தேர்தல் 2009: கட்டுரை
கண்ணன்  

வருண் காந்தியின் பெயர், இந்த மார்ச் மாதம்வரை இந்தியாவின் முதல் 500 தலைவர்களின் பெயர்ப் பட்டியலில் இடம்பெற்றிருக்காது. இன்று அவர் இந்துத்துவத் தியாகி. சிறையிலிருந்து விரைவில் மீண்டு நாடெங்கும் சூறாவளிப் பிரச்சாரம் செய்வாரா என்றும், அவருடைய செயல்பாடுகளும் அவருக்கு எதிரான செயல்பாடுகளும் பா.ஜ.க. ஆட்சியைப் பிடிக்கச் சாதகமாக அமையுமா என்றும் இன்று விவாதிக்கப்படுகிறது. தனது தொகுதியில் வருண் காந்தி வெற்றிபெறும் வாய்ப்புகள் அதிகம். பா.ஜ.க. ஆட்சி அமைத்தால் அவருக்கு அமைச்சரவையில் இடம் உறுதி.வருண் காந்தி இஸ்லாமியர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டும் விதத்தில் பேசியுள்ளமை தெளிவு. இப்பேச்சு சுமார் 500 அல்லது 1000 மக்கள் முன்னிலையில் நிகழ்த்தப்பட்டது. பேசிய இரண்டு வாரங்களுக்குப் பின்னர் அத

கட்டுரை
கவிதா  

பெண் எப்போது பெண்ணியவாதி ஆகிறாள்? நம் சமூகத்தில் மட்டுமல்ல, பல சமூகங்களிலும் பெரும்பான்மையான பெண்கள் பெண்ணியவாதிகளாகவோ அப்படி இருப்பது பற்றிய சுய பிரக்ஞை இல்லாமல் வாழ்வதற்கு விதிக்கப்பட்டவர்களாகவோ இருக்கிறார்கள். சமயங்களில் ஆண்களுடனான முரண்கள் ஏற்படும்போதும் அது பெண்களுக்கான பிரத்யேகப் பிரச்சினைகளின் அடிப்படையில் இருப்பதில்லை. இந்தச் சூழலில் ஒரு பெண் தனது, தன்னைப் போலுள்ள பிற பெண்களின் உரிமைகளை உணர்ந்து அதனடிப்படையில் செயல்படுவதைப் பெண்ணியவாதச் செயல்பாடு எனக் கொள்ளலாம். பெண்ணியவாதச் செயல்பாடுகளில் ஒரு பெண் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளத் தூண்டும் காரணிகளாக இரண்டு அடிப்படை விஷயங்களைச் சொல்லலாம். முதலாவதாக, வாசிப்பின் மூலம் வரும் புரிதல், விழிப்புணர்வு. சிமொன் டி பிவோரிலிரு

இலக்கியம்: சிறுகதை
அ. முத்துலிங்கம்  

ஒரு நாள் அவளுக்கொரு காதலன் இருந்தான்; அடுத்த நாள் இல்லை. அவன் வேறு ஒரு பெண்ணைத் தேடிப்போய்விட்டான். இது அவளுக்கு மூன்றாவது காதலன். இந்தக் காதலர்களை எப்படி இழுத்துத் தன்னிடம் வைத்திருப்பது என்று அவளுக்குத் தெரியவில்லை. அவர்கள் தேடும் ஏதோ ஒன்று அவளிடம் இல்லை அல்லது இருந்தும் அவள் கொடுக்கத் தவறிவிட்டாள் என்பது தெரிந்தது.பார்ப்பதற்கு அவள் அழகாகவே இருந்தாள். விசேஷமான அலங்காரங்களோ முக ஒப்பனைகளோ அவள் செய்துகொள்வதில்லை. அதற்கு நேரமும் இருக்காது. மற்ற மாணவிகளைப் போலத்தான் அவளும் உடுத்துகிறாள்; நடக்கிறாள். ஆனால் அவர்களைப் போலப் பேசுகிறாள் என்று சொல்ல முடியாது. இலங்கை, யாழ்ப்பாணத்திலிருந்து அமெரிக்கப் பல்கலைக்கழக உதவிப் பணம் பெற்று நேராகப் படிக்க வந்தவள். ஆகவே, அவளுடைய உச்சரி

