எகிப்தியப் புரட்சி:
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

நடப்புச் செய்திகளைக் கணினியில் எழுதுவதில் ஒரு வசதி. அவற்றை இற்றைப்படுத்திக் (update) கொண்டே இருக்கலாம். ஆனால் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கும் எகிப்திய நிகழ்வுகளை விஞ்சிச் செல்வது அவ்வளவு சுலபமல்ல. ஆகையால் நடப்புச் செய்திகளை விமர்சிப்பதை விட்டு விட்டு இந்தப் போராட்டங்கள் விளைவித்த அரசியல், கலாச்சார விளைவுகளைப் பற்றிச் சொல்லலாம் என நினைக்கிறேன். எதற்கும், இதழியல் வரலாற்றின் முதல் வரைவு என்பதை நினைவில் வைத்துக்கொண்டு இதைப் படியுங்கள். பதவி விலகிய எகிப்திய அதிபர் ஹோசினி முபாரக்கையும் அவரைப் போல் அமெரிக்க அரசால் பேணப்பட்ட சர்வாதிகாரிகளின் ஆட்சிதுரைத்தனங்களையும் பற்றி அவதானிக்கும்போது சூடானிய நாட்டு எழுத்தாளரான Tayeb Salihஇன் Season of Migration to the North என்னும் நாவலின் ஒரு வா

நேர்காணல்:
சந்திப்பு: கே. முரளிதரன்  

தமிழக மீனவர்கள் இப்படித் தாக்கப்படும் பிரச்சினை எப்போது தொடங்கியது? 1974 வரை பெரிதாகப் பிரச்சினை கிடையாது. 1974 மற்றும் 76இல் இரு நாடுகளுக்கும் இடையில் கடல் எல்லையைப் பிரித்த பிறகுதான் பிரச்சினை தொடங்கியது. அதன் பிறகு, இது உங்கள் பகுதி இது எங்கள் பகுதி என்று ஆகிவிட்டது. ஆனால் மீனவர்கள் அதைப் பெரிதாகக் கண்டுகொள்ளவில்லை. அப்போது இலங்கையில் பெரிய கடற்படை ஏதும் கிடையாது. ஏதோ பெயரளவுக்கு இருந்தது. நிறைய பேர் இங்கேயிருந்து சட்ட விரோதமாக அங்கே சென்று வேலைபார்த்துவந்தனர். கள்ளத்தோணிக்காரர்கள் எனத் தமிழ்நாட்டுத் தமிழர்களுக்குப் பெயரே இருந்தது. கடற்படையினர் பெரும்பாலும் இம்மாதிரி ஆட்களைக் கைதுசெய்வார்கள். 1974 ஒப்பந்தத்தின் மூலம் கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. இது பெரிய தவறு.

கடிதம்
 

இலங்கை அரசாங்கத்தால் கடத்தப்பட்ட, கொல்லப்பட்ட, நாட்டைவிட்டு வெளியேறத் தூண்டப்பட்ட இதழியலாளர்களுடைய மனைவியரின் குழந்தைகளின் சார்பாக உங்களை அழைக்கிறேன். இந்த இதழியலாளர்கள் இலங்கையில் நீதியையும் வாய்மையையும் நிலைநிறுத்த உறுதியான கொள்கையோடு போராடியவர்கள். தங்கள் இன அடையாளத்திற்காகக் கொல்லப்பட்ட, கடத்தப்பட்ட ஒன்றுமறியா அப்பாவி மக்களின் குழந்தைகளும் பெண்களும் மௌனமாக அழும் தேசத்திற்கு - இலங்கைக்கு - உங்களை அழைக்கிறேன். 2010 ஜனவரி 24ஆம் தேதி காணாமல்போன இதழியலாளரும் கேலிச்சித்திர ஓவியரும் மனித உரிமைப் பாதுகாவலருமான பிரகீத் எக்னெலிகொடவின் மனைவி நான். அவரைக் கடைசியாகக் கொழும்பில் ராஜகிரியா என்னுமிடத்திலுள்ள இ-நியூஸ் பத்திரிகை அலுவலகத்தில் இரவு ஏறத்தாழ 8:30 மணியளவில் அவருடன் பணியாற்று

