காலச்சுவடு ஆகஸ்டு 2009 இதழில் இடம்பெற்ற ஈழப்போர் குறித்த பதிவுகளுக்கான எதிர்வினைகள்
 

காலச்சுவடு ஆகஸ்டு 2009 இதழில் இடம்பெற்ற ஈழப்போர் குறித்த பதிவுகளுக்கான எதிர்வினைகள் எதிர்வினை: கடவுளும் சாத்தானும் எதிர்வினை: ஆரோக்கியமற்ற, ஆபத்தான ஊடகப் போக்கு எதிர்வினை: எங்கள் கனவுகள் இன்னும் முற்றுப் பெறவில்லை எதிர்வினை: கடவுளும் சாத்தானும் எதிர்வினை: அன்புள்ள ப்ரேமா ரேவதி எதிர்வினை: தெளிவு பெற்றிருக்க வேண்டிய சந்தேகங்கள் எதிர்வினை: இந்தியாவின் விரிவாக்க ஆசைகள் எதிர்வினை: சாதியமைப்புக்கு சமயம் பொறுப்பாளியா? எதிர்வினை: விமர்சனமல்ல அறிமுகம்

எதிர்வினை
 

‘காலச்சுவடு’ ஆசிரியர் பெயரை வெளியிடாமல் ‘வன்னியில் என்ன நடந்தது’ என்ற பதிவை வெளியிட்டமை சரி என்றே நம்புகிறேன். இது மௌனத்திற்கான காலகட்டம் என நாங்கள் நினைக்கவில்லை. இன்று கலையாத மௌனங்கள் புத்தரின் மகா மௌனங்களைப்போல நிரந்தர மௌனங்களாகும் வாய்ப்பு அதிகம். மாற்று அரசியலை முன்னெடுப்பது எங்கள் பணியல்ல. அதன் தன்மையை நிர்ணயம் செய்யும் உரிமையும் எங்களுக்கு இல்லை. எனில் திறந்த உரையாடல்களின் வழி ஈழத் தமிழ்ச் சமூகத்திலிருந்து மாற்றுகள் ஏற்படுவதற்கான சூழலை உருவாக்குவதில் நாங்கள் சிறிய அளவில் பங்களிக்க முயலலாம். கட்டுரையாளரின் பெயர் வெளியிடாமை எப்படி பன்முக வாசிப்பைச் சிதைக்கிறது என்பது புரியவில்லை. அத்தகைய ஒரு பன்முக வாசிப்பு இன்பத்தை வழங்க, கட்டுரையாளரின் உயிரை

எதிர்வினை
 

ஆகஸ்டு 2009 இதழில் வெளிவந்த ‘வன்னியில் என்ன நடந்தது? களத்திலிருந்து ஓர் அனுபவப் பதிவு’ கட்டுரைக்கான எதிர்வினை: முள்ளிவாய்க்கால் படுகொலைகளுடன் ஈழத்தமிழினத்தின் உரிமைப் போராட்டமும் அவர்களின் எதிர்காலமும் மோசமான வரலாற்று காலகட்டத்திற்குள் பிரவேசித்திருப்பது ஒன்றும் ரகசியமானதல்ல. வெளிப்படையானது. எல்லாக் கணிப்புகளும் மதிப்பீடுகளும் கனவுகளும் கலைந்துபோனது மட்டுமல்ல, யூகித்திருக்கவே முடியாத கொடூரங்களுடன் மரண ஓலங்களும் கதறல்களுமாக முள்ளிவாய்க்கால் படுகொலைகள் அரங்கேற்றப்பட்ட காட்சிப் பதிவிலிருந்து இன்னும் முழுமையாக ஈழத்தமிழன் ஒருவனும் மீண்டுவிடவில்லை. முழுமையாக மீள முடியுமா என்பதும் தெரியவில்லை. என்றென்றைக்கும் மீளவே முடியாத கொடுங்கனவாக ஒவ்வொரு ஈழத்தமிழனது மனஅடுக்

எதிர்வினை
 

காலச்சுவடு ஆகஸ்டு 2009 இதழில் வெளியான ‘வன்னியில் என்ன நடந்தது’ என்ற கட்டுரையைப் படித்து அதிர்ந்துபோய் இதை எழுதுகிறேன். புலம்பெயர் மண்ணில் இயந்திர வாழ்க்கை வாழ்ந்துகொண்டிருக்கும் எங்களுக்குள் தாயகம் பற்றிய ஆயிரம் கனவுகள் உண்டு. எமது தேசத்தின் விடியல் பற்றிய தீராத ஏக்கங்கள் உண்டு. அதற்கான ஆக்கபூர்வ பணிகளுக்காக எம் வாழ்க்கையின் பெரும் பகுதியை அர்ப்பணித்து அந்த நினைவுகளே எம்மை வாழ வைப்பதாகவும் அந்தக் கனவுகளே மகிழ்வு தருவதாகவும் அந்த நம்பிக்கையே எம் வாழ்வின் ஆதாரமாகவும் அதற்கான செயற்பாடுகளே எம் வாழ்வின் அர்த்தங்களாகவும் எண்ணி வாழ்க்கையை அணுவணுவாய் நகர்த்திக்கொண்டிருப்பவர்களே நாங்கள்! நாங்கள் என்றால் நம்மில் பலரும் அப்படித்தான். எம் தேசத்தின் விடியலுக்கான நேரம் எ

