கட்டுரை
 

எதிர்கால இந்திய வரலாற்றாசிரியர்கள் 2011ஆம் ஆண்டை முக்கியத்துவம் வாய்ந்த ஆண்டாகக் கருதுவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். மத்தியப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஏ. கே. அந்தோனி சமீபத்தில் கூறியதைப் போல இந்தியா வெளிப் படைத்தன்மை அல்லது ஒளிவின்மை என்னும் புரட்சியின் ஊடாகப் பயணித்துக்கொண்டிருக்கிறது. தகவலறியும் உரிமைச் சட்டத்தைப் புகழ்ந்து பேசும்போது, ‘‘அரசியல், நிர்வாகம், நீதித் துறை, வர்த்தகம் என அனைத்துத் துறைகளிலும் உள்ள ரகசிய சுவர்கள் இடிந்து விழுந்துகொண்டிருக்கின்றன. நடந்துகொண்டிருக்கும் இந்த இயக்கத்தை யாராலும் பாதியில் நிறுத்த முடியாது, இந்தியாவில் முக்கியப் பொறுப்புகளில் இருக்கும் பலர் இந்த மாற்றத்திற்கு இன்னும் தயாராகவில்லை என்பதால் சில பிரச்சினைகள் எழுந்துள்ளன.

கட்டுரை
 

இலங்கைக்குள் பல ஆண்டுகளாகவே உள்நாட்டு யுத்தம் நடந்துவருகிறது. ஆனால் நான்காவது ஈழப் போரின் கடைசிக் கட்டத்தில், நடந்த கொடூரமான போர்க்குற்றங்கள் குறித்து, சர்வதேசச் சமூகத்தின் ஒரு பகுதியினர் கவலையடைந்திருக்கின்றனர். இது குறித்து விசாரிக்க, ஐ.நா. சபையின் செயலாளர் நாயகம், நிபுணர் குழு ஒன்றை அமைத்தார். இந்தக் குழு ஒரு விசாரணைக் குழு அல்ல; ஆலோசனைக் குழு மட்டுமே என்றாலும் இந்தக் குழு அமைக்கப்பட்டது இலங்கையிலும் பல்வேறு நாடுகளிலும் பெரும் விவாதத்தைக் கிளப்பியது. ஆனால் இந்தியாவில், குறிப்பாகத் தமிழ்நாட்டில் இந்த அறிக்கை ஆரோக்கியமான விவாதம் எதையும் ஏற்படுத்தவில்லை. அம்மாதிரி ஒரு விவாதத்தை ஏற்படுத்துவதே இந்தக் கட்டுரையின் நோக்கம். மனித உரிமைகள் விவகாரத்தில் இந்தியா தனது நிலையை மறுபரிசீல

கட்டுரை
பொன்குமார்  

தமிழகக் கல்வித் துறை புதிய கட்டத்தை எட்டியுள்ளது என்பதற்குத் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் செயல்வழிக்கற்றல் படைப்பாற்றல் கல்விமுறையை உதாரணமாகச் சொல்லலாம். செயல்வழிக்கற்றல் முறை அரசுப் பள்ளிகளின் வகுப்பறைகளுக்கு ஒரு தனிப்பண்பை ஊட்டத் தொடங்கியுள்ளது. காலந் தோறும் கல்விமுறை என்பது மாணவர்கள் வகுப்பறைகளில் ஆசிரியர்களின் முன்பாகக் கைகட்டி வாய் பொத்தி அவர்கள் சொல்லக்கூடியவற்றை மனப்பாடம் செய்து ஒப்புவிப்பது, தேர்வுகளில் முறைபிறழாமல் எழுதுவது என்பதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. இத்தகைய படைப்பூக்கமற்ற கல்விமுறையை மாற்றும் முயற்சிதான் செயல்வழிக்கற்றல் முறை. தொடக்கக் கட்டச் சுணக்கத்தைக் கடந்து தற்போது நம் கல்விமுறையில் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது இந்த முறை.

