உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு
 

2010, ஜூன் 23 முதல் 27வரை நடைபெற்ற உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டை ஏற்று நடத்தாததற்கும் அதில் பங்கேற்காமல் விலகி நின்றதற்குமான காரணங்கள் குறித்து, பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகத்தின் தலைவரும் டோக்கியோ பல்கலைக் கழகத்தின் சிறப்புநிலை ஆய்வுப் பேராசிரியருமான நபோரு கராஷிமா ஜூலை 23, 2010 ஹிந்து நாளிதழில் ‘IATR and the World Classical Tamil Conference’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை எழுதியிருந்தார். கராஷிமாவின் கட்டுரைக்கு ஜூலை 25, 2010 ஹிந்து நாளிதழில் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் டாக்டர் ம. ராசேந்திரனும் ஆகஸ்ட் 7, 2010 ஹிந்து நாளிதழில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் துணைத் தலைவர்களாக இருந்த டாக்டர் வா. செ. குழந்தைசாமியும் டாக்டர் ஐராவதம் மகாதேவனும

கட்டுரை
க. திருநாவுக்கரசு  

கீழ்ப்படிதலும் ரகசியத்தன்மையும் வன்முறை, அதிகார துஷ்பிரயோகம், ஊழல் ஆகியவற்றின் ஊற்றுக்கண்களாக இருக்கின்றன. அதிகாரத்திற்குக் கீழ்ப்படிதல் குறித்து 1961-62இல் யேல் பல்கலைக்கழக உளவியல் பேராசிரியர் ஸ்டான்லி மில்கிராம் நடத்திய ஆய்வுகளில், ‘தங்கள் செயல் குறித்துத் தாங்களாக முடிவெடுக்கும்போது மனிதர்கள் செய்யத் தயங்குகிற பல வன்முறைச் செயல்களை அதே மனிதர்கள் அவை தங்களுடைய மேலதிகாரிகளின் உத்திரவுகளாக வருகிறபோது செய்யத் தயங்குவதில்லை’ என்பதைக் கண்டுபிடித்தார். ராணுவம், உளவு, காவல் துறைகளில் பணியாற்றும் பெரும்பான்மையானோர் தங்களது தனிப்பட்ட வாழ்வில் மிக மென்மையான மனிதர்களாக இருந்தபோதிலும் தங்கள் பணிகளின்போது தயங்காது பெரும் வன்முறைகளில் ஈடுபடுவதற்கு இதுவே காரணம். மதம்,

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

“நம் செயல் ‘எதிரி’களால் பாராட்டப்படுமெனில் நாம் தவறாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோமென்று பொருள்” என்பது தமிழக மேடைகளில் புழங்கிவரும் புகழ்பெற்ற முழக்கம். தலித் வகுப்பைச் சேர்ந்த ஐஏஎஸ் அதிகாரியான உமாசங்கர் போலிச்சான்றிதழ் கொடுத்துப் பணியில் சேர்ந்ததாகத் திமுக அரசாங்கத்தால் குற்றம் சுமத்தப்பட்டுத் தற்காலிகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள செயல் இந்து முன்னணித் தலைவர் ராமகோபாலனின் பாராட்டுக்குள்ளாகியிருக்கிறது. தலித் அதிகாரிக்கெதிராக, ஆதிக்கக் கருத்தியலுக்கு வலுவூட்டும் விதத்தில் செயல்பட்டதால் இந்து முன்னணியிடமிருந்து ‘பெரியாரின் சீடர், தலித்துகளின் தோழர்’ கருணாநிதியின் அரசாங்கத்துக்குக் கிடைத்துள்ள இப்பாராட்டுக் குறித்து அவரது தீவிர/வெகு