 

குவளைக் கண்ணன் கவிதைகள் இரா. சின்னசாமி கவிதைகள் சக்தி ஜோதி கவிதைகள்

இலக்கியம்: சிறுகதை
 

அடிகுழாயின் கைப்பிடிமேல் அமர்ந்து அரைக் கண்ணை மட்டும் மூடி நின்று ஒண்ணு, ரெண்டு, நாலு, ஏழு என இளங்கோ எண்ணிக் கொண்டிருந்தபோதே, எளிதில் அகப்பட்டுவிடாத இருளான இடங்களை நோக்கிப் பாய்ந்துகொண்டிருந்தோம். எட்டு மணிக்கு மேல் அதில் தண்ணீர் வராது. அவனை “ஐஸ்” அடிப்பதற்கு வாகான இடத்தில் ஒளிந்த சமயத்தில் தூரத்தில் அப்பா பீடி எறிவதைப் போலவே ஒருவர் எறிவதைப் பார்த்தேன். பகீரென்றது. அது அவரல்ல என உணர்ந்து சமனப்பட்டபோது நடுத் தெருவிற்கு அம்மா வந்து நின்று ஓங்கிய குரலில்,“சேகரூ... ரூ... டேய்... கல்லெண்ணய வாங்கீட்டு விசுக்குன்று ஒடியா... வூட்ல வேல நெறயக் கிடக்கு” என்றாள். தண்ணீரில்லாத தொட்டியிலிருந்து மெல்லக் கண்களை மட்டும் உயர்த்தியதில் அம்மாவின் பின்னால் முந

பத்தி: வேறுவேறு
பெருமாள்முருகன்  

பள்ளிகளுக்கு விளம்பரப் பருவம் இது. செய்தித்தாள்களின் பக்கங்கள் தனியார் பள்ளி விளம்பரங்களால் நிறைந்து வழிகின்றன. சில நாள்கள் சிறப்புப் பகுதி வெளியிட்டு விளம்பரங்களுக்கு இடம் ஒதுக்க வேண்டிய கட்டாயம் அவற்றிற்கு நேர்கின்றன. பெரும்பாலான விளம்பர வாசகங்கள் பொய் சொல்பவை. சாதாரணப் பொய், பெரும்பொய், மாபெரும்பொய் என்று அதிலும் பல வகைகள் உண்டு. விளம்பர வாசகங்கள் மனிதர்களை நுகர்வோராக மாற்றி அவர்களை மந்தைகளாகக் கருதி அவர்களின் மனோபாவங்களைக் குறிவைத்து வடிவமைக்கப்படுபவை. நுகர்வோர் மந்தையும் எதையும் தர்க்கரீதியாக யோசிப்பதில்லை. பள்ளிகளின் விளம்பரங்களில் இத்தகைய வாசகங்கள் பல உண்டு. எல்லாப் பள்ளிகளின் விளம்பரங்களிலும் ‘ஆண் பெண் இருபாலாருக்கும் தனித்தனி விடுதி வசதி உண்டு&rsq

கட்டுரை
 

ஒரு கலைஞனின் நேர்காணலும் சில ரசிகர்களும் காலச்சுவடு 80ஆம் இதழில் (ஆகஸ்ட் 2006) கர்நாடக இசைக் கலைஞர் சஞ்சய் சுப்ரமணியனின் நேர்காணல் வெளியாகியிருந்தது. பிரசன்னா ராமசாமி, யுவன் சந்திர சேகர், வி. ரமணி, வி. கே. ஸ்ரீராம் ஆகியோர் நேர்காணலை நடத்தியிருந்தனர். கர்நாடக இசைக் கலைஞர் ஒருவர் சம்பிரதாய மயக்கங்களிலிருந்து விடுபட்ட வெளிப்படையான குரலில் நடத்திய கலந்துரையாடலாக அது அமைந்திருந்தது. அதற்குக் காலச்சுவடு வாசகர்களின் எதிர்வினை என்னவாக இருந்தது எனத் தெரியவில்லை. அப்போது நான் திருவனந்தபுரம்வாசி. ஆனால் மலையாள இலக்கிய நண்பர்களிடையே சஞ்சயின் நேர்காணல் வியப்பை ஏற்படுத்தியது. இசை ஆர்வமுள்ள நண்பர்களிடம் நேர்காணலை வாசித்துக் கேட்கச் செய்தேன். சிறுகதையாளரான உண்ணி ஆர், கவிஞரும் தீவிர இசை ரச

