கண்ணன்  

பாராளுமன்றத் தேர்தலின் தமிழக முடிவுகள் பொதுவாகத் தமிழக அறிவாளி வர்க்கத்திடமும் உலகத் தமிழர்களிடமும் அதிர்ச்சியையும் கோபத்தையும் ஏமாற்றத்தையும் கசப்பையும் ஏற்படுத்தியுள்ளன. ‘மக்கள் புத்திசாலிகள். தெளிவாக வாக்குப் போடுபவர்கள்’ என்பன போன்ற பழம் ஜனநாயகக் கதைகள் மூலம் இந்த முடிவுகளைப் புரிந்துகொள்ள முடியும் என்று தோன்றவில்லை. இம்முடிவுகளை உதிரியாகப் பல செய்திகளாகவும் சிந்தனைகளாகவும் முன்வைத்து அவற்றிலிருந்து ஒரு சித்திரம் உருவாகிறதா எனப் பார்க்கலாம். பெரும்பான்மையான அறிவுஜீவிகளின் ஏமாற்றத்திற்குக் காரணம் தமிழகம் / இந்தியா சார்ந்த காரணிகள் அல்ல. ஈழப் பிரச்சனையில் கருணாநிதியின் துரோகத்திற்கு உரிய தண்டனையை மக்கள் வழங்கவில்லை என்பதே. ஈழப் பிரச்சனை தமிழக மக்களைப்

 

தேர்தலில் வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் முக்கிய சக்தியாகப் பணமே இருக்க முடியும் என்பதை இந்த நாடாளுமன்றத் தேர்தலும் நிறுவியிருக்கிறது. தமிழகத்தைப் பொறுத்தவரை கடைசி நான்கு நாட்களில் பல தொகுதிகளிலும் விநியோகிக்கப்பட்ட பணத்தால் தேர்தல் முடிவே மாறிவிட்டது. ஆளுங்கட்சிக்கு ‘எதிரி’களாகக் கருதப்பட்டவர்களைத் தோற்கடிக்க அது எவ்வளவு பணத்தையும் செலவழிக்கத் தயாராய் இருந்தது. இக்காரணங்களால் தேர்தல் குறித்து மதிப்பிடும் பலரும் பணத்தின் பங்கு பற்றியே அதிகம் பேசுகின்றனர். பிற காரணிகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதில்லை. குறிப்பாகச் சாதி. அதன் பங்கு குறித்துப் பேசினால் பலரும் ஆர்வங்காட்டாமல் போகக்கூடும். ஏனெனில் கண்ணுக்குப் புலப்படும்படியான சாதிக் கலவரங்களோ சாதி அடையாளங்களி

கட்டுரை
 

1950களில் மத்தியிலும் மாநிலத்திலும் பேராயக் கட்சி (காங்கிரஸ்) ஆட்சியிலிருந்த காலம். தமிழகத்தைச் சேர்ந்த ஓ. வி. அழகேசன் அப்போது நடுவணரசில் ரயில்வே அமைச்சர். திருச்சி மாவட்டம் அரியலூர் அருகே மழைவெள்ளம் பெருகி, பாலம் உடைந்து ரயில் கவிழ்ந்து 20, 30 பேர்வரை பலியானார்கள். அப்பொழுது வளர்பருவத்திலிருந்த திமுக, சுவரொட்டி ஒன்றை வெளியிட்டது. “அரியலூர் அழகேசா ஆண்டது போதாதா? மக்கள் மாண்டது போதாதா?” என்னும் வாசகங்களுடன் வெளியிடப்பட்ட அந்தச் சுவரொட்டி பரவலான கவனத்தைப் பெற்றது. அதேபோல் 1960களின் தொடக்கத்தில் நடைபெற்ற சென்னைத் துறைமுகத் தொழிலாளர்களின் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு நடந்து ஒரு தொழிலாளி மரணமடைந்தார். 1962இல் சட்டப் பேரவைத் தேர்தலின்போது அந்தச் சம்

