சிறப்புப் பகுதி ஆளுமை: அருந்ததி ராய் - தணிக்கை மீதான இந்தியாவின் மகத்தான காதல் சிறப்புப் பகுதி ஆளுமை: அருந்ததி ராய் - நீதியின் பெண் குரல்: அதிகாரத்துக்கு அடிபணியாத அருந்ததி ராய் சிறப்புப் பகுதி ஆளுமை: அருந்ததி ராய் - இரண்டு சூடான அவித்த முட்டைகளும் காஷ்மீரமும் சிறப்புப் பகுதி ஆளுமை: அருந்ததி ராய் - தார்மீக ஆவேசம்

சிறப்புப் பகுதி ஆளுமை: அருந்ததி ராய்
 

“தேச பக்தி என்பது அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம்” என்று சுமார் 250 ஆண்டுகளுக்கு முன்பு சாமுவேல் ஜான்சன் கூறினார். இக்கூற்றை இந்திய தேசியவாதத்தோடு இணைத்துப் பார்க்கலாம். சையது அலி கிலானி கலந்துகொண்ட காஷ்மீர் பற்றிய கூட்டத்தில் அருந்ததி ராய் பேசிய பேச்சிற்காக அவர்மீது தேசத்துரோகக் குற்றச்சாட்டு சுமத்தி அவரைக் கைதுசெய்து விசாரிக்க வேண்டும் என்ற அச்சுறுத்தலுக்கு வேறு எந்த விளக்கமும் இருக்க முடியாது. நான் அந்தக் கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. ஆனால் அதன் பிறகு தன் தரப்பு நியாயத்தைக் கூறும் விதத்தில் அவர் வெளியிட்ட மனத்தைத் தொடும் அறிக்கையைப் படித்துப் பெருமிதமும் வெட்கமும் அடைந்தேன். நான் உளவியலாளன். அரசியல் விவகாரங்களை அலசுபவன். தணிக்கைக்கு எதிரான கருத்துகளை

சிறப்புப் பகுதி ஆளுமை: அருந்ததி ராய்
மாலதி மைத்ரி  

1990இல் இந்தியன் பனோரமாவின் மூன்று நாள் திரைப்பட விழா செப்டம்பர் மாதம் புதுச்சேரியில் நடந்தது. அதில் ஒரு படம் ஆனியும் அவள் நண்பர்களும் (In which Annie gives it those ones) என்று என் நினைவில் பதிந்திருந்தது. தில்லியில் கட்டடக்கலை பயிலும் மாணவர்களைப் பற்றிய கதை. ஒரு பிரெஞ்ச் திரைப் படம் மாதிரியான கதை நிகழ்வும் சம்பவங்களுமாக, படம் இந்தியத் திரைப்படங்களிலிருந்து மிக வித்தியாசமாக இருந்தது. அதில் ஆனியாக நடித்த பெண்ணின் ஆளுமையிலிருந்து நான் விடுபடவே இல்லை. தலை நகரில் மாறிவரும் இந்திய இளைஞர்களின் வாழ்க்கையைப் படம் பிடித்திருந்தனர். மாணவர்கள் ஒன்றாகச் சேர்ந்து கார் ஷெட் ஒன்றில் தங்கி வாழ்க்கையைப் பகிர்ந்துகொள்வதும் அவர்களின் கனவுகளும்தான் கதை. படம் முடிவில் இந்த நண்பர்கள் யார் யார்

