நாவல் பகுதி
 

மார்கெஸ்: மகாகவி, மாமுனிவர், ஒப்பற்ற ரசவாதி புனைகதை ஒன்றில் ‘நம்பத்தக்க’ வடிவில் கதை சொல்லி வருபவரிடையே அல்லது இடையிடையே மிகையான அல்லது அறிவுக்குப் பொருந்தாத நிகழ்வுகளைச் சேர்த்து வழங்குதல், புத்திலக்கிய மரபு ஒன்றை உருவாக்கியுள்ளது. இருபதாம் நூற்றாண்டின் ஐம்பதுகளில் ஜெர்மானியப் புதினங்களில் இப்போக்கு காணப்பட்டது. ஆனால் இன்று மத்திய அல்லது லத்தீன் அமெரிக்க இலக்கியத்தின் பொற்காலத்தைச் சேர்ந்த புகழ்பூத்த நாவலாசிரியர்கள், குறிப்பாக, ஆஸ்துரியாஸ் (Miguel Angel Asturias), கார்பென்டியர் (Alejo Carpentier), மார்கெஸ் (Gabriel Garcia Marquez) ஆகியோரின் படைப்புகளில்தான் இந்த அடையாளங்கள் சிறப்பாக, பாங்குடன் காணப்படுகின்றன. மார்கெஸின் ஒரு நூறாண்டுத் தனிமை (Cien anos de

கட்டுரை
தேவிபாரதி  

ஒரு பின்னிரவுத் தொலைபேசி அழைப்பு வழியாகத்தான் மிகப் புகழ்பெற்ற நித்தியானந்தா-ரஞ்சிதா படக்காட்சிகள் சன் தொலைக் காட்சியின் செய்தி அலைவரிசையில் ஒளிபரப்பாகிக்கொண்டிருந்ததைத் தெரிந்துகொண்டேன். நான் இருந்த வீட்டில் தொலைக்காட்சி இல்லாததால் என்னால் அன்றைய இரவு அந்தப் படக்காட்சிகளைப் பார்க்க முடியவில்லை. வாய்ப்பைத் தவற விட்டுவிட்ட வருத்தம் இருந்தாலும் இணையதளங்களில் அவை காணக் கிடைக்கும் என்னும் நம்பிக்கையில் என்னை நானே சமாதானப்படுத்திக்கொண்டேன். ஆனால் இணைய தளங்களைத் தேடிப்போக வேண்டிய தேவையில்லாமல் அடுத்த இரண்டு மூன்று நாள்கள்- கருணாநிதியின் கண்டனத்தைத் தொடர்ந்து நிறுத்தப்படுவதுவரை - இடைவிடாது அந்தக் காட்சிப் பதிவுகளை ஒளிபரப்பிக்கொண்டிருந்தது சன் தொலைக் காட்சி. அந்தக் காட்

அறிக்கை
 

உ.ரா. வரதராஜன் மரணம் குறித்த, சமூக அக்கறையுள்ள குடிமக்கள், பெண்ணியவாதிகள் விடுத்துள்ள இவ்வறிக்கை 03.03.2010 அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற்ற பெண்கள் சந்திப்பு அமைப்பினர் நடத்திய கூட்டத்தில் வெளியிடப்பட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் தோழர் உ.ரா. வரதராஜன் அவர்களின் இறப்பு குறித்து எங்கள் அதிர்ச்சியையும் வருத்தத்தையும் சமூக அக்கறையுள்ள குடிமக்கள் மற்றும் பெண்ணியவாதிகள் என்னும் முறையில் நாங்கள் பதிவு செய்கிறோம். அதே சமயத்தில் அவர் இறப்புக்கு முன் நிகழ்ந்த சம்பவங்களின் தொகுப்பில் பல உண்மைகளைக் கட்சித் தலைமை வேண்டுமென்றே கருத்தில் எடுத்துக்கொள்ளாதது எங்களைச் சங்கடப்படுத்துகிறது என்பதையும் பதிவு செய்கிறோம். 24. 02. 2010 அன்று இந்தியன் எக்ஸ்பி

