கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

கடந்த மே 30ஆம்தேதி நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் அருகிலுள்ள கீழ ஆம்பூர் கிராமத்தில் சுடலை (45), முத்துக்குமார் (27), கணேசன்(18) ஆகிய தலித்துகள் ஆதிக்கச் சாதியினரால் படுகொலை செய்யப்பட்டனர். ஏப்ரல் மாதம் 13ஆம்தேதி ஆழ்வார்குறிச்சியிலுள்ள பரமகல்யாணி சிவசைவநாதர் கோயில் திருவிழா நடந்தது. திருவிழாவிற்குச் சென்ற தலித் இளைஞர்களில் சிலர் தங்கள் குழுவிலிருந்த இளைஞர் ஒருவரைப் பெயர் சொல்லி அழைத்தனர். அதே பெயரைக் கொண்ட சாதி இந்து இளைஞர் ஒருவர் அவர்கள் தன்னையே அவ்வாறு பெயர்சொல்லி அழைப்பதாகக் கருதி ஆத்திரமடைந்து தன் சாதியைச் சேர்ந்தவர்களைத் திரட்டிக்கொண்டு போய் தலித் இளைஞர்களோடு மோதலில் ஈடுபட்டார். அதன் தொடர்ச்சியாக ஆயுதங்களோடு தலித் குடியிருப்புகளுக்குள் நுழைந்து தாக்குதலில்

கட்டுரை
அநாமதேயன்  

குறிப்பு ( 1 ) இந்தக் குறிப்பை நான் எழுதத் தொடங்கும்போது (11.05.2009) நேற்றிரவு வரை வன்னியிலுள்ள முள்ளிவாய்க்கால் பாதுகாப்பு வலயத்தை நோக்கி சரமாரியான எறிகணைத் தாக்குதல், விமானக்குண்டு வீச்சால் 1200 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்டிருப்பதாகவும் 1112 பேர்வரை படுகாயமடைந்திருப்பதாகவும் இவர்களை மீட்க முடியாதவாறு தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்தவன் ஒவ்வொருவனும் காலையில் தவிர்க்க முடியாமல் இத்தகைய செய்திகளைத்தான் வாசிக்கவோ கேட்கவோ வேண்டியிருக்கிறது. நாளிதழ்களின் முகப்புப்பக்கங்களைத் தாக்குதலுக்குள்ளாகி இறந்தவர்களது, படுகாயமடைந்தவர்களது புகைப்படங்களே நிரப்புகின்றன. ‘மனிதப் பேரவலம்’ என்று சொல்வதுகூட மிகச் சாதாரண

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

கேட்டுக் களைத்துப்போன வரி ஒன்றை உங்களுக்கு நினைவூட்டுகிறேன்: ‘நாட்டுப்பற்று கயவனின் கடைசிப் புகலிடம்’. இது புழக்கத்திலிருக்கும் பழைய வாசகம். சமகாலத்திற்குப் பொருத்தமான வசனம்: ‘பிரதிகள் அடிப்படைவாதிகளின் இறுதி அடைக்கலம்’. இன்றைய அடிப்படைவாதியின் ஆவேசமான குறும் புலப்பதிவுகளுக்குப் பின்னால் ஒரு புனிதப் பிரதி இருக்கிறது. கிறிஸ்தவர்களுக்கு வேதாகமம் முஸ்லிம்களுக்கு திருக்குரான். பொது உடைமைவாதிகளுக்கு மார்க்ஸின் ‘பொது உடைமையின் திட்டச் சாதனை’. இப்படியே சொல்லிக்கொண்டு போகலாம். சிங்களவர்களும் தங்களுக்கென ஒரு பிரதியை மீள்கண்டுபிடித்திருக்கிறார்கள். அது பௌத்தரின் போதனைகள் கொண்ட ‘தம்மபாதா’ அல்ல. சில உண்மைகளையும் கட்டுக் கதைகளையும