ஆளுமை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

முத்தையா முரளிதரனின் பெயரைச் சொன்னால் ‘ஆ! முரளியா’ என்று எள்ளல் தொனியுடன் பதில் வரும். இந்த வார்த்தைகளுக்கு, குரலுக்குப் பின்னால் இருக்கும் மறைபொருளைக் கட்டுடைக்க மொழிச் சிகிச்சை வல்லமை தேவையில்லை. ‘ஆ! முரளியா’ என்று சொன்னவர் ஈழத் தமிழராயிருந்தால் அவர் நம்முடைய ஆள் அல்ல என்று அர்த்தம். விஷயம் தெரியாதவர்களுக்கு முரளி மலையகத் தமிழர். இதே வார்த்தைகள் வெள்ளைத் தோல் உடையவரின் வாயிலிருந்து வந்தால் முரளியின் பந்து வீச்சில் சந்தேகம் கொள்ளுகிறார் என்று பொருள். ஆனால் அவருடைய மிகப் பெரிய சாதனை இந்த இரண்டு இடைஞ்சல்களையும் மீறி நல்ல ஆட்டக்காரராக, நல்ல மனிதராகத் தன்னை உருவாக்கிக்கொண்டதே. சமீபத்திய பேட்டி ஒன்றில் வரலாறு உங்களை எப்படி நினைவுகூர வேண்டுமெனக்

சிறுகதை
இராம. முத்துகணேசன்  

சரியான காரணம் என்னவென்று என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனாலும் வெளியேறிவிடு என்று மனசு சொல்வதற்குக் கட்டுப்பட வேண்டும் போலிருந்தது. இன்று நேற்றல்ல மூன்று வருடங்களாய் “வீட்டைவிட்டு, குடும்பத்தை விட்டுப்போ” என்று மனதின் குரல் என்னை நச்சரித்துக்கொண்டிருக்கிறது. ஆனால் வீட்டைத் துறப்பதற்கான ஒரு காரணம்கூட என்னிடம் இல்லை. ஒரு குறையும் இல்லை. இதோ என்னை அணைத்தபடி தூங்குகிறாளே சுமதி, நான் காதலித்துக் கைப்பிடித்தவள், இவளைவிட அன்பும் கருணையும் ஏன் அழகும் இணைந்த இன்னொருத்தியைப் பார்ப்பது கடினம். எட்டு வயதில் துறுதுறுவென பையன் ஒருவன், ஐந்து வயதில் தேவதை போன்ற பெண், இரண்டு லட்சம் சம்பளம் தரும் வேலை, அடையாறில் டபுள் பெட்டூம் பிளாட் ஒன்று, ஒரு ஹோண்டா சிட்டி, பேங்கில்

கட்டுரை
க. பூரணச்சந்திரன்  

குறிஞ்சிப் பாட்டு, பத்துப்பாட்டு என்னும் சங்க இலக்கியத் தொகுப்பில்-பத்து நூல்களில்-ஒன்று. இப்பாட்டின் திணை, குறிஞ்சி. கூற்று, தோழி அறத்தொடு நிற்றல் என்று குறிப்புகள் விளக்குகின்றன. தனியொரு திணை அல்லது துறையை விளக்குமாறு இவ்வளவு நீண்ட பாட்டு வேறெந்தத் திணை அல்லது துறைக்கும் எழுதப்படவில்லை. குறிஞ்சித் திணை குறித்த பாக்களிலேயே மிகவும் பெரியது என்பதால் பெருங்குறிஞ்சி என இதற்குப் பெயரிட்டனர். இன்னொரு சிறப்பு, குறிஞ்சித் திணை பாடுவதில் மிக வல்லவராகக் கருதப்படுகின்ற கபிலர் இதை எழுதியிருக்கிறார் என்பது. சங்கத் தொகை நூல்களில் மிகுதியான பாக்களைப் பாடியவர் கபிலர். (மொத்தம் 234 பாக்கள்). அவற்றில் மிகுதியானவை குறிஞ்சித் திணை சார்ந்தவை. அகப்பாடல்களாக இருந்தாலும் அவற்றில் பெரும்பாலு

