கட்டுரை: சட்டமன்றத் தேர்தல் 2011்
தேவிபாரதி  

கடந்த 2006ஆம் ஆண்டு முதல் திமுக அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டுவரும் ‘நலத்திட்டங்கள்’ தொடரவும் திராவிட இயக்கத்தின் கொள்கைகளைப் பாதுகாக்கவும் ஆறாவது முறையாகக் கருணா நிதியை முதல்வராக்குவதைத் தவிர மக்களுக்கு வேறு கதியில்லை என்னும் முழக்கத்துடன் தேர்தல் களத்தைச் சந்தித்த திமுக-காங்கிரஸ் கூட்டணி, இறுதியில் இந்தியத் தேர்தல் ஆணையத்தின் கண்டிப்பான அணுகுமுறையையும் மீறித் திருமங்கலம் பாணியில் வாக்காளர்களுக்குப் பணப்பட்டு வாடாவைச் செய்துமுடித்துவிட்ட திருப்தியுடன் வெற்றியை எதிர் பார்த்துக் காத்திருக்கிறது. காங்கிரஸ் கட்சியுடனான தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட நெருக்கடிகளைத் ‘தோழமை’யுடன் தீர்த்துக்கொண்டு, வாக்காளர்களுக்குத் தன் ‘கதா நாயகி’யை அறிமுகப்படுத

கட்டுரை: சட்டமன்றத் தேர்தல் 2011
க. சீ. சிவகுமார்  

திமுகவின் தேர்தல் அறிக்கையைப் பார்த்துவிட்டுத் திராவிட அளவில் திகைப்படைந்த நான் அடுத்து அதிமுக அறிக்கையைப் பார்த்ததும் அனைத்திந்திய அளவில் திகைப்பை விஸ்தரித்துக்கொண்டேன். அறிக்கைகள் இரண்டும் என் ஆசைக் கனலை மூட்டிக் கொழுந்துவிட்டு எரியச் செய்கின்றன. சூரிய மின்சக்தி பற்றி திமுக அறிக்கைகளில் ஏதுமில்லாமல் அது அதிமுகவின் அறிக்கையில் இடம்பெற்றிருந்தது ஆச்சரியத்தையும் மகிழ்ச்சியையும் அளித்தது. நிச்சயம் இது சின்னத்தனமான விஷயமல்ல. நவீன அறிவியல் பார்வை அதிகம் அதிமுக அறிக்கையில்தான் இருந்தது. நாடாளுமன்றத் தேர்தலையொட்டி இந்தச் சட்டமன்றத் தேர்தல் நடைபெறவில்லை என்பது ஒரு தோதான செய்திதான். இல்லாவிட்டால் மாவட்டத்துக்கு ஒரு ஐ. ஜி லெவல் அதிகாரிகளை அனுப்பித் தேர்தல் வேலை பார்க்க முடியுமா

கட்டுரை
தீபச்செல்வன்  

ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்ட நிலையில் ஈழத்து மக்களிடம் ஏற்பட்டுள்ள அரசியல் வெறுமையும் அரசின் ஆக்கிரமிப்பு நிலையும் சேர்த்து ஈழத்து மக்களை நிலமற்ற வாழ்வுக்குள் தள்ளியிருக்கிறது. கொடும் போரால் ஈழத்தை ஆக்கிரமித்துள்ள இலங்கை அரசு ஈழத்து மக்களின் ஒவ்வொரு அங்குல நிலத்திலும் தன் ஆக்கிரமிப்புக் கனவைத் திணித்துவருகிறது. இத்தனை அழிவுகளின் பிறகும் தம் வாழ் நிலத்திற்காகப் போராட வேண்டிய தவிர்க்க முடியாத நிலை ஈழத்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கிறது. போர் முடிந்த பின்னர் மிகவும் கவர்ச்சிகரமானதாக முன்வைக்கப்பட்ட மீள்குடியேற்றம் என்னும் வார்த்தையில்தான் இந்த நிலப் பிரச்சினை அடங்கியிருக்கிறது. எல்லாத் துயரங்களின் பிறகும் தலைமுறைகளுக்காகவும் சந்ததிகளுக்காகவும் வாழ வேண்டும் என்னும் தவிர்க்க இ

