கட்டுரை
அநாமதேயன் குறிப்புகள்  

குறிப்பு(1) வன்னியில் இறுதிக்கட்டப் போர் நடந்துகொண்டிருந்தபோது விடுதலைப்புலிகளிடமிருந்து தப்பித்து அரச கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து சேர்ந்த சுமார் மூன்று இலட்சம் மக்கள் அரசினாலமைக்கப்பட்ட 33 நலன்புரிமுகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள நிலையில் அண்மையில் பெய்து ஓய்ந்த மழை அவர்களின் வாழ்க்கை நிலையை மேலும் மோசமாக்கியுள்ளது. வடகீழ்ப்பருவப் பெயர்ச்சி மழை பொழியத் தொடங்கினால் வெள்ளம் தேங்கி நிற்கக்கூடிய தாழ் நிலப் பகுதியிலேயே இத்தகைய நலன் புரிமுகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. ஏற்கனவே பருவமழை ஆரம்பித்ததால் இம்முகாம்களில் மக்கள் தங்கியிருக்கவியலாதென்றும் சுகாதாரம் மோசமாகவுள்ள இச் சூழல் மழைக்காலத்தில் தொற்று நோய் பரவும் அபாயத்தைத் தோற்றுவிக்குமென்றும் சில அரச சார்பற்ற அமைப்புகள்

 

அக்டோபர் இரண்டாவது வாரம் திமுக கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் 10 பேர் முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் இலங்கைக்குச் சென்று வந்தனர். வன்னிப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ள தடுப்பு முகாம்களைப் பார்வையிட்ட அக்குழுவினர் இலங்கை அதிபர் ராஜபக்ஷேயைச் சந்தித்துவிட்டுத் திரும்பியிருக்கின்றனர். குழுவில் இடம்பெற்றிருந்த நாடாளுமன்ற உறுப்பினர்களில் சிலர் தம் இலங்கைப் பயண அனுபவங்களைத் தமிழ் ஊடகங்களில் பதிவுசெய்துள்ளனர். முதல்வரும் எதிர்க்கட்சித் தலைவரும் இந்தச் சுற்றுப் பயணம் குறித்துத் தெரிவித்துள்ள கருத்துகளோடு அந்தப் பதிவுகளிலிருந்து சில இங்கே மீள் பிரசுரம் செய்யப்பட்டுள்ளன. பொறுப்பாசிரியர் “இங்குள்ள ஆர்வலர்கள் எடுத்துவிடும் கட்டுக் கதைகளை

கட்டுரை
மு. புஷ்பராஜன்  

மாற்றுக் கருத்துகள் நவீனகால ஒற்றை ஒழுங்கிற்கு எதிரானவை, பன்முகத் தன்மை கொண்டவை, மையநீரோட்டத்திலிருந்து முற்றிலும் மாறுபடும் தன்மை கொண்டவை, தடைகளற்ற கருத்து வெளியீட்டுச் சுதந்திரம், ஒவ்வொன்றின் பின்னாலுள்ள அரசியலை அம்பலப்படுத்துபவை, முற்போக்குக் குணாம்சங்கள் குடிகொண்டிருப்பவை, வரலாற்றுப் போக்கில் நிரந்தரப் புரட்சித்தன்மை கொண்டவை என்ற அடைமொழிகளால் செழுமை சேர்க்கப்பட்டவை. ஆனால் நடைமுறைத் தளத்தில் மயக்கங்களையும் முரண்பாடுகளையும் கொண்டவர்களால் சிறைப் பிடிக்கப்பட்ட சொல்லாக மாற்ற மடைந்துள்ளது என்ற கருத்தே மேலோங்கியுள்ளது. இதற்குப் புலம்பெயர் சூழலில் மாற்றுக் கருத்தாளர்கள் எனத் தம்மைத் தாமே அழைத்துக்கொள்பவர்களே நீர்வார்த்தும் நிறைபசளை அளித்தவர்களுமாவர். இவர்கள் பற்றிய

