கவிதை
சுகிர்தராணி  

எவரும் பார்வையிடலாம் காட்டிக்கொடுத்தவர்கள் கொன்றவர்கள் கொலைபுரியத் தூண்டியவர்கள் வேடிக்கை பார்த்தவர்கள் நரம்பு புடைக்கக் கொதித்தவர்கள் மௌன சாட்சியாய் நின்றவர்கள் பதினெட்டன்றும் களித்தவர்கள்எங்கேயும் பார்வையிடலாம் குருதி உறைந்த வாய்க்கால்களை மனிதம் வறண்ட வதைக்கூடங்களை பச்சையமற்ற முகாம்களை எவற்றையும் புனரமைக்கலாம் இடிக்கப்பட்ட கட்டடங்களை எரிக்கப்பட்ட குடில்களை குண்டு துளைத்த யன்னல்களை எப்போதும் அஞ்சலி செலுத்தலாம் உயிர் அடங்கியபின் புதைமேடுகளில் புல் முளைத்தபின் கல்லறைகள் சிதைக்கப்பட்டபின்எம்மொழியையும் கதைக்கலாம் அரசிதழின் ஆங்கிலத்தை அரசாளும் இந்தியை நச்சு வடியும் சீனத்தை வெறிப்பால் குடித்த சிங்களத்தை ஆடை கழன்ற செந்தமிழைஎவருக்கும் கம்பளம் விரிக்கலாம் இரத்தத்தில்

கட்டுரை
க. திருநாவுக்கரசு  

‘பேட்டை ரௌடித்தனத்திற்கும் சர்வதேச அரசியலுக்கும் சாராம்சத்தில் வித்தியாசமே கிடையாது. நீதி, நியாயம், தர்மம் என எதுவுமே எடுபடாது, வல்லான் வகுத்தது வாய்க்கால் என்னும் விதி மட்டுமே கோலோச்சும் ஒரே இடம் சர்வதேச அரசியல். எவ்வளவு வலிமை வாய்ந்த மாபியா தாதாவையும் சில சமயங்களிலாவது காவல் துறை, நீதிமன்றங்களின் துணையுடன் தண்டிக்க முடிகிறது. ஆனால் சர்வதேச அரசியலில் அதுவும் சாத்தியமல்ல. ஐநா அவை அமெரிக்காவின் கைப்பாவை. ஐநா பாதுகாப்புக் கவுன் சிலின் மற்ற நான்கு நிரந்தர உறுப்பு நாடுகளைத் தன் வழிக்குக் கொண்டு வருவதில், அதிலும் குறிப்பாக முன்னாள் சோவியத் யூனியனின் மறைவிற்குப் பிறகு, அமெரிக்காவிற்குப் பெரும் சிரமமில்லை. ஐநாவின் அங்கமான சர்வதேச நீதிமன்றம் பல் பிடுங்கப்பட்ட பாம்பு போன்

சிறுகதை
 

நாவலின் தளத்தில் இயங்கும் சிறுகதை புகழ்பெற்ற சர்வதேச எழுத்தாளர்கள் தமது புதிய நாவல்களை வெளியிடும் தறுவாயில் அந்நாவலின் சிறுபகுதியை அல்லது அதன் மையத்திற்கு இணையான ஒரு சம்பவத்தைச் சிறுகதை வடிவில் உருவாக்கி நாவல் வெளிவருவதற்குச் சில மாதங்கள் முன்பாக வெளியிடுவது தற்போது வழக்கமாக இருக்கிறது. சல்மான் ருஷ்டி, கெவின் ப்ராக்மெயர் போன்றோர் தமது சமீபத்திய நாவல்களுக்கு அறிமுகங்கள்போல அந்நாவலின் தளத்திலேயே இயங்கும் சிறுகதைகளை வெளியிட்டுள்ளனர். தற்போது வெளிவந்த பிரபலமான, விவாதத்திற்கு உள்ளாகியிருக்கும் ஓரான் பாமுக்கின் ‘Màveàm of Innocenve’ நாவல் வெளியிடப்படுவதற்கு இரண்டு மாதங்கள் முன்பு இச்சிறுகதை New Yorker (Translated, from the Turkish, by Maureen Freel

