கட்டுரை - தமிழக சட்டமன்றத் தேர்தல்
ஸ்டாலின் ராஜாங்கம்  

எவருமே யூகித்திராத முடிவுகளைத் தமிழக சட்டமன்றத் தேர்தல் தந்துவிட்டது. தங்களின் கணிப்புகள் பலிக்காத நிலையில் ஊடகங்களும் அறிவுஜீவிகளும் முடிவுகள் கிடைத்த விதம் பற்றிப் பேசத் தொடங்கிவிட்டனர். அணிகளின் பலம், மக்களின் மனநிலை என்றெல்லாம் நீளும் அக் கணிப்புகளில் ஒன்று “சாதிக்கட்சிகள் தோற்றுவிட்டன” என்பது. தினமணி தலையங்கம் (மே 14,2011) தொடங்கி தேமுதிக. தலைவர் விஜயகாந்த் அறிக்கை வரை இக்கருத்து வெளிப்பட்டுள்ளது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கொங்குநாடு முன்னேற்றப் பேரவை போன்ற கட்சிகளின் தோல்வியையே இவ்வாறு குறிப்பிடுகின்றனர். ஆனால் இக்கூற்றுகளை உண்மை என்று கொள்வதைக்காட்டிலும் ‘சாதி’க்கட்சிகளுக்கு எதிரான க

கட்டுரை
கண்ணன்  

தேர்தல் முடிவுகள் அனைத்தும் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட மறுதினம் காலை சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இறங்கினேன். வெளியே நிறைய வெள்ளையும் சொள்ளையும் தெரிந்தன. பிரகாசம், தூய்மை! பல தினசரிகள், இதழ்களை வாங்கிக்கொண்டு ஆட்டோ பிடிக்கும் படலத்தைத் தொடங்கினேன். நள்ளிரவில் பெட்ரோல் விலை பாய்ந்துவிட்டதை நான் அறிந்திருக்கவில்லை. (மக்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றிவிட்டு வீடு திரும்பியதுமே பெட்ரோல், டீசல் விலையைக் கூட்டி அவர்களைத் தண்டிப்பது மத்திய அரசின் புது வழக்கமாகவே உருவாகிவருகிறது.) வழக்கமான பேரங்கள், தர்க்கங்களுக்குப் பிறகு ஒரு ஆட்டோவில் ஏறினேன். சில நிமிடங்களுக்குப் பிறகு, “யாருக்கு ஓட்டுப் போட்டீங்க?” “ரெட்டை இலைக்குத்தான் சார்.” “பெரிய மெஜாரிட்டி

கட்டுரை
தேவிபாரதி  

மே 16 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அரசு பதவியேற்றுக் கொண்ட ஓரிரு மணிநேரத்துக்குப் பின்னர் என் இலக்கிய நண்பரொருவருடன் புதிதாகக் கட்டப்பட்ட பழைய தலைமைச் செயலகக் கட்டடத்துக்குச் சென்றேன். கடந்த ஒரு வருடத்திய எனது பயணங்களில் கால்நடையாகவும் இருசக்கர வாகனங்களிலும் ஆட்டோ, பேருந்துகளிலும் அந்தக் கட்டடத்தைப் பலமுறை கடந்து சென்றிருக்கிறேன். கருணாநிதியின் கனவு மாளிகையாக வர்ணிக்கப்படும் மிகப் பிரும்மாண்டமான அக்கட்டடத்தைக் கடந்து செல்வது என்பது எப்போதுமே ஒரு அசௌகரியமான அனுபவமாகவே இருந்து வந்திருந்தது எனக்கு. அரசு உயர் அதிகாரிகள் கொலுகொண்டிருக்கும் பகட்டான அலுவலகங்கள் ஏற்படுத்தும் பதற்றம் தவிர தற்போது பழைய என்னும் அடைமொழியைப் பெற்றுவிட்ட

