கட்டுரை
 

‘உள்நாட்டுப் பாதுகாப்புக்கு மிகப்பெரிய அச்சுறுத்தல்’ எனச் சமீபத்தில் மாவோயிஸ்ட்டுகளைப் பற்றி எச்சரித்திருக்கும் பிரதமர் மன்மோகன் சிங், நாட்டில் மொத்தமுள்ள 28 மாநிலங்களில் 20இல் வலுவான சக்தியாக உருவெடுத்திருக்கும் மாவோயிஸ்ட் இயக்கத்தை ஒடுக்க மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருக்கிறார். கடந்த ஜூனில் மேற்குவங்க மாநிலம் லால்கரில் 1,000 சதுர கி.மீ. பரப்பை மாவோயிஸ்ட்டுகள் கைப்பற்றியிருப்பதாகக் கூறிய மத்திய, மாநில அரசுகள் ஆயிரக்கணக்கான காவல் துறையினருடன் துணை ராணுவப் படைகளையும் எல்லைப் பாதுகாப்புப் படைகளையும் கொண்டு அப்பகுதியை முற்றுகையிட்டன. லால்கரில் பெரும்பான்மையாக வசிக்கும் பழங்குடியினர்மீதான அத்துமீறலாக முடிவுற்ற ‘ஆபரேஷன் கிரீன் ஹண்ட்’ என அழைக்கப்பட

கட்டுரை: இரண்டாம் தலைமுறை ஊழல்
 

கசியும் மௌனம் கடந்த சில மாதங்களாகப் பெரும் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் - சுதந்திர இந்தியா சந்தித்த மிகப் பெரிய நிதி ஊழல் என வர்ணிக்கப்படும் - 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஊழல் தொடர்பான விவாதங்கள், சில வாரங்களுக்கு முன்னர் தில்லியிலுள்ள தொலைத்தொடர்புத் துறை அலுவலகம் மத்தியப் புலனாய்வுத் துறை அதிகாரிகளால் சோதனையிடப்பட்டதிலிருந்து, தீவிரமடைந்திருக்கின்றன. 2ஜி என அழைக்கப்படும் ‘இரண்டாம் தலை முறை’ அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் பின்பற்றப்பட்ட நடைமுறைகள் குறித்து 2008 முதல் எழுப்பப்பட்டு வரும் சந்தேகங்களுக்கு மத்தியப் புலனாய்வுத் துறை மேற்கொண்ட இச்சோதனைகள் சட்டபூர்வமான ஆதாரங்களை அளித்திருக்கின்றன. சில மாதங்களுக்கு முன்பு வரையிலும்கூட இது பற்றிய விவாதங்களுக்கு நாட

க. திருநாவுக்கரசு  

‘‘டார்வினின் புத்தகம் மிக முக்கியமானது. வரலாற்றில் நிகழும் வர்க்கப் போராட்டத்திற்கான இயற்கை அறிவியல்பூர்வமான அடிப்படையை அது எனக்கு வழங்குகிறது.’’ - கார்ல் மார்க்ஸ் ‘‘உயிரின இயற்கையின் வளர்ச்சி விதியை டார்வின் கண்டுபிடித்ததைப் போல மனித வரலாற்றின் வளர்ச்சி விதியை மார்க்ஸ் கண்டுபிடித்தார்.’’ - எங்கெல்ஸ் மனித குல வரலாற்றில் மனிதர்களின் சிந்தனைப்போக்கின் மீதும் அதன் விளைவாக வரலாற்றின் மீதும் மிகுந்த செல்வாக்கு செலுத்திய நூறு பேர் கொண்ட ஒரு பட்டியலை யார் தயாரித்தாலும் அதில் நிச்சயம் சார்லஸ் டார்வினுக்கு ஓர் இடம் இருக்கும். கடந்த நானூறு வருட கால நவீன அறிவியல் வரலாற்றில் தோன்றிய அதிமுக்கியமான பத்து அறிவியலாளர்களைக் கொண்ட எத்தனை மாற