கட்டுரை
ச. பாலமுருகன்  

நம் ஊடகங்களில் நாள்தோறும் தீவிரவாதிகள் பற்றிய பிம்பங்களும் செய்திகளும் வந்தவண்ணம் உள்ளன. தீவிரவாதிகள் நாம் வாழும் சமூகத்தின் அமைதியைக் கெடுப்பவர்கள். அவர்கள் இச்சமூகத்தில் வாழத் தகுதியற்றவர்கள் என்னும் நுட்பமான அரசியலை அச்செய்திகள் நிலைநிறுத்துகின்றன. கலவரப்பகுதிகளில் சுட்டுக்கொல்லப்படும் தீவிரவாதிகளைக் கொல்லும் அரசப் படைகள் அதற்கான உரிமத்தைப் பெற்றுள்ளதாகவே வெகுமக்கள் அறிகின்றனர். அரசப் படைகளின் இந்த அதிகாரத்தைக் கேள்விக்குள்ளாக்கும் மனித உரிமை ஆர்வலர்கள் ஒரு நீண்ட சட்ட வடிவிலான போராட்டத்தை நீதிமன்றங்களில் நடத்துகிறார்கள். இந்நாட்டு அரசியலமைப்புச் சட்டத்தின் வழிகாட்டுதலில் இப்போராட்டம் நடைபெறுகிறது. தன் வாழ்வின் பெரும்பாலான காலத்தில் உரிமை மறுக்கப்பட்ட மக்களின் சுதந்திரத்தி

துருக்கிச் சிறுகதை
 

மிகயீலின் இதயம் நின்றது. கணக்குப் பார்த்துக்கொண்டிருந்த அலுப்பூட்டும் இரவொன்றில் அழுகையை மறைப்பதற்கிடையில் அவனுடைய இதயம் திடீரென நின்றுவிட்டது. அவன் மறைக்க விரும்பியது அழுகையை அல்ல; தோல்வியின் வலியால் வரும் புலம்பலைத்தான். பராமரிப்புக் குறைவால் சொத்தை விழுந்த பற்களைச் சரிசெய்துகொள்ள முடியாத அவனுடைய இரண்டு சிறு குழந்தைகளும் உதடுகளிலிருந்து பொறுக்க முடியாத சாபங்களைப் பொழியும் மனைவியும் குடியிருக்கும் அவலமான தீமையுணர்வும் தரித்திரமும் நிரம்பிய, சுவர்களில் உப்பு நீர் கசியும் வீட்டில் அவனுடைய இதயம் நின்றுவிட்டது. அவனுடைய இதயம் நின்றுபோன அந்தக் கணம் எனக்கு நன்றாகத் தெரியும். நோய்வாய்ப்பட்ட நுரையீரலைப் போல் முனகிக்கொண்டும் ஆழமாக மூச்சு வாங்கிக்கொண்டும் வாழும் நகரத்தின் அண்டைவாசிக

சு.ரா 80 பதிவு
எஸ். வி. ஷாலினி, கே.என். செந்தில்  

ஒருவன் தீவிர எழுத்தாளனாக உருவாக ஆசைகொண்டால் அவன் புறக்கணிப்பின் பாதையைத் தேர்வுசெய்கிறான் என்றே பொருள். லௌகீக வாழ்க்கையோடு அவன் பகடையாட அமர்கிறான். ‘வாசக திருப்தி’ எனும் சொல்லை நோக்கி அமர்ந்து அவன் எழுதுபவன் அல்ல. மாறாக ஒரு காலகட்டத்தின் ரசனையையே தன் எழுத்தின் மூலம் சூழலில் தோற்றுவிப்பவன். நேற்றைய நம்பிக்கைகளைத் தன் சிந்தனைகளின் மூலமும் விவாதத்தின் மூலமும் அசைப்பவன் எவனோ அவனே மேலான கவிஞன். அவன் தன் மரணத்திற்குப் பின்னும் நித்திய சகாவாகத் தீவிர வாசகனுடன் இருந்துகொண்டிருப்பான். (“பயணத்தைத் தொடரு என ஜே. ஜே. என் காதோரம் முணுமுணுப்பதுபோல் நான் உணர்வேன்”.) அவ்வாறு நித்திய சகாவாக மகத்தான கலைஞனாக நம்முடன் இருந்துகொண்டிருக்கும் சுந்தர ராமசாமியின் நினைவாக சு.