சு.ரா. பக்கம்
 

17.02.02 அன்புள்ள திரு. கல்யாணி அவர்களுக்கு, வணக்கம். உங்களுடனான தொடர்பு எனக்கு அதிகம் இல்லையென்றாலும் அபூர்வமாக நாம் சந்தித்துக்கொண்டதும் பேசிக்கொண்டதும் மனதில் பசுமையாகவே இருக்கிறது. இந்தக் கடிதம் உங்களுக்கு எழுத வேண்டுமென்று இன்று காலையில் தோன்றிற்று. ‘களம் புதிது’ (இதழ் 7, ஜனவரி 02) இதழை நேற்றுப் படித்துக்கொண்டிருந்தபோது, நீங்கள் மதிப்புரை செய்யும் பொருட்டு ‘இந்தியா டுடே’யிலிருந்து பெற்றுக்கொண்டிருந்த ‘தமிழகத்தில் கல்வி’யை, ‘மன்னியுங்கள் இந்த நூலுக்கு நான் மதிப்புரை எழுத இயலாது, சுந்தர ராமசாமி பெரிய எழுத்தாளராக இருக்கலாம். ஆனால் கல்வி பற்றிப் பேச அவருக்கு தகுதி கிடையாது என்பது இந்த நூலில் நிரூபணமாகி உள்ளது’ என்று கூறி புத்தக

கட்டுரை
க. திருநாவுக்கரசு  

இந்திரா காந்தியின் ஆட்சியில் ஊழல் அதிகரித்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் கூறியபோது “ஊழல் ஓர் உலகளாவிய விஷயம்” என்றார் இந்திரா. உண்மைதான். ஆனால் மற்றொரு விஷயத்தை அவர் தனக்கு வசதியாகச் சொல்லாது விட்டுவிட்டார். வளர்ச்சியடைந்த மேற்கு நாடுகளிலும் ஊழல் உண்டு. அது இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் நடைபெறும் ஊழலிலிருந்து இரண்டு விஷயங்களில் வேறுபடுகிறது. அந்த நாடுகளில் அரசாங்கத்தின் எல்லா மட்டங்களிலும் ஊழல் என்பது கிடையாது. அங்கே சட்டத்தை மீறுவதற்கும் தவறுக்குத் துணைபோவதற்குமே லஞ்சம் கேட்கப்படும். ஆனால் இங்கோ உள்ளூர் காவல் நிலையம், தாலுகா அலுவலகத்திலிருந்து பிரதமர் அலுவலகம், குடியரசுத் தலைவர் மாளிகைவரை ஊழல் புகாத இடமேயில்லை என்னும் நிலை. மேலும் ஓர் அரசு ஊழியர் என்ன வேலைக

கட்டுரை
சுப. உதயகுமாரன்  

1 அண்மையில் அமெரிக்காவின் நியூஜெர்ஸி மாநிலத்திலுள்ள மான்மத் பல் கலைக்கழகத்தில் உள்ளுறை வல்லுநராகத் (Scholar-in-Residence) தங்கியிருந்தேன். அப்பல்கலைக்கழகத்தின் அரசியல் துறைத் தலைவர் என்னைச் சந்தித்து அத்துறையின் பேராசிரியர் ஒருவருக்கு ஒரு பெரும் சிக்கல் எழுந்திருப்பதாகச் சொல்லி, அவரது வகுப்புகளை நான் முன்னெடுத்து நடத்த முடியுமா எனக் கேட்டார். அவரது இரண்டு வயது பச்சிளங்குழந்தைக்கு ஒரு கண்ணின் பின்பகுதியில் கட்டி ஒன்று வளர்ந்துகொண்டிருப்பதாகவும் அது புற்று எனத் தீர்மானிக்கப்பட்டிருப்பதால், அக்குழந்தைக்கு வேதியியல் சிகிச்சையும் அறுவைச் சிகிச்சையும் மேற்கொள்ளப்படவிருப்பதாகவும் விளக்கினார். இரண்டே வயதான ஓர் இளம் பிஞ்சுக்கு இப்படி ஓர் இன்னலா என உறைந்து நின்றேன் நான். அந்தப் பேராச

