கட்டுரை
க. திருநாவுக்கரசு  

1948, ஜனவரி 30ஆம் தேதி மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட போது, ‘‘மிக நல்லவராக இருப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதைக் காட்டுகிறது இது’’ என்றார் ஜார்ஜ் பெர்னார்ட் ஷா. இந்தக் கூற்றின் நம் காலத்திய உதாரணம் டாக்டர் பினாயக் சென்னுக்கு இழைக்கப்பட்டிருக்கும் அநீதி. கடந்த டிசம்பர் 24ஆம் தேதி தேசவிரோதச் சட்டத்தின் கீழ்க் குற்றவாளிகள் என டாக்டர் பினாயக் சென் உள்ளிட்ட மூவருக்கு ஆயுள் தண்டனை வழங்கி சத்தீஸ்கரின் விசாரணை நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது ஜனநாயகவாதிகள், மனித உரிமை ஆர்வலர்கள், சமூக சேவகர்கள் உள்ளிட்ட பலரும் அதிர்ச்சிக்குள்ளானார்கள். இந்தியக் காவல் துறை, நீதிமன்றங்களின் செயல்பாடுகளைப் பற்றி நன்கு அறிந்தவர்களுக்கும்கூட இது அதிர்ச்சி தரும் செய்தியாகவே இருந்த

பத்தி
கண்ணன்  

கூடாரம் ஃபிராங்பர்ட் புத்தகக் கண்காட்சி கால்பந்தாட்ட மைதான அளவி லிருக்கும் 12 அரங்குகளில் நடக் கிறது. இவற்றுக்கு இடையில் பொது வெளி. அங்கு சில உணவகங்கள், வாகனங்களுக்கான பாதை, கைவினைப் பொருட்களின் சந்தை. முதல் நாள் பல சந்திப்புகளுக்கு இடையில் கிடைத்த சிறிய இடை வேளையில், பிற்பகலில், அரங்கு களிலிருந்து வெளியேறி இங்கு வந்து அமர்ந்தேன். ஆண்டுக்கு ஒருமுறை அணியும் ஷூவில் பாதங்கள் திணறிக்கொண்டிருந்தன. தவனம், சோர்வு. வெளியேறி ஒரு பெஞ்சில் அமர்ந்ததும் எதிரில் வித்தியாசமாக ஒரு கூடாரம் கண்ணில்பட்டது. அதில் கட்டப்பட்டிருந்த பானர் ‘ஈரானில் தணிக்கை: ஒரு மனித உரிமை மீறல்’ என்று அறிவித்தது. எழுந்து உள்ளே சென்றேன். ஒரு ஆணும் ஒரு பெண்ணும் இருந்த னர். அங்கிருந்து துண்டுப் பிரசுர

கட்டுரை
 

அமெரிக்கப் பொருளாதாரம் நிலைகுலைந்துவருவதாகத் தோன்றுகிறது. வேலையில்லாதவர்களின் எண்ணிக்கை ஏறத்தாழப் பத்து விழுக்காடு. இந்த எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் இவ்வளவு அதிகமாக இருந்ததில்லை. லட்சக்கணக்கானோர் தாம் பெற்ற வீட்டுக் கடன்களைத் திரும்பச் செலுத்த முடியாமல் அவற்றை இழந்து தெருவுக்கு வந்திருக்கிறார்கள். 1930களில் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியின்போது நடந்ததைப் போலவே மக்களின் வருவாய் தலைகுப்புற வீழ்ந்துகொண்டேயிருக்கிறது. பொருளாதாரத் தேக்கத்தின் காரணமாகத் தற்காலிகமாக வேலையிலிருந்து நீக்கப்பட்டிருப்பவர்களில் (லே ஆஃப் செய்யப்பட்டிருப்பவர்களில்) பலருக்கு மீண்டும் வேலை கிடைக்கும் என்னும் நம்பிக்கையே இல்லை. இவ்வளவு அவலத்திற் கிடையேயும் அமெரிக்காவின் மிகப் பெரும் செல்வந்தர்களின் செ