சு.ரா 80 பதிவு
பழ. அதியமான், ஜெய்குமார்  

எழுத்தாளர் சுந்தர ராமசாமியின் 80ஆம் பிறந்த ஆண்டு நிறைவை ஒட்டிக் கன்னியாகுமரி விவேகானந்த கேந்திரத்தில் ஜூன் 3, 4 மற்றும் 5 தேதிகளில் நிகழ்ந்த சு.ரா. 80 ஆய்வரங்க நிகழ்ச்சிகளின் சுருக்கமான பதிவு. க.நா.சு. பெயரிலமைந்த பொது அரங்கம், மு. தளையசிங்கம் பெயரிலான ஆய்வரங்கம் என இரு நிகழ்வுகள் ஒரே நேரத்தில் அருகருகே அமைந்த தனித்தனி இடங்களில் நிகழ்வுற்றன. சென்னை தமிழ் இனி 2000, கோவை பாரதி, புதுமைப்பித்தன், சு. ரா 75 வரிசையில் காலச்சுவடு அறக்கட்டளை நிகழ்த்திய பெரும் கலை நிகழ்வு சு.ரா. 80. மினி தமிழ் இனி என்று நண்பர்கள் பேசிக்கொண்டார்கள். மு. தளையசிங்கம் நினைவரங்கத்தில் ஆய்வரங்கம் முதல் நாள் ஜூன் 3 மாலை மூன்று மணிக்குத் தொ. பரமசிவன் தொடக்க உரையுடன் தொடங்கியது. ஜே.ஜே: சில குறிப்புகள் பற்றி

கட்டுரை
நாகரத்தினம் கிருஷ்ணா  

பிறந்தது பிரான்சு - அநாதைக் குழந்தை - அரசுக் காப்பகம்- சுமாராகக் கல்வியறிவு - திருட்டுக்குற்றங்கள், சிறைவாசம் -படைப்பிலக்கியவாதி - இறந்த நாடு மொராக்கோ. இது தான் ழான் ழெனேவின் வாழ்க்கைப் பயணம். படைப்புகளின் துணையோடுதான் அவரைப் புரிந்துகொள்ளவும் வேண்டும். திட்டவட்டமான வேறு ஆதாரங்களில்லை. பிறப்பைப் போலவே இறப்பும் அநாமதேயமாக நடந்தேறியது. பாசிபடர்ந்து தேங்கிக்கிடந்த அணை நீர் கரையுடைந்து பாய்ந்ததுபோல நிகழ்ந்தது அவருடைய இலக்கியப் பிரவேசம். தொடக்கக் காலத்தில் முகம்சுளித்து தாழிட்ட படைப்புலகம் கதவுகளை மாத்திரமல்ல சன்னல்களையும் சேர்த்தே திறந்து அவரை அணைத்துக்கொண்ட அதிசயமும் நிகழ்ந்தது. நடுநிசி நாயின் அழுகையும் ஆந்தையின் அலறலும் களிப்பூட்டுபவை, இறுக்கம் குறைப்பவை என்பதைப் பின்னாளில்

சிறுகதை
 

அவனுக்கு இரட்டைக் காளை மாட்டு வண்டியை அதிகம் பிடிக்கும். காரணம், அதில் ஒரு காளை மற்றொரு காளைக்குப் போகுமிடமெல்லாம் வழித்துணையாகக் கூடவே வருவதில் ஒரு ஆறுதல். அவனுடைய மதத்தின் மீது அவனுக்கு நிறைய கேள்விகள் இருந்துகொண்டேதான் இருக்கின்றன. யாரிடம் கேட்பது? ஓரினச் சேர்க்கையாளர்களை அவன் சார்ந்த மதம் கொடூரமாகத் தாக்குகிறது. அவன் யோசித்துப் பார்க்கிறான். லூத் நபியின் சந்ததியினர் அழிக்கப்பட்டுவிட்டார்களா? இல்லவே இல்லை. அவர்கள் அதிகமாகிக்கொண்டேயிருக்கிறார்கள். நாளும் பொழுதும் அடுக்குகளாய் . . . புத்தகத்தில் அடுக்கிவைக்கும் உருவங்களைப் பிடித்து வருபவன் சில நாட்களாக அவனுடைய நண்பனாகியிருந்தான். அவன் பிடித்து வைத்துள்ளவற்றைப் பிடிக்கவில்லை என்று யாரும் சொல்லத் தயாரில்லை. அவனின் கோபங்கள்

கவிதை
அம்பை  

மார்ச் மாதம் 26, 27 தேதிகளில் சாகித்திய அக்காதெமி நேபாளி சாகித்திய பரிஷத்துடன் இணைந்து அனைத்திந்திய பெண் எழுத்தாளர்கள் சந்திப்பொன்றை காங்டோக்கில் நடத்தியது. பத்து டிகிரி குளிர். அன்பும் நட்பும் தாபமும் கலந்த வெப்பமான சொற்கள் குளிருக்குப் போர்வையாயின. அங்குதான் சந்தித்தேன் விம்மி சதாரங்கானியையும் நஸீமையும். விம்மி சிந்தியில் கவிதைகள் எழுதுகிறார். நஸீம் காஷ்மீரி மொழியில். விம்மி இரு கவிதைத் தொகுப்புகள், நான்கு குழந்தைகளுக்கான புத்தகங்கள், சிந்தி மொழி பயில்வதற்கான ஐந்து புத்தகங்கள் எழுதியுள்ளார். சிந்தி மொழியைப் பயில்விக்க அமெரிக்கா, சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் நாடுகளுக்குப் போயிருக்கிறார். குஜராத் சிந்தி சாகித்திய அக்காதெமி விருதை 1995இலும் ழிசிணிஸிஜியின் குழந்தைகள் இலக்கி

