தலையங்கம்
 

முத்துக்குமாரின் உயிர்நீத்தல் ஈழத் தமிழர் பிரச்சனை தமிழகத்தில் எதிர்கொள்ளப்பட்ட விதத்தில் ஒரு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஈழத் தமிழருக்காக உயிரை, பதவியைத் துறக்கத் தயாராக இருப்பதாக அறிவிக்கும் தமிழக அரசியல் தலைவர்கள் பலரும் இதுவரை ஒரு துரும்பையும்கூடத் துறக்கவில்லை என்ற உண்மையை முத்துக்குமாரின் தீக்குளிப்பு துலக்கமாக உணர்த்தியுள்ளது. பதவி, அரசியல், தேர்தல் கூட்டணி எனப் பல தளங்களில் மத்திய அரசால் தமிழகத் தலைவர்களுடன் ஆடுபுலி ஆட்டம் ஆட முடிந்த காலகட்டம் ஒரு முடிவுக்கு வந்துவிட்டது. ராஜீவ்காந்தி மற்றும் அவருடன் இருந்த பல அப்பாவிகளின் படுகொலைக்குப் பிறகு ஈழத் தமிழர்களுக்காக உரிமைக்குரல் கொடுப்பதில் தமிழகத் தமிழர்களுக்கு ஏற்பட்டிருந்த கூட்டு மனத்தடையும் சிதறிவிட்ட

கண்ணோட்டம்
கண்ணன்  

பாரதி படைப்புகளிலிருந்து துவங்கிய நாட்டுடமையாக்கம் எனும் தமிழக மரபு பற்பல பயன்களை ஈட்டியுள்ளதை மறுப்பதற்கில்லை. பொதுவாகத் தமிழ்ப் பதிப்பாளர்களின் கொடுங்கனவு எழுத்தாளர்களுக்குக் காப்புரிமை வழங்குவது பற்றியது. எனவே நாட்டுடமையாக்கம் மறைந்துபோன படைப்புகளின் மறுபதிப்புகள் வெளிவர உதவுகிறது. சில நேரங்களில் வாரிசுதாரரைத் தேடிப் பிடிக்கும் சிக்கலிலிருந்தும் அவர்தம் குடும்பப் பிரச்சனைகளிலிருந்தும் படைப்புகளை விடுவிக்கிறது.இருப்பினும் காப்புரிமை பற்றித் தமிழக அரசுக்கும் பதிப்பாளர்களுக்கும் அதிகாரிகளுக்கும் எழுத்தாளர்களுக்கும் போதிய தெளிவு இல்லை. ஒரு எழுத்தாளர் மறைந்து அறுபது ஆண்டுகள் ஆனதும் அவரது படைப்புகள் பொதுவுடைமை ஆகிவிடுகின்றன. ஆனால் தமிழக அரசு தொடர்ச்சியாகப் பொதுவுடைமையாக

கட்டுரை
கண்ணன்  

கர்நாடகாவின் மங்களூரில் ஒரு ‘பப்’இல் - பதப்படுத்தப்படாத பீர் கிடைக்குமிடம் - இருந்த பெண்களை ஸ்ரீராம சேனை என்ற இந்துத் தீவிரவாத அமைப்பினர் இழிவுபடுத்தித் தாக்கிய சம்பவம் ‘தேசிய’க் கவனம் பெற்றுள்ளது. ஆங்கில ஊடகங்களின் கவனத்தைக் கவர்ந்துவிட்டால் எதுவும் ‘தேசிய’ப் பிரச்சனையாக மாறிவிடுமே! இந்திய ஆங்கில ஊடகங்களில் பிராந்தியச் செய்திகள் அருகிவரும் காலம் இது. ‘தேசிய’ச் செய்திகளும் உலகச் செய்திகளும் அவற்றின் முழுநேரத்தையும் ஆக்கிரமித்து வருகின்றன. இருப்பினும் ஆங்கில ஊடகத் துறையினரின் வர்க்கமும் பண்பாடும் கேள்விக்குள்ளாக்கப்படும்போது அச்சம்பவம் ‘தேசிய’க் கவனம் பெறுவது உறுதி. இது போன்ற சம்பவங்களில் ஆங்கில ஊடகங்கள் செய்தியைப்