கட்டுரை
 

பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா இல்லையா என்னும் கேள்வியை யாரிடம் கேட்கிறீர்கள் என்பதைப் பொறுத்து உங்களுக்குக் கிடைக்கும் பதில்கள் வேறுபடும். பிரபாகரன் என்னும் பெயர் உலக அளவில் பரவியுள்ள தமிழ் மக்களிடமும் இந்து சமுத்திரப் பிராந்தியத்திலும் ஏன் சர்வதேசத்திலும் உருவாக்கி வைத்திருக்கும் பிம்பம் அவரவர் கொண்ட அரசியலின் பாற்பட்டது. அந்த அரசியல் பார்வைதான் நீங்கள் கேட்ட கேள்விக்கு ஆம் என்னும் பதிலையும் இல்லை என்னும் பதிலையும் இப்போதைக்குத் தந்துகொண்டிருக்கின்றது. ஆம் எனச் சொல்பவர்கள் முன்வைக்கும் காரணங்கள் குறித்துக் கேள்விகள் எழுப்பப்படுவது போல இல்லை என்று சொல்பவர்கள் முன்வைக்கும் தரவுகள், விளக்கங்கள் குறித்தும் கேள்விகள் எழுப்பப்படுகின்றன. பிரபாகரன் இன்னமும் உயிருடன் இருக்

கட்டுரை
நாகார்ஜுனன்  

கடந்த எட்டு மாதகாலமாக நம்மைச் சூழ்ந்துவந்த அச்சம் நிஜமாகும் பயங்கரச் சூழலை, நெருக்கடியை இன்று சந்திக்கிறோம். தெற்காசியப் பிராந்தியத்தின் அண்மை வரலாற்றில் மிகப்பெரும் மனித-இனப்படுகொலையை நடத்தியிருப்பது இலங்கை அரசு, மொத்த மனித இனமும் நின்று காணக்காண, இந்தப் பாதகச்செயலை நடத்தியிருக்கிறது இலங்கை அரசு. நடந்தவற்றைப் பார்க்கும்போது தமிழ் மக்கள் மற்றும் விடுதலைப்புலிகள் சார்பில் பதினைந்தாயிரம் பேர்வரை பலியாகியிருக்கலாம் என்றும் பதினைந்தாயிரம் பேர்வரை காயம், படுகாயம் அடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. தவிர, ஆறாயிரம் இலங்கைப் படையினர்வரை பலியாகியிருக்கலாம், காயமடைந்திருக்கலாம் என்றும் தெரிகிறது. இந்தப் போரை நேரில் கண்ட சாட்சிகள், அதில் சொல்லொணாத் துன்பத்தை எதிர்கொண்ட வன்னி

 

ஆணொருபாகினி மதனப்பள்ளி. தெருவில் அனல் உதிரும் பகலாக இருந்தது அப்போது. வட்டமிட்டிருந்தார்கள் அவர்கள். ஆண். பெண். குழந்தைகள். வட்டத்துக்குள்ளிருந்தாள் அவள். விநோத ரூபிணி. வீதி நர்த்தகி. அபூரணி. இரக்கத்துக்குரியவள். வட்டத்தின் உள் விளிம்பில் அவன். விநோதரூபன். வீதி இசைஞன். பூரணன். அவளின் தோழன். வட்டத்தைக் கடந்து ஒலிக்கிறது இசை. டோலக். திமிரி. யாசகக் குரல். வாரிப் பின்னிப் பூச்சொருகிய சிரம். இறைஞ்சும் கடல் விழிகள். கைகள் குன்றிய முடத் தோள்கள். ஆடையின் இருளுக்குள் இறுகிய மார்புகள். sஒசியும் இடை. வளர்ச்சி முடங்கிய குறுந்தொடைக் கால்கள். வட்டத்தைத் தாண்டி முழங்குகிறது டோலக். கலைஞனின் மூச்சில் யாசிக்கிறது திமிரி. வட்டத்துக்குள் குட்டைப் பாதங்கள் சுழல ஆடுகிறா