கட்டுரை
பிரேம்  

‘காந்தியை ‘மகாத்மா’ எனச் சுட்டுவதற்கு எனது மொழிப்புலன் இடம்தரவில்லை. அதில் உள்ள முரண் என்னை வெறுமையாக்குகிறது. ‘பாப்பு’ என மோகன்தாஸ் கரம்சந்த் காந்தியை அழைப்பதில், சுட்டுவதில் ஒரு இயல்பு நிலையை உணருகிறேன். மகாத்மா என்பதில் உள்ள உயர்தனி நிலை எனக்கு ஏற்புடையதல்ல. பாபாத்மா என்னும் எதிர்நிலையை அது கொண்டிருக்கிறது. காந்திக்கும்கூட அந்த அடையாளம் உவப்பானதாக இருந்ததில்லை. அதை ஒரு தண்டனையாகவே அவர் உணர்ந்திருந்தார். ரவீந்தரநாத் தாகூர் காந்தியை ‘மகாத்மா’ என உறுதிப்படுத்தியதன் பின்னணியில் ஒரு ஏகாதிபத்திய மறுப்பு இருந்தது. காந்தியை இந்திய அரசியலும் மக்களும் மகாத்மா என ஏற்றுக்கொள்ளும் முன்பே இந்த அடையாளம் காந்திக்கு உருவாகியிருந்தது. தென்னாப்ப

 

சாத்துயர் உறுதல் அல்லது பிரிவு ஒற்றைமரத்தின் ஒரே இலை விழுகிறது. சிறுதுண்டு பூமியும் கீழே இல்லை. விழுந்துகொண்டிருக்கிறது. மதிப்பு ஆண்கள் பெண்கள் இருபாலர் உடல்களுக்கு உடல்களின் நீண்ட உறவுக்கு ஒரு கொழுத்த வங்கிக்கணக்கு போதும். சின்ன முத்தங்களே தரமுடியாத உறுதிமொழிகளைக் கேட்கின்றன விலையாக. ஈயென பூத்தூவி நெக்குருகி உளங்கசிந்து கண்ணீர் சோர கரங்கூப்பி நெடுங்கிடையாய் வீழாதே ஏனோ ஐம்புலனும் இல்லை இல்லை என்ற சொல்லுக்கு.ஒழுகுமாடத்தின் கருப்பு வெள்ளை நிறக்குழம்புகள் வழிகின்றன முகத்தின் வளைபரப்பில். தொட்டது தரையைச் சிகப்பின் முதல்துளி.ஆரஞ்சும் மஞ்சளும் அக்குள்களின் வளைவுகளில் தேக்கம்.வயிறெலாம் படர்ந்த பச்சை விரிகிறது புறக்கணிக்கப்பட்டதொரு காட்டில்.விண்ணேகும் நீலம், ஏ

அஞ்சலி
அம்பை  

பிரபல எழுத்தாளர் அனுராதா ரமணன் மே 16 அன்று காலமானார் என்னும் செய்தி பலரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. தொடர்ச்சியாக இல்லாவிட்டாலும் அவ்வப்போது நான் அவருடன் தொடர்பில் இருந்தேன். ஏகப்பட்ட உபாதைகளால் அவஸ்தைப்பட்ட அவர் மருத்துவமனைக்குப் போவதும் வருவதும் சகஜமாக நடைபெறும் ஒன்று. ஒவ்வொரு முறையும் திரும்பி வந்து அதைக் கிண்டலும் கேலியும் கலந்த ஓர் அனுபவமாக எழுதுவார். ஸ்பாரோ சார்பில் அவரைப் பேட்டி கண்டபோது அவர் சுவாரசியமான நபராகத் தெரிந்தார். அக்கால நடிகர் ஆர். பாலசுப்பிரமணியத்தின் பேத்தியான அனுராதாவுக்குக் கலைகளில் நல்ல ஈடுபாடு இருந்தது. கலைக் கல்லூரியில் சேர்ந்து படிப்பை முடிக்கும் முன்னரே திருமணம் ஆயிற்று. அவருடைய திருமணம் ஒரு கசப்பான அனுபவமாகவே இருந்தது என்பதை அவரே எழுதி

