உணர்ச்சிகரமான சவால்கள், பெருமிதங்களைப் பறைசாற்றும் மார்தட்டல்கள், எதிரிகளை அச்சுறுத்தும் அறைகூவல்கள், சுயமரியாதைப் பிரகடனங்கள், கண்ணீர் மல்கும் முறையீடுகள், இரங்கத்தக்க கெஞ்சல்கள், அருவருப்பூட்டும் மண்டியிடல்கள், திகைக்கவைக்கும் அதிரடி அறிவிப்புகள், நம்ப முடியாத துரோகங்கள், நெகிழவைக்கும் தியாகங்கள், கட்டாயப்படுத்தப்பட்ட சமரசங்கள் முதலான உணர்ச்சிகரமான, திருப்பங்கள் நிறைந்த முதற்கட்டக் காட்சிகளுக்குப் பிறகு திமுகவும் அதிமுகவும் தத்தம் அணிகளுடன் தேர்தல் உடன்பாடுகளைக் கண்டிருக்கின்றன. கடந்த நாற்பதாண்டுகளில் தமிழக வாக்காளர்கள் இதைவிட மோசமானதொரு தேர்தலைச் சந்தித்திருப்பதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவு. ஐந்தாண்டுக் காலத் திமுக ஆட்சியின் மீது அதிருப்தியுற்ற வாக்காளன் அதற்கு மாற்

கட்டுரை: தமிழகச் சட்டமன்றத் தேர்தல் 2011
ஸ்டாலின் ராஜாங்கம்  

‘முன்னெப்போதும் திமுக இத்தகைய நெருக்கடியைச் சந்தித்ததில்லை’ எனக் கருணாநிதியே மனம் வெதும்புமளவுக்குக் கூட்டணிக் கட்சிகளுடனான தொகுதிப் பங்கீடுகளில் நெருக்கடிகளைச் சந்தித்தது திமுக. அதிமுகவின் நிலை இதைவிட மோசம். தேர்தல் வெற்றிக்குப் பிறகு சம்பந்தப்பட்ட கட்சிகள் ஆட்சியில் பங்கு கேட்டுவிடக் கூடாது எனத் திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளுமே நினைத்திருக்கக்கூடும். இரு கூட்டணிகளிலும் ஏராளமான கட்சிகள் இடம்பெற்றுள்ளன. இடம் பெறாத சில கட்சிகள் அதற்கான முயற்சியில் தோற்றுவிட்டவை. திமுகவும் அதிமுகவும் தம் அணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் பலவற்றின் மீது எவ்விதமான மதிப்பையோ மரியாதையையோ கொண்டிருப்பவை அல்ல. எனினும் அவற்றுடனான தேர்தல் கூட்டணியை அவற்றால் புறக்கணிக்கவும் முடியாது.

கட்டுரை
கண்ணன்  

உலகப் புத்தகக் கண்காட்சிகள் தமிழகத்தில் நமக்குப் பழக்கமான புத்தகக் கண்காட்சிகளிலிருந்து அடிப்படையிலேயே வேறானவை. இங்கு நடை பெறும் புத்தகக் கண்காட்சிகள் பதிப்பாளர்கள் தமது புத்தகங்களை நேரடியாக வாசகரிடம் விற்பனைசெய்யும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கோடு செயல்படுபவை. தமிழகத்தில் நூல் விநியோகம் என்பது மிகப் பலவீனமான நிலையில் உள்ளது. புத்தக விநியோகிப்பாளர் என்னும் பிரகிருதி இந்த 21ஆம் நூற்றாண்டிலும் உருவாகவில்லை. எந்த ஊரிலும் நேர்மையோடும் தொழில் திறனோடும் இயங்கும் புத்தக விற்பனை நிலையங்கள் இல்லை. இந்த இன்மைகளுக்கு மாற்றாக உருவானவையே நமது புத்தகக் கண்காட்சிகள். மேற்கில் பொதுவாக நூல் விநி யோகம், தொழில் திறனோடு நடை பெறுகிறது. பெரும்பாலான ஊர்களில் புத்தகக் கடைகள் உள்ளன. அச்சு

