கட்டுரை
கண்ணன்  

தமிழாய்வுக் கழகத்தின் தலைவர் கராஷிமா ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டைக் கழகம் நடத்த முன்வராததன் காரணங்களை விளக்கி தி இந்துவில் எழுதிய கட்டுரையும் எதிர்வினைகளும் முந்தைய காலச்சுவடு இதழில் தமிழாக்கம் செய்யப்பட்டிருந்தன. கதைச் சுருக்கம்: 2010 ஜனவரியில் உலகத் தமிழ் மாநாடு நடக்கப்போவதாக அதை நடத்த வேண்டிய கழகத்தின் தலைவர் கராஷிமாவுக்கு 2009 செப்டம்பரில் ‘தெரிவிக்கப்படுகிறது’. அதாவது தமிழாய்வுக் கழகம், ஒன்பதாம் உலகத் தமிழ் மாநாட்டை 2009 ஜனவரியில் நடத்தப்போவதாகத் தமிழக முதல்வர், தமிழாய்வுக் கழகத்தின் தலைவர் கராஷிமாவைக் கலந்தாலோசிக்காமல் தன்னிச்சையாக அறிவிக்கிறார். இந்தப் பின்னணியில் கராஷிமா மூன்று கருத்துகளை முன்வைக்கிறார். 1. உலகளாவிய மாநாடொன்றை நான்கு மாதங்களில் நட

கட்டுரை
 

தகவல் அறியும் உரிமைச் சட்டம் அரசின் செயல்முறையில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்தவே கொண்டுவரப்பட்டது. சட்டம் நடைமுறைக்கு வந்து ஐந்தாண்டுகளாகியும், தகவல் ஆணையர்கள் நியமிக்கப்பட்ட முறையே பெரும் பிரச்சினையாகியுள்ளது. தகவல் அறியும் முறை எப்படி ஒழுங்கற்றுள்ளது என இச்சட்டத்தின் கீழ் இதுவரை பெறப்பட்ட ஆவணங்கள் வெளிப்படுத்துகின்றன. ஆனால் தலைமைத் தகவல் ஆணையரின் சமீபத்திய நியமனத்தால், வெளிப்படைத்தன்மை மேலும் மோசமாகியுள்ளது. 2010 பிப்ரவரியில் பதினைந்து தனி நபர்களும் சமூக அமைப்புகளும் தகவல் ஆணையர் நியமனத்தில் பொதுமக்கள் கருத்தறியும் ஆலோசனை நடத்த வேண்டும் எனத் தலைமைச் செயலரையும் நிர்வாகச் சீர்திருத்தத் துறைச் செயலரையும் கடிதம்மூலம் வலியுறுத்தினர். எதுவுமே நடக்காததால், நான் ஜூன் 2010இல

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

அமெரிக்க மதகுரு டேரி ஜோன்ஸ் உண்டாக்கிய புத்தக எரிப்பு அமளி எனக்கு ஒரு முரண்நகையான பழமொழியை ஞாபக மூட்டியது: ‘புத்தகங்கள் எரிப்பது உலகத்திற்குப் பிரகாசம் தரும்.’ இது கீழைத்தேய ஞானி ஒருவரின் மூதுரை. இந்த வாசகத்தில் பொதிந்துகிடக்கும் நேர் எதிர்ப் பொருள் செய்தியை மிகவும் பின்தங்கிய கிறிஸ்தவ மதப் பிரிவைச் சேர்ந்த ஜோன்ஸ் தெரிந்திருக்கமாட்டார் என்று நினைக் கிறேன். ஐம்பதுக்கும் குறைவான அங்கத்தினர்களுக்குத் திருப்பணியாளராக இருக்கும் இவர் 200 திருக்குரான் பிரதிகளை 9/11 அன்று பகிரங்கமாகக் கொளுத்துவேன் என்று அச்சுறுத்தியது அதி பெரிய பூளோகக் கவனத்தை இவருக்குக் கொடுத்தது. இவர் சுட்டெரிப்பதைக் கைவிட்டாலும் இவர் உண்டாக்கிய பரபரப்பால் ஆயிரம் மைல்களுக்கு அப்பால் வாழும் 13

