கவிதை
தீபச்செல்வன்  

எல்லாம் நமது மண்ணிலிருந்து துரத்தப்படுகிற நாட்களில் சுதந்திரம் பெருமனதுடன் மரணத்தை வழங்கக் காத்திருக்கிறது. இனவாதம் வடிவமைத்த போர் நம்மை ஊடுருவி ஆளுகிறது. வெல்ல முடியாதிருந்து நமக்கெதிராயிருக்கிற யுத்தம் ஆட்களற்ற நகரத்தைத் தோற்கடிக்கிறது. கடலில் குதிக்கிற நகரத்தின் சொற்பமற்ற எண்ணிக்கையான சனங்களுக்கு எல்லாம் இத்தோடு முடிந்துபோகிறது. அகலமான கால்களினால் ஆக்கிரமிக்கிற யுத்தம் சமாதானத்தைப் பேசுகிறது. நாம் சொற்ப எண்ணிக்கையானவர்களாக ஒதுக்கி முடிக்கப்படுகையில் அழித்து முடிக்கப்படுகிற பயங்கரவாதிகளானோம். இனம் பற்றி வளர்த்த பேரெடுப்பு முடிகிற கடைசி நிமிடத்திற்கென வருகிற இனவாதப் புன்னகை மனிதர்களைத் தின்று கொண்டுவருகிற யுத்தமாகி மனிதாபிமானம் பேசுகிறது. கடைசியில் நமது சுய

கட்டுரை
கண்ணன்  

கருத்துச் சுதந்திரத்தைக் காக்க சென்னையில் சமீபத்தில் ஒரு கூட்டம் - ம.க.இ.கவினர் நடத்திய ‘கலக’த்திற்கிடையில் - நடந்தது. லீனா மணிமேகலையின் கவிதைகள் ஆபாசமாக இருப்பதாகவும், அவற்றைத் தடைசெய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சியினர் சென்னை கமிஷனருக்குப் புகார் கொடுத்து, சில வாரங்களுக்குப் பிறகும் எந்த நடவடிக்கையையும் போலீசார் மேற்கொள்ளாத நிலையில் இக்கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. பெண் கவிஞர்கள்மீது வன்மமான தாக்குதல்கள், குற்றச்சாட்டுகள் கிட்டத்தட்டப் பத்தாண்டுகளுக்கும் மேலாகத் தமிழ்ச் சூழலில் ஏற்பட்டு வருகின்றன. தமிழ் சினிமாக் கலைஞர்கள் சிலரும் திமுக கவிஞர்களும் தமிழ்ப் பண்பாட்டுப் படையின் முன்னணியினராகச் செயல்பட்டு, பெண் கவிஞர்களை ஆபாசமாகவும் கொச்சையாகவும்

நேர்காணல்
 

மதுரையிலிருந்து இயங்கிவரும் மக்கள் கண்காணிப்பகம் என்னும் மனித உரிமை அமைப்பின் ஒருங்கிணைப்பாளரான ஹென்றி திபேன் கடந்த இருபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழகத்தின் மனித உரிமை சார்ந்த பிரச்சினைகளுக்காகப் போராடி வருபவர். மனித உரிமைச் செயல்பாட்டைச் சமூக மாற்றத்துக்கான ஒரு கருவியாகப் பார்க்கும் திபேன் ஒரு பரவலான மக்கள் இயக்கமாக மனித உரிமை சார்ந்த செயல்பாடுகளை விரிவுபடுத்துவதில் அக்கறை கொண்டவர். போலி மோதல் சாவுகள், சித்திரவதைக்கெதிரான பிரச்சாரம், சாதிய பிரச்சினைகளை உலக அளவில் கொண்டுசெல்வது எனப் பல்வேறு தளங்களில் செயல்பட்டுவருகிறார். மனித உரிமைச் செயல்பாடு என்பதைப் பல்வேறு ஜனநாயக அமைப்புகளும் பங்கேற்கும் கூட்டுப் பணியாகக் கருதி பல போராட்டங்களை அவற்றோடு இணைந்து நடத்தியிருக்கி

