கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

இரண்டு ஆண்டுகளுக்கு முன் திருநெல்வேலியை ஒட்டிய கிராமம் ஒன்றிற்குச் சென்றிருந்தபோது, தெருவிலிருந்த பழைய ஆழ்துளைக் குழாயை வீரப்பன் போர்வெல் என்று அவ்வூரார் அழைப்பதைக் கவனித்தேன். இங்கு 1986ஆம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பாகப் போட்டியிட்ட, ஆர்.எம். வீரப்பன் அமைத்த குழாய் என்பதால் அப்பெயர் என்பதைப் பின்னர் தெரிந்துகொண்டேன். தண்ணீர்ப் பஞ்சம் நிலவிய பல கிராமங்களிலும் இவ்வாறு அவர் குழாய் அமைத்துத் தந்ததால் வீரப்பன் போர்வெல் தேர்தல் செலவில் மிச்சமான பணத்தைக் கொண்டு கோயில் ஒன்றுக்கு மணி வாங்கித் தந்ததால் அது வீரப்பன் மணி என்றும் அழைக்கப்படுவதாக அவ்வூர் நண்பர் சொன்னார். வாக்காளர்களுக்கு மறைமுகமாக அவர் தந்த சன்மானங்களே இவை. ஆரத்தி எடுக்கும் தட்டுகளில் அவர் அளித்த

கட்டுரை
 

உத்தரப் பிரதேசத்திலுள்ள அயோத்தியில் 16ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாபர் மசூதியை வெறிபிடித்த இந்துத்துவக் கும்பல் ஒன்று தரைமட்டமாக்கிக்கொண்டிருக்கிறது என்று டிசம்பர் 6, 1992 மதியம் தகவல் வந்தபோது அப்போதைய பிரதமர் பி.வி. நரசிம்ம ராவ் தனது இல்லமான 7, ரேஸ் கோர்ஸ் சாலையில் தூங்கிக்கொண்டிருந்ததாகச் சொல்லப்படுகிறது. அவரது உதவியாளர்கள் அவரை எழுப்ப வேண்டாம் என முடிவுசெய்தார்கள். அந்த நெடுந்தூக்கம் இன்றைக்கும் தொடர்ந்துகொண்டிருக்கிறது. பாபர் மசூதி இடிப்பை விசாரிக்கவும் குற்றவாளிகள் பற்றிச் சட்டத்துக்கு வழிகாட்டவும் 16 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட லிபரான் கமிஷனின் அறிக்கை தூசுபடிந்து கிடக்கிறது. கிட்டத்தட்ட 4.5 கோடி ரூபாய் இந்த கமிஷனில் முடக்கப்பட்டிருக்கிறது. ஆனால் எந்த

நேர்காணல்: ப.சிவகாமி
 

1980களின் மத்தியில் எழுதத் தொடங்கியவர். தலித்தியம், பெண்ணியம் சார்ந்து செயல்பட்டவர். பழையன கழிதலும், ஆனந்தாயி அவருடைய நூல்கள். தமிழில் எழுத்து பற்றிய புனைவு எனப்படும் ப.க.ஆ.கு. இவருடையதாகும். குறுக்கு வெட்டு, சிவகாமி சிறுகதைகள் போன்ற படைப்புகளும் உண்டு. ஊடாக என்னும் குறும்படத்தை இயக்கியிருக்கிறார். முன்பு கோடாங்கி என்றும் இப்போது புதிய கோடாங்கி என்றும் வெளியாகும் பத்திரிகையின் பின்னணியாய் இருந்து இயங்கிவருபவர். கவிதைகளும் எழுதியுள்ளார். கருத்தம்மா, முனிமா போன்ற பெயர்களிலும் படைப்புகள் வெளியாகியுள்ளன. இவருடைய நாவல் அண்மையில் ஆங்கிலத்தில் வெளியாகியுள்ளது.தமிழக தலித் இயக்கங்கள், தலித் மேடைகள் பலவற்றிலும் பங்குபெற்ற இவர் 90களுக்குப் பிந்தைய தலித் கலை இலக்கிய அடையாள நடவடிக