நேர்காணல்
தமிழில்: கானகன்  

முதலாளித்துவ நாடுகளைப் பார்த்துச் சூடு போட்டுக்கொண்டு இன்று அவதிப்படும் நாடு ரஷ்யா என்கிறார் குறிப்பிடத்தகுந்த இடதுசாரிச் சிந்தனையாளர் போரிஸ் ககார்லிட்ஸ்கி. மாஸ்கோவிலுள்ள Institute of Globalisation Studies and Social Movements என்ற அமைப்பின் இயக்குநரான ககார்லிட்ஸ்கி அண்மையில் சுற்றுச் சூழல் ஆர்வலர் லாரன்ஸ் சுரேந்திராவுக்குப் புதுதில்லியில் அளித்த பேட்டியிலிருந்து சில பகுதிகள்: (பேட்டி ஃப்ரண்ட்லைன் (ஜனவரி28, 2011) ஆங்கில இதழில் வெளியாகியிருக்கிறது.) லாரன்ஸ்: சோஷலிசக் கட்டமைப்பு தகர்ந்ததன் விளைவாய் ரஷ்யாவில் பாரதூரமான சமூக மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, சுற்றுச்சூழல்கூடக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. எடுத்துக்காட்டாகக் கடந்த ஆண்டு ரஷ்யாவில் ஏற்பட்ட காட்டுத்

கட்டுரை
 

சோபாக்க எனும் பிக்குவிடம் ஒருமுறை ‘முதன்மையானது என்றால் என்ன?’ எனப் புத்தர் கேட்டாராம். அதற்கு அவர் ‘எல்லா உயிரினங்களுக்கும் உணவே பிரதானமானதாகும்’ என்றாராம். இந்தக் கதையையே இலங்கையோடு ஒப்பிட்டு நோக்கினால், கடந்த அரை நூற்றாண்டுகளாக எங்களுக்கு முதன் மையானதாக இருந்தது இனப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைத் தேடுவது தான். விடுதலைப்புலிகளின் ஆயுதம் தாங்கிய செயற்பாடுகளானது அந்த இனப்பிரச்சினையின் நோய் அறிகுறியொன்றென்பதைப் புரிந்துகொள்ளாதோர் இருந்தனரெனின், அவர்கள் தீவிர இனவாதிகளும் தற்சார்புவாதிகளும் மட்டும்தான். பண்டாரநாயக்க, கூட்டமைப்பு முறையில் அதிகாரத்தைப் பிரித்துக்கொள்வது பற்றிப் பிரேரித்ததிலிருந்து, மஹிந்த ராஜபக்ஷ நவீன யுத்தத்தின் மூலம் கலகக்காரர்கள

 

அருணாசலம் கவிதைகள் சத்யன்சிபி கவிதைகள் ப்ரதிபா ஜெயச்சந்திரன் கவிதைகள் பொ. செந்திலரசு கவிதைகள்

பதிவு
 

இந்த ஆண்டு புத்தகக் காட்சிக்கு வருகை தந்த பார்வையாளர்களின் எண்ணிக்கை சென்ற ஆண்டைக்காட்டிலும் 71 சதவீதம் அதிகம் எனப் புத்தகக் காட்சியின் முடிவில் அறிவித்தது பாபாசி. அரங்குகளின் எண்ணிக்கை 650. செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இண்டியன் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சுமார் இரண்டு லட்சம் சதுர அடிப்பரப்பில் விசாலமாக அமைக்கப்பட்டிருந்த பாதைகள் பார்வையாளர்கள் நெரிசலின்றி அரங்குகளைக் கடப்பதற்கு உதவின. தரையில் பாவப்பட்டிருந்த பலகைகள் நடப்பதற்கு அதிகச் சிரமம் தந்ததாகப் பார்வையாளர்களில் பலர் தெரிவித்தனர். இந்த ஆண்டு டிசம்பரில் நடைபெற்ற இலக்கிய விழாக்களில் குறிப்பிட்டுச் சொல்லத்தக்க அளவில் பிரபலமானவர்கள் பங்கேற்றனர். நாசர், மிஷ்கின், நா. முத்துக்குமார், லிங்குசாமி, செழியன், விடுதலைச் சிறுத்தைகள்