சிறப்புப் பகுதி ஆளுமை: அருந்ததி ராய்
அம்பை  

பாபரி மசூதி தீர்ப்பு வரப்போகிறது என்றதும் மும்பை முழுவதும் கவலைகூடிய ஒருவித இறுக்கம் உண்டாகியது. வந்த தீர்ப்பு ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கவில்லை. அப்போதும் இது பற்றிப் பேசிய சாதாரண முஸ்லிம் குடிமக்கள் ‘அங்குக் கோவில் கட்ட வேண்டுமானால் நாங்கள் தோள் கொடுக்கிறோம். போதும் இந்த பிரச்சினையும் அதை ஒட்டிய சச்சரவும்’ என்றனர். 1992 பாபரி மசூதி இடிப்பு நிகழ்வை எப்போதோ நடந்த வெறும் தகவலாக மட்டுமே அறிந்த 1992க்குப் பின் வந்த இளைய தலைமுறையினர் தீர்ப்பும் அதை ஒட்டி நேரிட்ட கவலையும் மன இறுக்கமும் வழக்கம் போல் கடந்த காலம் என்னும் புதைகுழியில் காலைப் புதைத்துக்கொண்டு மீள முடியாமல் தவிக்கும் மூத்த தலைமுறையினரின் வழக்கமான மாரடிப்பு என்றே நினைத்தனர். அயோத்யாவில் அந்த இ

சிறப்புப் பகுதி ஆளுமை: அருந்ததி ராய்
கானகன்  

இனி அருந்ததி ராயைப் பொதுமேடைகளில் காண்பது கடினம் என்றே நினைக்கிறேன். அண்மையில் காஷ்மீர் தொடர்பான கருத்தரங்கில், தான் இந்தியனல்ல எனப் பகிரங்கமாக அறிவிக்கும் தீவிரவாதத் தலைவர் கிலானியுடன் இணைந்து இந்திய ராணுவத்தின் அட்டூழியங்களையும் பொதுவாக இந்திய அரசின் அணுகுமுறையையும் கடுமையாக அவர் விமர்சிக்கக் கொதித்தெழுந்தனர் டைம்ஸ் நௌ ஆர்னாப் கோஸ்வாமி, சங்க பரிவாரத்தினர், மற்றும் நடுத்தரவர்க்க - தேசபக்தத் திலகங்கள். தனியாக எங்கு மாட்டினாலும் அவரை அடித்தே கொன்றுவிடக்கூடும் என்னும் சூழல் இப்போது உருவாகியிருக்கிறது. எப்படியும் அவர் பங்குபெறும் கூட்டங்களில் கலாட்டா செய்வார்கள், குழப்பம் விளைவிப்பார்கள். ஒட்டுமொத்த இந்தியாவும் தங்களுடையது என்று இறுமாந்திருக்கும் ஆளும் வர்க்கத்தினர்,

பத்தி
கண்ணன்  

தருணம் தினகரன் படுகொலை வழக்குத் தீர்ப்பு பற்றி மனித உரிமைப் போராளியும் வழக்கறிஞருமான சுதா ராமலிங்கம் அவர்களின் விமர்சனம் காலச்சுவடு இதழ் 131இல் (அக்டோபர் 2010) வெளிவந்திருந்தது. படுகொலை நடந்தது மே 2007இல். தீர்ப்பு வெளிவந்தது டிசம்பர் 2009இல். தீர்ப்பின் முடிவுகளை (எல்லோர்க்கும் விடுதலை) கோர்ட்டில் கனம் நீதிபதி அவர்கள் வெளிப்படுத்திய பின்னர் இப்பிரச்சினை பற்றி ஊடகங்கள் மௌனம் பழகின. சர்ச்சைக்குரிய இவ்வழக்கின் முழுத்தீர்ப்பும் ஆராயப்படவே இல்லை. ஊடக நிறுவனம் ஒன்று பட்டப்பகலில் ஊடகவியலாளர்கள் கண்முன்னர் தாக்கப்பட்டு, ஊழியர்கள் உயிருடன் எரிக்கப்பட்ட வழக்கின் அன்றாட நீதிமன்ற நடப்புகளை நாளிதழ்கள் வெளியிடவில்லை. சன் குழுமத்தின் ஊடக ஆதிக்கப் போக்குகளையும் இவ்வழக்கின் மையத்தி