புதிய கவிதை 50 ஆண்டுகள்
 

தமிழின் முதல் சிற்றேடான ‘எழுத்து’வின் பொன்விழா ஆண்டு இது. 1959இல் தொடங்கிய இந்த ஏடு ஏறக்குறைய இருபது ஆண்டுகள் செயல்பட்டது. வணிக இதழ்கள் புகட்டிய வெகுசன ருசிக்கும் புலமையாளர்கள் பரிந்துரைத்த பத்திய ரசனைக்கும் மாறாக இலக்கியத்தில் புதுச் சுவையை உருவாக்க முனைந்தது எழுத்து. ஆசிரியர் சி. சு. செல்லப்பா ‘நடு வகையான, நிறை குறை இரண்டையும் எடுத்துக் காட்டும் ஒரு ஓட்டப்போக்கே விமர்சனம் ஆகும். இந்த அடிப்படையில்தான் எழுத்து இயங்கும். இலக்கிய அபிப்பிராயம் சம்பந்தமாக மாறுபட்ட கருத்து களுக்கும் களமாக எழுத்து அமைவதுபோலவே இலக்கியத் தரமான எத்தகைய புது சோதனை களுக்கும் எழுத்து இடம் தரும்’ என்று பிரகடனம் செய்திருந்தார். விமர்சனத்துக்காகத் தொடங்கப்பட்ட இதழ் தமிழில் புத

புதிய கவிதை 50 ஆண்டுகள்
சுகுமாரன்  

சி.சு. செல்லப்பா தொடங்கி நடத்திய ‘எழுத்து’ பத்திரிகைக்கு இது பொன்விழா ஆண்டு. கறாரான அர்த்தத்தில் எழுத்து இதழைத்தான் தமிழின் முதல் சிறு பத்திரிகை என்று சொல்ல வேண்டும். இந்தச் சிற்றேடு தான் புதுக்கவிதையை விரிவான தளத்துக்குக் கொண்டு சென்றது; அதற்குரிய இலக்கணத்தை வகுக்க உதவியது; புதுக்கவிதையை ஓர் இயக்கமாக முன்னெடுத்துச் சென்றது. ஆனால் இவையெல்லாம் தற்செயல் நிகழ்வுகளாகவே இருந்திருக்கின்றன. செல்லப்பாவின் பத்திரிகைத் திட்டத்தில் புதுக்கவிதை என்ற வகையே இருக்கவில்லை. பெரும் பத்திரிகைகளின் போக்குக்கு எதிராக தீவிர இலக்கியத்தை முன்வைப்பது, இலக்கியம் பற்றிய பொதுப்புத்தியை நிராகரித்துப் புதிய கோணங்களில் விமர்சனங்களை உருவாக்குவது, பரிசோதனைகளுக்கு இடமளிப்பது ஆகிய நோக்கங்கள

க. நா. சு.  

கவிதை எனக்கும் கவிதை பிடிக்காது, மனிதன் எத்தனையோ எட்டுக்கள் எடுத்துவைத்துவிட்டான்; இவற்றில் எத்தனை எட்டுக்கள் கவிதையால் சாத்தியமாயின என்று யார் தீர்மானித்துச் சொல்ல இயலும்? பின் எதற்காகத்தான் கவிதை தோன்றுகிறது? மொழியின் மழலை அழகுதான். ஆனால் அது போதவே போதாது. போதுமானால் கவிதையைத் தவிர வேறு இலக்கியம் தோன்றியிராதே. போதாது என்றுதான், ஒன்றன்பின் ஒன்றாக இத்தனை இலக்கியத் துறைகள் தோன்றின - நாடகமும் நாவலும் நீள் கதையும் கட்டுரையும் இல்லாவிட்டால் தோன்றியிராது; ஆனால் அவையும்தான் திருப்தி தருவதில்லையே! அதனால் தான் நானும் கவிதை எழுதுகிறேன். மனிதனுக்குக் கலை எதுவும் திருப்திதராது மேலே, மேலே என்கிற ஏக்கத்தைத்தான் தரும். கலையின் பிறப்பு இந்த அடிப்படையில் ஏற்படுவ