கட்டுரை
சை. பீர்முகம்மது  

முரளீதரன் என்னும் இயற்பெயர் கொண்ட கருணா மட்டக்களப்பு மாவட்டத்தில் கோறளைப்பற்று கிராமத்தில் 1966ஆம் ஆண்டு பிறந்தார். அங்கேயே ஆரம்பக் கல்வி கற்றுப் பின், செயிண்ட் மைக்கல் கல்லூரியில் பயின்ற காலகட்டத்தில், 1983ஆம் ஆண்டு கிழக்கிலங்கையின் அம்பாறை மட்டக்களப்பு மாவட்டப் பொறுப்பாளராகக் கீர்த்தி அம்மன் செயல்பட்டுவந்தார். அவரிடம் போய்ச் சேர்ந்தார் கருணா. ஒரே ஆண்டில் தன் தனித்திறமை, துணிச்சல் காரணமாக இந்தியாவில் போர்ப் பயிற்சி பெறத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் கருணாவின் பெயரும் இடம்பெற்றது.இந்தியாவிலிருந்து பயிற்சிபெற்றுத் திரும்பியவர்களில் கருணா தனித் திறமைகளோடு செயல்பட்டார். திறமை, விவேகம், போர்த்திறன், விசுவாசம் போன்றவற்றால் விடுதலைப் புலிகளின் கமாண்டோ பிரிவில் சிறப்புத் த

சிறுகதை
 

அவளுக்குப் பீதியில் உடல் உறைந்துபோயிற்று. கால்கள் கல்தூண்கள்போல் அசைக்க முடியாததாய் நிலைகுத்தி நின்றன. எதிரே மாபெரும் ராட்சதர்கள் கையை அகல விரித்து நின்றிருந்தார்கள். ராட்சதர்கள் புராணக் கதைகளில் வருபவர்கள் என நினைத்திருந்தாள். இல்லை. நிஜமானவர்கள். இதோ, அவள் எதிரே நிற்கிறார்கள். அவளைச் சுற்றியிருந்த கும்மிருட்டில் அதிகக் கருமையோடு பூதகணங்களாய்த் தெரிந்தார்கள். அவளுக்கு வியர்த்துப்போயிற்று. சற்று நேரத்தில் அவள் அந்த விரித்த கரங்களால் நொறுக்கப்படலாம். கரை சேருவதற்கு முன் உயிர் போகும். நெஞ்சு படபடத்து வெறும் கூடாகிப்போன மார்பைவிட்டு விண்டு வெளியே தெறித்துவிடும்போல இருந்தது. உள்ளே பறை அடிக்கும் ஓசை எதிரில் நிற்பவர்களுக்குக் கேட்டுவிடும் என்று பயமேற்பட்டது. மண்டியிட்ட

பத்தி: வேறுவேறு
பெருமாள்முருகன்  

பல்லாண்டுகளாகத் தொடர்ந்து தலையங்கத்தோடு வெளிவரும் தமிழ் நாளிதழ் தினமணிதான். அதன் தலையங்கங்கள் வேகமான மொழியில் தர்க்கத்துடன் அமையும் சந்தர்ப்பங்கள் பல. எனினும் பொதுப்புத்தியை வலுவாக்கும் கருத்துகளும் மௌனங்களும் அவற்றில் நிறைய இருக்கும். 3.2.09 அன்றைய தினமணித் தலையங்கம் ‘எரிச்சலூட்டும் கல்விக் கொள்ளை(கை)!’ என்னும் தலைப்பிலானது. தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக் கட்டணம் மிக அதிகம் என்பதை மையமாகக் கொண்டது. சென்னை போன்ற நகரங்களில் வசிக்கும் நடுத்தட்டு, உயர் நடுத்தட்டு மக்களை மனத்தில் கொண்டு எழுதப்பட்ட தலையங்கம் அது. ‘அரசுப் பள்ளிகள்மீது அவநம்பிக்கை கொண்டுவிட்ட மக்கள், தனியார் பள்ளிகளையே அதிகம் நாடுகின்றனர்’ என்று தொடங்கி அரசுப் பள்ளிகள் பற்றிய

