கட்டுரை
கண்ணன்  

எங்கிருந்து வருகுவதோ - ஒலி யாவர் செய்குவதோ?                                                                            - பாரதி இந்திய ஜனநாயகத்தை நிர்ணயிக்கும் ஒரு திருப்புமுனையில் இருக்கிறோம் என்று எண்ண வலுவான காரணிகள் உள்ளன. இந்திய ஜனநாயகத்தின் வருங்காலத்தை நிர்ணயிக்கும் இத்தகையதொரு சூழல், நெருக்கடிநிலைக்குப் பின்னர

கட்டுரை
கானகன்  

சட்டத்தின் ஆட்சி, ஜனநாயகத்தின் மாட்சி, அறுபது ஆண்டுக் கால அற்புதம், எல்லாம் அத்திப்பழத்தின் வெளித்தோற்றமா? இவ்வளவு கேவலமாகவா நாம் போய்விட்டோம்? ராடியா, ராசா, ரத்தன் டாட்டா, ராஜாத்தி அம்மாள் . . . ஆஹா எங்கே போய்க்கொண்டிருக்கிறோம்? ஆளாளுக்கு, மூலைக்கு மூலை, ஃபேஸ் புக், ப்ளாக், ட்விட்டர் என்று இணையதளமெங்கும், திரும்பும் இடமெல்லாம் இதே புலம்பல்தான். இதை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும், இல்லையெனில் ஜனநாயகத்தின் எதிர்காலமே கேள்விக்குறியாகிவிடும் என எச்சரிக்கை வேறு. ஆனால் அப்படிப் புதிய ஆபத்து எதுவும் வந்துவிட்டதாக எனக்குத் தோன்றவில்லை. செய்தியாளர்கள், அரசியல்வாதிகள், ஆட்சியாளர்கள், தனியார் நிறுவனங்கள், இவர்களில் எவருமே சுயபரிசோதனை செய்து கொள்ளாவிட்டாலும் எதுவுமே நெறிப்படுத்தப

கட்டுரை
க. திருநாவுக்கரசு  

அமெரிக்க சுதந்திரப் பிரகடனத்தை எழுதியதில் தலையாயப் பங்கு வகித்தவரும் அமெரிக்காவின் மூன்றாம் குடியரசுத் தலைவருமான தாமஸ் ஜெபர்ஸன் பத்திரிகைகளின் முக்கியத்துவத்தைப் பற்றிக் கூறுகையில், ‘‘பத்திரிகைகள் இல்லாமல் அரசாங்கம் மட்டும் அல்லது அரசாங்கம் இல்லாமல் பத்திரிகைகள் மட்டும் என்ற இரண்டில் ஒன்றை மட்டுமே தேர்ந்தெடுக்க வேண்டி வந்தால் நான் துளியும் தயங்காமல் அரசாங்கம் இல்லாமல் பத்திரிகைகள் மட்டும் என்பதையே தேர்ந்தெடுப்பேன்’’ என்றார். தகவல் என்பது மக்களாட்சியின் நாணயம் (currency) என்றார் அவர். ஊடகச் சுதந்திரமும் தனி மனிதப் பேச்சு சுதந்திரமும் ஒரு சமூகம் நீதியுடன் செயல்படுவதற்கு அச்சாணியைப் போன்றவை. மக்களாட்சி சிறப்பாகச் செயல்படத் தங்குதடையற்ற தகவல் மற்றும் செய

கட்டுரை
கலையரசன்  

அமெரிக்க அரசின், வெளிவிவகாரப் பொறுப்புகளைக் கவனிக்கும் அதிகாரிகள் பதிவுசெய்துவைத்திருந்த ரகசியத் தகவல்களை, விக்கிலீக்ஸ் கசியவிட்டு வருகின்றது. விக்கிலீக்ஸ் ஆரம்பத்தில், ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தின் அத்து மீறல்களை வெளிக்கொணர்ந்தது. அண்மைக் காலமாக உலக நாடுகளுடன் அமெரிக்கா கொண்டுள்ள ராஜ தந்திர உறவுகளை நெருக்கடிக்கு உள்ளாக்கும் தகவல்கள் கசியவிடப்பட்டுள்ளன. அமெரிக்க நண்பர்களான மேற்கு ஐரோப்பிய நாடுகள் தவிர, சீனா, ரஷ்யா, ஈரான், லெபனான் ஆகிய நாடுகள் குறித்தும் அமெரிக்கா கொண்டிருந்த கருத்துகள் வெளிவருகின்றன. இவை யாவும் ராஜதந்திர உறவுகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக, இதுவரை வெளிப்படையாகப் பேசப்படாதவை. கேபிள்கள் மூலம் தனிச்சுற்றுக்கு விடப்பட்ட தகவல்கள், இன்று அனைவரும் பார்க