எதிர்வினை
 

ஆகஸ்டு மாத இதழில் வன்னிப் பதிவை நடுங்கும் மனத்துடன் படித்தேன். பதை பதைப்பு அடங்க வெகுநேரமாயிற்று. அப்பதிவின் வரிகளைக் கடந்து போவதற்கு விளக்க முடியாத மனநிலை தேவைப்பட்டது. புலிகளின், குறிப்பாக பிரபாகரனின் மீதான ஆராதனைகள் முடிவுக்கு வந்துவிட்டன போலும். நெருப்புக் கோழிகள் மண்ணிற்குள் தலை புதைத்துக்கொண்டாயிற்று. ஈழப் போரை ஆழமாக அறிந்தவர்களிடமிருந்தும் பலிகளின் திருவிழாவாக அதை மேலோட்டமாகப் புரிந்துகொண்டவர்களிடமிருந்தும் போராளிகளின் மீதும் அவர்களது போர் உத்திகள்மீதும் முதலில் களிமண் உருண்டைகள் வீசப்பட்டன. பிறகு எரிகல். இப்போது சரம்சரமாக அம்புகள் எறியப்படுகின்றன. இப்போதைக்கு அவர்களது அம்பறாத்தூணி காலியாகப் போவதில்லை. நீண்ட காலப் போராட்டத்திற்குக் கடும் மனச்சோர்வை நோ

எதிர்வினை
 

உங்களை ‘அன்புள்ள’ என்று விளிப்பதில் எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. திரும்பத் திரும்பப் படித்தும் உங்கள் கட்டுரையில் ஒலிக்கும் குரல் யாருடையது என்பதை என்னால் விளங்கிக்கொள்ளவே முடியவில்லை. என்றாலும், ராஜபக்சேவைக் கொலைகாரன் என்றும், அவனது கூட்டாளியாக நின்று கொலை வெறிக்குத் துணைபோன ஒரு நாட்டின் குடிமகள் என்பதால் மிகுந்த அவமானத்தையும் வேதனையையும் அடைவதாகவும் துணிந்து கூறியுள்ள உங்களது வீரம் போற்றுதற்குரியது. ‘இன்னும் சில ஆண்டுகளில் எல்லாம் அழிந்து மண்ணோடு மண்ணாகக் குருதிச் சேற்றுக்குள் புதையுண்டு போய்விடும் என்பதை அறியாமல் அனைவரும் தத்தமது வீடுகளையும் கோவில்களையும் புதுப்பித்துக்கொண்டிருந்தார்கள்’ என்று எழுதியிருக்கிறீர்கள். நாம் சீரோடும் சிறப்போட

எதிர்வினை
 

ஆகஸ்டு ’09 இதழில் ப்ரேமா ரேவதியின் ‘அன்புள்ள தமிழினி’ கட்டுரை வாசித்தேன். 04.07.2009 அன்று சென்னையில் நடைபெற்ற கூட்டத்தில் பங்கேற்றுப் பேசிய சிராஜ் மசூரின் உரை அக்கட்டுரையில் விமர்சிக்கப்பட்டிருந்தது. இதழொன்றின் நேர்காணலுக்காகத் தோழர் சிராஜ் மசூருடன் உரையாடியிருப்பதோடு, ப்ரேமா ரேவதி குறிப்பிடுகிற அந்தக் கூட்டத்தின் உரைப் பதிவையும் கேட்டிருப்பதால், அக்கட்டுரையில் உள்ள உண்மைக்குப் புறம்பான செய்திகளை மறுக்கிறேன். அவர் ‘(சிராஜ் மசூர்) கூறியவை ஏற்றுக்கொள்ளக்கூடியவையாய், முக்கியமானவையாயிருக்கலாம். ஆனால் அவர் கூறாத விஷயங்களும் முக்கியமானவை’. (ப்ரேமா ரேவதி) சிராஜ் மசூரின் பேச்சிலும் அந்தக் கூட்டத்திலும் நீங்கள் கவனிக்கத் தவறிய விஷயங்கள்கூட மு