கட்டுரை
 

‘சற்றுமுன்புதான் எழுதினேன், மைகூட உலரவில்லை அதற்குள் அவ்வெழுத்துகள்மீது உரிமைகளேதும் எனக்கில்லை என்றாகிவிட்டது’ (குமட்டல், ப. 139) என்னும் சார்த்ருவின் சாட்சியம் விவாதத்திற்குரியது. 1905இல் பிறந்த சார்த்ருவின் நூற்றாண்டு விழாவிற்கு அவரது இலக்கிய ரசிகர்கள் சமீபத்தில் ஏற்பாடுசெய்தபோது, சார்த்ருவின் ஆவி(?) இதற்குச் சம்மதிக்குமா அல்லது இந்த ஏற்பாடு அவருக்குச் செலுத்தும் சரியான நன்றிக்கடனாகுமா எனப் பலமுறை விவாதித்த பிறகே காரியத்தில் இறங்கினார்கள். ஏனெனில் விருதுகளும் புகழாரங்களும் வாழும் காலத்தில் மட்டுமின்றி இறந்த பிறகும் அவை கூடாதென்றவர் சார்த்ரு. கடைசியில் இலக்கியப் பெருவிழாவாக நாடெங்கிலும் பல்வேறு தளங்களில் சார்த்ருவின் நூற்றாண்டு விழா அரங்கேறியது. விவாதங்கள், ஆ

சுந்தர ராமசாமி  

அமெரிக்காவில் வசித்துவரும் லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம், நவீனத் தமிழ்ப் படைப்புகளை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துவருகிறார். லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் தொகுத்து, எடிட் செய்த சுந்தர ராமசாமியின் தேர்ந்தெடுத்த சிறுகதைகள், கவிதைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு (கோமதி நாராயணன், ஆ.இரா. வேங்கடாசலபதி உதவியுடன்) Waves என்னும் பெயரில் வெளிவந்துள்ளது. அம்பை, பாமா, இமையம், ந. முத்துசாமி, மௌனி, புதுமைப்பித்தன் ஆகியோரின் படைப்புகளை மொழிபெயர்த்துள்ளார். சு.ரா.வின் குழந்தைகள் பெண்கள் ஆண்கள் நாவலையும் இவர் மொழிபெயர்த்திருக்கிறார்.  669, கே.பி. சாலை நாகர்கோவில் 629 001 தொலைபேசி: 04652 - 223169 20.10.01 அன்புள்ள லக்ஷ்மி, உங்கள் கடிதம் கிடைத்து நீண்ட நாட்கள் ஆகிவிட்டன. அடுத்தடுத்து வரும் வேலைகளால் பதில் எழு

கவிதா  

துர்க்கனவொன்று, விளக்கிலிருந்து விடுபட்ட பூதம்போல வளர்கிறது.எனது கோட்டைப் பதாகைகளில் ஒளிரும் அதன் கொடுஞ்சாயல். எனது கொடித்தடத்தில் வீசும் அதன் குருதியின் வாடை. எனது இரவுகளின் மீது தனது கோரப்பற்களை அது புதைக்கும்போது நான் இன்னொரு துர்க்கனவாக மாறிவிடுகிறேன். இப்போது விடுதலைக்குக் காத்திருக்கிறது இன்னொரு விளக்கு. o இந்தக் கவிதையை நீங்கள் எழுதிவிடுங்கள். எழுதப்படாத எனது கவிதையின் தாள்களில் ஒன்றை உங்களுக்குப் பரிசளிக்கிறேன். எனது அகம் பற்றியும் புறம் பற்றியும் உங்கள் ஐயங்களை இங்கே எழுதிவிடுங்கள். (எனது முந்தைய கவிதைகளில் அதற்கான விடைகள் இருக்கப்போவதில்லை.) உங்களை நிராகரிப்பது பற்றி அல்லது உங்களை அதிதீவிரமாக ஏற்றுக்கொள்வது பற்றி எனது கண்கள் உங்களைத் தொந்திரவு செய