தொகுப்பு: சுகுமாரன், குவளைக்கண்ணன்  

கொக்கு படிகக் குளத்தோரம் கொக்கு. செங்கால் நெடுக்கு. வெண்பட்டுடம்புக் குறுக்கு முடியில் நீரை நோக்கும் மஞ்சள் கட்டாரி மூக்கு. உண்டுண்டு அழகுக் கண்காட்சிக்குக் கட்டாயக் கட்டணம். சிலவேளை மீனும் பலவேளை நிழலும் . . . வாழ்வும் குளம் செயலும் கலை நாமும் கொக்கு. சிலவேளை மீனழகு பலவேளை நிழலழகா? எதுவாயினென்ன? தவறாது குளப்பரப்பில் நம்மழகு - தெரிவதே போதாதா? ந. பிச்சமூர்த்தி ஸ்டேஷன் ரயிலை விட்டிறங்கியதும் ஸ்டேஷனில் யாருமில்லை அப்பொழுதுதான் அவன் கவனித்தான் ரயிலிலும் யாருமில்லை என்பதை; ஸ்டேஷன் இருந்தது, என்பதை ‘அது ஸ்டேஷன் இல்லை’ என்று நம்புவதிலிருந்து அவனால் அவனை விடுவிடுத்துக்கொள்ள முடியவில்லை ஏனென்றால் ஸ்டேஷன் இருந்தது. நகுலன் அறைவெளி தப்பிவிட்டேன் என

சந்திப்பு : குவளைக்கண்ணன்  

புதுக்கவிதைன்னு பேர் வந்து ஐம்பது வருஷம் ஆகுது. இது ஏன் கொண்டாடப்படணும்னு நினைக்கிறீங்க? தமிழ் இலக்கியத்துல பெரிய இயக்கங்கள் நடந்திருக்கு. சங்க இலக்கியம்னு சொல்றோமே அதெல்லாம் இயக்கமாத்தான் ஆரம்பிச்சிருக்கு, ஆனா யாரு அதை ஆரம்பிச்சாங்கன்னு தெரியாது. குறிப்பு உள்ளடக்கமெல்லாம் வெண்பாவுலதான் எழுதத் தொடங்கியிருக்காங்க. அப்புறம் ஆசிரியப்பாவுல எழுதறாங்க, அத ஏன் செஞ்சாங்கன்னு தெரியாது. அப்புறம் சங்க இலக்கியம் நலிவடைஞ்சு பக்தி இலக்கியம் தோன்றுது. அதை யார் தொடங்குனாங்கன்னும் உறுதியாச் சொல்ல முடியாது. அதுக்கப்புறம் நவீன காலத்துல தாயுமானவர்கிட்ட உள்ளடக்க மாறுதல் வருது. அது ஒரு இயக்கமா மாறல. அதுவும் பக்தி இலக்கியத்தோட சேர்ந்திருது. அப்புறம் 1800களில் ஆங்கிலேயர்கள் வந்து ஒரு காரியம

பத்தி: இங்கிலாந்து : மறு பார்வை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

வார்த்தைகள் தன்னிச்சையாக வாழ்வதில்லை. அவற்றின் அர்த்தங்கள் உருவாக்கிய அரசியல், சமுதாய, கலாச்சார, பொருளாதாரச் சூழலமைவுகளுக்குள் உட்பொதிந்துள்ளவை. ஆனால் அவற்றின் பொருளைக் கட்டுப்படுத்த முடியாது. மாறுபட்ட சூழ்நிலையில் அவை மறு உற்பத்திசெய்யப்படுகின்றன. சில சொற்கள் காலம் கடந்தாலும் அவை சுமந்துவரும் கறைபட்ட சில கருத்துகள் எளிதாக மறைவதில்லை. முழுதாக விட்டுப்போவதும் இல்லை. அவற்றில் உள்ளடங்கிய களங்கமான அர்த்தம் மேலும் தொடர்வதுண்டு. அவை ஒருவித இறுக்கத்தையும் கொண்டுள்ளன. அப்படியான ஒரு வார்த்தைதான் ‘பாக்கி’ (Paki). இது பாகிஸ்தானியர் என்பதன் சுருக்கம். இதை 70களில் ஆங்கிலேய இனவெறுப்பு இயக்கமான தேசிய முன்னணி வாழ்ந்த ஐக்கிய இராச்சியத்தில் பாகிஸ்தானியருக்குச் சூட்டிய அ

