கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

முதலில் சில உண்மைகளைப் பகிர்ந்துகொள்கிறேன். நான் கால்பந்தாட்டத்தின் முழுமையான ரசிகன் அல்ல. ஆனால் உலகமயமாக்கப்பட்டுவிட்ட இவ்விளையாட்டின் அரசியல், கலாச்சார விளைவுகளை வெகுநாட்களாகவே அவதானித்துவந்திருக்கிறேன். இந்தக் கட்டுரையில் தற்போது தென்னாப்பிரிக்காவில் நடந்த உலகக் கோப்பைக்கான ஆட்டங்களைப் பற்றிய வர்ணனை கொஞ்சம் குறைவாகத்தான் இருக்கும். 19ஆம் உலகக் கோப்பையின் அறுபதுக்கும் மேற்பட்ட ஆட்டங்களை நான் முழுமையாகப் பார்த்தேன் என நெஞ்சில் கைவைத்துச் சொல்லமாட்டேன். நேரம் ஒதுக்கி நான் பார்த்த சில ஆட்டங்களும் எனக்கு ஏமாற்றமளித்தன. அவற்றில் ஒன்று பிரேசிலுக்கும் போர்ச்சுக்கலுக்கும் இடையே நடந்த ஆட்டம். இந்த இரு அணிகளிலும் இன்றைய நிலவரப்படி இவ்விளையாட்டின் பெரும் சூரர்கள் எனக் க

நேர்காணல்
அநாமதேயன்  

அண்மையில் தனது சொந்த அலுவலொன்றின் நிமித்தம் கொழும்பு வந்திருந்த அநாமதேயனைத் தற்செயலாகச் சந்தித்தவேளை யாழ்ப்பாண நிலவரம் குறித்துக் கலந்துரையாடியபோது அவர் தெரிவித்திருந்த கருத்துகளை இங்கே தொகுத்துத் தருகிறேன். - முத்துராசரத்தினம் யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலைமை எப்படி இருக்கிறது? எது நடக்கிறதோ அது நன்றாகவே நடக்கிறது! 24 மணிநேரமும் ஏ-9 வீதியூடாக எவரும் பயணிக்க முடியும். யாழ்ப்பாணத்திலிருந்து தென்னிலங்கையின் எந்த மூலைக்கும் எந்த நேரத்திலும் எவரும் சென்று திரும்ப வசதியாகப் பேருந்து, மகிழுந்து வசதிகள் இருக்கின்றன. தென்னிலங்கையிலிருந்து நல்லூர் கந்தசுவாமி கோவிலுக்கும் ஆரியக்குளத்து நாகவிகாரைக்கும் பக்தர்கள் வந்து குவிகிறார்கள். உல்லாசப் பயணத்தலம் போன்றிருக்கிறது யாழ்ப்பா

சிறுகதை
 

கங்காராம் பற்றி சீனுவாசன் சொன்னது எனக்குச் சரியாகப் புரியாது போனாலும் கங்காராம் ஏதோ சிக்கலில் மாட்டிக்கொள்வான் என்று மட்டும் தெரிந்தது. சீனுவாசன் என்னுடன் ஒன்பதாவது வகுப்பில் படிப்பவன். அவன் முந்தைய வருடமும் ஒன்பதாவது வகுப்பில்தான் இருந்திருக்கிறான். ஆனால் இறுதிப் பரிட்சை பாஸ் செய்யவில்லை. கங்காராம் எங்கள் பள்ளிக்கூடத்தின் வாட்ச்மென், காவல்காரன். ஐந்து பிரம்மாண்டமான கட்டடங்கள், நிறைய வெற்றிடம் உள்ள எங்கள் பள்ளியை மாலை ஐந்து மணியிலிருந்து அடுத்த நாள் காலை ஒன்பதரை மணிவரை காவல் காப்பவன். அதையே அவ்வளவு பெரிய பள்ளிக்கு மாலையிலிருந்து காலைவரை ஒரே மன்னனாக இருப்பவன் என்றும் சொல்லலாம். ஊரிலேயே எங்கள் பள்ளிதான் மிகப் பெரியது. ஏறத்தாழ ஆயிரம் மாணவர்களும் எழுபது ஆசிரியர்களும் உடையது

