கவிதை
 

கழுமரத்தை நோக்கிச் செல்லும் என்னைப் பாருங்கள் பத்து நிமிடங்களில் கனவுகள் காலியான என் சிரம் ஆசையொழிந்த உடலிலிருந்து துண்டிக்கப்படும் நான் கொலைசெய்தவனின் உதிரம் எனது அன்புக்காக அலறுவதைக் கேட்டேன் அவனுடைய குடும்பத்தினரிடமும் கூட்டாளிகளிடமும் நான் மன்னிப்புக் கோர வேண்டியிருந்தது அந்த முற்றத்து மாமரத்தைக் கட்டியணைத்து நான் அழ வேண்டியிருந்தது மண்ணில் புரண்டு சகல உயிர்களுக்கும் உடைமையான பூமியிடம் மன்னிப்பை யாசிக்க வேண்டியிருந்தது பாதி கடித்து வைத்த பழத்துக்கும் பாதி பாடிய பாட்டுக்கும் பாதி கட்டிய வீட்டுக்கும் பாதி வாசித்த புத்தகத்துக்கும் பாதி சிநேகித்த சிநேகத்துக்கும் பாதி வாழ்ந்த வாழ்க்கைக்கும் நான் திரும்ப வேண்டியிருந்தது நதியைக் கடந்துபோய்ப் பூரம் கொண்டாட வேண்டியிரு

கட்டுரை
 

‘பல கோடி மக்களைப் பரவசப்படுத்தும் மாபெரும் கேளிக்கையாக விளங்கிவரும் கிரிக்கெட் ஆட்டம் பணம் கொழிக்கும் ஒரு துறை என்பது எல்லோருக்கும் தெரிந்ததுதான். அபரிமிதமான பணப் புழக்கம் என்னும் தேனடையை மொய்க்கப் பெரும் வர்த்தக நிறுவனங்களும் அரசியல்வாதிகளும் வந்து சேருவதும் இயல்புதான். உலகின் மிகப் பெரும் பணக்காரக் கிரிக்கெட் அமைப்பான இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியமும் அதன் கண்டுபிடிப்பான இந்தியன் ப்ரீமியர் லீக் (ஐ. பி. எல்.) என்னும் போட்டியும் இந்த எதார்த்தத்தின் கண்கூடான சாட்சியங்களாக விளங்குவதைப் பார்த்து வருகிறோம். பணத்தையும் அதிகாரத்தையும் ஊழலையும் பிரிக்க முடியாது என்பது உலகப் பொது உண்மை. இந்தியாவைப் பொறுத்தவரை பேருண்மை. ஐ.பி.எல். ஆட்டம் தொடங்கி இரண்டு ஆண்டுகள்

கட்டுரை
 

‘நீரா ராடியா என்னும் கார்ப்பரேட் தரகருக்கும் மத்தியத் தொலைத் தொடர்புத் துறை அமைச்சர் ஆண்டிமுத்து ராசாவுக்குமிடையே நடைபெற்ற அரசு முறையில் பதிவுசெய்யப்பட்ட தொலைபேசி உரையாடல்கள் வெளியே கசிந்ததற்குப் பின்னர் ராசாவின் பெயர் தலைப்புச் செய்திகளில் இடம்பிடித்திருக்கிறது. நாட்டுக்கு மிகப் பெரிய வருவாய் இழப்பை ஏற்படுத்திய ஒரு ஊழலை மூடிமறைத்து அதற்குப் போதிய ஆதாரங்கள் எதுவுமில்லை எனத¢ தந்திரமாக அவரைப் பாதுகாக்க முயல்கிறார்கள் காங்கிரஸ¢ கட்சியின் செய்தித் தொடர்பாளர்கள். இப்போது வெளிப்பட்டிருக்கும் உண்மைகள் தேசத்தின் கவனத்திற்குரியவை. இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை (2ஜி ஸ்பெக்ட்ரம்) ஒதுக்கீடு, விலை நிர்ணயம் (Allotment and pricing) சார்ந்த நடைமுறைகளில் ஆ. ராசா எடுத்த முட