கட்டுரை
 

முஸ்லிம்கள் குறித்த வகைமாதிரி பிம்பங்களில் வலுவானது, அவர்கள் இயல்பிலேயே ஆவேசமானவர்கள் என்பது. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலேய அரசுக்கு எதிராக சையத் அஹமது பரேல்வியின் தலைமையில் நடை பெற்ற ஜிஹாத் இயக்கம்; தங்கள் நலன்களைக் காத்துக்கொள்ள எப்படிப் போராட வேண்டுமென முஸ்லிம்களுக்குத் தெரியும் என்று சொன்னபோது சையத் அஹமதுகானின் குரலில் ஒலித்த அச்சுறுத்தும் தொனி; கிலாஃபத் இயக்கமும் மாப்ளா கலவரமும்; 1946ஆம் ஆண்டின் ‘நேரடி நடவடிக்கை’ தினம் - இவை அனைத்தும் முஸ்லிம்கள் வன்முறையாளர்கள் என்னும் படிமத்தையே மீட்டுறுதி செய்தன. பலவீனர்கள் என்று இல்லாவிட்டாலும் அமைதியை விரும்புபவர்கள் என்று இந்துக்களைப் பற்றியுள்ள பிம்பத்துக்கு நேரெதிரானதாக இது அமைந்தது. மகாத்மா காந்தி

கட்டுரை
ஆனந்த்  

எனக்கு ஒரு மனம் இருக்கிறது. என் மனத்தின் உள்ளடக்கம் என் அனு பவங்களாலும் அறிந்துகொண்டவையாலும் ஆனது. அதைத்தான் ‘நான்’ என்று நான் நினைத்துக்கொள்கிறேன். அதுபோலவே ஒரு குழுவினருக்கு, ஒரு நாட்டுக்கு, ஒரு இனத்துக்கு என அவர்களுக்கேயான மனம் இருப்பதாகப் பார்க்க முடியும். அந்த மனமும் அவர்களின் அனுபவங்களால் - வரலாற்றால் - அமைந்ததாகத்தான் இருக்கும். இந்தப் பின்னணியில் பார்க்கும்போது, கலாச்சாரம், மக்கள், அவர்களின் பழக்கவழக்கங்கள், அவர்களது நம்பிக்கைகள் இவற்றாலும், இந்தக் கண்ணோட்டம் தோற்றுவித்த ஆழமான வெளிப்பாடுகளாலும் ஆனது இந்தியா என்னும் தேசத்தின் மனம் என்று கொள்ளலாம். மிகவும் ஆழமான தளங்களில் வேர் கொண்டு இயங்கும் நம்பிக்கைகள், இந்த மனம் உருவாக்கிவைத்திருக்கும் பிரபஞ்சம்

நேர்காணல்: ராபர்ட்டோ கலாஸ்ஸோ
சந்திப்பு: கவிஞர் ஆனந்த்  

இத்தாலிய எழுத்தாளர் ராபர்ட்டோ கலாஸ்ஸோ, காலச்சுவடு வெளியிட்டிருக்கும் ‘க’ நாவலின் தமிழ் மொழிபெயர்ப்பு வெளியீட்டு விழாவிற்காகச் சென்னை வந்திருந்தபோது அதன் மொழிபெயர்ப்பாளர் கவிஞர். ஆனந்த் அவர்களுக்கு 18.01.2011 அன்று அளித்த நேர்காணல். எந்த வயதில் இந்தியாவை நோக்கி உங்கள் கவனம் திரும்பியது? 17 அல்லது 18 வயதிருக்கலாம்; சரியாக நினைவில்லை. முதலில் உபநிடதம், பகவத்கீதை இரண்டும் கிடைத்தன. வேறெங்கும் காண முடியாத ஒன்றை நான் கண்டுகொண்டுவிட்டதாக உடனே உணர்ந்தேன். மேலும் அறிய விழைந்தேன். இதோ இங்கே வந்து நிற்கிறேன். ஒரு கட்டத்தில் இந்த விஷயம் குறித்து எழுதத் தொடங்கினேன். என் எழுத்தின் வெளிப்பாட்டை ‘காஷின் அழிவு’ ( The Ruin of Kasch) என்னும் நூலில் தொடங்கினே