கட்டுரை
சுகுமாரன்  

சுகிர்தராணியின் கவிதைகள் பற்றி அவ்வப்போது எழுதியிருக்கிறேன். அவருடைய கவிதைகள் பற்றி இரண்டாம் முறையாக பொது மேடை ஒன்றில் பேச நிற்கிறேன். இது ஒரே சமயம் மகிழ்ச்சியையும் ஏமாற்றத்தையும் தருகிறது. கவிதை பற்றிப் பேசக் கிடைக்கும் எந்த வாய்ப்பும் மகிழ்ச்சியளிப்பது. அந்த வகையில் இதுவும் மகிழ்ச்சிகரமானது. ஆனால் கவிதை வாசிப்பவர்களைவிடக் கவிதை எழுதுபவர்கள் அதிகமாக இருக்கும் சூழலில் சக கவிஞர் ஒருவரின் கவிதைகள் பற்றிப் பேச புதிதாக ஒருவர் முன் வராதது பற்றிய ஏமாற்றம். ஒரு கவிதை ஆர்வலனாகவே இந்த ஏமாற்றத்தை முன்வைக்கிறேன். இது சுகிர்தராணியின் நான்காம் தொகுப்பு. எட்டு ஆண்டுகளுக்குள் நான்கு தொகுப்பு என்பது அவருடைய இயக்கத்தைக் காட்டுகிறது. தொடர்ச்சியாகவும் அதிக எண்ணிக்கையிலும் எழுதுபவராக இ

சிறுகதை
 

தி ஸ்ட்ரெயிட் டைம்ஸ் சிங்கப்பூர் ஜூன் 16 புதன்கிழமை 2010 முதல்பக்கத் துக்கச் செய்தியின் ஒரு பத்தி: அனைத்துலகச் சுரங்க ஆபத்துதவிக் குழுவினர் இன்றைக்குச் சுலபத் தீவில் தொழிலாளிகள் சிலர் இன்னும் இருக்கும் இடத்தை அடையப் பனிரெண்டு மீட்டர்கள் இருக்கின்றன. மிகுந்த எச்சரிக்கையுடன் துளையிட்டுக்கொண்டிருக்கிறார்கள். நேற்றுவரை மீட்கப்பட்ட உடல்களில் இதுவரை அடையாளம் அறிய இயலாத வெளிநாட்டவர் ஒருவர், சிங்கப்பூரர் என்பது அடையாள அட்டை மூலம் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. சிங்கப்பூர் ஜூன் 12 சனிக்கிழமை 2010 காலை மணி 9. பெற்றோரை வழியனுப்பிவிட்டு சாங்கி விமான நிலையத்திலிருந்து வீட்டுக்குள் நுழைந்தவுடன் எல்லாம் முடிந்துவிட்டது என்று முணு முணுத்தவாறு வந்தான் கணேசன். உள்ளே பூட்டிவிட்டு வீட்டுச் சா

கட்டுரை
மா. கிருஷ்ணன்  

1991ஆம் வருடம். தினமணி கதிரில் மாதவையா பற்றி வெளிவந்த ஒரு கட்டுரையை மா. கிருஷ்ணனுக்கு நான் காண்பித்தேன். அதிலிருந்த சில விவரங்கள் சரியல்ல என்றார். தன் தந்தையைப் பற்றி மார்ச் 1990இல் தான் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை - தட்டச்சுப் பிரதி - என்னிடம் தந்த ‘இதைப் படித்துப்பார்’ என்றார். அதைப் படித்துவிட்டு memarablia என்று நான் தலைப்பிட்டிருந்த கோப்பில் பத்திரப்படுத்திவிட்டேன். ஊர் பல மாறி, வீடுகள் மாறிய பின்னர் இந்தக் கோப்பு பார்வையிலிருந்து மறைந்துவிட்டது. அண்மையில் புது வீட்டில் குடியேறிய கையோடு பழைய கோப்புகளைப் புரட்டிக்கொண்டிருந்தபோது, ஒரு காகிதப் பையினுள் memarabliaவைக் கண்டுபிடித்தேன். கிருஷ்ணனின் கடிதங்களோடு அவர் என்னிடம் தந்த அந்தத் தட்டச்சுப் பிரதியும