பத்தி: தொலைவும் அலைவும்
 

‘இந்த நூற்றாண்டுக்குரிய இதழியலைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் அது எத்தகைய பகைப்புலத்தில் தொழிற்படுகிறது என்பதை நாம் உன்னிப்பாக அவதானிக்க வேண்டியிருக்கிறது. வரலாற்றின் முதல் வரைபு என்று இதழியலைச் சொல்லி வந்த காலம் மாறி, வரலாற்றை உருவாக்குவது, அழிப்பது, திரிப்பது போன்ற பல்வேறு திருப்பணிகளையும் நவீன இதழியல் செய்துவருவதை நாம் அறிவோம். நவீன இதழியலின் எழுச்சியை வடிவமைப்பதில் பின்வரும் பத்துக் காரணிகள் சிறப்பிடம் பெறுவதாகக் கருதுகிறேன். 1. தலையாயக் காரணி, ஏழாம் திணை என்று வழங்கப்படுகிற இணையமும் வையகம் விரிந்த வலையும் (www) அவற்றுடன் இயைந்த தொழில்நுட்பங்களின் எழுச்சியுமாகும். இந்த எழுச்சி, தொடர்பாடல், தகவல் பரிமாற்றம், செய்திப்பரம்பல், ஊடகவியல் போன்றவற்றில் பாரிய மாற்ற

பத்தி
கண்ணன்  

‘புரிதல் மார்ச் மாதம் சுப்ரமணியம் கலை, அறிவியல் கல்லூரி (மோகனூர்), காலச்சுவடு அறக்கட்டளையுடன் இணைந்து நடத்திய ‘உரைநடைப் பயிலரங்கு’ நிகழ்ச்சி நடைபெற்றது. (பார்க்க: பதிவு, இதழ் 125, மே 2010) பாவண்ணன் அனுபவரீதியாகத் தன் கதைகளின் உருவாக்கத்தை மாணவர்களோடு பகிர்ந்துகொண்டார். அவருக்கு உடனடியாக மாணவர் விசிறி வட்டம் ஒன்று உருவானது. எழுத்தாளர்களுக்கு மாணவர்களைச் சந்திக்கும்போது ஏற்படும் உற்சாகத்தைத் தொடர்ந்து கவனித்து வருகிறேன். சந்தோஷமான விஷயம் இது. எழுத்தாளர் - மாணவர் சந்திப்புகள் பல்கலைக் கழகங்களிலும் - கல்லூரிகளிலும் அதிகம் நடைபெறத் தொடங்கியிருப்பதும் உவகை தருகிறது. அடிப்படை இலக்கண விதிகளை நஞ்சுண்டன் மாணவர்களுக்கு எடுத்துச்சென்றவிதம், நவீன சாதனங்களின் உதவி

 

கவிதை: கழுமரத்துக்குச் செல்பவனின் தனிமொழி கருணாகரன் கவிதைகள் தீபச்செல்வன் கவிதைகள் ஃபஹீமா ஜஹான் கவிதைகள்

கட்டுரை
தியடோர் பாஸ்கரன்  

‘சினிமாவின் எந்தப் பரிமாணத்தைப் பற்றிப் பேச முயன்றாலும் அது நம்மை சினிமா அழகியலுக்கு இட்டுச் செல்லும். அதாவது சினிமா எனும் ஊடகத்தின் இயல்புகள், சாத்தியக்கூறுகள், நியதிகள், கோட்பாடுகள், தனித்துவங்கள் இவை கண்டிப்பாகப் பேசப்பட வேண்டும். அந்தப் பகைப்புலத்தில்தான் நாம் சினிமாவின் வெவ்வேறு கூறுகளையும் புரிந்துகொள்ள முடியும். சினிமாவின் அடிப்படை இயல்பு என்ன? காட்சிப் படிமங்கள். இவை பற்றிப் பேச வேண்டும். தமிழ் பேசும்படம் தோன்றியது முதல் ஏறத்தாழ ஐம்பதாண்டுகளாகத் தமிழ் சினிமாக் கலாச்சாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக சினிமா பாட்டுப் புத்தகம் நிலைத்திருந்தது. எந்த அரங்குகளில் தமிழ்ப் படம் திரையிடப்பட்டதோ அங்கே இந்தச் சிறு அச்சுப் பிரதியும் தனது இருப்பை அறிமுகப்படுத்திக்கொண்டது. அ