சிறப்புப் பகுதி
பொறுப்பாசிரியர்  

இரண்டாயிரம் வருடங்களுக்கும் மேற்பட்ட தொன்மைகொண்ட தமிழ்ச் சமூகத்தின் பண்பாட்டு அடையாளங்கள் நம்ப முடியாத அளவுக்கு மாறியிருக்கின்றன. சங்க இலக்கியம் வலியுறுத்திய மதிப்பீடுகளை இறுகப் பற்றி நிற்கும் ஒரு சமூகம் என்பதான தோற்றம் கேள்விக்குள்ளாகத் தொடங்கியிருக்கிறது. நவீன வாழ்வின் சகல கூறுகளையும் உள்வாங்கி உலக அரங்கில் தனக்கான இடத்தை உறுதிப்படுத்திக்கொள்ள, விரிவுபடுத்திக்கொள்ளச் சளைக்காமல் போராடிக்கொண்டிருக்கும் சமூகத்தின் இயல்பான வளர்ச்சிப் போக்காகவே இந்த மாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டும். கல்வி, வேலைவாய்ப்பு, தொழில், வியாபாரம் முதலான காரணங்களின் நிமித்தம் உலகின் மூலைமுடுக்கெல்லாம் பரவியிருக்கும் தமிழர்கள் நவீன உலகின் உருவாக்கத்தில் பெரும் பங்காற்றிவருகிறார்கள். அந்தந்தச் சமூகங்கள

தமிழர் பண்பாடு
பிரபஞ்சன்  

பண்பாடு என்னும் சொல்லே, 1937ஆம் ஆண்டு ரசிகமணி என்று சொல்லப்பட்ட டி.கே. சிதம்பரநாத முதலியாரால் தமிழுக்குப் புதிதாகக் கொண்டுவரப்பட்டது என்கிறார் வையாபுரிப்பிள்ளை. ‘கல்ச்சர்’ எனப்படும் ஆங்கிலச் சொல்லுக்கு இணையானதாக அவர் மொழிபெயர்த்திருக்கிறார். அதே காலகட்டத்தில் பலர் அதைக் ‘கலாச்சாரம்’ எனக் கொண்டார்கள். இந்தக் ‘கல்ச்சர்’ என்னும் சொல் குறித்தும் இங்கிலாந்திலேயே 1870ஆம் ஆண்டுகளை ஒட்டிப் பெரிய சொற்போர் நடந்ததாகவும் பிள்ளை கூறுகிறார். ‘கல்ச்சரை’ ஆங்கிலத்தில் பெருவழக்காகக் கொண்டு வந்தவர் மேத்யூ அர்னால்டு.1 தமிழில் பண்பாடு இல்லையா எனக் கேட்டுவிடக் கூடாது. இருந்தது. வேறு சொல்லாக இருந்தது. சால்பு, இச்சொல்லை அடிப்படையாகக் கொண்டு பிறந்த சா

தமிழர் பண்பாடு
பழ. அதியமான்  

நேற்றைய வெயிலுக்கு / ஆலமர நிழலில் / கதை பேசிக் கிடந்த செங்கோடம் பாளையத்து கவுண்டர் விஷம் குடித்து செத்தார். என்று கடைசி இரண்டு வரிகளையும் இன்னும் பல வரிகளையும் கொண்ட ஒரு கவிதை நிகழில் 1994இல் வெளிவந்தது. அதை யதேச்சையாய்ப் படிக்க நேர்ந்த மேற்படி கவுண்டரின் மகன், கவிதையின் மற்ற வரிகளையோ பொருளையோ பற்றி எதுவும் சொல்லாமல். . . ‘செத்தார்’ என்பதை இறைவனடி சேர்ந்தார் என்று எழுதியிருக் கலாமே என்று கவிஞரிடம் வருத்தப்பட்டாராம். தந்தை செத்துப்போனதைவிட அவர் இறைவனடியில் சேராமல் போனதுதான் மகனுக்குக் கவலை அளித்திருக்கிறது என்றார் கவிஞர் தேவிபாரதி. டால்ஸ்டாய் மாஸ்கோவில் மரணம் அடைந்தார் என்ற வரியில் மரணத்தை அடித்துவிட்டு காலமானார் என்று செம்மையாக்கம் செய்தவரின் பேனா அவரை அறியாமல் த