சிறுகதை
ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்  

கோமதி கொஞ்சம் கொஞ்சமாகத் கோமதியம்மாளாக மாறிவிட்டார். ஒருவேளை அப்படிச் சொல்ல முடியாது. கோமதியின் தலைமுடி தான் காலத்திற்கு முன்னமே நரைக்க ஆரம்பித்துவிட்டதே. அப்படி நரைக்காமலிருந்திருந்தால் அவர் இன்னும்கூடக் கொஞ்ச காலத்திற்குக் கோமதியம்மாளாக மாறியிருக்க மாட்டார். நாள் கணக்கில் அவர் வீட்டைவிட்டு வெளியே வருவதில்லை. மாதத்தில் ஒரு நாள் மட்டும் அவர் தலைக்குக் கூடுதலாக எண்ணெய் பூசி, இறுக்கமாக ஜடை பின்னி, அசைக்க முடியாத கொண்டை போட்டு வெளியில் கிளம்புவார். கணவரின் இறப்புக்குப் பின் பென்சன் வாங்குவதற்காக மட்டுமே வீட்டின் கதவைத் திறந்து வெளியேறுகிறார். அந்தச் சமயங்களில் உலகம் மனத்தின் அற்புதமான வெளிப்பாடு என்பதுபோல் தோன்றும். கணவர் இறந்த விபத்து நடந்த இடத்தைக் கடக்கும்போது

ஆனந்தராஜ்  

உரை
ஆ.இரா. வேங்கடாசலபதி  

முதலாம் உலகப் போர் முடிவுற்றதைத் தொடர்ந்து தம் புதுச்சேரி கரந்துறை வாழ்க்கையை முடித்துக்கொண்டு பிரிட்டிஷ் இந்தியாவுக்குள் 20 நவம்பர் 1918இல் நுழைந்ததும் பாரதி கைதுசெய்யப்பட்டார். அரசியல் வாழ்க்கையைத் துறப்பதாக ஒப்புதல் கடிதம் எழுதி, திருநெல்வேலி மாவட்டத்தின் இரண்டொரு இடங்களில் மட்டுமே உறைவதாகவும் தாம் எழுதுவதையும் பேசுவதையும் சி. ஐ. டி துறையின் தணிக்கைக்கு உட்படுத்த உடன்படுவதாகவும் வாக்குறுதி அளித்ததின்பேரில் 14 டிசம்பர் 1918இல் விடுதலை செய்யப்பட்டு, தம் மனைவியின் சொந்த ஊரான கடையம் சென்றார் பாரதி. 1919 ஜனவரி 30இல் தம் எட்டயபுரம் நண்பர் ஒருவருக்குக் கடையத்திலிருந்து பாரதி எழுதிய கடிதத்தை ரா.அ. பத்மநாபன் வெளியிட்டுள்ளார். 1919 மே 2 அன்று எட்டயபுரம் மன்னருக்குப் பாரதி எழுதி

நேர்காணல்
 

கல்யாணி என அறியப்படும் பேராசிரியர் பிரபா கல்விமணி கல்வியாளர், மனித உரிமைப் போராளி, சமூக ஆர்வலர் எனப் பல பரிமாணங்கள் கொண்டவர். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் தாலுகா சௌந்திர பாண்டியபுரம் என்னும் சிறு கிராமத்தில் பிறந்த கல்யாணி திண்டிவனம் அரசுக் கல்லூரியில் பேராசிரியராகப் பணியாற்றி 1996இல் விருப்ப ஓய்வுபெற்றுத் தற்போது அங்கேயே வசிக்கிறார். மாணவப் பருவத்திலிருந்தே மார்க்சிய இயக்கங்களில் ஈடுபாடு கொண்டிருந்த கல்யாணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட், மக்கள் யுத்தக் குழு)யின் பண்பாட்டு அமைப்பான ‘புரட்சிப் பண்பாட்டு இயக்க’த்தில் செயல்பட்டவர். அவ்வமைப்பின் சார்பாக வெளியிடப்பட்ட ‘செந்தாரகை’ என்னும் இலக்கிய இதழின் ஆசிரியர் குழுவிலிருந்த

