட்டம் கட்டுக்கடங்காமல் இருந்தது. இன்னொரு கடையில் கல்கி, தொல்ஸ்தோய் போன்ற பல பிரபல எழுத்தாளர்களின் படைப்புகள் சகட்டு மேனிக்கு அடுக்கப்பட்டிருந்தன. உள்ளே நுழைந்து பொன்னியின் செல்வன் புத்தகத்தை எடுத்துப் பார்த்தேன். கல்கி பெயரைச் சிறியதாகப் போட்டு, பதிப்பாசிரியர் என்று ஏதோ ஒ

பதிவு
கே.என். செந்தில்  

நூலின் மீது ஏற்படும் கவர்ச்சியும் ஈர்ப்பும் அதன் அட்டைப் படத்திலிருந்தே தொடங்குகிறது என எண்ணுகிறேன். தாளின் தரமும் வசீகரமிக்க நவீன மொழியில் எழுதப்பட்ட பின்னட்டை வாசகங்களும்தான் நம்மை உசுப்பிச் சில பக்கங்களைப் புரட்டி, சில வரிகளை மேயச் செய்கின்றன. மீளாத மயக்கத்தில், கனவிலிருந்து ஒரு பொருளைத் தூல உலகிற்கு எடுத்துவருவது போல அவன் தனது மன அலமாரியில் அப்புத்தகத்தைக் கொண்டுசேர்க்கிறான். ஏறக்குறைய இரண்டரை நாட்கள் இடமிருந்து வலமாக, வலமிருந்து இடமாகப் பிரதோச கால நந்தியைச் சுற்றுவதுபோல் புத்தகச் சந்தையைச் சுற்றித் திரிந்தேன். இலக்கியக் கூட்டமொன்றை நினைவுபடுத்தியபடியே இருந்தது. வெவ்வேறு இடங்களில் நின்று புகைத்தவாறு எழுத்தாளர்கள் விவாதித்துக்கொண்டிருந்தார்கள். வெகுநாட்களுக்குப்

தலையங்கம்
 

“எல்லாம் முடிந்துவிட்டது!”. கடந்த வாரத்தில் சென்னைக்கு வருகைபுரிந்த இந்தியத் தலைமைத் தேர்தல் ஆணையர் திரு. கோபால்சாமியிடம், ஜனவரி ஒன்பதாம் தேதி நடைபெற்ற திருமங்கலம் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் நடைமுறைகளையும் அவை தொடர்பாக எழுந்துள்ள விமர்சனங்களையும் திமுகவுக்கு ‘மகத்தான வெற்றி’யை வழங்கிய அதன் முடிவையும் குறித்துச் செய்தியாளர்கள் கேட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் இது. செய்தியாளர்கள் வாயடைத்துப் போயிருப்பார்கள். திரு. கோபால்சாமி நேர்மையான தேர்தல் அதிகாரி எனப் பெயர் பெற்றிருப்பவர். சர்ச்சைக்கும் கண்டனத்திற்கும் உள்ளாகியிருக்கிற ஒரு விவகாரம் குறித்துக் கேட்கப்பட்ட கேள்விக்கு ‘முற்றும் துறந்த’ ஒருவர் சொல்வது போன்ற ஒரு பதிலை

 

மும்பை பயங்கரவாதத்தின் பின்னணியை நான்கு கட்டுரைகளும் நுட்பமாக வெளிக்கொணர்ந்துள்ளன. வெவ்வேறு கோணங்களில் ஆராய்ந்தாலும், நான்குமே உண்மையானவை. தனது வாழ்க்கையைப் பாதிக்கும் விஷயங்களைக்கூடக் கதை மாதிரிக் கேட்டுப் பழகிப்போன சராசரி இந்தியக் குடிமகன் ஒவ்வொருவரும் இந்தக் கட்டுரைகளைப் படிக்க வேண்டியது அவசியம். கு. பாஸ்கர், சென்னை காந்தியடிகள் சுட்டுக்கொல்லப்பட்ட போது ஜே. கிருஷ்ணமூர்த்தியிடம் ஒரு அன்பர் இவ்வாறு கேட்டார்: “காந்தியடிகளின் படுகொலைக்கான காரணம் என்னவாக இருக்கும்?” ஜே.கே. சட்டென “இதற்கான காரணம் உங்களிடமே உள்ளது. ஏனெனில் நீங்களே பிரிவினைக்கு உரியவர்களாக இருந்திருக்கிறீர்கள். நீங்கள் வேற்றுமையை ஒரு இந்துவாக, இஸ்லாமியராக, பார்சீயாக இன்னும் பல்வேறு வகை

 

2008ஆம் ஆண்டுக்கான இயல் விருது தற்காலத் தமிழ் இலக்கியத்தின் முன்னோடிப் பெண்ணிய எழுத்தாளராக அறியப்படும் அம்பைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் தமிழ் இலக்கியத்துக்கான வாழ்நாள் சாதனை விருது, கேடயமும் 1500 டொலர்கள் மதிப்பும் கொண்டது. சுந்தர ராமசாமி, கே.கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம் போன்றவர்களைத் தொடர்ந்து இவ்விருதுக்குரியவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் அம்பை, அவருக்கு முன்னும் பின்னுமான பெண்ணிய எழுத்தாளர்களில் தனித்து நிற்பவர். நாற்பது வருடங்களுக்கும் மேலாகத் தன் செயல்பாட்டை எழுத்துக்கும் சிறுகதைகளுக்கும் மட்டுமென்றில்லாமல் இலக்கியத்துக்கு அப்பால் பெண்கள் வாழ்க்க

உள்ளடக்கம்