திரை
அரவிந்தன்  

வணிக சூத்திரத்துக்குள் செயல்படும் படமாக இருந்தாலும் திரைப்படம் என்பது அடிப்படையில் இயக்குநரின் ஊடகம் என்ற பிரக்ஞையுடன் தன் முதல் அடியை எடுத்து வைத்த மிகச் சில இயக்குநர்களில் ஒருவர் வெற்றி மாறன். பாலு மகேந்திராவின் மாணவர்களில் ஒருவரான இவர் தன் முதல் படமான ‘பொல்லாதவ’னைப் பாவனைகள் அற்ற நேர்த்தியான வணிகப்படமாக உருவாக்கியிருந்தார். அந்தப் படத்தின் வெற்றி தந்த தெம்பு புதிய களத்தினுள் பிர வேசிக்கும் துணிச்சலை அவருக்குத் தந்திருக்கிறது. வட தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர் தென் தமிழகத்தில் சில இடங்களில் காணப்படும் ஓர் அம்சத்தை மையமாக வைத்துத் தன் இரண்டாம் படத்தை எடுத்துள்ளார். மதுரையில் சேவல் சண்டையில் ஈடுபடும் குழுக்களின் பின்னணியில் அமைந்த படம் ஆடுகளம். சேவல்களைச் சண்டைக

கட்டுரைத் தொடர்
சங்கீதா ஸ்ரீராம்  

பசுமைப் புரட்சியைப் பற்றி மக்கள் அடிக்கடி கேட்கும் கேள்விகளுக்கான விடைகளை இதுவரை பார்த்தாயிற்று. இப்போது இயற்கை விவசாயத்தைப் பற்றிய கேள்விகளுக்கு வருவோம். பாழாய்ப்போன விளைநிலங்களுக்கு வளத்தை ஊட்டப் பல்லாயிரம் டன் கணக்கில் தழை உரமும் மாட்டுச் சாணமும் தேவைப்படுமே! அத்தனை தழைப் பொருளுக்கு எங்கேபோவது? ‘குப்பை’ என்று கருதி வைக்கோலையும் மற்ற தழைப் பொருட்களையும் எரிக்கும் பழக்கத்தை நிறுத்துவது முதல் படி. அருகிலுள்ள குளம், குட்டைகளில் பூதாகரமாகப் பரவி வளர்ந்துவரும் வெங்காயத் தாமரை, நெய்வேலிக் காட்டா மணக்கு போன்ற தாவரங்களை நிலங்களில் கொண்டுவந்து குவித்து மாட்டுச் சாணக் கரைசலைத் தெளித்தால், மக்கி எருவாகும். நீர்நிலைகள் கோடைக் காலங்களில் வற்றும்போது படுகைகளிலிரு

அஞ்சலி
வாஸந்தி  

“மூச்சுவிடுவதற்குச் சற்றுச் சிரமமாக இருக்கிறது” என்றார். கூப்பிட்டவுடன் வந்து விசாரித்த மருத்துவர், “பக்கவாட்டில் படுங்கள்” என்றார். “சரி” என்று ஒருக்களித்துப் படுத்துக் கண்ணை மூடிக்கொண்டார். ஏற்றிய சூடம் மலையேறுவதுபோல உயிர் காற்றோடு கலந்துவிட்டது. அநுத்தமா என்னும் அபூர்வ மனுஷியை மரணம் அவர் வாழ்ந்தது போலவே மிகக் கண்ணியமாக ஆரவாரமில்லாமல் ஹிம்சைப்படுத்தாமல் பூவைச் சுற்றி எடுத்துச் செல்வதுபோல அழைத்துச் சென்றது எனக்கு மிகப் பெரிய அதிசயமாக இருக்கிறது. கடைசி மூச்சுவரை தனக்குள் பூரணமாக அனுபவித்து இலக்கிய ரசனை குன்றாமல் வாழ்ந்த அந்த 87 வயதுப் படைப்பிலக்கிய மூதாட்டியின் முடிவு இதைவிடக் கவித்துவமாக இருந்திருக்க முடியாது. ஒரு சிறுமியின் ஆர்வத்து