பத்தி
கண்ணன்  

இஸ்தான்புல் இஸ்தான்புல் நகரத்திற்குக் கடந்த ஆண்டு ஒரு கருத்தரங்கிற்காகச் சென்றிருந்தேன். அங்கிருந்தது மூன்றே நாட்கள். துருக்கி நாடும் இஸ்தான்புல் நகரமும் நமக்கு இன்னுமொரு நாடும் நகரமும் அல்ல. நம் வரலாற்றோடு பிணைந்தவை. இஸ்லாமின் வருகையும் அதன்வழி ஏற்பட்ட பண்பாட்டுக் கலவையின் -குறிப்பாக இசை, கட்டடவியல், கவிதை, உடை, மதம், அறிவியல், தத்துவ இணைவும் மோதலும் - தொடக்கம் துருக்கியர்கள். அந்நாட்டுக்குச் செல்வோம் என நினைத்ததில்லை. மிகுந்த எதிர்பார்ப்புடன் சென்று எதிர்பார்ப்புக்கு ஈடுகொடுத்து விஞ்சி நின்றது இஸ்தான்புல். ஏற்பட்ட உற்சாகத்தில் மூன்று நாட்கள் கிட்டத்தட்ட தூங்கவேயில்லை. இஸ்தான்புல் நகரம் பாதி ஆசியாவிலும் பாதி ஐரோப்பாவிலும் இருக்கிறது. இடையே கருங் கடலையும் மத்தியதரைக

 

கரிக்கும் பெண் கரிக்கும் பெண்ணுக்குத் தன் காதலைச் சொல்லத் தெரியவில்லை உன்னத இசையிலிருந்தும் மகா உன்னதக் காவியங்களிலிருந்தும் கற்றுக்கொண்ட வார்த்தைகளென்று எதுவும் அவள் கைவசமில்லை பாறையிடுக்குகளில் பதுங்கியிருக்கும் பண்டாரங்களின் பார்வையில் பிரசன்னமாகக்கூடும் அது என்று மட்டுமே வர்ணிக்கத் தெரிந்த அவள் உழக்கினுள் சேகரமான விதையாய் கழுத்தையுயர்த்தி உன்னை முத்தமிடும் பொழுதுகளில் தன்னுள் துடித்துக்கொண்டிருக்கும் உயிரின் ஆர்ப்பரிப்பையே உனக்குள் கடத்திவிடத் தன் குதிகாலில் எழும்பி நிற்கிறாள் ஸ்தனங்களின் தொடுவிசையில் திறக்கும் உதடுகளின் பிளவிலிருந்து நீ உறிஞ்சியெடுத்துக்கொள்வதெல்லாம் உனக்கான இன்னொரு முத்தத்தை மட்டுமேயென்றும் குறைபட்டுக்கொள்கிறாள் (என்னுள் நீ இறங்கும்போது கர்த்த

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
தேவிபாரதி  

கோவையில் கடந்த ஜூன் 23 தொடங்கி 27 வரை நடந்து முடிந்த முதலாவது உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு முதல்வரும் திமுக தலைவருமான கருணாநிதியைப் பொறுத்தவரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வு என்பதில் சந்தேகமில்லை. ஏறத்தாழ 370 கோடி ரூபாய் செலவில் மிக ஆடம்பரமாக நடத்தப்பட்ட இம்மாநாடு தமிழக மக்களுக்கும் திமுகவினருக்கும் ஒரு முக்கியமான செய்தியைச் சொல்லியிருக்கிறது. ஆட்சியிலும் கட்சியிலும் உச்ச அதிகாரம் பெற்றவர்களாகக் கருணாநிதியும் அவரது குடும்ப உறுப்பினர்களுமே நீடித்திருக்க முடியும் என்பதுதான் அது. திமுகவினர் இந்த உண்மையைச் சில பத்தாண்டுகளுக்கு முன்னரே ஏற்றுக்கொண்டுவிட்டனர். கருணாநிதி குடும்பத்தினரின் இந்த மேலாண்மையைத் தமிழக மக்களை, குறிப்பாக வாக்காளர்களை, ஏற்றுக்கொள்ளச் செய்வது