கட்டுரை
பழ. அதியமான்  

முப்பத்தைந்து ஆண்டுக் கால நீண்ட காத்திருப்பிற்குப் பிறகு பெரியார் ஈ. வெ. ரா. சிந்தனைகள் விரிவாக்கப்பட்ட இரண்டாம் பதிப்பு மார்ச் 2010இல் வெளிவந்துவிட்டது. பெரியார் எழுத்துக்களின் வெளியீட்டு உரிமைச் சிக்கலால், பெரியார் திராவிடர் கழகத்தின் குடிஅரசு பதிப்பு முயற்சிகள் முடங்கியிருந்த சூழலில் பதற்றத்தோடும் ஆவலோடும் இவ்வெளியீட்டைத் தமிழ்ச் சமூகம் எதிர்பார்த்துக்கொண்டிருந்தது. வெளியீட்டு விழாவில் முதல்வர் கலைஞர் பங்கேற்பார் என்னும் தகவலால் புத்தகம் வெளிவந்துவிடும் என்ற நம்பிக்கை பிறந்து பதற்றம் கொஞ்சம் தணிந்தது. வெளியீடு நிகழ்ந்த பிறகே அச்சம் முழுமையாக அகன்றது. திருச்சி சிந்தனையாளர் கழகத்தின் சார்பில் 1974இல் வெளிவந்த பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள் முதல் பதிப்பு வடிவத்தில் பெரி

கட்டுரை
சங்கரன் சித்தார்த்தன்  

2009 மே, 18இல் இலங்கையின் நீண்டகால உள்நாட்டுப் போரை முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டதாக ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அறிவித்தார். தோற்கடிக்கப்பட்டவர்கள் தம் நாட்டின் ஒருபகுதி மக்கள் என்பதையும் அவர்கள் அநீதிக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதையும் அவர்களது வாழ்வைப் போர் சிதிலமாக்கியிருக்கிறது என்பதையும் புறக்கணித்துவிட்டு, எரிந்து கருகிய சடலங்களின் நெடியையும் முள்ளி வாய்க்காலில் ஓங்கி ஒலித்த கூக்குரல்களையும் தாண்டித் தென்னிலங்கை முழுவதும் பட்டாசுகள் வெடிக்கப்பட்டன, கொண்டாட்டங்களின் ஆரவாரம் பேரலையென எழுந்தது. வெற்றியில் திளைத்த தென்னிலங்கையின் சிங்களர்கள் தங்களுக்கு அப்போது பிறந்த குழந்தைகளுக்கு மகிந்த ராஜபக்சவின் பெயரைச் சூட்டினர். மற்ற குழந்தைகளையுங்கூட ராஜபக்ச என்று அழைப

 

காலத்தின் இடைவெளியில் சுந்தர ராமசாமி: சில குறிப்புகள் ‘செயலே உண்மையான சொல்’ சுந்தர ராமசாமி கடிதங்கள் சாயங்காலமும் இரவுமாகி

சிறப்புப் பகுதி: சுந்தர ராமசாமி (1931-2005) ஐந்தாம் ஆண்டு நினைவு
 

சுந்தர ராமசாமிக்குக் காலம் இன்னும் சில ஆண்டுகள் சலுகை அளித்திருக்கலாம் என்ற பெருமூச்சு வாக்கியம் அண்மைக் காலமாக மனதில் தோன்றுகிறது. அவர் விட்டுச் சென்றிருக்கும் சேகரிப்புகளிலிருந்து வெளியீட்டுக்கு உகந்தவையாக எதுவும் இருக்குமா என்று கடந்த சில மாதங்களாக அகழ்வாராய்ச்சி செய்துவருகிறேன். படைப்புகளாக அவர் விட்டுச் சென்றவை அனைத்தும் ஏறத்தாழ நூல் வடிவம் பெற்றுவிட்டன. கரட்டு வடிவத்திலிருந்த சில கவிதைகளும் வெளியீட்டுக்குக் கொடுக்காமலிருந்த கதைகளும்கூடப் புத்தகங்களாகியுள்ளன. வெவ்வேறு சந்தர்ப்பங்களில் அவர் அளித்த ஐம்பதுக்கும் மேற்பட்ட நேர்காணல்கள், இலக்கிய உலகில் அறிமுகமான நாள் முதல் - எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், கல்வியாளர்கள், நண்பர்கள், வாசகர்கள் - ஆகியோருக்கு எழுதிய கட

