கட்டுரை
 

பழங்குடிகள் வாழும் தண்டேவாடாப் பகுதியில் 17 ஆண்டுகளாகப் பணிபுரியும் மனித உரிமைச் செயல்பாட்டாளரும் காந்தியவாதியுமான ஹிமான்சு குமார் சத்தீஸ்கரில் உள்ள நிலைமை பற்றி மும்பை பிரஸ் கிளப்பில் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி ஆற்றிய உரை, பத்திரிகையாளர் ஜியோதி புன்வானியால் தொகுக்கப்பட்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுக் கட்டுரையாக நவம்பர் 21, 2009 தேதியிட்ட EPW (Economic and Political Weekly) ஆங்கில வார இதழில் வெளிவந்துள்ளது. உண்மையான இந்தியா கிராமங்களில் வாழ்கிறது, இளைஞர்கள் கிராமங்களுக்குச் சென்று அவற்றுக்குப் புத்துணர்வூட்ட வேண்டும் என்னும் காந்தியின் நம்பிக்கையை அடியொற்றிப் பதினேழு ஆண்டுகளுக்கு முன்பு நான் தண்டேவாடாவுக்குச் சென்றேன். ஆசிரமம் அமைப்பதற்கான நிலத்தை எனக்கு அங்குள்ள

கட்டுரை
சூரியதீபன்  

1970களின் பிற்பகுதியில் பேராசிரியர் கைலாசபதி, கா. சிவதம்பி போன்றோர் முதன்மைப்படுத்திய முற்போக்குத் தடங்களைப் பதிவுசெய்த ‘அலை’என்னும் இதழில் எழுதத் தொடங்கி, இன்றுவரை பல்வேறு இதழ்களில் பங்களிப்பைச் செய்துகொண்டிருப்பவர் அ. யேசுராசா. எழுத்தாளர், இதழாளர், ஆய்வாளர் என அறியப்பட்ட அ. யேசுராசா வுக்கு இலங்கை அரசு, தேசத்தின் உயர்ந்த விருதுகளில் ஒன்றான கலா கீர்த்தி என்னும் விருதை 2005இல் வழங்கியது. (இங்கே குடியரசுத் தலைவர் வழங்குகிற பத்மஸ்ரீ, பத்மபூஷண் போன்ற விருதுகளின் மட்டத்துக்கு எண்ணப்படுவது) கலா கீர்த்தி விருதை ஏற்க மறுத்த யேசுராசா, அதற்கான காரணத்தை விளக்கி அரசுக்கு ஒரு கடிதம் அனுப்பினார். கலா கீர்த்தி விருதை மறுத்த யேசுராசாவின் பதில்; “கலை இலக்கியத் துறையி

கட்டுரை
க. திருநாவுக்கரசு  

‘‘செல்வந்தனாக இருப்பதோ, புகழுடன் இருப்பதோ, வலிமையாக இருப்பதோ, மகிழ்ச்சியாக இருப்பதோகூட அல்ல, பண்பட்டவனாக இருப்பதே அவனது வாழ்க்கையின் கனவாக இருந்தது’’ When she was good என்னும் நாவலின் தொடக்க வரி இது. தனது நாவலின் முக்கியக் கதாபாத்திரமான வில்லர்ட் கரோல் பற்றி நாவலாசிரியர் பிலிப்ராத் கூறுவது. பண்பட்டு இருப்பது என்பது ஒரு தனிமனிதனுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த மனித குலத்திற்கே கனவாகவும் இலட்சியமாகவும் இருக்கும் தகுதி பெற்றது. நாகரிகத்தின் வளர்ச்சிப் படிகளில்தான் இன்னமும் வெகு கீழ்நிலையில் இருப்பதை மனித குலம் தனது காட்டுமிராண்டித்தனமான செயல்கள் மூலம் தொடர்ந்து வெளிப்படுத்திக்கொண்டேயிருக்கிறது. ஆனால் நாகரிகத்தின் உச்சங்களைத் தொடவல்ல ஒரே உயிரினம் மன