கட்டுரை
கவிதா  

இலங்கையில் நடந்து முடிந்த பெரும் போர் தமிழர் வாழ்வை மூடியிருந்தது. அங்கு அமைதியைப் போல ஒன்று தென்பட்டாலும், அது அமைதி இல்லை என்று மிக நிச்சயமாகச் சொல்ல முடியும். இது இலங்கைக்கு நான் மேற்கொண்ட இந்த இரண்டாம் பயணம். போருக்குப் பிந்தையது. கொண்டாட்டங்கள் இன்னும் முடிந்திருக்கவில்லை. சிங்கள தேசியக் கொடி பறக்காத வாகனத்தையோ கட்டடத்தையோ பார்ப்பது மிக அரிதாக இருந்தது. நவம்பரில் நான் சென்றபோது தமிழர்களிடமிருந்த நம்பிக்கையும் தைரியமும் இப்போது முற்றாக அழிந்துபோயிருந்தன. நண்பர்களாக அறியப்பட்டவர்களில் பலர் பேசவே மறுத்தார்கள். பல நண்பர்களைப் பார்க்கவே முடியவில்லை. பலரும் போர் முடியும் தருணத்தில் புலம்பெயர்ந்துவிட்டதாகச் சொன்னார்கள். “தமிழர்களுக்கும் ராஜபக்சே அதிபர் என்றா

அஞ்சலி
கண்ணன்  

ஒரு மரணம் சூழலில் எல்லோரையுமே பாதிக்கிறது. ஆனால் பாதிப்புகளின் தன்மை மனிதனுக்கு மனிதன் வேறுபடுகிறது. ராஜமார்த்தாண்டனின் மரணம் ஏற்படுத்திய பாதிப்புகள் பல தளத்திலானவை. என் இரண்டாவது மகன் முகுந்தனுக்கு மார்த்தாண்டன் எப்போதும் அளவற்ற பிரியத்தை வெளிப்படுத்தும் மாமா. பள்ளியில் தொலைந்துபோகும் பென்சில், ரப்பர் ஆகியவற்றைச் சத்தமில்லாமல் பதிலீடு செய்துவிடும் ரகசிய உறவும் உண்டு. சாரங்கனுக்குத் தமிழ் கற்பித்தல், வீட்டுத் தோட்டத்திலிருந்து அவனுக்குப் பிரியமான கொய்யாப்பழம் கொண்டு வருதல் - இருவர் முகங்களிலும் சு.ரா.வை அவர் பார்த்துக்கொண்டிருந்தார். ‘காலச்சுவ’டில் பணியாற்றுவோருக்கு ‘சாரின்’ இழப்பு அளப்பரியது. கோபமேபடாமல் பலவற்றையும் கற்றுத்தந்து வழிகாட்ட,

அஞ்சலி
ப. கிருஷ்ணசாமி  

எழுபதுகளின் முற்பகுதியில் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் சித்தூர் அரசினர் கலைக்கல்லூரியில் சேர்வதற்காகத் தமிழ்நாட்டின் எல்லையோரப் பகுதிகளிலிருந்து ஒரு பெரும் படை உள்ளே புகுந்தது. ஏதாவது ஒரு பிரிவில் இடம் கிடைக்கும் என்பதுதான் காரணம். இது கோடை முடிந்து கல்லூரிகள் திறக்கிற காலம். சித்தூர் கல்லூரியில் கார்காலக் குளிர்ச்சி சூழ்ந்திருக்கும். இப்படியொரு காலத்தில்தான் ஒரு கையில் சிகரெட்டோடும் மறு கையில் ஒரு இலக்கிய இதழோடும் அவரைப் பார்த்த நினைவு இருக்கிறது. இளங்கலைத் தமிழிலக்கியம் முதலாமாண்டில் நானும் முதுகலை முதலாமாண்டில் ராஜமார்த்தாண்டனும் சேர்ந்திருந்தோம். நான் பொள்ளாச்சி. அவர் கன்னியாகுமரி. திருவனந்தபுரத்திலிருந்து மாற்றலாகி வந்திருந்த பேராசிரியர் ஜேசுதாசன் தமிழ் இலக

அஞ்சலி
அ.கா. பெருமாள்  

ஜூன் ஆறாம் தேதி (2009) காலை 9.30 மணி இருக்கும்; ராஜமார்த்தாண்டன் அலைபேசியில் கூப்பிட்டார். ‘காலச்சுவடு’ அலுவலகத்திற்கு 11 மணிக்கு வரச்சொன்னார். ‘அகிலத்திரட்டு’ப் பதிப்பின் நூறு பக்கம் மெய்ப்புத் திருத்த வேண்டும்; நேரில் பேசலாம் என்றார். நான் சாவகாசமாய் 11 மணிக்கு மேல் போகலாம் என்றிருந்தேன். ஆனி மாதம் என்றாலும் சாரல் மழை நிற்காமல் பெய்துகொண்டிருந்தது. மழைவெறித்தபின் போகலாம் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது கண்ணன் அழைத்தான். ராஜமார்த்தாண்டனின் விபத்துப் பற்றிச் சுருக்கமாகச் சொன்னான். அப்போது மணி 11. நான் பத்து நிமிடங்களில் நாகர்கோவில் கோட்டார் பார்வதிபுரம் சாலையில் உள்ள ஜவஹர் ஆஸ்பத்திரிக்குப் போனேன். கண்ணனும் மைதிலியும் நின்றுகொண்டிருந்தார்கள

