வறீதையா கான்ஸ்தந்தின்  

அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும் என்பார்கள். காலம் இந்திய மீனவர்களின் வயிற்றில் அடித்துக்கொண்டேயிருக்கிறது. 2009 நவம்பர் 9 பியான் புயல் ஆழ்கடல் விசைப்படகு மீனவர்களின் மீது நிகழ்த்திச் சென்ற சேதம் எண்ணக் கொந்தளிப்பை ஏற்படுத்துகிறது. விபத்துகள் எதிர்பாராதவை. விபத்தின் விளைவை மட்டுப்படுத்த முடியும். விபத்து அபாயத்தைக் கட்டுப்படுத்தவும் முடியும். விபத்துகளின் அரசியலும் பொருளியலும் கூர்ந்து படிக்கத் தகுந்தவை. சில விபத்துகள் இயற்கையானவை. சில விபத்துகள் உருவாக்கப்படுபவை. புறக்கணிப்பு அரசியல் விபத்துகளை மேலும் குரூரமாக்கிவிடுகிறது. கடல் சார்ந்த வாழ்வு இடர்களால் ஆனது. நெய்தல் வாழ்க்கையின் சாரத்தை இரண்டே வார்த்தைகளில் குறித்துவிடலாம். இழப்பு, மரணம். சங்க காலம் முதல் தொழில்

கட்டுரை
க. திருநாவுக்கரசு  

மனிதர்களைப் போன்று உயர் அறிவுத் திறன் படைத்த ஓர் உயிரினம் ஏதாவது நமது பால்வெளிவீதி மண்டலத்திலோ பிரபஞ்ச வெளியின் வேறு ஏதாவது நட்சத்திர மண்டலத்திலோ இருப்பதற்கான வாய்ப்புகள் பற்றி கருத்துத் தெரிவிக்கையில் புகழ்பெற்ற உயிரியல் விஞ்ஞானி எர்ன்ஸ்ட் மேயர், ‘‘இயற்கைத் தேர்வு, உயர் அறிவுத்திறனுக்குச் சாதகமானதாக இல்லை’’ என்றார். இது சர்ச்சைக்குரிய கருத்து என்றாலும் சமீபத்தில் டென்மார்க்கின் தலைநகர் கோபன்ஹேகனில் நடந்துமுடிந்த பருவ நிலை மாறுபாடு உச்சி மாநாட்டின் தோல்வியைப் பார்க்கிறபோது மேயர் கூறிய கருத்து சரியானதாக இருக்குமோ எனத் தோன்றுகிறது. மனிதகுலம் இன்று எதிர்கொள்ளும் மாபெரும் பிரச்சினைகள் என்று மூன்றைச் சொல்லலாம்: 1. வறுமை 2. வன்முறை 3. பருவநிலை மாற

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

நான் இங்குக் குறிப்பிடும் புலி ஈழம் சார்ந்தல்ல. கோல்ப் வீரரான டைகர் வூட்சைத்தான். கோல்ப் விளையாட்டைப் பற்றி எனக்கு அதிகம் தெரியாது. நீண்ட கால்சட்டை அணிந்து கந்தோருக்குப் போவதுபோல் காட்சியளித்து, வியர்வை கொட்டாத வீரர்களை என்னால் ஒரு கனமான போட்டியாளர்களாகக் கண்டுகொள்ள முடியவில்லை. இந்த ஆட்டம் பற்றி மார்க் டுவைன் சொன்ன ஒரு வாசம் என் நினைவுக்கு வருகிறது: ‘ஒரு நல்ல நடை பாழாகிவிட்டது.’ அதுபோல் டைகர் வூட்ஸ் என்ற ஆட்டக்காரரை நேரில் பார்த்ததில்லை. ஆனால் டைகர் வூட்ஸ் என்று ஊடகங்கள் பிரபலமாக்கிய கற்பிதக் கட்டுருவாக்கம் (imaginary construct) பரிச்சயமாக இருக்கிறது. வியாபார நிறுவனங்களாலும் ஊடகங்களாலும் உற்பத்தி செய்யப்பட்ட வூட்ஸ் என்னும் நபரை எனக்கும் என் போன்ற ப

