கட்டுரை
 

கடந்த மே மாதத்தில் விடுதலைப் புலிகள் ஒழிக்கப்பட்டதோடு மூன்று தசாப்தகால ஆயுதப் போராட்டமும் வன்முறையும் முடிவுக்கு வந்துவிடும் என்று சொல்லப்பட்டது போல அங்கு அமைதி திரும்பிடவில்லை. பதிலாக அரசியல் நெருக்கடியின் களமும் தளமும் வேறாகியிருக்கிறது. விடுதலைப் புலிகள் தோற்கடிக்கப்பட்டதால் உருவான அரச ஆதரவு அலையை மூலதனமாகக் கொண்டு தனது ஆட்சிக் காலத்தை நீட்டித்துவிட ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நினைத்திருந்தார். அதனால் அவருடைய பதவிக் காலம் முடிவடைய இன்னும் இரண்டு வருடங்கள் இருக்கையிலேயே அவர் ஜனாதிபதி தேர்தலை நடாத்துவதற்கான ஏற்பாடுகளை ஆரம்பித்தார். ஆனால் தேர்தல் நெருங்கிய தறுவாயில் அவர் நினைத்தது போல நிலைமைகள் அமைந்திருக்கவில்லை. விடுதலைப் புலிகளைத் தோற்கடிப்பதில் களமுனைத் தளபதியாக இர

கட்டுரை
சசி  

‘நீ எதைச் செய்தாயோ அதன் பயனை இப்பிறப்பிலேயே அனுபவிப்பாய். நல்லதோ கெட்டதோ அடுத்த பிறப்பிற்காகக் காத்திருக்கத் தேவையில்லை’ என்று பௌத்தம் கூறுவதாக அண்மையில் இலங்கையின் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச இந்து பத்திரிகையின் ஆசிரியருக்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார். முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவின் கைது தொடர்பான கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டிருந்தார். அரசாங்கத்தைக் கவிழ்க்கச் சதி செய்தமை, ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவைக் கொலைசெய்யச் சதி செய்தமை, ஆயுதக் கொள்வனவில் மோசடி செய்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவர் பிப்ரவரி 8ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதி தேர்தலில் மிகுந்த சவாலாக இருந்தவர்; எதிர்க்கட்சிக் கூட்டமைப்

 

விலைவாசி உயர்வைவிட பால் தாக்கரே தான் இப்போது நாட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறவராகிவிட்டார். அவர் ஒரு கார்ட்டூனிஸ்ட், பத்திரிகையாளர். அதனால் எதைத் தொட்டால் பரபரப்புத் தீ பற்றிக்கொள்ளும் என்பது அவருக்குத் தெரியும். 11.11.09இல் டெண்டுல்கருக்கு எதிராக அவரது ‘சாம்னா’ தினசரி தலையங்கம் எழுதியதிலிருந்தே பால் தாக்கரே செய்திகளில் முன்னிலை வகிக்கத் தொடங்கிவிட்டார். சச்சின் டெண்டுல்கர் ‘மும்பை எல்லோருக்குமானது’ என்று சொன்னது பிராந்தியவாதத்திலும் மண்ணின் மைந்தர் கொள்கைச் சேற்றிலும் மூழ்கித் திளைக்கும் சிவசேனா, பால் தாக்கரேவின் தமையனாரின் மகனான ராஜ் தாக்கரே, ராஜ் தாக்கரேவின் ‘மகாராஷ்டிர நவநிர் மாண் சேனை’ இத்யாதிகளுக்கு எரிச்சலூட்டியது. சிவசேனைய

பத்தி: இங்கிலாந்து: மறுபார்வை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

