கட்டுரை
ஆ. இரா. வேங்கடாசலபதி  

அயர்லாந்தின் தலைநகர் டப்ளின் விமான முனையத்தில் நான் தரை இறங்கிய நாள் ப்ளும்ஸ்டே 2006. ஜேம்ஸ் ஜாய்ஸின் ‘யூலிஸஸ்’ நாவல் முழுவதும் டப்ளின் நகரைக் களமாகவும் 16 ஜூன் 1904ஐக் காலமாகவும் கொண்டதால் ஒவ்வொரு ஜூன் 16ஐயும் ப்ளும்ஸ்டே என்று கொண்டாடுகிறார்கள். எனது அயர்லாந்து பயணத்தில் தற்செயல் நிகழ்வுகளுக்குக் குறைவில்லை. இந்தியக் கடவுச்சீட்டை வைத்துக்கொண்டு இலண்டனிலுள்ள அயர்லாந்து தூதரகத்தில் விசா பெறுவது எளிதாக இல்லை. தூதரக அலுவலருக்குக் ‘கலெக்டர்’ என்பதற்கு என்ன பொருள் என்று விளக்கி மாய்ந்து போனேன். டப்ளின் விமான முனைய விராந்தைகள் உலகக் கால்பந்துப் போட்டியின் பரபரப்பில் அலைவுற்றிருந்தன. அல்லற்பட்டு வாங்கிய விசாவைப் பார்க்கத்தானும் குடியேறல் வரிசையில்

இலங்கை
 

அன்பிற்குரிய கண்ணன் இன்றுதான் குறித்த பதிவைப் பெற்று அனுப்ப முடிந்தது. செப்டம்பர் இதழுக்கு உங்களுக்கு மிகவும் தாமதமாகக் கிடைத்திருக்கிறது என நினைக்கிறேன். இதை முகாமிலிருக்கும் நண்பரிடமிருந்து வாங்கிப் பெறுவதற்குள் பல்வேறு சிக்கல்கள். இதை வாங்கிக்கொண்டு பஸ்ஸில் பயணம்செய்வது முதல் ஸ்கான்செய்து அனுப்புவதுவரை எல்லாமே பாதுகாப்பற்றவையாக இருந்தன. சென்றமுறை இவற்றை டைப்செய்து அனுப்பலாம் என முயன்றதில் 25 பக்கங்கள்வரை முடிந்த வேளை எனது கணினி பழுதடைந்துவிட்டது. இம்முறை எனக்கு டைப் செய்யுமளவுக்கு மனநிலை இல்லை. என் குடும்பமும் தடுப்பு முகாமில் வாழ்வதால் அவர்களைச் சென்று பர்வையிட நேர்ந்தது. அதனால் தான் இப்பதிவை வாங்கி அனுப்பத் தாமதமாகிவிட்டது. தடுப்புமுகாம்களில் இப்போதிருக்கிற நிலவரம் ம

இலங்கை: நலன்புரி முகாம்கள்
தொகுப்பு: அநாமதேயன்  

‘ரமேஷ் குலநாயகம்’ இளந்தலைமுறையைச் சேர்ந்த சமகால அரசியல் பகுப்பாய்வாளர். யாழ் பல்கலைக்கலைக்கழகத்தில் அரசியல் விஞ்ஞானத்தைச் சிறப்புப் பாடமாகக் கற்றுத் தன் உயர்கல்வியை முடித்தவர். அண்மைக் காலம்வரை ஓர் அரசுச் சார்பற்ற அமைப்பில் பணியாற்றிவந்ததுடன் வவுனியாவிலுள்ள நலன்புரி நிலையங்களுக்கும் சென்று நிலைமைகளை அவதானித்து வெளியுலகுக்குத் தெரியப்படுத்திவந்தார். இதனால் தற்போது அரசாங்கப் புலனாய்வுப் பிரிவினரால் தேடப்பட்டுவருகிறார். இந்நேர்காணல் ‘ரமேஷ் குலநாயகம்’ தேடப்படுவதற்குச் சில நாள்கள் முன்பாகத் தொலைபேசி வழியாகப் பதிவுசெய்யப்பட்டது. இப்போது ‘ரமேஷ் குலநாயகம்’ எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. புல்மோட்டைப் பகுதியில் அமைக்கப்பட்டிருக்கும் நலன்புரி

ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்  

க்ராஸ்டாக் (அல்லது குறுக்குச்சால்) இப்படித்தான் அன்னைக்கி ஆத்தில என்ன நடந்ததுனா சைக்கிள் காரு மீனுக்கில்லை காலு பர்ஸ்ட் க்ளாஸ் பாட்டு போட்டான்யா ஓரம்போவில கருமத்தைப் பேசாதே சிரித்துச் சிரித்து என்னைச் சிறையிலிட்டாய் ஆஹஹா பொம்பளை சிரிச்சாப் போச்சு சிரிப்பாச் சிரிச்சிரும் கதை அப்புறம் கதைக்குக் காலு கை முளைச்சி ஆண்குறியும் பெண் அதிகாரமும் வெவ்வேற வீடுகளுக்குப் போவதுதான் கலசம், அரசி, கோலங்கள் ஏழைகளின் வாழ்வில் விளக்கேற்றுவோம் வா மானாடி மயிலாடி அய்யா ஏற்கெனவே திட்டிப்புட்டாரு கையைக் காலை வச்சுக்கிட்டுச் சும்மா இருக்கமாட்டீங்களா பட்டாணி சுண்டல் சுக்குக்காப்பி சரி சரி சும்மா டைம்பாஸுக்கு சனியனே மேட்ச் பாக்கிறப்ப உயிரை வாங்காதே பிடிக்குங்களா காலிப்ளவர் பக்கோடா பக

கட்டுரை
இமையம்  

                                    ஞானி,                                     தன் பணியைத் தொடர்கிறான்                                     செயல்படாமையை மேற்கொண்டு &

சிறுகதை
யுவன் சந்திரசேகர்  

யோசித்துப் பார்க்கும்போது அமானுஷ்யம் என்னும் ஒன்றே கிடையாதோ எனத் தோன்றுகிறது. சென்னையின் புற நகர்த் தெருவில் நடந்தவாறு, காதோரம் உள்ளங்கையில் எதையோ வைத்துக்கொண்டு, சற்றே சித்தம் பிறழ்ந்தவன்போலத் தனக்குத்தானே உரத்துப் பேசிக்கொண்டு போகும் தன் பேரன் வாஸ்தவத்தில் அமெரிக்காவிலுள்ள அவனுடைய பேரனுடன் உரையாடுகிறான் என்று அறுபதுகளின் கடைசியில் அமரராகிவிட்ட என் தாத்தா இப்போது பார்த்தால் நம்புவாரா? அல்லது, என் அத்தையை எடுத்துக்கொள்ளுங்கள். அவள் பெயர் வனஜாட்சி. இளம் வயதிலேயே கணவரை இழந்தவள். ஒரே மகன் பட்டாளத்தில் இருந்தான். இன்னும் மணமாகாதவன். 71 பாகிஸ்தான் யுத்தத்தின்போது அத்தை எங்கள் வீட்டுக்கு வந்திருந்தாள் - என்னுடைய தாத்தா திவசத்துக்கு ஆசாரச் சமையலில் உதவு. அவள் வந்த மறு

கட்டுரைத் தொடர்: பசுமைப்புரட்சியின் கதை - 11
சங்கீதா ஸ்ரீராம்  

நம் நாட்டில் உணவுப் பற்றாக்குறை பெரும்பாலும் ஓர் அரசியல் பிரச்சினை என்பதைச் சென்ற கட்டுரையில் பார்த்தோம். மண், நீர் வளம், விதைத் தரம் போன்றவற்றில் குறைபாடுகள் இருந்தாலும் அவை மட்டுமே உணவுப் பற்றாக்குறை ஏற்பட அதிமுக்கியக் காரணங்கள் எனச் சொல்ல முடியாது. அவற்றைச் சரிசெய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுவந்தன; அவற்றுக்கு நல்ல பலன்களும் கிடைத்துவந்தன என்பதையெல்லாம் முந்தைய கட்டுரைகளில் விரிவாகப் பார்த்தோம். உணவுப் பிரச்சினையை எதிர்கொள்ள ‘பசுமைப் புரட்சி’ என்னும் முழுக்க முழுக்கத் தொழில்நுட்பம் சார்ந்த ஒரு தீர்வை அரசாங்கம் ஏன் முன்வைத்தது? இந்தப் பசுமைப் புரட்சித் தொழில்நுட்பத்தையும் அதன் தன்மையையும் புரிந்துகொண்டால் இந்தக் கேள்விக்கும் விடை கிடைக்கும். இரசாயன உரங்

 