கட்டுரை
கடற்கரய்  

தற்காலப் பெண்ணுடல் ஆவணப் போக்கின் ஆரம்பச் சொல் சுகந்தி சுப்ரமணியனுடையது. இவரது இருப்பு உறுதியாகின்றவரை தமிழ்க் கவிதையின் போக்கு ஆண்சார்பு நிலைப்பாட்டையே கருப்பொருளாகக் கொண்டிருந்தது என்பதைத் தனியே இங்குக் குறிப்பிட்டுச் சொல்லத் தேவை இல்லை. கவிதையின் ஆன்மா உடலற்றது. ஆண் - பெண் என்னும் பால் பேதம் அதற்கு ஸ்தூல அளவில் இல்லையென்றாலும் பௌதீக அளவில் அது உடல் என்பதை அடையாளப்படுத்துகிறது. ஒருவிதத்தில் சொல்லிப் பார்த்தால் புறச்சூழல் என்பதன் அடையாளமாக வருகின்ற பொருட்கள் ஆணுக்கும் பெண்ணுக்கும் வெவ்வேறாகவே உள்ளன. ஆண் மையப்பட்ட வஸ்துகளில் பெண்மையின் இருப்பென்பது இருள் தன்மையடைந்துவிடுகிறது. ஆணின் உலகைச் சொல்லும் ஒரு வஸ்து, அதில் பெண்மையை உள்ளடக்கிக்கொள்ள முடியாத நிலையில் அதிகார

கட்டுரை
பெருந்தேவி  

தமிழில் என்னை மிகவும் பாதித்த எழுத்தாளர்களில் ஒருவரான கிருத்திகாவின் மறைவுச் செய்தி என்னை அடைந்தபோது ஒரு கணம் நிரந்தர இழப்பின் கையறுநிலை என்மேல் கவிந்தது. கிருத்திகாவை அவர் எழுத்தின் மூலமே நான் அறிவேன். அவர் மகள் மீனா சுவாமிநாதனை எனக்கு நன்கு தெரிந்திருந்தாலும் கிருத்திகாவை நான் சந்தித்ததில்லை. பொதுவாகவே எழுத்தாளர்களையும் கலைஞர்களையும் எழுத்தின், கலையின் மூலமாகவே அணுக்கம்கொள்ளும் குணம் எனக்கு. மேலும் எழுத்துக்கும் கலைக்கும் பின்னால் படைப்பாளியாக நிற்கும் ரத்தமும் சதையும் கொண்ட மனிதர்கள், அவர்களின் நேரடி உறவு, நட்பு இவற்றைவிட, எழுத்தும் கலையும் நமக்கு அறிமுகப்படுத்தும் சாத்தியப்படுத்தும் உலகங்கள் இன்னும் பெரிதாகவும் செழுமையானதாகவும் அமைந்துவிடுவதால் எழுத்தாளர்களை, கலைஞர்க

திரை
அரவிந்தன்  

இந்திப் பட உலகில் வணிக சினிமா இயக்குநராக அறியப்பட்ட பிரியதர்ஷன் வணிக சினிமாவின் நிர்பந்தங்களிலிருந்து விடுபட்டு எடுத்திருக்கும் படம் காஞ்சிவரம். பட்டுத் துணி நெய்வதற்குப் பேர்போன காஞ்சிபுரத்தில் 1930களில் நடந்த கதையைச் சொல்லும் படம் இது. இரண்டாம் உலகப் போர், மகாத்மா காந்தி கொலை, காஞ்சிபுரத்தில் கம்யூனிஸ்ட் கட்சி உதயம் என்பன போன்ற வரலாற்றுரீதியான சில நிகழ்வுகள் திரைக்கதையில் இடம்பெற்றாலும் அடிப்படையில் இது ஒரு புனைவுதான். 1930களில் காஞ்சிபுரத்தில் நெசவாளர்களின் வாழ்க்கை எப்படி இருந்தது என்ற உண்மையைச் சொல்ல முனையும் புனைவு.நெசவாளர்களின் வறுமை படத்தின் அடிநாதம். அதிகாரத்தில் இருப்பவர்களின் சுரண்டல் அந்த வறுமையின் ஆதாரம். என் மகள் கல்யாணத்திற்குப் பட்டுச் சேலை வாங்கித் தரு