தமிழர் பண்பாடு
குமாரசெல்வா  

உன் பேச்சு உன்னை வெளிப்படுத்துகிறது” (மத்தேயு 26 : 73) விளவங்கோடு வட்டார மக்களிடையே நாட்டுப் புறக் கதை ஒன்று வழக்கில் உள்ளது. விளவங்கோட்டுக்காரன் ஒருவன் மதுரைக்குப் போனான். அங்குள்ள மக்களின் பேச்சைக் கேட்டுத் தானும் இனிமேல் செந்தமிழில் பேசுவதாகச் சபதம் கொண்டான். எதிரே பழக்கடை தென்பட்டது. அங்கே சென்று உரையாடினான். “வணிகரே! பழங்கள் உள்ளனவா?” “இங்க இருப்பது பழங்களாகத் தெரியலையா?” “பொறுத்தருள்க! பழம் ஒன்று என்ன விலையோ?” “ஒரு ரூபாய்.” “ஐம்பது காசுக்குத் தரக் கூடாதா?” “தருகிறேன்.” “அப்படியானால் இரண்டு பழங்கள் பூயும்.” “பூயுமா? அப்படீண்ணா என்னாங்க?” “வேல மயிரு காட்டாத ரெண்டு

 

முடிவுறாத யுத்தம் காட்டுத் தீயின் உக்கிரம் அனத்தும் கோடைநாளில் நீ திரும்பிவந்தாய் நமது கடற்கரையில் ஆமைக் குஞ்சுகள் முட்டைக்குள்ளே கருகியிருந்தன அலை எப்போதும்போல் அமைதியாய் இல்லை மீன்கள் செத்துக் கரையொதுங்கி நாறின காகங்களின் இரைச்சலில்லை கல் அடுப்பில் வெந்நீர் கொதித்துக்கொண்டிருக்கிறது நான் குளிக்கும் ஓலைத் தடுப்புக்குள் வந்து ஆடை களைகிறாய் உடலெங்கும் தடித்த ஊமைக்காயங்கள் உன் விரைகள் வீங்கி துமிட்டிக் காய்களெனப் புடைத்திருக்க கலக்கத்துடன் உன்மேல் நீர்வார்க்கிறேன் கண்களில் நீர் தளும்பப் பற்றிக்கொள்கிறாய் நீ அடிக்கும்போது தடுக்காத என் கைகளை இனப் போர் எல்லைகளைக் கடந்து தொடர்கிறது அந்நாளோ பற்றியெரிகிறது அணைக்க முடியாக் காட்டுத்தீயென. நதிக்கரை நாகரிகம் சிந்திய நீரைக்

தமிழர் பண்பாடு
களந்தை பீர்முகம்மது  

முஸ்லிம் சமூகம் என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும் என்று இப்போது வரையறை இல்லை எப்படியும் இருந்துவிடலாம் என்றும் சொல்வதற்கில்லை! இரண்டுக்கும் இடையிலே சிக்கியுள்ளது. பொது வெளியில் கரைந்தபடியே தனித்தன்மையையும் பேணி வருகிறது. ஒரு சிறிய காலகட்டம்தான் மாற்றவர்களைக் கொண்டுவந்துள்ளது; இனி இதைத் தவிர்க்க முடியாதோ எனும் பதற்றமும் உண்டாகியிருக்கிறது. உலகம் கிராமமாகச் சுருங்கி வந்த வேகத்தில் பல நல்லவை உதிர்ந்துபோய்விட்டன. வெளிநாட்டுப் பயணங்கள், வேலைவாய்ப்புகள் முஸ்லிம்களிடம் இரண்டுவிதமான தாக்கங்களை உண்டு பண்ணியுள்ளன. முஸ்லிம்கள் சிங்கப்பூர், அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ் என்று வேலைகளின் நிமித்தம் பயணிக்கையில் அவர்கள் மேற்கத்திய மோகிகளாக, நுகர்வு வெறியராக, இஸ்லாமியக் கலாச்சாரங்களைக் க