கட்டுரை
அநாமதேயன்  

யாழ்ப்பாணம் 20.03.2009 இத்துடன் யாழ்ப்பாணக் குறிப்பேடு எனும் யாழ்ப்பாணத்தின் தற்போதைய நிலைமைகளைப் பிரதிபலிக்கும் விடயங்களை உள்ளடக்கிய பகுதியை அனுப்பிவைக்கிறேன். எனது சொந்தப் பெயரைப் பாதுகாப்பு நோக்கங்கருதிக் குறிப்பிடவில்லை. இங்கிருந்து அனுப்பப்படும் தபால்கள் கிழித்து வாசித்த பின்னரே அனுப்பப்படுவதாகவும் தகவல்கள் வெளியாகின்றன. சிலவேளை இப்பிரதி உங்களுக்குக் கிடைக்காமலும் போகலாம். தற்செயலாகக் கிடைத்தால் காலச்சுவட்டில் பிரசுரிப்பீர்கள் என நம்புகிறேன். பிரசுரிப்பதும் பிரசுரிக்காமல் விடுவதும் உங்களைப் பொறுத்தது. பிரபாகரனின் படம் முகப்பில் வெளியான ‘ஆனந்த விகட’னை விற்பனைசெய்தமைக்காக பூபாலசிங்கம் புத்தகசாலை உரிமையாளர் ஸ்ரீதரசிங் கைதுசெய்யப்பட்டுச் சிறையிலடைக்கப்பட்ட

பத்தி: இங்கிலாந்து மறு பார்வை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

சமகால ஈழப் பிரச்சினையைப் பற்றி எழுதும்போது 19ஆம் நூற்றாண்டு காலனிய இலங்கையில் நடந்த ஒரு சம்பவம் இடைமறிக்கிறது. கண்டியின் கடைசி அரசனான சிரி இராஜசிங்கன் தனக்கு இணக்கமானவர்களால் காட்டிக்கொடுக்கப்பட்டு ஆட்சியை இழக்கிறான். அதிகாரம் தங்கள் கையில் வரும் என்று எதிர்பார்த்த சிங்கள மேட்டுக்குடியினருக்கு ஏமாற்றமாகவே இருந்தது. ஆங்கிலேயர் கிரீடம் இழந்த மன்னனின் இடத்தைப் பிடித்துக் கொண்டது மட்டுமல்ல தங்களின் நிலைமையை உறுதிப்படுத்திக்கொள்ளத் தொடங்கினர். பொறுமை இழந்த சிங்கள அதிகாரிகள் ஆங்கிலேய காலனியவாதிகளுக்குச் சொன்னது: ‘அரசனை அகற்றிவிட்டீர்கள். நீங்கள் இனி எங்களுக்குத் தேவை இல்லை. ஆகையால் நீங்கள் இனி இங்கிருந்து போய்விடுங்கள்.’ பழைய ஏகாதிபத்தியத்துக்கு உள்நாட்டவர்கள்

நேர்காணல்: பிரான்சிஸ் ஜெயபதி சே. ச
 

பிரான்சிஸ் ஜெயபதி (1948) தத்துவவியல், இறையியல் படிப்பின் ஊடாக மானுடவியலில் ஈடுபாடு கொண்டு தில்லிப் பல்கலைக்கழகத்திலும் இலண்டன் ஸ்கூல் ஆப் எகனாமிக்ஸிலும் மானுடவியலை முறையாகப் பயின்றவர். “காணிக்காரர் சமூகம்” பற்றிய ஆய்வுகளும் மானுடவியல் அறிஞர் கிரிஸ் புல்லர் மேற்பார்வையில் “கன்னியாகுமரி கடற்கரை மக்கள்” குறித்து இவர் மேற்கொண்ட ஆய்வுகளும் குறிப்பிடத்தக்கவை. சென்னை லயோலா கல்லூரி கல்ச்சர் அண்ட் கம்யுனிகேசன், பாளையங்கோட்டைத் தூய சவேரியார் கல்லூரி நாட்டார் வழக்காற்றியல் துறை ஆகியவை ஜெயபதியால் முன்னெடுக்கப்பட்டுத் தமிழ்க் கல்விப்புலத்திலும் பண்பாட்டுச் செயல்பாடுகளிலும் முறையான அறிவையும் அக்கறையையும் உருவாக்கியவை. சுனாமிக்குப் பிந்தைய பணிக்களத்தில் சேசுசபை