கட்டுரை: கல்வி உரிமை வெறும் கனவு
வே. வசந்தி தேவி  

தமிழ்நாட்டில் சமச்சீர் கல்வி குறித்து இன்று எழுந்துள்ள விவாதம், நடுவண் அரசால் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டுள்ள கட்டாய இலவசக் கல்வி உரிமைச் சட்டம் - 2009 குறித்த சிந்தனைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டது. இச்சட்டம் ஓரளவு வரவேற்கப்பட்டாலும், கூடவே அது குறித்த ஆழ்ந்த கவலைகளும் கடுமையான விமர்சனங்களும் எழுந்துள்ளன. கல்வி குறித்த கரிசனை கொள்கை வகுப்போரிடம் உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. இச்சட்டம் மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டபோது மொத்தம் 250 உறுப்பினர்களில் 54 பேர்தான் அவையில் இருந்தனர். எந்த விவாதமும் இன்றிக் குரல் வாக்கு (voice vote) மூலம் மசோதா சட்டமாக்கப்பட்டது. பள்ளிக் கல்வியை அடிப்படை உரிமையாக்காத நாடுகள் ஒரு சிலவே. அதில் இந்தியாவும் ஒன்று. வாழ்வுரிமையினின்று பிரிக்கவிய

மதிப்புரை
மு. புஷ்பராஜன்  

வழமையாகச் செல்லும் பாதைதான் என்னும் நினைப்பில் நடந்துகொண்டிருக் கையில், எதிர்பார்ப்பிற்கு மாறாகப் புதிய காட்சிகளை நாம் காண நேர்கையில் மனம் வியப்பால் விரிந்துகொள்கிறது. அப்புதியவை எதுவாகவும் இருக்கலாம். ஆற்றங்கரையாக, அடர்வனமாக அல்லது அந்நிய முகங்கள் நிறைந்த வாழ்விடங்களினூடாகக் கடந்துசெல்லும், பார்வையெங்கும் படர்ந்திருக்கும் மணல்வெளியாகக்கூட இருக்கலாம். மனம் விரிகிறது அல்லது ஏற்கனவே பார்த்தவை, கடந்து சென்றவைகூட, புதிய அர்த்தச் செறிவுடன் நம்முன் கையசைத்துக்கொண்டிருக்கும். மனிதக் காலடி படாத அடர்வனங்களிடையே மலர்ந்திருக்கும் மலர்கள், புல்வெளியில் மஞ்சள் பொட்டாய்ப் பூத்திருக்கும் ஒற்றை மலர் இனம்புரியாச் சோகத்தை நம்முள் எழுப்பிவிடலாம். அறிமுகமற்ற குடியிருப்புகளினூடான நமது கடந

பதிவுகள்: 31.10.2009, நாகர்கோயில்
 

நாகர்கோயிலில் உள்ள ‘நெய்தல்’ இலக்கிய அமைப்பின் சார்பில் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ‘இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது’ இந்த ஆண்டு எழுத்தாளர் எஸ். செந்தில் குமாருக்கு வழங்கப்பட்டது. எஸ். செந்தில் குமார் சிறுகதைகள், கவிதைகள் மூலம் 1999இல் தமிழ் இலக்கியத்துக்கு அறிமுகமானவர். ‘வெயில் உலர்த்திய வீடு’, ‘சித்திரப் புலி’ ஆகிய சிறுகதைத் தொகுப்புகளும் ‘சமீபத்திய காதலி’ என்னும் கவிதைத் தொகுப்பும் ‘ஜி. சௌந்திரராஜனின் கதை’ என்னும் நாவலும் புத்தகமாக வந்துள்ள இவரது படைப்புகள். ‘காலச்சுவடு’, ‘உயிர்மை’, ‘உயிரெழுத்து’, ‘வனம்’, ‘புது எழுத்து’ முதல

பதிவுகள்: அற்றைத் திங்கள், ஜூன் 21, சேலம் தமிழ்ச் சங்கம்
அ. கார்த்திகேயன்  

கடந்த ஜூன் 21, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக் கட்டளை இணைந்து நடத்திய ‘அற்றைத் திங்கள்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் ஆ.சிவசுப்பிரமணியன் கலந்துகொண்டார். வரலாறு, கல்வெட்டு, மெய்யியல், தொல்லியல், பண்பாட்டுத் துறை ஆய்வாளர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட அவரை, சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க. வை. பழனிச்சாமி அறிமுகப்படுத்தினார். தான் எழுத்துத் துறைக்கு வந்தமைக்குக் காரணம் தகப்பனாரின் படிப்பு ஆர்வமும் எழுத்தாளர்களோடு தனக்கு இருந்த தொடர்புமேயாகும் என்றார் அவர். திரைப்படம் பார்ப்பது மிகப் பெரிய பாவம் என்று கருதிய அவருடைய தகப்பனார், ஓய்வு நேரத்தைப் புத்தகம் படிப்பதில் செலவிட்டதாகவும் அப்பழக்கமே தன்னையும் பிடித்துக் கொண்டத