கட்டுரை:
க. திருநாவுக்கரசு  

அமெரிக்கப் படைகளால் ஒசாமா பின் லேடன் கொல்லப்பட்ட பிறகு அதைப் பற்றிய அனைத்து சாத்தியமான சதிக் கோட்பாடுகளும் (Conspiracy theories), பின் லேடன் கொல்லப்படவில்லை என்பது உட்பட, சொல்லப்பட்டுவிட்டன. பின் லேடனே தன்னைப் பற்றி அமெரிக்கப் படைகளுக்குக் காட்டிக் கொடுத்துத் தன் கொலையை விரும்பி ஏற்றுக்கொண்டார் என்பது மட்டுமே சொல்லப்படவில்லை. மிகப் பெரும் நிகழ்வுகளுக்குப் பின்னால் மிகப் பெரும் சதிகள் இருந்தாக வேண்டுமென நம்புகிறவர்கள் சதிக் கோட்பாட்டாளர்கள். ஜான் எப் கென்னடியின் கொலை, நீல் ஆம்ஸ்ட்ராங் நிலவுக்குச் சென்றது, 9/11 தாக்குதல் என எல்லா நிகழ்வுகளைப் பற்றியும் இத்தகைய எண்ணற்ற சதிக் கோட்பாடுகளைக் காணலாம். அதிலும் பின் லேடன் கொலை குறித்து அமெரிக்கா முதலில் கூறியதற்கும் ஒரு நாள் கழித்து

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

நான் தந்திருக்கும் அடுத்த வசனத்தை முதலில் தயவு செய்து படியுங்கள்: ‘உலகத்திற்கு வெளிச்சம் ஊட்டுவதுதான் எங்கள் கடமை’ இந்த வாக்கியம் சொல்லப்பட்ட சூழ்நிலையைச் சற்றுத் தவிர்த்து இச்சொற்றொடரை வாசிக்கும்போது தீங்கற்ற, எல்லாராலும் பேணக்கூடிய, அரவணைக்கக்கூடிய, செயல்படுத்தக் கூடிய சீரிய குறிக்கோளாகத் தென்படுகிறது. இந்த வசனத்தின் சொந்தக்காரர் ஒசாமா பின் லாடன். இந்தத் தகவலுடன் இவர் விளைவித்த அக்கிரமங்களையும் சேதங்களையும் நினைவில் வைத்துப் பார்க்கும்போது அப்பாவித்தனமாகக் காணப்பட்ட வார்த்தைகள் ஒரு புதுப் பரிமாணம் எடுத்து அச்சத்தையும் கவலையையும் தருகிறது. பாகிஸ்தானில் பின் லாடன் எவ்வளவு ஆண்டுகள் தங்கியிருந்தார், அவர் மறைந்திருந்தது பாகிஸ்தான் அரசுக்கும் உளவுத் துறைக்கும் தெரி

 

மனோமோகன் கவிதை ரவிசுப்ரமணியன் கவிதை பெருந்தேவி கவிதைகள்

சிறுகதை
பா. வெங்கடேசன்  

அவன் தன் அறுபத்திரெண்டாவது வயதில் ஒரு நாள், வெகுகாலமாகப் பார்க்க வேண்டுமென நினைத்து ஆனால் வாய்ப்புக் கிடைக்காததால் சந்திப்பைத் தள்ளிப்போட்டுக் கொண்டேயிருந்த, மனிதர் ஒருவரைப் பார்க்கச் சென்றபோது வீட்டிலிருந்த ஒரு பெண் அவர் சில வருடங்களுக்கு முன்பே காலமாகிவிட்டதாயும் அந்தத் தகவல் அவனுக்கும் தெரிவிக்கப்பட்டிருந்ததாயும் சொன்னாள். அவன் அதைக் கேட்டுத் திடுக்கிட்டுப் போய்விட்டான். காரணம் அவர் இறந்துவிட்டாரென்கிற செய்தியைவிட அதை அவன் மறந்துவிட்டானென்கிற மறைமுகமான குற்றச்சாட்டு அவனை அதிகமாகப் பாதித்துவிட்டது. சிறுவயதிலிருந்தே அவனும் மற்ற எல்லோரையும் போலவே, சாவுகளுடனும் சாவுச் செய்திகளுடனும் தன்னைப் பழக்கப்படுத்திக்கொண்டு வளர்ந்தவன். சாவுடனான அவனுடைய முதல் அனுபவம் நிகழ்ந்தபோது அவனுக