முதலில் சொல்லிவிடுகிறேன். இது முழு மையான திரைப்பட விமர்சனம் அல்ல. அதற்குச் சம்பந்தமில்லாத செய்திகளும் வரும். காவல் துறையினரின் பாதுகாப்பு இன்றி, e-bayஇல் எக்கச்சக்கமான தொகை கொடுத்து நுழைவுச்சீட்டு வாங்காமல், அரை அரங்கம் நிரம்பிய பார்மீங்கம் சினிவேர்ல்ட் திரை அரங்கில் ‘மை நேம் இஸ் கான்’ படத்தை எந்தவித ஆரவாரமும் இல்லாமல் பார்த்தேன். ஆரவாரமில்லாமல் என்ற வார்த்தையை நெஞ்சறிந்து தான் இங்கு நுழைத்திருக்கிறேன். அதற்கு ஒரு காரணம் உண்டு. சென்ற வாரம் இதே அரங்கில் என்னை நானே ஒரு சுய ஆக்கினைக்கு உட்படுத்திக்கொண்டேன். தன்னறிவைத் தற்காலிகமாக இழந்த தருணத்தில் ஒரு தமிழ்ப் படத்தை அதீத சினிமா உணர்வுள்ள தமிழ் ரசிகர்களுடன் பார்த்தேன். ‘அசல்’ படத்தின் கதா நாயகன் அஜ

கட்டுரை
 

தில்லிக் குளிர்காலம் கால்களை நடக்கத் தூண்டும். பாய்ந்து வரும் வாகனங்களின் சக்கரங்களில் மாட்டிக்கொள்ளாமல் நடக்க இந்த நகரத்தில் முடியும். நான் பாதுகாப்பு அமைச்சகத்தில் பணியாற்றிய நாட்களில் மதிய உணவு இடைவேளைபோது தவறாமல் நடப்பேன். ஒரு நாள் ராஜாஜி சாலையில் நடந்தபோது ஒரு காவலரால் நிறுத்தப்பட்டேன். “ஐயா, நீங்கள் இந்த வழியில் செல்ல முடியாது” “ஏன்?” “பிரதமர் இந்த வழியாக வருகிறார்.” “எனக்கு அதைப் பற்றி ஒரு ஆட்சேபணையும் இல்லை. தாராளமாக வரட்டும்.’ “ஐயா, யாரும் சாலையில் இருக்கக் கூடாது, என்பது உத்தரவு.” பேசிக்கொண்டிருக்கையிலேயே சங்குகள் அலறத் தொடங்கிவிட்டன. “திரும்பிப் போக நேரமில்லை. தயவுசெய்து சாலைக்குப் பின்புறத்தைக

பத்தி: உயர் மலரே துயர்க் கடலே
கவிதா  

தொழில்ரீதியாக, நான் கதைகளைச் சேகரிப்பவள். கதைகளைச் சேகரித்துப் பத்திரிகைகளில் பதிவுசெய்வது என் பணி. மிகச் சில கதைகள் என்னுடனேயே தங்கிவிடுகின்றன. சித்தியினுடையதும் செல்வியினுடையதும் சின்னப் பொண்ணுவினுடையதும் அப்படிப்பட்ட கதைகள்தாம். அதிலும் சித்தியைச் சந்தித்தது மிகவும் தற்செயலான விஷயம். வீரப்பன் இறந்து ஐந்து வருடங்கள் முடிந்ததையொட்டி அந்தப் பகுதி மக்கள் இப்போது எப்படி இருக்கிறார்கள் என்பதை எனது பத்திரிகைக்குக் கட்டுரையாக எழுதும் நோக்கத்தில் அந்தப் பகுதிகளுக்குச் சென்றபோது, சோளகர் தொட்டிக்குச் செல்லும் திட்டம் எதுவும் இருக்கவில்லை. அங்கே கட்டாயம் சென்று பார்க்க வேண்டுமென ச. பாலமுருகன் வற்புறுத்தி அனுப்பிவைத்தார். சுமார் நான்கு மணி நேரப் பயணத்துக்குப் பிறகு நாங்கள் சே