சிறுகதை
 

படிப்புக்காக நான் அமெரிக்காவுக்குப் போகிறேன் என்பதைத் தெரிந்துகொண்டதும் தாத்தா எனக்கு ஒரு விடையளிப்புக் குறிப்பு எழுதினார். ‘புழுத்துப்போன முதலாளித்துவப் பன்றியே’ எனத் தொடங்கியிருந்தது அது. ‘விமானப் பயணம் பாதுகாப்பானதாக அமையட்டும். அன்புடன், தாத்தா’. 1991ஆம் வருடத் தேர்தலில் விநியோகித்த சிவப்புநிறக் கசங்கிய தேர்தல் அறிக்கையில் அது எழுதப்பட்டிருந்தது. அது தாத்தாவின் கம்யூனிஸ்ட் தேர்தல் சேகரிப்பின் ஆதாரப் பொருள்களில் ஒன்று. லெனின்கிராடு கிராமத்தைச் சேர்ந்த எல்லாருடைய கையெழுத்துகளும் அதில் இருந்தன. அது போன்ற கௌரவம் கிடைத்ததில் நான் நெகிழ்ந்துபோனேன். அப்படியே உட்கார்ந்து ஒரு டாலர் நோட்டை எடுத்துத் தாத்தாவுக்குப் பின்வரும் பதிலை எழுதினேன்: &lsquo

கட்டுரை
சல்மா  

டி.ஸி.புக்ஸின் 25ஆம் ஆண்டு விழாவில் கலந்துகொண்டு சுந்தர ராமசாமி எழுதிய கட்டுரையில் இப்பதிப்பகத்தின் தோற்றம் வளர்ச்சி, மற்றும் சமூக பண்பாட்டுத் தளத்தில் இப் பதிப்பகம் ஆற்றியுள்ள பணி குறித்து அறிந்திருக்கிறேன். அப்பதிப் பகத்திலிருந்தே இன்று எனது நாவலும் வெளி வந்திருப்பது கூடுதலான மகிழ்ச்சியைத் தரக்கூடியதாக இருக்கிறது. இன்று வாசிப்பு என்பதை என்னுடைய அனுபவத்திலிருந்து பார்க்கவும் உங்களோடு பகிர்ந்துகொள்ளவும் எனக்குக் கிடைத்திருக்கும் இந்த வாய்ப்பு மகிழ்ச்சியூட்டக்கூடியதாக இருக்கிறது. என்னளவில், வாசிப்பு வெறும் அனுபவமாக மட்டுமின்றி காலத்தோடும் வாழ்க்கையோடும் இணைந்து ஒன்றாகவே எனக்குள் பதிவாகியிருக்கிறது என்று சொல்ல வேண்டும். வாசித்தலை பழக்கம் அல்லது ஆர்வம் அல்லது வேட்கை இப்

அஞ்சலி: கே. பாலகோபால் (10.6.1952-8.10.2009)
ச. பாலமுருகன்  

இந்தியாவின் மிக முக்கியமான மனித உரிமைப் போராளிகளில் ஒருவரான முனைவர் கண்டலடை பாலகோபால் 8.10.2009 அன்று ஹைதராபாத்தில் காலமானார். மனித உரிமைத் தளத்தில் தீவிரமாகச் செயல்பட்டுவந்த ஒரு முக்கிய ஆளுமை மறைந்துவிட்டது. அனைத்து ஆந்திரப் பத்திரிகைகளும் பாலகோபாலின் மறைவுச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து தலைப்புச் செய்திகளாக வெளியிட்டன. சில தொலைக்காட்சி ஊடகங்கள் அவரின் இறுதிப் பயணத்தை ஒளிபரப்பின. மனித உரிமை ஆர்வலர்கள் தம் மூத்த தோழர் ஒருவரை இழந்துவிட்டதாகக் கருதினர். பாலகோபால் தனிப்பட்ட வாழ்வில் அனைவருடனும் மிக நெருக்கமான நட்பைப் பேணியவரல்ல. ஆனால் மனித உரிமை அரசியலில், மக்கள் இயக்கங்களில் மிக இயல்பாகத் தன்னை ஐக்கியப்படுத்திக்கொண்டு இறுதிவரை போராடியவர். தன்னைப் பற்றிய சிந்தன