சிறுகதை
குலசேகரன்  

அவன் சுற்றுலாப் பயணங்களின் போதுதான் கண்ணெட்டும் தூரம்வரை விரிந்திருக்கும் பெரும் கடலைக் கண்டிருக்கிறான். ஆளற்ற கடற்கரையில் ஒருமுறை நண்பர்களோடு அலைகளில் புரண்டு திளைத்திருக்கிறான். அவன் வசிக்கும் சிறு நகரம் கடலிலிருந்து நூற்றுக்கணக்கான மைல்கள் தள்ளி உள்ளே ஒளிந்திருக்கிறது. அங்கு வாழ்பவர்களுக்கும் கடலுக்கும் இதுவரையிலும் எந்தத் தொடர்பும் இல்லை. விடுமுறை நாளான அன்று மாலையில் தெருவில் விளையாடிக்கொண்டிருந்த பையன் ஆச்சரியத்தில் கூவினான். அச்சிறுவனுக்கு ஒன்றும் புரியவில்லை. வீட்டிலிருந்து ஓடிவந்த மற்றவர்களுக்கும் முதலில் என்னவென்று தெரிந்திருக்க வில்லை. தொலைக்காட்சியிலும் வானொலியிலும் முன்கூட்டிய எச்சரிக்கையோ அறிவிப்போ ஏதும் வெளியாகியிருக்கவில்லை. அவனது அரைத் தூக்கத்தில்

கட்டுரை
சு.கி. ஜெயகரன்  

நம்நாட்டில் அண்மையில் ஏற்பட்டுள்ள அரசியல் சித்தாந்த இழுபறிப் போராட்டத்தில் ஒரு முக்கியமான சொல்லாடல் சரஸ்வதி நதி பற்றியது. இந்த ஆறு, அதன் கரைகளில் வளர்ந்திருந்ததாகக் கருதப்படும் கலாச்சாரம் பற்றிய கட்டுரைகள், விவாதங்கள், கடந்த முப்பது ஆண்டுகளாகப் பல பத்திரிகைகளிலும் இணையதளங்களிலும் வெளியாகியுள்ளன. வேதங்களிலும் வட மொழி இலக்கியங்களிலும் குறிப்பிடப்படும் இந்த நதி, ஒரு காலத்தில் ஓடி இன்று மறைந்துவிட்டதாக நம்பப்படுகின்றது. சரஸ்வதி நதிக்கரையில் வளர்ந்ததாகக் கருதப்படும் நாகரிகமும் சிந்துச் சமவெளி நாகரிகமும் ஒன்றுதான் என்று நிறுவ எடுக்கப்படும் முயற்சியே இந்தச் சொல்லாடல். இது திராவிட-ஆரிய விவாதத்தின் ஒரு பரிமாணம். சிந்து, கங்கை, யமுனை ஆற்றுப்படுகைகள், சமவெளிகள், வடிகால் பகுதிகள்

கட்டுரை
வி. சுஜாதா  

டிசம்பர் 2008 காலச்சுவடு இதழில் வெளிவந்த லெவி ஸ்ட்றோஸ் பற்றிய கட்டுரை அவரது நூற்றாண்டைக் குறிப்பதாகவும் நயமானதாகவும் இருந்தது. என்றாலும் சிந்தனையாளர்களைத் தனிப்பட்ட ஒரு மேதாவியைப் போலச் சித்தரிக்காமல் அவரது கால, தேச, வரலாற்றுச் செய்திகளுடன் விமர்சனக் கண்ணோட்டத்தில் எழுதுவது ஆரோக்கியமானதாக இருக்கும். மானுடவியல், சமூகவியல், தத்துவயியல் போன்ற துறைகளுக்கு (disciplines) வரலாற்றுப் பின்னணி உள்ளது; இது சிந்தனையாளர்களின் கருத்தாக்கங்களைப் பெரிதும் வரையறுக்கிறது. எனவே, அவர்களது கருத்துகளை விவரிக்கும்பொழுது அவர்தம் துறையின் சமூகப் பின்னணி, அவர்தம் தேடல்களின் நோக்கம் அத்தேடல்களுக்கு அவர்கள் தரும் விளக்கம் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டால் ஆக்கபூர்வமான கேள்விகளை எழுப்பலாம். லெவி

பத்தி: வேறுவேறு
பெருமாள்முருகன்  

நாமக்கல் மாவட்டத்தின் முக்கிய ஊர்களாகிய நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு ஆகிய நகரங்களில் மே மாதத்தின் இறுதி முதல் ஜூன் மாதம் முடிய விடுதிகளில் இடம் கிடைக்காது. உணவகங்கள் பரபரப்பாகச் செயல்படும். நுகர்வுப் பொருள்களின் விற்பனை அதிகரிக்கும். அத்தோடு போக்குவரத்து நெரிசலும் மிகுதியாக இருக்கும். இவற்றுக்கு என்ன காரணம்? பத்தாம் வகுப்புத் தேர்வு முடிவுகள் வெளியாவதுதான். நாமக்கல் மாவட்டம் லாரி, லாரிப் பட்டறைகள், ஆழ்துளைக் கிணறு தோண்டும் ரிக் சர்வீஸ், விசைத்தறி, கோழிப்பண்ணை ஆகிய தொழில்களில் முன்னணி இடம்பெற்றிருப்பது பலரும் அறிந்ததுதான். கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகக் கல்வித் தொழிலிலும் இம்மாவட்டம் முன்னணி இடம் வகிக்கிறது. தனியார் பள்ளிகளின் வானளாவிய கட்டடங்கள் எண்திசைக

