புதிரை வண்ணார்களுக்கு நலவாரியம் அமைக்கப்படும். இந்தச் செய்தியைச் சிறுபத்திரிகை சார்ந்த இலக்கியவாதிகள் தினசரிகளில் வாசித்திருப்பார்கள் என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. தீவிர இலக்கியவாதிகளாகக் கருதத் தொடங்கிய பின் சிறுபத்திரிகை எழுத்தாளனும் வாசகனும் அன்றாட நடப்புகளிலிருந்து தங்களை விலக்கிக்கொள்ளும் தீவிர’ மனநிலையை அடையத் தொடங்கிவிடுகிறார்கள் என்பதைப் பலரோடு உரையாடும்போது உணர்ந்திருக்கிறேன். எனவே இந்தச் செய்தி அவர்களின் கவனத்துக்குரியதாக ஆகியிருக்கும் எனச் சொல்ல முடியவில்லை. ஒரு படைப்பாளியின் படைப்புக்கு அரசின் சாகித்திய அகாடெமி விருது போன்ற கவனிப்புகள் கிடைக்கும்போது அதை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் விவாதித்துக் கருத்துச் சொல்லும் தீவிர இலக்கியவாதிகள் இந்தச

பத்தி
 

எம்.எஸ். 80 காலச்சுவடை மீண்டும் துவங்கப் போகிறேன் என்பதை 1994இல் உறுதியாக அப்பாவிடம் தெரிவித்ததும் அவர் சட்டபூர்வமாக அதை என் பெயருக்கு மாற்றிக் கொடுத்தார். இதழின் துவக்கப் பணிகள் நடந்த காலகட்டங்களில் அவர் அதிகம் ஆலோசனைகள் வழங்கியதாக நினைவில் இல்லை. ஆனாலும் அவர் என்னை அழைத்துச் சொன்ன ஒரு முக்கியமான விஷயம், எம்.எஸ். ஐ நான் அழைத்துப் பேச வேண்டும் என்பது. அதன்படி எம்.எஸ்.ஐச் சந்தித்து காலச்சுவடு திட்டத்தைச் சொன்னேன். ஆண்டு 1994 மாதம் ஜூலை அல்லது ஆகஸ்டாக இருக்கலாம். அன்றிலிருந்து இன்றுவரை எம்.எஸ். காலச்சுவடு அலுவலகத்தில் தடம் பதிக்காத நாட்கள் குறைவு. ஏறக்குறைய 15 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஓர் உறவு, அதிலும் அன்றாடம் சந்திக்கும் உறவு, பிசிறில்லாமல் 15 ஆண்டுகள் தொடர்வது அரிது.

சிறுகதை
பெருமாள்முருகன்  

பேரனைக் கையில் பிடித்துக்கொண்டு குள்ளப்பாட்டி வீட்டை விட்டுப் புறப்பட்டபோது பொழுது கிளம்பியிருக்கவில்லை. பேரன் முகத்தில் தூக்கம் படர்ந்திருந்தது. பாட்டி எங்கே கூட்டிப்போகிறாள் என்று அவனுக்குத் தெரியாது. ஆனால் ஏதோ புது இடத்திற்காகத்தான் இருக்கும். பாட்டி வீட்டுக்கு வந்த இந்த இரண்டு வாரத்தில் அவன் கண்ட இடங்கள் எல்லாம் புதிதானவை. அவன் கனவுகளில்கூட நுழைந்திராத புத்தம்புதுப் பிரதேசங்கள். ‘எங்க ஆயா போறம்’ என்று சிணுங்கலோடு பலமுறை கேட்டு நச்சரித்தான். பாட்டி தன் குட்டைக் கையைத் தூக்கி முன்னால் காட்டி ‘அங்க போறம்’ என்றாள். ‘அங்கன்னா எங்காயா’ என்று கால்களை நிலத்தில் உதைத்துக்கொண்டு கேட்டான். ‘அங்கன்னா அங்கதான்’ என்று சொன்னாள்