சிறுகதை
ஸ்ரீரஞ்சனி  

“அம்மா, அம்மா” எனப் பல தடவை மகள் கூப்பிடுவதைக் கேட்டும் கேட்காதது போல் தனது வேலையில் வெகு மும்முரமாக நின்றாள் கலா. “என்ன, மது கூப்பிடுறது கேட்கேல்லையே? பிறந்தநாளும் அதுமா அவனை அழவிடாமல் போய்ப் பாரன்” என்று பத்திரிகைக்குள் தலையையும் வாய்க்குள் சாப்பாட்டையும் வைத்துக் கொண்டு சொன்னான் மனோ. “நீங்கள் இருந்த இடத்திலை இருந்து கொண்டு சும்மா கதையுங்கோ. நான் விடிய எழும்பின நேரத்திலையிருந்து சமையலோடை அவதிப்படுறது தெரியேல்லையே, ஏன் நீங்கள் போய்ப் பாக்கக் கூடாதே?” பட்டாசுபோல் வெடித்தாள் கலா. கடைசியில் மது எழும்பி அழுதுகொண்டு அம்மாவைத் தேடி குசினிக்கு வந்தான். “அம்மா, ஐ கோல்ட் யூ தவுசன் ரைம்ஸ்.” “மதுக் குட்டி, ஹப்பி பேர்த்

கட்டுரை
பி. ஏ. கிருஷ்ணன்  

திருநெல்வேலி இந்துக் கல்லூரியில் வேலைக்குச் சேர்ந்தபோது எனக்கு வயது 22க்கும் குறைவுதான். என்னை வேலைக்குத் தேர்ந்தெடுத்ததன் காரணம் அல்ல திறமை என்று எனக்கு நிச்சயமாகத் தெரியும். எனக்கு இயற்பியலில் நிச்சயமாகத் தேர்ச்சி இருந்தது. ஆனால் நேர்காணல் செய்தவர்கள் இயற்பியல் பக்கம்கூடப் போனதில்லை. ஒரு மரியாதைக்குக்கூட அவர்கள் இயற்பியல் தெரிந்தவர்களை நேர்காணல் குழுவில் வைத்துக்கொள்ளத் தயாராக இல்லை. நான் தேர்வுசெய்யப்பட்டதற்கு சாதியும் ஒரு காரணமாக இருந்திருக்கலாம். இந்துக் கல்லூரி நிர்வாகக் குழுவில் ஒரு பிராமணர் இருக்க வேண்டுமென்ற நெறிமுறை அந்த நாட்களில் இருந்தது. அதாவது இன்றைக்கு நாற்பதாண்டு களுக்கு முன்பு. 1968இல். (இன்றும் அந்த நெறிமுறை தொடர்கிறதா என்பது எனக்குத் தெரியாது.) அந்தச்

 

என் என் பால்யத்தை எப்படிப் பிரசவிப்பது. சிறு குழந்தையாகப் பெற்றெடுக்க நான் தாயுமல்லன்; தந்தையுமல்லன் இரண்டிற்கும் நடுவில் என் கனவு, பூட்டியிருக்கிறது. அதன் ஓரப் பொந்துகளில் என் பால்யமனத் துவாரச் சாவியைக் கவ்வியபடி பறக்கிறது ஒரு காகம் காகத்தின் திருட்டு வடையை சுட்டுத் தரும் மூதாட்டிக்கு 450கோடி ஆண்டுகள் பூமி வயசு அவள் மூட்டிய தீயில் நூற்றாண்டுகள் கடந்திட்ட ஜீவகாருண்ய தித்திப்பு- என்றும் ஒரு மிடறு மிதந்தபடி இருக்கிறது. அதன் உள்ளோடும் தினசரியை ஓர் இடமாகப் பார்க்கும் பேரிளம்பெண் தன் பால்யத்தைப் பெண்மைக்குள் கைவிட்டு உயிருள்ள ஜீவனாக வெளியே எடுக்கிறாள் அதன் ஜுவாலை மூடாமல் திறந்தே இருக்கிறது அதன் கீழ் ஒரு சொல் ஒரே ஒரு சொல் வாழ்வின் இடையே பிறக்கி