குவளைக்கண்ணன்  

ஆனந்த நடனம் இதுவே அந்தப் பொற்கணம், சிதறியது சேர, எல்லைகள் அழிய, பகுத்துப் பார்த்ததையெல்லாம் சேர்த்துப் பார்க்கவிருக்கிறோம். பாதங்களுக்குக் கீழே பதுங்கிக் காத்திருக்கிறது ஒலி. இலை இலையாய் அசைத்து ஆடலாம், அலை அலையாய் அடித்துப் பாயலாம். காற்று நுழையாத குகைகளில் புகுந்து வரலாம். மறையலாம், தோன்றலாம். அழியலாம், ஆக்கலாம். இந்தமுறை, நீயும் காலைத் தூக்கி ஆடலாம். இனி, ஆணில்லை, பெண்ணில்லை. நானில்லை, நீயில்லை. நாமுமில்லை. வரம் நான் என்ன கேட்டேன்? நீ என்ன தந்தாய்? புரியாததெல்லாம் புரியக் கேட்டால், புரிந்ததெல்லாம் புரியாதுபோக வரம் தருகிறாய்! கிரக்கம் காற்றாடி முட்டி முட்டிக் காற்றைக் குடிக்க, வெளி கிரங்கலாயிற்று. விநோத சஞ்சாரம் ஓசை அவனை எழுப்பிற்று, எழுந்தவன் ஓசை வரும் இ

சிறுகதை
 

பக்கத்துத் தெருவிலிருந்தோ வேறெங்கிருந்தோ சேவல் சத்தம் கேட்டதும் நீண்ட இரவு முடிந்துவிட்டதென்று சுந்தரேசன் கண்களைத் திறந்தார். சுற்றியிருந்தவற்றை அடையாளம் காண முடியாதபடி இருள் அடர்த்தியாகச் சூழ்ந்திருந்தது. பிறந்து வளர்ந்த ஊரில் தனக்குச் சொந்தமான பழைய ஓட்டு வீட்டுக்குள் மரக்கட்டிலின் மேல் மல்லாந்து படுத்திருப்பதைப் போல் அவருக்குத் தோன்றியது. கண்கள் இருட்டுக்குப் பழகியதும் ஆளுயரத்துக்கு மேலிருந்த திறந்த சாளரத்திலிருந்து புகை போல் மங்கிய வெளிச்சம் புலப்பட்டது. எங்கும் தெளிவான அமைதி நிலவியது. அவருடைய மகன் நகரத்தின் ஓரத்தில் குடியிருக்கும் வாடகை வீட்டில் தேவையற்ற பொருட்களைப் போட்டு வைத்திருக்கும், அவர் சில மாதங்களாகத் தங்கிக்கொண்டிருக்கும் மூலை அறைதான் அது என்பது நினைவு

பத்தி
கண்ணன்  

இனவாதம் கடந்த சில ஆண்டுகளில் சில மத்தியக் கிழக்கு நாடுகளின் விமான முனையங்களில் பல மணிநேரங்களைச் செலவழித்திருக்கிறேன். எந்த நாட்டினுள்ளும் செல்லும் சந்தர்ப்பம் இன்னும் ஏற்படவில்லை. விமான முனைய அனுபவங்கள் அத்தகைய ஆர்வத்தைத் தூண்டவுமில்லை. பல சமயங்களில் மன உளைச்சலைத் தந்த அனுபவங்கள் இவை. இந்திய விமான முனைய நிர்வாகிகளும் பணியாளர்களும் பாதுகாப்பு அதிகாரிகளும்தாம் உலகிலேயே பயணிகளை மிக மோசமாக நடத்துபவர்களாக இருக்க வேண்டும் என நினைத்திருந்தேன். அது அனுபவக் குறைவால் விளைந்த அனுமானம் என்பதைச் சில மத்தியக் கிழக்கு நாட்டு விமான முனைய அனுபவங்கள் உணர்த்தின. இவ்வளவு அகந்தையுடைய அதிகாரிகளையும் பணியாளர்களையும் சந்திக்கக் கிடைப்பது அபூர்வம். என் பார்வையில் இத்திமிரின் அடிப்படைகள் மூன்று. 1.