கட்டுரைத் தொடர் - பசுமைப் புரட்சியின் கதை- 18
சங்கீதா ஸ்ரீராம்  

இந்த உலகம் பற்றிய பிளவுண்ட நம் கண்ணோட்டத்தை மாற்றவும் மனித வாழ்வை முழுமையாக்கவும் என்ன செய்ய வேண்டும்? விவசாயிகளும் ஆராய்ச்சியாளர்களும் விவசாயத்தையும் ஆராய்ச்சியையும் மேற்கொள்வதற்கு முன்னால், தத்துவவாதிகளாக வேண்டும் என்கிறார் ஃபுகுவோகா தாத்தா. அது என்ன தத்துவம்? எதையாவது செய்துகொண்டே இருத்தல் “என் புள்ளய அக்ரி படிக்கச் சொல்லலாம்னு நினைக்கிறேன்! போகப்போகத் தனியார் நிறுவனங்கள்ல நிறைய சம்பளத்துக்கு வேல பார்க்கற ஸ்கோப் நல்லா இருக்குதாமே!” “சும்மா இருக்குற பத்து ஏக்கருல கத்தாழை போட்டா, நல்ல இலாபம் கிடைக்குமாமே! அதுவும் இயற்கை உரமெல்லாம் போட்டா எக்ஸ் போர்ட்டுக்கு நல்ல மவுசாமே!” “விதைகளுக்கு நாமதான் கதின்னு ஆகிட்டா, அப்புறம் விவசாயிங்களோட எதிர்காலமும் ஏன

கட்டுரை: இனப்படுகொலை
பா. செயப்பிரகாசம்  

ஐ. நா. அமைத்த நிபுணர் குழு அறிக்கை இரு சாதிப்புகளைச் செய்துள்ளது. 1. “இது சர்வதேச நாடுகள் சபையல்ல; சர்வதேச அயோக்கியர்களின் சபை” என்று பெர்னார்ட் ஷா ஒருமுறை குறிப்பிட்டார். ஆதிக்க நாடுகள் சேர்ந்து தங்களுக்காக உருவாக்கிவைத்துள்ள ஐ. நா போன்ற அவைகள் அறநெறி சார்ந்து இயங்குபவை அல்ல; ஐ. நா தனது கடந்தகாலச் செயல்பாடுகளை மீள் ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும் என்று தெளிவுபடுத்தியிருக்கிறது. 2. எதுவும் நடக்கவில்லை இலங்கையில் என்று பாடிய இந்தியர்களையும் அவசர அவசரமாய் ஓடி அரக்கப் பறக்க நாலு இடங்களைப் பார்த்துவிட்டு “என்ன நடக்குது இலங்கையில்” என்றெல்லாம் எழுதித் தீர்த்த “பக்கவாத” எழுத்தாளர்களையும் மௌனமாக்கியிருக்கிறது. (அதனால் உலகமெலாம் குரல் கொடுக்கிறபோது இ