இந்தியாவில் திரையிடப்படும் முன்னமே பர்மிங்ஹாம் சினிவேர்ல்ட் சினிமாவில் வெள்ளிக்கிழமை முதல் காட்சியில் ஆறு பேருடன் மிக அமைதியான அரங்கில் ஒரு தியானக் கூட்டத்தில் இருப்பதுபோல் இந்தப் படத்தைப் பார்த்தேன். வளமையான தமிழ் சினிமாவின் கலாச்சாரப் பண்புகளின் பெருமைகளான கூச்சல்கள், விசில்கள், கைத்தட்டல்கள் இல்லாமல் படத்தைக் கண்டு அனுபவித்தது கிரிக்கட் ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் ஒலியை நீக்கிவிட்டு வர்ணனையில்லாமல் பார்ப்பதுபோல் இருந்தது. ஒரு சில வரிகளில் திரைக்கதைச் சுருக்கம். தீவிரவாதம் ஏற்படுத்தும் வாழ்க்கை நிலைகுலைவுகளைத் தாங்க முடியாமல் குமுறும் பொது இந்தியர் ஒருவர் அக்கறையற்ற அரசைச் செயல்படவைக்கச் சென்னையில் ஐந்து இடங்களில் குண்டு வெடிக்கப்போவதாகக் காவல் துறை அதிகாரி ராகவன்

மதிப்புரை
தியடோர் பாஸ்கரன்  

ஆனந்தரங்கம் பிள்ளையின் நாட் குறிப்பு பத்தொன்பதாம் நூற்றாண்டுத் தமிழகத்திற்கு ஒரு சாளரமாகக் கிடைத்தது போல, 1920இல் இருந்து மூன்று பத்தாண்டுகளின் மொழி வரலாறு, நாடக வரலாறு, சுதந்திரப் போராட்டம், வெகுமக்கள் கலாச்சாரம் எனப் பல தளங்களைப் பிரதிபலிக்கும் பாஸ்கரதாஸின் நாட்குறிப்பு இன்று நூல் வடிவில் நம் கைக்குக் கிடைத் திருக்கின்றது. ஆய்வாளர்களுக்கு ஒரு மூலப்பொருளாக விளங்கக்கூடிய இந்நூல் தமிழ்க் கல்விப்புலத்தில் மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் மக்களைச் சென்றடைவதில்லை என்னும் ஆதங்கத்தைப் போக்கும் வகையில் அமைந்துள்ள ஆவணம். புதிய ஆய்வுத் தளங்களை ஆராய்ச்சியாளர்களுக்குத் திறந்துவைக்கின்றது இந்நூல். மதுரகவி பாஸ்கரதாஸின் நாட்குறிப்புகள் தொகுப்பாசிரியர் ச. முருகபூபதி பாரதி புத்தகாலயம்

பதிவு: நாரதகான சபா, ஆகஸ்ட் 31, 2009
அரவிந்தன்  

ரோகிணியின் நேர்த்தியான உடல் மொழியுடனும் பொருத்தமான குரல் பாவங்களுடனும் நிகழ்த்தப்பட்ட பெண்ணொளி நிகழ்வு, பன்முக ஊடகங்களின் துணையோடு பார்வையாளர்களுடன் உரையாட முனைகிறது. பாரதியின் பாஞ்சாலி சபதம் பிரதியை அடிப்படையாகக் கொண்டு பாஞ்சாலியின் துயரை, வாழ்நிலையை அணுகும் ப்ரஸன்னா ராமஸ்வாமியின் பிரதி, பாரதியைத் தன் பாணியில் நகல்செய்வதாக அல்லாமல் அந்தப் பிரதியினூடே சமகாலப் பார்வையுடனும் வெவ்வேறு பிரதிகளின் துணையுடனும் பயணிக்கிறது. ஃபேஷன் தொலைக்காட்சியில் இடையறாமல் ஓடும் காட்சிப் படிமங்களிலிருந்து தொடங்குகிறது ப்ரஸன்னாவின் பிரதி. வரையறுக்கப்பட்ட அழகுகளுடனும் சருமங்களுடனும் பவனிவரும் பெண்கள் தங்கள் உடல்களை முன்வைத்துப் பண்டங்களைச் சந்தைப்படுத்தும் முயற்சியில் ஈடுபடுகின்றனர். பண்டங்க