கட்டுரை
 

நோய்வாய்ப்பட்ட நிலையிலிருந்த, பார்வதி அம்மா என அழைக்கப்பட்ட வல்லிபுரம் பார்வதி, பெப்ரவரி இருபதாம் திகதி யாழ்ப்பாணத்தில் இறந்துபோனார். இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனின் தாயார். இவருடைய கணவர் இறுதி யுத்தத்துக்குப் பின்னர் கைதுசெய்யப்பட்டு, பனாகொட இராணுவத் தடுப்பு முகாமில் வைத்து மரணித்துப் போயிருந்தார். இந்தப் பெற்றோர் எந்தவொரு அரசியலிலும் ஈடுபட்டவர்களல்ல. இந்துமத சம்பிரதாயப்படி, இறந்தவர்களை எரித்ததன் பிற்பாடு எஞ்சும் அவர்களது அஸ்தியைத் தண்ணீரில் மிதக்கவிட வேண்டும். அதன் பிரகாரம் கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி காலை அன்னாரது உறவினர்கள் அஸ்தியை எடுத்துவர மயானத்துக்குச் சென்றனர். முந்தைய நாள் இரவு பத்து மணிவரை அங்கே கூடியிருந்த அவர்கள், உடலானது சம்பூரணமாக எரிந்து மு

பத்தி
கண்ணன்  

  நம்பிக்கை சில மாதங்களுக்கு முன்னர் யு. ஆர். அனந்தமூர்த்தி அவர்களைப் பங்களூருவில் சந்தித்தேன். நீண்ட நாட்களாகத் திட்டமிட்ட பயணம். மகனின் மேற்படிப்புக்குப் பொருத்தமாகத் தோன்றிய ஒரு கல்வி நிறுவனத்தையும் பரிசீலிக்கும் திட்டமிருந்ததால் மைதிலியும் வந்திருந்தாள். நான் படித்த கல்லூரிக்குப் பின் பகுதியில்தான் அவருடைய வீடு இருந்தது. நூற்றுக்கணக்கான முறை நடந்து கடந்திருக்கும் புல்வெளிகள் முற்றிலுமாக மறைந்து குடியிருப்புகள் உருவாகியிருந்தன. நாங்கள் போய்ச் சேரும் முன்னரே நஞ்சுண்டனும் வந்திருந்தார். உடனடியாகவே பேச அமர்ந்தோம். காலச்சுவடு 50ஆம் (நவ-டிச. 2003) இதழையும் இதழ்த் தொகுதிகளையும் வெளியிட அவர் சேலம் வந்திருந்தபோதே, தமிழில் ‘என்னுடைய எல்லா நூல்களையும் வெளியிட உங்க

சிறுகதை
 

அவன் தனக்கு முற்றிலும் பழக்கமில்லாத பாதையில் நடந்துகொண்டிருந்தான். இந்தப் பாதை முன்பு சாதாரணமாகப் புழங்கிக்கொண்டிருந்த சாலையாக இருந்திருக்கும் என்றே அவனுக்குத் தோன்றியது. செடி கொடிகள் முழங்காலுக்குக் கொஞ்சம் கீழான உயரத்தில் நெருக்கமாக வளர்ந்து நடப்பதற்குச் சிரமமாக இருந்தது. வேறு ஏதேனும் நல்ல சாலை தென்படுகிறதாவெனக் கண்களைக் கூர்மையாக்கிச் சாத்தியப்பட்ட தூரம்வரை பார்த்தான். நாலாப் பக்கமும் செடிகொடிகளும் ஓங்கி உயர்ந்த மரங்களும் சூழ்ந்து அந்தப் பிரதேசமே அதுவரை அவன் அறிந்திராத நிசப்தத்தை உணர்த்திக்கொண்டிருந்தது. தான் எங்கிருந்து நடக்கத் தொடங்கினோம் என்னும் சிந்தனை அவனை வாட்டிக்கொண்டிருந்தது. எப்பொழுது இந்த வனத்திற்குள் நுழைந்தோம் என்று தொடர்ந்து யோசித்துக்கொண்டிருந்தான். தான் என்ன