மதிப்புரை
அம்ஷன் குமார்  

யுத்தங்களுக்கிடையில். . . அசோகமித்திரனின் புதிய நாவல் பக்: 160 விலை: ரூ. 60 முதல் பதிப்பு: பிப்ரவரி 2010 நர்மதா பதிப்பகம் 10, நானா தெரு, தி.நகர், சென்னை 600 017 ‘நாவல் என்பது வெறும் கதையல்ல. அது கதையையும் சொல்கிற அனேக ஊடகங்களில் ஒன்று. அவ்வூடகத்தின் சிறப்பு நாவலைப் படித்துவிட்டு நாவலைப் போன்றே ஒருவர் கதையைச் சொல்லிவிட முடியாது என்பதில் உள்ளது. அசோகமித்திரனின் நாவல்கள் இத்தகைய சிறப்பியல்பை நமக்கு உடனே ஞாபகப்படுத்துகிற வகையில் அமைந்துள்ளன. அவரது சமீபத்தியதும் எட்டாம் நாவலுமான யுத்தங்களுக்கிடையில் பின்னிப்பிணைந்த உறவுக்காரர்களின் பார்வைகள், அனுபவங்கள் ஆகியனவற்றை முன்வைத்து நகர்கிறது. உள்ளடக்கம் உருவத்தைத் தீர்மானிக்கிறபடியால் நாவல் ஊடுபாவுகள் மிகு

சிறுகதை
சிறீநான். மணிகண்டன்  

கண்ணாடியில் இரண்டு பிம்பங்கள் தெரிந்தபோது ஆசாரிக்கு வியர்த்துவிட்டது. இரண்டில் எது வழமையானது எது புதிதாகத் தோன்றியது என்பதை அவனால் பிரித்தறிய இயலவில்லை. கண்களைக் கசக்கித் துடைத்துக்கொண்டு பார்த்தான். மீண்டும் இரண்டு பிம்பங்கள் தெரிந்தன. கண்ணாடியில் ஏதேனும் கீறல் விழுந்திருந்ததா எனத் தடவினான். அவ்வாறு இல்லை. கண்ணாடியிலிருந்த பழுப்பு நிறப் புள்ளிகளால் அவ்வாறு தோன்றக் கூடும் என நினைத்து மண்சுவரில் பதிந்திருந்த கண்ணாடியைப் பெயர்த்தான். நாற்புறமும் சட்டங்களற்ற கண்ணாடியின் பின்புறம் ரசமற்று வெளிறிக்கிடந்தது. ஆசாரி கண்ணாடியை முன்னும் பின்னுமாய்த் திருப்பினான். தன் முன்னாக இரண்டு பிம்பங்கள் தெரிவதற்குக் கண்ணாடி ரசமற்றுப் போனது காரணமல்ல, கண்களில் தான் குறையுள்ளதெனக் கருதினான்.

கட்டுரை
 

‘பெல்ஜியம் நாட்டின் கென்ட் (Ghent) பல்கலைக்கழகப் பேராசிரியர் பாலகங்காதரா என்பவரின் எழுத்துக்களைக் குறித்துக் கொஞ்சம் பரபரப்பாகப் பேசப்படுகிறது. இவர் கர்நாடகத்தவர் என்பதாலும் ஒரு சில கட்டுரைகளைக் கன்னடத்தில் எழுதியுள்ளார் என்பதாலும் கன்னடச் சிந்தனையுலகில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளார். கென்ட் பல்கலைக்கழகத்தின் நிதியுதவியுடன் கர்நாடகத்தின் சிமோகாவில் அமைந்துள்ள குவெம்பு பல்கலைக்கழகத்தில் ஓர் ஆய்வுமையத்தைத் தொடங்கிக் கடந்த சில ஆண்டுகளாக ஆய்வுப்பணியிலும் ஈடுபட்டுள்ளார். அவருடைய ஆய்வு மாணவர்கள் சிலர் கென்ட் பல்கலைக்கழகத்திலிருந்து சிமோகாவுக்கு வந்து கருத்தரங்குகளிலும் வகுப்புகளிலும் பங்கேற்றுவருகின்றனர். பாலகங்காதராவும் ஆண்டுக்கு ஒருமுறை சிமோகாவுக்கு வந்து இரண்டு மாதங்