சிறுகதை
 

இதெல்லாம் நடந்தது ஒரு சாதாரண நாளில் பின்னேரம் சரியாக நாலு மணிக்கு. எப்படித் தெரியுமென்றால் அந்த பஸ் தரிப்பு நிலையத்துக்குப் பின்னாலிருந்த மணிக்கூண்டு டங்கென்று சத்தமிட்டது. நான் ரோட்டுக்கு இந்தப் பக்கம் நின்றேன். பஸ் தரிப்பு எதிர்ப்பக்கம் இருந்தது. மணியை நிமிர்ந்து பார்த்த என் கண்கள் கீழே இறங்கின. இப்படித்தான் என் வாழ்நாளை மாற்றவிருந்த சம்பவம் தொடங்கியது. பின்மதியம் மூன்று மணிக்கு மச்சாள் அந்தரிக்கத் தொடங்கிவிடுவார். அண்ணர் சரியாக ஐந்தரை மணிக்கு அலுவலகத்திலிருந்து வருவார். அவருடைய அலுவலகம் மூடுவது ஐந்து மணிக்கு. ஐந்து மணி அடிக்கும்போது அன்றைய கோப்புகளை மூடிவிட்டு, பேனாவைத் திருகி சேர்ட் பாக்கெட்டில் செருகிவிட்டு, லாச்சியைப் பூட்டிச் சாவியைப் பத்திரப்படுத்திவிட்டு அலுவ

கட்டுரை
 

வடகம்போடியாவில் அமைந்துள்ள சிம் ரெப்(Siem Reap)ஐ விமானத்தில் சென்றடையலாம். சிம் ரெப்பில் ஒரு சர்வதேச விமான நிலையம் உள்ளது. ஆனால் பாங்காக்கிலிருந்து தற்சமயம் நன்கு சீரமைக்கப்பட்ட சாலைவழி அங்கே செல்வது ஒரு தனி அனுபவம். வறியவர்கள் மிகுந்த சிற்றூரான சிம் ரெப்புக்கு என்ன அத்தனை முக்கியத்துவம்? அங்கிருந்து சில மைல்கள் தள்ளித்தான் முன்னொரு காலத்தில், அங்கோர் (Angkor) என்கிற ஒரு பெரும் நகரம் இயங்கிக்கொண்டிருந்தது. அப்பெரு நகரின் பேரழிவுகளாய் இன்றும் விரவி நிற்கின்றன அங்கோர் கோயில் கூட்டங்கள். மிகப் பெரியவை, பெரியவை, இடைப்பட்டவை, சிறியவை என்றெல்லாம் சொல்லத்தக்க சுமார் எழுபது கோயில்கள் இங்குள்ளன. கி. பி. முதல் நூற்றாண்டிலிருந்து கி. பி. ஆறாம் நூற்றாண்டுவரையிலான ஒரு காலகட்டத

நஞ்சுண்டன்  

தமிழ்ச் சூழலில் செம்மையாக்கம் (editing) இன்னமும் உரிய அங்கீகாரத்தைப் பெறவில்லை. ஆனாலும் ‘எடிட்டர்கள் பிரதி பலாத்காரம் செய்பவர்கள்’ என்று மொழியப்பட்ட காலத்தோடு ஒப்பிட்டால் இப்போது நிலைமை பரவாயில்லை. செம்மையாக்கம் என்பது ஒற்றுப் பிழை திருத்தும் சமாச்சாரம் என்று தான் இன்னமும் பலர் கருதுகிறார்கள். இலக்கணப் பிழைகளை மட்டுமல்லாது, ‘தண்ணீர் தயிர்’, ‘அம்மண நிர்வாணம்’, ‘ரோமகேசங்கள்’ என்பன போன்ற பிழைகளையும் சுட்டுவது எடிட்டரின் பணி. ‘அதன் பிறகு கலையாத கல்வியும் குலையாத செல்வமும் என்னும் திருப்புகழைப் பாடினோம்’ என ஒருவர் எழுதினால், இவை அருணகிரிநாதர் எழுதிய திருப்புகழில் இல்லை; மாறாக அபிராமி பட்டரின் வரிகள் இவை எனத் திரு