க. பூர்ணச்சந்திரன்  

கோவையில் ஐந்து நாள் திருவிழாவாகச் செம்மொழி மாநாடு நடந்தேயிருக்கிறது. இந்த மாநாடு எப்படி நடைபெறும் என்பது பற்றி முன்னமே நிச்சயமாகத் தெரிந்துவிட்டது. எட்டு உலகத் தமிழ் மாநாடுகளில், தமிழகத்தில் நிகழ்ந்த மூன்று மாநாடுகள் எப்படி நிகழ்ந்தன என்பதைத்தான் நாம் பார்த்திருக்கிறோமே! உலகத் தமிழ் மாநாடுகள் போகட்டும், பல்வேறு பல்கலைக்கழகங்களிலும் கல்லு£ரிகளிலும் பல பத்தாண்டுகளாக நிகழ்ந்துவரும் ஆய்வரங்கங்களும் கருத்தரங்கங்களும் தமிழ் வளர என்ன செய்திருக்கின்றன? பெரும்பாலான தமிழ் ஆசிரியர்களுக்கே சரிவரத் தமிழ் தெரியாது என்பதுதான் இன்றைய நிலை. அப்படியிருக்க இந்தத் திருவிழா மட்டும் என்ன செய்துவிடப்போகிறது? இதனால்தான் எனக்கு இந்தச் செம்மொழி மாநாட்டில் பங்கேற்க மனமில்லை. இதைவிட மு

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
சந்தர் டி ராஜ்  

நீங்கள் உண்மையிலேயே தமிழ் மொழியின் மீதும் தமிழ் இனத்தின் மீதும் அக்கறை உள்ளவராயின், இந்தக் கட்டுரையை வாசிக்கும்முன் என்னுடைய இரு கோரிக்கைகளை நீங்கள் ஏற்க வேண்டும்: 1. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டைத் தொடர்புபடுத்தித் தமிழக முதல்வர் மு. கருணாநிதியை இனித் திட்டாதீர்கள். 2. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஒரு குறுகிய கண்ணோட்டத்துடனும் முன்முடிவுடனும் அணுகாதீர்கள். யார் மறுத்தாலும், இந்த மாநாடு தமிழ் மக்கள் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு நிகழ்வு. ஏனென்றால், சமகாலத் தமிழ்ச் சமூகத்தின் உளவியலையும் உலகின் மிக விசித்திரமான - அதேசமயம் மிகச் சாதுர்யமான கூறுகளையும் கொண்ட ஒரு சமூகமாகத் தமிழ்ச் சமூகம் மாறிக்கொண்டிருப்பதையும் இந்த மாநாடு தெள்ளத்தெளிவாக உணர்த்துகிறது. யோசி

உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
ரோஜா  

ஒரு பேரழகியை மணந்தவன் -ஆனால் கையாலாகாதவன் - என்ன செய்வான்? தமிழகத்தில் தமிழ் நாளிதழ்களின் நிலை உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின்போது அப்படித்தான் இருந்தது. தமிழக வார இதழ்கள் மாநாட்டுச் செய்திகள் தொடர்பான ஓரிரு கட்டுரைகளோடும் புலனாய்வு இதழ்கள் மாநாட்டு அரசியல் கிசுகிசு தொடர்பான ஓரிரு கட்டுரைகளோடும் தங்கள் மாநாட்டுப் பணியை முடித்துக்கொண்டன. ஆனால் நாளிதழ்களால் அப்படி முடியவில்லை. (வாங்கும் விளம்பரக் கூலிக்காவது மாரடிக்க வேண்டும் அல்லவா?) ஆகையால், ‘சிறப்பு மலர்’களுடன் ‘சிறப்புச் செய்தி’களை வெளியிட்டன. எத்தனையோ கூத்துகளுக்கு மத்தியிலும் இந்த மாநாட்டில் பத்திரிகைகள் எழுத நிறைய விஷயங்கள் இருந்தன. ஆனால் தமிழ்ப் பத்திரிகையாளர்களுக்குத் திராணியில்லை. திர

கட்டுரை
சு. தியடோர் பாஸ்கரன்  

சில ஆண்டுகளுக்குமுன் மா. கிருஷ்ணனின் கோட்டோவியங்களைத் தேடிச் சேகரித்துக்கொண்டிருந்தபோது அவர் தீட்டிய சித்திரங்கள் சில அடங்கிய சிறு புத்தகம் ஒன்று நண்பர் சுப்ரமணியம் மூலம் எனக்குக் கிடைத்தது. பிள்ளை மொழி எனும் இந்நூல் 1945இல் சென்னையிலுள்ள அஆ பதிப்பகத்தாரால் வெளியிடப்பட்டது. பார்த்தவுடனே தமிழ்ச் சிறார் இலக்கியத்திற்கு இது அருமையான பங்களிப்பு என்று தெரிந்தது. பாக்யம் சங்கர் என்ற பள்ளி ஆசிரியை எழுதிய, குழந்தைகளுக்கான பாடல்கள் அடங்கிய தொகுப்பு. அதிலுள்ள முப்பத்திரெண்டு பாடல்களுக்கு மா. கிருஷ்ணன் படங்கள் தீட்டியிருந்தார். பின்னட்டை ஓவியம், அட்டைப்படம் இரண்டையும் சேர்த்து முப்பத்திநான்கு ஓவியங்கள். எல்லாமே இன்டியன் இங்க்கால் வரையப்பட்டவை. அண்மையில் சிறார் இலக்கியம் பற்றிப் ப

கட்டுரை
பி.ஏ. கிருஷ்ணன்  

“நான் இந்தப் பக்கங்களில் கூறியிருக்கும் நிகழ்வுகள் பன்னிரெண்டு, பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்னால், ராணுவ அதிகாரி ஒருவரால் என்னிடம் கூறப்பட்டவை. அவர் நிகழ்வுகளை நேரில் பார்த்தவர். என்னிடம் அவர் சொன்னது இது: ‘உன்னால் இந்த உண்மைக் கதையை உலகத்திற்குச் சொல்ல முடியும். என்னால் முடியாது.’ ” இது கோர்லே என்னும் ஆங்கிலேயர் எழுதிய புத்தகத்தின் தொடக்கம். இந்தப் புத்தகம் 1813இல் எழுதப்பட்டது. மருது பாண்டியரின் கதையைச் சொல்வது. (எனக்குத் தெரிந்த அளவில்) வரலாற்று ஆசிரியர்களின் பார்வையில் இன்றுவரைக்கும் படாதது. பதிப்பாளர் அகப்படாததால் (அல்லது பதிப்பிக்க மறுத்ததால்) அவராலேயே பதிப்பிக்கப்பட்டது. புத்தகத்தின் பெயர்: Mahradu- An Indian Story of the Beginning of the