சிறுகதை
 

மிக இளம் வயதிலேயே அதாவது இருபதாம் வயதில் அரசு வேலை கிடைத்தது குமரேசனுடைய அதிர்ஷ்டம்தான். அதுவும் மிகப் புனிதமான ஆசிரியப் பணி. ஆட்சி மாறும்போதெல்லாம் அரசு வேலைகளுக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் விதிமுறைகளும் மாறிக்கொண்டேயிருக்கின்றன. ஒரே ஆட்சியேகூட அடிக்கடி விதிகளை மாற்றிக்கொள்கிறது. அதனால் கிட்டத்தட்ட ஓய்வு பெறும் வயதை நெருங்கும் கிழவர்களுக்குச் சிலசமயம் வாய்ப்புக் கிடைக்கிறது. புதுரத்தம் வெதுவெதுப்போடு ஓடும் இளைஞர்களுக்கும் சிலசமயம் வேலை கிடைத்துவிடுகிறது. நடுத்தர வயதில் இருப்பவர்கள்தாம் பாவம். அவர்களுக்கு வாய்ப்புக் கிடைக்கிற மாதிரி விதிகள் வரும் என்று காத்துக்கொண்டே இருக்கிறார்கள். குமரேசன் ஆசிரியர் பயிற்சி முடித்த சமயம் அதிஇளைஞர்களுக்குச் சாதகமாக விதிகள் இருந்தன. அவச

 

எஸ். செந்தில்குமார் கவிதை தேவதேவன் கவிதை

நாடகம்: தேசிய நாடகவிழா செயல்திட்டக் குறிப்புகள்
 

கடந்த ஜனவரி 7 முதல் 22ஆம் தேதிவரை நடைபெற்ற புது தில்லி தேசிய நாடகப்பள்ளியின் 13ஆவது தேசிய நாடக விழாவின் ஒருபகுதியாக அதன் இணைவிழா ஒன்றைச் சென்னையில் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் அதன் ஒருங்கிணைப்பாளராகச் செயல்பட வேண்டுமென்றும் கேட்டுக்கொள்ளப்பட்டேன். இந்த இணை நாடக விழாவின் இயக்குநராக பேராசிரியர் சுரேஷ் பரத்வாஜ் நியமிக்கப்பட்டிருந்தார். சென்னையில் முதல்முறையாக நடைபெற்ற இவ்விழா சுமார் 80 லட்சம் ரூபாய் செலவில் நடத்தப்பட்ட மிக முக்கியமான விழா. ஆங்கிலம், பிரஞ்சு உள்ளிட்ட எட்டு வெளிநாட்டு நாடகங்களுடன் இந்தி, வங்காளம், மலையாளம் உள்ளிட்ட 12 இந்திய மொழி நாடகங்களும் மேடையேற்றப்பட்ட இவ்விழா தந்த அனுபவம் தமிழ் நவீன நாடகப் பார்வையாளர்கள் இதற்கு முன் பெற்றிராத புதிய அனுபவம் என்பதில் சந்த