தமிழர் பண்பாடு
மு. புஷ்பராஜன்  

பண்பாடு என்றால் என்ன என்னும் கேள்விக்குச் சட்டென்று விடையளிக்க முடியுமென நினைக்கவில்லை. பதில், இதுவும் இதுவுமெனப் பல நீர் வளையங்கள் போல் விரிந்து செல்லக்கூடியது. மனித வாழ்வில் பாரிய செல்வாக்கு செலுத்தும் இந்த உள்ளுணர்வை ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் அடக்கிவிட முடிவதில்லை. சமூகவியல், பண்பாட்டியல் ஆராய்ச்சியாளர்கள் ஒருமித்துக் கூறுவதும் அதைத்தான். நம் முன்னோர்களிடமிருந்து பெறப்பட்டு உள்ளுணர்வில் தீர்மான பாத்திரத்தை வகிக்கும் இந்தப் பண்பாட்டு வலிமை, அதன் நீட்சி என்பவை புறச்சூழலைக் கொண்டே தீர்மானிக்கப்படுகின்றன. வாழ்க்கையில் தனி மனித முடிவுகளையும்விடக் கூட்டு முடிவுகளே வலிமை வாய்ந்தனவாக இருக்கின்றன. இந்தக் கூட்டு முடிவு என்பது அச்சமூகத்தின் அதிகாரச் சக்திகளாலேயே வரையறுக்கப்பட

தமிழர் பண்பாடு
சை. பீர்முகம்மது  

இன்று வரலாற்று நகரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள மலாக்கா 14ஆம் நூற்றாண்டிலேயே முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாகத் திகழ்ந்துள்ளது. ஐரோப்பிய - ஆசிய நாட்டு வாணிபர்கள் தங்களின் கப்பல் பயணத்தில் மலாக்கா துறைமுகத்தைக் கடந்தே போக வேண்டிய ஒரு காலகட்டத்தில் தமிழர்களும் இங்கே வாணிகம் செய்ய வந்துள்ளார்கள். கலிங்கப்பட்டணத்திலிருந்தும் ஏனைய தமிழகத் துறைமுகங்களிலிருந்தும் பாய்மரக்கப்பல்களில் வாணிபம் செய்ய வந்த இவர்கள் ‘மலாக்கா செட்டி’ (Malacca Chetti) என்றே அழைக்கப்பட்டார்கள். ‘செட்டி’ என்ற இந்த வார்த்தை வியாபாரிகள் என்னும் பொருள் கொண்டு மலாய் மொழியில் வழங்கப்பட்டது. நாட்டுக் கோட்டைச் செட்டியார்களுக்கும் இந்த மலாக்கா செட்டிகளுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. 14ஆம

பத்தி: பயணி குறிப்புகள்
பயணி  

கரும்புத் தோட்டத்திலே - ஆ! கரும்புத் தோட்டத்திலே ஏழைகள் அங்கு சொரியும் கண்ணீர் வெறும் மண்ணிற் கலந்திடுமோ? - தெற்கு மாகடலுக்கு நடுவினிலே, அங்கோர் கண்ணற்ற தீவினிலே - தனிக் காட்டினிற் பெண்கள் புழுங்குகின்றார் - அந்தக் கரும்புத் தோட்டத்திலே.                                                 - பாரதியார் கடந்த பொங்கல் நாளில் தொலைபேசியில் வாழ்த்துச் சொன்ன சென்னை நண்பர் கேட்டார்: “கரும்பு கிடைக்குமா, ஃபிஜியிலே?” அவரிடம் பேசி முடித்துத் தொலைப