கட்டுரை
 

அலகாபாத் உயர்நீதிமன்றத் தீர்ப்பு (சமய) நம்பிக்கையை (அல்லது பக்தியை) உள்ளடக்கியதாக இருப்பதால் அது பிழையானது என்றுதான் எல்லோருமே நம்புகிறார்கள் எனச் சொல்லிவிட முடியாது. உதாரணமாக, நான் அதை நல்ல தீர்ப்பு என்று கருதுகிறேன். பெரும் எண்ணிக்கையிலான இந்துக்களும் முஸ்லிம்களும் - வழக்குத் தொடுத்த ஹமீம் அன்சாரியும் வழக்கின் இன்னொரு தரப்பான நிர்மோரி அகாடாவைச் சேர்ந்த மஹந்துகளும் அந்த அமைப்பிலுள்ள மற்றவர்களும் மதச்சார்பின்மைக் கொள்கையில் தீவிரமாக இருக்கும் சோலி சோரப்ஜி, ஜாவித் அக்பர் போன்ற அறிவுஜீவிகளும் அப்படியே கருதுகிறார்கள். நீதித்துறை என்பது சமூகத்தின் ஒரு பகுதி; அதன் விருப்பு வெறுப்புகளையும் மதிப்பீடுகளையும் கொண்டது என்று சொல்லப்படுவதை லட்சக்கணக்கான தடவை நான் கேட்டிருக்கி

சிறுகதை
 

அன்றும் வழக்கம்போல் நாராயணமூர்த்தி காலை வேளையில் நிலத்துக்குப் புறப்பட்டார். ஊரில் வசிப்பவர்களில் பலர் நகரத்துக்குக் குடி பெயர்ந்து போய்விட்டதால் வெறிச்சோடியிருந்த தெருக்களின் வழியாக நடந்தார். குட்டையான கோபுரத்தில் சுண்ணாம்புச் சிற்பங்கள் சிதைந்து மூளியாக நிற்கும் பழைய மாரியம்மன் கோயிலையும் கடந்து ஆற்றை நெருங்கினார். நிறைய மரங்கள் வெட்டப்பட்ட கரை வெறுமையாக நீண்டிருந்தது. பழைய ஞாபகங்ளோடு ஆற்றில் முகத்தைக் குனிந்து பார்ப்பதுபோல் எஞ்சியிருந்த சில மரங்கள் கவிந்து நின்றிருந்தன. ஆழ்ந்த பெருமூச்சுடன் அவர் ஆற்றில் இறங்கினார். எங்கும் மணல் பரவியிருந்த ஆறு பெரிய பாலைவனமாகத் தோற்றமளித்தது. எண்ணற்ற காலடிகள் அதன் குறுக்காகப் பதிந்து உருவான தடத்தில் நடந்தார். தூரத்தில் நிழல்களைப

 

விரைத்து மரித்தவர்கள் என் தேசம் ஒரு புகலிடம் அங்கே பைத்தியக்காரர்கள் தங்கள் கண்களால் பேசுவார்கள் ஏனெனில் அவர்கள் நாவற்றவர்கள் கறுத்த இரவில் நான் அதில் நடந்திருக்கிறேன் மௌனம்வரை நான் அதில் நடந்திருக்கிறேன் கல்லறைவரை நான் அதில் நடந்திருக்கிறேன் வனங்கள் பேசுவதைக் கண்டிருக்கிறேன் இரக்கமற்ற விளக்குகளோடுள்ள மாநகரங்கள் நடைபாதையில் ஆட்டோக்கள் ஜாக்கிரதை என் சூரியனைக் கடல் திணறடிக்கிறது ஜாக்கிரதை என் குரலைக் கடல் மூடுகிறது இன்று பைத்தியக்காரப் பெண்கள் பாறைகளிடம் பேசுகிறார்கள், மலைகளுக்குக் கதைகளைச் சொல்கிறார்கள் எமது மரித்தவர்கள் விரைத்தே வெளியேறினார்கள் எமது மரித்தவர்கள் நடந்தே போனார்கள் - அல்ஜீரியா, வடஆப்ரிக்கா மாலிகா ஓலாசென் நின்றுகொண்டிருப்பது யார்? முதலில் உனது