திறந்தவெளி
எம். ரிஷான் ஷெரீப்  

கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே” என்ற ஔவையாரின் வாக்கை நேரடியாக மெய்ப்பிப்பதுபோலவே இன்றைய ஈழத்தின் நிலைமை இருக்கிறது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் பலர் அரசாங்க உதவித் தொகையை மட்டுமே நம்பித் தமது காலத்தை ஓட்ட வேண்டியிருக்கிறது. அரைகுறை உணவு, பழைய ஆடைகள், புத்தகங்களோடு செலவுகளைக் குறைக்க வேண்டி அநேக மாணவர்கள் தம் வெறும் வயிற்றில் தண்ணீரை மாத்திரம் அருந்தியபடி கல்வி கற்றுக்கொண்டிருக்கிறார்கள். குடும்பத்தினர் அகதி முகாம்களிலும் தொழிலற்றும் வாடியிருக்கும்போது தமது தேவைகளுக்காகக் குடும்பத்தை நாடவும் இவர்களால் முடியாதுள்ளது. அடுத்ததாக யுத்தத்தின் மூலமாக ஏற்பட்ட உடல் சுகவீனங்களுக்கான மருந்துகளைப் பெற்றுக்கொள்ளவும் பணம் தேவைப்படுவதால் பலர் மருத

 

அக்காவின் பைபிள் அக்காவின் பைபிளில் இருப்பவை: தையல் விட்ட ரேஷன் கார்டு கடனுதவி பெறுவதற்கான விண்ணப்பங்கள் கந்துவட்டிக்காரர்களின் அட்டை திருவிழா, பண்டிகை நோட்டீசுகள் அண்ணன் குழந்தையின் போட்டோ குட்டித் தொப்பிக்கான தையல் குறிப்பெழுதிய காகிதம் ஒரு நூறு ரூபாய் நோட்டு எஸ்எஸ்எல்சி புத்தகம். அக்காவின் பைபிளில் இல்லாதவை: முன்னுரை பழைய ஏற்பாடு, புதிய ஏற்பாடு நிலப்படங்கள் சிவப்பு மேலட்டை. மீன்காரன் / பக். 20/ 2003 காதலிக்கும்போது... ஒருத்தியை மட்டுமாகக் காதலிக்கக் கூடாது அவளுடைய மணம், நிறம், சிரிப்பையெல்லாம் வெறுமே நினைத்துக்கொண்டு நடக்கக் கூடாது எப்போதும் அவளுடைய பவுடர் சுவர்க்கண்ணாடியில் அசையும் மரக்கிளை அவள் பத்திரப்படுத்திய பழைய பாட்டுகள் கதைப் புத்தகங்கள் அவுன்சு

 

கனடா நாட்டுப் பழங்குடியினக் கவிதைகள் அம்மக்களின் உணர்ச்சிகளின் எழுத்துருவமாக வெளிப்படுகின்றன. பழங்குடியினக் கவிஞர்கள் காலனித்துவத்தின் காரணமாகத் தாங்கள் இழந்த மண்ணுரிமை, கலாச்சாரம், மொழி, இன, மதக் கொள்கைகள் ஆகியவற்றை முன்னிறுத்தியே தங்கள் கவிதைகளைப் புனைகிறார்கள். “இந்தியப் பழங்குடி” என்னும் விவரிப்பில் அடங்கியுள்ள வேற்றுமைகளை எடுத்துரைக்கிறார்கள். பானைகள் டோனா நோபிஸ் ஜூனியர் முறிந்த களிமண் துகள்கள் பல வருடங்கள் புதைந்து இப்போது நம்முன்னே செந்தூர வண்ணமோ ஒரு உறிந்த குறிப்பாக பார்க்க இறைஞ்சுகிறது இந்தக் கண்டுபிடிப்பு குறிப்பதோ எப்போதும் மறந்த ஓர் உண்மையை யாரோ முதலில் இங்கிருந்தனர் சாதாரண மனிதர் R.Z. நோபிஸ் அவர் ஒரு சாதாரண மனி