மதிப்புரை
ராஜமார்த்தாண்டன்  

முன்னிலை ஒருமை (மைதிலி மொழிக் கவிதைகள்) உதயநாராயணசிங் தமிழில்: சி. மணி பக். : 88 விலை: ரூ. 50 முதற்பதிப்பு: 2008 வெளியீடு அடையாளம் 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம் - 621 310, திருச்சி மாவட்டம் மொழியியல் அறிஞரான உதயநாராயணசிங், ‘நசிகேத’ என்னும் புனை பெயரில் மைதிலி மொழியில் எழுதிய கவிதைகளின் ஆங்கிலம் வழித் தமிழாக்கம் இது. இத்தொகுப்பில் முப்பத்து மூன்று கவிதைகள் உள்ளன. பெரும்பாலான கவிதைகள் சற்றே நீளமானவை. தனது இளம் பருவ நினைவுகளாகட்டும் காதல் நினைவுகளாகட்டும் சமூக விமர்சனங்களாகட்டும் அனைத்தையும் ஒரு கவிஞனின் நிலைப்பாட்டில், கவிதையையும் இணைத்துப் பேசுவதாகவே இவரது பெரும்பாலான கவிதைகள் அமைந்துள்ளன. இவ்வகைக் கவிதைகள் சிலவற்றில், கவிதையின் குணாம்சங்

 

எதிர்வினை: பகுத்தறிவின் வளர்ச்சி நாத்திகம்! எதிர்வினை: அவதூறு நோய்க்கிருமியிலிருந்து நான் எப்போது விடுதலை பெறுவேன் எதிர்வினை: மாட்டிக்கொண்ட அறிவுஜீவிகள்

 

பதிவு: அற்றைத் திங்கள், 18.1.2009, சேலம் - மக்களுக்கான எழுத்து எது? பதிவு: ‘சுந்தர ராமசாமி படைப்புலகமும் கருத்துலகமும்’ கருத்தரங்கு பிப்ரவரி 12, 13 - சந்திப்புகள், நினைவுகள், விவாதங்கள் பதிவு: ‘நவீன கவிதை: புரிதலை நோக்கி’ மோகனூர், 09.03.09 - நவீன கவிதைக் கருத்தரங்கு பதிவு: மீண்டும் காகங்கள், 16.2.09, நாகர்கோவில் - வில்லிசைக் கலைஞர் சரஸ்வதி

பதிவு: அற்றைத் திங்கள், 18.1.2009, சேலம்
 

கடந்த ஜனவரி 18, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் சேலம் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய “அற்றைத் திங்கள்” நிகழ்ச்சியில், ச. தமிழ்ச்செல்வன் கலந்துகொண்டார். சமூக அக்கறையாளர், பாரம்பரியமிக்க இலக்கியக் குடும்பத்தில் இருந்து வருபவர், அறிவொளி இயக்கம் தமிழகத்தில் வெற்றியடையப் பாடுபட்டவர்களில் முக்கியமானவர், பண்பாட்டுத் தளத்தில் அக்கறையுடன் பணியாற்றுபவர் எனப் பன்முகங்களைக் கொண்ட தமிழ்ச் செல்வனை, சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க.வை. பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார். தான் எழுத்தாளனாய் மாறியது ஆச்சரியமானது அல்ல, ஏனெனில் தான் வளர்ந்த சூழல் அத்தகையது. தானும் இளங்கோவும் (கோணங்கி) புத்தகங்களின் மீதுதான் ஏறி விளையாடுபவர்களாய் இருந்தோம் எனச் ச

பதிவு: ‘சுந்தர ராமசாமி படைப்புலகமும் கருத்துலகமும்’ கருத்தரங்கு பிப்ரவரி 12, 13
தேவிபாரதி  