 

என்னைத் தவிர அங்குக் கூடியிருந்த அனைவருக்குமே சுந்தர ராமசாமியைத் தெரியும். என்னைத் தவிர அங்குக் கூடியிருந்த யாருக்குமே என்னைத் தெரியாது. ஆனால் அவர் இனம் கண்டுகொண்டார். குற்றாலத்தில் நடைபெற்ற முதல் தமிழ்-மலையாளக் கவிதை முகாமில் நான் அப்போதுதான் வந்து ஏறினேன். நடந்து வந்த காலடிச்சூடுகூடத் தணியவில்லை. ‘கல்பற்ற நாராயணன்தானே? நான் சுந்தர ராமசாமி’ என்று கைகூப்பி அருகில் வந்து அறிமுகம் செய்துகொண்டார். தகவல் கொடுத்தால் ஐந்தோ, பத்தோ லட்சங்கள் சன்மானம் கிடைக்கும் தலைமறைவுக் குற்றவாளியின் ஒரே ஒரு புகைப்படத்தைப்போலுள்ள எனது படத்தை அவர் எங்கேயோ பார்த்திருக்க வேண்டும். ஜே.ஜே.யை முதன் முதலில் கண்டபோது பாலுவுக்குத் தோன்றியது போல் எனக்கும் தோன்றியது. “ஜே.ஜே. என

சிறப்புப் பகுதி
சுந்தர ராமசாமி  

நண்பர்களே, ஏ. சோமனைப் பற்றி நான் தெரிந்துகொள்வது இப்போதுதான். கேரளத்திலுள்ள எழுத்தாளர்களைப் பற்றித் தெரிந்துகொள்வதில் எப்போதும் அக்கறையுள்ள எனக்குச் சோமனைப் பற்றித் தெரியாமல்போனது ஒரு குறையென்றே எண்ணுகிறேன். அப்படித் தெரியாமல் போனதால் அவரை முன்தீர்மானங்கள் எதுவுமில்லாமல் வாசிப்பதற்கான வாய்ப்பு கிடைத்திருப்பது ஓர் ஆதாயம். இந்தப் புத்தகத்தை வாசிக்கும்போது தமிழில் இதுவரையில்லாத ஏதாவது ஒன்று என்னுடைய கவனத்தில் படுமானால் அதைத் தமிழுக்குக் கொண்டு செல்ல முயல்வேன். நண்பர்கள் அவரைப் பற்றிச் சொன்னதைக் கேட்டபோது சோமன் பிரத்தியேக இயல்புள்ள சிந்தனையாளர் என்று எனக்குத் தோன்றியது. அவர் ஒரு கலகக்காரராக (rebel) இருக்கலாம் எனத் தோன்றுகிறது. புரட்சிக்காரர்களைவிடக் கலகக்காரர்க

சிறப்புப் பகுதி:
 