சிறுகதை
 

அரசு மருத்துவமனையின் வெளி வராண்டாவில் நுழைந்தபோது எனக்குப் பதற்றம் குறையத் தொடங்கியிருந்தது. ஜன நெரிசலைக் கடந்துபோவது மனதிற்கு உவப்பானதாக இல்லையென்றாலும் சற்று நிம்மதியாகத்தான் இருந்தது. மருத்துவமனையின் கட்டடங்கள் முழுவதும் ஆரஞ்சு வண்ணம் தீட்டியிருந்தார்கள். விளம்பரங்களும் அறிக்கைகளும் எச்சரிக்கைகளும் எரிச்சலூட்டின. அன்று பிற்பகல் மதிய உணவு இடைவேளையின்போது லிங்கம் எலிமருந்தை உண்டு மயங்கி வாந்தியெடுத்திருந்தான். பிற்பாடு உடன் பணிபுரியும் அலுவலகச் சிப்பந்திகள் மருத்துவமனைக்குக் கொண்டுவந்து சேர்த்திருந்தார்கள். என் நண்பனின் பெயர் லிங்கேஸ் வரன். நாங்கள் இருவரும் ஒன்றாகப் படித்து வெவ்வேறு வேலைகளுக்குத் தேர்வு எழுதி அரசுப் பணியில் அமர்ந்திருக்கிறோம். குடும்பம், குழந்தை

கட்டுரை
நாகரத்தினம் கிருஷ்ணா  

பதினெட்டாம் நூற்றாண்டு தொடங்கி இன்றுவரை சாகாவரம் பெற்றுள்ள சிந்தனை வெறுமைநிலை சிந்தனையென்ற சூனியத்துவம். ஓயாக் கவலையில் உள்ளுடைந்து வாடாமல் மாயாப் பிறவி மயக்கு அறுப்பது எக்காலம்? என்ற பத்ரகிரியாரின் மெய்ஞானப் புலம் பல் வெறுமை நிலை வாதத்தைச் சேர்ந்தது. இளம் வயது கௌதமருக்கு வீதியிற்கண்ட சவ ஊர்வலமும் எதிரிட்ட நோயாளியும் பழுத்த முதியவரும் பற்றற்ற துறவியும் உலக வாழ்க்கையின் நிர்வாண உண்மைகள். விளைவாக சித்தார்த்தன் அரண்மனையில் தொடங்கி அதி காரம், உறவுகள், செல்வம், அகந்தை என்று அனைத்தையும் உதறினான். துறந்தவன் உயிர்வாழ்க்கை குறித்துக் கேள்வி எழுப்புகிறான். விளைவு ஆசையே துன்பங்களுக்குக்கெல்லாம் மூலம் என்றறிந்தது பௌத்தம். சர்வம் சஷணிகம் சஷணிகம் சர்வம் துக்கம் துக்கம் சர்வம் சுலச

கட்டுரை
கண்ணன்  

மனித உரிமை பற்றிய சொல்லாடல் பொதுவாக இனப்படுகொலை, போர்க்காலக் குற்றங்கள், போலீசாரின் அத்துமீறல்கள், அரசின் அதிகார துஷ்பிரயோகம் போன்றன சார்ந்து அதிகமும் நடைபெற்றுவருகிறது. இலங்கையில் தொடர்ந்து தமிழ் மக்களின் மனித உரிமை துச்சமாக மதிக்கப்பட்டு வருவதை நாம் கொந்தளிப்புடன் கவனித்து எதிர்வினையாற்றிவருகிறோம். அதிர்ஷ்டவசமாக நம்மில் பெரும்பான்மையோரை இதுவரை மேற்படி வன்முறைகள் நேரடியாகத் தீண்டுவதில்லை. அதிர்ஷ்டவசமாகத்தான். அதிகாரத்தின் சூதாட்டத்தில் நம்முடைய தலை எப்போதுமே சிக்காது என்பதற்கு உத்திரவாதம் எதுவுமில்லை. என்னுடைய தலை அவ்வாறு சிக்கிய ஒரு அனுபவத்தையும் பகிர்ந்துகொள்வது நமது மனித உரிமை பேணப்படுவதில் அல்லது மீறப்படுவதில் சட்டத்தின் பங்களிப்பைவிட அதிர்ஷ்டத்தின் பங்க

