கட்டுரை
க. திருநாவுக்கரசு  

‘ஆஸ்திரிய சட்ட மேதை ஆய்கன் எர்லிஷ் (Eugen Ehrlich) கூறிய “நீதிபதியின் ஆளுமையைத் தவிர்த்து நீதியை உறுதிப்படுத்தக்கூடிய விஷயம் வேறேதுமில்லை’’ என்னும் வரிதான் பாபர் மசூதி-ராமஜென்மபூமி வழக்கில் செப்டம்பர் 30ஆம் தேதி மாலை அலகாபாத் உயர் நீதிமன்ற லக்னோ பெஞ்சின் தீர்ப்பைக் கேட்டபோது எனக்கு நினைவுக்கு வந்தது. மனிதர்கள் ஆற்றக்கூடிய பணிகளில் மிகவும் சிக்கலான, கடுமையானவற்றுள் ஒன்று நீதிபதியாக இருப்பது. ஒருவர் சிறந்த நீதிபதியாகப் பணியாற்றச் சட்ட மேதமை எவ்வளவு அவசியமோ அதைவிட அதிகமாக நேர்மையும் மனத் துணிவும் அவசியம். அதிலும் குறிப்பாக, மிகுந்த அரசியல் சர்ச்சைக்குரிய, ஏராளமான மக்களின் மத நம்பிக்கைகளுடன் தொடர்புடைய, அந்த மத நம்பிக்கைகளைத் தங்களுக்குச் சாதகமாக்கிக

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

‘அயோத்தியின் சர்ச்சைக்குரிய நிலப்பகுதியை அதற்கு முழுமையான உரிமை கோரிய இரு இந்து அமைப்புகளுக்கும் ஒரு இஸ்லாமிய அமைப்புக்கும் மூன்று பகுதிகளாகப் பங்கிட்டு வழங்க வேண்டுமெனத் தீர்ப்பளித்திருக்கிறது அலகாபாத் உயர் நீதிமன்றம். பல பத்தாண்டுக் காலமாக நாட்டின் இறையாண்மைக்கும் மதநல்லிணக்கத்துக்கும் ஊறுவிளைக்கும் சிக்கல் தொடர்பான வழக்கு என்பதால் பலதரப்பினரும் பதற்றத்துடன் எதிர்நோக்கியிருந்தனர். செப்டம்பர் 30ஆம் தேதி அளிக்கப்பட்ட தீர்ப்புமீது கருத்துத் தெரிவித்த பல்வேறு கட்சிகளின் பிரதிநிதிகளும் தம் ஓட்டுவங்கிகளுக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் நீதிமன்ற அவமதிப்பு என்னும் குற்றச்சாட்டு எழுந்துவிடாதபடியும் மிக எச்சரிக்கையாக வாக்கியங்களைக் கையாண்டனர். தீர்ப்புமீது அதிருப்திகொண்

சந்திப்பு
சந்திப்பு: தேவிபாரதி, செல்லப்பா  

‘தமிழக அரசியல் களத்தில் செல்வாக்குப் பெற்றவர்கள் பற்றிய கருத்துக்கணிப்பு ஒன்றை வெளியிட்டதற்காக மதுரைத் தினகரன் அலுவலகத்தின் மீது 2007 மே 9 அன்று தாக்குதல் நடத்தி, அதன் மூன்று அப்பாவி ஊழியர்கள் கொல்லப்பட்டது தொடர்பான வழக்கை முதலில் மாநிலக் காவல் துறைக் குற்றப்பிரிவினரும் பின்னர் மத்தியப் புலனாய்வுத் துறையினரும் விசாரித்ததும் அது தொடர்பான வழக்கில் விசாரணை நீதிமன்றம் குற்றம்சாட்டப்பட்ட 17பேரையும் விடுதலை செய்து 2009 டிசம்பர் 9 அன்று தீர்ப்பளித்ததும் அனைவரும் அறிந்த செய்தி. இது போன்ற முக்கியத்துவமுடைய வழக்குகளின் விசாரணை, நீதிமன்ற நடைமுறைகளின் மீது அக்கறை காட்டும் ஊடகங்கள் இம்முறை மௌனமாக இருந்தன. விசாரணை குறித்த விவரங்களையோ தீர்ப்பு குறித்த விமர்சனங்களையோ வெளியிடுவத