 

ஒரு துண்டு நிலத்தை ஈரமாக வைத்திரு அம்மா ஒருமுறை கூறினார் இறப்பவர்கள் வானத்துத் தாரகைகளாகிவிடுகிறார்கள் அங்கிருந்து சிமிட்டிக்கொண்டு ஒளிர்ந்தபடி இரவு வெளிவருவார்கள் அவ்வளவுதான் பகலில் தூங்கிவிடுவார்கள் நீ தாரகை ஆகாதே நீ ஒரு சிறிய மேகமாகிவிடு மழையாய்ப் பெய்து பெய்து நிலத்தின் ஏதாவது ஒரு துண்டுப் பகுதியை ஈரமாக வைத்திரு எப்போதும் சோர்வில்லை அந்தச் சிறு கூடு அதில் நெளிந்து வளைந்த அந்த வைக்கோல் குச்சிகள் மிகவும் முயன்று இவற்றை நான் அமைத்தேன் உன்னுடைய ஓர் அடியில் எல்லாவற்றையும் வீழ்த்தியாகிவிட்டது கீழே ஆனால் காற்றே! நான் சொல்வதைக் கேள் நீ எத்தனைதான் வேகமாக வீசினாலும் எத்தனை முயன்றாலும் நான் வீட்டை மீண்டும் கட்டுவேன் நீ கலைத்துக்கொண்டே இரு வேண்டுமானால் நான் மீண்டும் மீண்ட

கட்டுரை
ஜெயந்தி சங்கர்  

சீனத்தில் 1957இல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட 55-57 சிறுபான்மையினங்களில் டுஜியாவும் ஒன்று. சுமார் 12 நூற்றாண்டுகள் பழமையானது டுஜியா இனம். முற்கால பா இனமக்கள் சோங்ச்சிங்கில் குடியமர்ந்த பிறகு இவ்வினத்தில் கலப்புகள் ஏற்பட்டு, காலப்போக்கில் இன்றைய டுஜியா உருவாகியிருக்கிறது. யாங்ட்ஸே ஆற்றுப் பகுதியில் இதுவே ஆகப் பெரிய சிறுபான்மை இனம். சரியாகச் சொல்வதென்றால், யாங்ட்ஸே ஆற்றின் இரண்டாம் கிளையான ச்சிங்ஜியான் ஆற்றுக்கருகில் கடல் மட்டத்திலிருந்து 400-1500 மீட்டர் உயரத்தில் 5.71 மில்லியன் டுஜியர்கள் வாழ்கிறார்கள். மத்திய சீனத்தில் இருப்பதே ஹுபேய் மாநிலம். அதன் மேற்குப் பகுதியில் ஜிங்ஜியாங் பள்ளத்தாக்கில் இருக்கும் சாங்யாங் என்னும் இடத்தில் அதிகமாக வாழும் டுஜியா இனமக்கள் பெண் எடுக்க

மதிப்புரை
களந்தை பீர்முகம்மது  

ஒப்பனை நிழல் (இலங்கைச் சிறுகதைகள்) ஆசிரியர்: வி. கௌரிபாலன் பக். 120. விலை ரூ. 70 (2010) வெளியீடு பரிசல் புத்தக நிலையம் 21/96 J பிளாக், MMDA காலனி அரும்பாக்கம், சென்னை - 106. மரணம் நெருங்கிவரும் தருணங்கள், அது நெருங்கிவிட்ட விநாடிகள், அது தரும் பீதி, வலி, உடல் வாதைகள், இறுதித்துடிப்பு என்று என் உடலே ஈழமண்ணில் நையப்புடைக்கப்பட்டதாய் உணர்ந்தேன். ஈழமண்ணில் என் உடல் சாவதை, இந்திய மண்ணில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தேன் - வி. கௌரிபாலன் எழுதிய ‘ஒப்பனை நிழல்’ சிறுகதைத் தொகுப்பை வாசிக்கும்போது! வாழ்வும் சாவும் பக்கம்பக்கமாய் இருந்தாலும் சாவுக்காகவே சகல உயிர்களும் வாழ்வது ஈழத்தில்தான். சாவைவிட அதுவரும் வழி, அது உண்டாக்கும் பீதி ஒவ்வொருவரையும் உருக்குலைக்கிறது.