நேர்காணல்: குடமாளூர் ஜனார்த்தனன்
 

காட்டினின்றும் வருகுவதோ - நிலாக் கற்றை கொண்டு தருகுவதோ - வெளி நாட்டினின்றும் இத்தென்றல் கொணர்வதோ நாதமிஃதென் உயிரையுருக்குதே எங்கிருந்து வருகுவதோ - ஒலி யாவர் செய்குவதோ? - பாரதி வழக்கமான கேள்வியிலிருந்தே தொடங்கலாம். குடமாளூர் ஜனார்த்தனன் சங்கீதத்துக்குள் வந்த வழிகள் எவை? வழக்கமான பதில்கள் எதுவுமில்லை என்பது உண்மை. முதல் குரு என்னுடைய தகப்பனார்தான். முதல் தூண்டுதல் அப்பா என்றாலும் சங்கீதம் கூடுதல் சீரியசாகத் தோன்றக் காரணம் என்னுடைய ஆரம்பப் பள்ளி ஆசிரியை. இசை ஆசிரியையாக இருந்த கலாவதி டீச்சர். அவர் மேலிருந்த விருப்பத்தால்தான் பாட்டெல்லாம் பாடத் தொடங்கினேன் என்றும் தோன்றுகிறது. ஒருவேளை அவர்கள் கணக்குச் சொல்லிக் கொடுத்திருந்தால் நான் கணிதப் பேராசிரியராகப் போயிருப்பே

கட்டுரை
பொ. லாசறஸ் சாம்ராஜ்  

1905இல் நடந்த ஜப்பான் - ரஷ்ய யுத்தத்தில் வெற்றிபெற்ற ஜப்பான் 1910இல் கொரிய தீபகற்பத்தைத் தன் காலனி நாடாக்கிப் பல்வேறு அடக்குமுறைகளைக் கட்டவிழ்த்துவிட்டது. முப்பத்தாறாண்டுகள் ஜப்பானின் காலனி ஆதிக்கத்தில் இருந்த கொரியா இரண்டாம் உலகப் போரில் தோல்வியை ஒப்புக்கொண்டு, ஜப்பான் சரணடைந்த நாளான ஆகஸ்டு 15, 1945இல் விடுதலை பெற்றது. ஆனால் இரண்டாம் உலகப் போருக்குப் பின்பு ஐரோப்பாவைக் குறிப்பாக, ஜெர்மனியைக் கூறுபோட்ட வல்லரசுகளான அமெரிக்காவும் சோவியத்தும் கொரிய தீபகற்பத்தையும் கூறுபோட்டன. அதன்படி, 38ஆம் அட்சரேகைக்கு வடக்கு-தெற்கு எனப் பிரித்து, ஆகஸ்டு 15, 1948இல் தென்கொரியாவைத் தனிநாடாக அமெரிக்கா அறிவித்தது. சோவியத்தின் உதவியோடு செப்டம்பர் 9, 1948இல் வடகொரியா தன்னைக் கம்யூனிச

பத்தி: பயணிக் குறிப்புகள்
பயணி  

“நம்ம மாரியம்மன் கோயிலில் தீமிதித் திருவிழா, ஞாயிற்றுக்கிழமை மதியம் நான்கு மணிக்கு. பார்க்க வருகிறீர்களா?” என்று யாராவது கேட்டால், அதில் உற்சாகம் அடைவதற்குச் சாதாரணமாக எனக்கு ஏதும் இருக்காது. ஆனால் இந்தத் தகவல் எனக்கு வந்துசேர்ந்த சூழலில் சில தனித்தன்மைகள் இருந்தன. நான் இருந்தது, ஆஸ்திரேலியா, நியூசிலாந்துக்கு அப்பால் பசிபிக் பெருங்கடலின் நடுவிலிருக்கிற குட்டி நாடான ஃபிஜித் தீவின் தலை நகரான சுவா என்னும் நகரத்தில். இந்தத் தகவலைச் சொன்னவர் அயல்நாடுவாழ் இந்தியர்களில் தலைசிறந்தவர்களுக்காக நமது குடியரசுத்தலைவர் வழங்கும் ‘பிரவாசி பாரதிய சம்மான்’ விருது பெற்ற சீறி ரெட்டி என்னும் ஃபிஜி வாழ் பெரும்புள்ளி. தென்னிந்திய வம்சாவழியைச் சேர்ந்தவராயினும் அவர் இதைச் ச