கட்டுரை
சு.கி. ஜெயகரன்  

மனித குலத்தின் பிறப்பிடமான ஆப்பிரிக்கக் கண்டத்தில் முப்பது நாடுகளில் ஏறத்தாழ ஒரு லட்சத்திற்கு மேற்பட்ட பாறை ஓவியங்கள் கண்டறியப்பட்டுள்ளன. அவற்றில் எண்ணிக்கையில் அதிகமானவை சகாரா பாலைவனத்திலும் தெற்காப்பிரிக்க நாடுகளிலும் உள்ளவை. வரலாற்றுக் காலத்திற்கு முன் வாழ்ந்த மனித குலம், வாழ்க்கை முறை, நம்பிக்கைகள், கற்பனை வளம் பற்றி அறிய அவை உதவுகின்றன. ஐரோப்பாவில் உள்ளதுபோல முப்பதாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட ஓவியங்கள் ஆப்பிரிக்காவில் இல்லையென்றாலும் பன்னிரெண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வரையப்பட்ட பல ஓவியங்கள் பாதுகாக்கப்பட்டுள்ளன. கிழங்குகளையும் காய்கனிகளையும் சேகரித்து, வேட்டையாடி காடோடிகளாகத் திரிந்த கற்கால மனிதர், சிறிய குழுக்களாக வாழத் தொடங்கிய காலத்தில் தங்கள் எண்ணங்களை ம

பத்தி
கண்ணன்  

‘படையெடுப்பு சீனர்களின் படையெடுப்பின் காலம் இது. நெடுங்காலமாக ஒரு பெரும் கோட்பாட்டுச் சிறைச்சாலையில் அடைபட்டுக் கிடந்த மக்களில், அதன் புதிய பொருளாதாரக் கொள்கைகள் காரணம் வசதி பெற்றிருக்கும் புதிய வர்க்கம் உலகைப் பார்க்கக் கிளம்பியிருக்கிறது. குறிப்பாக மேற்கை. மேற்கின் தீமைப் பண்பாடு பற்றிய சீன அரசின் அரை நூற்றாண்டுகாலப் பிரச்சாரத்தின் தாக்கத்தை இனி ஆராய்ந்துதான் பார்க்க வேண்டும். இப்படை எடுப்பின் பார்க்கக் கிடைக்கும் மற்றும் ஊகிக்கக்கூடிய பின்விளைவுகள் சுவாரஸ்சியமானவை. 2009 கொழும்பில் விமான முனையத்திலேயே இடம் மாறி பிராங்பர்ட் செல்லும் விமானத்தைப் பிடிக்க வேண்டும். பாதுகாப்பு அதிகாரிகள் இருவர் கையில் சிக்கிக்கொண்டேன். பெரும் ஆத்திரத்தோடு இருந்தார்கள். என் தமிழக

கட்டுரை
சுகுமாரன்  

‘“அப்போதுதான் உழுதுபோட்டிருந்த கரிசல் வயல்வெளிக்குக் குறுக்காகத்தான் வீட்டுக்குப் போகும் வழி. புழுதி படர்ந்த அந்த வழியாக நடந்தேன். உழவு முடிந்த அந்த வயல் ஒரு பெரிய நிலவுடைமையாளனுடையது. பாதையின் இருபுறமாகவும் எனக்கு முன்னால் தெரியும் குன்றின் அடிவாரத்திலுமாகவும் வயல் விரிந்துகிடந்தது. சீரான உழவு. சால்களையும் சதுப்பான மண்ணையும் தவிர வேறு எதுவும் தென்படவில்லை. ஆழமாக உழவு செய்யப்பட்டிருந்ததனால் மண்ணில் புல்லையோ வேறு செடிகளையோ பார்க்க முடியவில்லை. எல்லாம் கறுப்பாக இருந்தன. உயிரற்ற அந்தக் கரிய பூமியில் உயிருள்ள ஏதாவது தென்படுமா எனச் சுற்றும்முற்றும் பார்த்துக்கொண்டே ‘மனிதன்தான் எத்தனை நாசக்காரன். தன்னுடைய இருப்புக்காக உயிருள்ள வெவ்வேறான எத்தனை தாவரங்களை அழி