கல்வி: கட்டுரை
 

டென்னிஸ், தெ மெனஸ் என்னும் புகழ்பெற்ற கார்ட்டூன் கதாபாத்திரம் (5 வயது), விளையாட்டு ஒன்றைத் தன் தோழனுக்குக் (4 வயது) கற்றுக் கொடுத்துக்கொண்டு சொல்கிறது, “விதிகளை உருவாக்குவது நீயாக இருந்தால், எந்த விளையாட்டிலும் நீ வென்றுவிடலாம்!” இன்றைய இந்தியக் கல்வி அமைப்பையும் அதன் விதிகளையும் இவற்றை உட்கொண்ட கல்விக் கொள்கையையும் உருவாக்கி இயக்கிவருவது இந்நாட்டின் மத்தியதர வர்க்கமும் வசதி படைத்தோரும். அமைப்பும் விதிகளும் கொள்கையும் இந்த வர்க்கங்களின் நலனுக்காக, அவற்றின் ஆதிக்கத்தைத் தொடர்வதற்காக உருவாக்கப்படுபவை. உலகிலேயே மிகக் கொடிய ஏற்றத்தாழ்வுகளும் பாகுபடுத்தலும் கொண்ட கல்வி அமைப்பை இந்தியா வெற்றிகரமாகக் கட்டமைத்திருக்கிறது. யாரோ ஒருவர் சொன்னார், “இந்தியாவி

கல்வி: கட்டுரை
பெருமாள்முருகன்  

கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வந்துள்ள நடுவணரசு வரும் ஆண்டுகளில் இத்திட்டம் முழுமையாக அமலாகும் போது லட்சக்கணக்கான ஆசிரியர்கள் தேவைப்படுவர் எனக் கூறியுள்ளது. இது தொடர்பான கேள்வி ஒன்றிற்குச் சட்டப் பேரவையில் பதிலளித்த தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர், தமிழகத்தில் போதுமான எண்ணிக்கையில் ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களும் கல்வியியல் கல்லூரிகளும் இருப்பதால் தேவைக்கும் அதிகமான ஆசிரியர்கள் கிடைப்பார்கள் என்றும் ஆசிரியர் பற்றாக்குறையே இருக்காது என்றும் தெரிவித்துள்ளார். அவரது கருத்து மிகச் சரி. ஆனால் எத்தகைய ஆசிரியர்கள் கிடைப்பார்கள் என்பதைப் பற்றி அவர் எதுவும் சொல்லவில்லை. ஆசிரியப் பணி புனிதமானது, எழுத்தறிவித்தவன் இறைவன் போன்ற விழுமியக் கட்டமைப்புகள் எல்லாம் தகர்ந்து பொடிப் பொடியாய

கல்வி: கட்டுரை
பிரபஞ்சன்  

பள்ளிக்கூடத்துக்குச் சேர்க்கை விண்ணப்பம் வாங்கப் பெற்றோர்கள் மேற்கொள்ளும் நடவடிக்கைகளின் ஒவ்வொரு அசைவும் பெரும் நகைச்சுவைக்குரியது மட்டுமல்லாமல் நாடகீயமானதும்கூட. நள்ளிரவுக்கு முன் எழுந்து, அடுத்த பிளாட்டுக்குத் தொந்தரவு தராத சத்தத்துடன் தயாராகி, வண்டியை எடுத்துக்கொண்டு அல்லது ஆட்டோ பிடித்து, அதற்கு முன்பே கூடி இருக்கும் சக பெற்றோர் ஜீவிகளைச் சபித்து, தெருவில் கிடக்கும் கல்லை எடுத்து அடையாளத்துக்கு வைத்து, முடிந்தால் கல்லின் பக்கத்திலேயே அமர்ந்து, அல்லது அதில் தலை வைத்துப் படுத்து, விடிந்து ஒன்பது மணிக்கு மேல் விண்ணப்பம் பெற்று வீடு திரும்பி அவசரம் அவசரமாக டாய்லட்டுகளில் நுழையும், அத்தனை அக்கறையுடைய பெற்றோர்கள், குழந்தைகளைப் பள்ளியில் சேர்த்து விட்ட பிறகு, வகுப்புகள