திறந்தவெளி
பழனிவேள்  

தை முதல் நாளை தமிழ்ப் புத்தாண்டாக அறிவித்ததன் மூலம் ஆட்சியாளர்கள் விரும்பினால் ஒரு பண்பாட்டு மரபை எவ்விதத் தர்க்கபூர்வமான காரணங்களுமின்றி மாற்றிக்காட்டிவிட முடியுமென்பதற்கு உதாரணமான தலைவராக விளங்குகிறார் முதல்வர் கருணநிதி. அவர் நன்கு தமிழறிந்தவர். அவரது ஆலோசகர்களுக்குத் தமிழோ தமிழர்களின் பண்பாட்டு அடையாளங்களோ தெரியுமா என்னும் சந்தேகத்தைத் தோற்றுவிக்கிறது முதல்வரின் இந்த முடிவு. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்துவகையாகப் பிரிக்கப்பட்ட தமிழ் வாழ்வின் ஆதாரமான பண்பாட்டு அடையாளங்களோடு எள்முனையளவு தொடர்பும் தமிழ்ப் புத்தாண்டான சித்திரை ஒன்றுக்கு இல்லை. கிரிகோரி காலண்டரின் சரிபாதியையோ பஞ்சாங்கம் எனப்படும் காரிய கருமாதி ஏட்டையோ மேலோட்டமாகப் புரிந்தவர்களுக்குக

மதிப்புரை
வா. மணிகண்டன்  

கவிதை தன் ரசிகனோடு நிகழ்த்தும் உணர்ச்சி விளையாட்டைத் தோராயமாகவே வார்த்தைகளாக்க முடிகிறது. பெரும்பாலும் அந்த வார்த்தைகள் நிகழ்ந்த விளையாட்டைப் பதிவு செய்யாமல் நேர் எதிர்மாறானதாக இருந்துவிடுகின்றன. இதே நினைப்பில்தான் த. அரவிந்தனின் ‘குழி வண்டுகளின் அரண்மனை’ என்னும் தொகுப்பை வாசித்தேன். குழிவண்டுகளின் அரண்மனை (கவிதைகள்) ஆசிரியர்: த. அரவிந்தன் பக்: 80 விலை: ரூ.40 வெளியீடு: அருந்தகை E-220, 12வது தெரு, பெரியார் நகர், சென்னை 600082. சோற்றுக்கு எந்தப் பஞ்சமும் இல்லாத ஒருவன், ஒரு சந்தர்ப்பத்தில் உக்கிரமான வெம்மை அவனது தோலைச் சுட்டெரிக்க உணவும் நீருமின்றி நாவறண்டு பொட்டல் வெளியில் அலைந்து திரிந்தபோது அடையும் ஒரு பித்து மனநிலையையும் பின்னர் வெகு நாட்கள் கழித்

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

நான் எழுதப்போவது அண்மையில் வெளியாகியுள்ள தலித் வரலாறு பற்றிய இரண்டு தமிழ் நூல்களுக்கு எழுதப்பட்டுள்ள அணிந்துரைகள் குறித்து. 1985இல் டி. பி. கமலநாதன் எழுதிய Mr.K.Veeramani M.A.B.L., is Refuted and the Historical Facts about the Scheduled Caste’s Struggle for Emancipation in South India என்னும் ஆங்கில நூலை எழுதி வெளியிட்டார். இந்நூலின் தமிழ் மொழிபெயர்ப்பை மதுரை எழுத்து பதிப்பகம் ‘தலித் விடுதலையும் திராவிடர் இயக்கமும்; மறைக்கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும்’ என்னும் தலைப்பில் அண்மையில் வெளியிட்டுள்ளது. 1986இல் காங்கிரஸ் கட்சியை விமர்சித்து ‘காங்கிரஸ் வரலாறு; மறைக்கப்படும் உண்மைகளும் கறைபடிந்த அத்தியாயங்களும்’ என்னும் நூலைக் கி. வீரமணி

பத்தி
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

பிரித்தானியத் தேர்தல்: திக்குத் தெரியாத வாக்காளர்கள் இந்தப் பத்தியை நீங்கள் படித்துக் கொண்டிருக்கும்போது ஐக்கிய இராச்சிய நாடாளுமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் வெளிவந்திருக்கலாம். தேர்தல் அறிவிக்கப்பட்டு ஒரு வாரமாகிறது. இதுவரை எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகள் படி போட்டிபோடும் மூன்று முக்கியக் கட்சிகளில் - தொழிலாளர், பழமைவாதம், தாராள - ஜன நாயகம் - ஒன்றாவது பெரும்பான்மையான பலத்துடன் ஆட்சிக்கு வர வாய்ப்பில்லை எனத் தெரிகிறது. பெரும்பாலும் தொங்கு நாடாளுமன்றம் அமையும் என்ற கருத்தே நிலவுகிறது. இவை தேர்தல் அறிவித்த தொடக்க நாட்களில் எழுந்த கணிப்புகள். எதிர்வரும் மூன்று வாரங்களில் இந்த நிலைமை மாறலாம். இந்தத் தேர்தல் இரண்டுவிதங்களில் வித்தியாசப்படுகிறது. ஒன்று அமெரிக்க ஜனாதிபதி