எதிர்வினை
 

காலச்சுவடு (ஆகஸ்டு 2009) இதழில் ‘சீனாவின் சந்தர்ப்பவாதக் கூட்டணி’ என்னும் தலைப்பில் சூரியதீபன் எழுதியுள்ள கட்டுரையில் எங்கோ தொலைவிலிருக்கின்ற ருசியா, சீனா, கியூபா, பொலிவியா, நிகராகுவா, வெனிசுலா போன்ற சோஷலிஷ கம்யூனிஸ நாடுகள், இலங்கையை ஆதரித்ததற்காகச் சாடியுள்ளார். இலங்கையின் அண்டை நாடான அந்நாட்டின் சனக் கூட்டத்தோடு பண்பாட்டு நாகரிகக் குருதி உறவுடைய பிராந்திய வல்லரசான இந்தியாவின் இனப்படுகொலை ஆதரவு வெளியுறவுக் கொள்கையை ‘வியப் பூட்டக்கூடியதல்ல’ என்ற ஒற்றை வரியில் எளிதாகக் கடந்து சென்றுவிட்டார். இலங்கை இனப்படுகொலையில் இந்தியாவின் பங்கு என்பது ஒற்றை வரித் திரை கொண்டு மூடக்கூடிய விடயமல்ல. ருசியா, சீனாவுடன் இலங்கை இனப்படுகொலையை ஆதரித்த நாடுகள் ச

பத்தி
கண்ணன்  

ஆழ்மனதின் நீரோட்டம் நமது பகுத்தறிவுக்கு அப்பாலான விஷயங்களை விளங்கிக்கொள்வது எப்படி? பகுத்தறிவுவாதிகளுக்கும் அல்லாதவர்களுக்கும் வாழ்வின் கணிசமான நிகழ்வுகள் பகுத்தறிவால் விளங்கிவிடக் கூடியவை அல்ல. உள்ளுணர்வின் வழிகாட்டுதலை - மனிதர்களை எதிர்கொள்ள, நிகழ்வுகளைப் புரிந்துகொள்ள - ஏற்றுக்கொண்டே அன்றாட வாழ்வில் பலரும் எதிர்வினை புரிகிறோம். ஒருவரைப் பார்த்த உடன் எதிர்மறை உணர்வுகள் ஏற்படுவதும் மற்றொருவரைப் பார்த்ததும் நட்புணர்வு தோன்றுவதும் இயல்பு. ஒரு பொருளை, ஒரு எழுத்தைப் பார்த்ததும் சில வினாடிகளில் அசல், போலி என்ற எண்ணம் ஏற்படுகிறது. புத்தகக் கடைகளில் நூல் நிலையங்களில் நூல்களைப் புரட்டும்போது அவை பற்றிய மதிப்பீடுகளும் அவ்வாறு ஏற்படுவதுண்டு. இவ்வுணர்வுகளை நாம் விளங்கிக்க

கட்டுரை
கானகன்  

‘என்ன செய்யலாம் ஊடகங்களை?’ என்று விடுதலைப்புலி ஆதரவாளர்கள் கொதித்துக்கொண்டிருக்கிறார்கள். ஏதோ என். ராமும், சோவும் சேர்ந்து தமிழர்களுக்கு எதிராகச் சதி செய்து, மத்தியில் உள்ள பார்ப்பன, பனியா அரசை மயக்கி, ஒரு விடுதலைப் போரையே உருக்குலைத்துவிட்டார்கள் என்ற ரீதியில் தமிழ்த் தேசியவாதிகள் பேசுகிறார்கள். சோவை விட்டுவிடுவோம்; அவர் தில்லானா மோகனாம்பாள் மனோரமாவைப் போல், திருவிழாவில் ஒரு மூலையில் இருந்துகொண்டு ஏதாவது கூறிக்கொண்டிருப்பார், அவருடைய ரசிகர் குழாம் கேட்டு ரசித்துக்கொண்டிருக்கும். அதனால் பெரிய அளவில் பாதிப்பெல்லாம் இல்லை. ஆனால் ராமை இலங்கைத் தமிழர் பிரச்சினையில் எவ்வளவு விமர்சித்தாலும் தகும். இதழியல் நேர்மை என்றாலும் சரி, மனிதநேயம் என்றாலும் சரி, எ

பத்தி
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

பின்-நவீனவாதிகளின் குணாதிசயங்களில் ஒன்று இருந்தாற்போல் திடீர்த் திடீரென்று மரண அறிக்கைகளை வெளியிடுவது. ஆசிரியர் இறந்துவிட்டார் என்றார்கள். பிறகு பிரதி செத்துவிட்டது என்று சொன்னார்கள். வரலாறு மரணித்துவிட்டது என்று பறை அடித்தார்கள். இதே வரிசையில் சிறுகதை என்ற இலக்கிய வகைமைக்கு முடிவுகாலம் வந்துவிட்டது என்று இரங்கல் கூட்டங்கள் நடத்தினார்கள். பின்-நவீனவாதிகளின் ஆருடங்கள் கிளி ஜோசியத்திற்கு மதிப்பையும் மரியாதையையும் தருவதாகும். சிறுகதை என்னும் இலக்கிய மரபு இன்னும் உயிருடன் இருக்கிறது. அச்சு உலகை முற்றிலுமாகத் திசை திருப்பாவிட்டாலும் சமீபத்தில் வெளிவந்த ஆங்கிலச் சிறுகதைத் தொகுப்புகள் இலக்கியப் போக்குகளைச் சற்று நகர்த்தியிருக்கின்றன. அவற்றில் சில திரட்டுகளை இங்கே அறிமுகம் செய்க