கட்டுரை
ரவிசுப்ரமணியன்  

நல்ல கலைஞர்களுக்கு வாழும் காலத்தில் அங்கீகரிக்கப்படாத சோகம் போல, வேறு எதுவும் இருக்க முடியாது கலைக்காக, சமூகத்திற்காகத் தன் வாழ்வின் பெரும்பகுதியைக் கரைத்துக்கொள்கிற தேர்ந்த படைப்பாளிகளை உரிய காலத்தில் கௌரவிக்காது மௌனம் காத்து இறும்பூதெய்தும் பெருமைகொண்டது நம் செம்மொழிச் சமூகம். அதற்காக அவன் பதிலுக்கு மௌனம் காப்பதில்லை. “கஞ்சி குடிப்பதற்கிலார் அதன் காரணங்கள் இவை என்னும் அறிவுமிலார்...” என்பதை அவன் அறிந்த வனாகையால் எவ்வித எதிர்பார்ப்புகளுமின்றி சதா இழை இழையாய்த் தன் படைப்பின் நெசவை அவன் தொடர்ந்தபடி இருக்கிறான். ஆடைகளைப் பயன்படுத்தும் நாம் நெய்தவனைப் பற்றி யோசித்ததே இல்லை. ஆனாலும் மிகச் சிலரின் காதுகளுக்குத் தறியின் இடதும் வலதுமாய் ஓடி ஓடி நூல் இழைக்கும் நெளியின்

செம்மை
நஞ்சுண்டன்  

சிறந்த இலக்கியப் படைப்பின் பண்புகளில் ஒன்று செறிவு. சங்க இலக்கியம் என்றதும் நினைவுக்கு வருவது செறிவு. பல்வேறு உத்திகளால் உரைநடைக்கும் செறிவூட்டலாம். ஒரு சொல் ஒரு வாக்கியத்தில் ஒன்றுக்குமேற்பட்டமுறை இடம்பெறுவதைத் தவிர்த்தல், பிரதிப்பெயர்ச்சொற்களைப் பயன்படுத்துதல், நெகிழ்ச்சியாக அமையும் சொற்றொடருக்கு நிகரான ஒரே சொல்லை எடுத்தாளுதல் போன்ற பலவற்றைக் குறிப்பிடலாம். இவற்றோடு வினைப்படுத்திகளைத் தவிர்த்தலும் உரைநடையைச் செறிவாக்கும். பொதுவாகப் பெயர்ச்சொற்களைவிட வினைச் சொற்களின் எண்ணிக்கை குறைவு. இது எல்லா மொழிகளுக்கும் பொது. வினைப்படுத்திகள் பெயர்ச்சொற்களை வினைச்சொற்களாக்குகின்றன. பெயர்ச்சொல்லான ‘சரி’யுடன் ‘செய்’யைச் சேர்க்கும்போது, ‘சரிசெய்’ என வ

 