சிறுகதை
ரஞ்சகுமார்  

நான் உங்களுக்கு ஒரு காதல் கதையைச் சொல்லப்போகிறேன். காதலும் வீரமும் செறிந்தது பழந்தமிழர் வாழ்க்கை என்ற பெருமை எங்களுக்கு உண்டு. நேற்றுவரை வாழ்ந்து வீழ்ந்தவர்கள் எல்லோரும் என்னைப் பொறுத்தவரை பழந்தமிழர்களே. இந்தக் கதையின் வீரம் மிக்க நாயகன் கொல்லப்பட்டு ஏறத்தாழ முப்பது ஆண்டுகள் ஆகிவிட்டன. எனவே அவனும் பழந்தமிழன் என்பதை நீங்கள் ஒப்புக்கொண்டே ஆக வேண்டும். ‘முப்பது ஆண்டுகள்’ என்னும் இந்தக் கணக்கு மிக முக்கியமானது. முப்பது ஆண்டுகள் ஏறத்தாழ ஒரு தலைமுறைக் காலம் எனப்படுகிறது. தற்காலத் தமிழர்களில் ஆயிரக்கணக்கானோர் முப்பது ஆண்டுகளுக்குள் தம்மைத் தாமே கொன்றுவிடுகிறார்கள். அல்லது பிறரால் கொல்லப்பட்டுவிடுகிறார்கள். அத்துடன் தமிழர்களின் விடுதலைப் போரை அக்குவேறு ஆணி வேறாய் அலசுபவ

பெ. பாலசுப்ரமணியன்  

சென்னைப் புத்தகக் கண்காட்சியின் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் நடைபெறும் நூல் வெளியீட்டு விழாக்களையும் குறிப்பிட வேண்டும். தேவநேயப் பாவாணர் அரங்கம், திரைப்பட வர்த்தக சபை அரங்கு, புக் பாயிண்ட், இக்சா மையம் உள்ளிட்ட பல்வேறு அரங்குகளில் தமிழின் முன்னணிப் பதிப்பகங்களால் நடத்தப்பட்டுவரும் நூல் வெளியீட்டு விழாக்கள் எழுத்தாளர்களுக்கும் வாசகர்களுக்கும் அதிக உற்சாகம் தருபவையாக மாறியிருக்கின்றன. பத்தாண்டுகளுக்கு முன்பு வரையில் சிறு அரங்குகளில் நடைபெற்ற வெளியீட்டு நிகழ்வுகள், விவாத அரங்குகளிலிருந்து பல அம்சங்களில் வேறுபட்ட இவ்விழாக்களில் பல உள்ளீடற்றவை. எழுத்தாளர்களைக் கொண்டாடுவது, நூல்களைச் சந்தைப்படுத்துவது முதலான நோக்கங்களே இத்தகைய விழாக்களில் பெரும்பாலானவற்

நூல் அறிமுகம்
பழ. அதியமான்  

அழகிரிசாமியின் படைப்புலகம் பெரும்பாலும் கிராமத்து வாழ்க்கையைக் கொண்டது. குடும்ப வாழ்க்கை, மனிதர்களின் மன அவசம், பலவீனங்கள், காதலர்களின் எண்ணங்கள், குழந்தைகளின் உலகம், கிராமத்து மனிதர்களின் செயல் சிறுமைகளைக் காட்டும் வாழ்வின் யதார்த்தங்கள் எனச் சிலவற்றைக் குறிப்பிட்டு அவரது கதைகள் காட்டுகின்றன. அவரது கதைகளின் களன் பெரும்பாலும் கரிசல் பூமி என்றாலும் கி. ராஜநாராயணனைப் போல் அதை மட்டுமே அவர் களனாக்கிக்கொள்ளவில்லை. “அவன் (அழகிரிசாமி) பிறந்த மண்ணையும் அவனோடு வாழ்ந்த மக்களையும் அந்தச் சூழலையும் வைத்து எழுதிய கிட்டத்தட்ட 35 கதைகளைத் தனியாக ஒரு தொகுப்பாகக் கொண்டு வர ஆசை இருந்தது எனக்கு” எனக் கி.ரா. தன் தொகுப்பு முன்னுரையில் குறிப்பிடுகிறார். 100 கதைகளில் 35 போலத்தான் கரிசல்