சிறுகதை
நாகரத்தினம் கிருஷ்ணா  

பிரதானச் சாலையின் வலப்புறத்தில் வணிகர் பேரவை வளாகம். பிறக்கவிருக்கும் புதுவருடத்தை எதிர்பார்க்கிற மகிழ்ச்சியும் கிறிஸ்துமஸ் பண்டிகைக் கோலாகலமும் அக்கட்டடத்தையும் உருமாற்றம் செய்திருந்தது. தடித்த கண்ணாடியின் கீழ்ப் பதுக்கப்பட்டிருந்த நடைபாதை மின்விளக்குகள் அட்டவணை நேரகதியில் சிவப்பு, பச்சை, பொன்மஞ்சளென வளாகத்திற்கு உடுத்தி மகிழ்ந்தன. சாலைக்கும் கட்டடத்திற்கும் இடைப்பட்ட வெளியில் வெளிநாட்டினர் பகுதியில் இவ்வருடம் ரஷ்யர்களின் ஸ்டால்கள். குளிரை முன்னிட்டு ஒரு ஸ்டாலில் வோட்கா வியாபாரம். ஆண்களும் பெண்களுமாகக் கையில் வாங்கிய வேகத்தில் மதுவைத் தொண்டைக்குழிக்கனுப்பிக் குளிரைச் சரீரத்திலிருந்து உரித்து எரிந்தனர். அந்தப் பக்கம் ஹோவென்ற கூச்சல், அந்தக் கால ரயில்கள்போல வீறிட்டுக்க

கட்டுரை
அரவிந்தன்  

தொண்ணூறுகளின் மத்தியில் எழுதத் தொடங்கிய படைப்பாளிகளில் ஒருவரான ஜே. பி. சாணக்யாவின் இரண்டாம் தொகுப்பு இது. 2005இல் வெளியான இத்தொகுப்பில் கதைகள் கால வரிசைப்படி அமையாமல் கதாசிரியரின் விருப்பத்தின் அடிப்படையில் வரிசைப்படுத்தப்பட்டிருக்கின்றன. கால வரிசைப்படி அமைந்த கதைகள் காலத்தின் கதியில் ஒரு படைப்பாளியின் மாற்றங்களை உணர உதவிகரமாக இருக்கும். ஆனால் இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளுக்குக் கீழே தரப்பட்டுள்ள பிரசுர விவரங்களைப் படிக்காமல் இந்தக் கதைகளைப் படிக்கும் ஒரு வாசகருக்கு இவற்றில் எது முதலில் எழுதப்பட்டது என்பது குறித்து அவ்வளவு எளிதாக ஒரு முடிவுக்கு வந்துவிட முடியாது. காலத்தின் போக்கில் ஏற்பட்டுவரும் மாற்றங்களை ஒரு படைப்பாளி தவிர்க்க முடியாது என்றாலும் சாணக்யாவின் தொடக்க

உரை
எஸ். நரசிம்மன்  

வணக்கம்! இந்த இனிய மாலைப்பொழுதில் ஹாங்காங் இந்தியர்களால் ‘யூனூஸ் பாய்’ என்றழைக்கப்படும் ஒரு நல்ல மனிதரைப் பற்றி நினைக்கவும் அவற்றை உங்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வாய்ப்பு அளித்த அவர்தம் “எனது பர்மா குறிப்புகள்” என்ற இந்நூலுக்கும் இதை மிகச் சிறப்பாகத் தொகுத்திருக்கும் நண்பர் மு. இராமனாதனுக்கும் நல்ல முறையில் நூலைத் தயாரித்து வெளியிடும் காலச்சுவடு பதிப்பகத்துக்கும் நன்றி. நானும் ஹாங்காங் நகரத்தில் கொஞ்ச காலம் இருந்தேன். அப்போது இந்நூலின் நாயகனான யூனூஸ் பாய் அவர்களுடன் பழகி உள்ளேன். அவரது எளிமை, தன்னடக்கம், எப்போதும் தெளிக்கும் உற்சாகம், தமிழ் மேலுள்ள தணியாத தாகம், சமூக அக்கறை ஆகியவற்றைக் கண்டிருக்கிறேன். இன்று அவரது பர்மா குறிப்புகளைப் படித்துவிட்டு