அஞ்சலி
இரா. முருகானந்தம்  

ஜனவரி 2, 2011 அன்று இரவு நண்பர் இராம்குமாரிடமிருந்து வந்த குறுஞ்செய்தி எனக்கு எவ்வித அதிர்ச்சியையும் தரவில்லை. கடந்த இருவருடங்களாகவே உடல் நலிவுற்று நடமாட முடியாததோடு சமீபகாலமாக நினைவு தவறிப் பேசுபவராக மாறியிருந்த ஜி. எஸ். லட்சுமண அய்யர் மறைந்தபோது அவர் 94 வயதைக் கடக்க இரு மாதங்களே இருந்தன. ‘இன்னும் சில காலம் வாழ்ந்து இந்தச் சமூகத்திற்குப் பணியாற்றியிருக்கலாம்’ எனச் சம்பிரதாயமாக ஏதும் அவர் குறித்துச் சொல்லுவது மிகவும் அபத்தமானதாகவே இருக்கும். ஏனெனில் தனிமனிதனுக்குச் சாத்தியமான அதிகபட்ச முனைப்புடன் அவர் சமூக மேம்பாட்டிற்கு அனைத்துத் தளங்களிலும் பணியாற்றியிருந்தார். காந்தியின் அழைப்பை ஏற்றுக் கல்வி நிலையங்களைவிட்டு வெளியேறித் தேசப் பணிக்காக வந்த ஆயிரக்கணக்கான மா

மதிப்புரை
ஆனந்த்  

‘உலகம் மாறிவிட்டது.’ அப்படியென்றால்? எப்படி மாறுகிறது உலகம்? உலகம் மாறுவதன் முறைப்பாடு என்ன? பகலும் இரவும் அடுத்தடுத்து வருவது உலக மாற்றமா? பருவங்கள் மாறிவருவது உலக மாற்றம் எனக் கொள்ளலாமா? பழைய மரங்கள் பட்டுப்போய்ப் புதிய மரங்கள் வருவது உலக மாற்றம்தானா?

மதிப்புரை
அம்ஷன்குமார்  

அசையும் படம் ஆசிரியர்: சி.ஜெ.ராஜ்குமார் கீற்று பதிப்பகம் கிரீடு வளாகம் 23, அரங்கநாத நகர், சிதம்பரம் / 608 001. பக்கம்: 148, விலை ரூ.150 சினிமா அசைகிற படமாக இருப்பதால்தான் அது கவர்ச்சிக்குரியதாகவும் மாய நிலை கொண்டதாகவும் வெகுகாலம் விளங்கியது. சினிமா பெரிதும் விரும்பப்பட்டதற்கும் முக்கியக் காரணம் அது ஏதோ மந்திரவிதிகளுக்குக் கட்டுப்பட்டதுபோல் தோன்றியதுதான். சினிமாவை மக்கள் நெருங்கிவிடக் கூடாது என்பதில் சினிமா உலகினரின் சதியும் கலந்திருந்தது. ஸ்டுடியோ படப்பிடிப்பை மக்கள் பார்க்கக் கூடாது என்பதிலிருந்து அது தொடங்கி படத்தில் நடிப்பவர்கள்கூட கேமரா வழியாகப் பார்க்க அனுமதி கிடையாது என்பதுவரை அது தொடர்ந்தது. ஒளிப் பதிவாளர்கள்கூடத் தங்கள் உதவியாளர்களுக்குத் தாங்க

எதிர்வினை
 

தென் மாவட்டங்களில் பரவலாக அறிந்த அய்யா வழிபாட்டின் வேதமான அகிலத்திரட்டு நூலைத் தமிழகத்தில் எங்கும் கொண்டு செல்ல வேண்டும்; அறிவார்ந்தவர்களிடமும் பாமரர்களிடமும் அது சென்று சேர வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தின் காரணமாகத்தான் காலச்சுவடு பதிப்பகம் அகிலத் திரட்டை வெளியிட்டது. இப்படி ஒரு எண்ணத்தைத் தூண்டியவரே பால பிரஜாபதி அடிகளார்தான். அடிகளாரின் அழைப்பின் பேரில் மறைந்த கவிஞர் ராஜமார்த்தாண்டன், காலச்சுவடு கண்ணன், நான் மூவரும் சாமிதோப்பிற்கு அடிகளாரைப் பார்க்கப் போனோம். பள்ளித்தோழரான மார்த்தாண்டனைப் பார்த்ததில் அடிகளாருக்கு மகிழ்ச்சி. அடிகளார் பல ஆண்டுகள் உழைத்து தயாரித்த அகிலத்தின் மூலப்பிரதியைக் கண்ணனிடம் தந்தார்; கணிப்பொறியில் அச்சிடப்பட்டிருந்த அப்பிரதியில் உள் தலைப்புகளோ