அனார்  

வெளியேற்றம் என்னுடைய வரிகளில் என்னைத் தந்து முடிவதும் இல்லை எடுக்கவும் முடிவதில்லை சொற்களின் சுழற்சித் தீவிரத்தில் நினைவு ரயில் விரைந்து கடக்கையில் பாய்கின்றது என்னை வெளிப்படுத்தக்கூடிய ஒரே ஒரு வார்த்தை கருநொச்சிப் பூ ... கிளி... நத்தை ... குறித்த வார்த்தைத் தன்மைகள் மிகுதியான இறுக்கத்துடன் விபத்தின் உருக்குலைவில் கதறும் பிராணி இல்லையேல் தற்கொலை பற்றியே யோசிக்கின்ற பைத்தியம் மழையில் நனைவதை விட்டுவிட்டேன் ‘கசலின்’ மிருதுவான ஆலாபனையொன்றுடன் இழைந்து கிடந்ததையும் கொதி நிலை விதிக்கப்பட்டிருக்கும் எரிமலை நெருப்பு உங்கள் முன் மெழுகுவர்த்திகளில் ஏற்றப்பட்டும் ஊதுபத்தியில் புகையவிடப்பட்டும் அவமானத்துக்குள்ளாவதன் சித்திரவதை நான் இதே கவிதையின் ஏதோ ஒ

கட்டுரை
நாகார்ஜுனன்  

ஈழத்தில் நடந்தேறிய இனப்படுகொலை நிகழ்வுகள், போர்க்குற்றங்கள், தொடரும் மனித உரிமை மீறல்கள் பற்றியெல்லாம் பன்னாட்டு அளவில் விசாரணை நடக்கும் சாத்தியமுண்டா என்று கேட்டு காலச்சுவடு ஜூன் இதழில் ‘இந்தியாவைச் சார்ந்தவன் என வெட்கித் தலைகுனிகிறேன்’ என்ற என் கட்டுரை வெளியானபோது அதிலிருந்த சில விஷயங்களையொட்டி நடந்த விபரங்களை என்னால் சேர்க்க முடிந்திருக்கவில்லை. காரணம், அந்தக் கட்டுரையை எழுதிமுடித்த பிறகு மே 26-27 நாட்களில் இலங்கை குறித்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைக் குழுவின் விசேட அமர்வு ஜெனிவா நகரில் நடைபெற்றது. மனித உரிமைக்குழு தன் முடிவை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் பரிந்துரைக்கு அனுப்ப முடியும், ஆனால் நேரடி விசாரணையில் ஈடுபட முடியாது என்பதைக் கவனிக்க வேண்டும்.

கட்டுரை
சங்கரன் சித்தார்த்தன்  

சண்டே லீடர் ஆசிரியர் கொல்லப்பட்டு ஆறு மாதங்களுக்கு மேலாகியும் அவருடைய படுகொலை தொடர்பான விசாரணை ஒரு அடிகூட முன்னகரவில்லை என்று இலங்கைப் பொலிஸாரினதும் நீதித்துறையினதும் செயலற்ற தன்மையை ஊடக அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் குற்றஞ்சாட்டி வரும் நிலையில், லசந்தவின் படுகொலையுடன் தொடர்புபட்ட இரண்டு தகவல்கள் அண்மையில் வெளிவந்திருக்கின்றன. முதலாவது, உலகிலேயே மிகப் பெரிய அமைச்சரவையைக் கொண்டுள்ள இலங்கை அரசாங்கத்தின் சர்ச்சைக்குரிய அமைச்சர்களுள் ஒருவரான தொழில் அமைச்சர் மேர்வின் சில்வா பொலிஸாரினதும் நீதித்துறையினதும் பாத்தியதையை நன்குணர்ந்ததாலோ என்னவோ லசந்த விக்ரமதுங்கவைக் கொன்றது நானே என்று பகிரங்கக் கூட்டமொன்றில் வைத்துத் தெரிவித்திருக்கிறார். இந்தக் கூற்றைக் கடந்த

கட்டுரை
சூரியதீபன்  

கடந்த மே 26ஆம் தேதி இலங்கையில் மனித உரிமை மீறல்கள் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. சிறப்புக் குழுவின் கூட்டம் கூட்டப்பட்டபோது அது தேவையற்றது என இந்தியாவின் பிரதிநிதி கோபிநாதன் அச்சங்குளங்கரே எதிர்ப்புத் தெரிவித்தார். இலங்கை இனப் படுகொலைக்கு ஆதரவாக அல்லது இனவெறியால் பாதிப்புக்குள்ளாகியிருக்கும் தமிழருக்கு எதிராக இந்தியா கை தூக்கியிருப்பது இது முதன்முறையல்ல. ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட தமிழர்களைப் பலி வாங்கிய 1983 ஜூலை கலவரத்தின் மீது ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் விவாதம் வந்தபோது உறுப்பினர் நாடுகள் பலரும் கண்டித்துப் பேசினார்கள். ஆனால் அப்போதைய இந்தியப் பிரதிநிதி சையத் மசூது ஐ.நா. அவசரப்பட்டு நடவடிக்கை எடுக்கக் கூடாது என அந்த இனப்படுகொலையை ஆதரித்துப் பேசினார். தேசிய இனப் பிர