மதிப்புரை
சு. தியடோர் பாஸ்கரன்  

மாதொருபாகன் (நாவல்) ஆசிரியர்: பெருமாள்முருகன் பக். 192. விலை ரூ. 140 (2010) வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை நாகர்கோவில். கூளமாதாரி, கங்கணம் போன்ற படைப்புகள் மூலம் தற்காலத் தமிழ் இலக்கியத்தில் ஒரு சிறப்பான இடத்தைப் பிடித்துள்ள பெருமாள்முருகனின் அண்மை நாவல் மாதொருபாகன். பொதுவாக சிவாலயங்களில் மூலவர் லிங்கரூபத்தில்தான் இருப்பார். ஆனால் திருச்செங்கோட்டில் மலை மேல் உள்ள ஆலயத்தில் மூலவர் அர்த்தநாரீஸ்வரர் என்றறியப்படும் மாதொருபாகன் சிலாரூபத்தில் உள்ளார். நாவல் எழுதுவதற்கு ஆயத்தமாகப் பின்புல ஆய்வுசெய்வது தமிழ் இலக்கியத்திற்குப் புதிது. அதனால்தான் பல நாவல்களில் கால முரண்பாடுகள் துருத்திக்கொண்டு நிற்கின்றன. ஆய்வுசெய்வதற்கும் விவரங்கள் சரியா என்று பார்ப்பதற்கும

எதிர்வினை
ப்ரவாஹன்  

தமிழ்ச் சமூகம், ஒற்றைவகை மக்கள் திரளைக் கொண்டது போலக் கருதித் தமிழ்ப் பண்பாடு என்ற ஒன்று குறித்துப் பேசப்படுகிறது. வரலாற்றுக் காலம் தொட்டுத் தமிழ்ச் சமூகம் ஒருபடித்தாக இருந்ததற்குச் சான்று ஏதுமில்லை. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலும்கூடத் தமிழ்ச் சமூகம் ஒருபடித்தாக இருந்ததில்லை என்பது தான் தொல்லெச்சங்கள் காட்டும் சித்திரம். சங்க இலக்கிய காலத்திற்கு முன்னர் தமிழ்ச் சமூகம் ஒற்றைவகை மக்கள் திரளைக் கொண்டிருந்ததற்கான சான்றுகள் அல்லது அதற்கான அடிப்படைகள் எதையும் சுட்டாமல் போகிற போக்கில் அப்படி ஒரு அனுமானத்தை மனதிற்கொண்டு கருத்துகள் கூறுவது தொடர்ந்து வருகிறது. அப்படியிருக்கையில் தமிழர் பண்பாடென்ற ஒன்றைச் சொல்லும்போது அது எந்தப் பிரிவிற்குரியது என்பதைச் சொல்லாமல் தமிழர்கள் அனைவரும

விவாதம்
 

வெள்ளந்தியான மனசோடும், மிகுந்த நேர்மையோடும், உண்மையோடும் நான் எழுதியனுப்பியிருந்த விரிவான மறுப்பைக் காலச்சுவடு ஏப்ரல் 2011 இதழில் முழுமையாகப் பிரசுரித்த கண்ணனின் பெருந்தன்மைக்கும் இதழியல் கண்ணியத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி. கடிதத்தின் அடியில் ஆசிரியர் குறிப்பு வேறு தனியாகப் பிரசுரமாகியிருந்தது, என்னை மிகவும் அவமானப்படுத்துவதாக இருந்தது. விடிய விடிய இராமாயணம் கேட்டவன் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் சித்தப்பனா என்று கேட்கிற மாதிரியானது, அந்தக் குறிப்பு. பிப்ரவரி இதழில் கூறப்பட்டிருந்த அதே அவதூற்றை, இத்தனை நீள்கடிதத்துக்குப் பிறகும் கூடுதலான கொடூரத்துடன் திரும்பவும் கக்கியிருக்கிறது அந்தக் குறிப்பு. த. மு. எ. ச. என்ற அமைப்பு, தேசமே ஒரு அவசரநிலை இருட்டுக்குள் தத்தளித்து மூச்சுத்