சென்னைப் புத்தகக் கண்காட்சியை ஒட்டி வெளியிடத் திட்டமிடப்பட்டிருந்த, பழ. அதியமான் பதிப்பித்த கு. அழகிரிசாமி சிறுகதைகள் முழுத் தொகுப்பு நூலாக்க நேர்த்திக்குத் தரப்பட்ட கவனம் காரணமாகச் சற்றுத் தாமதமாக ஏப்ரலில் தயாரானது. எனவே, காலச்சுவடு பதிப்பக வெளியீடான கு. அழகிரிசாமி சிறுகதைகள் முழுத் தொகுப்பு, சுந்தர ராமசாமி எழுதிய கு. அழகிரிசாமி நினைவோடை ஆகிய இரு நூல்களின் வெளியீட்டு விழா 2011, ஏப்ரல் 16 அன்று சென்னை எழும்பூரிலுள்ள கன்னிமாரா நூலக அரங்கில் நடைபெற்றது. தகவல் தொழில்நுட்ப வசதிகள் அதிகரித்துள்ளதால் இப்போது புத்தக வெளியீட்டு நிகழ்வு குறித்த அறிவிப்பு, அழைப்பைப் பதிப்பகங்களாலும் எழுத்தாளர்களாலும் வாசகர்களிடம் மிக எளிதாகக் கொண்டு சேர்த்துவிட முடிகிறது. ஆனால் புத்தக வெளியீட்டு நிகழ்

மதிப்புரை
மண்குதிரை  

மரபை உடைத்தெழுந்த முயற்சிகளுக்குப் பிறகு எண்பதுகளில்தாம் நவீனக் கவிதை அதன் முழுமையான வடிவத்தை எய்தியது. கவிதையின் தொழில்நுட்பம் பற்றிய கருத்துரையாடல்கள் மூலம் ஆழம் மிக்க நேர்த்தியான கவிதைகள் அப்போது வெளிவரத் தொடங்கின. வெறும் அனுபவங்களையல்லாமல் அவ்வனுபவங்களின் உளப்பதிவுகளை அத்தலைமுறைக் கவிஞர்கள் தம் கவிதைகளில் வெளிப்படுத்தினர். அவர்களுள் முக்கியமானவர் தேவதச்சன். அவரது ஹேம்ஸ் என்னும் காற்று சமீபத்தில் உயிர்மை வெளியீடாக வெளிவந்திருக்கிறது. நவீன மாற்றங்களை உள்வாங்கிக்கொண்டு புதிய பரிசோதனைகளை இத்தொகுப்பில் முயன்றிருக்கிறார். ஹேம்ஸ் என்னும் காற்று கவிதைகள் ஆசிரியர்: தேவதச்சன் பக். 56. விலை ரூ.35 வெளியீடு உயிர்மை பதிப்பகம் 11/29, சுப்பிரமணியம் தெரு அபிராமபுரம், சென்னை-

மதிப்புரை
ஏ. எம். சாலன்  

ஆதிவாசி மக்கள் இன்னும் காடுகளுக்குள்ளேயும் மலைமுகடுகளிலும்தாம் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள். மூங்கிலால் கட்டியுயர்த்திய புற்குடில்களில், அரைமுழத் துண்டுடன் கரடி, புலி, யானை, தேன், சிலந்தி, காட்டுப்பன்றி, விஷப் பாம்பு போன்றவற்றுக்கு நடுவே இரவும் பகலும் தங்கள் ஜீவனைக் கையில் ஏந்திக்கொண்டு வாழ்ந்து வருபவர்கள் இம்மக்கள். சின்ன அரயத்தி நாவல் ஆசிரியர்: நாராயண் தமிழில்: குளைச்சல் மு. யூசுப் பக் 280. விலை ரூ.200 வெளியீடு காலச்சுவடு பதிப்பகம், 669, கே.பி. சாலை, நாகர்கோவில் - 629001 கேரளத்தில் இலக்கியவாதிகள் சிலர், இந்த ஆதிவாசி மக்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள். ஆனால் அவை பெயரளவுக்குத்தான் அவர்கள் வாழ்க் கையை ஆங்காங்கே தொட்டுக் காட்டுகின்றன. சின்ன அரயத்தி இவற்றிலி