பதிவு: அற்றைத் திங்கள், 2009 மே 17, சேலம் தமிழ்ச் சங்கம்
அ. கார்த்திகேயன்  

கடந்த மே 17, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக் கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் எழுத்தாளர் சா. கந்தசாமி கலந்துகொண்டார். நாவலாசிரியர், சிறுகதையாளர், கட்டுரையாளர், குறும்பட இயக்குநர், பதிப்பாசிரியர் எனப் பல்வேறு ஆளுமைகள் கொண்ட அவரை சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க. வை. பழனிசாமி அறிமுகப்படுத்தினார். தான் விவசாயக் குடும்பத்தைச் சார்ந்தவன் என்றும் மிகச் சிறந்த வாழ்க்கை தனக்கு இருந்தது என்றும் நெகிழ்ந்த அவர், சகோதரரின் பராமரிப்பில் வளர்ந்த தான் எழுத்தாளராய் இருப்பதில் மிகுந்த மன மகிழ்ச்சி அடைவதாகவும் தன் குடும்பமும் அவ்வாறே உணர்வதாகவும் கம்பீரத்துடன் கூறினார். பொதுவாக இலக்கிய வாழ்க்கையை மேற்கொள்ளும் படைப்பாளிகள் வறுமையின்

பதிவு
சண்முகராஜா  

மதுரையை மையமாக வைத்து இயங்கிவரும் நிகழ் நாடக மய்யம் 2002இலிருந்து நாடகம் சார்ந்த பல்வேறு செயல்பாடுகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகிறது. குறிப்பாக நாடகத் தயாரிப்புகள், நாடக நிகழ்வுகள், நாடக விழாக்கள், நாடகம் நடிப்பு தொடர்பான பயிலரங்குகளைத் தமிழகம் முழுவதும் நடத்தி வருகிறது. 2009 ஜூன் முதல் தமிழகத்தின் மாவட்டங்கள் தோறும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்காக “நாடக நிகழ்வுகள்” எனும் சிறப்புத் திட்டத்தை அரங்கேற்றி வருகிறது. அடுத்த தலைமுறையினருக்கு நவீன நாடகத்தை வடிவ நேர்த்தியோடு அறி முகம்செய்து மாணவர்களின் ஆளுமைத் திறனை வளர்க்கும் விதத்தில் ஒரு மாற்று ரசனையை ஏற்படுத்துவதை நோக்கமாகக்கொண்டு இந்நாடகப் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் நடைபெறவிருக்கும்

 

இனிப்பான மருந்து, கசப்பான உண்மை! உள்ளதை உள்ளபடி ஒளிவுமறை வின்றி வெளிச்சம் போட்டுக் காட்டியது. கடவுளும் சாத்தானும் உள்ளத்தை நெகிழச் செய்தது. ஈழக்கனவை அவர் தலைமைபோல் வேறெந்தக் குடிமகனும் முன்னின்று நடத்திச் சென்றிருக்க முடியாது என்ற அவிநாசி செந்திலின் கூற்றில் ஓராயிரம் உண்மைகள் பொதிந் துள்ளன. கோவைத் தயாநிதியின் சீற்றத்தில் நியாயம் முன்னின்று நீதி கேட்டது. ஒரு தனிமனிதன் உயிருக்காக இலட்சோபலட்சம் தமிழ் மக்கள் மிருகங்களைப் போல் வேட்டையாடப்பட்டதில் என்ன தர்மம் இருக்கிறது? இத்தாலி மக்களின் உரிமைக்காகப் போராடிய கரிபால்டி ஒருபோதும் பதவிக்காகப் போராடியதில்லை. இந்திய மக்களின் விடுதலைக்காகப் போராடிய மகாத்மா ஒருபோதும் பதவியை எதிர்பார்க்கவில்லை. போராட்டத்தின் வழிமுறைகளில் மாற

 

கடந்த செப்டம்பர் ஏழாம் தேதி தில்லியில் நடைபெற்ற மாநில சமூகநலத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் உரையாற்றிய பிரதமர் மன்மோகன்சிங் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் வன்கொடுமைத் தடுப்புச்சட்டம் - 1989 பற்றி விரிவாகக் குறிப்பிட்டிருக்கிறார். இந்திய தண்டனைச் சட்டப் (இ. த. ச. ) பிரிவுகளின் கீழ்ப் பதிவுசெய்யப்படுபவற்றில் 42 சதவிகித வழக்குகளில் குற்றவாளிகள் தண்டிக்கப்படுகிறார்கள். அதே சமயம் எஸ்ஸி/எஸ்டி வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ்ப் பதிவுசெய்யப்படும் வழக்குகளில் குற்றம் சுமத்தப்படுவோரில் 30 சதவிகிதத்தினரே தண்டனைக்குள்ளாகிறார்கள் எனக் கவலை தெரிவித்துள்ள பிரதமர் இச்சட்டத்தின் கீழ்ப் பதிவுசெய்யப்படும் வழக்குகள்மீது முறையான விசாரணைகள் நடத்தப்பட்டுக் குற்றவாளிகள் தண்டிக்கப்படும் வ

உள்ளடக்கம்