க. திருநாவுக்கரசு - புதுதில்லி  

பாலஸ்தீனப் பிரச்சினையை நம் காலத்தின் மாபெரும் தார்மீகப் பிரச்சினை என்றார் நெல்சன் மண்டேலா. பாலஸ்தீன மக்களுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதியை, அவர்களின் துயரத்தை இதைவிடச் சுருக்கமாக அதே நேரத்தில் மனத்தைத் தைக்கும் விதமாக ஒருவர் கூற முடியாது. இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய உலக வரலாற்றில் இரண்டு விவகாரங்கள் மனித மனசாட்சியை உலுக்கின. எந்தவொரு தார்மீக அளவுகோலின்படியும் ஏற்கப்பட முடியாதவை இவை. இதில் ஒன்றான தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சி நீண்ட நெடிய போராட்டத்திற்குப் பின்னர் 1994இல் முடிவுக்குவந்தது. ஆனால் 1940களில் தொடங்கிய பாலஸ்தீன மக்களின் துயரம் இன்றளவும் தொடர்கிறது. இதற்கான தீர்வு கண்ணுக்கெட்டிய வரையில் தென்படவில்லை. இப்பிரச்சினையைப் புரிந்துகொள்ள ஜியோனிசம் (Zionis

கட்டுரை:
சை. பீர்முகம்மது  

நாடு காலனித்துவ ஆட்சியிலிருந்து சுதந்திரமடைந்ததிலிருந்து, கடந்த 51 ஆண்டுகளாக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியிலிருந்துள்ள தேசிய முன்னணி அரசு 8 மார்ச் 2008இல் மலேசியப் பொதுத்தேர்தலில் பலத்த சரிவை எதிர்கொண்டது.மூன்றில் இரண்டு பங்கு அதிகாரத்தைக் கைப்பற்றுவதே எதிரணியான மக்கள் கூட்டணியின் தாரக மந்திரமாகச் சொல்லப்பட்டது. தேசிய முன்னணி தான் நினைத்த சட்டங்களையெல்லாம் இயற்ற முடியாமல் செய்யும் நிலையை ஏற்படுத்தவே எதிரணிகள் ஒன்றுசேர்ந்தன. யாரும் எதிர்பார்க்கா வண்ணம் ஒரு ‘சுனாமி’போல நாடாளுமன்றத்தில் 82 இடங்களை எதிர்க்கட்சிகள் கைப்பற்றின. தேர்தலில் பல முக்கிய அமைச்சர்கள் தோல்வியைத் தழுவினார்கள். மலேசியன் இந்தியக் காங்கிரசின் (ம. இ. கா.) ஒரே கேபினட் அமைச்சரான டத்தோஸ்ரீ சா

சிறுகதை
தேவிபாரதி  

எதிர்த் திசையில் பின்னோக்கிச் சுழன்றுகொண்டிருந்தன கடிகார முட்கள். அவள் ஒரு பௌதீக மாணவி என்பதால் அதைக் காலத்தின் பின்னோக்கிய பயணமாகக் கற்பனை செய்துகொள்ள வேண்டுமென்பதில்லை. கடிகாரத்தின் மின்னணுத் தொழில்நுட்பக் கட்டமைப்பில் ஏற்பட்டுவிட்ட விசித்திரமான கோளாறின் விளைவே அது. ஆனால் இதற்காக அலட்டிக்கொள்ளத் தேவையில்லை. காலத்தைக் கணக்கிடுவதற்குக் கடிகாரத்தைவிட்டால் வேறு கதியே இல்லையா என்ன? விஸ்வம் அவளிடம் மன்னிப்புக் கேட்டபொழுது நேரம் மிகத்துல்லியமாகப் பின்னிரவு பதினொரு மணி ஆறு நிமிடங்கள் முப்பத்திரண்டு நொடிகளாயிருந்தது. அநேகமாக அந்தக் கணத்தில்தான் அவனுடைய சரித்திரமும் முற்றுப்பெற்றிருக்க வேண்டும். அது தன் வாழ்க்கையின் மிக மிக முக்கியமான தருணம் எனக் கருதியதால்தான் அப்போது

 

நக்கீரன் கவிதைகள் ந. லக்ஷ்மி சாகம்பரி கவிதைகள் ஜனகப்ரியா கவிதைகள் சே. பிருந்தா கவிதைகள்