பத்தி
கண்ணன்  

  வட்டமேசை கேரளத்தில் குழந்தை இலக்கியத்திற்காக உருவாக்கப்பட்ட ரிஷிமிசிலி அமைப்பு பதிப்பாளர்களுக்கான ஒரு வட்டமேசைச் சந்திப்பை டிசம்பர் 20 - 22 தேதிகளில் ஒழுங்கு செய்திருந்தது. ஆங்கிலம் உள்ளிட்ட இந்திய மொழிப் பதிப்பாளர்களிடையே பரஸ்பர மொழி பெயர்ப்புப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கான சந்திப்பு. அசாம், மகாராஷ்டிரா, தில்லி, மத்தியப் பிரதேசம், ஒரிசா போன்று இந்தியாவின் பல பகுதிகளிலிருந்தும் சுமார் இருபத்தைந்து பதிப்பாளர்கள் கலந்துகொண்டார்கள். கேரளத்திலிருந்து சிந்தா பதிப்பகம் - இது மார்க்சிய கம்யூனிஸ்ட் கட்சியின் பதிப்பகம் - கலந்துகொண்டதும் தனது உரிமைக்குரிய எழுத்துகளை அங்கு மொழிபெயர்ப்பு உரிமை விற்பனைக்காக முன்வைத்ததும் இத்தகைய ஒரு முயற்சி கம்யூனிஸ்ட் ஆட்சியில் நடைப

நேர்காணல்
 

தமிழக மக்களிடையே செல்வாக்குப் பெற்ற சிவகாசி காலண்டர்களுக்குத் தனி அடையாளத்தை உருவாக்கியவர் அமரர் சி. கொண்டையாராஜூ. 1980களில் தான் மேற்கொண்ட கொண்டையாராஜூ பாணி ஓவியக் கலை குறித்தான ஆய்வு ஒன்றின் மூலம் அவரை வெளியுலகுக்கு அறிமுகப்படுத்தியவர் ஆய்வாளர் ஸ்டீபன் எஸ் இங்க்லீஸ். இவர் கனடாவின் புகழ்பெற்ற அருங்காட்சியகமான மியூசியம் ஆப் சிவிலைசேஷனில் மூத்த காப்பாட்சியராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது அரிய முயற்சியால் இந்த அருங்காட்சியகத்தில் சிவகாசியில் தயாரிக்கப்பட்ட காலண்டர்கள் கலைப் பெட்டகங்களாகப் பாதுகாத்துவைக்கப்பட்டுள்ளன. கொண்டையாராஜூவின் மாணவர்களும் நண்பர்களுமான கோவில்பட்டி டி. எஸ். சுப்பையா, எம். ராமலிங்கம், சிவகாசி காளியப்பன், முருகக்கனி, சீத்தாராம் போன்றவர்களின் உழைப்ப

சிறுகதை
 

“மேடம், இந்தப் பக்கம் வாருங்கள்” என்றாள் அந்த சூப்பர் மார்க்கெட்டில் வரிசையாக இருந்த கேஷ் கவுண்டர்களில் ஒன்றைக் கவனித்துக்கொண்டிருந்த துறுதுறுப்பான அந்தப் பெண். திருமதி எமெனிகே தனது ட்ராலியை அந்தப் பெண்ணின் பக்கம் லேசாகத் திருப்பினாள். “மேடம், நீங்கள் என் பக்கம் வந்தீர்கள். பிறகு அந்தப் பக்கம் போய்விட்டீர்கள்” என்று குறைபட்டுக்கொண்டாள் அடுத்த கவுண்டரில் இருந்த பெண். “ஓ, ஸாரி மை டியர். அடுத்தமுறை கண்டிப்பாக உன்னிடம் வருகிறேன்” “குட் ஆஃப்டர்னூன் மேடம்” என்று இனிமையான குரலில் இசைத்த அந்தப் பெண், மேடம் வாங்கி வைத்திருந்த பொருள்களைத் தன் கவுண்டரில் எடுத்துவைக்க ஆரம்பித்திருந்தாள். “பணமா, அக்கவுண்டா மேடம்?” “பணம்