பதிவுகள்: “பிணிக்கு வேண்டும்”, சென்னை
அருண்மொழி  

குழந்தைகளின் பிரச்சினையை மையமாக வைத்து, அதுவும் பள்ளி செல்ல மறுக்கும் சிறுவன் ஒருவனைச் சுற்றிச் சுழலும் ‘பிணிக்கு வேண்டும்’ எனும் தமிழ்நாடகம் ஒன்றை மூன்றாம் அரங்கின் துணையுடன் இலங்கையின் மேக்ஸ் முல்லர் பவன் நிதியுதவியுடன் நாடக இயக்குநர் தயாளனுடன் இணைந்து கருணா பிரசாத் பல்வேறு இடங்களில் நிகழ்த்திக்காட்டியுள்ளார். இலங்கையிலுள்ள நவீன நாடகக் குழு Inter Act Art நௌரலியா பகுதியைச் சேர்ந்த எட்டு இளைஞர்களை ஒன்று கூட்டிச் சில ஆண்டுகளாக நிகழ்த்திவரும் நாடகங்களில் ஒன்று இந்நாடகம். இது சென்னையிலுள்ள பத்துப் பள்ளிகளில் சமீபத்தில் நிகழ்த்தப்பட்டுள்ளது. “பிணிக்கு வேண்டும்” கதையின் கருவை, உள்ளடக்கத்தைப் பகுத்தாய்ந்தால் அது சற்று மனவளர்ச்சி குன்றிய பிணி என்ற சிறுவனை

 

காலச்சுவடு நவம்பர் இதழில் வெளியாகியிருக்கும் எனது நேர்காணலில் இரண்டொரு திருத்தங்கள். 48ஆம் பக்கத்தில் 1939 என்றிருக்கும் ஆண்டு 1934 எனவும் 49ஆம் பக்கத்தில் ‘ஆர்வல்’ என்ற பெயர் ‘ஆடன்’ என்றும் 50ஆம் பக்கத்தில் ‘பெட்டிக்கடைக்காரன்’ என்பது ‘பெட்டிக்கடை நாரணன்’ எனவும் திருத்தி வாசிக்கப்பட வேண்டும். குவளைக்கண்ணனுக்கு எனது பாராட்டுகள். ஞானக்கூத்தன், சென்னை இலங்கை அகதிகள் பிரச்சினையில் தமிழில் வெளிவரும் இதழ்கள் அனைத்தும் விற்பனை ஒன்றையே குறிக்கோளாகக் கொண்டு பரபரப்பான செய்திகளை வெளியிட்டுக்கொண்டிருக்கும்போது, காலச்சுவடு மட்டும் இலங்கை அகதிகளைப் பற்றிய உண்மையான செய்திகளை, ஆழ்ந்த கவலையோடு வெளிப்படுத்தும் கட்டுரைகளை வெளியிடுவதைப் ப

தலையங்கம்
 

நாட்டின் மத நல்லிணக்கத்துக்குக் கடும் ஊறு விளைவித்து இந்தியாவில் பயங்கரவாதத்திற்கு வித்திட்ட நிகழ்வான அயோத்தி பாபர் மசூதி இடிக்கப்பட்டதன் பின்னணி குறித்து விசாரிப்பதற்காக அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் தலைமையிலான காங்கிரஸ் அரசால் அமைக்கப்பட்ட நீதிபதி மன்மோகன் சிங் லிபரான் கமிஷன் அறிக்கையின் சில பகுதிகளைத் தில்லியிலிருந்து வெளிவரும் இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழ் நவம்பர் 23ஆம் தேதி வெளியிட்டிருக்கிறது. உள்துறை அமைச்சகத்தின் பொறுப்பில் மிகப் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த அந்த அறிக்கை நாளிதழுக்குக் கிடைத்தது எப்படி என்பது குறித்த விவாதங்களால் நாடாளுமன்றத்தின் அன்றைய நடைமுறைகள் முற்றாகப் பாதிக்கப்பட்டன. பாஜக, சமாஜ்வாதி, இடதுசாரிகள் உள்ளிட்ட முக்கிய எதிர்க்கட்சிகள் அறிக்க

உள்ளடக்கம்