 

எதிர்வினை: புனித ஆத்மாக்களின் துரோகம் எதிர்வினை: கல்வித் துறையின் இன்றைய தேவை நடுநிலையான ஆய்வு எதிர்வினை: மார்ச் 2009 இதழில் க. திருநாவுக்கரசு எழுதிய ‘சார்பற்றவரல்ல அறிஞர் அண்ணா’ கட்டுரைமீதான எதிர்வினை

திறந்தவெளி
பா. செயப்பிரகாசம்  

தேசப் பாதுகாப்புச் சட்டத்தில் கைதுசெய்தவர்களை விடுதலை செய், ஈழத் தமிழர்மீதான போரை நிறுத்து என்பன போன்ற கோரிக்கைகளை முன்வைத்துத் திருச்செந்தூரிலிருந்து தொடர் வண்டியில் புறப்பட்ட 75 மாணவர்கள் 6.4.2009 அன்று காலை சென்னை எழும்பூர் ரயில்நிலையம் வந்தடைந்தனர். ஒவ்வொரு நிலையத்திலும் இறங்கி முழக்கமிட்ட அவர்களை, பலரும் வரவேற்று உற்சாகப்படுத்தி அனுப்பினர். எழும்பூர் வந்தபோது மாணவர்களை வரவேற்க மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வந்திருந்தார். ஈழத்தில் இனப்படுகொலை உச்சத்தில் நடந்துகொண்டிருக்கிற வேளையில், தமிழ்த் தேசிய அரசியல் கட்சிகள் தேர்தல் கூட்டணிகளுக்குள் முடங்கிவிட்டதை மாணவர்கள் வெறுத்தனர்.“வைகோவைக் கேட்கிறோம் கூட்டணியைவிட்டு வெளியேறுங்கள்; திருமாவளவனைக் கேட்கிறோம் கூட்ட

அஞ்சலி: சி. மணி (3.10.1936 - 5.4.2009)
ந. முத்துசாமி  

‘நாடகவெளி’ என்பதை வெளி. ரங்கராஜன் பிரபலப்படுத்தியிருக்கிறார். நாடகவெளியைப் பற்றி மட்டுமல்ல வெளி, இடம் என்பதற்கு வாழ்க்கையைச் செம்மைப்படுத்தும் குணம் இருப்பதை எனக்கு அறிமுகப்படுத்தியவர் சி. மணி. இவ்விதமாக அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக அவர் அறிமுகப்படுத்தியதாக எனக்குத் தோன்றவில்லை. சில மனிதர்களையும் சில புத்தகங்களையும் அறிமுகப்படுத்தியபோதும் இது நேர்ந்தது. நடிப்பிடத்தை நான் நன்றாகப் புரிந்துகொண்டேன். நடிகனை உத்வேகப்படுத்தும் குணம் அதற்கு இருப்பது எனக்குத் தெரிய வந்தது. அப்புறம் பலவாறாக இதை நான் விரிவுபடுத்திக்கொண்டேன்.இடத்திலும் காலத்திலும் அறிவு பயணப்பட்டுக் கொண்டிருக்கிறதென்றும் அது பக்குவமானவர்களை அடைந்து அறிவுறுத்திவிட்டு மீண்டும் பயணப்பட்டுப் போய்க்

 

பதிவு: மீண்டும் காகங்கள், 7.3.2009, நாகர்கோவில் - வரலாறாகும் ஆவணங்கள் பதிவு: இருளர்களின் திருவிழா