நூல் வெளியீடு
சுகுமாரன்  

தமிழிலிருந்து மலையாளத்துக்கு மொழிபெயர்க்கப்படும் நூல்களில் கல்விப்புலங்களில் வரவேற்புப் பெறுபவை பெரும்பான்மையும் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் என்பது வியப்புக்குரியதல்ல. மலையாளிகள் தமது வரலாற்றுப் பற்றாக்குறையை ஈடுசெய்துகொள்ள நினைக்கும் மனப்பான்மையாக இருக்கலாம். அண்மைக் காலங்களில் தமிழ்ச் செவ்விலக்கியங்கள் பலவும் மலையாளத்தில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. குலசேகர ஆழ்வாரின் பெருமாள் திருமொழி (டாக்டர் புதுசேரி ராமச்சந்திரன்), திருக்குறள், (கே. ஜி. சந்திரசேகரன் நாயர்) கம்ப ராமாயணம் (ஸ்ரீதரன் நாயர்), திருமூலரின் திருமந்திரம் (சந்திரசேகரன் நாயர்), மாயூரம் வேதநாயகம் பிள்ளையின் பிரதாப முதலியார் சரித்திரம் (வெங்கடாசலம்) ஆகியவை மலை யாளத்தில் மொழிபெயர்க்கப் பட்டுள்ளன. அந்த மரபில் பு

கட்டுரை
வே. வசந்தி தேவி  

“மனித உரிமைகளை நிலைநாட்ட நாங்கள் என்ன செய்ய முடியும்?” பன்னிரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு இப்படி ஒரு கேள்வி பள்ளி ஆசிரியர்கள் சிலரால் மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கும் மக்கள் கண்காணிப்பகத்தின் (People’s Watch) முன்வைக்கப்பட்டது. அந்தக் கேள்வியும் அதன் உட்பொருள் சார்ந்த சிந்தனையையும் அந்தச் சவாலை எதிர்கொள்ள வேண்டுமென்னும் ஆர்வத்தையும் ஏற்படுத்தியது. ஒரு மனித உரிமை அமைப்பு, கல்வி என்னும் அதன் செயல்தளத்திலிருந்து வேறுபட்ட ஒரு தளத்தில் ஈடுபடத் துணியலாமா? ஒரு சமூக ஆர்வலர் கல்வியாளராகச் செயல்பட முடியுமா? கல்வியின் குறிக்கோள் தகவல்களைக் கற்றுத் தருதல் அல்ல, சமூக உணர்வூட்டுவதும் மனிதநேயத்தை வளர்த்தெடுப்பதும் எனக் கொண்டால் சமூக ஆர்வலரைக் காட்டிலும் யார் சிறந்

கட்டுரை
சண்முகராஜா  

இந்தியாவில் பள்ளிக்கல்வியில் ஒன்றாம் வகுப்பிலிருந்து பன்னிரெண்டாம் வகுப்புவரை பாடத் திட்டத்திலோ வகுப்பறைகளிலோ பாடத்திட்டம் சாராத பிற நடவடிக்கைகளிலோ கலைகள் முறையாக அறிமுகப்படுத்தப்படுவதில்லை. படைப்புவழிக் கல்வி என்பது இன்றளவிலும் வெறும் பேச்சாகவே இருந்துவருகிறது. வேலைவாய்ப்புக்கான சந்தையைக் குறிவைத்துக் கற்பிக்கப்படும் கல்வி மாணவர்களை வெறுமனே பாடங்களை மனப் பாடம் செய்து ஒப்புவிக்கும் இயந்திரங்களாக மாற்றி அவர்களது இயல்பான திறன்களைச் சிதைத்திருக்கிறது. கற்றல் என்னும் குதூகலமான அனுபவத்திற்குப் பதிலாகத் தேர்வை முன்வைத்து மாணவர்களை உடல், மனரீதியாக ஒடுக்கும் கல்விமுறையே கல்வி நிறுவனங்களின் தேர்வாக உள்ளது. உலகம் முழுவதுமுள்ள கல்வியாளர்கள் படைப்புவழிக் கல்வியைத் தற்போதைய இயந்திரத்

 

எதிர்வினை: “பின்நவீனத்துவ அரசுகள் எனக் குறிப்பிட்டது பாராட்டும் மனநிலையில் அல்ல” எதிர்வினை: ஆகவே நண்பர்களே, அவசரப்படாதீர்கள்!