கட்டுரை
சுகுமாரன்  

வெட்டப்படும்போது மரம் கண்ணீர் சிந்துகிறது. துன்புறுத்தப்படும்போது நாய் ஊளையிடுகிறது. அவமானப்படுத்தப்படும்போது மனிதன் பக்குவப்படுகிறான். - ஜோசே சரமாகுவின் யேசு எழுதின சுவிசேஷம் இருவரும் வெவ்வேறு ஆளுமைகள். இருவரின் பின்புலங்களும் வேறுபட்டவை. எனினும் ஜோசே சரமாகு என்ற போர்த்துக்கீசிய எழுத்தாளரைக் கொலம்பிய எழுத்தாளரான காப்ரியேல் கார்சியா மார்க்கேஸுடன் தொடர்ந்து ஒப்பிட்டுவந்திருக்கிறேன். இந்த ஒப்பீட்டுக்குத் தர்க்க அடிப்படையிலான காரணம் கூறுவது எளிதல்ல. இலக்கிய வேட்கையுடன் இருவரையும் பின்தொடரும் ஆர்வலனின் வாசிப்பு நெருக்கம் அல்லது வாசகக் கிறுக்கு இந்த ஒப்பீட்டுக்கு அடிப்படை. கடந்த முப்பது ஆண்டுகளில் நோபெல் விருது பெற்ற இலக்கியக் கலைஞர்களில் மார்க்கேஸுக்கு இணையானவர் ய

திறந்தவெளி
வெளி ரங்கராஜன்  

கடந்த 21.6.2010 அன்று சென்னை ஓவியக் கல்லூரி முதுகலை முதலாண்டு மாணவர் சசிகுமார் கல்லூரி வளாகத்துக்குள் மரமொன்றில் தூக்கிலிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். சில மாதங்களாகவே அக்கல்லூரி வளாகம் ஒரு பதற்றமான சூழ்நிலையில் இருந்துவந்தது. மதுரையைச் சேர்ந்த எளிய குடும்பத்தில் பிறந்த கிராமப்புற மாணவர் சசிகுமார் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில் 1,330 திருக்குறள்களையும் சுடுமண் சிற்பங்களாகச் செய்து காட்சிப்படுத்தும் கனவை நிறைவேற்றக் கடந்த ஒரு வருடமாகவே அதற்கான முனைப்போடிருந்தார். யாழ் நூலகம் எரிக்கப்பட்டுத் தமிழின் தொன்மை இலக்கியச் செல்வங்கள் தீக்கிரையானது அவர் மனத்தில் ஆழ்ந்த பாதிப்பை ஏற்படுத்தி, தீயால் சிதைக்க முடியாத சுடுமண் ஓவியப் பதிவுகளை உருவாக்க எண்ணி இரவு பகல் பாராது கடும்

திரை
செல்லப்பா  

கடவுளால் பிரியும் கிராமம் காதலால் ஒன்று சேர்கிறது என ஒரு சில வார்த்தைகளில் களவாணியின் கதையை எழுதிவிடலாம். ஆனால் உற்சாகமான அதன் பயணம் பலம் மிகுந்த திரைக் கதையால்தான் சாத்தியமாகிறது. சிவபெருமானின் முழு உருவச் சிலையின் காரணமாகப் பிளவுபட்டு நிற்கின்றன அரசனூரும் ராணி மங்கலமும். களவாணி - அறிக்கி எனும் அறிவழகன் - அரசனூரைச் சார்ந்தவன். மகேஷ்வரி ராணிமங்கலத்தைச் சார்ந்தவள். இருவரது ஊர்ப் பெயர்களையும் வாசியுங்கள் சின்ன விஷயத்திற்கும் மெனக்கெட்டிருப்பது புரியும். படிப்பதற்காக ஊர்விட்டு ஊர் வரும் அவள் படிப்பை விட்டுவிட்டு ஊர்ச் சுற்றுபவனைக் காதலிக்க நேர்கிறது. மகேஷ்வரியின் தந்தை உள்ளூரில் விதை நெல் விற்பவர். அறிக்கியின் அப்பா துபாயில் சம்பாதிப்பவர். நாயகனுக்குப் பள்ளியில் படித்துக்கொண்ட