பதிவு: மீண்டும் காகங்கள், 7.3.2009, நாகர்கோவில்
மா. சுப்பிரமணியம்  

சங்க இலக்கியம், தமிழர் வரலாறு, பண்பாடு, அரசியல் எனப் பல துறைகளை உள்ளடக்கியது தமிழியல் ஆய்வு. சமஸ்கிருதம் கற்ற சர். வில்லியம் ஜோன்ஸ் அதன் சிறப்புகளை உலகுக்குக் காட்டத் தொடங்கிய வேளையில் இண்டாலஜி, ஓரியண்டலிஸம் என இந்தியா குறித்த விழிப்புணர்வு அறிஞர்கள் மத்தியில் எழுந்தது. அதன் தொடர்ச்சியாக 19ஆம் நூற்றாண்டில் கால்டுவெல் போன்ற வெளிநாட்டவர்கள் தமிழ் குறித்த முறையான ஆய்வுகளை மேற்கொண்டனர். அதன் பிறகு தமிழியல் ஆய்வு தனித்துறையாக ஆய்வாளர்களின் அங்கீகாரம் பெற்று இன்று புதிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தமிழியல் ஆய்வுக்குத் தேவைப்படும் தமிழ், ஆங்கில நூல்களைச் சேகரித்து ஆய்வுக்கு உதவும் பணியை நோக்கமாகக் கொண்டது ரோஜா முத்தையா நூலகம் எனத் தன் உரையைத் தொடங்கினார் அதன் இய

நிகழ்வு
 

மனித வாழ்வு இருப்பின் ஸ்திரமற்ற தன்மைகளோடு துயருற்றுக்கொண்டிருக்கையில் அரசும் நாடும் செய்துவிட ஏதும் இருக்கக்கூடும் என்னும் நம்பிக்கை தொலைந்து வெகுகாலம் ஆனபோதும் எஞ்சிக்கிடக்கும் குறைந்தபட்ச நம்பிக்கை, ஆயிரக்கணக்கில் இறந்தும் சிதைந்ததும் உறவுகள் தொலைத்தும் உதிரத்தோடு நிச்சயிக்கப்பட்டுவிட்ட வாழ்க்கையிலிருந்து விடுபடச் செய்யும் சொற்கள் பிறக்கும் கணத்தை எதிர்நோக்கிக் கையேந்தச் செய்திருக்கிறது ஈழத் தமிழ்ச் சமூகத்தை. சமூக விழுமியங்களும் தார்மீக அறங்களும் பொருளற்றுப்போன இத்தருணத்தில் ஒரு தனிமனிதனின் இருத்தல் இழப்புகளன்றி வாய்க்கக் கூடுமெனில் அது அவனது நற்பேறே அன்றி இச்சமூக நல்அடையாளத்தின் வெளிப்பாடல்ல. மாபெரும் மனிதச் சங்கிலி, உண்ணாவிரதங்கள், வேலை நிறுத்தங்கள், மாணவர்

பதிவு
ஓவியர் கு. கலைச்செல்வன்  

ஒவ்வோர் ஆண்டும் தமிழகத்தின் பல பகுதிகளில் வாழும் இருளர்கள் மாசி மகத்திற்கு முன் மூன்று நாட்கள் மாமல்லபுரக் கடற்கரையில் கூடித் தங்கள் குலதெய்வத்தை கன்னியம்மா பூசை மூலம் வணங்குகிறார்கள். காடும் காடு சார்ந்த இடங்களையும் வாழ்விடமாகக் கொண்ட இருளர், கடலுக்குள் இருக்கும் கன்னியம்மனை வணங்குவது அவர்களைப் பற்றிச் சொல்லும் கதையின்படி தங்கள் முன்னோர் மாமல்லபுரப் பகுதியில் சந்தித்த கடற்கோளின் பாதிப்பாகவும் இருக்கலாம். கன்னியம்மாவை ஆயம்மா என்றும் சிலர் கூறுகிறார்கள். ஆழி என்பதுகூட ஆயி எனத் திரிந்து ஆயம்மாவாக ஆகியிருக்கலாம். கன்னியம்மாவின் தங்கைகள் எனக் கூறும் தெய்வங்கள் தாழ்த்தப்பட்டவர்கள் வணங்கும் மாரி, செல்லி, நீலி என்னும் தெய்வங்களாக இருப்பது இருளர்களுக்கும் தாழ்த்தப்பட்டவர்களுக்