சிறுகதை
 

பதினான்கு ஆண்டுகளுக்கு முன்பு, எங்கள் ஊரில் நடந்து முடிந்திருந்த அந்தச் சம்பவங்களைப் பற்றி முழுமையாகச் சொல்ல முடியாது என்றாலும் அவற்றைப் பற்றிய குறைந்தபட்ச விவரிப்புகள்கூட அவற்றின் தீவிரத்தை உங்களுக்கு உணர்த்திவிடும் என்பதாலும் நானும் அச்சம்பவங்களின் சாட்சிகளில் ஒருவனாய் இருப்பதாலும் இவற்றை உங்களுக்குத் துணிந்து சொல்கிறேன். நமக்கு அருகிலுள்ள மனிதர்கள் பற்றிய எச்சரிக்கை உணர்வுகளை இவை எனக்குத் தந்திருப்பினும், அவற்றிலிருந்து மெய்ஞ்ஞானிகள் தவிர்த்து, ஒருவருக்கும் பயனற்றதாகவே அவை முடிந்துவிடும். எங்களுக்கும் வத்சலாவுக்கும் நேர்ந்ததைப் போல. இளவழகனுக்கு நான்காவது வயது நடந்துகொண்டிருந்த ஒரு நாளில் அவன் அம்மா மனப்பிறழ்வுற்ற வேசியாகப் பாண்டிச்சேரிப் பேருந்து நிலையத்தில் அவனைக்

 

பெருமாள்முருகன் நடனம் புதர் நடுச் சிறுவெளி சாரைப் பாம்புப் பிணையல் எழுந்தெழுந்து தாழும் தலை முறுக்கி நெகிழும் உடல் நிகழ்த்தும் அசைவுகள் காற்றுத் தாளம் ஏகாந்த வெளியெங்கும் நடனம் திகம்பரக் குளியல் சிற்றோடை எம்பி விழுந்து அருவியாகும் கானகம் வெயில் வடிக்கும் இருபுற மர உச்சிகளில் ஒலிமுகம் காட்டும் பறவைகள் நீர் தேய்த்த வழுக்கல் பாறையேறி நின்றேன் தீராக் குளியல் வெறியில் திகம்பரனாக்கி அருவி மூடிற்று பாறைகளில் உருண்டு கிளைகளில் தாவி வானகம் பறந்து மீண்டும் அருவிக்குள் இறங்கினேன் ஒரு கணத்தில் ஆயிரமாயிரம் ஆண்டுகள் கடந்தது உடல் பிடி இறுகிக்கொண்டேயிருக்கிறது அவன் எதுவும் பேசவில்லை கண்ணீர்த் துளிகள் நிலவொளியில் மினுங்கின தலைகுனிந்து மண்டியிட்டுப் பூம

பத்தி: வேறுவேறு
பெருமாள்முருகன்  

ஆந்திர முதல்வர் ஒய்.எஸ். ராஜசேகர ரெட்டி மரணத்தையொட்டித் தமிழக அரசு ஒருநாள் விடுமுறை அறிவித்தது. அதைப் பற்றிப் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன. ‘ஈழத்தில் ஒரு லட்சம் தமிழர்கள் இறந்த துக்கம் அனுஷ்டிக்க விடுமுறை கிடையாது; அண்டை மாநிலத்தில் ஒருவர் இறந்ததற்கு விடுமுறை. உயிர்களின் மதிப்பு ஒன்றுதானா?’ எனக் கேள்வி எழுப்பும் குறுஞ்செய்திகள் உலவின. ஈரம் உள்ள எந்த நெஞ்சிலும் எழும் கேள்விதான் இது. காங்கிரஸ் கட்சியின் ஆதரவில் ஆட்சி நடத்துவதாலும் அதன் தயவில் மத்திய அமைச்சர் பதவிகளைப் பெற்று அனுபவித்து வருவதாலும் அக்கட்சியினரைத் திருப்திப்படுத்தும் தந்திரம்தான் இந்த விடுமுறை என்றும் கருத்துக் கூறினர். ஒன்றிரண்டு மாநிலங்களே இத்தகைய விடுமுறையை அறிவித்தன. ஆகவே விடுமுறைக்குள்ளும் அரசி