எம். ரிஷான் ஷெரீப்  

சூறாவளியின் பாடல் பலம் பொருந்திய பாடலொன்றைச் சுமந்த காற்று அங்குமிங்குமாக அலைகிறது இறக்கி வைக்கச் சாத்தியமான எதையும் காணவியலாமல் மலைகளின் முதுகுகளிலும் மேகங்களினிடையிலும் வனங்களின் கூரைகளிலும் நின்று நின்று தேடுகிறது சமுத்திரவெளிகளிலும் சந்தைத் தெருக்களிலும் சுற்றித்திரிய நேரிடும்போது இரைச்சல்கள் எதுவும் தாக்கிடாமல் பொத்திக்கொள்கிறது பாடலை பறவைகள் தாண்டிப் பறக்கையிலும் காத்துக்கொள்ளப்படும் இசை செறிந்த பாடல் சலித்துக் கொள்கிறது ஓய்வின்றிய அலைச்சலின் எல்லை எதுவென்றறியாது தனிமைப்பட்டதை இறுதியிலுணர்ந்தது தெளிந்த நீர் சலசலக்கும் ஓரெழில் ஆற்றங்கரை மரமொன்றின் துளைகளுக்குள்ளிருந்து வெளிக்கசிந்து பிறந்த நாதம் இருளுக்குள் விசித்தழும் பாடலின் கண்கள் துடைக்கும

திறந்த வெளி
சூரியதீபன்  

இலங்கையின் முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழரின் நிலையை நேரில் கண்டறிவதற்காகத் தமிழகத்திலிருந்து திமுகக் கூட்டணிக் கட்சியினரின் 10 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு கடந்த வருடம் இலங்கைக்குச் சென்றது. முள்வேலிகளைச் சுற்றிப் பார்த்துவிட்டு வந்த அவர்களிடம் ‘பேசுவதற்காக’ இலங்கை ராணுவத்தால் யாழ்நூலக மண்டபத்துக்கு அழைத்துவரப்பட்ட மாணவர்களிடம் பேசிவிட்டுத் திரும்பியபோது குழுவின் தலைவரும் திமுக நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர். பாலு, “உலகில் உள்ள எட்டுக் கோடித் தமிழருக்கும் கலைஞர்தான் தலைவர். நீங்கள் வேறு ஏதேனும் நினைத்திருந்தால் அதை மாற்றிக்கொள்ளுங்கள்” எனச் சொல்லிவிட்டுப் புறப்பட்டாராம். ‘திராவிட நாடு திராவிடருக்கே!&rsq

கட்டுரை
சுகுமாரன்  

வருடம் பற்றிய ஞாபகக் குழப்பம். தேதியையும் மாதத்தையும் பற்றிய கலங்கல். இரண்டையும் கடந்து கோவை ஞானி என்ற கி. பழனிச்சாமியை முதலாவதாகச் சந்தித்த ஞாயிற்றுக்கிழமை நினைவின் ஆழத்தில் இன்னும் மின்னுகிறது. கல்லூரி நண்பரும் அன்றைய இலக்கியத் தோழருமான விஸ்வ நாதன் (பாதசாரி) காலையிலிலேயே வீட்டுக்கு வந்து சாயங்காலம் ஞானி நடத்தும் இலக்கியக் கூட்டத்துக்குப் போகலாமென்று சொல்லிவிட்டுப் போயிருந்தார். போக வேண்டுமா வேண்டாமா என்று தடுமாறுகிற விதத்தில் அந்த மாலை நேரத்தை வேறு காரணத்துக்காக ஒதுக்கியிருந்தேன். நாங்கள் வசித்த கோவை ராமநாதபுரம் பகுதியில் பங்கஜா ஆலை இருக்கிறது. நீண்ட காலம் மூடிக்கிடந்த ஆலை அப்போதுதான் மீண்டும் திறக்கப்பட்டு இயங்க ஆரம்பித்திருந்தது. அந்த ஆலைத் தொழிலாளர்களின் குடி