கட்டுரை
சேரன்  

ஈழம்: சிங்கத்தின் நகங்கள் நிகழ்வை ஒழுங்கு செய்திருக்கும் காலச்சுவடு நண்பர்களுக்கு எனது மனங்கனிந்த நன்றியும் வாழ்த்துகளும். மிக நீண்டகாலமாகவே ஈழப்போராட்டம் பற்றியும் ஈழ நிலைமைகள் பற்றியும் அறிவார்ந்த முறையிலும் உணர்வொருமைப்பாடு (solidarity) என்னும் தளத்திலும் தீவிர அக்கறையோடு செயல்பட்டுவருகிறது காலச்சுவடு என்பதை நான் இங்கு குறிப்பிடுவது சம்பிர தாயத்துக்காக அன்று. ஐக்கிய நாடுகள் அவையின் செயலாளர் நாயகம் நியமித்த குழுவின் போர்க்குற்ற அறிக்கை வெளியாகிய பிற்பாடு தமிழகத்தில் சில முன்னெடுப்புகள் இடம்பெற்றுள்ளன. வைகோ, நெடுமாறன் போன்றோர் கண்டனக் கூட்டம் நடத்தியிருக்கிறார்கள். கணினித் துறை சார்ந்த தொழில் வாண்மையாளர்கள் பலர் ஒன்றிணைந்து அமைத்திருக்கும் தமிழர் பாதுகாப்பு அமைப்பினர் (Sa

விவாதம்
 

காலச்சுவடு சார்பாக மே 8ஆம் தேதி மாலை 6:00 மணிக்கு சென்னை, தியாகராய நகர், வெங்கட் நாராயணா சாலையில் உள்ள செ. நெ. தெய்வநாயகம் மேல்நிலைப்பள்ளி அரங்கில் இலங்கைப் போர்க் குற்றம் தொடர்பான ஐ. நா. அறிக்கை பற்றிய விவாதக் கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஈழத் தமிழர் நலனில் ஈடுபாடுகொண்ட, நீண்டகாலமாக அந்தத் தளத்தில் செயல்பட்டு வரும் தமிழ் அறிவுலக ஆளுமைகளில் சிலர் அவ்விவாத அரங்கில் பங்கேற்க அழைக்கப்பட்டிருந்தனர். அதில் பங்கேற்குமாறு வாசகர்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டிருந்த நிலையில் ஈழத் தமிழர்களின் உரிமைகளுக்காகப் போராடுவதாகக் கூறிக் கொள்ளும் சிலரது எதிர்ப்பு காரணமாகக் கூட்டத்தை நடத்தவியலாத சூழல் ஏற்பட்டது. கூட்டத்தை ரத்துசெய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது குறித்துக் காலச்

திரை
செல்லப்பா  

கிராமியக் கதையை அடிப்படையாகக் கொண்டு உருவான திரைப்படமான அழகர்சாமியின் குதிரைக்கு இசையமைக்க ஹங்கேரி இசைக் குழுவைச் சார்ந்த ஐவர் இளைய ராஜாவால் அழைத்துவரப்பட்டிருந்தனர் என்னும் தகவல் இப் படத்தின் மீது சிறு ஈர்ப்பை உருவாக்க, உலகத் திரைப்பட விழாக்கள் பலவற்றில் திரையிடப்படுவதற்காக இப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது அதை அதிகப்படுத்த ‘இந்தப் படத்தின் இசையைக் கேட்டு ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்காவிட்டால் நான் இசையமைப்பதையே நிறுத்திவிடுகிறேன்’ என்ற இளையராஜாவின் அதிரடி அறிவிப்போ குதிரை இதுவரை நாம் அனுபவித்தறியாத, பயணப்பட்டிராத ஏதோ ஒரு புதிய உலகிற்கு நம்மை அழைத்துச்செல்லக்கூடும் எனும் நம்பிக்கையை ஏற்படுத்தியதால் மிகுந்த ஆர்வத்தோடு கவனத்தை எல்லாம் ஒருமுகப்படுத்தி அந்தப் பரவச