செம்மை
நஞ்சுண்டன்  

கட்டுரை, புனைவு எழுத்துக்களுக்குச் செம்மையாக்கம் தேவைப்படுவது போலவே திரைப்பட வசனங்களுக்கும் பாடல்களுக்கும் மிக அவசியம் என்பதை விளக்கவே இக் குறிப்பு. என் தமிழ்த் திரைப்பட அறிவு சிலாக்கியமானதல்ல. எப்போதாவது தொலைக்காட்சியில் தமிழ்ப் படங்கள் பார்ப்பதோடு சரி. சமீபத்தில் தொலைக்காட்சி அலைவரிசையொன்றில் அப்படிப் பார்க்க நேர்ந்த படம்: இரணியன். இது பீரியட் திரைப்படம். அதாவது இதன் கதை வரலாற்றுக் கால கட்டத்தைச் சார்ந்தது. இத்தகைய படங்களில் பாத்திரங்களின் உடை, காட்சியமைப்பு ஆகியன அக்கதை நடக்கும் காலகட்டத்தைத் துல்லியமாகப் பிரதிபலிப்பதில் காட்டும் அக்கறையைப் பாத்திரங்கள் எடுத்தாளும் சொற்களின் விஷயத்திலும் செலுத்த வேண்டும். இந்தியா ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலைபெற்ற தருவாயில் இரணியன்

 

கண்ணனின் கட்டுரை படித்தேன். “ஸ்பெக்ட்ரம்” என்ற சொல் இன்று இந்தியாவின் மூலைமுடுக்கெல்லாம் நீக்கமற நிறைந்திருக்கிறது. இந்தச் சொல்லின் மூலவித்து தமிழ்நாட்டிலிருந்து பிறப்பெடுத்தது. அது தமிழகம் பெற்ற “தவப்பயன்(?)” என்றே சொல்ல வேண்டும். கனிமொழி, ராசாத்தி அம்மாள் என்ற இருவரின் கையிலுள்ள கயிற்றின்- அடைவுக்கேற்ப ராசா ஆடியிருக்கிறார். இலங்கையின் தேசிய கீத வரலாறு குறித்துத் தலையங்கம் மூலம் தெரிந்துகொண்டேன். தேசிய கீதம் தமிழில் பாடப்படாதது பற்றிய தங்களின் ஆதங்கம் சற்று அதிகமோ என்று எண்ணத் தோன்றுகிறது. ஏனெனில் இது குறித்து நாளிதழ்களில் செய்தி வந்தபோதும் இங்குள்ள ஈழ ஆதரவாளர்களிடமோ பொது மக்களிடமோ எந்தவொரு சலனமும் இல்லை. கே.எஸ். முகம்மத் ஹுஐப் காயல்பட்

தலையங்கம்
 

நாட்டுக்கு ஒரு லட்சத்து எழுபத்தாறாயிரம் கோடி ரூபாய் வருவாய் இழப்பை ஏற்படுத்திய 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடுகள் குறித்த இந்தியத் தலைமைத் தணிக்கை அலுவலரின் அறிக்கை தவறானது, துரதிருஷ்டவசமானது என விமர்சித்திருக்கிறார் தொலைத்தொடர்புத் துறையின் ‘தற்காலிக’ அமைச்சர் கபில்சிபல். கடந்த 2007-2008ஆம் ஆண்டில் அலைக்கற்றைகளை ஒதுக்கீடு செய்ததில் தொலைத்தொடர்புத் துறை நேர்மையான அணுகுமுறையைக் கடைபிடிக்கவில்லை எனவும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம், பிரதமர் அலுவலகம் போன்ற நாட்டின் சட்டபூர்வமான அமைப்புகளின் ஆலோசனைகளைப் புறக்கணித்து, சந்தை மதிப்பைவிட மிகக் குறைவான தொகைக்கு உரிமங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டதாகவும் குற்றம் சுமத்திய தணிக்கைத் துறை அறிக்கை இதன் மூலம் நாட