அஞ்சலி
சுரேஷ்குமார இந்திரஜித்  

புனைபெயரோ என நினைக்கத் தோன்றும் இயற்பெயரைக் கொண்ட ராஜமார்த்தாண்டனை, கொல்லிப்பாவை ஆசிரியராக நான் அறிந்திருந்தேன். கொல்லிப்பாவை, பிரமிளுக்கு முக்கியத்துவம் கொடுத்த பத்திரிகை. இலக்கியக் கூட்டங்களில் நான் எப்போதேனும் காண நேர்ந்தபோது புகைமண்டலங்களுக்கிடையே இருந்தவரான காட்சியே எனக்கு நினைவிற்கு வருகிறது. மதுரைக்கு, தினமணி உதவி ஆசிரியராகப் பணியில் சேர்ந்தபோது, நான் குடியிருந்த தெருவிலேயே அவரும் வீடு பார்த்துக் குடிவந்த பின்னால் எனக்கும் அவருக்கும் நெருக்கம் கூடியது. மதுரையில் ஒவ்வொரு மாதமும் இலக்கியக் கூட்டம் நடத்த வேண்டும் என்ற எண்ணம் எங்களுக்கு ஏற்பட்டது. ‘சந்திப்பு’ என்னும் பெயரில் ஒவ்வொரு மாதமும் இரண்டாம் ஞாயிற்றுக்கிழமை காலையில் கூட்டம் நடத்துவது என்று

அஞ்சலி
சுகுமாரன்  

நண்பர் யூமா வாசுகி தொலைபேசியில் பதற்றக் குரலில் சேதி சொன்னார். ‘அண்ணாச்சி ராஜமார்த்தாண்டன் கொஞ்ச நேரத்துக்கு முன் சாலை விபத்தில் இறந்துவிட்டார்’. நம்பவில்லை. நெய்தல் கிருஷ்ணனைத் தொடர்புகொண்டு விசாரித்தேன். அவரும் சொன்னார். ‘ஆமாம், அண்ணாச்சி, நான் அங்கேதான் இ ருக்கிறேன். பிறகு விவரமாகச் சொல்கிறேன்’. நம்பவிரும்பவில்லை. தகவல் பொய்யானதாக இருக்க வேண்டும் என்று மனம் ஆசைப்பட்டது. முந்தைய தினம் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தவர் சில மணி நேரங்களுக்குள் இல்லாமல் போய்விட்டார் என்ற அபத்த உண்மையை ஒப்புக்கொள்ளத் தயக்கமாக இருந் தது. அதிர்ச்சி கலையாமலேயே இலக்கிய நண்பர்களுக்குத் தகவல் தெரிவித்துக்கொண்டிருந்தேன். அமைதி கொள்ளாமல் மறுபடியும் கிருஷ்ணனை அழைத்

 

மனிதனும் பறவையும் சாலையோரம் கிடக்கிறது அந்தக் காக்கை அனாதைப் பிணமாக. சற்று முன்தான் நிகழ்ந்திருக்க வேண்டும் அதன் மரணம். விபத்தா? எதிரிகளின் தாக்குதலா? இயற்கை மரணமா? எதுவென்று தெரியவில்லை. மரக்கிளைகளில் மதில்சுவர்களில் கரைந்திரங்கல் தெரிவித்து கலைந்து போயிற்று உறவுக்கூட்டம் அனாதையாகக் கிடக்கிறது அது. சற்று முன்னதாக ஏதேனும் வீட்டு வாசலில் அல்லது கொல்லை மரக்கிளையில் உறவின் வருகையறிவித்து அதற்கான உணவை யாசித்திருக்கலாம். செத்துக்கிடந்த எலியை இனத்துடன் சேர்ந்து கொத்திக் குதறியிருக்கலாம். மைனாக் குருவியை விரட்டிச் சென்றிருக்கலாம். கருங்குருவியால் துரத்தப்பட்டிருக்கலாம். தன் ஜோடியுடன் முத்தமிட்டுக் கொஞ்சியிருக்கலாம். கூடுகட்ட நினைத்திருக்கலாம். இப்போது அனாதையாய