புத்தாயிரத்தின் இலக்கியம்
பொறுப்பாசிரியர்  

தமிழ் நவீன இலக்கியத்தைச் செம்மைப்படுத்தி வளர்த்தெடுத்ததில் விமர்சனத் துறைக்குப் பெரும் பங்கு உண்டு. நம் பன் முகத்தன்மையின் மறுபக்கம் அநீதியும் சுரண்டலும். சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் உருவான நவீன இலக்கியம் இந்த மறுபக்கம் குறித்த புரிதல்களைக்கொண்டிருந்தது என்பதற்குச் சொற்பமான உதாரணங்களே இருக்கின்றன. படைப்பிலக்கியம் குறித்து முன்வைக்கப்பட்ட விமர்சனங்களில் பெரும்பகுதி மேற்குறிப்பிட்ட மறுபக்கம் சார்ந்தவையே. இலக்கிய விமர்சனம் என்பது சாராம்சத்தில் சமூக விமர்சனமாகவே இருந்து வந்திருப்பதைக் கடந்த சில பத்தாண்டுகளின் இலக்கிய விமர்சனப் போக்கைக் கூர்ந்து கவனிப்பவர்கள் அறிவர். தமிழ் நவீன இலக்கியத்தைச் செழுமைப்படுத்திய சிற்றிதழ் இயக்கங்கள் இந்த விமர்சனங்களுக்கு முக்கியத்துவம்மளித்த

புத்தாயிரத்தின் இலக்கியம்
சுகுமாரன்  

சமீபத்திய வருடங்களின் கவிதைப் பெருக்கத்தை யோசிக்கும்போதெல்லாம் திருச்சூர் பூரக் காட்சியும் மனத்தில் திரையீடாகும். இருபுறமும் யானைகள். அவற்றின் முதுகுகளில் முதுகு ஒன்றுக்கு இருவராக வண்ணக் குடைகளும் வெண்சாமரங்களும் பிடித்த மனிதர்கள். யானைகளுக்குக் கட்டியிருக்கும் பொன்முலாம் பூசிய பட்டங்கள் வெயிலில் மின்னுகின்றன. அந்த மினுக்கத்தால் வெயில் இன்னும் அதிகமாகப் பிரகாசிக்கிறது. யானைகளின் நேருக்கு நேரான வரிசைக்குப் பின்னால் பல வண்ண மக்கள் திரள். முன்னால் வெவ்வேறு வாத்தியக் கருவிகளுடன் ஏறத்தாழ இருநூறு கலைஞர்கள். வெவ்வேறு வாத்தியங்களிலிருந்து அவர்கள் வாசித்து எழுப்பும் வெவ்வேறு தாள ஒலிகள் ஒரே உயிரின் லயமாகக் கேட்கின்றன. சீரான ஒத்திசைவில் கலைஞர்களின் உடல்கள் இயங்குகின்றன. மக்கள் திர

புத்தாயிரத்தின் இலக்கியம்
ந. முருகேசபாண்டியன்  

இருபதாம் நூற்றாண்டின் இறுதிப் பத்தாண்டுகள் சமூகரீதியில் புதிய போக்குகளை எதிர்கொண்ட காலம். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு நம்பிக்கையூட்டிய அரசியல் தத்துவங்களும் ஆறுதலளித்த மதங்களும் தம் மேலாதிக்கத்தை இழந்திருந்த, எதிர்காலம் குறித்த அவநம்பிக்கையும் இருத்தல் குறித்த கசப்பும் நிரம்பி வழிந்த தருணம் அது. உலக வங்கி, ஐ.எம்.எஃப் போன்ற சர்வதேச நிதிநிறுவனங்களின் மூலதனக் கொடுங்கோன்மை, ஆசிய ஆப்பிரிக்க நாடுகளில் ஆழமாக ஊடுருவியது. பல்வேறு நாடுகளின் இறையாண்மை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. மனித ஆக்கங்கள் எல்லாமே சந்தைக்கானவையாக மாற்றப்பட்டன. நுகர்பொருள் பண்பாடு தனிமனித வாழ்வின் மீது மூர்க்கமாகத் திணிக்கப்பட்டது. இச்சூழல் கலை இலக்கியத் தளத்திலும் வெவ்வேறு வழிகளில் பிரதிபலித்தது. தமிழில் காத்திர

புத்தாயிரத்தின் இலக்கியம்
க. காசிமாரியப்பன்  

புதிய நூற்றாண்டில் பெருக்கெடுத்த டாலர் வெள்ளமும் தனியார்மயமும் தமிழ்ப் பண்பாட்டு வாழ்க்கையைக் கலக்கியடித்திருக்கின்றன. செயலற்ற வெறும் பேச்சுகளாலான உலகத்தில் கம்பியில்லாத் தொலைபேசி, இணையதளங்கள் வழியாகக் குவிந்த டிஜிடல் செய்திகளால் நவீன மனிதரின் அக உலகம் நெருக்கடிகளைக் கோரிப் பெற்றுள்ளது. சைபர் தேச மெல்லுடல்களும் தமிழ்ச் சினிமாவும் கற்றுக்கொடுத்த இன்பத் துய்ப்புகள் கேபினுக்குள் பலரை முடக்கியுள்ளன. பிளவுபட்ட அக்கறைகளுடனான இளைஞர்களின் ஒற்றை நம்பிக்கைகள், கூட்டிணைவின் மீதான தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளன. வாழ்வில் முன்னேறச் சமூகத்தைப் புறந்தள்ளித் தனிமனிதரின் மேம்பாட்டுக்கு வழியுரைக்கும் நிபுணர்களின் வாய்ச்சொற்களைக் குளிர்ந்த அறைகளில் காசு கொடுத்துக் கேட்கும் கூட்டம் அச்ச