பதிவுகள்: அற்றைத் திங்கள், செப்டம்பர் 20, சேலம் தமிழ்ச் சங்கம்
அ. கார்த்திகேயன்  

கடந்த செப்டம்பர் 20, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் பேராசிரியர் அ.கா. பெருமாள் கலந்துகொண்டார். நாட்டுப்புற வழக்காற்றியல் துறையில் மிகுந்த ஈடுபாடு கொண்ட அவரைச் சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க.வை. பழனிசாமி அறிமுகப்படுத்தினார். தன் குடும்பச் சூழல், கல்விப் பின்னணி குறித்து அ.கா. பெருமாள் முதலில் பகிர்ந்துகொண்டார். தன் தந்தையார் மலையாள ஆசிரியராகப் பணிபுரிந்தமையால், மலையாளம் சார்ந்த பல்வேறு கலை நுட்பங்களை விரிவாக அறிந்துகொள்ள முடிந்தது என்றார். சமூகவியலைக் கல்லூரியில் படிக்க ஆரம்பித்துப் பிறகு தமிழ்ப் பாடத்தில் நாட்டம் கொண்டு தமது பட்டப் படிப்பை முடித்ததாகவும், சிறந்த பேராசிரியர்களின்

அஞ்சலி: ஜெயந்தன் (1937-2010)
தமிழ் மணவாளன்  

எனது மனிதம் என் மூலையில் படிகிறது எனது மூளை எனது விரல் நுனியில் முடிகிறது எனது விரல் நுனி என் எழுத்தாய் உயிர்க்கிறது ‘காட்டுப்பூக்கள்’ - ஜெயந்தன் தமிழ்ச் சிறுகதைப் பரப்பில் தனக்கென ஓர் இடத்தைத் தக்கவைத்துக்கொண்ட எழுத்தாளர் ஜெயந்தன் அண்மையில் காலமானார். கிருஷ்ணன் என்னும் இயற்பெயர் கொண்ட ஜெயந்தன், திருச்சி - மணப்பாறையில் 15.06.1937இல் பிறந்தார். நடுத்தரமான பொருளாதாரப் பின்னணியில், தனது பள்ளியிறுதி வகுப்பை முடித்தவுடன் கால்நடை ஆய்வாளர் பயிற்சி முடித்து அரசுப் பணியில் சேர்ந்தார். பணியின் நிமித்தம் தமிழ்நாட்டின் பல்வேறு ஊர்களில் பணியாற்றும் கட்டாயமும் பலதரப்பு மக்களிடையே பழகும் சூழலும் இவருடைய சிறுகதைகளுக்கான களங்களாகவும் கதை மாந்தர்களாகவும் மாற்றம்கொண்டன. இ

விவாதம்
அ. ராமசாமி  

இடைநிலைப் பத்திரிகைகளின் துணுக்குச் செய்திகளை முதல் புரட்டுதலில் வாசிப்பது என் வழக்கம். இலக்கிய வாதிகளுக்கான அஞ்சலிக் குறிப்புகள், பெற்ற விருதுகள் பற்றிய குறிப்புகள், அந்தந்தப் பத்திரிகைகளின் உள் வட்டாரத்திற்குரிய இலக்கிய நிகழ்வுகள், கூட்டங்கள் பற்றிய பதிவுகள், இலக்கியக் கிசுகிசுக்கள், வம்பளப்புகள் போன்றன அந்தப் புரட்டுதலில் கவனம் பெற்றுவிடும். பிப்ரவரி மாதம் மிகுந்த கவனத்தோடு ஒரு பெயரையும் குறிப்பையும் காலச்சுவடு, உயிர்மை, அம்ருதா, புத்தகம் பேசுது, உயிர் எழுத்து, தீராநதி, புதிய கோடாங்கி என எல்லாப் பத்திரிகைகளிலும் தேடினேன். எதிலும் அந்தக் குறிப்பு இல்லை. தமிழக அரசு, ஒவ்வொரு ஆண்டும் வழங்கும் அதிகபட்சத் தொகையான ரூபாய் ஒரு லட்சம் தொகை கொண்ட விருதுகளில் ஒன்றான திரு.வி