கட்டுரை
ஜி.கே. ராமசாமி  

மார்க்சின் கோட்பாடும் தத்துவமும் அவரது மறைவுக்குப் பின்பு பல விளக்கங்களையும் வசைகளையும் கண்டுவிட்டன. அதை ஆக்கபூர்வமாகச் செயல்படுத்தியவர்களும் உண்டு; அது அறிவியல் கோட்பாடு எனக் கூறி அந்தஸ்தை உயர்த்த முயன்ற போக்கில், அதை வறட்டுச் சூத்திரமாக்கியவர்களும் உண்டு. மார்க்சியம் ஒரு சமூகக் கோட்பாடு; அரசியல் செயல்பாட்டுக்குத் தூண்டும் தத்துவப் பார்வை. ஆதிக்கத்திற்கு உட்பட்ட, சுரண்டப்படும் மக்களின் போராட்டத்திற்கான நியாயத்தையும் அறத்தையும் முன்னிறுத்திப் போராடத் தூண்டும் தத்துவம். எனவே அதைக் கடுமையாக விமர்சிப்போரும் உண்டு. நாகராஜனின் கீழை மார்க்சியம் என்பது இவற்றில் எதைச் சார்ந்தது என அறிய முயல்வதே நமது நோக்கம். இரண்டாம் அகிலத்தைச் சேர்ந்த மார்க்சியவாதிகள் - ஏங்கல்ஸ் உட்பட - மார்க

கட்டுரை
சுகுமாரன்  

முன் கதை ராஜ்மோகன் உண்ணித்தான் கேரளப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் எண்ணற்ற பொதுச்செயலாளர்களில் ஒருவர். நீண்ட காலத் தொண்டர். நல்ல சரீர கனமும் சாரீர வளமும் கொண்டவர். அதனால் தீப்பொறிப் பிரசங்கம் செய்வதில் தேர்ச்சிபெற்றவர். இந்தத் தகுதிகளுக்காகச் சில மலையாளப் படங்களில் நடிக்கும் வாய்ப்பும் உண்ணித்தானுக்குக் கிடைத்திருந்தது. ஊடகங்களுடன் தோழமை பாராட்டுபவர். அதனால் பத்திரிகை, தொலைக் காட்சிகளில் காங்கிரஸ் கட்சியின் பிரதிநிதியாகக் கருத்துச் சொல்ல அழைக்கப்படும் நிரந்தர விருந்தினர். சுருக்கமாகச் சொன்னால் அன்றாடம் நாளிதழ் வாசிக்கும், தொலைக்காட்சி பார்க்கும் சாமான்ய மலையாளிக்கு ராஜ்மோகன் உண்ணித்தான் பார்த்ததும் அடையாளம் தெரியக்கூடிய நபர். அப்படி வலுவான நினைவாற்றல் இல்லாதவர்கள

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

கடந்த 22.12.2009 அன்று தமிழக நாளேடுகளில் அருந்ததியர் இட ஒதுக்கீட்டில் தமிழக அரசு செலுத்திவரும் ‘அக்கறை’யை எடுத்துக்காட்டும் அறிக்கையொன்று வெளியாகியிருந்தது. அண்மையில் திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத் தகவல் தொடர்பியல் துறையின் உதவிப் பேராசிரியராக அருந்ததியர் வகுப்பைச் சேர்ந்த ராதாவுக்குப் பணிநியமன ஆணை வழங்கப்பட்டது குறித்த அறிக்கை அது. இந்நியமனத்தில் ஆதி திராவிடருக்குரிய ஒதுக்கீட்டில் அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் தனக்கே முன்னுரிமை வழங்க வேண்டுமென்று விண்ணப்பமொன்றைத் துணை முதல்வரின் இணைய தளத்திற்கு ராதா அனுப்பிவைத்ததாகவும் இதைக் கண்ணுற்ற துணை முதல்வர் மு.க. ஸ்டாலின் உடனே பல்கலைக் கழகத்திடமும் உயர்கல்வித் துறை அதிகாரிகளிடமும