கட்டுரை
க. திருநாவுக்கரசு  

பொதுவாகவே 10, 100, 1000 என்ற எண்கள் கணக்கீடு செய்வதற்கு மிக எளிதாக இருப்பதாலோ என்னவோ மனிதர்களுக்கு மிகப் பிடித்தமான எண்களாக இருக்கின்றன. இந்தியாவில் மத்தியிலும் சரி மாநிலங்களிலும் சரி அரசியல்வாதிகளுக்குத் தங்கள் ஆட்சியின் நூறாவது நாளைக் கொண்டாடுவது ஒரு மரபாகவே ஆகிவிட்டது. மற்றபடி நூறு நாள் ஆட்சியை மதிப்பிடுவது என்பதில் தனிப்பட்ட முக்கியத்துவம் ஏதுமில்லை. நான்கு வருடங்களுக்கு ஆட்சிபுரியத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஒரு ஆட்சியை அதன் முதல் நூறு நாட்கள் செயல்பாட்டை வைத்து மதிப்பிடுவது மிகவும் அரைகுறையான மதிப்பீடாகவே இருக்கும். ஆனால் அந்த ஆட்சியின் போக்கு எப்படி இருக்கும் என்பதைக் கோடிட்டுக் காட்டுவதாக முதல் நூறு நாள் செயல்பாடுகள் இருக்கும் என்பதில் சந்தேகம் வேண்டாம். ஜனவரி 20

கட்டுரைத் தொடர்:
 

சுதந்திர இந்தியாவில் நிலச் சீர்திருத்தம் சரியாகவும் முழுமையாகவும் அமலாக்கப்படாதபோதும்கூட, சென்ற கட்டுரையில் நாம் கண்ட பல நல்ல திட்டங்களின் மூலம் நம் விவசாய நிலங்கள் வளமடைந்துவந்தன; விளைச்சலும் சீராகப் பெருகியது. அப்போது பசுமைப் புரட்சிக்கான அடித்தளத்தை அமைத்துக்கொண்டிருந்த உலக நிகழ்வுகள் என்ன? இரண்டாம் உலகப் போர் ஓய்ந்து, முதலாளித்துவ மற்றும் கம்யூனிச நாடுகளுக்கிடையே பனிப்போர் தொடங்கியிருந்தது. 1949இல் சீனாவைக் கம்யூனிசத்துக்கு இழந்த அதிர்ச்சியில், சோவியத் யூனியனிலிருந்து மற்ற ஆசிய மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்குக் கம்யூனிசம் பரவுவதைத் தடுத்து நிறுத்துவதையே தன் முக்கியக் குறிக்கோளாகக் கொண்டிருந்தது ஐக்கிய அமெரிக்கா. அதே சமயத்தில், மாபெரும் மந்த நிலையிலிருந

அஞ்சலி
சண்முகராஜா  

பிரேசிலிய நாடக இயக்குநரும் ஒடுக்கப்பட்டோர் அரங்கின் நிறுவனருமான அகஸ்தோ போவால் மூன்றாம் உலகத்தின் அரசியல், சமூகச் சூழலின் அடிப்படைகளை வைத்து நாடக வடிவத்தின் வரையறைகள், செயல்பாடுகளை ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதாக முன்னெடுத்தவர். பிரேசிலின் இரண்டாவது பெரிய நகரமான ரியோ டி ஜானிரோ (Rio de janeiro)வில் 1931 மார்ச் 16 ஆம் நாள் போவால் பிறந்தார். இவரது தாய் தந்தையர் போர்ச்சுகீசத்திலிருந்து புலம்பெயர்ந்து ரியோ நகரில் பேக்கரித் தொழில் செய்துவந்தனர். 1940களின் இறுதிப் பகுதியில் போவால் கொலம்பியாப் பல்கலைக்கழகத்தில் வேதியியலில் முனைவர் பட்டம் பெற்று ரியோவுக்குத் திரும்புகிறார். இளமைப் பருவத்திலிருந்து நாடக ஈடுபாட்டின் காரணமாக ரியோவுக்கு அருகேயுள்ள பிரேசிலின் மிகப் பெரிய நகரமான