அஞ்சலி: ஓவியர் ஏ.பி. சந்தானராஜ் (1932 - 25.5.2009)
சந்ரு  

(அவர் என்னிடம் சொன்னது) கலைப் படைப்பு: ஓர் அனுபவம். ஆழ்கடலில் நேரும் சலனத்தின் சாட்சியாகக் கடலின் மேல் தளத்தில் நேரும் நீர்க்குமிழ். கோடு: இருகோடுகள் ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளும் பகுதி முட்டு, காயம், இருள். ஒன்றை ஒன்று வெட்டிக்கொள்ளாத பகுதி வெளி . . . ஒளி . . . உருவத் தோற்றம்: வரையப்படுவது அல்ல. ஜாலியாகச் சட்டையைக் கழற்றித் தரையில் வீசுவது. வண்ணம்: காய்ந்த இலைச் சருகில் வண்ண பேத ஒளி விளையாட்டு மனத்திற்கு இதமானது. கலைத் துறையில் வழிகாட்டி: சூரிய நமஸ்காரம் பண்ணுகிறேன். கலைப் படைப்பு - துறையில் கவனிப்பு: மக்கள் மத்தியில் பாரதியும் கண்ணதாசனும் எழுதியவை கவிதைகள், கவிஞர்கள். இவற்றுக்கு இடையிலான நுட்ப வேறுபாடுகள் குறித்து நாம் கவனமாக இருக்க வேண்டும். கல்லூரி அனுபவம்: கல்ல

அஞ்சலி: இரா. திருமுருகன் (1929 - 3.6.2009)
ய. மணிகண்டன்  

அலுவல்முறையில் அல்லாத மடல்கள் எழுதுவதும் பதிலிடுவதும் அருகிக்கொண்டிருக்கும் வாழ்க்கை அமைப்பில் ஏறத்தாழ மூன்று திங்களாக பதிலுக்காக ஓர் அஞ்சலட்டை என் மேசைமீது காத்துக்கொண்டே இருந்தது. விடை எழுத வேண்டும் என்ற உணர்வும் அவ்வப்போது எழுந்துகொண்டே இருந்தது. அந்தக் கடிதத்திற்கு இனி நான் விடை எழுதினாலும் அதைப் பெற வேண்டியவர் இனி இல்லை. இச்செய்தி இரு கிழமைகளுக்கு முன் அதிர்ச்சி அளித்தபடியே என் செவியில் சேர்ந்தது. நான் பதிப்பித்திருந்த சி. வை. தாமோதரம்பிள்ளை எழுதிய ‘கட்டளைக் கலித்துறை’ நூலின் பத்துப்படிகள் வேண்டும் எனவும், கிடைக்குமிடம் கேட்டும் தமிழ் மண்ணின் முதுபெரும் இலக்கண அறிஞர்களுள் ஒருவரான புதுச்சேரி இரா. திருமுருகன் எழுதிய கடிதம் மட்டும்தான் இப்போது இருக்கின்றத

அஞ்சலி: லட்சுமி கிருஷ்ணமூர்த்தி (1925 - 12.6.2009)
சா. கந்தசாமி  

தமிழின் முன்னோடிப் பதிப்பகங்களில் ஒன்று வாசகர் வட்டம். அது புக் கிளப் மாதிரி. உறுப்பினர்களுக்கு ஒவ்வோர் ஆண்டும் நல்ல தரமான புத்தகங்கள்; தரம் என்றால் புத்தகத்தின் கருத்து, வளம் என்பது மட்டுமல்ல, புத்தகத் தயாரிப்பிலும் தரமாகக் கொடுப்பது என்ற தீர்மானத்தோடு 1964-65 ஆண்டுகளில் லட்சுமி கிருஷ்ணமூர்த்தி வாசகர் வட்டத்தைத் தொடங்கினார். சிறந்த வாசகரான லட்சுமியின் கணவர் கிருஷ்ணமூர்த்தி வாசகர் வட்டத்தின் அமைப்பிலும் நிர்வாகத்திலும் புத்தகங்கள், ஆசிரியர்கள் தேர்விலும் பங்கு பெற்றிருந்தார். ஆண்டிற்கு ஆறு புத்தகங்கள், கட்டுரைகள், பயண நூல்கள், மக்களுக்குப் பயனுள்ள தகவல் புத்தகங்கள், தொகுப்பு நூல்கள், படைப்பிலக்கியம் எல்லாம் வாசகர் வட்டம் வெளியீட்டில் இடம்பெற்றன. முதல் புத்தகமாக ராஜாஜி

அஞ்சலி: கமலாசுரய்யா (31.3.1934 - 31.5.2009)
 