புத்தாயிரத்தின் இலக்கியம்
க. மோகனரங்கன்  

சிறுகதை என்னும் வடிவம் இலக்கியத்திற்கு இருபதாம் நூற்றாண்டு வழங்கிய கொடை. பிற வகைமைகளான நாவல், கவிதை, நாடகம் போன்ற வற்றில் மொழி, இன, பிரதேச, பண்பாட்டு அடையாளங்களுக்குத் தக மரபின் அழுத்தமான பீடிப்புகளைக் காண முடியும். ஆனால் உலகெங்கிலும் சற்றேறக் குறைய ஒரே காலகட்டத்தில் அறிமுகமான சிறுகதையில் அத்தகைய பாதிப்பு குறைவே. காரணம் அதில் வெளிப்படும் காலப் பிரக்ஞைதான். இப்பொழுது, இந்நிலையில் எனும் சமகாலத் தன்மையிலேயே சிறுகதையின் ஆதாரம் மையம் கொண்டிருக்கிறது. ஐரோப்பிய மறுமலர்ச்சிக் காலச் சிந்தனைகளின் தொடர்ச்சியாக உருவாகி மேலெழுந்துவந்த தனிமனிதன் என்னும் கருதுகோளின் அடிப்படையில் அவனுடைய சிந்தனைகள், நினைவுகள், கனவுகள் ஆகியவற்றிற்குப் பிரதான இடம் தந்து எழுதப்படுவது சிறுகதை. ஆகவேதான் ஒர

புத்தாயிரத்தின் இலக்கியம்
ஸ்டாலின் ராஜாங்கம்  

ஒரு காலகட்டத்தின் சமூகப் பண்பாட்டுத் தளத்தில் குறிப்பிட்ட ஒரு போக்கை முக்கியமானது எனத் தீர்மானிக்கலாம் என்றால் அதை எப்படி, யார் தீர்மானிப்பது? தலைவர்களா அறிவாளிகளா? அல்ல. குறிப்பிட்ட அந்தக் கட்டத்தின் இயங்கியல் விதியே அதைத் தீர்மானிக்கிறது. அக்காலகட்டத்தின் குரலைப் பிரதிப்பலிப்பவர்களாகத் தலைவர்களும் அறிவாளிகளும் இருந்துவிடும்போது அவர்களது குரலும் முக்கியமானதாகிவிடுகிறது. கடந்த இருபதாண்டு காலத் தலித் அடையாள உருவாக்கத்திற்கும் இதுவே பொருந்தும். 1990களில் தொடங்கி இதுவரையான தலித் அடையாளம் அரசியல், இலக்கியம், பதிப்புத் துறையில் ஏற்படுத்திய தாக்கங்களையும் அதன் விளைவுகளையும் குறித்த ஒரு விரிவான, ஆழமான பரிசீலனை அவசியமாகிறது. தமிழில் தலித் இலக்கியம் சார்ந்த பதிப்பு முயற்சிகளின்

புத்தாயிரத்தின் இலக்கியம்
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

சு. வெங்கடேசனின் 1040 பக்கங்களுடைய காவல் கோட்டமா? அல்லது கீரனூர் ஜாகிர் ராஜாவின் 104 தாள்களில் சித்தரிக்கப்பட்ட மீன்காரத் தெருவா? இது இலக்கியப் பரிசுகள் வழங்கும் குழுக்களைத் தலைசுத்த வைக்கும் சங்கதி அல்ல. ஒரு நீண்ட பயணம் போகிறீர்கள் என்று வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பயணப் பெட்டியின் எடையை மெலிதாக்க இந்த இரண்டு நாவல்களில் எதைத் தெரிவு செய்வீர்கள்? தொக்கையான காவல் கோட்டத்தைவிட ஒல்லியான மீன்காரத் தெருவைத்தான் உங்கள் கை நாடும். இனி இந்தக் கவலை இருக்காது. எந்தப் பாரமான புத்தகத்தையும் சுமந்துசெல்ல மின்-வாசிப்பான் (e-reader) சந்தையில் அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. 7 அங்குல அளவில் 230 கிராம்ஸ் எடையுடைய கையடக்கமான இந்தக் கருவியை இலகுவாக எங்கும் எடுத்துச் செல்ல முடியும். இலக்