நாடகம்
 

புதுதில்லி, தேசிய நாடகப்பள்ளி இந்த ஆண்டுக்கான சர்வதேச நாடக இணைவிழாவைத் தமிழகத்திற்கு அளித்ததை, அண்மைக்காலத் தமிழ் அரங்கச் செயல்பாட்டில் மிக முக்கியமான நிகழ்வு என்றே குறிப்பிட வேண்டும். பத்து நாட்களில் 20 நாடகங்களைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு மிக முக்கியமானது. இதில் 12 நாடகங்கள் இந்திய மொழி நாடகங்கள். பிற எட்டும் பன்னாட்டு நாடகங்கள். வழக்கமான நாடகப் பார்வையாளர்களோடு புதியவர்கள் பலர் நாடகங்களைப் பார்க்க வந்திருந்தனர். அவர்களின் பெரும்பாலானவர்கள் கல்லூரி, பல்கலைக் கழக மாணவர்கள். தமிழ் அரங்கச் சூழலில் தென்படாத பல ஆச்சரியமான நிகழ்வுகள் இந்த விழாவில் அரங்கேறின. சென்னையில் நடைபெறும் ஆங்கில நாடக விழாக்களுக்குப் பெருமையுடன் வந்து குவியும் மேட்டுக்குடி நவநாகரிகப் பார்வையாளர்க

எதிர்வினை
 

காலச்சுவடு ஜனவரி இதழில் கண்ணன் எழுதியிருந்த ‘மாயைகளைக் குலைக்கும் மகாமாயை’ என்னும் கவித்துவமான தலைப்பின் கட்டுரையை வாசித்து வியந்தேன். பிரச்சினையின் ஆணிவேருக்கு ஆழத்திலும் பக்கவாட்டுச் சல்லிவேர்களின் அகலத்திலும் நுனியிலைக் கொழுந்து உச்சத்திலும் முற்றமுழுக்கப் பரிசீலித்து, விவரங்களைத் தொகுத்து, அறிவார்ந்த அறத்துணிவுடன், ஆழ்ந்துறைந்த அரசியல் புரிதலுடன் எழுதியிருந்த கண்ணனை நிச்சயமாகப் பாராட்டலாம். பாராட்டிக் கடிதம் எழுத முடியாத அளவுக்குக் கால தாமதமாகக் கட்டுரையை வாசித்திருந்தேன். 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் என்பது இந்தியாவின் வழக்கமான ஊழலல்ல. இந்த ஊழலின் புதிய அபாயத்தையும் சர்வதேசப் பின்புலத்தையும் தனிநபர்களின் பிணைப்புகளிலிருந்து, ஊடகச் செல்வாக்கும் அதிகாரமும் பெருமுதல

எதிர்வினை
 

பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், கலாச்சாரங்கள் மாறிவருவதை அல்லது கெட்டுப்போவதை எண்ணிச் சமூக ஆர்வலர்கள் கவலைப்பட்டுக் கட்டுரை வடிப்பது நல்ல விசயம். மார்ச் 2011, காலச்சுவடு இதழில் களந்தை பீர்முகம்மது எழுதியுள்ள ‘தமிழர் பண்பாடு’ எனும் கட்டுரை முஸ்லிம்களின் பத்திரிகைகளில் வராமல் காலச்சுவடு எனும் பொது இலக்கியத் தளத்தில் வந்துள்ளதால் இந்தக் கட்டுரைக்கு எந்த முஸ்லிம் பத்திரிகையும் மறுப்பு எழுதமாட்டார்கள் என நம்புகிறேன். கதை, கவிதை இலக்கியம், சமூகம் இவற்றில் வலம்வரும் தமிழ் முஸ்லிம் பத்திரிகை உலகம் அல்லது தமிழ் முஸ்லிம் ஆலிம்கள், பெரும்பாலும் களந்தை பீர்முகம்மதுவின் கட்டுரையை உள் மனத்தில் நேசிப்பார்கள். அல்லது ‘நாம் எழுத நினைப்பதை’ வேறுபாணியில் அவர் எழுதிவிட்டா