திருவனந்தபுரம் செனட் ஹாலின் தாழ்வாரம் வழியாக ஒரு மலைப்பாம்புபோல உடல் பெருத்து வெளியே நீளும் மக்கள் வரிசைக்குப் பின்னால் நிற்கும்போது நான் யோசித்தேன் - மாதவிக்குட்டி எனக்கு யார்? இந்த இரவில் இத்தனை பொறுமையுடன் எதற்காக நான் இங்கே காத்து நிற்கிறேன்? கூட்டம் மெல்ல நகர்ந்தது. அரைமணி நேரத்துக்குப் பின்பு நானும் மாதவிக்குட்டியின் உடலருகில் வந்து சேர்ந்தேன். யாரோ கொடுத்த பூக்களை இரும்பு பீடத்தில் வைத்த கண்ணாடிப் பேழைமேல் தூவி வணங்கினேன். அந்தக் கண்ணாடிக்குக் கீழே உறங்கும் முகத்தைத் தேடிப் போவதிலிருந்து என் கண்களை மனப்பூர்வமாகத் தடைசெய்தேன். என் மனதுக்குள் பதினாறாவது வயதில் நான் பார்த்த தேஜோமயமான அந்த அழகு மட்டும் போதும் என்று தீர்மானம் செய்திருந்ததனாலேயே அந்த முகத்தைக் கடைச

அஞ்சலி: ஹபீப் தன்வீர் (1.9.1923 - 8.6.2009)
சண்முக ராஜா  

மார்ச் 3ஆம் தேதி திருவனந்தபுரத்தில் நடந்த தேசிய நாடகவிழாவில் எங்கள் குழுவின் குதிரை முட்டை நாடகத்தை நிகழ்த்திவிட்டு தொடர்ந்து அங்கேயே இருந்து பிற நாடகங்களைப் பார்க்கக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. மார்ச் 8ஆம் தேதியன்று ‘நயா’ தியேட்டரின் சரண்தாஸ் திருடன் என்னும் நாடகம் நடைபெற்றது. ஏழு ஆண்டுகளுக்குப் பின் ஆறாம் முறையாக அந்நாடகத்தைப் பார்க்கச் சென்றிருந்தேன். அன்று ஹபீப் சாப் மேடையில் தோன்றவில்லை. உடல்நலமற்றிருப்பதால் குழுவுடன் பயணிக்க இயலவில்லை என்ற தகவலும் வந்தது, நாடகமும் ஆரம்பித்தது. ஹபீப் தன்வீரின் மகள் நகீன் மற்றும் பல முகம் தெரிந்த சத்தீஸ்கர் நாட்டுப்புற நடிகர்கள் இசைஞர்களின் நிகழ்த்துதலுடன் நாடகம் நகர்ந்துகொண்டிருக்கையில் போலீஸ் வேடமிட்டு ஹபீப் அந்ந

சிறுகதை
 

தெருவிளக்கினடியில் அவன் நின்றிருந்தான். தினந்தோறும் அதிகாலையில் நிற்பதால் அவனுக்குப் பூச்சிகளின் சப்தமும் பனியும் இருட்டும் பழகியிருந்தன. வெள்ளை நிறக் கால்பந்தும் முகந்துடைத்துக்கொள்வதற்கெனச் சிறிய ஆரஞ்சு நிறத்துண்டும் விளையாடும்பொழுது அணிந்துகொள்வதற்கென மாற்று உடையும் கையில் வைத்திருந்தான். தெருவிளக்கின் வெளிச்சம் அவனைச் சுற்றிப் படர்ந்திருந்தது. இன்னமும் சிறிது நேரத்தில் விளக்குகள் அணைந்துவிடும். பிறகு வாசல் பெருக்கித் தண்ணீர் தெளித்துக் கோலமிடப் பெண்கள் வரத் தொடங்குவார்கள். அவ்வீதியிலுள்ள பெண்களுக்கு அவனைத் தெரியும். எட்டு வருடங்களுக்கு மேலாக அவ்வீதியில் அவனது பெற்றோர்களுடன் வசித்திருக்கிறான். அந்தக் காலத்தில்தான் செல்லியின் வீட்டிலுள்ளவர்களுடன் பழக்கம் ஏற்பட்டத