புத்தாயிரத்தின் இலக்கியம்
சண்முகராஜா  

கடந்த பத்தாண்டுகளில் தேசிய நாடகப் பள்ளி, சங்கீத நாடக அகாதமி, மாநில அளவில் இயங்கும் நாடகப் பள்ளிகள், தனித்து இயங்கும் முழு நேரக் குழுக்கள் தவிர, தனிநபர்கள் சிலரும் பல்வேறு புதிய முயற்சிகளின் மூலம் நவீன நாடக இயக்கத்துக்குப் பங்களிப்புச் செய்திருக்கின்றனர். அம்முயற்சிகளைக் கூர்ந்து அவதானிப்பதற்கு ஏதுவாக 1998இல் தொடங்கப்பட்டு ஆண்டுதோறும் நடக்கும் தேசிய நாடகப் பள்ளியின் தேசிய நாடக விழா அமைந்திருக்கிறது. இந்தியா முழுவதிலிருந்தும் அறுபதுக்கும் மேற்பட்ட நாடகங்கள் பங்கேற்கும் மிகப் பெரிய விழா இது. 1999இலிருந்து தேசிய நாடகப் பள்ளியுடனும் நவீன நாடகம் சார்ந்த பிறசெயல்பாடுகளுடனும் நான் தொடர்புகொண்டிருக்கிறேன். புது தில்லியில் கடந்த ஜனவரி (2009) மாதம் நிகழ்ந்த “நாடகப் பயிற்சி -

நாடகம்
திருமாவளவன்  

தமிழ் இலக்கிய வெளியில் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய அளவுக்கு நிரப்பப்படாத துறை எதுவெனப் பார்த்தால் அது மொழிபெயர்ப்பு எனச் சந்தேகத்திற்கிடமின்றி உரத்துச் சொல்லலாம். அதிலும் தமிழிலிருந்து மேலைத்தேய மொழிகளுக்கான மொழிமாற்று என்பது இல்லையென்று சொல்லுமளவுக்கு மிக அரிதானது. ஈழ விடுதலைப் போராட்ட காலத்திற்குப் பிற்பாடு பெருவாரியான தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழத் தலைப்பட்டு இரண்டு மூன்று தசாப்தங்கள் ஆன தன் பிற்பாடுங்கூட இது பெரிதும் நடக்கவில்லை. ஈழப் போரட்டம் பெரும் தோல்வியைத் தழுவிக்கொண்டது எனக் கூறப்படும் இக் காலகட்டத்தில் போர்க் கால ஈழத் தமிழ்க் கவிஞர்கள் மூவரின் எழுபத்தைந்து கவிதைகள் ஆங்கிலத்தில் மொழிமாற்றம் பெற்று “Wilting Laughter: Three Tamil Poets” என்னும

நேர்காணல்
 

Love Stands Alone. பெங்குவின் (Penguin) இம்மாதம் வெளியிடவிருக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட சங்கப்பாடல்களின் ஆங்கில மொழிபெயர்ப்பு நூல். ம.இலெ. தங்கப்பா ஐம்பதாண்டுகள் உழைத்து உருவாக்கிய நூல். உலகின் கவனத்துக்குச் சங்க இலக்கியச் செழுமை மீண்டும் ஒருமுறை கொண்டுசெல்லப்படுகிறது. ஆழமும் விரிவும் கொண்ட தமிழரின் பார்வையை இந்நூல் சரியானபடி உணர்த்தும். செம்மொழித் தகுதியும் இலக்கியவழி உலகளாவிய அளவில் உறுதிப்படும். இந்தப் பின்னணியில், இம்மொழிபெயர்ப்பை நுட்பமாக உழைத்து உருவாக்கிய ம.இலெ. தங்கப்பாவைப் புதுவையில் கண்டுபேசினோம். சிறு வட்டாரத்தில் ஒளிபரப்பி அதில் நிறைவு கண்டு வாழும் தங்கப்பா, தமிழின் இன்னொரு குடத்திலிட்ட விளக்கு. மறைந்து வாழும் ஓர் இயக்கம்: ம.இலெ. தங்கப்பா ஆந்தைப்பாட்டு,