கட்டுரை
கே.என். செந்தில்  

“பரந்து விரிஞ்ச கடல்ல பயணம் பண்ணும்போது ஆண்டவா. . . ஒன்னட கடல் எவ்வளவு பெருசு, நாங்க எவ்வளவு சிறுசுன்னு நெனைக்க வைக்குது” (பக்.767) தமிழில் கவிதைக்கு மிக நீண்ட மரபும் அது அளித்த பெருங்கொடைபோல இதிகாசங்களும் காப்பியங்களும் சங்கப்பாக்களுமாக நம் மொழி நிகரற்ற செல்வத்தைக் கொண்டுள்ளது. அது இன்றைய கவிஞனுக்குக் கடும் சவாலையும் அதே சமயம் அதிலுள்ள சொற்களின் வளமை தன் கவிதையியலைச் சாதகமான திசையை நோக்கி நகர்த்தும் ஆற்றலையும் அவனுக்கு வழங்குகிறது. ஆனால் எப்போதும் கவிஞனின் மனம் நவீனமானது. அதனால்தான் உலகக் கவிதைகளோடு ஒரு உரையாடலை எத்தருணத்திலும் அவனது கவிதைகளால் நிகழ்த்த முடிகிறது. ஆனால் மிகச் சமீபத்தில் மேற்கிலிருந்து இங்கு வந்துசேர்ந்துள்ள கலைவடிவங்கள் நாவலும் சிறுகதையு

 

எதிர்வினை: பொருளாதாரக் கொள்கையும் கல்வி நடைமுறையும் எதிர்வினை: மையநீரோட்டத்திலிருந்து விலகிய செறிவான சிந்தனைகள் எதிர்வினை: ‘மகாத்மா’வைக் குறித்து எதிர்வினை: ஆளும்வர்க்கங்களை மறுத்து எழுந்த சபை எதிர்வினை: வெறுப்பின் உச்சத்தில் அடிபடும் அறிவுத்திறன் எதிர்வினை: தந்தைமையின் உருவகம்

பதிவு: நூல் வெளியீட்டு விழா
கண்ணன்  

ஜூன் மாதம் 5ஆம் தேதி மதுரை சத்திரப்பட்டியிலுள்ள செசி மையத்தில், அகிம்சை அமைதிக்கான அனைத்துலக காந்திய நிறுவனத்தில், காலச்சுவடு பதிப்பகத்தின் இரண்டு நூல்களை வெளியிடும் நிகழ்வு நடந்தது. வ. உ. சி. யின் ‘திலக மகரிஷி’ (பதிப்பாசிரியர்: ஆ.இரா. வேங்கடாசலபதி) மற்றும் தரம்பாலின் ‘காந்தியை அறிதல்’ (தமிழில்: ஜனகப்ரியா). ஜூன் 5, உலகச் சுற்றுச்சூழல் தினம் என்பது காந்தி பற்றிய நூல் வெளியீட்டிற்குக் கூடுதல் பொருத்தமாக அமைந்தது. அன்றைய தினம் காலை மதுரைக்குச் சுமார் 20 கி.மீ. தொலைவிலுள்ள செசி மையத்தில் காந்திய ஆர்வலர்கள், இலக்கிய நண்பர்கள் எனப் பலரும் வருகை தந்தார்கள். சுமார் 75 நண்பர்கள் முன்னிலையில், மிக அமைதியான சூழலில் நிகழ்வு ஒரு சிறிய அரங்கில¢ துவங்கியது.