எதிர்வினை
மதிகண்ணன்  

‘பெயக்கண்டும் நஞ்சுண் டமைவர் நயத்தக்க நாகரிகம் வேண்டு பவர்' வள்ளுவரின் வார்த்தைகளில் இருக்கக்கூடிய நாகரிகம் என்னும் வார்த்தை ‘Civilization’ அல்ல ‘Culture’ என்னும் பொருளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றளவிலும்கூடப் பழைய இராமநாதபுரம் மாவட்டத்தின் பல பகுதிகளில் பண்பாடு என்னும் வார்த்தையோ கலாச்சாரம் என்னும் வார்த்தையோ மக்கள் பயன்பாட்டில் இல்லை. 'நாகரிகம் இல்லாமல் நடந்துகொள்கிறார்கள்' என அவர்கள் பண்பாடின்றி நடந்துகொள்பவர்களைத்தான் சொல்கிறார்கள். 1937இல் டி. கே. சி. பண்பாடு என்னும் வார்த்தையை அறிமுகப்படுத்துவதற்கு முன்னதாக, ஆங்கிலேயரின் வருகையைத் தொடர்ந்து (Cult என்னும் மூலத்தைக் கொண்ட) ‘Culture’ என்னும் ஆங்கில வார்த்தையைப் பின்பற்றி (

எதிர்வினை
ந. செந்தில்குமார்  

காலச்சுவடு இதழ் 135இல் வெளிவந்த தமிழர் பண்பாடு சிறப்புப் பகுதியில் இடம்பெற்றிருந்த பிரபஞ்சன் கட்டுரைக்கான எதிர்வினை. தமிழ்ப் பண்பாடு குறித்தான நமது பார்வை பெரும்பான்மையும் சங்க இலக்கியம் சார்ந்தும் இலக்கண நூல்வழி கட்டமைக்கப்பட்ட ஒன்றாகவும் அமைந்து வருகிறது. கல்விப்புலம் சார்ந்த ஆய்வுகளாயினும் நவீன இலக்கியப்புலம் சார்ந்த இலக்கியவாதிகள் மேற்குறித்த தரவுகள் குறித்தான பார்வையையும் முன்வைக்கும் போதாயினும் இது தவறாமல் நேர்ந்துவிடுகிறது. ‘காதலைத் தின்று துரோகத்தை விழுங்கிய சங்கப் பெண்கள்’ கட்டுரையிலும் துரதிர்ஷ்டவசமாக அப்படித்தான் அமைந்துள்ளது. கட்டுரையாசிரியரின் சாய்வு மரபுவழிப்பட்ட நிலையிலிருந்து விலகிப் பெண்மையச் சார்பு நிலைக் கொண்டிருந்தபோதிலும்கூட! சங்க இலக்கிய ம

எதிர்வினை
ஜி. கே. இராமசாமி  

காலச்சுவடு இதழ் 126, 133இல் வெளிவந்த பாலகங்காதரா பற்றிய கட்டுரைகளுக்கான எதிர்வினை. இலக்கிய விசயங்களையே பெரும்பாலும் விவாதித்து வரும் தமிழ் வாசக உலகத்திற்கு, சமூக - அறிவியல் விசயங்கள் கொஞ்சம் வித்தியாசமான அனுபவத்தைத் தரலாம். சிந்தனையாளர் ஒருவரின் கருத்துகளை அறிமுகப்படுத்தும் முன்பே அவரைப் பற்றிய பிரமாண்டமான பிம்பத்தை முன்னிறுத்துவது, வாசகனுக்குப் பல சிக்கல்களைத் தரும். ஜி. எஸ். ஆரின் இரண்டு கட்டுரைகளிலும் உள்ள கடைசிப் பகுதியை முதலில் பேசியிருந்தால் நன்றாக இருந்திருக்கும். பாலகங்காதரா முன்வைக்கும் கருத்துகள் யாவும் உண்மையில் கருதுகோள்களே (Hypothesis), தர்க்கத்தின் துணையுடன் நிறுவ முயலும் முடிவுகள் அவை. இந்த முடிவுகளுக்குப் போதிய வரலாற்று அடிப்படை ஆதாரங்கள் இல்லை. வரலாற்று ந