மதிப்புரை
மு. புஷ்பராஜன்  

எழுதுவினைஞனின் டயறி (சிறுகதைத் தொகுப்பு) த. ஆனந்தமயில் பக். : 61 விலை: ரூ. 150 முதற்பதிப்பு: 2008 வெளியீடு வர்ணா பதிப்பகம் பொலிகண்டி கிழக்கு வல்வெட்டித்துறை, ஸ்ரீலங்கா வாழ்வாதாரங்களை இழந்தவர்கள் பற்றிய கதைகள்தாம் ஆனந்தமயிலின் சிறுகதைகள். பிள்ளைகளின் நல் வாழ்விற்காக, உழைத்து உழைத்து, நொந்து நொடிந்துபோன தாய்மார், வறுமையால் கல்விக் கனவைத் துறந்து, குடும்பப் பொறுப்பை ஏற்போர், உத்தியோக வருமானத்தின் மூலம் குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமலும் தமது காதலை முன்னெடுக்க முடியாமலும் அவதியுறுவோர், மார்க்சியக் கனவுகளைச் சுமந்து உலாவரும் இளையோர், தமிழீழப் போராட்டம் சார்ந்து உயிர் வாழும் உத்தரவாதம் அற்று, மரண தேவதையின் கரிய சிறகுகள் நிழல் கொள்கையில் உயி

மதிப்புரை
செல்லப்பா  

சென்னைக்கு வந்தேன் தொகுப்பாசிரியர் பழ. அதியமான் பக். : 136 விலை: ரூ. 95 முதற்பதிப்பு: ஆகஸ்ட் 2008 வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001 தொலைபேசி: 04652-278525/159 பிழைப்பின் நிமித்தம் சென்னையில் வாழ்ந்த எழுத்தாளர்களின் மனங்களில் அவர்கள் வாழ்ந்த, அவர்களைத் தன்னோடு இணைத்துக்கொண்ட நகரம் ஏற்படுத்திய நேர்மறை, எதிர்மறை பாதிப்புகளைப் பகிர்ந்துகொண்ட கட்டுரைகளின் தொகுப்பு சென்னைக்கு வந்தேன். கடந்த காலச் சென்னையைக் கண்முன் காட்டி நிகழ்காலச் சென்னையைப் புரிந்துகொள்ள உதவுவது இந்நூல் எனக் குறிப்பிடப்பட்டிருந்தாலும், பழ. அதியமான் “இந்தக் கட்டுரைகளை எழுதிய படைப்பாளர்கள் காட்டும் சென்னை அநேகமாகப் பத்திரிகையாளர், எழுத்தாளர்களுடையதாக

விவாதம்
கண்ணன்  

பல விஷயங்களில் நாம் ஒரு உறுதியான நிலைப்பாட்டை எடுத்துவிட்டாலும் மனத்தின் ஏதோ ஒரு மூலையில் சிறிய உறுத்தல் ஒன்று - செருப்பிற்குள் மாட்டிக்கொள்ளும் மண்துகள்போல - இருந்துகொண்டிருக்கும். சு.ரா. நாட்டுடமையாக்கத்தை மறுத்த பின்னர், சில நல்லெண்ணம் கொண்ட நண்பர்கள் அரச கௌரவத்தை மறுக்க வேண்டுமா என வினவியபோது, மனத்தில் ஏற்பட்டிருந்த தெளிவில் சில சலனங்கள். அப்போதுதான் அ. மார்க்ஸ் அரசுக்கு ஆதரவாகக் (ஜூ.வி., பிப். 25, 2009) கருத்து கூறியிருக்கும் செய்தி கிடைத்தது. உறுத்தல் மறைந்தது. அ. மார்க்ஸ் ஆதரிக்கிறார் என்றால் நடைபெற்றது காலச்சுவடுக்கு எதிரான ஒரு சதிமுயற்சி என்பதில் சந்தேகமே இல்லை - பெரும்பான்மையான சதி முயற்சிகளைப் போல இதுவும் சதியை உருட்டியவர்களுக்கு எதிராகத் திரும்பிவிட்ட