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

சென்ற ஆண்டு வெளிவந்த சில ஆங்கிலப் புத்தகங்கள் பற்றி இங்கே அறிமுகப்படுத்தியிருக்கிறேன். நீங்கள் படிக்கப்போவது சம்பிரதாயமான நூல் விமர்சனமல்ல. இங்கே பட்டியலிடப்பட்டிருக்கும் புத்தகங்களுக்குக் கடந்த வருடத்தில் கிட்டிய பிரசித்தம் வரும் ஆண்டுகளில் கிடைக்குமா என்றும் எனக்குத் தெரியாது. இவற்றை முழுமையாக ரசித்ததாகவும் சொல்ல மாட்டேன். இந்த நூல்களைக் குறிப்பான நோக்கம் ஏதுமின்றித் தெரிவுசெய்திருக்கிறேன். இவற்றை ஏன் தேர்ந்தெடுத்தேன் என்பதற்கான காரணங்களை அவற்றை விவரிக்கும்போது விளங்கிக்கொள்வீர்கள். இந்தத் தேர்ந்தெடுப்பு முழுமையான தன் உள்ளுணர்வு சார்ந்தது (subjective selection). இந்தப் புத்தகங்களைக் குறிப்பிட்ட வரிசை முறையின்றி ஒழுங்கில்லாமல் அட்டவணைப்படுத்தியிருக்கிறேன். நாவல்

சிறுகதை
 

(1) சம்பத் டீ குடிப்பதற்காகத் தன் வீட்டின் அருகிலிருந்த டீக்கடைக்குக் கிளம்பினான். அவன் தனது மரக்காலைப் பொருத்திக்கொண்டான். தொடைகளில் இணைக்கும் பெல்ட்டை இறுக்கமாகக் கட்டிக்கொண்டு நடந்தான். அவனுக்கு நடப்பதற்குச் சிறிது அயர்ச்சியாக இருந்தது. காலையில் எழுந்ததும் முதல் தடவையாக நடக்கும்போது இப்படித்தான் இருக்கும். பிறகு நடந்து ஒவ்வொரு இடமாகப் போய் வந்ததும் அயர்ச்சி நீங்கிவிடும். சம்பத்துக்கு நடந்த விபத்தில் அவனது வலது கால் எலும்பு முறிந்துவிட்டது. முழங்காலுக்குக் கீழே இருந்த எலும்பில் சீழ் வைத்துப் புறையோடிவிட்டதால் எலும்போடு பாதம்வரை நீக்கும் படியாகிவிட்டது. அன்றிலிருந்து அவன் மரக்கால் வைத்துத் தான் நடந்துகொண்டிருந்தான். சம்பத் டீக்கடைக்குச் சென்றபோது இன்னும் விடிந்த

 

வா. மணிகண்டன் கவிதைகள் பூமா ஈஸ்வரமூர்த்தி கவிதைகள் அனார் கவிதை கதிர்பாரதி கவிதை

கட்டுரை
ஜி. எஸ். ஆர். கிருஷ்ணன்  

இதழ் 126இல் ‘சமயம் இல்லாத கலாச்சாரம்’ என்னும் தலைப்பில் பாலகங்காதரா பற்றிய ஜி.எஸ்.ஆர். கிருஷ்ணனின் கட்டுரை வெளிவந்துள்ளது. இக்கட்டுரையை அதன் மற்றொரு பகுதியாகக் கருதலாம். -பொறுப்பாசிரியர் நாம் தேடுதலிலிருந்து ஓயமாட்டோம் அந்தத் தேடுதலின் முடிவென்பது நாம் தொடங்கிய இடத்துக்கே வந்துசேர்வது அந்த இடத்தை முதல்முறை கண்டதுபோல - டி. எஸ். இலியட் பாலகங்காதராவை இன்றைய சிந்தனையாளர்களில் முக்கியமானவராகக் கருத அவர் எழுதியுள்ள ஹீதன். . . நூல் ஒன்றே போதுமானது என்பது என் கருத்து. அந்த நூலை வெளியிடுவதற்கு முன்பும் அதற்குப் பின்னும் பல கட்டுரைகளை அவர் எழுதியுள்ளார். சுமார் இருபது கட்டுரைகள் அவருடைய இணைய தளத்தில் வாசிக்கக் கிடைக்கின்றன. அவற்றைத் தமிழ்ப் படுத்