கட்டுரை:
சுகுமாரன்  

காலச்சுவடு நவம்பர் 2008 இதழில் வெளியாகியிருந்த பழுப்புக் காலை (மத்தா ப்ரோ - MATIN BRUN) சிறுகதையை வாசித்து முடித்ததும் கதாசிரியரான பிரெஞ்சு எழுத்தாளர் ஃப்ராங்க் பாவ்லாஃபை நேரில் சந்தித்துப் பேசிய தருணம் ஞாபகத்தில் படர்ந்தது.பிரெஞ்சுக் கலாச்சார மையம் அல்லையான்ஸ் பிரான்சேஸின் திருவனந்தபுரம் பிரிவு பழுப்புக் காலை மலையாள மொழிபெயர்ப்பின் வெளியீட்டை முக்கியத்துவம் நிறைந்த நிகழ்ச்சியாக அறிவித்திருந்தது. அல்லையான்ஸ் பிரான்சேஸ், கேரளப் பல்கலைக்கழகத்தின் ஆங்கில மொழிப் பயிலகம், மலையாளப் பதிப்பகம் டி. சி. புக்ஸ் மூன்றும் இணைந்து 2007 ஏப்ரல் மூன்றாம் தேதி அந்நிகழ்ச்சியை நடத்தின. மலையாள எழுத்தாளர் சக்கரியா சிறப்புரை நிகழ்த்தினார். நிகழ்ச்சியின் முக்கிய அம்சம் கதை வாசிப்பு. பாவ்லாஃப், ப

பத்தி:
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

இருபது ஆண்டுகளுக்குமுன் ஒரு மாசி 14ஆந் திகதி அப்போது ஈரானின் தலைவராயிருந்த அயோத்தல்லா கொமேனி சல்மான் ருஷ்டிமீது ஒரு பட்டுவா (மதத் தீர்ப்பு) விடுத்திருந்தார். அந்த நாட்களில் பட்டுவா என்னும் வார்த்தை சொல்லாடலில் புதிதாக இருந்தது. ருஷ்டி இழைத்த குற்றம் அவர் எழுதிய சாத்தானின் செய்யுள்கள் என்னும் நாவலில் முஸ்லிம்களின் மனத்தைக் காயப்படுத்தும்படியான சம்பவங்களை எழுதியிருந்ததே. எப்போதுமே சிடுசிடுக்கும் மனப்பான்மை உள்ள V.S. Naipaul அயோத்தலாவின் அறிக்கை பற்றிச் சொன்ன கருத்து: ‘An extreme form of literary criticism’.முதலில் இந்த நூல் ஏற்படுத்திய சர்ச்சையைச் சுருக்கித் தருகிறேன். புரளியை ஏற்படுத்திய சம்பவம் 547 பக்கம் கொண்ட நாவலில் 70 பக்கங்களில் வரும். இதில் மூன்று க

பெ. பாலசுப்ரமணியன்  

சமீபத்தில் அரசியல் என்னும் சொல்லாடல் இலக்கியச் சூழலில் அதிகளவில் பயன்படுத்தப்படுகிறது. இச்சொல்லை மையப்படுத்திப் பத்து நூல்கள் வெளிவந்துள்ளன. ‘கங்கு’ (சிறு வெளியீடு புத்தகப் பரப்பலுக்கான வெளி) வரிசை என்னும் குறிப்போடு பதிப்பிக்கப்பட்டிருக்கும் இந்நூல்கள் குறித்த அறிமுகக் குறிப்புகள் இங்கு இடம்பெறுகின்றன.  இருபதாம் நூற்றாண்டின் சமூக, மானிடவியல் அறிஞர்களில் குறிப்பிடத்தகுந்தவர் பியர் பூர்தியு. தொலைக்காட்சி: ஒரு கண்ணோட்டம், கல்வித் துறை மாந்தர், உலகின் ஏழ்மை, தனித்தன்மை: சுவைநயம் பற்றிய மதிப்பீடு குறித்த ஒரு சமூக விமர்சனம், எதிர்ப்பு நடவடிக்கைகள் முதலான நூல்கள் முக்கியமானவை. 1930களில் பிரான்சில் தென் கிழக்குப் பகுதியிலுள்ள பெஅர்ன் பிரதேசத்தில் விவசாயக்