தலையங்கம்
 

தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைமையில் கடந்த முப்பதாண்டுகளாக நடைபெற்றுவரும் ஈழ விடுதலைப் போர் ஒரு மோசமான கட்டத்தை எட்டியிருக்கிறது. வன்னிப் பகுதியில் பத்து சதுரக் கிலோ மீட்டர் பரப்பில் சிக்கித் தவிக்கும் விடுதலைப் புலிகளையும் இரண்டு லட்சத்திற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்களையும் ராஜபக்சேயின் தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசு ஈவிரக்கமில்லாமல் கொன்று குவித்து வருகிறது. தாக்குதல் பகுதியிலிருந்து வெளியேற்றப்பட்டு ராணுவத்தால் அமைக்கப்பட்டுள்ள ‘பாதுகாப்பு’ முகாம்களில் அடைத்துவைக்கப்பட்டிருக்கும் அப்பாவித் தமிழர்கள் சொல்லொணாச் சித்திரவதைகளுக்குள்ளாகியிருப்பதாக ராணுவத் தணிக்கையையும் மீறி அங்கிருந்து வந்துகொண்டிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ‘மனதைக் கல்லாக

கண்ணோட்டம்
ராஜமார்த்தாண்டன்  

எம்.எஸ்.சார் என இலக்கிய அன்பர்களால் மரியாதையுடனும் நட்புணர்வுடனும் அழைக்கப்படும் எம். சிவசுப்பிரமணியன் அவர்களுக்கு எண்பது வயதாகிறது. வயதுதான் எண்பதே தவிர, இப்போதும் ஓர் இளைஞனைப் போலச் சுறுசுறுப்புடன் செயலாற்றும் அதிசய மனிதர் அவர். உரத்துப் பேச அறியாதவர். எல்லோருடனும் நட்புணர்வோடு பழகக்கூடியவர். மாற்றுக் கருத்துகளையும் புன்முறுவலுடன் மென்மையான குரலில் வெளிப்படுத்துகிறவர். வனமாலிகையின் சதங்கை இதழின் தொடக்க காலத்திலிருந்தே அதற்குச் சகலவிதங்களிலும் பங்களிப்புச் செய்தவர். சுந்தர ராமசாமியுடனான எம்.எஸ்.ஸின் நட்பு ஐம்பதாண்டுகளுக்கும் மேலாக எந்தவொரு நெருடலும் இல்லாமல் தொடர்ந்தது. சுந்தர ராமசாமியின் படைப்புகளைக் கையெழுத்துப் பிரதியிலேயே படித்து, தேவையான ஆலோசனைகள் வழங்கியவர்.

 

தலித் அரசியலின் வெளிப்பாடு வீச்சாகப் புறப்பட்டு அதிகாரத்தில் உள்ளவர்களின் வீட்டில் அகல் விளக்குகளாய் மாறிப்போய்விட்ட அதிர்ச்சியை தலித் மக்கள் கண்டு வருகிறார்கள். தமிழகத்தில் சாதிய சமூக அடுக்குகளில் சிக்கி மனித உரிமைகளை இழந்து அன்றாடம் பல இழிவுகளைச் சந்தித்துவரும் தலித் மக்களின் விடுதலைக்காகவே கருக்கொண்டது எங்கள் அமைப்பு எனப் புறப்பட்ட விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம் போன்ற அமைப்பினர் மேற்கண்ட கொடுமைகளை ஒழிப்பதற்கு மனசாட்சியுடன் செயல்படாத, அவை தொடர உதவிவருகிற திமுக, அதிமுக கட்சிகளுடன் நெருக்கமாக உலாவருவதற்குத் தயங்கிடவே இல்லை. தலித் மக்கள் திரளின் சக்தியால் இவர்கள்மீது மீடியாக்களின் வெளிச்சம்பட்டுத் தலைவர்கள் எனும் அந்தஸ்தைப் பெற்றதும் அரசியல் போதை தந்த மயக்கத்தில்

உள்ளடக்கம்