ஓவியங்கள்: அனந்தபத்மநாபன்  

றஷ்மி கவிதைகள் மரணத்தின் பின்னான உதடுகள்... ஆரத்தழுவுதல் வழி நட்பு மேலிடலை உனது வழக்கின் படி வலியுறுத்தி சொற்ப நாழி தான்... வலிந்து படுக்கையில் சரிக்கப்பட்டபோது வேட்டை நிமித்தம் ஏவிவிடப்பட்டிருந்த வெறி நாய்களைக் கண்டு ஒரு கணம் நடுங்கி நிலைக்கு வந்தாய். படுக்கை அறை மென் மஞ்சள் உமிழும் இரா விளக்கு பொன்னிறத்திலிருந்து வதனத்தின் பூச்சைக் கரைக்க உனது முகம் சிவப்பைச் சார வெளிறிற்று சுற்ற கூச்செறியும் முலைகள் அற்று ஸ்தனங்களின் மட்டத்தில் இளநிறத்தில் புதைந்திற்று காம்பு உள்மடித்து இறுக மூடியிருந்த இரத்தம் சுண்டியோடா உலர் இதழ்களில் இருந்து கையகப்படுத்தத் தொடங்குகின்றேன்... மரணத்தின் பின்னான உதடுகள்... திமிறலின் தாக்குப்பிடிக்கும் திறன் வலு தளர்ந்தபோது பாதி வ

சிறுகதை
 

1 கேத்ரீன் புதிய பட்டுச்சட்டையுடன் தட்டு முழுக்க இனிப்புகளை நிரப்பி, போதகர் பிரான்சிஸிடம் கிறிஸ்துமஸ் வாழ்த்துப் பெற வெகு காலையிலேயே வந்தபோது ஜேம்ஸ் தனக்கெடுத்த உடைகளை அணியாமல் துண்டை மட்டும் இடுப்பில் கட்டிக்கொண்டு தன் அம்மாவுடன் மாமா பிரான்சிஸுசுக்குக் கேட்காதவாறு சண்டையிட்டுக்கொண்டிருந்தான். பின் வாசலில் உருவமொன்று தன்னைக் கண்டதும் ஏன் பதுங்குகிறதென எண்ணி கேத்ரீன் ஒரு கணம் தயங்கி நின்றாள். அது ஆபிரகாம் போலல்லவா இருந்தது? அப்பாகூட நேற்றிலிருந்து ஆபிரகாம் வந்து விட்டானா, வந்துவிட்டானா எனக் குரலில் ஒருவிதப் பரபரப்புடன் வாசலுக்கும் தெருவிற்கும் பார்வையை ஓட்டியபடியே தன் அத்தையிடம் ஓயாமல் கேட்டுக் கொண்டேயிருந்தாரே? இல்லை. அவனாக இருக்காது. ஜேம்ஸின் உறவுக்காரனாக இருக்கக்கூ