பதிவுகள்
உபேந்திரா, அரங்கவியலாளர் பெங்களூர்  

வடகிழக்கு இந்தியாவின் மதிப்பு வாய்ந்த நாடகக் கலைஞரும் அரங்கவியலாளருமான ஹேஸ்நம் கன்யாலாலைச் சந்திக்கக் கிடைத்த வாய்ப்பு அபூர்வமானது. அவர் தன் நாடக அனுபவங்களைப் பிப்ரவரி 5 - 7 நாட்களில் அஸ்ஸாமின் ராம்பூர் கிராமத்தில் இளம் நாடகக் கலைஞர்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறார் என்பதை நாடக இயக்குநர் ரகுநந்தனாமூலம் அறிந்து நானும் இரண்டு நண்பர்களும் பிப்ரவரி 1ஆம் நாள் இரவு பெங்களூரிலிருந்து புறப்பட்டோம். மூன்று இரவுகளும் இரண்டு பகல்களும் பயணித்து அஸ்ஸாம் சென்றதும் அங்கே நிலவிய கடும்பனியையும் தாண்டி இனிய அனுபவம் எங்களுக்குக் காத்திருந்தது. பொதுவாக அரங்கவியல் கருத்தரங்குகளில் சில அறிஞர்களும் நாடகவியலாளர்கள் என அறியப்படுபவர்களும் உரையாற்றுவார்கள். கலந்துரையாடலும் இடம்பெறும். எதையும் முழுதாக

பதிவுகள்: அற்றைத் திங்கள், டிசம்பர் 20, சேலம் தமிழ்ச் சங்கம்
அ. கார்த்திகேயன்  

கடந்த டிசம்பர் 20, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக்கட்டளை இணைந்து நடத்திய ‘அற்றைத் திங்கள்’ நிகழ்ச்சியில் எழுத்தாளர் அ. ராமசாமி கலந்துகொண்டார். நாடகவியலாளர், தமிழ்த் துறைப் பேராசிரியர், எழுத்தாளர், திறனாய்வாளர், நாடகக் கலைஞர் எனப் பன்முகப் பரிமாணம் கொண்ட அவரைச் சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க.வை. பழனிசாமி அறிமுகப்படுத்தினார். ‘அற்றைத் திங்கள்’ எனும் சொல்லின் நயம் குறித்து விரிவாகப் பேசத் தொடங்கிய அவர் தான் பிறவிக் கவிஞனோ கலைஞனோ அல்ல என்றும், தான் எதையும் திட்டமிட்டுக்கொண்டு எழுத வரவில்லை என்றும் தன்னைச் சார்ந்த சமூகமும் சூழலும் மனிதர்களும்தான் எழுத்துத் துறைக்கும் கலைத் துறைக்கும் தன்னை இட்டு

பதிவுகள்: அற்றைத் திங்கள், ஜனவரி 17, சேலம் தமிழ்ச் சங்கம்
அ. கார்த்திகேயன்  

கடந்த ஜனவரி 17, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் கவிஞர் கலாப்ரியா கலந்துகொண்டார். தமிழ்க் கவிதை வரலாற்றில் முக்கிய இடம் வகிக்கும் அவரைச் சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க.வை. பழனிசாமி அறிமுகப்படுத்தினார். கலைஞனுக்குத் திருப்தி என்பது கிடையாது. கடவுளுக்கும்கூடத் திருப்தியின்மை, போதாமை இருப்பதால்தான் மனிதர்களைப் படைக்கிறான் எனத் தன் உரையைக் கலாப்ரியா தொடங்கினார். தமிழ்க் கவிதையில் சொல்லாத விஷயங்களே இல்லை என்றவர், சிறந்த படைப்புகள் இனிமேல்தான் படைக்கப்பட வேண்டுமென மாயகாவ்ஸ்கி குறிப்பிட்டதை அடியொற்றித் தான் படைப்பாக்க முயற்சியில் தொடர்ந்து ஈடுபடுவதாகத் தெரிவித்தார். சேலம் பகுதியில் வாழ்ந்