அன்புள்ள ராஜு சுந்தர ராமசாமி 10.11.01 அன்புள்ள ராஜு, உங்கள் 03.11.01 கடிதம் கிடைத்தது. இப்போது உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. பாதத்தையொட்டி ஒரு வலி. அதனால் காலை மாலை நடக்கப்போவது நின்றுவிட்டது. திருவனந்தபுரம் சென்று ஆர்தோவிடம் காட்டினேன். பெரிய அளவில் செய்வதற்கு ஒன்றும் இல்லை என்று சொல்லிவிட்டார். நடக்கப் போக முடியாமல் இருப்பது சிறிது மனச்சோர்வைத் தருகிறது. எங்கும் வெளியே செல்வதில்லை. உள்ளூர் கூட்டங்களுக்குக்கூட. இருந்தாலும் சில இடங்களுக்குப் போவதைத் தவிர்க்க முடிவதில்லை. டிசம்பர் 14இல் WAVES என்ற என் படைப்புகளின் ஆங்கில மொழிபெயர்ப்பின் வெளியீடு சென்னையில் நடைபெறுகிறது. அதை மொழிபெயர்த்த லக்ஷ்மி ஹோம்ஸ்ட்ராம் இங்கிலாந்திலிருந்து வருகிறார். நானு

சிறப்புப் பகுதி:
தேவிபாரதி  

1980களில் எழுத்தாளர்களைத் தேடிச்சென்று சந்திக்கும் பழக்கம் ஏற்பட்டது. சென்னைக்குச் செல்லும் தருணங்களின்போது பூமணி, பா. செயப்பிரகாசம், வண்ண நிலவன், பிரபஞ்சன், ராஜமார்த்தாண்டன் உள்ளிட்ட முந்தைய தலைமுறை எழுத்தாளர்களோடு பல சமகால எழுத்தாளர்களைச் சந்திக்கவும் உரையாடவும் கிடைத்த வாய்ப்புகளை இன்றளவும் முக்கியமானவையாகக் கருதுகிறேன். சென்னையில் சந்திக்கக் கிடைக்காத எழுத்தாளர்களில் தி.ஜானகிராமன், கி. ராஜ நாராயணன், வண்ணதாசன், ஜி. நாகராஜன், சுந்தர ராமசாமி எனச் சிலர் முக்கியமானவர்கள். இவர்கள் சென்னைவாசிகளாய் இல்லாததே அதற்குக் காரணம். பிறகு ஒவ்வொரு சந்தர்ப்பத்தில் சிலரைச் சந்திக்க வாய்த்தாலும் தி. ஜானகிராமனையும் ஜி. நாகராஜனையும் என்னால் சந்திக்கவே முடியாமல் போய்விட்டது. என்னளவில் ஈடுசெ

சிறுகதை
 

வருடம் 2025. மயானக்கொள்ளையும் இறந்த தலைவருக்குச் செலுத்தியிருந்த கண்ணீர் அஞ்சலியும் சுவரொட்டிகளில் ஆங்கிலத்திலிருந்தன. தமிழ்நாடு மொரீஷியஸாக மாறியிருப்பது எதிர்பார்த்ததுதான். ஆனால் செந்தமிழ் நகரைப் பற்றிய எதிர்பார்ப்பில் நிச்சயத்தன்மைகளின் விழுக்காடு குறைவாகவே இருந்தது. பெரிய அதிர்ச்சிகள் எவையுமில்லையென்றாலும் ஒருவிதமான பதற்றமும் வியப்பும் சேர்ந்த கலவை நெஞ்சில் கொப்பளித்தது. மனத்தில் அதுநாள் வரை வளர்த்துக்கொண்ட கற்பனைக்கு வடிவம் கொடுத்திருப்பேனோ என்ற சந்தேகத்தில் மெல்ல நடந்து பெயர்ப் பலகையைத் தொட்டுப்பார்த்து அப்படியேதுமில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொண்டேன். நான்கடிக்கு இரண்டடி அளவிலிருந்த பலகையில் அக்ரிலிக் வகை நிறப்பூச்சு உபயோகித்திருந்தார்கள். வெண்மை, கறுப்பு

 