கல்வி: கட்டுரை
 

இயற்கையைப் பராமரிக்க மனிதருக்குக் கற்றுக்கொடுக்க ஒரே வழி அவர்கள் குழந்தைகளாக இருக்கும்போதே அதைச் சொல்லித் தருவதுதான். - நோபல் பரிசு உயிரியலாளர் கான்ராட் லாரன்ஸ். On Life and Living நூலில். எங்கள் வீட்டில் உதவிசெய்யும் பெண்ணின் ஆறு வயதுக் குழந்தை ஒருமுறை நான் ஃபிரிட்ஜைத் திறந்தபோது, அதில் அடுக்கிவைக்கப்பட்டிருந்த முட்டைகளைக் கண்டு ‘முட்டை’ எனக் கத்தினாள். பேச்சுக் கொடுப்பதற்காக ‘முட்டையிலிருந்து என்ன வரும் தெரியுமா?’ என்றேன். ‘தெரியுமே. . . ஆம்லெட்’ என்றாள். குழந்தைகள் இயற்கையிலிருந்து எவ்வளவு அந்நியப்படுத்தப்பட்டு விட்டார்கள் என்று உணர்ந்தேன். அறுந்துபோன இப்பிணைப்பை மீண்டும் உருவாக்க முடியுமா? சூழலியல் கல்வி மூலம் முடியும். .ஐம்பது ஆண

கல்வி: கட்டுரை
கி. நாச்சிமுத்து  

தமிழியல் என்னும் சொல் மொழி இலக்கிய ஆய்வுகளை மட்டுமின்றி வரலாறு, புவியியல், பண்பாடு, சமூகம், மானுடவியல், நாட்டுப் புறவியல் எனப் பல்துறை ஆய்வுகளையும் உள்ளடக்கியது. தமிழ் ஆராய்ச்சியின் வளர்ச்சி என்னும் நூலை எழுதிய ஏ.வி. சுப்பிரமணிய அய்யர் தற்காலத் தமிழ் ஆராய்ச்சியின் வரலாற்றை கால்டுவெல்லின் ஒப்பிலக்கண நூல் வெளிவந்த 1856இலிருந்து தொடங்கி 25 ஆண்டுகளுக்கு ஒரு கட்டமாக நான்கு கட்டங்களைக் குறிப்பிடுவார். நான்காம் கட்டம் முடிகிற 1956இலிருந்து தமிழ் ஆராய்ச்சி விரிவுபெறுகிறது. தமிழ் ஆராய்ச்சி என்பது வெறும் தமிழர்கள் செய்கிற ஆராய்ச்சியாக மட்டும் இல்லாமல் உலகளாவிய அறிஞர் கூட்டத்தின் கவனத்தைப் பெறுகிற பன்னாட்டு ஆராய்ச்சியாக வளர்ச்சிபெறுகிறது. இதன் வடிவம்தான் 1964இல் உருவான உலகத் தமிழா