கண்ணன்  

பேராசிரியர் அ. ராமசாமியின் எதிர்வினை இரண்டு பொருட்கள் சார்ந்தது. தமிழக அரசு அளித்த திரு.வி.க. பரிசிற்காக இமையத்தை ‘இடைநிலை’ இதழ்கள் பாராட்டவில்லை என்பது ஒன்று. வீட்டுக்குத் தபாலில் வருபவை அல்லது ‘இடைநிலை’ என்ற அரூபமான கருத்தாக்கத்தின் அடிப்படையில் இதழ்களைப் பொதுமைப்படுத்துவதை ஏற்பதற்கில்லை. காலச்சுவடு தீவிர இதழாகத் தன்னை அடையாளம் காண்கிறது. இலக்கியம், அரசியல், கலைகள், சினிமா அனைத்திலும் மாற்றுகளைத் தேடிவரும் இதழ். மகா கலைஞர்களின் வருகை ஏற்பட்டு விட்டது, விரைவில் வரலாற்று நாயகன் அரசியல் தலைமை ஏற்றுவிடுவான், சினிமா உலகத் தரத்தில் உருவாகிவிட்டது என நம்பும் இதழ்களையும் காலச்சுவடையும் பொதுமைப்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். இமையத்தை ஏன் வாழ்த்தவில்லை எ

 

பிப்ரவரி 2010 இதழில் ‘தலித்: அடையாளம், கவசம்’ குறித்து: மிகவும் ஒடுக்கப்பட்டவர்களும் தீண்டத்தகாதவர்களாகக் கருதப்பட்டவர்களுமான மனிதர்களுக்கு உருவாக்கப்பட்ட ‘தலித்’ எனும் அடையாளம் இன்று நெருக்கடிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறது என்பதை நானும் உணர்கிறேன். ‘தலித்’ மக்கள் இன்றும் அனுபவித்து வரும் தீண்டாமைத் தன்மையும் மிகவும் ஒடுக்கப்படுபவர்கள் என்கிற நிலைமையும் நூறு சதவீதம் அடியோடு ஒழிக்கப்பட வேண்டியவைதான் என்பதில் கருத்து வேறுபாடேயிருக்க முடியாது. ‘தலித்’ எனும் அடையாளம் அடியோடு ஒழிக்கப்படுவதற்குப் பதிலாக, அதை ஒரு கவசமாக உபயோகித்து ‘தீமைகளை’ நன்மைகளாக மாற்றிக் காட்டும் முயற்சி வெற்றி பெற்றால் அது பெருங்குழப்பத்தில்தான் முடியு

தலையங்கம்
 

ஆதிதிராவிடர்களுக்கான திட்டங்களைச் செயல்படுத்துவதிலும் அம் மக்களுக்குச் சமூக நீதி கிடைக்கப்பெறுவதை உறுதிப்படுத்தும்வகையிலும் தமிழக அரசாங்கம் செயல்படவில்லை எனக் குற்றம்சுமத்தியிருக்கிறது தேசிய ஆதிதிராவிடர் நல ஆணையம். மாநிலத்தில் ஆதிதிராவிடர்களுக்கான திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படும் விதம் குறித்து பிப்ரவரி மூன்றாம் வாரத்தில் தலைமைச் செயலகத்தில் ஆய்வு நடத்திய ஆணையத்தின் துணைத் தலைவர் பேராசிரியர் கும்ளே தலைமையிலான குழு ஆதிதிராவிடர் நலன் சார்ந்து தமிழக அரசாங்கம் செயல்படும் விதம் குறித்துக் கடும் அதிருப்தி தெரிவித்திருக்கிறது. ஆய்வு குறித்து ஆணையம் ஆறு மாதங்களுக்கு முன்னரே அரசுக்குத் தகவல் தெரிவித்திருந்தும் தீண்டாமையை ஒழித்தல், கல்வி, வேலை வாய்ப்புகளில் ஆதிதிராவிட மக்களுக்கு உர

உள்ளடக்கம்