கட்டுரைத் தொடர்: பசுமைப் புரட்சியின் கதை-16
சங்கீதா ஸ்ரீராம்  

முகலாயர்கள் சிறிய அளவில் நமது வேளாண்முறையை மாற்றியமைத்தார்கள். ஆங்கிலேயர்கள் அதைப் பெரிய அளவில் மாற்றியமைத்தார்கள். பிறகு சுதந்திர இந்தியாவின் அரசாங்க - தனியார் நிறுவனக் கூட்டணி இதை அடுத்த கட்டத்துக்குக் கொண்டுபோயிற்று. இந்திய வேளாண்முறையில் ஏற்பட்ட மாற்றத்தின் உச்சகட்டமாகப் பொய்களை விதைத்து வெற்றிகரமாக வளர்த் தெடுக்கப்பட்ட ‘பசுமைப் புரட்சி’யின் கொடுமைகளைப் பற்றித் தோண்டத் தோண்டப் புதிய உண்மைகள் கிடைத்தவண்ணம் உள்ளன. இத்தனை வன்முறையான ஒரு திட்டம் அரங்கேறி, இன்றும் வெற்றிநடை போட்டுக்கொண்டிருப்பதற்கு யார் காரணம்? ‘மொன் சாண்டோ’ என்று ஏதோ நமக்கும் அதற்கும் தொடர்பே இல்லாதது போல் கூறிவிட்டு நம் வேலையைப் பார்க்கப்போவதெல்லாம் இனி செல்லாது; பிரச்ச

திரை:
செல்லப்பா  

எந்தத் திரைப்படத்தையும் அது தொடங்கிப் பத்து நிமிடங்களுக்குள் பார்வையாளன் ஏற்பான் அல்லது மறுப்பான் என்னும் பொதுவிதியைப் புறந்தள்ளிக் காட்சிகளாக விரிகிறது மைனா. படமாக்கப்பட்ட நில அமைப்புக்குத் தக்கபடி ஏற்ற இறக்கங்களோடுதான் திரைக்கதை நகர்கிறது. ஆன்மாவற்ற எந்திரன் போன்ற தமிழ்ப் படங்களைப் பார்த்துப் பக்குவப்பட்டிருந்தால் மட்டுமே இதன் முதல் முப்பது நாற்பது நிமிடங்களைப் பார்வையாளன் கடக்க இயலும். கற்பனைத் திறனற்ற பால்ய பருவக் காட்சியமைப்புகள் அலுப்பைத் தருகின்றன. தரமான படங்களை எதிர் பார்த்துக் காத்திருக்கும் பார்வையாளர்களைத் தொடர்ந்து ஏமாற்றிச் செல்லும் தமிழ்த் திரைப்படச் சூழலில் வணிகச் சாத்தியத்துக்குட்பட்ட எல்லைக்குள் பயணப்பட்டபோதிலும் தரமான படத்துக்குரிய உயரங்களைத் தொட ம