மதிப்புரை
மண்குதிரை  

அருங்கூத்து ஆசிரியர்: தவசிக்கருப்பசாமி விலை: 250 பக்: 188 முதற் பதிப்பு: டிசம்பர் 2010 வெளியீடு: மணல்வீடு ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல் மேட்டூர் வட்டம், சேலம்-636453 தொலைபேசி: 98946 05371 ஆதிச் சமூகத்தின் கொண்டாட்டத் திற்கான, தேம்பலுக்கான வடிவமான நிகழ்த்துக் கலைகளைக் கொண்டாடாத எந்தச் சமூகமும் காலமாற்றத்தில் தன் தனித்தன்மையை இழந்து போராடத் திடமற்றுப் போய்விடும். அக்கலை களின் மனிதர்களைப் பற்றிய பதிவு களை அருங்கூத்து என்னும் பெயரில் தொகுத்துள்ளார் தவசிக்கருப்பசாமி. கொங்கு மண்டலக் கலைஞர்களின் நேர்காணல்கள், அவர்களைப் பற்றிய குறிப்புகள், அரவான் களப்பலி பனுவல், அக்கப்போர்கள், கூத்தின் அருஞ் சொற்கள், கொங்கு மண்டலத்தின் கூத்து ஜமாக்கள் எனக் கொங்கு மண்டலத்துக் கலைகளின் ஆவணம

அஞ்சலி
சண்முகராஜா  

“ஒரு துளி - புழுதி - தூசி நான் எனினும் உதைத்து எழுந்து உதயந்தேடும் ஒரு ஜீவப்பறவை.” என எழுபதுகளின் இறுதிப்பகுதியில் ‘மூன்றாம் அரங்கம்’ எனும் புதியவகை அரங்கத்தின் வாயிலாக இந்திய நாடக உலகில் ஒரு மாபெரும் எழுச்சியை ஏற்படுத்தியவர் பாதல் சர்க்கார். நடிகர் - பார்வையாளர் உறவுகள், நிகழ்த்து முறை, அரங்க வெளி, நிகழ்வை முன்னிறுத்தும் சித்தாந்தம் என மரபான படச்சட்டக அரங்கின் அனைத்துக் கூறுகளையும் விசாரணைக்குட் படுத்தியவர். இந்திய அளவில் நாடகத் துறைகள், கல்விப்புலங்கள், தொண்டு நிறுவனங்கள் போன்றவற்றில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது மூன்றாம் அரங்கம். இன்று மிக முக்கிய ஆளுமைகளாக நாடக உலகில் பணியாற்றும் பலரும் பாதல் சர்க்காரின் நேரடி மாணவர்கள் அல்லது மூன்றாம் அரங்கால்

அஞ்சலி
அசோகமித்திரன்  

கஸ்தூரி ரங்கன் பணி நிமித்தமாகக் காசி சென்றபோது அவருடைய உடல்நிலை சரியில்லை என்ற முதல் அறிகுறி தெரிந்தது. நியூயார்க் டைம்ஸின் இந்திய நிருபராக இருந்தபோது ஏராளமான கட்டுரைகளில் அவருடைய பங்கிருந்தது. உலக அளவில் அப்பத்திரிகை பெருமதிப்பு பெற்றிருந்தாலும் இந்தியாவைப் பொருத்தவரை விதிவிலக்குகள்தாம் அவர்களுக்கு முக்கியமாக இருந்தது. ஹிப்பிகள், சன்னியாசிகள், வேதபாட சாலை, குடுமி, நாமம் முதலியன இதில் அடங்கும். ஆனால் கஸ்தூரிரங்கன் 1960-70களில் பல அரசியல் கட்டுரைகள் சுதேசமித்திரனில் எழுதினார். தில்லியிலிருந்து சென்னை வந்தபிறகு தினமணி கதிர், தினமணி பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். கஸ்தூரிரங்கன், சி.சு. செல்லப்பா வெளியிட்ட எழுத்து பத்திரிகையில் கவிதைகள் எழுதியிருக்கிறார். செல்லப்பா

பதிவு: அற்றைத் திங்கள், 17.04.2011 மருத்துவக் கல்லூரி அரங்கு, மதுரை
சு. சதீஸ்வரன்  