பத்தி: வேறுவேறு
பெருமாள்முருகன்  

திருமண வாழ்த்துச் சுவரொட்டிகள் எல்லா ஊர்களிலும் இன்று பரவலாகக் காணப்படுகின்றன. நண்பர்களோ உறவினர்களோ தமது பெயரைப் போட்டுச் சுவரொட்டி அச்சிட்டு ஒட்டும் இவ்வழக்கம் உருவான கதையைக் கேள்விப்பட்டிருக்கிறேன். தமக்குத் தொடர்ந்து வேலைகள் வேண்டும் என்பதற்காக அச்சக உரிமையாளர்கள் தாமே செலவுசெய்து முதலில் சில திருமணங்களுக்கு இப்படிப்பட்ட சுவரொட்டிகளை அச்சிட்டு ஒட்டியதாகவும் அது படிப்படியாக மக்கள் வழக்கத்திற்கு வந்துவிட்டது என்றும் சொல்வதுண்டு. இது பெருமளவு உண்மையாக இருக்க வாய்ப்புண்டு. கண்ணுக்குத் தெரியும்படியான ஒரு விஷயத்தைத் திட்டமிட்டுப் பரப்ப முடிகிறபோது நுட்பமான கருத்தியல் தளத்தில் எத்தனையோ விஷயங்களைத் தாராளமாகப் பரப்ப முடியும் என்பதை ஊடகங்கள் நிரூபித்துக்கொண்டிருக்கின

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது  

குர்ஆனிய மொழியாடல்கள் மீள்வாசிப்பின் தருணம் ஹெச்.ஜி. ரசூல் பக். : 92 விலை: ரூ. 50 முதல் பதிப்பு: ஜூலை 2008 வெளியீடு கீற்று வெளியீட்டகம் 1-48கி, அழகிய மண்டபம் முளகுமூடு அஞ்சல் - 629 167 குமரி மாவட்டம் இஸ்லாம் குறித்து இன்று உலக அளவில் விவாதிக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம்களின் அரசியல் அணுகு முறைகள் மற்றும் வாழ்க்கைச் சூழல்கள் குறித்தும் விரிவான அளவில் பேசப்படுகின்றது. அதே சமயத்தில் இஸ்லாத்தின் உட்கூறுகள் பற்றிப் பல்வேறு முஸ்லிம் அறிஞர்களும் குர்ஆனையும் ஹதீஸ்களையும் ஆராய்ந்து வருகின்றனர். தம் மனதிற்குகந்த முடிவுகள் எனில் அதை வரவேற்பதும் ஒப்புக்கொள்ள முடியாத பட்சத்தில் கடும் எதிர்ப்புக் காட்டுவதும் ஒருசேர நடந்துவருகின்றது. மாற்றுக் கருத்துகள் முன்வைக்கப்படுகையில்,

மதிப்புரை
க. மோகனரங்கன்  

தனிமையின் வழி சுகுமாரன் பக்.: 144, விலை: ரூ. 85 முதல் பதிப்பு: ஆகஸ்டு 2007 காரண, காரிய விளக்கங்களைத் தாண்டி, தனிப்பட்ட முறையில் என்னை வசீகரித்த ஒரு சில கவிஞர்களில் சுகுமாரனும் ஒருவர். அவருடைய பல கவிதைகளுக்கு நான் வாசகன் என்பதைவிடவும் சற்றுக் கூடுதலாக ஒரு ரசிகன் எனக் கூறிக்கொள்ளவே விரும்புவேன். ஒரு கவிஞராக மட்டுமின்றி, மொழிபெயர்ப்பாளராகவும் விமர்சகராகவும் கட்டுரையாளராகவும் அவருடைய தேர்வுகளையும் மதிப்பீடுகளையும் கருத்துகளையும் தொடர்ந்து வாசித்து வந்திருக்கிறேன். இவை அனைத்திலுமே வெளிப்படும் அவரது நோக்கு, ரசனை என்பது எப்போதுமே எனது மனச்சாய்வுக்கு அணுக்கமாக இருந்திருக்கிறது. ‘தனிமையின் வழி’, ‘இழந்த பின்னும் இருக்கும் உலகம்’ ‘வெளிச்சம் தனி