மதிப்புரை
ஞானக்கூத்தன்  

நிசி அகவல் அய்யப்பமாதவன் பக். : 80 விலை: ரூ. 60 முதல் பதிப்பு: டிசம்பர் 2008 வெளியீடு: ஆழி பப்ளிஷர்ஸ் யுனைட்டட் இந்தியா காலனி கோடம்பாக்கம், சென்னை-24 தொலைபேசி: 044-4358 7585 நிசி அகவல் என்றால் நிசி கூப்பிடுகிறது என்பது பொருள். எதற்காகக் கூப்பிடுகிறது என்ன சொல்லக் கூப்பிடுகிறது என்பது நூலின் உள்ளடக்கம். நிசி அகவல் என்றால் நிசியின் பாடல் என்றும் பொருள்படும். நிசி அழைக்கிறது. நிசி பாடுகிறது. கலை என்றாலே ஒருவித அழைப்புதான். ஒருவர் பாடினால் தாங்கள் அழைக்கப்பட்டது போல மக்கள் கூடுகிறார்கள். கலை அழைத்தால் மக்கள் அங்கே கூட்டமாகப் போகிறார்கள். ஓவிய, நாடகக் கலைகளும் அப்படித்தான். எழுத்து முறை தோன்றுவதற்கு முன்பாகவே தமிழில் கவிதை தோன்றிவிட்டதால் அது ஒருவரைக் கூப்பிட்

பதிவுகள்: லண்டன், 20-22 ஏப்ரல், 2009
மு. புஷ்பராஜன்  

ஏர்ள்ஸ்கோட்டில், ‘லண்டன் புத்தகக் கண்காட்சி’ 20-22 ஏப்ரல் 2009 ஆகிய தினங்களில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. அன்று காலநிலையும் கை கொடுத்திருந்தது. மழையற்ற வானம். முதிரா வெயில். இக்கண்காட்சியில் ‘புதிய பார்வைகள் ஊடாக இந்தியா’ என்ற தலைப்பு விவாத்தில் முக்கியப் பங்காற்றியிருந்தது. இந்தியாவின் முக்கியப் படைப்பாளிகள், பதிப்பாளர்கள், அறிவியலாளர்கள் பத்திரிகையாளர்கள் எனப் பல்துறை சார்ந்தவர்கள் கலந்துகொள்வதாக இருந்ததனால், இவர்களைச் சந்திப்பதில், குறிப்பாகப் படைப்பாளிகளைச் சந்திப்பதிலேயே அதிக ஆர்வம் மேலோங்கியிருந்தது. நுழைவாயிலைத் தாண்டியவுடன், வலது பக்க அறையில் தேநீர் தயாரிப்பதற்கான ஒழுங்குகள் தென்பட்டதனால், தேநீர் அருந்தலாமென நுழைந்தோம். (நான், மு. நித

பதிவுகள்: அற்றைத் திங்கள், ஏப்ரல் 19, சேலம் தமிழ்ச் சங்கம்
அ. கார்த்திகேயன்  

கடந்த ஏப்ரல் 19, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்கம் இணைந்து நடத்திய ‘அற்றைத் திங்கள்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் பிரபஞ்சன் கலந்துகொண்டார். தன் தரமான படைப்புகளால் ஏராளமான விருதுகளையும் வாசகர்களையும் பெற்றிருக்கும் அவரை, சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க. வை. பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார். வாசகர்களைச் சந்திப்பதும் அவர்களோடு பேசுவதும் தன்னை வளர்த்தெடுத்துக்கொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது என்று தொடங்கிய பிரபஞ்சன், தன்னுடைய குடும்பச்சூழல் குறித்தும் சிறு பிராயத்து நிகழ்வுகள் பற்றியும் குறிப்பிட்டார். தன் தந்தையை முன்னுதாரணமாகக் கொண்டு வளர்ந்ததோடு தான் எழுத்தாளராய் மாறியதற்கும் அவரே காரணம் என்றார். அவருடைய தந்தை எதற்