விஸ்லாவா சிம்போர்கா  

விஸ்லாவா சிம்போர்கா விஸ்லாவா சிம்போர்கா மேற்கு போலந்தில் 1923இல் பிறந்தவர். உலகளவில் முக்கிய மொழிகளில் எல்லாம் அவரது கவிதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. தமிழிலும் - சிம்போர்காவுக்குத் தெரியாது என்றாலும் - மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறார். மிக எளிமையான கவி. காட்சி அளிக்கும் அளவிற்கு எளிமையானவரும் அல்ல. இயற்கையின் அழகு அளிக்கும் ஆச்சரியத்தையும், காதல், அன்பு ஆகியவற்றின் இளிவரலையும், கலையின் மாயத்தன்மையையும் வெளிப்படுத்தியவர். சிம்போர்காவின் குரல் மென்மையானது. அவரது சாதுவான நகைச்சுவை உணர்வு, இறுகிப்போய்விட்ட நிறுவனங்களின் அஸ்திவாரங்களைத் தோண்டும் குணம் கொண்டது. சாதாரணத்திலிருந்து அசாதாரணத்தைச் சலித் தெடுப்பதில் வல்லமை கொண்டவர். 1996ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசு ப

விஸ்லாவா சிம்போர்கா  

ஒரு மணல் துகளுடன் கூடிய காட்சி நாம் அதை மணல் துகள் என்றழைக்கிறோம், ஆனால் அது தன்னை துகள் என்றோ மணல் என்றோ அழைத்துக்கொள்வதில்லை. பொதுப்பெயரோ, குறிப்பிட்டதோ, நிரந்தரமானதோ, நிலையற்றதோ , தவறானதோ, கச்சிதமானதோ. பெயரின்மையிலேயே அது திருப்திகொள்கிறது, நமது பார்வையும், நமது ஸ்பரிசமும் அதற்கொரு பொருட்டல்ல. தான் பார்க்கப்படுவதையும் தொடப்படுவதையும் அது உணர்வதில்லை. அது சன்னல் படிக்கல்லின் மீது விழுந்தது என்பது நம் அனுபவமே, அதனுடையதன்று. அதனைப் பொறுத்தவரை, விழுந்து முடித்துவிட்டதா அல்லது விழுவது தொடர்கிறதா என்கிற எந்த நிச்சயமும் இன்றி வேறெதன் மீதும் விழுவது போலதான் இதுவும். இந்தச் சன்னல் வழியே ஏரியின் அற்புதமான காட்சியொன்று. ஆனால் இந்தக் காட்சி தன்னையே காண்பதில்லை.

சிறுகதை
 

“ஆபிரகாம் அதிகாலையில் எழுந்து தன் கழுதையின் மேல் சேணங்கட்டி தன் வேலைக்காரர்களில் இரண்டு பேரையும் தன் குமாரன் ஈசாக்கையும் கூட்டிக்கொண்டு தகனபலிக்குக் கட்டைகளையும் பிளந்துகொண்டு தேவன் தனக்குக் குறித்த இடத்திற்குப் புறப்பட்டுப் போனான். ஈசாக்கு, ஆபிரகாம் - சாராள் தம்பதியரின் ஏகபுத்திரன். தனது முதிர் வயதில், அதாவது நூறாவது வயதில் ஆண்டவரிடம் கேட்டுப்பெற்ற பிள்ளை. கொடுத்த ஆண்டவரே இப்போது குழந்தையைக் கேட்கிறார். வாசித்துப் பாருங்கள், ஆதியாகமம் இருபத்தி இரண்டாம் அதிகாரம் இரண்டாம் வசனம்: ‘அப்பொழுது அவர்: உன் புத்திரனும் உன் ஏகசுதனும் உன் நேசகுமாரனுமாகிய ஈசாக்கை நீ இப்பொழுது அழைத்துக்கொண்டு மோரியா தேசத்துக்குப் போய், அங்கே நான் உனக்குக் குறிக்கும் மலைகள் ஒன்றின

கட்டுரை
க. திருநாவுக்கரசு  

‘‘நூரெம்பர்க் சட்டங்கள் பிரயோகிக்கப்படும் என்றால் (இரண்டாம் உலகப்) போருக்குப் பிந்தைய அமெரிக்க ஜனாதிபதிகள் அனைவரும் தூக்கிலிடப்படுவார்கள்.’’ - நோம் சோம்ஸ்கி அப்படித் தூக்கிலிடப்படுவதில் முதலாவது ஆளாக ஜார்ஜ் வாக்கர் புஷ் இருப்பார் என்பது நிச்சயம். இரண்டாம் இடத்திற்கு அமெரிக்க ஜனாதிபதிகள் மத்தியில் போட்டி நிலவக்கூடும். அதே நூரெம்பர்க் சட்டங்களை ஐரோப்பியத் தலைவர்களுக்குப் பிரயோகித்தால் தூக்கிலிடப்பட வேண்டியவர்களில் முதலாவது ஆளாக பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர் இருப்பார் என்பதில் எந்தச் சந்தேகமும் தேவையில்லை. ஆனால் நூரெம்பர்க் விசாரணைகள் இரண்டாம் உலகப் போரில் வெற்றிபெற்றவர்களால் தோல்வியுற்றவர்கள்மீது நடத்தப்பட்டவை. இவ்விசாரணைகளும் த