பதிவுகள்: சென்னைப் பத்திரிகையாளர் சங்கக் கட்டட அரங்கு, ஜனவரி 12, 2010
செல்லப்பா  

கச்சத்தீவு என்னும் சொல் தமிழகத்தில் வெறும் தீவை மட்டும் குறிப்பதல்ல. அது அரசியலோடு பின்னிப்பிணைந்த வரலாற்றைக் கொண்டது. புவியியலில் கச்சத்தீவு வெறும் கட்டாந்தரை. தீர்வை நோக்கி எள்ளளவும் நகராத இத்தீவை முன்வைத்து நடத்தப்படும் அரசியல் கொஞ்ச நஞ்சமல்ல. அரசியல் அறிக்கைகளிலும் அரசியல்வாதிகளின் முழக்கங்களிலும் தன் முகம் காட்டும் கச்சத்தீவு குறித்த விரிவான நூலை பேராசிரியர் வி. சூரியநாராயணும் கே. முரளிதரனும் இணைந்து எழுதியுள்ளனர். சென்டர் ஃபார் ஏசியா ஸ்டடிஸ் அமைப்பின் சார்பில் 12.01.2010 அன்று மாலை சென்னைப் பத்திரிகையாளர் சங்கக் கட்டடத்தின் புது அரங்கில் நடைபெற்ற எளிய நிகழ்வில் கச்சத்தீவும் இந்திய மீனவரும் என்னும் நூலைப் (சென்டர் ஃபார் ஏசியா ஸ்டடிஸ், காலச்சுவடு பதிப்பக வெளியீடு)

பதிவுகள்: அற்றைத் திங்கள், ஜூலை 19, சேலம் தமிழ்ச் சங்கம்
அ. கார்த்திகேயன்  

கடந்த ஜூலை 19, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக் கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் நாட்டுப்புறவியல் வல்லுநர் கே. ஏ. குணசேகரன் கலந்துகொண்டார். தமது இனிய குரலால், நாட்டுப்புறப் பாடல்களின் வாயிலாகத் தமிழக மக்களைத் தன்வசம் ஈர்த்துவைத்திருக்கும் அவரைச் சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க. வை. பழனிசாமி அறிமுகப்படுத்தினார். முதலில் தனது குடும்பம் மற்றும் கல்லூரி வாழ்க்கை குறித்து விரிவான முறையில் பகிர்ந்துகொண்டார். தமிழறிஞர் வ. அய். சுப்ரமணியன் மேலான வழிகாட்டுதலோடு நிறைய சாதிக்க முடிந்ததைப் பெருமையுடன் கூறினார். தற்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்திற்கு இயக்குநர் பொறுப்பேற்றுச் செயல்படுவது குறித்தும் பெருமிதம் கொண்டார். மதுர

பதிவுகள்: அற்றைத் திங்கள், ஆகஸ்டு 16 சேலம் தமிழ்ச் சங்கம்
அ. கார்த்திகேயன்  

கடந்த ஆகஸ்டு 16, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்கம் இரா.வை. கணபதி அறக்கட்டளை இணைந்து நடத்திய ‘அற்றைத் திங்கள்’ நிகழ்ச்சியில் சமூகவியலாளரும் சமூக உளவியலாளருமான ஹாலாஸ்யம் கலந்துகொண்டார். அவரை சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க.வை.பழனிசாமி அறிமுகப்படுத்தினார். தான் ஒரு சிறந்த வாசகன், இலக்கிய ஈடுபாடு கொண்ட வாசிப்பாளன் என்று தொடங்கிய அவர் மனித வளம் குறித்த பல்வேறு விளக்கங்களை விரிவாகப் பகிர்ந்துகொண்டார். மனித வளம் என்பது உள்ளும் புறமுமாக நிகழ்கின்ற ஒன்று என்பதை உரிய சான்றுகளுடன் விளக்கினார். தன்னை மேம்படுத்திக் கொள்வதற்காகவே எந்த உயிரும் போராடுகிறது; அந்த மேம்பாட்டை அடைய பல்வேறு தடைகள் எழுவது இயல்பு. அந்தத் தடையும் வர

33வது சென்னைப் புத்தகக் கண்காட்சி
தேவிபாரதி  

சென்னைப் புத்தகக் கண்காட்சி இப்போது சென்னையின் அடையாளங்களுள் ஒன்றாகிவிட்டிருக்கிறது. நேற்றுவரை பதிப்பாளர்கள், எழுத்தாளர்களின் விழாவாகக் கருதப்பட்ட இக்கண்காட்சி பொதுமக்களின் அறிவுத் தேடலுக்கான ஒரு களமாக விரிவடைந்திருக்கிறது. கண்காட்சிக்கு வருகை தரும் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் புத்தக விற்பனையும் ஒவ்வோராண்டும் கூடிக் கொண்டிருக்கிறது. கடந்த நான்கைந்தாண்டுகளில் பல புதிய பதிப்பாளர்கள் உருவாகியிருப்பதற்குப் புத்தகக் கண் காட்சி ஏற்படுத்திய நம்பிக்கையே காரணம். கண்காட்சியில் இடம்பெறும் பலவகைப்பட்ட அரங்குகள் வாசகர்களின் வாசிப்பார்வத்தை மட்டுமல்லாமல் அவர்களது தேர்வையும் விரிவுபடுத் தியிருக்கின்றன. வாசிப்பு தொடர்பான முன் தீர்மானங்களுடன் புத்தகக் கடைகளுக்குப் போய்க்கொண்டிருந