பதிவுகள்: 24 மே, 2009, கனடா
வெங்கட்ரமணன்  

தமிழ் இலக்கியத்திற்கான வாழ்நாள் சாதனை விருதைக் கொண்டு 2001ஆம் ஆண்டு துவக்கப்பட்டு இப்பொழுது இயல் விருதுடன் புனைகதை, புனைவிலி, கவிதை மற்றும் தமிழ் தகவல் நுட்பத்திற்கான விருது என்று வளர்ந்திருக்கிறது. வாழ்நாள் சாதனைக்கான இயல் விருதைக் கனேடிய தமிழ் இலக்கியத் தோட்டம் வழங்குகிறது. தமிழ் இலக்கிய உலகின் முக்கியமான விருதுகளில் ஒன்றாக இயல் விருது கவனம் பெறத் துவங்கியிருக்கிறது. இவ்வாண்டின் விருது விழா ட்ரினிடி கல்லூரியின் சீலி அரங்கில் மே மாதம் 24ஆம் நாளன்று நடந்தது. நாற்பது வருடங்களுக்கு மேலாகத் தன் செயல்பாட்டை எழுத்துக்கும் சிறுகதைகளுக்கும் மட்டுமல்லாமல் இலக்கியத்துக்கு அப்பால் பெண்கள் வாழ்க்கையை வேறு வடிவங்களுக்கும் இட்டுச்சென்றதில் வெற்றிகண்ட அம்பைக்கு இந்த ஆண்டு விருது கிட

தலையங்கம்
 

விடுதலைப்புலிகளுக்கு எதிரான இறுதிக்கட்டப் போர் முடிவுக்கு வந்துவிட்டதாகவும் நாட்டை முழுமையாக மீட்டெடுத்துவிட்டதாகவும் மார்தட்டிக்கொள்ளும் ராஜபக்சே தலைமையிலான சிங்களப் பேரினவாத அரசின் அறிவிப்பைத் தொடர்ந்து இலங்கையில் கொண்டாட்டங்கள் தொடங்கியுள்ளன. தன் ஜோர்டான் பயணத்தைப் பாதியில் முடித்துக்கொண்டு அவசரஅவசரமாக இலங்கைக்குத் திரும்பிய அதிபர் ராஜபக்சே விமான நிலையத்தில் இறங்கியவுடன் சிவப்புக் கம்பளம் விரிக்கப்பட்ட கொழும்பு மண்ணை முத்தமிட்டு மக்களுக்கு அந்த வெற்றிச் செய்தியை அறிவித்தார். ராணுவத்தினருக்குப் பால் சோறு ஊட்டியும் வீடுகளில் இலங்கைத் தேசியக் கொடியை ஏற்றியும் இந்த வெற்றியைக் கொண்டாடிக்கொண்டிருக்கிறார்கள் ‘மக்கள்’. 1948இல் இலங்கை சுதந்திரமடைந்தபோது

 

நழுவிப்போன தமிழினத் தலைவர் பட்டத்தைத் திருமங்கலம் தேர்தல் பாணியைப் பின்பிற்றிக் கலைஞர் மீட்டெடுக்கப் போகிறார் என்றே மே 13 தமிழகத் தேர்தல் நிலவரம் காட்டுகிறது. மே 13 மாலை 5.30வரை 62 சதவிகிதமாக இருந்த வாக்குப் பதிவு, மறுநாள் 72 சதவிகிதமாகக் காணக் கிடைத்த மாயத்தின் பின்னணி என்ன? இந்த மாயத்தின் தொடர் விளைவுகளால் மன்மோகன் சிங் மீண்டும் நாற்காலியைப் பிடித்தால் முதல் வேலையாக ஈழத் தமிழர் மறுவாழ்வுக்காகப் பல கோடிகளைச் சிங்கள அரசுக்கு ஒதுக்குவார். அந்த நிதியைக் கொண்டு கடைசித் தமிழனையும் கடைத்தேற்றும் பணியை ராஜபக்சே சிரமேற்கொள்வார். காசுக்கு விற்ற ஓட்டுக்களும் போடாமல் விட்ட ஓட்டுக்களும் (மிறிலி கிரிக்கெட்டை விடவா தேர்தல் முக்கியம்?) ஈழத்தில் இனி நிகழப்போகும் அவலங்களுக்கான மறை

உள்ளடக்கம்