காலச்சுவடு அறக்கட்டளையும் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் தமிழியல் துறையும் இணைந்து, ‘சுந்தர ராமசாமி படைப்புலகமும் கருத்துலகமும்’ குறித்த இரு நாள் கருத்தரங்கைக் கடந்த பிப்ரவரி 12, 13 தேதிகளில் நடத்தின. எழுத் தாளராகவும் இதழியலாளராகவும் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ப் பண்பாட்டுத் தளத்தில் இயங்கித் தமிழ் நவீனச் சிந்தனையின் அடையாளமாக விளங்கும் சுந்தர ராமசாமி போன்ற ஆளுமையின் எழுத்துக்களைத் தமிழ்க் கல்விப்புலம் ஒன்று தன் மாணவர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் ஏற்பாடுசெய்யப்பட்ட இக்கருத்தரங்கில் தமிழின் முக்கியமான எழுத்தாளர்கள், கவிஞர்கள், விமர்சகர்கள் எனப் பலதரப்பட்டவர்களும் பங்குகொண்டனர். 12.02.2009 அன்று காலை 10 மணிக்குச் சமூகவியல் புலத்தின்

பதிவு: ‘நவீன கவிதை: புரிதலை நோக்கி’ மோகனூர், 09.03.09
 

நாமக்கல் மாவட்டம், மோகனூர் ஸ்ரீசுப்பிரமணியம் கல்லூரியும் காலச்சுவடு அறக்கட்டளையும் இணைந்து நடத்திய ‘நவீன கவிதை: புரிதலை நோக்கி’ என்னும் தலைப்பிலான கருத்தரங்கு 09.03.09 அன்று அக்கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது. நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராகப் பங்காற்றிய பெருமாள்முருகன் தம் வரவேற்புரையில் கருத்தரங்க நோக்கம் பற்றி விவரித்தார். பழந்தமிழ் இலக்கியங்களைப் புரிந்துகொள்ளும் பலராலும் நம் சமகால வாழ்க்கையுடன் தொடர்புடைய நவீன கவிதையைப் புரிந்துகொள்ள இயலவில்லை என்னும் நிலை தொடர்வதற்கான காரணங்கள் குறித்து விவாதிப்பது இக்கருத்தரங்கின் நோக்கம் என்றார். கவிதையை விளக்குவது தமிழ் மரபு. ‘கற்றதுணர விரித்துரை’க்க இயலாதவர்களைக் கடுமையாக விமர்சிக்கும் தமிழ் மரபில் நவீன

பதிவு: மீண்டும் காகங்கள், 16.2.09, நாகர்கோவில்
 

‘மீண்டும் காகங்கள்’ சிறப்புக் கூட்டத்தில் கலைமாமணி சரஸ்வதி குழுவினரின் வில்லிசை நிகழ்ச்சி நடைபெற்றது. முக்கியப் பாடகரான சரஸ்வதி வில்லை இசைத்தார். துணைப் பாடகி மாலதி, கடம் டி. தர்மலிங்கம், உடுக்கு டி. ரவிக்குமார், தபேலா ராமு, ஆர்மோனியம் டி. நல்லபெருமாள், தாளம் அய்யாத்துரை.தென் தமிழகத்தின் நாட்டார் தெய்வக் கோவில்களில் நிகழும் கொடை விழாக்களில் வில்லிசை நிகழ்த்துக் கலை முக்கியமாக நிகழ வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இக்கலை 300 ஆண்டுகளுக்கு முற்பட்டது என்பதற்கு முக்கூடற்பள்ளு, விறலிவிடு தூது போன்ற சிற்றிலக்கியங்களில் சான்றுகள் உண்டு. பழைய மரபின்படி இக்கலைக்குரிய இசைக் கருவிகள் வில், குடம், உடுக்கு, தாளம் ஆகியன மட்டுமே. இப்போது ஆர்மோனியம் உட்பட பல நவீன இசைக்கருவிக