நோபல் விருது
என்னெஸ்  

‘கொலம்பியரான காப்ரியேல் கார்ஸியா மார்க்கேஸுக்கு 1982இலும் மெக்ஸிகரான ஆக்டேவியா பாஸுக்கு 1990இலும் இலக்கியத்துக்கான நோபெல் பரிசுகள் அளிக்கப்பட்டன. உலக இலக்கியத்தில் ஆர்வமுள்ள வாசகர்கள் அடுத்து இன்னாருக்குத் தான் என்று பந்தயம் கட்டிக்கொண்டிருந்தார்கள். ஜோர்ஜ் லூயி போர்ஹேவா, கார்லோஸ் ஃபுவந்திஸா, மரியோ வர்கஸ் யோஸாவா என விவாதங்கள் நடத்திக்கொண்டிருந்தார்கள். அதற்குக் காரணம் லத்தீன் அமெரிக்க இலக்கியம் உலக இலக்கியங்களில் ஏற்படுத்திய அசைவுகள்தாம். சென்ற நூற்றாண்டின் அறுபதுகளின் இறுதியில் எழுந்த லத்தீன் அமெரிக்க இலக்கிய அலை ஏறத்தாழ உலக மொழிகள் எல்லாவற்றிலும் பாதிப்பைச் செலுத்தியது. வரலாற்றையும் அரசியலையும் தமது பண்பாட்டையும் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்கள் மீட்டெடுத்தனர

கட்டுரைத் தொடர்: பசுமைப் புரட்சியின் கதை-15
சங்கீதா ஸ்ரீராம்  

பசுமைப் புரட்சி மனித இனத்தை எத்தகைய விபரீதப் பாதையில் தள்ளியிருக்கிறது என்பதைப் பற்றிப் பார்ப்பதற்கு முன், முதலாளித்துவத்தின் இன்றைய செயல்பாட்டைப் பற்றி அவசியம் புரிந்துகொள்ள வேண்டும். ‘உணவு’, ‘விவசாயம்’ (விதைகளில் தொடங்கி, நம் தட்டில் வந்துசேரும் உணவாகும்வரை) இன்று தொழில்களாக, வியாபாரத்திற்குரியனவாக மாறியுள்ளன. முதலாளித்துவ அமைப்பு, இந்தத் தொழில்களின் மூலம் எப்படியெல்லாம் இயற்கை வளங்களைச் சுரண்டி லாபத்தைப் பெருக்கலாம் என்பதையே தன் முக்கிய நோக்கமாக வைத்துச் செயல்படுகிறது. நமது பொருளாதார அமைப்பின் இத்தகைய முனைப்பு, நமது சமுதாயம், அரசியல், விஞ்ஞானம், கல்விமுறை ஆகிய அனைத்தின் முனைப்பையும் முடிவு செய்துவருகிறது. மனித இனத்தின் எதிர்காலத்தையே கேள்விக

கட்டுரை
க. பூரணச்சந்திரன்  

மானிடவியல் நோக்கில் குறிஞ்சி என்பதே தமிழின் ஐந்திணைகளில் ஆதித்திணையாக இருக்க முடியும். காரணம் உழவுதோன்றா இயற்கை நிலையை எடுத்துக்காட்டுவது அது. பாரியைக் கபிலர் மூவேந்தர்க்கும் எதிர் நிறுத்திப் போற்றும் பாடலிலும் பறம்பின் இந்த ஆதிநிலை போற்றப்படுவது குறிப்பிடத்தக்கது. மேலும் ஆடவர் குறவராக/ வேடுவராக இருந்ததால் குடும்பம் என்னும் அமைப்பு ஒரு தாய்வழி (Matriarchal) அமைப்பாகவே இருந்திருக்க இயலும். மக்கள் பெருகிப் பிற வாழ்க்கைமுறையைத் தேடி முல்லை நிலத்திற்கு வந்த பிறகு மாடுமேய்க்கும் வாழ்க்கை உருவாயிற்று. இது பெண்களுக்குப் பாதுகாப்பையும் அடிமைத்தனத்தையும் ஒருங்கே உருவாக்கிற்று. மாடுகளை ஒருவர் அதிகம் சேர்த்துக்கொண்டவுடன் அவரது 'மாடு' (செல்வம்) பெருகியதாகக் கருதப்பட்டது. மாடுகளைப்