கட்டுரை
வே. சுடர் ஒளி  

இதுநாள்வரை வெகுசிலரால் மட்டுமே பேசப்பட்ட கல்வி பற்றி இன்று சாமானியர்களும் பேசுகிற சூழல் தமிழகப் பள்ளிக்கல்வி வரலாற்றிற்குப் புதிது. பலராலும் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சமச்சீர் கல்வி, தமிழ்நாட்டில் இந்தக் கல்வியாண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இக்கல்விமுறை குறித்து அரசு தரப்பாலும் ஊடகங்களாலும் சொல்லப்பட்ட செய்திகளும் உண்மையில் நடந்திருப்பதும் ஒன்றுதானா? திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியில் சமச்சீர் கல்விமுறை கொண்டுவரப்படுமென்று வாக்குறுதி அளித்தது. சமச்சீர் கல்விமுறையை உருவாக்க, பேரா. முத்துக்குமரன் தலைமையில் கல்வியாளர்கள் ஒன்பது பேர் கொண்ட குழுவை அரசு செப். 2006இல் அமைத்தது. 21.04.2007இல் பேரா. முத்துக்குமரன் தலைமையிலான குழு தமிழ்நாடு முழுவதும் மேற்கொண்ட ஆய்வி

மதிப்புரை
மண்குதிரை  

தமிழ்க் கவிதை இரண்டாயிரம் வருடங்களுக்கு மேலான தொன்மையான மரபுடையது. சமூகத்தின் வாழ்வியலையும் கலாச்சாரத்தையும் தெரிவிக்கும் மிக முக்கியமான வரலாற்று ஆவணமாக நம் கைகளிலிருக்கும் காவியங்களெல்லாம் (கதைகள்) கவிதைத் தொனியிலே மொழியப்பட்டிருக்கின்றன. ஆனால் இன்று கவிதையும் கதையும் இலக்கியத்தின் இருவேறு வடிவங்களாகிவிட்டன. இவற்றில் கதைகளைவிட நவீனக் கவிதைகளின் போக்கு ஏமாற்றமளிப்பதாக இருக்கிறது. இப்போது வெளிவந்துகொண்டிருக்கும் பெரும்பாலான கவிதைகள் ஒரேவிதமான தொனியில் ஒரேவிதமானவற்றைப் பற்றிப் பேசிச் சலிப்பூட்டுகின்றன. ‘ கசப்பின் பாலைவெளியில் அலைந்து...’ என்பதுபோலத் தொடங்கும் கவிதைகள் வாசகனுக்கு மிகுந்த அயற்சியளிக்கின்றன. பதநீரில் பொங்கும் நிலா வெளிச்சம் ஆசிரியர்: எ

பதிவு
பெ. பாலசுப்ரமணியன்  

என். டி. ராஜ்குமாரின் பதநீரில் பொங்கும் நிலா வெளிச்சம் கவிதைத் தொகுதி, க. வை. பழனிசாமியின் ஆதிரை ஆகிய காலச்சுவடு பதிப்பக நூல்களின் வெளியீட்டு விழா கடந்த 15 ஆகஸ்ட் 2010 அன்று காலை சேலம் தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்றது. பெருமாள் முருகன் காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பில் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். கவிதைத் தொகுதியைப் பேராசிரியர் முத்துமோகன் வெளியிடப் பழனிசாமி பெற்றுக்கொண்டார். ராஜ்குமாரின் கவிதைகள் சேலம் பெரியார் பல்கலைக்கழகத்தில் தலித் இலக்கியம் என்னும் தாளுக்கான பாடத்தில் இடம் பெற்றிருந்ததாகவும் அவற்றைப் பாடமாக நடத்துவதற்கு எழுந்த எதிர்ப்பின் காரணமாக அத்தாளே பாடத்திட்டத்திலிருந்து நீக்கப்பட்டதாகவும் பெருமாள் முருகன் நினைவுகூர்ந்தார். நவீனச் சூழலில் வாழும் பழங்குடி