கோகுலக்கண்ணன் கவிதைகள்
 

குற்றவாளிகளுக்கும் எனக்கும் இடையே கண்ணாடித் திரைகளோ காகித வனங்களோ சுவர்களோ அவர்கள் எல்லாவற்றையும் ஊடுருவி அருகே வர விழைகிறார்கள் கறுத்துவரும் கையால் அவர்கள் கரங்களைப் பற்றவும் தோளில் சாய்த்துக்கொள்ளவும் தயாராய் இருக்கிறேன் என் முன் அவர்கள் தலைகுனிந்து நிற்க வேண்டாம் ஆனால் எனக்குத் தெரியும் அவர்கள் என்னை முகர்ந்து பார்க்கவே விரும்புகிறார்கள் அதில் என்ன வியப்பு! ஒரு நாள் கனவில் வந்த மனிதரிடம் மிகவும் மோசமான வாசனை வீசியது என் மூக்கு முகத்திலிருந்து கழன்று விழுந்துவிடும் என்று பயந்தேன் எப்படியாவது அந்த இடத்திலிருந்து அகன்றுவிடவே விரும்பினேன் கனவென்னும் இடத்தை விட்டு விலக முடியவில்லை கடவுளைப் போலத் தொலைவில் இருக்கவே விரும்பினேன் குற்றவாளிகளைப் போலவும். நனை

கட்டுரை
மு. புஷ்பராஜன்  

வகுப்பறையிலிருந்து மழையின் பொழிவை லயிப்புடன் பார்த்துக்கொண்டிருக்கும் சிறுமி ராபியாவுடன் ஆரம்பமாகிறது இரண்டாம் ஜாமங்களின் கதை. இறுக மூடிக் கிடக்கும் கதவுகளுக்குப் பின்னால் நிறைந்திருக்கும் பெருமூச்சின் வெம்மை, ராபியாவின் சிறிய பாதங்கள் பதிந்துசெல்லும் இடமெல்லாம் வீசுகிறது. அச்சிறுமியின் சிறிய இதழ்களில் துளிர்த்திருக்கும் பனி போன்ற குழந்தைக் கனவுகள் சூழலின் வெப்பத்தில் கருக, கனவுகளின் மிச்சமான மரப்பாச்சிப் பொம்மையை அணைத்தபடி சுருண்டு படுத்துக்கொள்வதோடு நாவல் முடிவடைகிறது. நவீனத்துவங்கள், பின்நவீனத்தின் கலைத்துப்போடல், எடுக்கவா அன்றிக் கோக்கவா என்ற பின்னங்களின்றி, வெண்மணல் படுகை நீரோடையின் தெளிவோடு வழிந்து செல்கின்றது நாவல். காரணம் சமூகம் அடைகாக்கும் மௌனத்தைப் பேசுத

நேர்காணல்
சை. பீர்முகம்மதுவுடன் நேர்காணல்: கே.ஜி. மகாதேவா  

சிறந்த தமிழ் ஆய்வாளரும் விமர்சகரும் நாவல் ஆசிரியருமான சை. பீர்முகம்மது மலேசியாவின் தற்காலக் கவிதை வளர்ச்சியை ஊக்குவித்தவர் மட்டுமன்றி அந்நாட்டின் அனைத்துச் சிறு கதைகளையும் சர்வதேச வாசிப்புக்குக் கொண்டுசென்ற இலக்கியக் கொடையாளியும் ஆவார். தமிழகத்தில் சில நாட்கள் தங்கியிருந்து கடந்த மாத இறுதியில் மலேசியா திரும்பவிருந்த சை. பீர்முகம்மதுவை நேர்காணலுக்காக நான் சந்தித்தபோது . . . உங்கள் பூர்வீகம், ஆரம்ப கால வாழ்க்கை, கல்வி, இலக்கியத் தேடல் பற்றிக் கூறுங்கள்? என் தாய் திருவண்ணா மலை, தந்தை தேவகோட்டை. இந்து மதத்தைச் சேர்ந்த என் தாய் இஸ்லாமியரான தந்தையைக் காதலித்துக் கரம்பற்றியவர். தொழில் நிமித்தம் என் பெற்றோர் மலேசியா சென்ற காலகட்டத்தில், 1942 ஜனவரி 12இல் ஜப்பானிய விமானங்கள் ம