அறிக்கை: சர்வதேசத் தமிழ் எழுத்தாளர்கள் கலைஞர்கள் கூட்டறிக்கை
 

வரலாறு நெடுகிலும் படைப்பாளிகள், கலைஞர்கள் ஒடுக்குமுறைக்கு எதிராகவும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாகவுமே சார்புநிலை எடுத்திருக்கிறார்கள். ரஷ்யப் புரட்சியைச் சாட்சியமாக இருந்து கண்டு சொல்ல, அமெரிக்க எழுத்தாளர் ஜோன் ரீட் மொஸ்கோ சென்றார். ஸ்பானிய உள்நாட்டு யுத்தத்தில் குடியரசுவாதிகளுக்கு ஆதரவாகச் சார்புநிலையெடுத்து, அவர்களுக்காகப் போராட ஸ்பெயினுக்கு விரைந்தனர் எர்னஸ்ட் ஹெமிங்வே, ஜோர்ஜ் ஓர்வெல், கிறிஸ்ரோபர் கோட்வெல் போன்ற படைப்பாளிகள். வியட்நாம் மக்களுக்கு ஆதரவாக, அமெரிக்க ஒடுக்குமுறைக்கு எதிராகத் தெருவில் இறங்கிப் போராடினார்கள் தத்துவவாதிகளான பேர்ட்ரண்ட் ரஸ்ஸல், ழீன் போல் ஸார்த்தர் போன்றோர். ஈராக் யுத்தத்தின்போது, ‘அமெரிக்க ஏகாதிபத்தியம் உலகை அழிக்க வந்த ஒரு

கட்டுரை
இ. அண்ணாமலை  

‘மேற்குலகம் என்னும்போது ஐரோப்பாவையும் அமெரிக்காவையுமே இந்தக் கட்டுரை குறிக்கிறது. இங்குள்ள நாடுகளில் உயர்கல்வியில் தமிழின் நிலை பற்றியே இது பேசுகிறது. ஒரு தலைமுறைக்கு முன் இந்த நாடுகளில் குடியேறிய தமிழ்ப் பெற்றோர்களும் இலங்கையில் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையால் நாட்டை விட்டு வெளியேறிய பெற்றோர்களும் தங்கள் பிள்ளை களுக்குத் தமிழ்ப் பரிச்சயம் போய்விடக் கூடாது என்றும் தமிழ்ப் பாரம்பரியத்தின் தொடர்ச்சியைத் தக்கவைப்பதற்காகவும் தனிப்பட்ட முயற்சியால் பள்ளிப் பாடத்திட்டத்திற்கு வெளியே நடத்தப்படும் தமிழ் வகுப்புகளைப் பற்றி இந்தக் கட்டுரை பேசவில்லை. இவற்றின் கல்வி நோக்கமும் உள்ளடக்கமும் வெவ்வேறு. இவற்றைப் பற்றித் தனியே கட்டுரை எழுத வேண்டும். இதே போல, சிறுபான்மையினரின் ம

அம்பை  

‘ஆறு மாதங்களுக்கு முன்பு தோழி ஒருத்தி சென்னையிலிருந்து தொலை பேசியில் அழைத்து, சூடாமணி உடல் நலம் குன்றி இருப்பதாகவும், நான் வர விரும்புவேனா என்றும் கேட்டாள். சூடாமணியிடம், “லக்ஷ்மிக்குச் சொல்லவா?” என்று கேட்டபோது “சொல்லு. ஆனால் அவள் பயந்துபோகும்படி எதுவும் சொல்ல வேண்டாம்” என்று சொன்னாளாம். அது அவள் சுபாவம். யாரும் அவளுக்காகக் கஷ்டப்படக் கூடாது. நான் சென்றேன். நாலைந்து நாட்களை அவளுடன் மட்டுமே கழிக்கச் சென்றேன். முதல் நாளே எந்த வேலையாக வந்தேன் என்று விசாரித்தாள். அவளைப் பார்க்கத் தான் வந்திருப்பதாகக் கூறியதும் “ஏன் வீண் சிரமம்?” என்றாள். அவளுடைய மூன்று சகோதரிகளில் அப்போது இருந்தது அவள் அருகிலேயே இருந்த பத்மா மட்டும்தான். அவள்