ஊனமுற்ற இராணுவ வீரனும் புத்தரும் மஹேஷ் முணசிங்ஹ முதியோர் காயமுற்றோர் மற்றும் நோயாளிகள் குழந்தைகள் - வயதுவந்தோர் பிணக்குவியல்களை நிறைய நிறையக் கண்ணுற்றேன் பாவங்களை ஊக்குவிக்கும் துறவிகளின் உருவங்களைக் கண்டேன் *பிரித் நூலும் கட்டப்பட்டது 'நாட்டைக் காக்கும்' எனக்குக் காவல் கிட்டவென பிரார்த்தித்த தகவல்களும் கிடைத்தன தாயிடமிருந்து விழி சதை இரத்தமென தானம் செய்து உங்களிடம் வந்துள்ளேன் ஆனாலும் புத்தரே உங்களது பார்வை மகிமைமிக்கது கிராமவாசிகளுக்கு மறந்துபோயிருக்கும் மனைவி குழந்தைகளோடு நலம் வேண்டிப் பாடும் சுகப் பிரார்த்தனைப் பாடலிடையே எனது தலையை ஊடுருவும் உங்களது பழக்கமில்லாத புத்தர் விழிகள் கண்ணெதிரே தோன்றுகின்றனர் என்னால் கொல்லப்பட்ட மனிதர்கள் ஆங்காங்கே வீழ்ந்து

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

ஏப்ரல் 2010 முதலே தலித் மக்களுக்கான பஞ்சமி நிலம் குறித்த செய்திகள் ஊடகங்களில் சிறிய அளவிலாவது இடம்பெற்று வருகின்றன. ஏப்ரல் 14ஆம் தேதி அம்பேத்கர் பிறந்தநாளில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நடத்திய விருது வழங்கும் விழாவில் அம்பேத்கர் பெயரிலான விருதைப் பெற்றுக்கொண்ட கருணாநிதி அவ்விழாவில் (மட்டும்) தலித்துகளுக்கான நிலம் குறித்த கருத்தொன்றை வெளியிட்டார். சிலை எழுப்புதல், பெயர் சூட்டுதல், சொல்லாடல்களைக் கட்டுதல் என்று அடையாள அரசியல் உருவாக்கியதையே அரசியல் வெற்றியாகக் காட்டிவரும் திமுகவின் அணுகு முறைக்கு முரண்படாத வகையில் சிலை, மணி மண்டபம் உள்ளிட்ட அடையாளக் கோரிக்கைகளை எழுப்பிய விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, தலித்துகளின் நேரடி நலனுக்காகப் பஞ்சமி நிலங்களை ஆணையம் அமைத்து மீட்க வேண்டு

பத்தி: நேர்ப் பார்வை
தேவிபாரதி  

ஆகஸ்டு முதல் வாரம் மக்கள் சிந்தனைப் பேரவையால் ஒருங்கிணைக்கப்பட்ட ஈரோடு புத்தகச் சந்தைக்குப் போயிருந்தேன். பாபாசியால் ஒருங்கிணைக்கப்படும் சென்னை, மதுரைப் புத்தகச் சந்தைகளைப் போல் பரவலான வாசகர் கவனத்தைப் பெற்றிருப்பது ஈரோடு புத்தகச் சந்தை. மக்கள் சிந்தனைப் பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் புத்தகச் சந்தையை மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றாக மாற்றிவிடுகிறார். ஆகஸ்டு முதல் வாரத்தில் தொடங்கும் புத்தகச் சந்தைக்கான கண்கவர் விளம்பரங்கள் ஜூன் மாதத் தொடக்கத்திலிருந்தே மாவட்டம் முழுவதும் தென்படத் தொடங்கியிருந்தன. உள்ளூர்ப் பத்திரிகைகளில் இரண்டு மூன்று வாரங்களுக்கு முன்பிருந்தே அது குறித்த செய்திகள் இடம்பிடித்திருந்தன. இந்த வருடம் புத்தகச் சந்தையில் இடம்பெற்றிருந்த விற்பன