எதிர்வினை
 

நவம்பர் 2010 இதழில் ‘முல்லை சான்ற கற்பு’ என்னும் கட்டுரையை க. பூரணச்சந்திரன் எழுதியுள்ளார். இவரது ‘குறிஞ்சிப் பாட்டு: மலையின் பாடல்’ என்னும் கட்டுரை இரண்டு இதழ்களுக்கு முன்னர்க் காலச் சுவடில் வெளிவந்திருந்தது. இவற்றைத் தொடர்ந்து நெடுநல்வாடை, மதுரைக்காஞ்சி, மலைபடுகடாம் போன்ற செவ்விலக்கியப் பிரதிகளைக் குறித்துக் கட்டுரைகள் அவர் எழுதக்கூடும், அவரை எழுதக் கூடாது என்று சொல்லப்போவதில்லை. அப்படி எழுதுவதற்கு முன்பு அவரும் அதை வெளியிடுவதற்கு முன்பு காலச்சுவடு ஆசிரியர் குழுவும் பின்வரும் குறிப்புகளையும் கேள்விகளையும் மனத்தில் கொண்டால் நல்லது. இலக்கியம், சமூகம், அரசியல், எனப் பல தளங்களில் கருத்தியல்களையும் கொள்கைகளையும் நவீனத்துவம், பின்நவீனத்துவம் சார்

 

‘பொன்னகரமும் தங்கப் பதக்கமும்’ தலையங்கம் நம்நாட்டின் நிலையைக் கவலையுடன் அலசுகிறது. ஊழல் செய்பவர்கள் ஊழல் என்பது தமது பிறப்புரிமை போலக் கருதுகிற மாதிரி தெரிகிறது. அதுபற்றிய நாணமோ அவமானமோ கொள்வதற்கு மாறாக நேர்மையாளர் போல வஞ்சினம் கூறி முழங்குவதுதான் வேடிக்கை. ‘தேவதைகள் கால்பதிக்க அஞ்சிய நிலம்’ அயோத்தி தீர்ப்பு பற்றிய கட்டுரை வரலாற்றுணர்வோடு அமைந்திருந்தது. படையெடுப்பு என்று வரும்போது எல்லா நாடுகளிலும் கோயில்களை இடிப்பதும் கொள்ளையடிப்பதும் ஊர்களைத் தீயிட்டுக் கொளுத்துவதும் வழமையாகவே இருந்திருக்கிறது. ஒரே சமயத்தைச் சார்ந்திருந்தாலும் எதிரி என்னும் நிலையில் தம் சமயம் சார்ந்த கோயிலைக்கூட விட்டுவைப்பதில்லை என்பது வரலாறு. தமிழ்ச் சூழலில் வடமொழ

தலையங்கம்
 

கணித்தமிழ் குறித்த சர்ச்சைகள் அவ்வப்போது எழுவதும் மொழியியல், தொழில்நுட்ப எல்லைகளைத் தாண்டி அவை விரிவதும் புதிதல்ல. அண்மையில் ஏற்பட்டுள்ள விவாதமும் அத்தகையதே. கிரந்த ஒருங்குறிக்குள் தமிழ் எழுத்துக்களைச் சேர்ப்பது, தமிழ் ஒருங்குறிக்குள் ஏற்கனவே உள்ள ஜ, ஸ, ஷ, க்ஷ, ஹ ஆகியவற்றுடன் மேலும் சில கிரந்த எழுத்துகளைச் சேர்ப்பது தொடர்பான பரிந்துரைகள் தமிழ்க் கணினி உலகில் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இதில் தமிழ் அறிஞர்கள், தொழில்நுட்ப அறிவுடன் கணித்தமிழை அணுகும் ஆர்வலர்கள் ஆகியோர் தத்தமது கருத்துகளை முன்வைத்து விவாதிக்க, அரசியல்வாதிகள் விவாதத்தைத் திசை திருப்பிக்கொண்டிருக்கிறார்கள். தமிழுக்கு அபாயம் என்ற ஒப்பாரியும் கேட்கிறது. தமிழ் ஒருங்குறியில் ‘ஸ, ஷ, க்ஷ, ஜ, ஹ&rsq

உள்ளடக்கம்