கல்வி: கட்டுரை
அனிருத்தன் வாசுதேவன்  

“வாழ்க்கையை முன்கூட்டி மதிப்பிட உதவும் கலை என்று கல்வியைச் சொல்லலாம். மதிப்பிடல் மூலம் வாழ்க்கையை எதிர்கொள்வதும் மாறிவரும் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு நம் சமன்நிலையைக் காப்பாற்றிக்கொள்வதும் சாத்தியமாகிறது. ஆனால் இன்றைய கல்வி மூலம் நம் வாழ்க்கையைப் புரிந்துகொள்ள முடிகிறதா?” - சுந்தர ராமசாமி, “சுய கல்வியைத் தேடி,” ஆளுமைகள் மதிப்பீடுகள், காலச்சுவடு, திசம்பர் 2004. கல்வி பற்றிப் பேசவும் சிந்திக்கவும் எவ்வளவோ உண்டு. இன்றைய கல்வி முறை பற்றியும் அதன் வியாபார நோக்கு குறித்தும், “பாடப்புத்தகங்கள் முன்வைக்கும் முடிவுகளை அப்படியே விழுங்குவது,” (சு.ரா. “சுய கல்வியைத் தேடி”) என்ற நிலை குறித்தும் சிந்திக்க நிறைய உள்ளன. நடைமுறைகளையும

மதிப்புரை
பக்தவத்சல பாரதி  

இலங்கையில் கல்வியும் இன உறவும் கௌரி சண்முகலிங்கன் விலை: ரூ. 450/- பக்கம்: 162 குமரன் புத்தக இல்லம் 361, 1/2 டாம் வீதி, கொழும்பு 12. 3 மெய்கை விநாயகர் தெரு, குமரன் காலனி, வடபழனி, சென்னை 600 026 இலங்கையில் கடந்த காலங்களில் செயல்பட்டுவந்துள்ள இனமுரண் வரலாறும் இனமேலாதிக்க அரசியலும் வெவ்வேறு நோக்கு நிலைகளில் ஆராயப்பெற்றுள்ளன. இவற்றில் கல்வியியல் புலம் சார்ந்தும் உயராய்வு கற்கை நெறிக்குட்பட்டும் மேற்கொள்ளப்பட்ட முழுமை நோக்கிய ஆய்வுகள் மிகவும் குறைவு. மேலும் அரசியல், சமூக, வரலாறு தவிர்த்த ஆய்வுகள் மிகக் குறைவாகவே உள்ளன. பன்மைச் சூழல் கொண்ட இலங்கையின் இனத்துவ வரலாற்றில் காலனியக் காலந்தொட்டு கல்விவழிக் கட்டமைக்கப்பட்ட இனமுரண் உறவுகள் தனித்த, கூர்மையான பார்வைக் குரிய

விவாதம்
 

ஒரு கடிதம் மே மாதம் காலச்சுவடு இதழில், உங்கள் கட்டுரையை (“எது கருத்துச் சுதந்திரம்”?) படித்தேன். உங்களை என்ன சொல்லிப் பாராட்டுவது? கருத்துச் சுதந்திரம் குறித்த உங்கள் விளக்கவுரையைப் படித்து மெய்சிலிர்த்துப் போனேன். அந்தக் கட்டுரை குறித்துச் சில ஐயங்கள் எனக்கிருப்பதால், அதைத் தெளிவுபடுத்திக்கொள்ளவே, உங்களுக்கு இந்தக் கடிதம். லீனாவின் அந்த “இரண்டு கவிதைகளே” அனைத்து விவாதங்களுக்குமான மூலம் என்பதால், அந்தக் கவிதைகள் குறித்த உங்களின் கருத்தைத் தெளிவாக்கியிருந்தால் மகிழ்ந்திருப்போம். ஆனால் இந்தப் பிரச்சினை அ. மார்க்ஸை அவதூறு செய்வதற்கு உங்களுக்குப் பயன்பட்டிருக்கிறது என்பதன் மூலம், நீங்கள் பெண் கவிகளின் மீது வைத்துள்ள மரியாதையைக் காட்டிவிடுகிறது. கருத