திறந்தவெளி
 

சில மாதங்களுக்கு முன் நான் மதிக்கக்கூடிய ஒரு தமிழ்ப் பேராசிரியர் மதுரையிலிருந்து தொலைபேசியில் தொடர்புகொண்டு செம்மொழி மாநாட்டில் கலந்துகொண்டு கட்டுரை வழங்க முடியுமா எனக் கேட்டார். மாநாடு எந்தச் சந்தர்ப்பத்தில் எந்த நோக்கத்துக்காக நடத்தப்படுகிறது என்பதை உணர்ந்து படைப்பாளிகள் ஒரு தார்மீக நிலைப்பாடு எடுக்க வேண்டிய தருணம் இது என்று அவரிடம் கூறினேன். அவர் மேலும் வலியுறுத்தாமல் என்னுடைய உணர்வுகளைப் புரிந்துகொள்வதாகக் கூறினார். மாநாட்டு எதிர்ப்பு Ltte ஆதரவு நிலைப்பாட்டிலிருந்து எழுவதாகக் கூறி எதிர்ப்பைத் தனிமைப்படுத்தும் முயற்சிகள் நடந்தவாறு உள்ளன. ஈழப்பிரச்சினையில் திமுக அரசின் சந்தர்ப்பவாத பாசாங்கு அரசியலை விமர்சிக்க ஒருவர் Ltte ஆதரவாளராக இருக்க வேண்டிய அவசியமும் இல்லை. இ

சங்கீதா ஸ்ரீராம்  

‘1960களின் உணவுப் பற்றாக்குறையைப் பற்றி எப்போது குறிப்பிட்டாலும், அது ‘உணவு உற்பத்தியில் பற்றாக் குறை’ என்றே பரவலாகப் புரிந்துகொள்ளப்படுகிறது. ஆனால் சுதந்திர இந்தியாவில் உணவு உற்பத்தி படிப்படியாக அதிகமானது; இந்த உணவு, விவசாயிகள் மற்றும் விவசாயம் சம்பந்தப்பட்ட கிராமப் புறத் தொழிலாளர்களல்லாத, உணவுச் சந்தையை நம்பியிருந்த மற்றவர்களைச் சென்றடையவில்லை என்பதுதான் உண்மை. 1957இல் வெளிவந்த உணவு தானிய விசாரணைக் குழு அறிக்கை (Foodgrains Enquiry Committee Report) இதை நன்றாக விளக்கியிருக்கிறது. “. . . திட்டங்கள் சிறப்பான முறையில் அமல்படுத்தப்பட்டு அதன் விளைவாக உற்பத்தியும் அதிகரித்தது. ஆனால் சந்தையில் விளைபொருள்களின் இருப்பை அதிகரிக்கச் செய்து அதன் மூலம் உணவுப்

பதிவு: அற்றைத் திங்கள், பிப்ரவரி 20 சேலம் தமிழ்ச் சங்கம்
சிவபிரசாத்  

‘கடந்த பிப்ரவரி 20 சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு அறக் கட்டளை, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மற்றும் சேலம் இரா. வை. கணபதி அறக்கட்டளை இணைந்து நடத்திய அற்றைத்திங்கள் நிகழ்ச்சியில் கன்னட எழுத்தாளர் சாரா அபூபக்கர் கலந்து கொண்டார். அவரை வரவேற்றுப் பேசிய சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க. வை.பழனிசாமி, கடந்த ஒரு வருடமாக நடந்துவரும் அற்றைத்திங்கள் நிகழ்ச்சி யில் கலந்துகொள்ளும் முதல் பெண் எழுத்தாளர் சாரா அபூபக்கர் இஸ்லாமியச் சமூகத்திலிருந்து வந்துள்ள பெண் எழுத்தாளர் என்னும் முறையிலும் முக்கியமானவர் என்றார். நிகழ்ச்சியை ஒருங்கிணைத்த நஞ்சுண்டன் தன் மொழிபெயர்ப்பில் வெளிவந்துள்ள கன்னடப் பெண் எழுத்தாளர்களின் சிறுகதைத் தொகுப்பான அக்காவில் தான் சாராவைப் பற்றி எழுதியுள்ள குறிப்புகளை u

சு.ரா. பக்கங்கள்
 

‘மதிப்பிற்குரிய நண்பர் சிற்பி அவர்களுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். ஒரு முக்கிய விஷயத்தை முன்னிட்டு இக்கடிதம் எழுதுகிறேன். முன்பே நான் இதை எழுதியிருக்க வேண்டும். வேலை நெருக்கடியும் உடல் நலக்குறைவும் தடையாக நின்றுவிட்டன. உங்கள் நேர்காணல் வெளி வந்துள்ள ‘சுந்தர சுகன்’ அக்டோபர் 01 (எண் 173) இதழில் உங்களிடம் எழுப்பப்பட்டுள்ள ஒரு கேள்வி: ‘நல்ல காதல் கவிதைகளை படித்து ஐம்பது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. பாரதிக்குப் பிறகு யாருமே காதல் கவிதைகளை எழுதவில்லை என்று சுந்தர ராமசாமி ஒருமுறை சொல்லியிருக்கிறார். இதை நீங்கள் முழுமையாக ஏற்றுக்கொள்கிறீர்களா?’ இந்தக் கேள்விக்கு நீங்கள் பதிலளிக்கும்போது, ‘சுந்தர ராமசாமி முதலில் நல்ல காதல