அஞ்சலி
சுகுமாரன்  

“ஹிந்துஸ்தானி சங்கீதம் கேட்பதுண்டா? கேட்க விரும்புகிறீர்களா?” என்று கவிஞரும் நண்பருமான பிரம்மராஜன் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளுக்கு முன்பு கேட்டார். அந்தக் கேள்விதான் வடக்கத்திய இசைக்காக என் காதுகளை முதன்முதலாகத் திறந்துவைத்தது. அப்போது செவிப் பிரவேசம் செய்த முதல் குரல் பண்டிட் பீம்சேன் ஜோஷி(1922 - 2011)யுடையது. வானொலியில் ஒலிபரப்பாகும் கச்சேரிகளைவிட்டால் ஹிந்துஸ்தானி இசையைத் தொடர்ந்து கேட்பதற்கான வாய்ப்பு அன்று இருக்கவில்லை. கேட்ட சொற்பத்திலும் கருவி இசை கவர்ந்த அளவுக்கு வாய்ப்பாட்டு வசீகரிக்கவில்லை. ஆனால் ஹிந்துஸ்தானி இசையைக் கேட்டுப் பழக்கப்படுத்திக்கொள்ளும் விருப்பம் இருந்தது. பிரம்மராஜன் கேள்விக்கு “ஆமாம்” என்றேன். “அப்படியானால் நீங்கள் கேட்க வே

பதிவு
ஸ்டாலின் ராஜாங்கம்  

எப்போது முடிவுக்கு வரும் என்ற எந்த நிச்சயமும் இல்லாவிட்டாலும் தன்னுடைய உண்ணாவிரதத்தின் மூலம் ஆயுதம் தாங்கிய ராணுவத்துக்கெதிராகப் போராடிவருகிறார் இரோம் ஷர்மிலா. மணிப்பூர் உள்ளிட்ட வட கிழக்கு மாநிலங்கள்மீது இந்திய அரசு மேற்கொண்டுவரும் அடக்கு முறைகள் பற்றிய அம்மக்களின் மனப் போக்கைப் பிரதிபலிப்பது மட்டுமல்ல, அத்தகைய உணர்வுகளை ஒருங்கிணைப்பதாகவும் ஷர்மிலாவின் போராட்டம் மாறி நிற்கிறது. மணிப்பூர் மாநிலத்தில் இந்திய ராணுவத்திற்கு அளிக்கப்பட்டுள்ள ஆயுதப்படைச் சிறப்பு அதிகாரச் சட்டத்தைத் (1958) திரும்பப் பெறக் கோரும் ஷர்மிலாவின் உண்ணாவிரதம் தொடங்கிப் பத்தாண்டுகள் நிறைவடையும் இத்தருணத்தில் அவருடைய போராட்டம் மணிப்பூர் மக்களையும் தாண்டி விரிந்த அளவில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அவரது

விருது
 

2010ஆம் ஆண்டுக்கான இயல் விருது தமிழ் இலக்கியத்தின் முக்கிய முன்னோடியான எஸ். பொன்னுத்துரைக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கியச் சாதனை விருது, கேடயமும் 1500 டாலர்கள் மதிப்பும் கொண்டது. எஸ். பொ. அறுபது வருடங்களுக்கு மேலாக எழுதிவருபவர். 1932இல் யாழ்ப்பாணத்தில் பிறந்த எஸ். பொன்னுத்துரை சென்னைக் கிறிஸ்தவக் கல்லூரிப் பட்டதாரி. தன் பதின்ம வயதுகளிலேயே எழுத்துத் துறையில் கால்பதித்தவர். அவரது முதல் நாவல் தீ. மற்றவர் எவரும் எழுதத் துணியாத தன்பாலுறவை 1960இல் சொன்னபோது பண்டிதர்கள், புனிதர்கள் அவரைத் ‘துடக்கு’ எனச் சொல்லித் தூர விலக்கினார்கள். அவரது வீடு சிறுகதைத் தொகுதி பல் வேறுபட்ட மொழியாளுமைகளையும் பரிசோதனை