செல்லப்பா  

மாற்றிதழ்களில் அல்லது சிற்றிதழ்களில் ஆளுமைகளின் நேர்காணல்கள் இடம்பெறுவது வழக்கம். ஆனால் முழுக்க முழுக்க ஆளுமைகளின் நேர்காணலை மட்டுமே வைத்து ஓர் இதழ் வருவது இதுதான் முதல் முறை. இது தலையங்கம் அல்ல என்னும் பெயரில் இந்த இதழ் குறித்து எழுதியுள்ள பவுத்த அய்யனார் Paris Review இதழைப் போன்று தமிழில் ஓரிதழ் வர வேண்டும் என்ற ஆர்வத்தில் இதைக் கொண்டுவந்துள்ளதாகவும் Paris Review பெற்ற முக்கியத்துவத்தை வருங்காலத்தில் நேர்காணலும் பெறும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். நேர்காணல் ஒரு சிற்றிதழ் மட்டுமே என்பதையும் அடைப்புக்குறிக்குள் மறக்காமல் குறிப்பிட்டுள்ளார். முதல் இதழில் நாடக ஆளுமை ந. முத்துசாமியின் நீண்ட நேர்காணல் இடம்பெற்றுள்ளது. நாற்பது பக்க இதழில் இந்நேர்காணல் தவிர இடையிடையே வண்ணநிலவன

மதிப்புரை
கே. என். செந்தில்  

பிறகொரு இரவு (சிறுகதை) ஆசிரியர்: தேவிபாரதி பக்.: 144 விலை: ரூ. 95 முதற்பதிப்பு: ஜூலை 2009 வெளியீடு: காலச்சுவடு 669, கே.பி.சாலை நாகர்கோவில் - 629 001 நேற்றைய தத்துவங்களால் கட்டப்பட்ட கற்சுவர்க் கோட்டைகள் இன்றைய கேள்வி களுக்கும் தர்க்கத்திற்கும் ஈடுகொடுக்க அல்லது எதிர்கொள்ளத் திராணியற்றுச் சரிந்துகொண்டிருக்கின்றன. வரலாற்றின் நிலைகூட ஏறக்குறைய அதுதான். ஆனால் உருவாகி வந்த காலந்தொட்டே தன் மீது அழிவின் சிறு நிழலைக்கூட அனுமதிக்காத ஆற்றல் இலக்கியத்திற்கு மட்டுமே உண்டு. தொலைந்து போன பலநூறு ஏடுகளுக்குப் பிறகும் எரிந்துபோன, எரிக்கப்பட்ட எண்ணற்ற பிரதிகளுக்கு அப்பாலும், மாறாத ஒளியோடு மேலெழுந்து வருவது அகத்தை ஆதார சுருதியாக அது கொண்டிருப்பதாலேயே. ஓயாமல் அழைக்கு

 

‘எல்லாவற்றையும் மறந்துவிடலாம்’ கண்ணோட்டம் கண்டேன். எல்லாக் காலங்களிலும் எல்லாக் கட்சிகளிலும் மோசமானவர்கள் இருந்து வந்துள்ளனர். இருக்கவும் செய்கின்றனர். ஆனால் ஒரு முதலமைச்சரின் மகன் அதிகாரப் பின்புலத்தில் இருந்து கொண்டு வெறியாட்டம் போடுவது இதுவரை தமிழகம் காணாதது. இந்தியா கண்டிருக்கிறது - சஞ்சய் காந்தி வடிவில். அதிகாரமும் மீடியாவும் கைகோத்தால் அதன் முடிவு எப்படியிருக்கும் என்பதையே மதுரை தினகரன் எரிப்புத் தீர்ப்பு விளக்குகிறது. பணபலம், அதிகார பலம், அடியாட்கள் பலம் இவை மூன்றும் சேர்ந்துதான் மூன்று அப்பாவிகள் உயிரைக் குடித்தன. தமிழகம் பெரிதாக எதுவும் அலட்டிக்கொள்ளவில்லை. ஏனெனில் ஏற்கனவே அவர்கள் அதிமுகவினர் மூன்று பெண்களை உயிரோடு எரித்துக் கொன்ற அனுபவத்தைக் கண