பத்தி வேறுவேறு
பெருமாள்முருகன்  

இவ்வாண்டு பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வில் மாநில முதல் மதிப்பெண் பெற்று ஊடக முக்கியத்துவம் கிடைத்திருக்க வேண்டிய மாணவர் ஒருவருக்கு விடைத்தாள் மதிப்பீட்டில் ஆசிரியர் செய்த தவறால் அந்த வாய்ப்பு பறிபோயிற்று. அம்மாணவர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பித்துக் கூடுதல் மதிப்பெண் பெற்றிருக்கிறார். ‘இது மனிதத் தவறு’ என்று ஒப்புக்கொண்ட பள்ளிக் கல்வி அமைச்சர், மாநில முதல் மதிப்பெண் பெறும் மாணவருக்குரிய அரசு சலுகைகள் அனைத்தும் அம்மாணவருக்கும் வழங்கப்படும் என்று அறிவித்திருக்கிறார். மறுமதிப்பீட்டில் சில மாவட்ட (திருவள்ளூர், நாமக்கல்) முதல் மதிப்பெண்களும் மாறியிருக்கின்றன. பொதுவாகப் பத்தாம் வகுப்பு, பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள்கள் மிகுந்த கவனத்துடன் மதிப்பீடு செய்யப்படுகின்றன

அஞ்சலி
 

Moebius feels that three elements Must come together for the artist. beauty, truth and love If they are present in the heart, mind and soul of the artist, it will show in the art, ant it will be recognized by the people seeing the art a connection will be made from artist to viewer. உலகப் பிரசித்தி பெற்ற காமிக் புத்தக ஓவியர் மோபியஸ் நினைப்பதாகச் சொல்லப்படுகிற இந்த வார்த்தைகள் எல்லாக் கலாபூர்வமான வெளிப்பாட்டுக்கும் பொதுவானவைதான் என்பதில் மாற்றுக் கருத்தே கிடையாது. ஓவியக் கல்லூரி நாட்களிலிருந்து, திடீரென நம் கண்முன்னே கடந்து போகும் சில ஓவியங்கள் அவற்றின் படைப்பாளிகளையும் அவர்களது அனைத்துப் படைப்புகளையும் எப்போதும் தேட வைக்கும் சக்தி கொண்டவையாக இன்றுவரை நான் உணர்ந

 

ஈழத்துச் சமகாலப் பெண்ணெழுத்தை அடையாளப்படுத்தும் முகங்களில் ஒன்று அனார். இந்தக் கவிதைகளைப் பெண்ணியக் கவிதைகள் என்று வகைப்படுத்த முடியுமா என்பதில் எனக்குத் தயக்கமிருக்கிறது. பெண்ணியம் என்பது ஒவ்வொருவருக்கும் வெவ் வேறாகப் பொருள்படுகிற கருத்தாக்கம். சொல்லும் வாய்களையும் உதடுகளையும் கேட்கும் காதுகளையும் பொறுத்து அது பொருள்படுகிறது. பெண்ணாக இருப்பதால் அனுபவிக்க நேரும் சமூகச் சிறுமைகளுக்கும் உடல்சார்ந்த புறக்கணிப்புகளுக்கும் பண்பாட்டுத் தரப்படுத்துதல்களுக்கும் மறுப்பான நிலை என்று தோராயமாகப் பொருள்கொள்ளலாம். எனக்குக் கவிதை முகம் அனார் காலச்சுவடு 669, கே.பி.சாலை, நாகர்கோவில் - 629 001 பக்.: 56, விலை: ரூ. 40 முதல் பதிப்பு: செப். 2007 பெண் காலங்காலமாக அவளுடைய உடல்

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது  

ஒரு மாமரமும் கொஞ்சம் பறவைகளும் தோப்பில் முஹம்மது மீரான் அடையாளம், 1205/1, கருப்பூர் சாலை, புத்தாநத்தம்- 621 310 பக்.: 104, விலை: ரூ. 65 முதல் பதிப்பு: 2008 “மண் சார்ந்த மக்கள் இன்றைய உலகமயமாக்கலின் விளைவாக எவ்விதம் பாதிப்புக்குள்ளாகிக் கொண்டிருக்கிறார்கள்” என்கிற குறிப்புகளுடனேயே இந்த நூல் வெளியாகியிருக்கின்றது. உலகமயமாக்கல் நம் கலாச்சாரத்தை யும் நம் மண்ணையும் அதன் வளங்களையும் சூறையாடிச் செல்லும் வேகம் எல்லோரையுமே பீதிக்குள்ளாக்குகின்றது. பூமியின் பருவகாலங்களை நாசப்படுத்தி நம் இருப்பையும் கேள்விக்கு உட்படுத்திவிட்டது. அதைவிடவும் கொடுமையானது மக்களின் - ஏழை நாடுகளின் மனநிலையையே அது தனக்குச் சாதகமாக வளைத்திருப்பது! (அண்மைய நாடாளுமன்றத் தேர்தல் முடி