அஞ்சலி: சரஸ்வதி வ. விஜயபாஸ்கரன் (26.09.1926 -09.02.2011)
பழ. அதியமான்  

சரஸ்வதி விஜயபாஸ்கரன் காலமாகிவிட்டார். பழைய தோப்பின் மிச்சமிருந்த பெருமரங்களுள் மற்றொன்று விழுந்துவிட்டது. விடிவெள்ளி (1951) என்னும் சமூகப் பத்திரிகையை முன்னரே நடத்தியிருப்பினும் சமரன் (1962) என்னும் அரசியல் பத்திரிகையைப் பின்னால் நடத்தியிருந்தாலும் இடையில் நடத்திய சரஸ்வதியே (1955- 1962) அவரது பெயரின் முன்னொட்டாய் நிலைத்துவிட்டது. இடதுசாரியான அவருக்கு வாழ்க்கையிலும் வரலாற்றிலும் சரஸ்வதியே துணையும் அடையாளமும் ஆகிவிட்டது. தமிழ்ச் சிற்றிதழ் வரலாற்றில் மணிக்கொடிக்குப் பிறகு சாதனை படைத்த இலக்கிய இதழ் சரஸ்வதி. நவீனத் தமிழ் இலக்கியத்தில் ஒரு இயக்கமாக அதன் காலத்திலும் அதற்குப் பின்னரும் மணிக்கொடி ஒளிவீசியதை பி.எஸ். ராமையாவின் ‘மணிக்கொடி காலம்’ விவரித்தது. ஏறக்குறைய

மதிப்புரை
அம்ஷன் குமார்  

ஜன்மா ஆசிரியர்: முத்துவேலழகன் பக் 144. விலை ரூ50. பதினெட்டாம் போர் ஆசிரியர்: முத்துவேலழகன் பக் 64. விலை ரூ.50 இரண்டு புத்தகங்களையும் வெளியிட்டவர்கள் சீதை பதிப்பகம் 6/16, தோப்பு வேங்கடாசலம் தெரு திருவல்லிக்கேணி சென்னை 600005 முத்துவேலழகன் கடந்த அரைநூற்றாண்டுக்கு மேலாக நாடகத் துறையில் தீவிர ஈடுபாடு கொண்டிருப்பவர். இருபத்தைந்து நாடகங்களுக்குமேல் எழுதியிருக்கிறார். அவற்றில் பெரும்பாலானவற்றை அவரே தயாரித்து இயக்கியிருக்கிறார். ஆனாலும் அவரைத் தமிழகத்தில் பலருக்கும் தெரியாது. இதற்கு ஒரே காரணம் அவரது நாடகங்கள் திருச்சியில் போடப்படுவதுதான். சென் னையில் போடப்படும் அச்சுபிச்சு அமெச்சூர் நாடகங்கள்கூடச் செல்வாக்கு பெற்று அமெரிக்கா ஆஸ்திரேலியா என்று கண்டங்கள் தாவிப் பறக்

 

உமா வரதராஜன் 1990களின் பிற்பகுதியில் தான் அப்போது செய்துவந்த வானொலி நிகழ்ச்சிக்காக சு.ரா.விடமிருந்து ஒரு கேள்வி பதிலைப் பெற்றிருந்தார். ‘இதை விடவும் விரும்பும் நாவல் ஒன்றை நான் பின்னால் எழுதக் கூடும்’ என சுந்தரராமசாமி ‘ஒரு புளியமரத்தின் கதை’ நாவல் முன்னுரையில் குறிப்பிட்டிருந்ததைச் சுட்டிக்காட்டி ‘அதன்படி உங்கள் இரண்டாவது நாவலான ஜே. ஜே. சில குறிப்புக்கள் சிறந்த நாவல்தான் என்பது அபிப்பிராயமா’ என்று கேட்டிருந்தார். அதற்கு டிசம்பர் 1, 1990 இல் சுந்தர ராமசாமி, உமா வரதராஜனுக்கு எழுதிய பதில் இது. இப்பதிலை உமா வரதராஜன் வானொலி நிகழ்ச்சிக்காகப் பயன்படுத்தாமல் அப்போது வீரகேசரி ஞாயிறு வெளியீட்டில் அவர் எழுதிவந்த ‘காலரதம்’ என்னும் பத்த