எதிர்வினை
 

மே மாதக் காலச்சுவடில் மத்தியக் கிழக்கைப் பற்றிய கண்ணனின் பத்தியைப் படித்துவிட்டு, தன் அகவிழியை முழுமையாகத் திறந்து எல்லாவற்றையும் கண்டிருந்தால் அவர் இன்னும் நிறையவே எழுதியிருப்பார் என எண்ணினேன். ஆனால் ஜூன் மாத இதழில் அக்கட்டுரையைப் பற்றி வந்திருந்த கடிதங்கள் அதற்கு நேர்மாறாக இருந்தன. கண்ணன் இல்லாத ஒன்றை எழுதியிருக்கிறார் அல்லது சிறிய விஷயத்தைப் பெரிதுபடுத்தியிருக்கிறார் என்ற தொனியுடன் அவை இருந்தன. இதழைத் தாமதமாகப் படிக்க நேர்ந்ததால் இதைத் தாமதமாக எழுதுகிறேன். 49 வயது கொண்ட ஆரியலதி என்ற இலங்கையைச் சேர்ந்த பெண்ணின் உடம்பிலிருந்து 24 ஊசிகளும் ஆணிகளும் கண்டெடுக்கப்பட்டன என்று 26 . 8 . 2010 அன்று செய்தி வந்தது. அது இந்திய ஊடகங்களிலும் வந்திருக்கக் கூடும். ஆரியலதி வேலைபார்த்த

மதிப்புரை
தமிழ்நதி  

காலப்பயணத்தில் கால்பதித்த சில வீதிகள் என்னைப் பிரமிப்பின் ஆழத்துள் தள்ளியிருக்கின்றன. ‘இதே வீதியில் இதே போன்றதொரு மஞ்சள் ஒளி சரியும் மாலையில் காற்று எங்கிருந்தோ அள்ளியெடுத்து வந்து பரவவிட்டுக்கொண்டிருக்கும் இதே வாசனையை நுகர்ந்தபடி நான் நடந்துபோய்க்கொண்டிருந்தேன்’ என நினைப்பதான மாயம் நிகழ்ந்திருக்கிறது. காலச்சரிவில் ஞாபகங்கள் இன்னமும் புதையுண்டுபோக ஆரம்பிக்கவில்லை. ஆகவே சென்ற இடங்களை நான் மறந்திருப்பதென்பது சாத்தியமில்லைதான். ஆக அதை மனத்தின் பித்துநிலைக் கூத்துகளில் ஒன்றாகவோ வாழ்நாளில் கண்டிருக்கக்கூடிய பல்லாயிரம் கனவுகளில் ஒன்றில் நான் நடந்து திரிந்த பாதையாகவோ நம்பத் தயங்கும் பூர்வஜென்ம வாசனையாகவோதான் எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது. மூன்றாம் சிலுவ

மதிப்புரை
பி. விக்னேஸ்வரன்  

1970ஆம் ஆண்டு கே.எஸ். பாலச்சந்திரன் இலங்கையில் வானொலிக் கலைஞராகத் தெரிவுசெய்யப்பட்டு, நாடக ஒலிப்பதிவுகளுக்கு வரும்போது ஏற்பட்ட அறிமுகம் பின்னர் நான் தயாரிப்பாளனாக வானொலியிலும் தொலைக் காட்சியிலும் தயாரித்த பல நாடகங்களில் அவர் பங்குபற்றியதன் மூலம் மேலும் நெருக்கமானது. அங்குள்ள கலைஞர்களில் நான் மிக நெருக்கமாகப் பழகிய ஒருசிலரில் பாலச் சந்திரனும் ஒருவர். சினிமா, நாடகம், எழுத்திலக்கியம் என்று எந்தத் துறை பற்றியும் சம்பாஷிக்கக்கூடியவர் பாலச் சந்திரன். கலைத்துறையில் அவரது பன்முக ஆற்றல், ஈடுபாடு பற்றியெல்லாம் மிக விளக்கமாக பி.எச். அப்துல் ஹமீது அவர்கள் ‘கரையைத் தேடும் கட்டுமரங்கள்’ நாவலின் முகவுரையில் விவரித்திருக்கிறார். கரையைத் தேடும் கட்டுமரங்கள் (நாவல்) கே.