பதிவுகள்
யுகன்  

ஆகஸ்ட் 14, 2009 அன்று இன்டாச் அமைப்பு மயிலாப் பூரிலுள்ள லேடி சிவசாமி மேல்நிலைப் பள்ளியில் காலச்சுவடு பதிப்பித்த ‘மெட்ராசில் மிருது’ என்னும் புத்தகத்தை வெளியிட்டு இந்த ஆண்டு மெட்ராஸ் வாரக் கொண்டாட்டத்தைத் தொடங்கியது. வஸந்தா சூரியாவின் ‘மிருது இன் மெட்ராஸ்’ என்னும் ஆங்கிலப் புத்தகத்தின் தமிழாக்கம்தான் ‘மெட்ராஸில் மிருது’. ஆசிரியர் வஸந்தா சூரியாவுடன் இணைந்து பிரேமா ஸ்ரீனிவாசன் மொழிபெயர்த்துள்ளார். இது சிறுவர்களுக்கான கதைப் புத்தகம். பள்ளியின் முதல்வரும் ஆசிரியர்களும் மாணவ மாணவியரும் திரளாகக் கலந்துகொண்ட இந்த எளிய நிகழ்வில் ஓவியர் மருது இப்புத்தகத்தை வெளியிட்டார். தனக்கும் லேடி சிவசாமி அய்யர் மேல்நிலைப் பள்ளிக்குமுள்ள நீண்ட கால உறவை நினைவ

பதிவுகள்
நஞ்சுண்டன்  

கே. வி. சுப்பண்ணாவின் (1932-2005) தேர்ந்தெடுக்கப்பட்ட கன்னடக் கட்டுரைகளின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல் 26 ஜூலை 2009 அன்று பெங்களூரில் வெளியிடப்பட்டது. ஞாயிற்றுக்கிழமைக் காலை 9:30 மணிக்கு இசை நிகழ்ச்சியோடு விழா தொடங்கியது. சுப்பண்ணா கன்னடத்தின் மிக முக்கியமான சிந்தனையாளர்களில் ஒருவர். மைசூர்ப் பல்கலைக்கழகத்தில் குவெம்புவின் மாணவராகக் கன்னட இலக்கியம் படித்த சுப்பண்ணா சிவமொக்கா மாவட்டத்தில் தன் சொந்தக் கிராமமான ஹெக்கோடு திரும்பிப் படிப்படியாக அதைக் கர்நாடகத்தின் பண்பாட்டுத் தொட்டிலாக மாற்றியவர். அகிரா குரஷோவா, சத்யஜித் ரே போன்ற பெயர்களை ஹெக்கோடு வீடுகளில் புழங்கும் பெயர்களாக்கியவர். காளிதாஸனின் நாடகங்களையும் ராம் மனோகர் லோகியாவின் Intervals in Politicsஐயும் கன்னடப்பட

பதிவுகள்: அற்றைத் திங்கள், 2008 டிசம்பர் 12, சேலம் தமிழ்ச் சங்கம்
அ. கார்த்திகேயன்  

கடந்த டிசம்பர் 12, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக் கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் மார்க்சிய அறிஞர் கோவை ஞானி கலந்துகொண்டார். முப்பதாண்டுகளுக்கு மேலாக மார்க்சியம், தமிழியம், பெரியாரியம், தலித்தியம், பெண்ணியம் போன்ற நோக்கில் தொடர்ந்து திறனாய்வுக் கட்டுரைகள் எழுதிவருகிற அவரை சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க. வை. பழனிசாமி அறிமுகப்படுத்தினார். தமிழ் எனக்குத் தந்திருப்பது ஏராளம், பதிலுக்கு தான் தமிழுக்குத் தந்திருப்பதோ வெகு சொற்பம் எனத் தொடங்கிய அவர் அரசியல், பொருளியல் என எந்தத் துறையிலாகட்டும் தற்போது ஒரு பேரழிவு தொடங்கிவிட்டதாகவும் அப்படியொரு பேரழிவு நிகழ்வதற்கு நாமும் ஒருவகையில் தெரிந்தோ தெரியாமலோ காரணமா

பதிவுகள்: 02.08.2009, ஓட்டல் பார்க் பேலஸ், ஈரோடு
இர. வெள்ளியங்கிரி  

‘பலி’ என்னும் தன் முதல் சிறுகதைத் தொகுப்பின் மூலம் பரவலான வாசகக் கவனம் பெற்றவர் தேவிபாரதி. அதற்குப் பிறகு ஏனோ அந்தக் கவனத்தைத் தக்கவைத்துக்கொள்ளவில்லை. விமர்சனக் கட்டுரைகள், சில கவிதைகள், நாடகம் என அவ்வப்போது இலக்கியச் சூழலுக்குள் தன் அடையாளத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்தவர் 2000க்குப் பிறகு எழுதிய நான்கு நெடுங்கதைகளின் தொகுப்பு காலச்சுவடு பதிப்பக வெளியீடாகப் ‘பிறகொரு இரவு’ என்னும் தலைப்பில் கவிஞர் சுகுமாரனின் முன்னுரையுடன் வெளிவந்துள்ளது. 2008இல் காலச்சுவடு இதழில் ‘அறியப்படாத காந்தி’ என்னும் தலைப்பிலான காந்தி பற்றிய சிறப்புப் பகுதியில் இடம்பெற்று வாசகர்களின் பாராட்டைப் பெற்ற கதை அது. தவிர காலச்சுவடில் வெளிவந்த வேறு இரண்டு நெடுங்கதை