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது  

இதுவரை நாம் பார்த்துவந்த தோப்பில் முஹம்மது மீரானின் அதே வகையான பாத்திரங்கள்தாம் இந்நாவலிலும் இருக்கிறார்கள். அந்தக் கலப்பு மொழியின் இனிமையும் அந்த மண்ணின் வாசனையும் மாறவில்லை. அவருடைய கதா பாத்திரங்களின் பெயர்கள் சுத்தமாக வருவதில்லை; கொச்சையான பேச்சு வழக்கில் ஒருவரின் பெயரை எப்படி நாம் உச்சரிக்கிறோமோ அதுதான் அவருடைய பெயர். கவனிக்கப்படாத ஒரு கிராமத்தில் ஆரம்பக் கல்வியையும் பெறாதவர்கள். இஸ்லாத்தை அவர்கள் அறிந்துகொண்ட வகையில் உயிர் மூச்சாய்க்கொண்டிருப்பார்கள்; வாழ்க்கைச் சிக்கல்களால் அதிலிருந்து விடுபட்டுமிருப்பார்கள். சின்னத் துயரங்களுக்கும் அவ்லியாக்கள் எனப்படும் இறை நேசர்களின் நிழல்களுக்குள் தீர்வுகாணத் துடிப்பார்கள். அஞ்சுவண்ணம் தெரு (நாவல்) ஆசிரியர்: தோப்

 

எதிர்வினை: விவாதத்திற்கான ஒரு திறந்தவெளி எதிர்வினை: ‘வன்னியில் என்ன நடந்தது?’ கட்டுரையாளரின் எதிர்வினை எதிர்வினை: விமர்சிப்பதும் புனிதப்படுத்துவதுமல்ல பிரச்சினை எதிர்வினை: ஆங்கிலேயரின் அடிச்சுவட்டில் தொடரும் இருட்டடிப்பு எதிர்வினை: எதிரியின் சாவோ இறகைவிட இலேசானதே!

எதிர்வினை
   

இதழ் 116 (ஆகஸ்ட் 2009)இல் இடம்பெற்ற “வன்னியில் என்ன நடந்தது?” பதிவு குறித்து: யாருமே எதிர்பார்த்திராத ஒரு தோல்வியின் கடைசிக் கணங்களில் என்ன நடந்தது என்பதைத் தனக்கு நேர்ந்த அனுபவங்களினூடாகக் கட்டுரையாளர் முன்வைத்திருக்கிறார். அவருடைய அந்த அனுபவத்தின் உண்மை குறித்து எவரும் கேள்வி எழுப்புவதற்கான வாய்ப்பு இருக்குமென்று நான் நினைக்கவில்லை. உண்மையில் தமிழ்ச் சமூகம் மிகப் பெரும் அவலம் ஒன்றை வரலாற்றில் சந்தித்திருக்கிறது. ஓர் ஊழிப் பேரழிவுதான் அது. அதிலிருந்து மீண்டெழுவது நம் கற்பனைக்கும் அப்பாற்பட்டதெனினும் வரலாறு பின்னோக்கிச் சுழல்வதில்லை என்ற யதார்த்தத்தை நாம் ஏற்றாக வேண்டும். ஆனால் அதற்கு உண்மைகளை நாம் எதிர்கொள்வதற்கு எம்மைத் தயார்படுத்தியாக வேண்டும். அது எவ்வள