நாடகம்
சண்முகராஜா  

நூற்றைம்பது வருடங்கள், ஏழு தலைமுறைகள், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஒரு மாதக் குழந்தை முதல் 90 வயதுப் பாட்டிவரை மேடையேறி நடிக்கும் 70க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் என நெடிய பாரம்பரியம் கொண்டது, ஸ்ரீ வெங்கடேஸ்வரா நாட்டிய மண்டலி (Surabhi Theatre). ஒரே குடும்பத்தைச் சேர்ந்த உறுப்பினர்கள் நாடகக் குழுவாகச் செயல்படுவது சுரபியின் சிறப்பம்சம். பார்ஸி தியேட்டரின் உட்பிரிவான சுரபி நாடகங்கள் அதிகமும் தொன்மங்கள் சார்ந்தவை. ஆந்திராவில் குழந்தைகள் உட்படக் குடும்பம் குடும்பமாக மக்கள் வரவேற்போடு அரங்கு நிறையப் பார்வையாளர்களைக் கொண்டது சுரபி நாடகம். சுரபி கம்பெனியின் முன்னோர்கள் மகாராஷ்டிரத்தைப் பூர்வீகமாகக் கொண்டவர்கள். இவர்களது பேச்சு மொழி ‘ஆரே’. இதற்கு வரிவடிவம் இல்லை. &

நாடக விழா
சண்முகராஜா  

தேசிய நாடகப்பள்ளி புதுதில்லியை மையமாக வைத்துக் கடந்த பன்னிரண்டு ஆண்டுகளாக “பாரத் ரங் மகோத்சவ்” என்ற பெயரில் சர்வதேச நாடக விழாவை நடத்தி வருகிறது. டெல்லியை மையமாகக் கொண்டு நடை பெறும் இவ்விழாவிற்கு இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் நாடகங்கள் தேர்வுசெய்யப்படுவதோடு வெளிநாடுகளும் பங்கேற்கும் ஆசியாவின் மிக முக்கிய நாடகவிழாவாக இது கருதப்படுகிறது. கடந்த ஐந்தாண்டுகளாக ‘பாரத் ரங் மகோத்சவ்’இல் கலந்துகொள்ளும் எழுபதிற்கும் மேற்பட்ட நாடகங்களிலிருந்து சராசரியாக இருபது நாடகங்கள் தேர்வுசெய்யப் பெற்று ஏதாவதொரு மாநிலத் தலைநகரில் இணைவிழாவாகவும் நிகழ்த்தப்பட்டுவருகிறது. இணை விழாவின் முக்கியத்துவம் எந்த மாநிலத்தில் அது நிகழ்த்தப் பெறுகிறதோ அந்த மாநில மொழி தவ

எதிர்வினை
 

தமிழகத்துக்குக் கல்வி கற்க வந்திருந்த அஸ்ஸாமிய மாணவரைச் சந்திக்க நேர்ந்தது. அவருடன் பேச்சை ஆரம்பிக்கையில் ‘அஸ்ஸாமிய தேசத்திலிருந்து வருகிறீர்களா?’ என வினவினேன். சட்டென்று பளிச்சிட்ட கண்களுடன், ‘என்ன கேட்டீர்கள்? என்றார். மீண்டும் ஒருமுறை சொன்னேன். என் இரு கைகளையும் தன் கையில் பிடித்துக்கொண்டு ‘இந்தியர் ஒருவ’ரிடமிருந்து இவ்வார்த்தைகளைக் கேட்க எவ்வளவு மகிழ்ச்சியாய் இருக்கிறது தெரியுமா? என்றார். இதுதான் பல்லாயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் நாம் கட்டிக்காத்து வரும் இந்திய ஒருமைப்பாட்டின் லட்சணம். இவர் வேறு யாருமல்ல. பாபர் மசூதி இருந்த இடத்தில் கட்டணக் கழிப்பறையைக் கட்டச் சொல்லி அம்பையிடம் கருத்துத் தெரிவித்த அதே இளைய தலைமுறையைச் சார்ந்தவரில் ஒ