பதிவு: அற்றைத் திங்கள், மார்ச் 21, 2010 - ம.இலெ. தங்கப்பா
அ. கார்த்திகேயன்  

கடந்த மார்ச் 21, சேலம் தமிழ்ச் சங்கத்தில் காலச்சுவடு, கோவை கிருஷ்ணா ஸ்வீட்ஸ், சேலம் தமிழ்ச் சங்க அறக்கட்டளை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில் தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா கலந்துகொண்டார். தமிழுக்கு மகத்தான பங்களிப்பை நிகழ்த்தியிருக்கும் அவரைச் சேலம் தமிழ்ச் சங்கச் செயலாளர் க.வை. பழனிசாமி அறிமுகப்படுத்தினார். நிகழ்வின் தொடக்கத்தில் தாம் நடத்திவரும் தெளிதமிழ் இதழைப் பார்வையாளர்களுக்கு விநியோகித்து, அதன் நோக்கத்தை முதலில் தெளிவுபடுத்தினார். இலக்கணம் கற்பிப்பதும் தமிழ் நலம் காப்பதும் தெளிதமிழின் இன்றியமையாத பணி என்பதை அறுதியிட்டுக் கூறினார். பாரதிதாசனை அடியொற்றி முதலில் தான் பாடல் எழுதியதாகவும், இயற்கைப் பாடல் புனைவதும் பாடல் இயற்றுவதும் வாழ்வின் இன்றியமையாத பணி என்றும் குறி

 

காலச்சுவடு இதழ் 129இல் வெளியான ‘பன்னாட்டுத் தமிழாய்வுக் கழகமும், உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடும்’ கட்டுரை வாசித்தேன். இலங்கையில் தமிழர்கள் கொடுமைகளுக்கு ஆளாகிக்கொண்டிருக்கும் வேளையில் உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு நடத்தியது மிகக் கேவலமான செயல். இந்த மாநாட்டை நடத்த வேண்டிய காரணங்கள்: இலங்கைத் தமிழருக்காக எதுவும் செய்யாத துரோகத்தை மறைப்பது, இலங்கை இந்தியத் தமிழர்களுக்கிடையேயான இடைவெளியை அதிகரிக்கச் செய்வது, தமிழினத் தலைவராய்த் தன்னை அடையாளப்படுத்திக்கொள்வது, தமிழனின் போராடும் குணத்தை மங்கச் செய்து கேலிக் கூத்துகளில் திளைக்கச் செய்வது மற்றும் சட்டமன்றத் தேர்தல் போன்றவைதாம். பேராசிரியர் கராஷிமா எழுப்பிய மறுப்புகளில் மாநாட்டின் காலம் ஒன்றுதான் ஒத்துவரவி

தலையங்கம்
 

துணை முதல்வர் மு. க. ஸ்டாலினின் கனவுகளில் ஒன்றான சிங்காரச் சென்னைத் திட்டம் சென்னை நகரின் லட்சக்கணக்கான குடிசைப் பகுதி மக்களின் கொடுங்கனவாக மாறியுள்ளது. சென்னை நகரின் மையத்தில் நகரை இருகூறுகளாக வெட்டிக்கொண்டு செல்லும் கூவம் ஆற்றைத் தூய்மைப்படுத்திப் பல்லாண்டுகளாக அதன் கரைகளில் வசித்துவரும் அடித்தட்டு மக்களை அப்புறப்படுத்திவிட்டு அங்கே பூங்காக்களையும் நடைபாதைகளையும் நிறுவுவதன் மூலம் சென்னை நகரைச் சிங்கப்பூருக்கு இணையான, உலகத்தரம் மிக்க மாநகரமாக மாற்றிவிட வேண்டும் என்பது ஆட்சியாளர்களின் திட்டம். சுமார் 1,300 கோடி ரூபாய் செலவில் இத்திட்டம் ஏற்கனவே செயலாக்கம்பெறத் தொடங்கிவிட்டது. இது தவிர பக்கிங்ஹாம் கால்வாயை ஒட்டிச் சென்னைத் துறைமுகத்துக்கும் மதுரவாயலுக்குமிடையே 19 கி. மீ

உள்ளடக்கம்