 

‘எல்லாம் முடிந்துவிட்டது’ தலையங்கம் பாராட்டுக்குரியது. தோல்வியைச் சந்திக்கத் துணிச்சலற்றவர்களே வன்முறையைக் கையிலெடுப்பார்கள். மக்கள் செல்வாக்கை இழந்துவரும் கட்சி சனநாயக நெறிமுறைகளைக் கைவிட்டு வன்முறையை நோக்கிப் பயணிக்கிறது. இவர்களிடம் எப்படி சனநாயகத்தை எதிர்பார்க்க முடியும். தலைவனைப் போலவே தொண்டனும் சுயநலமாக மாறுகிறான். இலங்கையில் மனித உரிமை மீறல், ஊடக சுதந்திரம் பறிப்பு, இன அழித் தொழிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இதை உலகம் வேடிக்கை பார்க்கிறது. ஐநாவும் அறிக்கைகளை மட்டும் வெளியிட்டுக்கொண்டிருப்பது வேதனை. நம்மூர் ஊடகச் செயல்பாட்டாளர்கள் லசந்தாவின் கட்டுரையை வாசித்த பிறகாவது தங்கள் மனசாட்சியின் குரலை நேர்மையாகப் பதிவுசெய்ய முன்வர வேண்டும். இலங்கைத் த

பதிவு: அற்றைத் திங்கள் - நவம்பர் ’08
அனு  

சேலம் ‘அற்றைத் திங்க’ளின் நவம்பர் மாத நிகழ்வு 16.11.08 அன்று நடந்தது. க.வை. பழனிசாமி சிறப்பு விருந்தினரான ஓவியர் மருதுவை அறிமுகப்படுத்தினார். தன்னுடைய ஓவியம் மற்றும் கலை இயக்கம் தொடர்பாகத் பேச்சைத் தொடங்கிய மருது அனிமேஷன் பற்றிக் கூறியபோது அதன் ஆரம்பப் புள்ளியான காமிக்ஸ் குறித்த தகவல்களையும் பார்வையாளர்களிடம் பகிர்ந்துகொண்டார். அவருடைய பேச்சில் மிகுதியாக வெளிப்பட்டது அனிமேஷன் துறை குறித்த செய்திகளே. அனிமேஷனில் தொடக்ககாலத்தில் ஒரு அசைவை வெளிப்படுத்தப் பல நூறு ஓவியங்களைத் தொடர்ச்சியாக வரைய வேண்டியிருந்த சிரமத்தை விவரித்த அவர், பின்பு அதுவே வளர்ந்து நவீனக் கண்டுபிடிப்புகளின் முக்கிய விளைவான கணிப்பொறியின் வழி அசுர வளர்ச்சியடைந்ததையும் தற்போதைய சூழலில் நாம் அனி

ஆளுமை
அம்ஷன் குமார்  

1990ஆம் ஆண்டு ஒரு விளம்பரப் படத்தை இயக்கும் வாய்ப்பு தற்செயலாக எனக்குக் கிடைத்தது. அப்போது சென்னையில் தயாரிக்கப்பட்ட விளம்பரப் படங்கள் பலவும் பொருட்களைக் கூவிக்கூவி விற்றுக்கொண்டிருந்தன. விளம்பரப் பொருட்களின் பெயரைப் பலமுறை உரக்கக் கூறி அவற்றின் கல்யாண குணங்களை வானளாவப் புகழ்வதோடு அவை முடிந்துவிடும். மும்பையிலிருந்து வெளிவந்த விளம்பரப் படங்கள் அழகுணர்ச்சி கொண்டிருந்தன. அவற்றில் பேச்சு குறைவாகவும் காட்சி அம்சங்கள் அதிகமாகவும் இடம்பெற்றன. விளம்பரப் பொருட்கள் பற்றிய மேன்மைகள் அவற்றில் உயர்வு நவிற்சியின்றிச் சொல்லப்பட்டன. நான் அந்தப் பாணியில் படத்தை எடுத்தேன்.படத்தை முடித்த பிறகு அதற்கு நல்ல பின்னணி இசை தர வேண்டி, சில இசையமைப்பாளர்களை அணுகினேன். விளம்பரப் படங்களுக்கு இசை