விவாதம்
 

வெள்ளந்தியான மனசோடும், மிகுந்த நேர்மையோடும், உண்மையோடும் நான் எழுதியனுப்பியிருந்த விரிவான மறுப்பைக் காலச்சுவடு ஏப்ரல் 2011 இதழில் முழுமையாகப் பிரசுரித்த கண்ணனின் பெருந்தன்மைக்கும் இதழியல் கண்ணியத்திற்கும் நெஞ்சார்ந்த நன்றி. கடிதத்தின் அடியில் ஆசிரியர் குறிப்பு வேறு தனியாகப் பிரசுரமாகியிருந்தது, என்னை மிகவும் அவமானப்படுத்துவதாக இருந்தது. விடிய விடிய இராமாயணம் கேட்டவன் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் சித்தப்பனா என்று கேட்கிற மாதிரியானது, அந்தக் குறிப்பு. பிப்ரவரி இதழில் கூறப்பட்டிருந்த அதே அவதூற்றை, இத்தனை நீள்கடிதத்துக்குப் பிறகும் கூடுதலான கொடூரத்துடன் திரும்பவும் கக்கியிருக்கிறது அந்தக் குறிப்பு. த. மு. எ. ச. என்ற அமைப்பு, தேசமே ஒரு அவசரநிலை இருட்டுக்குள் தத்தளித்து மூச்சுத்

எதிர்வினை
கரிகாலன்  

காலச்சுவடில் ஆதாரம் அளிக்கிறேன் என மீண்டும் அவதூறு செய்திருக்கிறீர்கள். நன்றி. என்னைப் பற்றி எழுத முனைந்து தேவையில்லாமல் அ. மார்க்ஸ்மீது புழுதி வாரித் தூற்றுகிறீர்கள். அ. மார்க்ஸை விமர்சிக்கிற அளவிற்கு நீங்கள் என்ன சாதித்துவிட்டதாக நம்புகிறீர்கள். அதே வேளையில் என்மீது நீங்கள் சுமத்தியிருக்கும் அவதூறுகளுக்குப் பதிலளிக்க எனக்கு எவ்விதத் தயக்கமும் இல்லை. இமையத்தின் கோவேறு கழுதைகள் தலித் விரோத நாவல் என இதுவரை களம் புதிது இதழில் எவ்விடத்திலும் பதிவு செய்யப்படவில்லை. அது போல் களம் புதிது நடத்திய எந்த அரங்குகளிலும் அந் நாவல் குறித்து எதிர்மறையான விமர்சனம் வைக்கப்படவில்லை. மாறாகக் கோவேறு கழுதைகள் வெளிவந்த புதிதில் களம் புதிது இலக்கியக் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. அ. மார்க்ஸ், ரவிக

எதிர்வினை
ச. பாலமுருகன்  

இலங்கை குறித்த ஐ.நா. போர்க்குற்ற அறிக்கையை ஒட்டிக் காலச்சுவடு 8.6.2011 தேதியில் நடத்த இருந்த கூட்டத்தில் பங்கேற்க நான் ஒப்புக்கொண்டேன். ஈழத் தமிழர்களின் அவலம் தமிழகம் தாண்டிப் பிற மாநிலங்களுக்குக் கொண்டுசெல்லப்படவில்லை என்பதையும் பிற மக்கள் ஆங்கில ஊடகங்களில் வெளிவரும் செய்திகளை மட்டுமே உள்வாங்கிய உயிர்களாக இருப்பதையும் பல நிகழ்வுகளில் நான் உள்வாங்கி உள்ளேன். பரந்துபட்ட தளங்களில் பல்வேறு ஆளுமைகள் ஈழத் தமிழர்களின் மனித உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க வேண்டியது அவசியமானது. காலச்சுவடு கூட்டத்திற்கு இரு நாட்களுக்குமுன் பி.யூ.சி.எல் சாராத சிலர் காலச்சுவடு கூட்டத்தை நான் புறக்கணிக்க வேண்டுமென்றும் சூரிய நாராயண் அவரது நேர்காணலில் தமிழக மீனவர்களுக்கு எதிராகக் கருத்தைத் தெரிவித்திருப்பதைய