எதிர்வினை
 

காலச்சுவடு இதழில் ‘வன்னியில் என்ன நடந்தது’ என்ற கட்டுரைக்கான அறிமுகத்தில் நீங்கள் குறிப்பிட்டிருக்கும் ஒரு விடயம் தொடர்பான விளக்கம்: சேரனின் நேர்காணலுக்குப் பின்னர் நான் காலச்சுவடுடனும் உங்களுடனும் உறவுகளைத் துண்டித்துக்கொள்ளவில்லை. தொடர்பாடல் மட்டுமே இடை நின்றது. கவனிக்கவும் இடைநின்றது. காரணம் தமிழ்நாட்டில் இருந்த ஈழத் தமிழர் ஒருவர் (ஒரு இலங்கைத் தமிழ் தினசரியின் நிருபராகத் தமிழகத்தில் பணியாற்றிய இவருடைய பெயரை இப்போது வெளியிட வேண்டாம். அவருக்கு அது பாதுகாப்பானதாக இல்லை என நண்பர்கள் கூறுகின்றனர். அது உண்மையும்கூட) காலச்சுவடுக்கான வாசகர் வட்டங்கள் வன்னியில் வளர்வதையும் அதன் வாசகப் பரம்பல் மற்றும் செல்வாக்கையும் தமிழகத்திலுள்ள ஈழ ஆதரவாளர்கள் விரும்பவில்லை என்றும்

எதிர்வினை
சர்வகன்  

‘வன்னியில் என்ன நடந்தது’ என்ற கட்டுரை தொடர்பான எதிர்வினைகள் மீதான என் கருத்துகள்: பரணி கிருஸ்ணரஜனி, யாழினி ரவிச்சந்திரன், சித்திரலேகா துஸ்யந்தன், ப்ரியதர்சினி சற்குணவடிவேல் போன்றோர் தம்மை ஆய்வு மாணவர்களாகக் குறிப்பிட்டிருந்தனர். இவர்கள் காலச்சுவடு, குறித்த கட்டுரையை எழுதியவரின் பெயரை வெளியிடாமலிருந்தமை மாபெரும் ஊடக அறமீறலாகக் குறிப்பிட்டிருந்தனர். இவர்கள் ஈழத்தின் இன்றைய நிலையைப் புரிந்துகொள்ளாதது ஊடக அறம் பற்றிப் பேசுவது வேடிக்கையானது. இங்கு அரசுதான் கடவுள். அது புனிதமானது. அதை நோக்கி விரலை நீட்டுவது நாட்டுக்குச் செய்யும் துரோகமானது என்ற நிலைதானிருக்கிறது. உண்மையில் இந்தக் கருத்துநிலையைப் புலிகளுக்கும் பொருத்திப் பார்க்க முடியும். விடுதலைப்புலிகள் அமைப்பை

எதிர்வினை
 

காலச்சுவடு, அக்டோபர் 2009 இதழில் ஆ. இரா. வேங்கடாசலபதி எழுதியுள்ள “ஆஷ் அடிச்சுவட்டில்...” என்ற நீண்ட கட்டுரை வெளிவந்துள்ளது. “தென்னிந்தியாவில் தேசிய இயக்கப் போராட்டத்தில் படுகொலை செய்யப்பட்ட முதல் வெள்ளை அதிகாரி ஆஷ். கடைசி நபரும் ஆஷ்தான் என்று பிந்தைய வரலாறு காட்டியது” எனக் கட்டுரை ஆசிரியர் எழுதியுள்ளார். இக்கருத்து தவறான ஒன்று. அதே நெல்லைச் சீமையில் (இன்றைய தூத்துக்குடி மாவட்டத்தில்) 1942 செப்டம்பர் 20ஆம் தேதி அதிகாலை 3 மணியளவில் குலசேகரபட்டினம் உப்பளத்தில் பி. எஸ். ராஜகோபால நாடார் தலைமையில் நுழைந்த விடுதலைப் போராட்ட வீரர்கள் குழு ஒன்று அங்கிருந்த கொட்டகைக்குத் தீ வைத்தது. அங்குப் பணியிலிருந்த காவலர்களைக் கட்டிப்போட்டதோடு அவர்களிடமிருந்த துப்பாக