பத்தி
சங்கீதாஸ்ரீராம்  

இதுவரை நாம் பார்த்த அரசியல், அறிவியல், பொருளாதாரப் பின்னணிக்குப் பிறகு பசுமைப் புரட்சி இந்தியாவிற்குள் நுழைந்த கடைசிக் கட்டத்துக்கு வந்துவிட்டோம். இது பற்றிப் பொதுமக்கள் மத்தியில் பிரபலமாக இருக்கும் கதையைச் சுருக்கமாகப் பார்த்துவிட்டு மேலே செல்வோம். 1965. இந்தியாவின் உணவு உற்பத்தி குறைந்து, PL-480இன் மூலம் தானிய இறக்குமதி அதிகரித்துக்கொண்டேபோன சமயம். 1966இல் உச்சக்கட்டமாக 100 கோடி டன் கோதுமை இறக்குமதியானது. அந்தச் சமயம் சி. சுப்பிரமணியம் இந்தியாவின் வேளாண் அமைச்சராகவும், எம்.எஸ். சுவாமிநாதன் இந்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் (IARI) இயக்குநராகவும் இருந்தனர். இவர்கள் இருவரும் கைகோத்துக்கொண்டு இந்திய வேளாண்மையை நவீனமயமாக்கும் பணியில் இறங்கினர். நார்மன் போர்லாக

சிறுகதை
கோகுலக்கண்ணன்  

வின்சென்ட் கொடுத்த ஆடைகளை அணிந்து ஹென்றி படுக்கையில் கிடந்தான். அவனைச் சுற்றி இரவு தன் வலையைப் பின்னியது. படுக்கையின் மென்மை உடலுக்கு அன்னியமாக இருந்தது. உடம்பு படுக்கையிலிருந்து வழுக்கிக்கொண்டு போய்விடும் என்று பயந்தான். நேற்றைய முன் தினம் யூட்டா மாநிலத்தில் ஏதோவொரு நகரத்தில் ஒரு நெடுஞ் சாலைப் பாலத்திற்கு அடியில் குளிர் உடலைப் புரட்டியெடுக்கப் படுத்திருந்தான். அவனுடைய பத்தாண்டுக் கால அலைச்சலில் பல கந்தல் துணிகளைச் சேகரித்துவைத்திருந்தான். அத்தனையும் உடல் மேல் போர்த்தி அதற்கும் மேலே ஒரு பெரிய ப்ளாஸ்டிக் பையையும் அணிந்து படுக்க வேண்டி யிருந்தது. அந்த இடத்தில் அவனைப் போலவே இரண்டு பேர் படுத்திருந்தார்கள். அந்தக் குளிர் இரவில் அவர்களுக்குள் பேசிக்கொள்ள எதுவும் இருந்திர

கட்டுரை
க.திருநாவுக்கரசு  

வரலாறு எப்படி ஆளும் வர்க்கங்களால் கட்டமைக்கப்படுகிறது என்பதை, ‘கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துகிறவர்கள் எதிர்காலத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்; நிகழ் காலத்தைக் கட்டுப்படுத்துகிறவர்கள் கடந்த காலத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள்’ என்ற ஜார்ஜ் ஆர்வெல்லின் கூற்று தெளிவாக்குகிறது. தங்கள் நலன்களுக்கேற்ப வரலாற்றைத் திருத்தி எழுதும் கலையில் ஐரோப்பிய, அமெரிக்க ஆளும் வர்க்கங்களின் வரலாற்றாசிரியர்கள் கைதேர்ந்தவர்கள். மறைக்கப்படும் வரலாற்றின் இருண்ட பக்கங்களை உலகறியச் செய்வதிலும் வரலாற்றின் உந்துசக்தியாக விளங்கும் மக்கள் போராட்டங்களைப் பதிவு செய்வதிலும் உழைக்கும் வர்க்க, சாதாரண பெரும்பான்மை மக்களின் நலன் நாடும் வரலாற்றாசிரியர்களின் அறிவுலகப் பணி அசாதாரணமானது. அத்தகைய பணியைத் த