திரை
அ. ராமசாமி  

தனி அடையாளம் கொண்ட தமிழ் சினிமா இயக்குநர்கள் தங்கள் படங்களைக் கவனத்திற்குரிய படங்களாக்குவதற்குப் பலவிதமான உத்திகளைப் பின்பற்றுகிறார்கள் என்பதை சாதாரண பார்வையாளர்கள் அறிவதில்லை. அவர்கள் ஒரு சினிமாவை அதன் எல்லைக்குள் நின்று பார்த்துவிட்டு அது தந்த களிப்பையும் கொண்டாட்டத்தையும் அந்த அரங்கிலேயே விட்டு விட்டே செல்கின்றனர். அப்படிப்பட்டவர்களே திரைப் படத்தின் பெரும்பான்மையான பார்வை யாளர்கள் எனக் கருதும் இயக்குநர்கள் அவர்களுக்காக மட்டும் படம் எடுக்கிறார்கள். வெற்றிபெறும் குதிரையின் மீது பந்தயம் கட்டி யோகம் அடித்தால் தானும் வெற்றிபெற்ற இயக்குநராகக் காட்டிக்கொள்வார்கள். அப்படிப்பட்ட இயக்குநர்களின் முதன்மையான கச்சாப் பொருள் தற்போது பிரபலமாக இருக்கும் நடிகன் மட்டுமே. விஜய் அல்லது

அஞ்சலி: நாகேஷ் (1933 - 2009)
அசோகமித்திரன்  

நான் ஜெமினி ஸ்டுடியோவில் 1952இல் சேர்ந்தபோது எனக்கு மோட்டார் கம்பெனிகளோடு தொடர்பு ஏற்படும் என்று நினைத்ததில்லை. என் முதலாளி வண்டி மாரிஸ் மைனர் அல்லது மாரிஸ் டென், ஒரு செவரலே ஸ்டேஷன் வாகன், இதர வண்டிகள் ஃபியட். இவற்றை உரிய காலத்தில் முழுப் பரிசோதனை புரியவும் பழுது ஏற்பட்டால் சரிபார்க்கவும் உரிமை பெற்றவர்கள் சுந்தரம் மோட்டார்ஸ். அப்படித்தான் அந்த நிறுவனத்தின் பல பணியாளர்கள் எனக்குத் தெரிந்தவர்களானார்கள். பலர் ஓரளவு பெரிய அளவில் கிரிக்கெட் விளையாடியிருக்கிறார்கள். ஒருவர் தி.நகர் பர்கெட் சாலையில் பெற்றோருடன் வசித்தார். அந்தக் குடும்பத்தார் அனைவரும் எனக்குத் தெரிந்தவர்களானார்கள். என் நண்பர் மூலம் நாகேஷும் தெரியவந்தார். அன்று சிவ-விஷ்ணு ஆலயத்தின் எதிரில் தனி நபர்கள் வாடகைக்

அஞ்சலி: தே. வீரராகவன் (7.10.1958 - 5.2.2009)
ஆ. இரா. வேங்கடாசலபதி  

இந்தியாவின் முதல் தொழிற்சங்கம் 1918இல் தோன்றிய சென்னைத் தொழிலாளர் சங்கம். இச்செய்தி இடம்பெறாத வரலாற்று நூல்கள் இருக்காது. ஆனால் இதற்குமேல் சென்னைத் தொழிலாளர் வர்க்கத்தின் உருவாக்கம், அதன் போராட்டங்கள் பற்றிய நம்பகமான வரலாறு பலகாலம் இல்லாமலிருந்தது. அக்குறையைப் போக்கியது தே. வீரராகவனின் ‘சென்னைப் பெருநகர(த்) தொழிற்சங்க வரலாறு’ (அலைகள் வெளியீட்டகம், 2003). இந்நூல் வீரராகவனின் முனைவர் பட்ட ஆய்வேட்டின் தமிழ் வடிவம்.அக்காலத்து அரசாங்க ஆவணங்கள், அறிக்கைகள், காவல் துறைக் குறிப்புகள் மட்டுமல்லாமல் தேசபக்தன், நவசக்தி, ஜனசக்தி, நியூ இந்தியா, ஹிந்து முதலான இதழ்களும் இந்த ஆய்வுக்கு ஆதாரமாக அமைந்திருந்தன. தொழிலாளர் இயக்கத்துக்கென்றே தோற்றுவிக்கப்பட்ட ஈ.எல். அய்யரை ஆச