கட்டுரை
அரவிந்தன்  

கேள்வி: அன்னைத் தமிழில் பேசும் நீங்கள் சென்னைத் தமிழில் பேசிப் பார்த்ததுண்டா? பதில்: தமிழ்த் தாயின் முகத்தில் செம்புள்ளி, கரும்புள்ளி குத்திப் பார்ப்பதா? கொடுமை! கொடுமை! இது 87ஆம் பிறந்த நாளை ஒட்டித் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி குமுதம் வார இதழுக்கு அளித்த பேட்டியில் இடம்பெற்ற கேள்வி - பதில். முத்தமிழ் அறிஞர் என்று போற்றப்படும் கருணாநிதிக்குச் சென்னைத் தமிழின் மீது என்ன கோபமோ தெரியவில்லை! சென்னைத் தமிழின் மேற்பரப்பில் தெரியும் சில தன்மைகளை வைத்தும் அதைப் பேசுபவர்களின் சமூக அடுக்கின் மதிப்பை (அல்லது மதிப்பின்மையை) வைத்தும் அந்த மொழியை மதிப்பிடும் மையநீரோட்டப் பார்வையையே அவரது கருத்து பிரதிபலிக்கிறது. இந்தப் பார்வையைப் பரிசீலனைக்கு உட்படுத்தினால் மொழி ச

கட்டுரை
எம். ரிஷான் ஷெரீப்  

அநீதங்களிலிருந்து நாட்டு மக்களைக் காக்கவும் அவர்களுக்குச் சேவை செய்யவும் உருவாக்கப்பட்டதே பொலிஸ் எனப்படும் காவல் துறை. தேசத்தின் எந்த மூலையிலும் தனியொரு நபருக்கோ பொதுமக்களுக்கோ ஏதேனுமொரு இன்னல் ஏற்படுமிடத்து அங்குச் சுமூகமளித்து அமைதியை நிலைநாட்டுவதுவும் இன்னலுக்கான காரணத்தை ஆராய்ந்து, சம்பந்தப்பட்டவர்களைச் சட்டத்துக்கு முன் நிறுத்தி உரிய தண்டனையை வாங்கிக் கொடுப்பதுவும்கூடக் காவல் துறையின் கடமையே. அந்த நம்பிக்கையில்தான் மக்கள் தங்களுக்கொரு அநீதி நிகழுமிடத்துக் காவல் துறையை நாடுகின்றனர். தனக்கு நீதியும் பாதுகாப்பும் கிடைக்குமென்ற நம்பிக்கையோடு அநீதிக்கெதிராக முறைப்பாடு செய்கின்றனர். முறைப்பாட்டை விசாரிக்கும் காவல் துறை, சம்பந்தப்பட்டவர்களைக் கூண்டிலேற்றி நீதத்தை நி

கட்டுரைத் தொடர்: பசுமைப் புரட்சியின் கதை - 14
சங்கீதா ஸ்ரீராம்  

(ஃபெர்டிலைசர் அசோசியேஷன் ஆஃப் இந்தியா, 2003/04) ஆண்டு  என். பி. கே. உரங்களின் மொத்தப் பயன்பாடு (கோடி டன்)  ஹெக்டேர் 1969-70  0.198  11.04 1979-80  0.526  30.99 1989-90  1.157  63.47 1999-2000  1.807  94.90   பசுமைப் புரட்சியின் விளைவுகள் ஒன்றல்ல இரண்டல்ல. வகைவகையாகப் பிரித்து, எங்கே தொடங்கி எங்கே முடிப்பது என்று தெரியாமல் திணறும் அளவுக்கு அவை பரந்துபட்டவை. அவற்றை ஒரு கட்டுரையில் அடக்க வேண்டும் என்றால் மேலோட்டமான தகவல்களை மட்டுமே அளிக்க முடியும். பசுமைப் புரட்சியைத் தொடக்கிவைத்த விதைகள், இரசாயன உரங்களைக் கொட்டிப் பயிர்செய்தபோது மட்டுமே உயர்விளைச்சலைக் கொடுத்தன. நிலத்தில் உப்பு தங்கிவிட, இயல்