பதிவு: எட்டு ஈழ நூல்கள் வெளியீட்டு விழா
 

நான்காம்கட்ட ஈழப்போரின் முடிவு உலகெங்கிலும் வாழும் தமிழர்களின் மனதில் தீராத கசப்பை மூளச்செய்துள்ளது. சிங்களப் பேரினவாதிகளின் ஒடுக்குமுறைக்கெதிராக அரைநூற்றாண்டுக்கு மேல் போராடிவரும் ஈழத் தமிழர்கள் தம் வாழ்வுரிமையும் அரசியல் உரிமையையும் பற்றிய கனவுகளை முற்றாக இழந்து பேரினவாதிகளால் ஆக்கிரமிக்கப்பட்ட தெருக்களில் இரந்துண்ணும் வாழ்வைத் தவிர தேர்ந்தெடுப்பதற்கு வேறெதுவுமற்றவர்களாக அலைந்து திரிகிறார்கள். தோற்கடிக்கப்பட்ட மக்களின் நிலங்கள் ஆக்கிரமிக்கப்படுகின்றன. தோற்கடிக்கப்பட்ட மக்களின் வீடுகள் தீக்கிரையாக்கப்படுகின்றன. தோற்கடிக்கப்பட்ட பெண்கள் பாலியல் வல்லுறவுகளுக்குட்படுத்தப்படுகிறார்கள். தோற்கடிக்கப்பட்ட குழந்தைகள் கொல்லப்படுகிறார்கள். தோற்கடிக்கப்பட்ட இளைஞர்கள் காயடிக்

பதிவு: இயல் விருது 2009
 

தமிழ் இலக்கியச் சூழலில் விருதுகள் எப்போதும் சர்ச்சைக்குரியவையாகவே இருக்கின்றன. வழங்கப்படும் விருதுகள், பெறப்படும் விருதுகள் எனச் சிலரால் சிலாகிக்கப்படுவதும் பலரால் புறக்கணிக்கப்படுவதுமாக விருதுகள் இருந்தாலும் தகுதியானவர்களுக்கு அவை கிடைக்கையில் மகிழ்வைத் தருகின்றன. கனேடியத் தமிழ் இலக்கியத் தோட்ட விருதான இயல் விருது ஒவ்வொரு ஆண்டும் ஒருவரின் வாழ்நாள் இலக்கியப் படைப்பு, ஆய்வுப் பணிகளுக்காகக் கொடுக்கப்படுகிறது. இவ்வாண்டு கோவை ஞானிக்கும் ஐராவதம் மகாதேவனுக்கும் வழங்கப்பட்டது. வழக்கமாகக் கனடாவில் நிகழும் விருதளிப்பு விழா, இம்முறை விருது பெற்ற இருவரின் உடல்நலம் காரணமாகச் சென்னையிலேயே நடந்தது. இது ஒருவகையில் தகுதிமிக்க ஆளுமைகளை அவர்களின் இடத்திற்கே வந்து சிறப்பிக்கும் விதமாக இர

பதிவு
 

2010 ஆண்டு தமிழ்க் கணிமைக்கான சுந்தர ராமசாமி விருது தமிழ் லினக்ஸ் கேடிஈ குழுவினருக்கு அளிக்கப்படுகிறது. 2007ஆம் ஆண்டு தொடக்கம் டொராண்டோ தமிழ் இலக்கியத் தோட்டமும் காலச்சுவடு அறக்கட்டளையும் இணைந்து தமிழ்க் கணிமைக்கான முக்கியப் பங்களிப்பிற்காக இவ்விருதை வழங்குகின்றன. தமிழ்க் கணினி வரலாற்றில் 2001ஆம் ஆண்டில் கேடிஈயின் (KDE) முதல் வெளியீடு ஒரு முக்கிய நிகழ்வாகும். பல தன்னார்வலர்களின் பங்களிப்புடன் 2002ஆம் ஆண்டில் தென்னாசிய மொழிகளிலேயே முதன் முறையாகத் தமிழில் முழுமையான இடைமுகம் (interface) கொண்ட பயனுக்கேற்ற தமிழ்க் கணினி வெளியானது. இதன் மூலம் கணினியைப் பயன்படுத்த ஆங்கிலம் தெரிந்திருக்க வேண்டும் என்ற தடை ஓரளவிற்கேனும் நீக்கப்பட்டது. கோப்புகள் எழுதுதல், இணையம் உலாவல், மின்னஞ