கட்டுரை
 

ஈழப்போரின் இறுதி நாட்கள் காலச்சுவடு 1994இல் மீண்டும் துவங்கப்பட்ட காலத்திலிருந்து கடைபிடிக்கப்பட்டு வரும் இதழியல் அறங்களில் ஒன்று, எந்தப் படைப்பையும் மறைவான பெயரில் வெளியிடுவதில்லை என்பது. இது தமிழக எழுத்துக்களுக்கு உறுதியாகக் கடைபிடிக்கப்பட்டாலும் இலங்கை அரசியல் சூழலைக் கருதி அன்றிலிருந்தே விதிவிலக்காகப் பல ஈழத்துப் பதிவுகளை மாற்றுப் பெயர்களில் வெளியிட்டு வருகிறோம். எனினும் அவர்கள் அடையாளம் எங்களுக்குத் தெரிந்திருக்கும். எழுதியவர் அடையாளம் தெரியாமல் ‘காலச்சுவடில்’ வெளிவந்த முதல் எழுத்து ‘அநாமதேயன் குறிப்புகள்’. மீண்டும் இலங்கை அரசியல் சூழலைக் கணக்கில்கொண்டு எடுக்கப்பட்ட முடிவு அது. இலங்கையில் இப்போது அரசால் உருவாக்கப்பட்டிருக்கும் முகாம்கள்

கட்டுரை
ப்ரேமா ரேவதி  

அன்புள்ள தமிழினி, உங்களை அன்புள்ள ஒரு மனுஷியாக விளிப்பதையேகூடப் பலர் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் என நினைக்கிறேன். புராணக் கதாபாத்திரங்களைப் போன்று பிரபாகரன் ‘உயிர்த்தெழுவார்’ என அவரது ‘பக்தர்’கள் ஓயாத பிரச்சாரத்தில் இறங்கியிருக்கிறார்கள். மே 18க்குப் பிறகு புதுப்பலம் பெற்றுள்ள அவரது எதிர்ப்பாளர்களோ ‘ஒழிந்தான் பயங்கரவாதி’ எனக் கொண்டாடிக்கொண்டிருக்கும் ஒரு சூழலில், அவரது தங்கையும் விடுதலைப்புலிகள் அமைப்பின் பெண்கள் (அரசியல்) பிரிவின் தலைவியுமான உங்களை அன்புள்ள ஒரு மனுஷியாக ஏற்றுக்கொள்ள மறுக்கும் இடத்திலிருந்து இந்த மடல். ஒரு வாரக் காத்திருப்புக்குப் பின் உங்களை, இன்று தரைமட்டமாகிவிட்ட கிளிநொச்சியில் இருந்த பெண்கள் பிரிவின் அலுவலகத்தில் ச

கட்டுரை
சுகிர்தராணி  

மதுவிலக்கு அமல்படுத்தப்பட்ட குஜராத் மாநிலத்தில் விஷச்சாராயம் அருந்தியதால் பலியானவர்களின் எண்ணிக்கை நூற்று எண்பதைத் தொட்டுவிட்டது. மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவருபவர்கள் இருநூறுக்கும்மேல். அவர்களுள் பெண்களும் அடக்கம். பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கவும் கூடும். மதுவிலக்கு அமல்படுத்தப்படாத தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் விஷச்சாராய உயிரிழப்புகள் சம்பவித்து வருகின்றன என்பது கண்கூடு. விஷச்சாராயம் அருந்தி பலியானவர்கள் மற்றும் சிகிச்சைபெற்று வருபவர்களில் பெரும்பாலானோர் தலித்துகள். குஜராத்தின் அண்டை மாநிலங்களிலிருந்து கள்ளச்சாராயத்தைக் கடத்துவதற்காகக் குழந்தைத் தொழிலாளர்களை ஈடுபடுத்தி இருப்பதுதான் வேதனையிலும் வேதனை. அக்குழந்தைத் தொழிலாளர்களும்