பதிவு: நூல் அறிமுக விழா 31.07.2010, ஃபிலிம் சேம்பர், சென்னை
பெ. பாலசுப்ரமணியன்  

சமீபகாலமாகத் தமிழில் ஏராளமான நூல்கள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. அவை அனைத்தும் வாசகர்கள் மத்தியில் முக்கியத்துவம் பெற்றுவிடுவதில்லை. பழங்கால இலக்கியங்கள், நவீன இலக்கியங்கள், பதிப்பு நூல்கள், தொகுப்பு நூல்கள் எனப் பல்வேறு நூல்கள் வெளிவந்தாலும் அவற்றின் தரம், பயன்பாடு, வாசகர்களின் தேவை அடிப்படையிலேயே அவை கவனம்பெறுகின்றன. ஒரு கட்டத்தில் பக்தி இலக்கியங்கள் மக்கள் மத்தியில் செல்வாக்கு பெற்றிருந்தன. தேவாரம், திருவாசகம் வரிசையில் வள்ளலாரின் பாடல்கள் கோயில்களில் ஓதப்பட்டு வந்துள்ளன. திருவருட்பா என்றழைக்கப்பட்ட அவரது பாடல்கள் அருட்பா அல்ல; மருட்பா என வாதிட்டு விவாதங்கள் நடைபெற்றுள்ளன. அந்த விவாதங்கள் அடங்கிய விரிவான தரவுகளின் தொகுப்பே காலச்சுவடு பதிப்பக வெளியீடாக அருட்பா மருட்பா

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது  

வடக்கேமுறி அலிமா கீரனூர் ஜாகிர்ராஜா பக்கங்கள்: 144, விலை: ரூ. 80 முதல் பதிப்பு: டிசம்பர் 2009 வெளியீடு மருதா 2/100, 5 வது குறுக்குத் தெரு, குமரன் நகர், சின்மயா நகர், சென்னை-92 சிலவற்றைச் சொல்லாமல் இருக்க முடியாது. சொல்லிவிட்டோம் என்ற இலக்கையும் அடைந்துவிட வேண்டும். சன்னமான குரலில் பேசினால் கோபங்களிலிருந்து தப்பிக்கலாம். ஆனால் மத விவகாரங்களில் மாத்திரம் சன்னமும் கிடையாது; மூர்க்கம் மாத்திரமே உண்டு! கட்டுரைகள் எனில் கட்டுக்குள் வைக்கும் வாய்ப்புகள் உண்டு. ஆனால் படைப்பு வெளி ஆங்காரமானது. எங்கே, எப்படி நாம் வெடிக்கப்போகிறோம் என்பது நமக்கே தெரியாது. அது எங்கே, எவ்விதமாய் இழுத்துக்கொண்டு ஓடப்போகிறது என்பதே மர்மமானது. வடக்கேமுறி அலிமாவைப் படைத்தபோது ஜாகீர் ர

மதிப்புரை
பாவண்ணன்  

முறிமருந்து (நாவல்) எஸ். செந்தில்குமார் ரூ. 250. பக்: 384 வெளியீடு தோழமை 5டி, பொன்னம்பலம் சாலை, கே.கே.நகர். சென்னை-78. தொலைபேசி: 9444302967 “சாப்பிடும்போது நரகலை நினைக்கக் கூடாது” என்றொரு வரி நாவலில் இடம்பெறுகிறது. அப்படி நினைத்துக்கொள்கிறவனால் ஒரு வாய்கூட நிம்மதியாகச் சாப்பிட முடியாது என்னும் வாழ்வனுபவமே, இந்த வாய்மொழிக்குக் காரணமாக இருக்க வேண்டும். சாப்பாடு சார்ந்த குறிப்பென்றாலும் வாழ்க்கைத் தளத்துக்கும் இந்த உண்மையை விரிவுபடுத்திக்கொள்ளலாம். நல்லதைப் பார்க்கும்போது கெட்டதை நினைக்கக் கூடாது. அன்பில் இணையும்போது துரோகத்தை எண்ணி மயங்கக் கூடாது. நட்புடன் உரையாடும்போது வஞ்சகத்தை அசைபோடக் கூடாது. பாசத்தை எதிர்கொள்ளும்போது வெறுப்பைப் பு