மதிப்புரை
பொன்னீலன்  

அய்யா வைகுண்டசாமி அருளிய அகிலத்திரட்டு அம்மானை பதிப்பாசிரியர்: அ. கா. பெருமாள், காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி.சாலை, நாகர்கோவில்-629 001. பக்கம் 592. விலை ரூ. 350 ‘தென்னகத்துச் சமூக எழுச்சியில் ஆர்வம் உள்ளோர் பலரும் வைகுண்டசாமியை அறிவார்கள். 1809இல் சுசீந்திரம் அருகே சாமித்தோப்பு என்னும் சிற்றூரில், எளிய உழைப்பாளர் குடும்பத்தில் பிறந்து வளர்ந்த அவர், தன் 24ஆம் வயதில் திருச்செந்தூரில் ஞானம் பெற்று, அருட்தொண்டின் வழியாகச் சமூக அறத்தொண்டு செய்தார். உயர்சாதி இறுக்கங்களுக்குள் அன்று நசுங்கிக்கொண்டிருந்த பல உழைக்கும் சாதிகளை அன்பு என்னும் சரத்தில் ஒன்றாகத் தொடுத்து நெறிப்படுத்தினார். சீடர்கள் பெருகினர். தங்கள் ஆடு மாடு, வீடு முதலிய செல்வங்களையெல்லாம

தலையங்கம்
 

பெருமளவிலான நிதி முறைகேடுகள், தரமற்ற, முழுமைபெறாத கட்டுமானப் பணிகள், பயங்கரவாத அச்சுறுத்தல், பல்வேறு நாடுகளையும் சேர்ந்த முன்னணி விளையாட்டு வீரர்களின் புறக்கணிப்பு முதலான காரணங்களால் திட்டமிட்டபடி நடத்தப்படுமா என்பது பற்றிய சந்தேகங்களைப் பொய்யாக்கிவிட்டு, பதக்கப்பட்டியலில் இரண்டாமிடத்துடன் பத்தொன்பதாவது காமன்வெல்த் போட்டிகளை நடத்தி முடித்துவிட்ட பெருமிதத்தில் திளைத்துக்கொண்டிருக்கிறது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு. தனக்கு அடிமைப்பட்டுக் கிடந்த நாடுகளின் மக்களிடையே நட்புறவைப் பேணுவதற்காகப் பிரிட்டிஷ் பேரரசின் பெருந்தன்மையின் விளைவாக 1930இல் முதன்முதலில் நடத்தப்பட்ட இப்போட்டிகளில் தற்போது அதன் பழைய காலனி நாடுகளோடு வேறு பல நாடுகளும் உறுப்பினர்க

 

‘‘நயத்தக்க நாகரிகர்’ என்னும் சொற்றொடர் பழ. அதியமான் எழுதியுள்ள ‘முழுமையின் திசைநோக்கிய பயணம்’ என்னும் கட்டுரையைப் படித்து முடித்ததும் இங்கு நினைவுக்கு வந்தது. பெரிய வேறுபாடு என்னவெனில் ‘நஞ்சுண்டு’ எனக் குறளில் வரும் சொல்லுக்கு மாற்றாக ‘அமுதுண்டு’ என்றோ ‘தேனுண்டு’ என்றோ வைத்துக்கொள்ளலாம். கத்திமுனையில் திறனாய்வுத் துலாக்கோலைப் பிடிப்பதற்கு மிகுந்த திறமை வேண்டும். வயதைப் புறந் தள்ளி வே. ஆனைமுத்து தொகுத் தளித்துள்ள நூல்களில் காணப்படும் குறைகளை அடுத்த பதிப்பில் சரிசெய்வதற்கான பணிகளை அவருடன் அமர்ந்து செய்ய ஆர்வம் நிறைந்த அன்பர்கள் முனைவது நன்று. அடுத்த பதிப்பு இன்னும் பத்தாண்டுகள் கழித்து வருவதாக இருப்பினும்