மதிப்புரை
 

வாழ்க்கையால் எழுத்தை அர்த்தப்படுத்திக்கொள்வதும் எழுத்தால் வாழ்க்கையை அர்த்தமுள்ளதாக்குவதும் நேர்மை மிக்க எழுத்தாளர்களின் முக்கியப் பணியாக அமைந்து வந்திருக்கிறது. திட்டமிடல்களால் உருவாகக்கூடியதன்று இலக்கியச் செயற்பாடு. ஓர் எழுத்தாளனுக்குள் இயல்பாகவே அது உருவாகி இருக்கக்கூடியது. வெறும் கனவுகளில் மாத்திரம் மிதக்கின்ற எழுத்து வகைகளுக்கும் வாழ்வைப் படைத்தளிக்கின்ற இலக்கியத்திற்கும் மிக முக்கியமான வேறுபாடுகள் இருக்கின்றன. இங்கே எழுத்துப் பணியின் சாரங்களில் ரசனை நுகர்ச்சியாக ஒன்றும் உன்னதமான நீடித்த அனுபவச் சாரம் மற்றொன்றுமாக நம்மிடையே எஞ்சுகின்றன. உடைந்த கண்ணாடிகளில் மறைந்திருக்கும் குருவி (ஈழத்துச் சிறுகதைகள்) ஆசிரியர்: ஓட்டமாவடி அறபாத் பக்.: 207 விலை: ரூ. 130 முதற்ப

பதிவுகள்
அ. கார்த்திகேயன்  

கடந்த அக்டோபர் 18, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் இந்திரன் கலந்துகொண்டார். கவிஞர், கலை விமர்சகர், ஓவியர், மொழிபெயர்ப்பாளருமான அவரைச் சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க.வை. பழனிசாமி அறிமுகப்படுத்தினார். தன் பிள்ளைப் பிராயத்தில் நேர்ந்த அனுபவங்களை முதலில் இந்திரன் பகிர்ந்துகொண்டார். அவர் தந்தை ஓவியராகத் திகழ்ந்ததாகவும் வீடு முழுக்க அறிஞர் கூட்டம் சூழ, மூலையில் நின்றுகொண்டு அவற்றைச் சின்னஞ்சிறுவனாகப் பார்த்துக் களிக்கும் பேறு கிடைத்ததாகவும் கூறி மகிழ்ந்தார். கவிஞர் கம்பதாசன் குடும்ப நண்பராக விளங்கியதைக் குறிப்பிட்டு அவரோடு ஏற்பட்ட தொடர்பையும் விவரித்தார். அம்பேத்கர், தந்தை பெரியாரின்

பதிவுகள்
 

கடந்த நவம்பர் 15, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் எழுத்தாளர் சுரேஷ்குமார இந்திரஜித் கலந்துகொண்டார். நவீன எழுத்தாளர் வரிசையில் குறிப்பிடத் தகுந்த இடத்தை வகிக்கும் அவரைச் சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க.வை. பழனிசாமி அறிமுகப்படுத்தினார். தனக்கு மூன்று பெயர்கள் உண்டெனவும் மூன்று நபராக அறியப்படுவதாகவும் கூறித் தன் உரையைத் தொடங்கிய சுரேஷ்குமார இந்திரஜித் சிறுவயதில் தந்தையை இழந்து, அண்ணன்-அண்ணியாரின் அரவணைப்பில் வளர்ந்ததாகவும் குறிப்பிட்டார். தான் பிறந்து வளர்ந்த ஊரான ராமேஸ்வரம் பற்றி விரிவாகப் பகிர்ந்துகொண்டவர், யாத்ரீகர்கள் வந்து போகும் இடமான அது பன்முகத் தன்மைபெற்று விளங்குவதைக் கவி

பதிவுகள்
 

கதாசிரியர்களுக்கும் வாசகர்களுக்கும் இடைவெளியற்ற காலம் இது. எழுத்தாளர்கள் யார், வாசகர்கள் யார், பதிப்பாளர்கள் யார் என்பதைப் பிரித்தறிய முடியாத பிம்பங்கள் கொண்ட தமிழ்ச் சூழலில் நிர்ப்பந்தங்களின் பேரில் அவசரமாக உருவாகும் படைப்புகளும் அவற்றைப் பிரசுரிக்கும் பத்திரிகைகளும் பெருகிவிட்டன. யார் வேண்டுமானாலும் எதை வேண்டுமானாலும் பிரசுரித்து வாசகர்களுக்கு விற்றுப் பணம் பிடுங்கிக்கொள்ளலாம் என்னும் அவலம் உருவாகியுள்ளது. பிரதியைப் பற்றிய கவலையும் அது நிகழ்த்தும் அதிர்வுகளும் அரசியலும் இப்போது முக்கியமானவையாக இல்லை. இக் காலகட்டத்தில் இளம் படைப்பாளன் எழுதி முடித்த தன் பிரதியைச் செப்பனிடும் பொருட்டு மேற்கத்திய நாடுகளில் உள்ள மீபீவீtவீஸீரீ ரீக்ஷீஷீuஜீ போன்ற அமைப்பைத் தமிழ்ச் சூழலில் வ