நெய்தல் விருதுகள்
 

அரை நூற்றாண்டுக் காலத்திற்கும் மேலாகத் தமிழ்ச் சூழலின் தரத்தை மேம்படுத்துவது பற்றிப் பேசியும் எழுதியும்வந்தவர் சுந்தர ராமசாமி. அவர் நினைவாக ஆண்டுதோறும் இளம் படைப்பாளி ஒருவருக்கு விருதளிக்க நெய்தல் இலக்கிய அமைப்பு முடிவுசெய்து, 2007ஆம் ஆண்டு கண்மணி குணசேகரனுக்கும் 2008ஆம் ஆண்டு பிரான்சிஸ் கிருபாவுக்கும் 2009ஆம் ஆண்டு எஸ். செந்தில்குமாருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இலக்கியத்தின் ஏதேனும் ஒரு வகைமையிலோ ஒன்றுக்கு மேற்பட்ட வகைமைகளிலோ முக்கியமான பங்களித்துவரும் இளம் படைப்பாளி ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படுகிறது. இவ்வாண்டிலிருந்து ‘படைப்பு’ என்பது விமர்சனம், ஆய்வு, பதிப்புப்பணிகளையும் உள்ளடக்கியதாகக் கருதப்படும். நாற்பது வயதுக்கு உட்பட்டவர்கள் இவ்விருதுக்குப் ப

 

போபால் பாழ் நிலத்தின் கண்ணீர் எனும் தலையங்கம் படித்தேன். மக்கள் நலத்தில் கரிசனமுள்ள சில பத்திரிகைகள் “இது ஒரு மரணம் பரப்பும் கம்பெனி இதை இந்தியாவிலிருக்கவிட்டால் பெரும் விபத்துகள் ஏற்பட்டு அப்பாவி மக்கள் பலரின் உயிருக்கு ஆபத்து விளையும் வாய்ப்பிருக்கிறது என எச்சரித்தன. ஆனால் இந்த எச்சரிக்கைகள் நமது அரசைப் பொறுத்தவரை ‘செவிடன் காதில் ஊதிய சங்கொலி’யாக மாறியது தான் மிச்சம். கம்பெனி ‘முதலாளி ஆண்டர்சனை’ பத்திரமாக அமெரிக்காவுக்கு அனுப்பிவைத்ததில் காண்பித்த வேகத்தை விபத்தில் சிக்கி மரணமும் ஊனமும் அடைந்த அப்பாவி மக்களிடத்தில் நமது அரசு காட்டவில்லை. விபத்தில் மரணமடைந்தவர்கள் அதிர்ஷ்டசாலிகள் என நினைக்குமளவுக்கு ஊனமுற்றவர்களில் பலர் இன்றும் அவதிப்பட்டு

தலையங்கம்
 

சகிப்புத்தன்மை ஜனநாயக நடைமுறைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான இன்றியமையாத பண்பாட்டுக்கூறு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு ஆட்சியில் அமர்த்தப்படும் எந்தவொரு அரசாங்கமும் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறை. சகிப்புத்தன்மையற்ற அரசாங்கத்தால் அரசியல் சாசனம் குடிமைச் சமூகத்துக்கு உறுதிப்படுத்தியுள்ள அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்க முடியாது. இன்று திமுக அரசு மாற்றுக் கருத்துகள் கொண்டவர்கள்மீது துரிதமாகப் பிரயோகித்துவரும் ஒடுக்குமுறைகள் ஜனநாயகவாதிகளின் கடும் விமர்சனங்களுக்குள்ளாகியுள்ளன. பல்வேறு நுட்பமான வழிமுறைகளால் ஊடகங்களின் குரல்களை மவுனமாக்குவதில் வெற்றிகண்டுள்ள திமுக அரசாங்கம் தனக்குள்ள அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்தை விமர்சிக்கும் இதழியல், அறிவுத் துறைச் செயல்பாட

உள்ளடக்கம்