எதிர்வினை
 

டிசம்பர்’10 இதழில் அம்பையின் ‘இரண்டு சூடான அவித்த முட்டைகளும் காஷ்மீரமும்’ கட்டுரை வாசித்தேன். ‘அங்குக் (அயோத்தி) கோவில் கட்ட வேண்டுமானால் நாங்கள் தோள்கொடுக்கிறோம். போதும் இந்தப் பிரச்சினையும் அதை ஒட்டிய சச்சரவும்’ என முஸ்லிம் மக்கள் அங்கலாய்த்ததாகத் தொடங்கி, பாகிஸ்தான் பழங்குடியினரை விரட்டியடித்து காஷ்மீர் நிலத்தில் இந்திய அரசு சட்டம் ஒழுங்கை நிலை நாட்டியது, பலவந்தத் திருமணமோ பலவந்த இணைப்போ தேவையில்லை என நேரு சனநாயகத்தை உயர்த்திப் பிடித்தது, 4,00,000 காஷ்மீர்¢ பண்டிட்களை சையது ஷா கிலானி விரட்டியடித்தது என்பதாகப் பல்வேறு அரிய செய்திகளை அம்பை ‘கண்டுபிடித்துச்’ சொல்லியிருந்தார். ‘கோயிலை வேண்டுமானாலும் கட்டிக்கொள்

மதிப்புரை
மண்குதிரை  

தமிழில் உரைநடை வடிவம் மேற்குலகிலிருந்து அறிமுகமாகியிருந்தாலும் அதன் நவீனக் கூறுகள் நம்முடைய சொல் வழக்குக் கதைகளில் புதைந்துகிடக்கின்றன. த. அரவிந்தன், இத்தொகுப்பிலுள்ள பத்துக் கதைகளையும் வெவ்வேறு கூறுகளைக் கொண்டமைத்துள்ளார். முதல் தலைமுறைக் கதைகளில் ஸ்திரமான ஒரு கதைசொல்லி அமர்ந்திருப்பார். பிறகு உரையாடல் மிகுந்த தொனி. இப்போது உரையாடல் மலிந்து முற்றிலும் விவரணைகள் மிகுந்த தொனி. இவற்றைத் தவிர்த்து அரவிந்தன் தனக்கெனப் புதிய தொனியைக் கொண்டிருக்கிறார். அவர் தூரிகையின் ஓட்டத்தில் புலப்படும் சித்திரம் அவதானிக்க முடியாத வேறு உலகில் நம்மை நிறுத்திவிடுகிறது. கதைமொழியின் நுட்பங்கள் வியக்கவைக்கின்றன. சில குறியீடுகளில் அங்கதச் சுவை மிதக்கிறது. யதார்த்தமான கதைகளும் காத்திரமான கேள

மதிப்புரை
பாவண்ணன்  

மறுபக்கம் (நாவல்) ஆசிரியர்: பொன்னீலன் நியூ செஞ்சுரி புக்ஹவுஸ் (பி)லிமிடெட், சென்னை. விலை. ரூ. 375 மார்க்சிய கலை இலக்கியக் கொள்கைகளில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்ட படைப்பாளி பொன்னீலன். அறுபதுகளின் பிற்பகுதியில் சிறுகதைகளை எழுதத் தொடங்கி வாசகர்கள் மனத்தில் இடம்பிடித்தவர். தன் படைப்புகளின் விவாதப் பொருளாக சமூகப் பிரச்சினைகளைக் கையாள்வதில் தொடர்ந்து ஆர்வம்காட்டிவருபவர். கடந்த நூற்றாண்டுகளைப் பற்றிய வரலாற்று நூல்களில் படித்துத் தெரிந்துகொண்ட சாதிமோதல்களைப் பற்றிய செய்திகளையொட்டிய தேடலும் எண்பதுகளின் தொடக்கத்தில் நிகழ்ந்த மண்டைக்காடு வகுப்புக்கலவரத்தை நேருக்குநேர் பார்த்த அனுபவமும் இணைந்து உருவாக்கிய அகநெருக்கடி பொன்னீலனின் நெஞ்சில் மறுபக்கம் நாவலுக்கான தொடக்கப் பு