 

மலையாளக் கவிஞர் ஆற்றூர் ரவிவர்மாவுக்கு 2001 ஆண்டுக்கான சாகித்திய அக்காதெமி விருது வழங்கப்பட்டது. அதையொட்டித் திருச்சூரில் 8 மார்ச் 2002 அன்று நடத்தப்பட்ட பாராட்டு விழாவில் சுந்தர ராமசாமி நிகழ்த்திய மலையாள உரையின் தமிழாக்கம் இது. ஏஷியாநெட் தொலைக்காட்சிக்காக ஒரு நேர்காணலில் பங்கேற்ற சு.ரா. கோழிக்கோட்டிலிருந்து இந்தக் கூட்டத்துக்கு வந்து கலந்துகொண்டார். மாங்காடு ரத்னாகரன் அந்த நேர்காணலைச் செய்திருந்தார். ‘பாராட்டுக் கூட்டத்துக்கு எழுதித் தயாரித்த குறிப்புகளுடன் வந்திருந்தார் சு.ரா. ஆனால் மேடையேறும் முன்பு அந்தக் குறிப்புத்தாள் காணாமற்போயிற்று. இருந்தும் எழுதிவைத்திருந்த குறிப்புகளை நினைவிலிருந்து வாசிப்பதுபோல அவர் பேச்சு தகவல் பிசகாமல் அமைந்தது. பின்னர் அந்தத் தா

 

‘சகிப்புத்தன்மை என்னும் அரசியல் பண்பாடு’ தலையங்கம், நிர்வாகத்தில் நிலவும் பழிவாங்கும் இழிசெயல், பண்பாட்டுக்கு எதிரான படையெடுப்பு எனச் சமுதாயம் சீர்பெறும் வகையில் எச்சரித்துள்ளது. “வலிமை வாழாது; மென்மைதான் வாழும்” என்னும் கன்ஃபூசியஸின் கருத்தை மறந்த இனம், மாற்றுக் கருத்துகளை மதிக்க மறுக்கிறது. ‘பழி எனின் உலகுடன் பெறினும் கொள்ளலார்’ என்னும் புறநானூற்று வரிகளைப் பொருட்படுத்தாதோர், எப்படியும் வாழலாம் என்று அதர்மத்துக்கு ஆட்படுகிறார்கள். ‘ஆதிக்கமும் செல்வமும் அரசு அதிகாரிகளைத் தெரிவுசெய்யும்படி அனுமதிக்கக் கூடாது’ என்னும் சாக்ரடீசின் கூற்று, காற்றில் பறக்கும் இக்காலத்தில், சமுதாயம் வாழ வேண்டுமாயின் குற்றம் தண்டிக்கப்பட வேண்டும் எ

தலையங்கம்
 

தமிழக மீனவர்கள் பிரச்சினை, காவிரிப் பிரச்சினை, விலைவாசி உயர்வு, சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள், சகலதுறைகளிலும் பரவியிருக்கும் ஊழல், கருணாநிதி குடும்பத்தினரின் ஆதிக்கம் உள்ளிட்ட தமிழக மக்களின் ஆதாரமான வாழ்வியல் சிக்கல்களுக்குத் தீர்வுகாண முடியாத திமுக அரசாங்கத்தைக் கண்டித்து ஜூலை 13 கோவையிலும் ஆகஸ்டு 13ஆம் தேதி திருச்சியில் அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதாவின் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்கள் பெருந்திரளான மக்களின் பங்கேற்பு காரணமாக முக்கியமான அரசியல் நிகழ்வுகளாகியிருக்கின்றன. 2009இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தில்லுமுல்லுத் தேர்தலில் தோல்வியுற்ற பிறகு சோர்வடைந்திருந்த அதிமுகவினருக்கும் பிற எதிர்க்கட்சிகளுக்கும் ஊக்கமளிக்கும் நிகழ்வுகள் இவை. உள்ளூர்த் தலைவர்கள் சிலரை விலைக்கு

உள்ளடக்கம்