பதிவுகள்
பி. எழிலரசி  

காலச்சுவடு அறக்கட்டளை, கூடு ஆய்வுச் சந்திப்பு ஆகியன நாமக்கல் மாவட்டம், மோகனூர் சுப்பிரமணியம் கலை அறிவியல் கல்லூரியுடன் இணைந்து அக்கல்லூரியில் ‘தமிழ் உரைநடை : சில பார்வைகள்’ என்னும் தலைப்பில் 26.03.10 அன்று ஒருநாள் கருத்தரங்கை நடத்தின. கல்வி, இலக் கியம், ஊடகம் உள்ளிட்ட அனைத்தும் உரைநடையை அடிப்படையாகக் கொண்டு இயங்கும் காலம் இது எனினும் தமிழ் உரைநடை பற்றிய உணர்வும் தெளிவும் இன்னும் நம் சூழலில் உருவாகவில்லை. கல்லூரி மாணவர்களுக்கு அவற்றைப் பற்றிய புரிதலை உருவாக்கும் நோக்கிலும் உரைநடையின் பயன்படு தன்மைகள், உரைநடையின் அமைப்பு நுட்பங்கள் குறித்துப் பயிற்று விக்கும் நோக்கிலும் இக்கருத்தரங்கம் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது. சுப்பிரமணியம் கல்லூரியின் அரங்கில் நடைபெற்ற

 

ஏப்ரல் 2010, காலச்சுவடு இதழில் வெளியான தேவிபாரதியின் ‘ஒழுக்கம் என்னும் தந்திரம்’ கட்டுரை நன்று. ஒழுக்கம், வாழ்க்கை நெறி எனும் வெற்றுக் கோஷங்களை வைத்துக்கொண்டு போலியான பிம்பங்களை வடிவமைத்து, தாங்கள் தான் இந்த அகிலத்தின் உத்தம புருஷர்கள் எனப் பறைசாற்றிக் கொள்பவர்களின் - நிறுவனங்களின் முகமூடிகளை, பொய்த் திரைகளைக் கிழித்தெறிகின்றது. பல அமைப்புகள் நெடு நாட்களாகவே குறுகியவாதக் கண்ணோட்டத்துடனே இயங்கி வருகின்றதால், சிந்தனையாளர்கள் பலர் வெளியேறிவிடுகின்றனர். தேர்தலை மையப்படுத்தி, நமது அரசியல் கட்சிகள் நடத்தும் பேரங்களில் இடதுசாரிகள் பலியாகிவிடுகின்றனர். இதில் பாட்டாளி வர்க்கத்தை பொலிடிக்கலைஸ் செய்வது என்பது வெறும் மாயாவாதம்தான். நமது ஊடகங்கள் நடந்துகொள்ளும் விதம்

தலையங்கம்
 

சுதந்திர இந்தியாவின் ஜனநாயகச் சாதனைகளில் ஒன்று தகவல் பெறும் உரிமைச் (த.பெ.உ.) சட்டம். ஆளும் வர்க்கம் இச்சட்டம் நிறைவேற அனுமதியளித்துவிட்டோமே என வருந்தும் சட்டம் இது. இது ஒரு இயக்கமாக - பெருமளவிற்கு நகர்ப்புற மத்தியதர வர்க்க இயக்கமாகவே இருப்பினும் - உருவாகும் என அரசாளும் வர்க்கம் எதிர்பார்க்கவில்லை. எனவே இப்போது அதைச் சிறுகச் சிறுக - தேசப் பாதுகாப்பு, அரச ரகசியம் போன்ற காரணங்களைக் காட்டி - முனை மழுங்கச் செய்ய அரசுகள் முயன்றுவருகின்றன. மக்களிடமிருந்து தகவல்களை மறைப்பது என்பது அதிகார வர்க்கத்தின் இயல்பு. எனவே அதிகார வர்க்கம் இச்சட்டத்தைச் செயலற்றதாக மாற்ற அனைத்து வழிகளிலும் முயலும் என்பதில் ஐயமில்லை. இப்பின்னணியில் தமிழகத்தில் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தை அமல்படுத்த வேண்டிய

உள்ளடக்கம்