தலையங்கம்
 

சில தலைவர்களின் மரணம் பேரிழப்பாக அமைகிறது. அத்தகைய ஒரு தலைவர் ஜோதி பாசு (08.07.1914 - 17.01.2010). மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி நிறுவப்பட்ட நாளிலிருந்து தன் இறுதி நாள்வரை அதன் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக இருந்தவர் (2005இலிருந்து 2008வரை சிறப்பு அழைப்பாளர்) பாசு. அவரது மரணத்தின் மூலம் மார்க்சிஸ்ட் கட்சியின் ஒரு சகாப்தம் முடிவுக்கு வந்திருக்கிறது. அக்கட்சி தொடங்கப்பட்டபோது இருந்த அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் ஒன்பது பேரில் கடைசியாக மறைந்தவர் பாசு. சுதந்திரப் போராட்டத்தில் பங்குகொண்டு, மிகச் சமீப காலம்வரை அரசியலில் தீவிரமாக இருந்தவர் என்ற வகையிலும் பாசுவின் மரணம் தேசிய அரசியலிலும் ஒரு சகாப்தத்தின் முடிவு எனச் சொல்லலாம். கொல்கத்தாவில் வசதியான குடும்பத்தில் ப

கண்ணோட்டம்
கண்ணன்  

ஒடுக்கப்பட்ட, தீண்டத்தகாதவராகக் கருதப்பட்ட மக்களின் விடுதலைக்காக உருவாக்கப்பட்ட ‘தலித்’ என்னும் அடையாளம் இன்று நெருக்கடிக்கு உள்ளாகியிருக்கிறது. தலித் அடையாளம் சார்ந்த போராட்டத்தின் வழி பல உயர்மட்டப் பதவிகளை வந்தடைந்த தலித் ஆளுமைகளில் ஒரு சிலர் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாகியுள்ளனர். நீதிபதி தினகரன், தாழ்த்தப்பட்டோர் நல தேசிய ஆணையத்தின் தலைவர் பூட்டா சிங், மத்திய அமைச்சர் ஆ. ராசா ஆகியோர் சில உதாரணங்கள். இவர்கள்மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிர்வினையாக அவர்கள் ‘தலித்’ என்பதாலேயே இவ்வாறு குற்றஞ்சாட்டப்படுவதாக மறுப்பும் அளிக்கப்படுகிறது. சமூக நீதி அரசியல் தாக்கத்தின் வழி உயர்நிலையை வந்தடையும் தலித்துகள் சார்ந்து பல நெருக்கடிகள், குழப்பங்கள், சார்பு

 

நவீனத் தமிழ்க் கவிதையின் ஆளுமைகளில் ஒருவரான விக்ரமாதித்யன் 2008 ஆம் ஆண்டுக்கான விளக்கு விருதைப் பெறுகிறார். நாற்பதாயிரம் ரூபாய் தொகையும் பாராட்டுப் பத்திரமும் அடங்கியது இந்த விருது. அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பான விளக்கு புதுமைப்பித்தன் நினைவாக உருவாக்கியுள்ள இந்த விருதை இதுவரை தமிழின் முக்கியமான இலக்கியவாதிகளான சி. சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், அம்பை, தேவதேவன் ஆகியோர் பெற்றிருக்கின்றனர். படைப்பின் தகுதியை மட்டுமே கருத்தில்கொண்டு படைப்பாளிகளுக்கு வழங்கப்படும் விளக்கு விருது படைப்பிலக்கியத்துக்கான மரியாதை. அதனாலேயே இந்த விருதும் மரியாதைக்குரியதாகிறது. பிரமிள், நகுலன், தேவதேவனைத் தொடர்ந்து நான்காவது கவிஞராக விளக்கு விருதைப்

உள்ளடக்கம்