கட்டுரை
அரவிந்தன்  

உப்பு. அறுசுவைகளில் ஒன்று. உணவில் இன்றியமையாதது. என்றாலும் மிகக் குறைவாகச் சேர்க்கப்படுவது. இதை வைத்துக்கொண்டு ஒரு தேசத்தையே எழுச்சி பெறச் செய்ய முடியுமா? ஒரு சாம்ராஜ்யத்தையே அசைத்துப் பார்க்க முடியுமா? நேராகக் கடலுக்குச் செல்லுங்கள். உப்பளத்திலிருந்து ஒரு கைப்பிடி அளவு உப்பை எடுங்கள். அதற்கு வரி கொடுக்காமல் எடுத்து வாருங்கள். இதைச் செய்தால் அரசு ஆட்டம் காணும். இப்படி ஒரு கருத்தை யாராவது சொல்லியிருந்தால் அனைவரும் வாய்விட்டுச் சிரித்திருப்பார்கள். ஆனால் இந்த வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கம் இந்திய வரலாற்றில் அலாதியானதொரு நிகழ்வாக நிலைபெற்றுள்ளது. 1930 மார்ச் 12ஆம் தேதி மாதம் மகாத்மா காந்தியடிகள் தனது சபர்மதி ஆசிரமத்தில் உப்புச் சத்தியாக்கிரக யாத்திரையைத் தொடங்கினார். மிக

கட்டுரை
 

நான் தில்லிக்குப் போனபிறகு ‘பார்த்த’ முதல் குடியரசு தின விழா 1956ஆம் ஆண்டு. உண்மையைச் சொன்னால், ஒரு படத்தில் பழம்பெரும் நடிகர் ‘என்னத்தே’ கன்னையா சொன்னதுபோல் ‘பாத்தேன். . . ஆனா . . . பார்க்கலே’ என்று சொல்வதுதான் சரியாக இருக்கும். 150 சானல்களுள்ள டிவியும் கையில் ரிமோட்டும் வராத காலம். அதற்கு முன்னால் எங்களூரில் சினிமாத் தியேட்டர்களில் படத்திற்கு முன்னால் போடப்படும் இந்திய செய்திப் படம் எண் 1049இல் பிரதீப் ஷர்மா அல்லது மெல்வில் டி’மெல்லோவின் விளக்கவுரையுடன் குடியரசு தின விழாவைத் திரையில் தான் பார்த்தேன். நான் 1955ஆம் வருடம் தில்லி போனபோது, அந்த வருடத்திய குடியரசு விழா நடந்து முடிந்திருந்தது. 1956ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி விழாவ

அஞ்சலி: இல.கி. இராமானுஜம் (17.8.1924 - 24.9.2009)
புது சீனிவாசன்  

இல.கி. இராமானுஜம் நல்ல இலக்கியவாதி. நூல் சேகரிப்பாளர். ஆனால் ரோஜா முத்தையாவைப் போன்றோ ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியைப் போலவோ அதிகம் அறியப்படாதவர். ஆயினும் அவருடைய நண்பர் குழாம் குமரி மலர் ஏ. கே. செட்டியார், சக்தி வை. கோவிந்தனில் தொடங்கி எழுத்து சி.சு. செல்லப்பா, சரஸ்வதி விஜயபாஸ்கரன் என்று வளர்ந்தது. லா. ச. ராமாமிர்தம், காலச்சுவடு சுந்தர ராமசாமி என நீண்டு, புலவர் இராமசாமி, ‘சிவாஜி’ திருலோக சீதாராம், ‘பொய்யுரையாத புண்ணியன்’ இராமானுஜன் என ஒரு நீண்ட பட்டியலே தயார் செய்யலாம். அவருடைய திருநாராயணபுரம் கிராமத்து இல்லத்தில் சி. சு. செல்லப்பா சில காலம் தங்கியதுண்டு. எழுத்தின் பால் அத்தனை பாசம். ஞானாலயா கிருஷ்ணமூர்த்தியின் நூல் சேகரிப்பில் கணிசமான பங்கு இராம