தலையங்கம்
 

‘ஊடகங்களிடம் நட்பு பாராட்டும் அரசாங்கமாகத் தனது தலைமையிலான திமுக அரசாங்கத்தைக் குறித்த கற்பனைகளைத் தொடர்ந்து கட்டமைத்து வருகிறார் முதல்வர் கருணாநிதி. சமீபத்தில் குமுதம் நிறுவனத்தின் பங்குதாரர்களுக்கிடையே பிரச்சினை ஏற்பட்டு அது தொடர்பான புகார் காவல் துறையிடம் அளிக்கப்பட்டபோது அதில் தலையிட்டு சமரசம் செய்ய முயன்றார். சட்டமன்றத்தில் இது குறித்து எழுப்பப்பட்ட ஒரு கேள்விக்குப் பதிலளிக்கும்போது பல தருணங்களில் தன்னை விமர்சித்திருந்தாலும் குமுதம் தொடர்ந்து இயங்க வேண்டும் என்று விரும்புவதாகக் குறிப்பிட்ட முதல்வர் பொதுவாகப் பத்திரிகையாளர்கள்மீது தனக்குள்ள அக்கறையை வெளிப்படுத்தும் விதமாக ஒரு சிற்றுரையையும் ஆற்றியிருக்கிறார். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் தன்னை ஒரு பத்த

 

‘‘அகவிழி திறந்து’ பத்தியில் கண்ணன் அகவிழியைத் திறப்பதற்குப் பதில் வேண்டுமென்றே உண்மையைக் காணாது மூடிக்கொண்டுவிட்டார் எனத் தோன்றுகிறது. எந்த மத்தியக் கிழக்கு நாட்டுக்கும் செல்லாமலேயே, அனுமானங்களின் அடிப்படையில் சில அபத்தமான கருத்துகளைக் கூறியிருக்கிறார். அரபகத்தில் சில காலம் தங்கி அங்குள்ள இந்தியத் தொழிலாளர்களின் வாழ்வு நிலையை நுட்பமாகக் கண்ணோட்டமிட்ட நான் சில உண்மைகளை உணர்த்த வேண்டியிருக்கிறது. போலி பாஸ்போர்ட், எமிகிரண்ட்ஸ், விசா இது வழி நுழைகிறவர்கள் கண்டுபிடிக்கப்பட்டுச் சிறையிலடைக்கப்படுகிறார்கள். குறிப்பிட்ட காலத்திற்குப் பிறகு இந்தியத் தூதரகம் தலையிட்டு இவர்களை விடுதலை செய்வித்து நாட்டிற்கு மொத்தமாகத் திருப்பி அனுப்பிவைக்கிறது. இத்தகைய அப்பாவிக

விவாதம்
கண்ணன்  

‘அ. ராவின் எதிர்வினையில் நான் குறிப்பிட்ட சில செய்திகளை அவர் விளக்கிக்கொண்டிருக்கும் விதம் சரியல்ல. பின்நவீனத்துவத்தை மோஸ்தர் பார்வையுடன் காலச்சுவடு இன்று மட்டுமல்ல எப்போதுமே அணுகியதில்லை. அதைக் கண்டு காய்தல் உவத்தல் கொள்வதுமில்லை. ருஷ்யாவில் நிலப்பிரபுத்துவ நிலையிலிருந்து, மார்க்ஸ் அனுமானித்தது போல முதலாளித்துவ நிலைக்கு வராமலேயே, கம்யூனிசப் புரட்சி ஏற்பட்டது போல நவீனத்துவத்தை அடையாமலேயே திமுக பின்நவீனத் துவத்திற்குள் சென்றுவிட்டதோ தெரியவில்லை. அரசியல் ‘துறவி’கள் மாளிகையில் வாழ்வதும், திராவிட அழகிகள் சிகப்பாக இருப்பதும் இப் பின்நவீனத்துவ நிலையின் அடையாளங்களாக இருக்குமோ? காலம்தான் இதைக் கணிக்க வேண்டும். காலச்சுவடு என்னைப் பதிப்பாளர்/ ஆசிரியராகக் கொண