விவாதம்
 

[காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ள ந. முருகேசபாண்டியனின் ‘அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில். . . (சங்கப் பெண் கவிஞர்கள் முதல் ஆண்டாள்வரை)’ தொகுப்பும் உரையும் நூலுக்கு தி. இராஜரெத்தினம் எழுதியிருந்த விமர்சன உரையை முருகேசபாண்டியனுக்கு அனுப்பினோம். இந்த விமர்சன உரை தொடர்பான தனது கருத்துகளை எழுதியிருந்தார் அவர். இரண்டும் இவ்விதழில் இடம்பெற்றுள்ளன.] - ஆசிரியர் உலகின் எல்லா மொழி இலக்கியங்களிலும் ‘தொகுப்பு நூல்களின்’ பங்களிப்பு இன்றியமையா இடத்தைப் பெறுகின்றது. தமிழின் மிகச் சிறந்த நூல்களான சங்க இலக்கியங்கள் தொகுப்பு நூல்களே. திணை, அடிவரையறை முதலியவற்றை அடிப்படைகளாகக் கொண்டு தொகுக்கப்பட்ட சங்க இலக்கியத்தை ஆசிரியர் வரிசையில் ‘பாட்டும் தொகையும்&rsquo

பதிவுகள்: 8.8.2009, ஸ்பேஸஸ் கட்டட அரங்கு, சென்னை
செல்லப்பா  

கவிஞர் சல்மா எழுதி, காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட, ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’ தமிழ் இலக்கிய உலகில் வரவேற்பையும் சர்ச்சைகளையும் ஒருசேர உருவாக்கிக்கொண்ட நாவல். குறிப்பிட்ட ஒரு சமூகத்தின் செயல்பாடுகளால் உந்தித்தள்ளப்பட்ட படைப்பு மனம் அச்சமூக நெருக்கடிகளைப் புறந்தள்ள படைப்பில் இறங்கும்போது, அதில் பீறிடும் உண்மையின் வீச்சு அக்குறிப்பிட்ட சமூகத்தின் வேர்களை அசைத்துப் பார்க்கும். அடிவருடும் நகல்களைவிடப் பிடறி இழுக்கும் அசலான படைப்புகளே சமூகத் தேவை. இத்தேவையைப் புரிந்துகொண்டு அதோடு ஆழ்மனம் ஒன்றிணைய வெளிப்படும் படைப்புக்கு உதாரணம் ‘இரண்டாம் ஜாமங்களின் கதை’. பிரகதி ஃபவுண்டேஷன் சார்பில் 2009, ஆகஸ்டு 8 அன்று சென்னை பெசண்ட் நகர் ஸ்பேஸஸ் கட்டட அரங்கில் நடைபெற்

பதிவுகள்
 

தலித் சுயசரிதை இப்போது தலித் இலக்கியத்தின் முக்கியமானதொரு அங்கமாக மாறிவிட்டது. அவை இந்திய மொழிகளிலும் ஆங்கிலத்திலும் உடனுக்குடன் மொழி பெயர்க்கப்படுகின்றன. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட கே.ஏ. குணசேகரனின் ‘வடு’ என்ற சுயசரிதை இப்போது ஆங்கிலத்தில் ‘தி ஸ்கார்’ என்ற பெயரில் வெளிவந்திருக்கிறது. ஆசிரியரின் அனுப வங்களின் தொகுப்பாக மட்டுமின்றி அந்தக் காலத்தின் பதிவாகவும் இருக்கிறது. தன்னைப் படிக்கவைக்கத் தனது தந்தை பட்ட சிரமங்களைச் சொல்லும் போதும், அந்தக் காலத்திலேயே எட்டாம் வகுப்புவரை படித்திருந்த தன் தாய் சினிமா கொட்டகையில் டிக்கெட் கொடுத்து, விறகு வெட்டி, புல்லறுத்து விற்றுத் தன்னைக் காப்பாற்றியதைச் சொல்லும்போதும் நம்மிடம் இரக்கத்தைக் கோராத, ஆன