பதிவுகள்: இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது - 2010
அ. பாரதி  

நெய்தல் இலக்கிய அமைப்பு வழங்கிவரும் ‘இளம் படைப்பாளிகளுக்கான சுந்தர ராமசாமி விருது’ இந்த ஆன்டு ஜே.பி. சாணக்யாவுக்கு வழங்கப்பட்டது. பத்தாயிரம் ரூபாய்ப் பணமுடிப்பும் பாராட்டுப் பத்திரமும் அடங்கிய இந்த விருதை இந்தியாவின் முக்கியமான திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான அடூர் கோபாலகிருஷ்ணன் சாணக்யாவுக்கு வழங்கினார். நாகர்கோவிலில் நவம்பர் 7ஆம் தேதி நடைபெற்ற இந்த விழாவில் அடூர் கோபாலகிருஷ்ணன், சுரேஷ் குமார இந்திரஜித், சுகுமாரன், அரவிந்தன் ஆகியோர் பேசினார்கள். தொடர்ந்து நான்காம் ஆண்டாக வழங்கப்படும் இந்த விருது விழா மிக எளிமையான முறையில் நடத்தப்பட்டது. விருது எந்த அடிப்படையில் வழங்கப்பட்டது என்பதை விளக்கும் தேர்வுக் குழுவின் அறிக்கையை அதன் உறுப் பினர்களில் ஒருவரான அரவிந்தன்

 

அதிகாரத்தை நோக்கி உண்மையைப் பேசுவதும் எதிர்க் குரல் எழுப்புவதும் அதிகார வர்க்கத்துக்குக் கசப்பு உணர்வையே ஏற்படுத்தும். சிறு சலனம்கூட இல்லாது சன் குழுமம் இருப்பது ‘நிஜத்’தைச் சுடும் உண்மை. தன்னைச் சுற்றி அதிகார வட்டத்தை வைத்துக்கொண்டு இருப்பது மூன்று அப்பாவி ஆன்மாக்களை அவ மதிப்பது என இருக்கும் அதன் செயல்பாட்டைக் கேள்விக்குட்படுத்துவதும் ஜனநாயகக் கடமைதான். ஆனால் எவர் எவர் திருப்பித் தாக்க மாட்டார்களோ அவர்களை நார் நாராய்க் கிழிக்கும் நமது செய்தி ஊடகங்களின் வீரத்தைக் கேள்விக்குட்படுத்துவது அவற்றின் கருத்துச் சுதந்திரத்தை அல்லது வீரத்தை எந்த வகையில் வகைப்படுத்துவது. நீதிமன்றத் தீர்ப்பின் நகலை வாங்குவதில்கூட இவ்வளவு சிரமம் இருக்குமெனில் நியாயத்துக்காகக் குரல் கொடுப

தலையங்கம்
 

போருக்குப் பின் இலங்கை ‘புதிய அரசியல் அத்தியாயத்து’க்குள் காலடி எடுத்துவைத்துள்ளதாக ஒரு தோற்றம் தொடர்ந்து கட்டமைக்கப்பட்டு வருகிறது. இலங்கை ஆட்சியாளர்களைப் போர்க்குற்றவாளிகளாகக் கருதி அவர்கள்மீது விசாரணை நடத்த வேண்டும் என்னும் கோரிக்கை வலுப்பெற்றுவரும் நிலையில் முப்பதாண்டுகளுக்கு மேலாக நீடித்துவந்த ஆயுதப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தவர் என்ற பெருமிதத்துடன் ஐக்கியநாடுகள் சபையில் முதன்முதலாகத் தமிழில் உரையாற்றி, தமிழ் மக்கள்மீதும் தமிழ்மீதும் அக்கறைகொண்டவர் என்னும் தோற்றத்தையும் உருவாக்கிக்கொண்டார் இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்ஷே. இலங்கை அரசு ‘சரியான திசையில் நகர்கிறது’ என நற்சான்றிதழ் வழங்கி இருக்கிறார். அண்மையில் இலங்கைக்கு விஜயம் செய்த இந்திய

உள்ளடக்கம்