அஞ்சலி
சுகுமாரன்  

மரணம் தேர்ந்த இசை ஆர்வம் கொண்டதாக இருக்க வேண்டும். ஐந்து நாட்கள் இடைவெளியில் இரு பெரும் இசைக் கலைஞர்களை அபகரித்துக்கொண்டுவிட்டது. முதலில் டி. கே. பட்டம்மாள். அடுத்து கங்குபாய் ஹங்கல் (1913 - 2009). அதன் ரசனை இலட்சணம் நிரம் பியதுபோல. கர்நாடக இசையிலிருந்து ஒருவரையும் ஹிந்துஸ்தானி இசையிலிருந்து ஒருவரையும் தேர்ந்தெடுத்திருக்கிறது. இரண்டு மரணங்களும் முதுமையின் தவிர்க்க இயலாமைதான். எனினும் ஆற்றாமையை ஏற்படுத்துகின்றன இந்த இழப்புகள். பட்டம்மாளையும் கங்குபாயையும் ஒரு காரணத்துக்காக ஒப்பிடலாம். இரண்டு பேரும் போராடித்தான் தங்களுடைய மேடைகளைக் கண்டுபிடித்தார்கள். ஆண்கள் ஆக்கிரமித்திருந்த இசை மேடைகளில் இவர்கள் பாட முடிந்தது அந்த நாளைய பெரும் புரட்சி. பட்டம்மாளுக்குக் குலப் பிறப்பு என்ற

அஞ்சலி
பி.ஏ.கிருஷ்ணன்  

மைக்கேல் ஜாக்ஸன் மறைந்த அன்றுதான் அவருக்கு வயது ஐம்பதுக்கும் மேல் என்பது எனக்குத் தெரிந்தது. ஐம்பது ஆண்டுகளா? திரும்பத் திரும்ப இணையத்தைத் துருவிப் பார்த்தேன். ஐம்பதுதான் என்பது உறைக்கப் பல மணிநேரங்கள் பிடித்தன. மறைந்தது இன்றுவரை உறைத்ததாகத் தெரியவில்லை. மாரடைப்பாம். மின்னலுக்கும் மாரடைப்பு வருமா என்ன? இல்லை என்று சத்தியம் செய்பவர்கள் கோடிக்கணக்கில் இருப்பார்கள். அவரது ஆவி இங்குதான் சுற்றுகிறது என்று நம்புகிறவர்கள் இன்னும் அதிகம். அவரைப் பற்றிய அவதூறுகளைப் படிப்பதைவிடப் பல வருடங்களாகிவிட்டன. லண்டனில் அவரது நிகழ்ச்சிகள் நடக்கப் போகின்றன, அனுமதிச் சீட்டுகளுக்காக இரண்டு லட்சம் பேர்களுக்கு மேல் வரிசையில் நின்றார்கள், சீட்டுகள் முதல் சில மணிநேரங்களிலேயே விற்றுத் தீர்ந்துவிட்

அஞ்சலி:
பக்தவத்சல பாரதி  

வ. அய். சுப்பிரமணியம் நம் காலத்தின் தலைசிறந்த மொழியியல் அறிஞர். திராவிடவியலுக்கு, குறிப்பாகத் திராவிட மொழியியலுக்குச் சிறந்த பங்காற்றியவர். ஆய்வாளர், ஆசிரியர், ஆய்வறிஞர், நிறுவனங்களைத் தோற்றுவித்த நிறுவனர், நிர்வாகி ஆகிய பன்முகங்களுடன் நேர்மை, நேரந்தவறாமை, கொள்கைப் பிடிப்பு போன்ற பண்புகளால் புலமை உலகில் உயர்ந்த ஆளுமையாக விளங்கியவர். திருவனந்தபுரத்தில் பன்னாட்டுத் திராவிட மொழிகள் பள்ளியின் மதிப்புறு இயக்குநராகவும், தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதல் துணைவேந்தராகவும், குப்பத்தில் திராவிடப் பல்கலைக் கழகத்தின் இணைவேந்தராகவும், செம்மொழி மையத்தின் துணைத் தலைவராகவும் பணியாற்றியவர். புதுவை மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், உலகத் தமிழ

அஞ்சலி
அசோகமித்திரன்  

பாரதியார் இறந்தபோது பட்டம்மாளுக்கு இரண்டு வயது. பாரதியார் விசேஷமான சங்கீதப் பயிற்சி மேற்கொள்வதற்கு வாய்ப்பு இருந்திருக்காது. அவருடைய பல பாடல்களுக்கு ‘இப்பாடலைப் போல’ என்றுதான் குறிப்பிட முடிந்தது. ஆனால் அந்தப் பாடல்களைப் பாடி அவருக்கும் புகழ் சேர்த்து வாழ்ந்த தொண்ணூறு ஆண்டுகளில் பாமரர், ரசிகர் இரு பிரிவினரிடமும் மதிப்பும் புகழும் பெற்றது டி.கே. பட்டம்மாள் ஒருவர்தான் என்று கூற வேண்டும். தாமல் கிருஷ்ணஸ்வாமி பட்டம்மாள் கேள்வி ஞானத்தினாலேயே மகத்தான பாடகியானாள். நூறு ஆண்டுகளுக்கு முன்பு, சிறு பிராயத்தில் ‘பெண் பார்க்க’ வரும்போது என்றால், பாட இரண்டு மூன்று பாடல்கள் அறிந்திருந்தால் ஒரு பெண்ணுக்குப் போதுமானது. சில மகிழ்ச்சிகரமான சந்தர்ப்பங்களில் பாட வ