தலையங்கம்
 

20ஆம் நூற்றாண்டின் இறுதியில் நடந்த முக்கிய நிகழ்வுகளுள் ஒன்று தலித் எழுச்சி. 19ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி முதலே தலித்துகள் அமைப்பாகச் செயல்பட்டது தொடர்பான ஆதாரங்கள் நமக்குக் கிடைத்துள்ளன. என்றபோதிலும் 1990களில் ஏற்பட்ட எழுச்சி புதிய உள்ளடக்கத்தோடு வெளிப்பட்டது. தலித் அடையாளம் என்பது அரசியல் எல்லைகளைத் தாண்டிச் சமூகப் பண்பாட்டு அடையாளமாகவும் மாறியது. கண்ணுக்குப் புலப்படும் ஆதிக்கத்தையும் கண்ணுக்குப் புலப்படாத ஆதிக்கத்தையும் துல்லியமாக அது கண்டு கொண்டது. அதுவரையிலும் தலித் அரசியல் முழக்கங்களாகவும் நடைமுறைகளாகவும் கருதப்பட்டுவந்த பழைய அரசியலை மறுத்து எழுந்த புதிய தலைமுறையினரின் ஆவேசம், 1990களில் தலித் அரசியலாகக் கூர்மை பெற்றது. தலித் அடையாளம் அறிவுத் துறையில் உருவாக்கிய கே

கண்ணோட்டம்
ஸ்டாலின் ராஜாங்கம்  

மார்ச் மாதம் ஆறாம் தேதி திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலுக்கு அருகிலுள்ள செந்தட்டி கிராமத்தில் கோயில் உரிமை தொடர்பான போராட்டத்தையொட்டி இரண்டு தலித்துகள் வெட்டிக் கொல்லப்பட்டனர். ஈழப் பிரச்சினை, அதைத் தின்னும் தேர்தல் எனத் தமிழகமே வேறுதிசையில் இருக்கும்போது, தொடர்ந்துகொண்டிருக்கும் பிரச்சினையாகச் சாதி வன்முறை தொடர்கிறது. ஒரு பிரச்சினையின் தீவிரம் அடுத்த பிரச்சினை வரும் வரையில்தான் உணரப்படுகிறது. ஆனால் தீவிரம் தீர்ந்துபோகாமல் சாதி தனித்து நிற்கிறது. செந்தட்டி கிராமத்திலுள்ள முப்பிடாதியம்மன் கோயிலில் கோனார், செட்டியார், தலித்துகளில் தேவேந்திர குல வேளாளர் ஆகிய வகுப்பினர் இதுவரை கூட்டாக வழிபட்டு வந்துள்ளனர். சிறியதாக இருந்த இக்கோயில் மூன்று வகுப்பினராலும் பணம் சேர

 

மையநீரோட்ட ஊடகங்களின் புனிதங்களைத் தொடர்ந்து கட்டுடைக்கும் கண்ணன் இலங்கைத் தமிழர் பிரச்சினையில் தி ஹிண்டு நாளிதழின் தமிழர் விரோதப் போக்கை மிகக் கடுமையாக விமர்சித்திருப்பது நியாயமே. இலங்கைத் தமிழர் ஆதரவுப் போராட்ட இயக்கங்கள், சோனியா காந்தி மற்றும் பிரணாப் முகர்ஜி உருவப் படங்களை எரித்தபோது தி ஹிண்டு நாளிதழையும் சேர்த்து எரித்திருக்க வேண்டும்.இஸ்லாம் மற்றும் மேலைப் பண்பாட்டுக்கு இடையான வரலாற்றுரீதியான பகையுணர்வு, இஸ்ரேல் பாலஸ்தீனப் பிரச்சினையில் கூடுதல் பரிமாணம். யூத, கிறித்துவ தேவதூதர் பாரம்பரியத்தில் அதே மண்ணில் உருவான உலகு தழுவிய மதம் இஸ்லாம். ஐரோப்பிய வகைப்பட்டதாக இல்லாத உலகு தழுவிய மதம் இஸ்லாம். தனக்கான அச்சுறுத்தலாக இஸ்லாமை மேலை உலகு கொண்டுள்ளது. ஐ.நா அமைப்பை இன்

உள்ளடக்கம்