பதிவுகள்
எஸ்.வி. ஷாலினி  

கவிஞர் ராஜமார்த்தாண்டனின் இறுதி யாத்திரை அவரது ஊரில் நடந்த அன்று (07.06.2009) ‘காலச்சுவடு’ம் நெய்தல் அமைப்பும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இரங்கல் கூட்டம் நாகர்கோவில் ரோட்டரி கம்யூனிட்டி அரங்கில் மாலை 4.30க்கு நடந்தது. கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய கவிஞர் கலாப்ரியா, “ராஜமார்த்தாண்டனைக் கடந்த முப்பத்தைந்து ஆண்டுகளாக எனக்குத் தெரியும். என் வாழ்க்கை வரலாற்றை எழுதுவதாக இருந்தால் அவருக்குச் சில பக்கங்கள் ஒதுக்குவேன். அவர் நடத்திய ‘கோகயம்’, ‘கொல்லிப்பாவை’ இரண்டு இதழ்களுக்கும் பெயர் வைத்தவர் பிரமிள். ராஜமார்த்தாண்டன் கவிஞர், விமர்சகர் என்பதைவிடக் கவிதை வாசகர், கவிதைக்குத் தன்னை அர்ப்பணித்தவர் என்று சொல்வது பொருத்தமானது. இலக்கிய வடிவங

பதிவுகள்: ராஜமார்த்தாண்டன் அஞ்சலிக் கூட்டம் 14.6.2009 இக்சா மையம், சென்னை
பெ. பாலசுப்ரமணியன்  

தமிழில் குறிப்பிடத்தகுந்த கவிஞரும் விமர்சகருமான ராஜமார்த்தாண்டனை நினைவுகூரும் விதமாக ஜூன் 14, 2009 அன்று சென்னையிலுள்ள இக்சா புத்தக வளாக மையத்தில் மாலை 5.30 மணிக்குக் காலச்சுவடு சார்பாக அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது. எழுத்தாளர் சா. கந்தசாமியின் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் காலச்சுவடு பதிப்பாளர் கண்ணன், மரணம் மார்த்தாண்டனைத் தன்வசப்படுத்திய கடைசித் தருணத்தை வருத்தத்துடன் நினைவுகூர்ந்தார். வரலாற்று ஆய்வாளர் ஆ. இரா. வேங்கடாசலபதி பேசும்போது, ராஜமார்த்தாண்டன் ‘சின்னக் கபாலி’ என்னும் புனைபெயரில் கவிதைகள் எழுதியுள்ளதைக் கூறினார். தனக்கும் மார்த்தாண்டனுக்குமான உறவு வலுவடைந்தது புதுமைப்பித்தன் படைப்புகளைத் தொகுக்கும்போதுதான் என்றார். புதுமைப்பித்தனின் வெளிவராத பட

பதிவுகள்: அற்றைத் திங்கள், மார்ச் 15, சேலம் தமிழ்ச் சங்கம்
அ. கார்த்திகேயன்  

சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக்கட்டளை இணைந்து நடத்திய ‘அற்றைத் திங்கள்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் நாஞ்சில் நாடன் கலந்துகொண்டார். சிறந்த சிறுகதையாளராய், தேர்ந்த நாவலாசிரியராய் நுட்பமான வாசகர்களால் கொண்டாடப்படும் அவரை, சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க.வை. பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார். அடிப்படையில் தான் ஒரு விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன், ஐம்பது ஆண்டு கால விவசாய வாழ்க்கையில் எவ்வித மாற்றத்தையும் காணாத கசப்பான வாழ்வு அனுபவம் தனக்கு உண்டு எனத் தொடங்கிய நாஞ்சில் நாடன், தன் பள்ளி மற்றும் கல்லூரிப் படிப்பைப் பற்றி விரிவாகக் கூறினார். தனக்குக் கிடைத்த நல்ல தமிழாசிரியர்களின் மூலமாக ஆழமான தமிழறிவைப் பெற்றதாகக் கு

பதிவுகள்: எண்பது ஆண்டு நிறைவு பாராட்டுவிழா, மே 15, 2009, நாகர்கோவில்
மா. சுப்பிரமணியம்  

இலக்கியம் வாழ்க்கையை வளப்படுத்தும். உறுதியான நம்பிக்கையும் தொடர்ந்த ஈடுபாடும் அதனோடிருந்தால் உரிய அங்கீகாரத்தைத் தவறாது வழங்கும் என்பதற்கு, நவீனத் தமிழிலக்கியத்தில் முத்திரை பதிக்கும் குமரி மாவட்ட படைப்புகளின் உந்து சக்தியாகவும் கிரியா ஊக்கியாகவும் இருந்து வரும் எம்.எஸ். அவர்களின் எண்பதாம் ஆண்டு நிறைவுப் பாராட்டுவிழா சான்றாக இருந்தது. 15.05.2009 அன்று மாலை, சுந்தர விலாஸ் மாடியில் காலச்சுவடும் நெய்தல் கிருஷ்ணனும் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவிற்கு முதுபெரும் படைப்பாளி நீல. பத்மனாபன் தலைமை தாங்கி தமது படைப்புக்குரிய நேர்மையான விமர்சனத்தை எம்.எஸ்.சிடமிருந்து பெற்றதை நினைவுகூர்ந்தார். சார்பு நிலையற்றவர்; படைப்புகளை ஆழமாகவும் கவனமாகவும் பார்ப்பார்; பொருள் பிழைகளை மனம் ந