பதிவுகள்
 

எண்ணற்ற ஜீவமரணப் போராட்டங்களையும் ரகசியங்களையும் விந்தைகளையும் உயிர் இயக்கமாகக்கொண்டிருக்கும் காடுகளும் தாவரங்களும் பறவைகளும் உயிரினங்களும் அடர்ந்த சூழல் முருகபூபதிக்கு அரங்கிற்கான களமாகிறது. வனங்களின் மொழியை அறிந்த, அன்பையும் கண்ணீரையும் நேசிக்கத் தெரிந்த கலையின் அடிமைகளான கோமாளிகளே அவரது நாடகத்தில் நிலமாகிறார்கள். அங்கு உயிரினங்களின் ஜீவமரணப் போராட்டத்தில் சிதறியடிக்கப்படும் தானிய வித்துக்கள் உயிர்ப்புக் கதைகளின் ஊற்றுகளைத் திறந்துவிடவும் மரண கீதத்தின் இசையைப் பரப்பவும் காத்திருக்கின்றன. கதை களையும் பாட்டிசையையும் உள்வாங்கிக்கொண்ட எண்ணற்ற கதைசொல்லிகள் இடம்பெயர்ந்தபடி இருக்கிறார்கள். அந்த நாடோடிகளின் கதையாடல்களையே முருகபூபதி தன்னுடைய அரங்கத்தின் வடிவமாக மாற்றுகிறார

தலையங்கம்
 

‘ஏறத்தாழ 20,000 உயிர்களைப் பலி வாங்கிய, ஐந்து லட்சத்திற்கும் அதிகமான அப்பாவி மக்களை நிரந்தரமாக ஊனப்படுத்திய போபால் விஷவாயு வழக்கின் மீது 25 ஆண்டுகளுக்குப் பிறகு வழங்கப்பட்டிருக்கிற தீர்ப்பு, ஆட்சியாளர்கள், சட்டம், நீதி அமைப்புகளின் மீதான நம்பிக்கையை அடியோடு தகர்த்திருக்கிறது. 1984ஆம் ஆண்டு டிசம்பர் இரண்டாம் தேதி மத்தியப் பிரதேசத் தலைநகர் போபாலில் உள்ள யூனியன் கார்பைடு ரசாயன ஆலையின் கொள்கலன்களில் ஏற்பட்ட கோளாறு காரணமாக அவற்றிலிருந்து மிதேல் ஐஸோ சைனைடு என்னும் கொடிய ரசாயன வாயு வெளியேறியது. 40டன் எடையுள்ள இந்தக் கொடிய விஷ வாயு போபால் நகரத்தின் மீது பரவத் தொடங்கிய சில மணிநேரங்களுக்குள் 5,295பேர் உடனடியாகவும் அடுத்த ஓரிரு மாதங்களுக்குள் பத்தாயிரத்திற்கு மேற்பட்டோ

 

‘லாபகரமான மௌனம்’ தலையங்கம், ‘நேர்மை உறங்கும் நேரத்தில் விழிப்புணர்வு தருகிறது. போலி மனித யுகத்தில், போலி மருத்துவர், போலி மருந்து, போலி உணவு, போலிக் கல்விக்கூடங்கள், போலிச் சாமியார்கள், போலி அதிகாரிகள் என்னும் பட்டியல் அதிகரிப்பது இயல்பாக இருக்கலாம். எறும்பு ஊர்வது தெரியாவிடினும், யானை போவதுகூடத் தெரியாவிட்டால், வரும்முன் காக்கும் திறன் சோதனைக்கு உள்ளாகிறது. சுயமரியாதைச் சிந்தனை விளைவித்த பகுத்தறிவுப் புரட்சிக்குப் பின்னரும் உழைக்காமல் உண்ணுபவர்களும் உரிமையற்றவற்றுக்குக் கை நீட்டுபவர்களும் அதிகரித்து, அப்பாவிகளின் வாழ்வாதாரத்தைச் சேதப்படுத்துவது போன்ற அவலங்களைப் பெரும்பாலான தமிழ் அச்சு, காட்சிவழி ஊடகங்கள் கண்டுகொள்ளாதிருப்பதைச் சுட்டிக்காட்டியி