சென்னை, கோவை மற்றும் சேலம் போன்ற நகரங்களில் நடத்தப்பட்ட அற்றைத் திங்கள் நிகழ்ச்சி ஏப்ரல் மாதம் முதல் மதுரையில் நடக்கத் தொடங்கியுள்ளது. “அற்றைத் திங்கள் - சாதனையாளர்களைச் சந்தியுங்கள” என்ற இந் நிகழ்ச்சியை இதுவரை நடத்திவந்த காலச்சுவடு, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஆகிய அமைப்புகளோடு மதுரையில் கடவு இலக்கிய அமைப்பும் இணைந்து கொண்டது. அதன்படி மதுரையின் முதல் அற்றைத் திங்கள் 17.04.2011ஆம் நாள் மாலை மருத்துவக் கல்லூரி அரங்கில் நடந்தது. இம்முதல் நிகழ்வில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் நாசர் கலந்துகொண்டு தன்னுடைய அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். நிகழ்ச்சியில் வரவேற்புரையைக் கண்ணனும் நாசர் குறித்த அறிமுகத்தை நாடக இயக்குநர் - நடிகர் சண்முகராஜாவும் வழங்கினர். பேசுவதற்குப் பார்வையாளர்கள் முன

பதிவு: அற்றைத் திங்கள், 15.05.2011 - மருத்துவக் கல்லூரி அரங்கு, மதுரை
முருகன்  

காலச்சுவடு, கடவு, கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்தும் அற்றைத் திங்கள் சாதனையாளர்களைச் சந்தியுங்கள் மே மாத நிகழ்வு மதுரையில் மருத்துவக் கல்லூரி அரங்கில் 15.05.2011ஆம் நாள் மாலையில் நடந்தது. இம்மாத நிகழ்வின் அழைப்பாளராக எழுத்தாளர் பெருமாள் முருகன் கலந்துகொண்டார். தான் பிறந்து வளர்ந்த கொங்கு வட்டாரத்தைப் பற்றியும் அப்பகுதி மக்களின் வாழ்க்கைமுறை பற்றியும் பேசத் தொடங்கிய பெருமாள்முருகன் அப்பகுதியின் சாதியக் கட்டுமானம் பற்றியும் விவரித்தார். குறிப்பாக அருந்ததிய நண்பர்களுடன் விளையாடி விட்டுச் செல்லும் சிறுவர்களைப் பெற்றோர்கள் குளித்த பிறகே வீட்டிற்குள் அனுமதிப்பர் போன்ற விசயங்களை ஒளிவுமறைவின்றிப் பகிர்ந்துகொண்டார். குமுதம், ராணி காமிக்ஸ் போன்ற பத்திரிகைகள் மூலமாகப் பள்ளி வயதிலேயே

 

குமாரசெல்வாவின் கட்டுரை (காலச்சுவடு, மார்ச் 2011) தொடர்பான எனது கருத்துகள்: ஒட்டுமொத்த குமரிமாவட்டத்தையும் நாஞ்சில்நாடாகக் கருதும் மயக்கம் பெரும்பான்மையான குமரி மக்களிடமும் இருக்கிறது. ‘நாஞ்சில் நாடு’ என்பது ஒட்டுமொத்த குமரி மண்ணையும் குறிப்பதல்ல என்பது அநேகருக்குத் தெரியாது. நாகர்கோவில் - கோவை ரயிலுக்கு ‘நாஞ்சில் எக்ஸ்பிரஸ்’ என்று பெயர் சூட்ட வேண்டுமென எழுந்த கோரிக்கை இந்த அறியாமையின் விளைவே. குமரி மக்களின் மனங்களில் குடிகொண்டுள்ள கிழக்கு x மேற்கு என்ற எதிர்வு, நாஞ்சில் நாடு x விளவங்கோடு எதிர்வின் நீட்சியாகவே தெரிகிறது. இது இப்போது மறைந்துவருகிறது என்றாலும் அதன் சுவடுகள் பலரது மனங்களிலும் இன்னும் அழியாமல் உள்ளன. ‘விளவங்கோட்டான்’ என்னும் பதத