அஞ்சலி:
அம்பை  

டெல்லியில் இருந்தபோது தி. ஜானகிராமன் என்னிடம் மிகவும் சிலாகித்துப் பேசிய எழுத்தாளர் கிருத்திகா. தன் படைப்புலகம் பற்றி மிகவும் தெளிவாக இருந்தவர். அவரை நான் படிக்க முற்பட்டபோது ஓர் ஆச்சரியம் கலந்த உணர்வு ஏற்பட்டது. அரசியல் பற்றியும் நாடு பற்றியும் இந்தக் கட்டமைப்பில் உருவாகும் உறவுகள் பற்றியும் வித்தியாசமான நடையில் அங்கதம், நகைச் சுவை, மனோதத்துவம் இவை கலந்து எழுதிய இலக்கியவாதி அவர். பத்தினி என்பவளை மனோதத்துவரீதியில் அவர் தன் மனதிலே ஒரு மறு என்ற நாடகத் தொகுப்பில் பார்க்கிறார். ஒரு பத்தினி தன் பத்தினித்தன்மையைத் தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் ஒன்றாகப் பயன்படுத்தும்போது, அதனால் இயற்கையை மாற்ற முயலும்போது அவள் அடைவது தோல்விதான் என்ற நோக்கில் நாடகம் எழுதினார். காப்பிய

அஞ்சலி: சுகந்தி
 

சுகந்தி பிப்ரவரி பனிரெண்டாம் தேதி காலையில் உறக்கத்திலேயே இறந்துவிட்டாள் என்பது செய்தி. நாற்பத்திரெண்டு வயதுதான் சுகந்திக்கு. இறக்கும் வயதல்ல. இருந்தும் மனப் பிறழ்வுக்காக அவள் தொடர்ந்து உட்கொண்ட மருந்துகள் அவள் உயிரைக் குடித்துவிட்டன என்று கூறுகிறார்கள். சுகந்தியும் நானும் மிக நெருங்கிய தோழிகளாய் இருந்தோம். கடிதம் மூலம்தான் தொடர்பு. நேரில் சந்தித்த பிறகு என்னை அம்மா என்று அழைக்கத் தொடங்கினாள். அவள் கவிதைகளையும் அவள் பலதும் கிறுக்கிய நோட்டுப் புஸ்தகத்தையும் அவளுடன் ஒரு நாள் முழுவதும் கழித்தபோது என்னிடம் காட்டியிருக்கிறாள். அவள் கணவர் சுப்ரபாரதிமணியனுக்கு எங்கள் நட்பு பிடித்ததா இல்லையா என்று தெரியவில்லை. ஒரே ஒருமுறை எனக்கு மிகவும் வருத்தத்துடன் எழுதியிருந்தார். மும்பா

எதிர்வினை
 

காலச்சுவடு 109ஆம் இதழில் மலர்மன்னன் எழுதிய ‘அறியப்பட வேண்டிய அண்ணா’ கட்டுரையைப் படித்தோம். அறிஞர் அண்ணாவின் நூற்றாண்டுவிழா நேரமானதினால் அவரைப் பற்றிய கட்டுரைகள் பல கோணங்களில் பல இதழ்களில் வெளியிடப்பட்டு வருகின்றன. அவற்றில் ஒரு வகையாக மலர்மன்னனின் கட்டுரை வெளிவந்து இருக்கிறது. அதன் உள்ளடக்கம் எப்படி இருப்பினும் காலச்சுவடு இதழில் மீண்டும் அறிஞர் அண்ணாவைப் பற்றிய கட்டுரை இடம்பெற்றதில் எமக்கும் பெருமகிழ்ச்சியே. துக்ளக் சோவின் Pic-wick ஏடு ஆழ்வார்ப்பேட்டையில் எமக்கு வேண்டிய ஓர் அச்சகத்தில் அச்சிடப்பட்டு வந்தது. ஒருநாள் மாலை அந்த அச்சகத்திற்கு நாம் சென்று இருந்தோம். அங்கே அந்த அச்சக உரிமையாள ரோடு ஒருவர் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார். இந்தி நடிகரைப் போல மழித