ஜனகப்ரியா  

மொத்தச் சூழலையும் தன்னுடைய கட்டுப்பாட்டில் வைத்திருப்பதான உணர்வுடன் சதா தன்னை முன்னிறுத்திக்கொள்ள விழைகிற ஆளுமைகள் எதார்த்த உலகில் பிறர் பற்றிய அக்கறையின்றி, தம்முடைய கற்பிதங்களின் வலிமையோடு சூழலின் மீது தாக்குதல் நடத்த எத்தனிக்கும் முயற்சிகளைக் கண்டு வியப்பும் வருத்தமும் ஒரு சேர ஏற்படுகிறது. மதுரையில் கடந்த ஜூன் 27,28 ஆகிய இருநாட்களிலும் கவிதை, சிறுகதை தொடர்பான கருத்தரங்குகளை ‘கடவு’ இலக்கிய அமைப்பு ஒழுங்கு செய்திருந்தது (கருத்தரங்கு பற்றிய பதிவோ மதிப்புரையோ அன்று இது). இரண்டாம் நாள் இறுதி அமர்வாக எழுத்தாளர்கள் பிரபஞ்சன், நாஞ்சில் நாடன், ஆதவன் தீட்சண்யா, கோணங்கி, எஸ். ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், பா. வெங்கடேசன், உதயஷங்கர், ஈழத்தைச் சேர்ந்த தமிழ்நதி ஆகிய

 

தனியார் கல்வி நிறுவனங்களின் கட்டணக் கொள்ளை பெருகி வருவதன் எதிரொலியாகத் தமிழக அரசு சமச்சீர் கல்விமுறையை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பதை வலியுறுத்தும் குரல்கள் மீண்டும் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு ஆசிரியர்-மாணவர் அமைப்புகளும் அறிவுத் துறையினரும் தொடர்ந்து வலியுறுத்தியதன் பேரில் 2006 செப்டம்பரில் தமிழக அரசு பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் முனைவர் முத்துக்குமரன் தலைமையில் ஒன்பது உறுப்பினர் குழு ஒன்றை அமைத்தது. 2007அக்டோபரில் தன் அறிக்கையை அரசிடம் சமர்ப்பித்த குழு தற்போதைய கல்விமுறையில் மாற்றங்கள் செய்யப்பட வேண்டுமென அரசுக்குப் பரிந்துரை செய்தது. அறிவுத் துறையினர், கல்வி ஆர்வலர்கள், ஆசிரியர்-மாணவர் அமைப்புகள் எனப் பல தரப்பினரின் வரவேற்பைப் பெற்ற, தமிழக அரசின் இந்த

 

தலையங்கம், இப்போது உலகெங்கும் கவனத்துக்குள்ளாகிவரும் மாற்றுப் பாலியல் பற்றி அக்கறையுடனும் சமூகக் கரிசனத்துடனும் விரிந்த பார்வையில் அணுகுவதாக இருக்கிறது. ‘கிராமக் கோயில்கள்’ இன்னமும் நிலவுடைமை ஆதிக்கத்தின் அதிகார பீடங்களாகவே கோலோச்சி வருகின்றன. சாதியும் வர்க்கமும் நாணயத்தின் இரு பக்கங்களாக இருந்து வருவதால் தனித்த சாதி ஒழிப்போ தனித்த வர்க்கப் போராட்டமோ பயன்தராது. சாதி ஒழிப்போடு வர்க்கப் போராட்டத்தை இணைக்கும் பார்வை அறிவுஜீவிகள், சாதி மறுப்பாளர்கள் அனைவருக்கும் வர வேண்டும். கட்டுரை யதார்த்தத்துடன் ஆதாரங்களுடன் அமைந்திருக்கிறது. இலங்கையில் இனவெறியாட்டத்தை அரச பயங்கரவாதமே நிகழ்த்தியிருக்கிறது. இதில் காந்தி, நேரு பிறந்த இந்தியாவின் பங்களிப்பு நம்மைத் தலைகுனிய வ