எதிர்வினை
ப்ரவாஹன்  

ஆஷ் துரை செத்துப்போனான்; அந்தச் சாவில் அவன் மனைவிக்கு ஏற்பட்ட துக்கத்தைவிடவும் அதிகத்தை ஆ. இரா. வேங்கடாசலபதி உணர்ந்திருக்கிறார். ‘தூத்துக்குடியில் ஆஷின் செயல்களால் நமக்கு நன்மை விளையவில்லை’ என்று சொன்ன பிரிட்டிஷ் கவர்னரே ஆஷ் செத்துப்போனதில் வருத்தப்பட்டிருக்க வாய்ப்பில்லை. நீதிபதி பின்ஹே, வ.உ.சிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்ததை மார்லி பிரபுவே பொறுத்துக்கொள்ளவில்லை என்ற அளவுக்குக் கடுந்தண்டனையாக அது இருந்தது எனும் போது, ஆஷிடமிருந்து எத்தகைய அணுகு முறையை வெள்ளை ஏகாதிபத்தியம் எதிர்பார்த்திருக்கும் என்பது வெளிப்படை. ஆனால் ‘அரசனைவிட அரசனுக்கு அதிக விசுவாசம் காட்டிய’ ஆஷ் எவ்வளவு கடுமையாக நடந்துகொண்டிருந்தால் பிரிட்டிஷ் கவர்னரே மேற்குறிப்பிட்டபடி ச

 

புனரமைப்புப் பாதையும் கட்டமைத்து எஞ்சியிருக்கிற ஈழத் தமிழர்களைக் காப்பாற்ற வேண்டிய கடமையிலிருந்து இந்தியா தவறுமேயானால் உலக வரலாறு அதை மன்னிக்காது. உரிமைகள் அபகரிக்கப்பட்ட சூழலில் அவர்களை மேலும் அனாதைகளாக்கிவிடலாமா என வன்னி அகதிகள் முகாம் நிலவரத்தை உதாரணமாக்கியிருந்தது ஒரு உபன்யாசமோ உபதேசமோ அல்ல. விமர்சனம், அலசல், பார்வையென அரசியல்ரீதியாக ஒரு இனத்தை பேரவலங்களில் மூழ்கடித்ததுபோதும். வெள்ளைக் காக்கைகள் பறப்பதாகச் சொன்னால் நம்புகிற ஏமாளிகளா ஈழத் தமிழர்கள். முளைத்த மண்ணிலேயே வாழ்வாதாரங்கள் கேள்விக் குட்படுத்தப்பட்ட எதார்த்தம் பொறுத்துக்கொள்ளக்கூடியதல்ல. இந்திய விடுதலைக்காக ஆஷ் துரையை வாஞ்சிநாதன் சுட்டு வீழ்த்திய தமிழ் மண் வீரம் விளையும் பூமி. தன்னை நம்பியிருப்பவர்களைக் கைவ

தலையங்கம்
 

அக்டோபர் 10ஆம் தேதி முதல் 14ஆம் தேதி வரை தமிழகத்தைச் சேர்ந்த திமுக, காங்கிரஸ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் முன்னாள் மைய அமைச்சர் டி. ஆர். பாலு தலைமையில் இலங்கைக்குச் சென்று வந்திருக்கிறார்கள். ஈழப் போரால் அகதிகளாக்கப்பட்டுத் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டிருக்கும் சுமார் மூன்று லட்சம் அப்பாவித் தமிழர்களை அவர்களது வாழ்விடங்களுக்குத் திருப்பியனுப்பக் கோரி உலகெங்கிலுமுள்ள தமிழர்களும் மனித உரிமை அமைப்புகளும் ராஜபக்ஷே அரசை வலியுறுத்திவரும் நிலையில் திமுகக் கூட்டணிக் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவைத் தடுப்பு முகாம்களைப் பார்வையிட அழைப்புவிடுத்த, அனுமதித்த இலங்கை அரசின் செயல் 50ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்துவரு

உள்ளடக்கம்