விவாதம்
கண்ணன்  

கரிகாலன் அவரது சுயசாதிச் சார்பு பற்றிய என் அவதானிப்பிற்கு ஆதாரம் கேட்டுள்ளார். இது எனக்கு மட்டற்ற மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. குற்றச்சாட்டுகள் ஆதாரத்துடன்தான் முன்வைக்கப்பட வேண்டும் என்னும் மதிப்பீட்டை அவர் ஏற்றுக்கொள்ள நேர்ந்திருப்பதே மகிழ்ச்சிக்குக் காரணம். கடந்த 15 ஆண்டுகளாகக் கரிகாலனும் அவரது கூட்டாளிகளும் அவரது பரமார்த்த குருவும் தாங்கள் பிறர்மீது முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு - குறிப்பாக சாதிய அவதூறுகளுக்கு எந்த ஆதாரத்தையும் வழங்கியதில்லை. ஆனால் இப்போது அவர் ஆதாரம் கேட்பது வெறும் முரண்பாடு அல்ல. காலச்சுவடு இதழை 1994இல் மீண்டும் தொடங்கியபோது முதல் இதழில் இமையத்தின் ‘கோவேறு கழுதைகள்’ நாவலைப் பாராட்டி சு.ரா. எழுதிய விமர்சனம் வெளிவந்தது. இதை அடுத்து ‘க

தலையங்கம்
 

தமிழக சட்டமன்றத் தேர்தலில் தேர்தல் ஆணையம் கடைப்பிடித்த கண்டிப்பான அணுகுமுறை முதல்வர் கருணாநிதியின் கடும் கண்டனத்துக்குள்ளாகியிருக்கிறது. தேர்தலை நியாயமாகவும் சுதந்திரமாகவும் நடத்துவதற்காக ஆணையம் எடுத்த நடவடிக்கைகளை எதிர்கொள்ள முடியாத கருணாநிதி தமிழகத்தில் அறிவிக்கப்படாத அவசரநிலை நிலவுவதாகவும் ஆணையம் எதிர்க்கட்சிகளுக்குச் சாதகமாகச் செயல்படுவதாகவும் வெளிப்படையாகக் குற்றம் சுமத்தினார். அரசியல் சாசனக் கடமைகளை நிறைவேற்றுவதற்காக அமைக்கப்பட்ட நாட்டின் உச்ச அதிகாரம் பெற்ற அமைப்பொன்றின் நியாயமான செயல்பாடுகளை அதே அரசியல் சாசனக் கடமைகளை நிறைவேற்றுவதாக உறுதிமொழி எடுத்துக்கொண்ட மாநிலத்தின் முதலமைச்சர் விமர்சிப்பதும் தடைசெய்ய முயல்வதும் கண்டனத்திற்குரியது. ஜனநாயக நெறிமுறைகளைப் பாதுகாக்க வ

 

ஜப்பானில் ஏற்பட்டிருந்த சுனாமி, பூகம்பம் பற்றிய தலையங்கம் படித்தேன். இதைப் போன்ற இயற்கைச் சீரழிவுகளை அடிக்கடிச் சந்திக்கும் ஜப்பான் மீண்டும் உயிர்த்தெழுந்து உலக நாடுகளை அண்ணாந்து பார்க்கச் செய்துவிடும். ஆனால் நம் நாடு இது போன்ற விளைவுகளைச் சந்தித்திருந்தால் இங்கு ஒரு நாடு இருந்ததா என்னும் கேள்விக்கு ஆளாகியிருக்கும். காரணம் நம் நாட்டில் புரையோடியிருக்கும் ஊழல். எவ்வளவு பெரிய அரசியல்வாதியாக இருந்தாலும் இந்த ஊழல் என்னும் பெருச்சாளிக்கு அடிமையாகிவிடுகிறார்கள். அணு ஆயுத ஒப்பந்தம் வேண்டாமென மறுப்பெழுந்த போதும் முன்னுக்கு நின்று ஒப்பந்தம் நிறைவேற்ற ஆர்வம் காட்டிய தலைவர்கள் நாளை இது போன்ற விளைவுகளில் முன்நிற்பார்களா என்பது கேள்விதான். சசி அய்யனார் பள்ளியக்ரஹாரம் பேராசைக்காரனின்

உள்ளடக்கம்