சு.ரா. பக்கங்கள்
கண்ணன்  

புகழ்வாய்ந்த படைப்பாளியான தாங்கள் (தங்கள் படைப்புகளைப் பிற இதழ்கள் வெளியிடக்காத்துக் கொண்டிருக்கும் சூழலில்) ஓர் இலக்கியச் சிற்றிதழ் நடத்த வேண்டிய அவசியம் என்ன? புகழ் வாய்ந்த படைப்பாளி என்று என்னைக் கூற முடியுமா என்பது தெரியவில்லை. நான் பெற்றிருக்கும் வாசகப் பரப்பை, புகழ்பெற்ற எழுத்தாளர்கள் பெற்றிருக்கும் வாசகப் பரப்போடு ஒப்பிட்டுப் பாருங்கள். என் படைப்புகளைப் பிற இதழ்கள் வெளியிடக் காத்துக்கொண்டிருக்கும் சூழல் இருப்பதாக எனக்குத் தோன்றவில்லை. ஆழமான கருத்தாக்கங்களுக்குப் புகழ்பெற்ற இதழ்கள் இடம் தருவதில்லை. சிற்றிதழுக்கு வெளியே இன்றும் பொருட்படுத்தத் தகுந்த கட்டுரைகள் ‘தினமணி’ நாளிதழ் - தலையங்கப் பக்கங்களில் - மட்டுமே வெளிவருகின்றன. ஆழமான படைப்புகளுக்கு இடம்

தலையங்கம்
 

“வண்ணங்கள் வேற்றுமைப்பட்டால் - அதில் மானுடர் வேற்றுமை இல்லை” என்ற பாரதியின் வரிக்கு ஏற்ப இந்தியாவில் மாற்றுப் பாலியல் (ஒருபாலீர்ப்பு, இருபாலீர்ப்பு கொண்ட ஆண்களும் பெண்களும், எதிர் பால்நிலை விழையும் மக்கள் - அரவானிகள், ஆண் பாலடையாளம் ஏற்கும் பெண்கள்) கொண்டவர்களின் குரல்கள் ஒலித்துக்கொண்டிருக்கின்றன. சென்னையிலும் மாற்றுப் பாலியலாளர்களின் குரல்கள் வலுவாக ஒலிக்கத் துவங்கியிருக்கின்றன. உலகெங்கிலும் ஜூன் மாதம் மாற்றுப் பாலியல் கொண்டவர்களின் சுயமதிப்பைக் குறிக்கும் மாதமாகவும் தம் பால்விழைவைப் பெருமிதத்துடன் ஏற்றுக்கொள்ளும் காலமாகவும் குறிக்கப்படுகிறது. 1969ஆம் ஆண்டு நியூயார்க் நகரில் Stonewall Inn என்ற இடத்தில் தம் பாலியல் வேறுபாடு காரணமாகக் காவல் துறையினரின் வன்

 

ஜூன் இதழில் சமகால நிகழ்வுகளைச் சரியான பார்வையோடு வாசகனுக்கு முழுமையான புரிதலை உருவாக்கிடும் வகையில் சிறப்பான கட்டுரைகள் இடம்பெற்றிருந்தன. குறிப்பாக இலங்கையின் தற்போதைய நிலை குறித்த தலையங்கம் மனத்தைப் பிசைவதாய் இருந்தது. அரசியல்ரீதியான பல தவறுகளைப் பிரபாகரன் செய்துள்ளதை நியாயப்படுத்த முடியாதுதான். எனினும் தனது குடிமக்களாக உள்ள ஒரு இனத்தை அந்த நாட்டின் அரசே அழித்தொழிக்க முயலும் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக ஒரு ஆயுதம் தாங்கிய குழு இருந்தபோதே இத்தனை கொடூரமெனில், இனி அம்மக்கள் நிலை என்ன என்கிற கேள்வி விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. எந்தப் பிரச்சி னையை அணுகும்போதும் ஒவ்வொரு அரசியல் கட்சிக்கும் ஊடகங்களுக்கும் கட்டுரையாளர்களுக்கும் ஒவ்வொரு பார்வை இருக்கு மென்பது இயல்பு. என்றால

உள்ளடக்கம்