தலையங்கம்
 

கடந்த ஐந்தாண்டுக் காலத் திமுக அரசின் மீதான மக்களின் கோபம் தமிழகத்தில் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 200க்கும் அதிகமான இடங்களைப் பெற்றுத் திகைக்கவைக்கும் வெற்றியைப் பெற்றுள்ளது அஇஅதிமுக தலைமையிலான கூட்டணி. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியுள்ள ஜெயலலிதா தான் சூளுரைத்தபடி கருணாநிதி அரசால் 1,200 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட, இன்னும் முழுமைபெறாத புதிய தலைமைச் செயலகத்தைப் புறக்கணித்து, புனித ஜார்ஜ் கோட்டையிலுள்ள பழைய தலைமைச் செயலகக் கட்டடத்தைப் புதுப்பித்து அதைப் புதிய தலைமைச் செயலகமாக அறிவித்திருக்கிறார். கடந்த ஆட்சியில் வளர்ச்சித் திட்டங்களுக்குக் கொடுக்கப்பட்ட முக்கியத்துவத்தைவிட வரலாற்றின் சுவர்களில் தன் அடையாளங்களைச் செதுக்குவதற்கே அதிக முக்கியத்துவ

கண்ணோட்டம்
கண்ணன்  

ஈழப்பிரச்சினை 1980களில் தீவிரமடைந்த காலத்திலிருந்தே தமிழகத்தில் ஆதரவான பல குரல்கள் ஒலிக்கத் துவங்கின. இன்றுவரை ஆகத் தீவிரமாக இப்பிரச்சினையைப் பல்வேறு காலங்களில் பல்வேறு குழுக்கள் கவனப்படுத்தி வருகின்றன. ராஜீவ் காந்தி கொலைக்குப் பிந்தைய காலகட்டங்களில் இத்தகைய தீவிரமான குழுக்கள் இல்லாதிருந்தால் இக்கவனத்தின் சுடர் இங்கு அழிந்திருக்கக் கூடும். துவக்கத்தில் மக்கள் சார்பாக நின்ற இந்தக் கரிசனம் பின்னர் பல்வேறு இயக்கங்களின் சார்பாக மாறி இன்று தனிமனித வழிபாட்டில் நிற்கிறது. ஈழ விடுதலைப் போராட்டத்தின் அழிவை விடுதலை இயக்கங்களையும் அதன் தலைமையையும் விமர்சிக்காமல் புரிந்துகொள்வதும் மறுபரிசீலனை செய்வதும் சாத்தியமல்ல. அத்தகைய பரிசீலனையை வசைகள் மூலம் தடைசெய்ய முயல்வது, நிச்சயம் ஈழத் தமிழர

 

காலச்சுவட்டிற்குத் தன்னிலை விளக்கமாக ஒரு கடிதம். பொதியவெற்பனும் எனும் ‘உம்மையால்’ போனால் போகிறதென என்னையும் தழுவிக் கொண்ட ரவிசுப்ரமணியத்தின் பெருந்தன்மைக்கு என் நன்றி. அந்த விழா ஏற்பாட்டில் விடுபட்டிருக்கும் இன்னொருபெயர் ‘இலக்கியச் சந்திப்பு’ முத்து. இப்போது நான் பேசப் புகுவது கரிச்சான் குஞ்சு எழுத்து நெசவின் ஊடுபாவோசை அவர்களை உறுத்த ஆரம்பித்து அவர்கள் திட்டமிட்டுக்கொண்டிருந்த அந்தக் காலத்தில் நாங்கள் (‘தோழமை’ - பொ. வேல்சாமி, அ. மார்க்ஸ், நான்) என்ன செய்துகொண்டிருந்தோம் என்பது பற்றித் தான். தேவிபிரசாத் சட்டோபாத்யாயாவின் ‘இந்தியத் தத்துவத்தில் நிலைத்திருப்பனவும் அழிந்தனவும்’ என்னும் நூலைப் பொ. வேல்சாமி கேட்டுக்கொண்டதற்கிணங்க கரி

உள்ளடக்கம்