மதிப்புரை
வா. மணிகண்டன்  

இசையை ஒரு மாலை நேரத்தில் கோயமுத்தூரில் நிகழ்ந்த இலக்கியக் கூட்டத்தில் பார்த்திருக்கிறேன். அதன் பிறகு இரண்டுமுறை தொலைபேசியில் நாங்கள் பேசியிருக்கிறோம். அதோடு அவரை நானும் என்னை அவரும் மறந்துவிட்டோம். ஆனால் அவருடைய கவிதைகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்திருக்கிறேன். உறுமீன்களற்ற நதி (கவிதைகள்) ஆசிரியர்: இசை பக்.: 80 விலை: ரூ. 60 முதற்பதிப்பு: அக்டோபர் 2008 வெளியீடு: காலச்சுவடு 669, கே.பி. சாலை நாகர்கோவில் - 629 001 கவிஞனின் கவிதைகளைச் சில சஞ்சிகைகளிலும் சிற்றிதழ்களிலும் அவ்வப்போது வாசிப்பதைவிடவும், தொகுப்பாக வாசிப்பதில் கிடைக்கும் அனுபவம் ஆசுவாசமானது. தொகுப்பாக்கித் தருவதில் கவிஞனுக்கும் ஆசுவாசம் உண்டு. கவிதைகள் தொகுக்கப்படும் கணத்தில் கவிஞன் கவிதைகளை

மதிப்புரை
ஆனந்த்  

காதல், வேதனை, உறவு, தனிமை, பிரிவு, பிரிவாற்றாமை, மௌனம், துயரம், நிராசை, ஸ்பரிசம், கனவுகள், கண்ணீர்த்துளிகள், வண்ணங்கள், இருள், ஒளி, இசை, இரவு, பகல், கடல், நிலவு, மழை, ரகசியங்கள், முத்தங்கள், சாவு, பறவை, பூனை, சொல், பேரன்பு, நித்யகல்யாணிப்பூ, இவையெல்லாம் கவிதாவின் கவிதையுலகில் உலவும், அதைக் கட்டமைக்கும் விஷயங்கள். கருத்துகள் மிகக் குறைவாகவும் உணர்ச்சிகளும் உள்ளுணர்வுகளும் பெருமளவுக்கும் தொடர்ந்து ஊடாடுவது கவிதாவின் கவிதைகளின் பலம். சந்தியாவின் முத்தம் (கவிதைகள்) ஆசிரியர்: கவிதா பக்.: 64 விலை: ரூ. 45/- முதற்பதிப்பு: ஏப்ரல் 2008 வெளியீடு: காலச்சுவடு 669, கே.பி. சாலை நாகர்கோவில் - 629 001 இயல்பாகவே பெண்மையின் பார்வைக் கோணமும் அவ்வாறான பார்வை சார்ந்த உணர்ச்சி

கடிதம்
 

இந்திய அரசு மரபணு மாற்றிய (பி.டி.) கத்திரிப் பயிருக்கு அனுமதி வழங்கும் தறுவாயில் இருக்கிறது. நமது விளைநிலங்களின்மீது கற்பனை செய்ய முடியாத தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய அபாயங்களை உள்ளடக்கிய இதன் விவகாரம் குறித்துச் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தமிழக முதலமைச்சருக்கு ஒரு கடிதத்தை அனுப்பியிருக்கிறார்கள். எழுத்தாளர்கள், இதழியலாளர்கள் உள்ளிட்ட பல்துறைப் பிரமுகர்கள் கையெழுத்திட்டு அனுப்பிய அந்தக் கடிதத்திலிருந்து சில பகுதிகளை இங்குப் பிரசுரிக்கிறோம். - பொறுப்பாசிரியர் மதிப்பிற்குரிய முதலமைச்சர் அவர்களுக்கு, வணக்கம்!! மரபணு மாற்றிய (பி.டி.) கத்திரிப் பயிருக்கு அனுமதி வழங்கும் இறுதித் தறுவாயில் இந்திய அரசு இருப்பதை அறிந்திருப்பீர்கள். இந்திய விவசாயிகள் நுகர்வோரின் தலையெழுத்தை முழுதாய்