தலையங்கம்
 

தமிழகப் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் ஆண்டுதோறும் பிப்ரவரி மாதம் தொடங்கும் அறிவுத் தேடல் மார்ச் மாத இறுதியில் நிறைவுபெற்றுவிடுகிறது. இந்த இரண்டு மாதங்களுக்கும் ‘கருத்தரங்க மாதங்கள்’ என்று பெயர். பேராசிரியர்கள் காலையிலும் மாலையிலும் வெவ்வேறு கருத்தரங்குகளில் உரையாற்றுகின்றனர். இடைவிடாமல் பயணம். கணவன், மனைவி இருவரும் பேராசிரியர்களாக இருந்துவிட்டால் தம்பதி சமேதரராய் காரில் வந்திறங்கிக் கடமையாற்றிவிட்டு இருவருக்கும் பயணப்படி பெற்றுச் செல்லலாம். இவர் அங்கே போனால் அவர் இங்கே வரலாம். ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் பேராசிரியர்களிடையே உள்நாட்டுச் சண்டைகள் இருப்பினும் வெவ்வேறு நிறுவனங்களில் உள்ளவர்களிடையே பரஸ்பரப் புரிதல்கள் நிலவுகின்றன.அரசு

 

கருணாநிதி அரசின் தலித் விரோதப் போக்கை இங்குள்ள அனைத்துக் கட்சிகளும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்கும் இவ்வேளையில் தேசிய ஆதிதிராவிட நல ஆணையத் துணைத் தலைவர் பேராசிரியர் காம்ளேவின் பேட்டி கருணாநிதியைக் கலவரமடையச் செய்திருக்கிறது. முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளுக்குத் தீர்வைத் தேடாமல், சிறுபிள்ளைத்தனமாகப் பிரதமரிடம் முறையிடப் போவதாகக் கோபித்துக்கொள்கிறார். விழுப்புரம் மாவட்டம் காங்கியனூர் கிராமத்தில் நடைபெற்ற கோவில் நுழைவுப் போராட்டத்தில் பங்கேற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் திருமதி லதா, தலித் என்னும் ஒரே காரணத்திற்காக, மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளர் அமல்ராஜுவின் உத்தரவின் பேரில் லதாவைக் கீழே தள்ளி வயிற்றில் லத்தியால் குத்தியதால் அவரது க

நூல் அறிமுகம்
செல்லப்பா  

சில்ட்ரன் ஆஃப் ஹெவன், பை சைக்கிள் தீஃப் போன்ற உன்னதப் படங்களின் பெயர்கள் எப்படியோ காற்றில் மிதந்துவந்து திரைப்பட ரசிகனின் கவனத்தைக் கவரும் தருணத்தில், கமல்ஹாசன் மிகச் சிறந்த நடிகர், மணிரத்னம் மாதிரியான திறமைமிக்க இயக்குநர் யாருமில்லை என்னும் அறியாமை மெல்லமெல்ல அகலத் தொடங்கும். தண்ணீரே குடிக்காமல் தாகம் தீர்த்துக்கொண்டிருக்கும் பித்துக்குளித்தனம் புலப்படும்போதில் உன்னதமான படங்களைக் காணப் பயணப்படுவான் அவன். ரத்னபாலா, அம்புலிமாமா, மாலைமதி, ராணிமுத்து, பாலகுமாரன், ஜெயகாந்தன், நவீன இலக்கியங்கள், ரஷ்ய இலக்கியங்கள் எனப் பாதையமைத்துக்கொள்ளும் இலக்கிய வாசகன் போல் திரைப்படப் பார்வையாளனின் பாதையும் சிறு சிறு மாற்றங்களோடு விரியத் தொடங்கும். அத்தகைய தொடக்கப்பொழுதில் கேள்விப்ப

உள்ளடக்கம்