மதிப்புரை
ராஜமார்த்தாண்டன்  

நான்காண்டுகள் காலகட்டத்தில் வெளிவரும் அலறியின் மூன்றாவது கவிதைத் தொகுப்பு இது. முன்னர் வெளிவந்துள்ள ‘பூமிக்கடியில் வானம்’, ‘பறவை போல சிறகடிக்கும் கடல்’ தொகுப்புகளுடன் சேர்த்துப் படிக்கும் போது, அலறியின் கவிதையமைப்பிலும் பார்வையிலும் மொழிநடையிலும் மாற்றங்கள் நிகழ்ந்துவருவதை, கவிதையமைப்பில் தெளிவாகவும் பார்வை வெளிப்பாட்டில் நுட்பமாகவும், காண முடியும். எல்லாப் பூக்களும் உதிர்ந்துவிடும் (கவிதைகள்) அலறி பக். : 52 விலை: ரூ. 130 (இலங்கை) முதற்பதிப்பு: பிப்ரவரி 2008 வெளியீடு: புதுப்புனைவு இலக்கிய வட்டம், 339, மக்காமடி வீதி, மருதமுனை - 32314, இலங்கை. முதல் தொகுப்பிலுள்ள கவிதைகள் நெகிழ்ச்சியான அமைப்பினைக் கொண்டவை. இரண்டாவது தொகுப்பிலுள்ளவை

 

சிங்கப்பூரில் வாழும் பெண் எழுத்தாளர்களின் இருபது சிறுகதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில் பிறந்து வளர்ந்து பட்டம்பெற்று சிங்கப்பூரில் குடியேறியவர்கள், சிங்கப்பூரையே தாயகமாகக் கொண்டவர்கள் என இப்படைப்பாளிகளை இரு பிரிவினராகக் காணலாம். வேறொரு மனவெளிசிங்கப்பூர்ப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைகள் தொகுப்பாசிரியர் பாலு மணிமறன் பக். : 240 விலை: ரூ. 150 முதற்பதிப்பு: டிசம்பர் 2007 வெளியீடு தங்கமீன் பதிப்பகம் சி-54, முதல் தளம். அண்ணா நகர் பிளாசா, அண்ணா நகர், சென்னை-40. இத்தொகுப்பில் சூரிய ரத்னாவின் முகமூடி சிறுகதையையும் ரம்யா நாகேஸ்வரனின் முகவரிப் புத்தகம் சிறுகதையையும் முக்கியமானவையாகக் குறிப்பிடலாம். ஒருவருக்கொருவர் ஒளிவுமறைவின்றி உரையாடுவதையும் பழகுவ

பதிவு: ‘மீண்டும் காகங்கள்’
மா. சுப்பிரமணியன்  

‘மீண்டும் காகங்கள்’ சிறப்புக் கூட்டத்தில் (25.11.2008) அம்பை தயாரித்த ‘தேகம்’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. பொதுவாக, ஆவணப் படங்கள் உணர்வுகளைத் தூண்டி, படத்தின் கருப்பொருளோடு ஒன்றச் செய்யும். இந்த ஆவணப்படம் மிகையில்லாமல் அறிவுபூர்வமாக, திருநங்கை யரின் வாழ்க்கையை அறிந்து கொள்ளும் படி உருவாக்கப்பட்டிருந்தது. காட்சி களும் உரையாடல் வழி வெளிப்பட்ட கருத்துகளும் சமமாக இணைந்து சென்றன. திருநங்கையரின் ஆழ்மனம் தெரிந்தது. உடலும் உள்ளமும் பெண்மையால் நிறைந்திருக்கும்போது, ஆணின் உடையும் பணியும் அவர்களுக்குப் பொருத்தமற்றதாகிவிடுகிறது. அவர்களால் பிற ஆண்களை நேசிக்கமுடிகிறது. ஆண்கள்மேல் வெறுப்பில்லை. திருநங்கையர் தங்களிடமிருக்கும் ஆண் அடையாளங்களை மட்டுமே வெறுக்கிறார்க

உள்ளடக்கம்