பதிவுகள்: நாடகம், டிசம்பர் 8 அலையன்ஸ் ஃப்ரான்சேஸ், சென்னை
உபேந்திர நிநாசம்  

‘மாதரி கதை’ நாடகம் சென்னை அலையன்ஸ் ஃப்ரான்சேஸ் அரங்கத்தில் டிசம்பர் 8 அன்று நிகழ்த்தப்பட்டது. இந்நாடகத்தில் நாம் கண்டது கேட்டது அல்லது நாடகத்தைப் பற்றி நாம் அறிந்திருந்தது, எது நாடக அனுபவமாகியது அல்லது இதையெல்லாம் தாண்டி வேறு என்ன இருக்க முடியும் என்று யோசித்துப் பார்த்தால் அது நாயகியான மாதரி. இதில் பங்கு பெற்ற நடிகர்கள், அரங்கச் சூழல், இசை, ஒளியமைப்பு, நடனம் இவை பற்றி எழுதுவதற்கு முன்னால் வெளி ரங்க ராஜன் மாதரியைத் தேர்ந்தெடுத்ததற்கான உந்துதல் பற்றி எழுதத் தோன்றியது. ஆம், மாதரி எந்தவிதமான நாடக அழுத்தமும் இல்லாத, அப்பட்டமான, திறந்த மனம் கொண்ட, அன்பின் வடிவமான எளிய பாத்திரம். இந்தக் காப்பியத்தில் அதிகம் பேசாத கண்ணகியும் மிகுந்த கவலையில் இருக்கிற கோவலனும் மதுரைக

தலையங்கம்
 

உலகின் மிகப் புராதனமான தொழில் எனக் கருதப்படுகிற பாலியல் தொழிலை ஒழிக்க முடியவில்லை எனில் அதற்கு ஏன் சட்ட அங்கீகாரம் வழங்கக் கூடாது எனக் கேள்வியெழுப்பியிருக்கிறது உச்ச நீதிமன்றம். பாலியல் தொழிலுக்காகப் பெண்களும் குழந்தைகளும் கடத்தப்படுவது தொடர்பாகத் தன்னார்வ அமைப்பு ஒன்று தொடர்ந்த வழக்கு விசாரணையின்போது நீதிபதிகள் தல்வீர் பண்டாரி, ஏ.கே. பட்நாயக் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் டிசம்பர் 9ஆம் தேதி இந்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கோபால் சுப்பிரமணியத்திடம் எழுப்பிய இக்கேள்விகள் பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டுள்ள 18 லட்சம் பெண்கள், 12 லட்சம் குழந்தைகளின் நிலைகுறித்த அரசின் அலட்சியப் போக்குக்கு எதிரான கடும் விமர்சனம் என்பதில் சந்தேகமில்லை. சில விதிவிலக்குகள் தவிர்த்துப் பெரும்ப

கண்ணோட்டம்
கண்ணன்  

‘தினகரன்’ அலுவலகம் தாக்கப்பட்டது 09.05.2007 அன்று. காரணம் அவர்கள் வெளியிட்ட ‘கருத்துக்கணிப்பு’. அதை வெளியிட வேண்டாம் என்று கருணாநிதி மாறன்களை ‘அறிவுறுத்தினார்’. அவர்கள் மீறினர். விளைவு ‘தினகரன்’ எரிந்தது. அதன் மூன்று ஊழியர்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர். பின்னர் கருணாநிதி குடும்பம் ஒன்றிணைந்து சீரும் சிறப்புமாக எல்லாச் செல்வங்களும் கிடைக்கப்பெற்று நீடுழி வாழ்கிறது. படுகொலைத் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் திமுகவினர். அத்தோடு அழகிரியின் அடியாட்கள். இது பிம்பங்களாக ஊடகங்களில் பதிவான செய்தி. போலீசார் வேடிக்கை பார்த்தனர். இதுவும் ஊடகங்களில் பிம்பங்களாகப் பதிவான விஷயம். ‘கலைஞரின் எச்சரிக்கையை மீறக் கூடாது என்பது மாறன்களுக்குத் தெர

 

‘காலச்சுவடு’ நவம்பர் 2009 இதழில் வெளிவந்த ‘வெட்கம் கெட்ட நடிகர்கள்’ தலையங்கம், மிகுந்த அறச் சீற்றத்துடன் மிளிர்கிறது; கடைசி இரண்டு பத்திகளும் என் இதயத்தின் எதிரொலிகளே. “இந்த நூற்றாண்டின் மாபெரும் மனிதப் பேரவலம் என வர்ணிக்கப்படும் ஒரு கொடிய யுத்தத்தை நடத்தி, லட்சக்கணக்கான அப்பாவி மக்களின் வாழ்வைச் சிதைத்தவர்கள் நடத்தும் கண்துடைப்பு நாடகத்தைக் கருணாநிதியும் தமிழகத்தைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் பங்கேற்று நடித்திருப்பது வெட்கக் கேடானது” எனும் வரிகள், உலகெங்குமுள்ள கோடான கோடித் தமிழர்களின் நியாயமான உணர்ச்சிப் பிரதி பலிப்பு. ‘உலகத் தமிழ் இதழ்’ எனும் காலச்சுவடின் உரிமைக்கும் பெருமைக்கும் பொருத்தமானதாகும். அருமையான தலை

உள்ளடக்கம்