தலையங்கம்
 

கடந்த மார்ச் 11ஆம் தேதி ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து சுமார் 400 மைல் தொலைவில், பசிபிக் பெருங்கடலில் இருபது கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட ஒன்பது ரிக்டர் அளவுகொண்ட சக்திவாய்ந்த பூகம்பத்தைத் தொடர்ந்து உருவான சுனாமி அலைகள் அதன் வடகிழக்குக் கடற்கரையோர நகரங்களைத் தாக்கி வரலாறு காணாத சேதத்தை விளைவித்திருக்கிறது. உலகைத் தாக்கிய பூகம்பங்களின் - பதிவு செய்யப்பட்ட - வரலாற்றில் இதுவே மிகப் பெரியது எனவும் அலைகளின் உயரம் பத்து மீட்டர் முதல் முப்பது மீட்டர் வரை இருந்தது எனவும் சொல்லப்படுகிறது. 2001ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் புஜ் பகுதியைத் தாக்கிய பூகம்பம் 7.7 ரிக்டர் அளவுகொண்டது. புஜ், ஆமாதாபாத் உள்ளிட்ட பல மாவட்டங்களில் பெருத்த சேதத்தை ஏற்படுத்தி 25 ஆயிரத்துக்கும் மேற்பட்

கண்ணோட்டம்
கண்ணன்  

திமுகவும் காங்கிரசும் பரஸ்பர உள்குத்தல், மிரட்டல் ஆகியவற்றிற்குப் பிறகு பகையுடன் தேர்தல் கூட்டணியில் ஒன்றிணைந்திருக்கின்றன. திகைக்கவைக்கும் ஊழலை மத்தியிலும் மாநிலத்திலும் நிகழ்த்திக்கொண்டிருக்கும் இரு கட்சிகள் தேர்தலை இணைந்து சந்திப்பதுதான் பொருத்தம். ஆனாலும் இனி எத்தனை முறை ‘நாம்’ சொன்னாலும் இக்கூட்டணியின் உதடுகள் ஒட்டவே ஒட்டாது. காங்கிரசும் திமுகவும் இணைந்து கடந்த ஐந்தாண்டுகளில் தமிழகத்தில் பலமுறை தேர்தல் கடலில் அதிகாரத்தை மத்தாக நிறுத்தி, ஊழல் பணத்தால் கடைந்திருக்கின்றன. ஜனநாயகத்தைக் காவுகொள்ளும் விஷம் தவிர வேறெதுவும் மக்களுக்குக் கிடைத்ததில்லை. கள்ள ஓட்டுப் போடும் சாத்தியப்பாடு ஒவ்வொரு தேர்தலிலும் குறைந்துவரும் நிலையில் எங்ஙனம் தேர்தல் முடிவுகளை முறைக

 

காலச்சுவடு இதழ் 135 தலையங்கம் படித்தேன். அடித்தட்டு மக்களின் நலன்களுக்கெதிராக நடவடிக்கைகள் மேற்கொள்வதையே தன் தலையாயக் கடமையாக மத்தியில் உள்ள அய்க்கிய முன்னணி அரசு கருதிச் செயல்பட்டு வருகிறது. 2நி அலைவரிசை ஒதுக்கீடு, ஆதர்ஷ் வீட்டு வசதித் திட்டம், காமன்வெல்த், எஸ் பாண்ட் ஒதுக்கீடு என்று சுதந்திர இந்தியாவில் இதுவரை இல்லாத அளவுக்கான மிகப் பெரிய ஊழல்களை நடத்திய மத்திய அரசை வழிநடத்திச் செல்லக்கூடிய பலவீனமான பிரதமரை நாம் பெற்றிருப்பதைவிடக் கேவலம் வேறு எதுவும் இருக்க முடியாது. எதுவுமே எனக்குத் தெரியாது என்று கூறும் பிரதமரை ஏழு ஆண்டுகளுக்கு மேலாகப் பெற்றிருந்ததை எண்ணி வெட்கப்படுவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை. தலையங்கத்தில் ஒன்றைக் குறிப்பிடவில்லை. தன் பேட்டியின் போது பத்திரிகையாள

உள்ளடக்கம்