எதிர்வினை
மேலாண்மை பொன்னுசாமி  

காலச்சுவடு இதழில் செல்லப்பாவால் எழுதப்பட்டிருந்த “பிரச்சாரப் பொதி சுமக்கும் மரக்குதிரை” என்னும் தலைப்பிலான “அழகர்சாமியின் குதிரை” திரைப்பட விமர்சனம் போதிய உண்மையுடன் இல்லை. எவ்வித எதிர்பார்ப்பும் - விருப்பு வெறுப்பும் - முன் அபிப்பிராயமும் இல்லாத வெள்ளை மனநிலையில் தியேட்டருக்குள் நுழைய வேண்டும். பார்த்து முடித்த படத்திலிருந்து எழுகிற மதிப்பீட்டைப் பதிவுசெய்ய வேண்டும். அதுதான் விமர்சன நேர்மை. அங்கேயும் இங்கேயுமாகப் பல இடங்களில் கிடைத்த தகவல்கள், ஆங்காங்கே தட்டுப்பட்ட இதழ்களில் வாசித்த, அறிந்த விஷயங்கள், செய்திகள் ஆகியவற்றால் எழுந்த மிகை எதிர்பார்ப்புடனும் முன் அபிப்பிராயத்துடனும் திரைப்படம் பார்க்கிற மனநிலை, துல்லியமான எடையைக் காட்டும் தராசாக இருக்காது.

அ. முத்துலிங்கம்  

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா வழமைபோல ரொறொன்ரோவில் யூன் 18ஆம் தேதி ராடிஸன் ஹொட்டலில் நடைபெற்றது. இம்முறை வாழ்நாள் இலக்கிய சாதனைக்கான இயல் விருது எஸ். பொ. என்று அறியப்படும் திரு. எஸ். பொன்னுத்துரை அவர்களுக்கு வழங்கப்பட்டது. கடந்த அறுபதாண்டுகளுக்கு மேலாகச் சிறுகதைகள், கட்டுரைகள், நாவல்கள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் எனத் தமிழ் இலக்கியத்தின் பல துறைகளிலும் பங்களித்தவர் இவர். 25க்கும் மேலாக நூல்கள் எழுதியிருக்கிறார். இவருடைய நனவிடை தோய்தல் நூல் மிகப் பரவலாக வாசிக்கப்பட்டு விமர்சகர்களால் பாராட்டப்பட்டது. இவருக்கு அதிகப் புகழ் தேடித்தந்த சடங்கு நாவல் ‘Rituals’ என்னும் தலைப்பில் பேராசிரியர் செல்வா கனகநாயகம் அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுச் சமீபத

மண்குதிரை  

மணல்வீடு ஆசிரியர்: மு. ஹரிகிருஷ்ணன் கொங்கு வட்டார வழக்கில் காத்திரமான கதைகள் புனைந்துவரும் மு. ஹரிகிருஷ்ணனை ஆசிரியராகக் கொண்டு 2008ஆம் வருடத்திலிருந்து வெளிவந்து கொண்டிருக்கிறது மணல் வீடு என்னும் இருமாத இதழ். நாஞ்சில்நாடன், பெருமாள் முருகன் முதலான மூத்த படைப்பாளிகளிலிருந்து பா. திருச்செந்தாழை போன்ற இளம் படைப்பாளிகளின் பங்களிப்புகள், வாசகக் கவனம் பெற்ற பா. மணியின் கெட்ட வார்த்தை பேசுவோம் என்னும் தொடர் கட்டுரை, ஆக்கபூர்வமான விமர்சனங்கள், கூத்துப் பனுவல், நிகழ்த்துக் கலைஞர்களின் நேர்காணல்கள் ஆகியவற்றோடு சிற்றிதழுக்கான அத்தனை சுதந்திரங்களோடு இவ்விதழ் இலக்கியத்திற்கும் நிகழ்த்துக்கலைகளுக்குமான தளமாக இயங்கிவருகிறது. தொடர்பு முகவரி: ஏர்வாடி, குட்டப்பட்டி அஞ்சல், மேட்டூர் வட்டம்,

அஞ்சலி
டிராட்ஸ்கி மருது  

ஆயிரத்துத் தொள்ளாயிரத்து அறுபதுகளின் ஆரம்பத்தில் மதுரை நியூசினிமா தியேட்டர் அருகே இருந்த பழைய புத்தகக் கடைகளில் படங்கள் நிறைந்த புத்தகங்களின் மீதான காதலோடு அலைந்து திரிந்தேன். ஓவியம் தவிர புகைப்படம், சினிமா, காமிக்ஸ், அனிமேஷன் எனத் தேடி அலைந்துகொண்டிருந்தபோது என் தந்தைதான் டாலி, பிக்காஸோ என்னும் பெயர்களை எனக்கு அறிமுகப்படுத்தினார்; அவர்களது ஓவியங்களையும் எனக்குக் காட்டினார். அவர்களை முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாவிட்டாலும் அவர்களது ஓவியங்களையும் மேலை நாட்டுத் திரைப்படங்களிலிருந்து எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் வெட்டிச் சேகரித்து வைத்திருந்தேன். அப்போது கோரிப்பாளையத்தில், கிடைத்த காகிதங்களையெல்லாம் பொறுக்கியெடுத்து மார்போடு அணைத்துக்கொண்டு திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட ஒருவ