எதிர்வினை
மலர்மன்னன்  

காலச்சுவடு ஆகஸ்டு 2009 இதழில் அ. ராமசாமியின் ‘ஒரு நாவலின் வெற்றி’ சுகிர்தராணியின் ‘குடியும் சாதி நிமித்தமும்’ ஆகிய கட்டுரைகள் ஒப்புக்கொள்ளவும் வரவேற்கத்தக்கனவுமான பல கருத்துகளை வெளியிட்டுள்ள போதிலும், போகிற போக்கில் அவர்கள் சொல்லிவிட்டுப் போகும் சில அபிப்பிராயங்கள் கட்டுரைகளை விவாதத்திற்குரியனவாக்கிவிடுகின்றன. முதலில் ராமசாமி தமது கட்டுரையில், ‘கருத்தியல் ரீதியாக நால் வருணம் பற்றிப் பேசும் இந்தியச் சாதிமுறை நடை முறையில் வெவ்வேறு அடுக்குகளைக் கொண்டது’ என்று சொல்வதைப் பார்ப்போம். இந்தியச் சமூகத்தின் சாதிமுறை நடைமுறையில் வெவ்வேறு அடுக்குகளைக் கொண்டது என்று மட்டும் அவர் குறிப்பிட்டிருக்கும் பட்சத்தில் பிரச்சினை இல்லை. ஆனால் கருத

நாகரத்தினம் கிருஷ்ணா  

டிசம்பர் 8இல் லெவி ஸ்ட்றோஸ் குறித்த கட்டுரையை முன்வைத்து, ஜூன் ‘09 இதழில் எழுதப்பட்டிருந்த ‘சமூக அறிவியலும் சமுதாயமும்’ கட்டுரை வழங்கியுள்ள யோசனைக்கும் எழுப்பியுள்ள லெவி ஸ்ட்றோஸ் தொடர்பான கேள்விகளுக்கும் பதில்: லெவி ஸ்ட்றோஸின் மற்றும் இதர ஐரோப்பியர்களின் வரலாற்றுப் பின் புலத்தை நன்கறிந்து எழுதப்பட்ட அக்கட்டுரை இரண்டு பகுதிகளாக உள்ளது: முற்பகுதி லெவி ஸ்ட்றோஸ், மானுடவியல், பழங்குடியினர் - தொடர்பு என்ன? என்ற கேள்வியை முன்வைத்தும், பிற்பகுதி சமுதாய அறிவியலும் சமுதாயமும் என்று அக்கட்டுரைத் தலைப்பிற்கெனவும் எழுதப்பட்டிருந்தன. இரண்டிலும் பொதுவான கருத்தியல் ஒன்றே ஒன்றுதான் மேற்கத்தியர்கள் சிந்தனை என்பது அவர்களை மையமாகக்கொண்டது, அதாவது தம்மை மையமாகவைத்

தலையங்கம்
 

சுமார் ஒருகோடி ஏழைக் குடும்பங்கள் பயன்பெறத் தக்க வகையில் சென்ற மாதம் முதல் தமிழக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டிருக்கும் உயிர் காக்கும் சிகிச்சைக்கான ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ இந்தியாவிற்கே முன்னோடியான, திமுக அரசின் உச்ச சாதனை என ஆளும் தரப்பினரால் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் அத்திட்டத்தின் மீதான விமர்சனங்களும் கூர்மையடைந்து வருகின்றன. 20.08.2009 அன்றைய ‘தீக்கதிர்’ நாளிதழில் இத்திட்டத்தை விமர்சித்து ஆர். சிங்காரவேலு எழுதிய ஒரு கட்டுரைக்குக் கடுமையாக எதிர்வினையாற்றியிருக்கிறார் முதல்வர். திட்டம் குறித்து அக்கட்டுரையில் எழுப்பப்பட்டிருக்கும் அடிப்படையான கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் வழக்கப்படி புள்ளிவிவரங்களை அடுக்கியிருக்கிறார். அரசின் திட்டங்களை

 

‘சமச்சீர் கல்வி - நிறைவேறாத கனவு’ தலையங்கம் நிறைய விஷயங்களை மறுபரிசீலனைக்குட்படுத்தியிருந்தது. அனைவருக்கும் தரமான இலவசக் கல்வி என்பது மேனிலைப் பள்ளிவரை, தமிழ் வழியில்தான் என்றிருந்தால், சாத்தியப்பாடு, சுருங்கிய காலத்தில் ஏற்படும். ஆங்கில வழிக் கற்பிக்கும் கல்வி நிலையங்கள் உண்டாக்கும் ‘மாயப் பிரமைகள்’ உடைத்தெறியப்பட வேண்டும். புறவயமான உடைகளும் உதட்டோரம் தெறிக்கும் ஆங்கிலச் சொற்களும் பெற்றோர்களைக் கனவுலகத்தில் தொங்கவிடுகின்றன. ஆங்கிலம் வழிக் கற்பிக்கும் கல்வியகங்கள் பெரும்பாலானவற்றின் உள்நோக்கம், மாணவர்கள், ஆசிரியர்கள் சுரண்டப்படுவது என்பதையெல்லாம், அரசும் இது போன்ற விஷயங்களில் ஈடுபாடு கொண்ட குழுக்களும் ஆராய்ந்து வெளிப்படுத்த வேண்டும். அரசிய

உள்ளடக்கம்