விருது
பழனி கிருஷ்ணசுவாமி  

தமிழ் எழுத்தாளர் உமாமகேஸ்வரிக்கு பெங்களூரைச் சேர்ந்த என். எம். கே. ஆர். வி. பெண்கள் கல்லூரியின் பிரிவாகிய ஷஸ்வதி பெண்ணியல் ஆய்வு மையம் வழங்கும் இந்திய மொழிகளில் சிறந்த பெண் எழுத்தாளருக்கான நஞ்சன்கூடு திருமலாம்பாள் விருது வழங்கப்பட்டுள்ளது. 1986ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இவ்விருது இதுவரை இந்திய மொழிகளில் எழுதும் பல்வேறு பெண் எழுத்தாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. இதற்கு முன்பு தமிழில் இவ்விருதைப் பெற்றவர் ராஜம் கிருஷ்ணன். நாற்பதாயிரம் ரூபாய் ரொக்கமும் காமதேனுச் சிற்பமும் கொண்டது இவ்விருது. வெங்கட் சாமிநாதன், பழனி கிருஷ்ண சுவாமி, கே. வி. ஷைலஜா ஆகியோர் தேர்வுக்குழு நடுவர்களாகப் பணியாற்றினார்கள். தமிழ்ச் சமூகம் தனது மத்தியதரக் குடும்பப் பெண்களுக்காக விதித்திருக்கும் வரம்புகளைத் த

தலையங்கம்
 

பெருகிவரும் ஊழல், நாட்டின் பொருளாதார நிலை, கூட்டணி அரசை நடத்திச் செல்லுதல் எனப் பல்வேறு விஷயங்கள் பற்றித் தில்லியில் பிப்ரவரி 15ஆம் தேதி நடைபெற்ற தொலைக்காட்சி எடிட்டர்கள் சந்திப்பில் ‘மனம் திறந்து’ பேசியிருக்கிறார் பிரதமர் மன்மோகன் சிங். 2ஜி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டு முறைகேடுகள் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தின் கண்காணிப்பின் கீழ் மத்தியப் புலனாய்வுத் துறை மேற்கொண்டுவரும் விசாரணைகளில் வெளிப்படத் தொடங்கியுள்ள உண்மைகள் நாட்டின் அரசியல் தலைமைமீதும் அதிகாரவர்க்கத்தின் மீதுமான அவநம்பிக்கையை உறுதிப்படுத்தியிருக்கின்றன. ஸ்பெக்ட்ரம் முறைகேடுகள், ஆதர்ஷ் வீட்டுவசதித் திட்ட ஊழல், காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி ஏற்பாடுகளில் நடைபெற்ற ஊழல், எஸ்-பாண்ட் அலைக்கற்றை ஒப்பந

 

சாத்தானின் வழக்கறிஞர் சிபிஐயின் காவலில் வைக்கப்பட்டிருந்தாலும் வாய்திறந்து இன்னமும் உண்மை பேசவில்லை. அந்தச் சாத்தானின் வாய்மட்டும் உண்மை பேசும் எனில், நாட்டையே குட்டிச்சுவராக்கிய பொய்மான்களின் முகமூடி கிழிக்கப்படும். உணர்ச்சிகளைத் தூண்டிவிட்டு அதன் மூலம் விளைந்த விளைவுகளை அறுவடை செய்து கொண்ட குடும்பத்தின் பனிமூட்டம் விலகிவிடும். தர்ம தேவதையின் நியாயத்தராசு சமன்நிலையை எட்டிவிடும். என்ன செய்வது? தர்மம் வலுவிழந்து அதர்மம் அன்றோ கோலோச்சுகிறது. நகர்வாலா தொடங்கி போபர்ஸ் பீரங்கி முழங்கி 2ஜி அலைக்கற்றை என்றல்லவா நாடு முழுதும் நாறிச் சிரிக்கிறது. கா. இர. குப்புதாசு, செஞ்சி சாத்தானின் வழக்குரைஞர்கள் தலையங்கம் நீதித் துறையிடம் குட்டுப்பட்டால்தான் சுரணைவரும் எனும் உணர்வுகுறைந்த நிருவ

உள்ளடக்கம்