அரவிந்தன்  

அப்பாவுக்கான பாடம் கடையில் எதையோ வாங்கிவிட்டு வண்டியில் ஏறும்போது அந்தப் பிச்சைக்காரர் கை நீட்டினார். பிச்சைக்காரர்கள் குறித்துப் பல வித சிந்தனைகள் எனக்குள் இருந்தாலும் என்னை நோக்கி யாசிக்க நீளும் கரங்களில் ஏதாவது கொடுத்துவிடுவதே என் பழக்கம். முதியோர், உடல் ஊனமுற்றோர் விஷயத்தில் இது தவறவே தவறாது. ஆனால் அவருக்கு நான் எதுவும் தரவில்லை. என்னிடம் ஐந்து ரூபாய் நாணயம் மட்டுமே இருந்தது. யாசகத்திற்கு அது அதிகம் என்னும் எண்ணம் என்னுள் ஊறிப்போயிருக்கிறது. தவிர, வண்டிக்குக் காற்றடிக்க வேண்டியிருந்தது. வண்டி இரண்டடி தூரம் செல்வதற்குள் பின்னாலிருந்து என் பெண் நம்ரதா (அப்போது அவளுக்கு வயது 9) “அப்பா . . .” என்று கோபமாக அழைத்தாள். “என்ன?” என்றேன். “அவருக்கு ஏன்

தலையங்கம்
 

லோக்பால் மசோதா தொடர்பாகக் கூட்டணிக் கட்சிகளின் ஆலோசனைகளைப் பெறுவதற்காகக் கடந்த 21ஆம் தேதி ஐக்கிய முற்போக்குக் கூட்டணிக் கட்சித் தலைவர்களின் கூட்டம் புதுதில்லியில் நடைபெற்றது. திமுக தலைவர் மு. கருணாநிதி அன்று தில்லியில்தான் இருந்தார். மேல்மட்ட அளவில் நடைபெறும் ஊழல்களைத் தடுப்பதற்கான அமைப்பொன்றை உருவாக்குவதில் உள்ள சிக்கல்கள் பற்றிய அந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது கருணாநிதி ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஊழலில் கூட்டுச்சதியாளராகக் குற்றம் சுமத்தப்பட்டுத் திகார் சிறையில் நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் கனிமொழியைப் பார்ப்பதற்காகப் புறப்பட்டுக்கொண்டிருந்தார். கட்சியின் சார்பில் அக்கூட்டத்தில் பங்கேற்ற டி.ஆர். பாலு லோக்பால் அமைப்பின் விசாரணை வரம்புக்குள் பிரதமரும் நாட்டின்

 

காலச்சுவடு ஜூன் இதழ்த் தலையங்கம் ‘ஒரு கெட்ட நிமித்தம்’ எனும் எச்சரிக்கை தாங்கி, ‘காரிருள் அகத்தில் நல்ல கதிரொளி நீ தான், இந்தப் பாரிடைத் துயில்வோர் கண்ணில், பாய்ந்திடும் எழுச்சி நீ தான்’ எனும் பாரதிதாசனின் வரிகளுக்கேற்ற, இதழியல் தருமத்தையொட்டி அமைந்துள்ளது. பலன் பாராக் காரியமாற்றும் அறநெறியைப் பழித்து, தன் புகழே வரலாறு எனும் அவநெறியைப் பின்பற்றி அடைந்த இழிநிலை தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. சொல்லானாலும் செயலானாலும் காரணமானவர்களை எண்ணிக் காழ்ப்புணர்வு கொள்ளாது, மக்கள் நலன்களை மனத்தில் கொண்டு ஆய்வதே, அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு அழகு என இடித்துரைத்தது பயனுடைத்து. சென்றவர்களின் செயல்பாடுகள் வந்தவர்களுக்குப் பாடமாகும் வகையில் வெளிச்சமிட்டமை, இதழ்கள் குறித்து லா

உள்ளடக்கம்