கட்டுரை
கண்ணன்  

காலச்சுவடுக்கும் அரசியலுக்குமான உறவு அதன் உடன்பிறந்த ஒன்று. சமூக அரசியல் பார்வையை உள்ளடக்காத ஒரு இலக்கிய இதழாக அது எப்போதும் இருந்தது இல்லை. இருப்பினும் காலாண்டிதழாக இருந்த காலம் வரை சமகால அரசியல் பற்றி அதில் யாரும் கருத்துரைக்கவில்லை. அந்த மாற்றம் 2000த்தில் அது இருமாத இதழான பின்னரே ஏற்பட்டது. இன்று திரும்பிப் பார்க்கும்போது காலச்சுவடில் வெளிவந்த முதல் அரசியல் பதிவு மே - ஜூன் 2001 இதழில் கையெழுத்திட்டு நான் எழுதிய ‘ஜெயலலிதாவின் பின்நவீனத்துவ நோக்கு’ என்ற தலையங்கம். ஜெயலலிதாவின் அதிகார அரசியல் முறைமைகளை நக்கலாக எடுத்துரைத்த தலையங்கம் அது. அவர் பதவி ஏற்றவுடன் வெளிவந்தது. 1996 - 2001 கருணாநிதியின் - அன்றெல்லாம் கலைஞர் என்றே எழுதுவது வழக்கம் -ஆட்சி எனது தலைமுறை கண்ட ச

சந்திப்பு
 

சோமிதரன் யாழ்ப்பாணம் பருத்தித்துறையில் பிறந்தவர். கொழும்பில் பத்திரிகையாளராகப் பணியாற்றிய இவர் தற்போது சென்னையில் உயர்கல்வி பயில்கிறார். லயோலோ கல்லூரியில் திரைத் துறை தொடர்பான சிறப்புக் கல்வியை முடித்துள்ள சோமிதரன் ஆவணப்படங்களின் மூலம் இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான ஆதரவைத் திரட்டிவருகிறார். யாழ்ப்பாண நூலகம் எரிக்கப்பட்டது தொடர்பான எரியும் நினைவுகள், இறுதி யுத்தப் படுகொலைகள் பற்றிய முல்லைத்தீவு சகா, ஈழத் தமிழர்களின் வரலாறு பற்றிய வெடித்த நிலத்தில் வேர்களைத் தேடி ஆகியவை இவரது முக்கியமான ஆவணப் படங்கள். இறுதி யுத்தத்திற்குப் பிந்தைய தமிழர் வாழ்வு, மேற்கொள்ளப்பட வேண்டிய மீள்குடியேற்றம், மாகாணசபைக்கான அதிகாரப் பரவலாக்கம் போன்றவை குறித்து சோமிதரனுடன் ஜூலை இரண்டாம் வாரம் நிகழ்த்

கட்டுரை
கவிதா  

சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்பு சுட்டெரிக்கும் மதியப் பொழுதில் சென்னையின் பிரதான மருத்துவமனையின் நெரிசலான வளாகத்தில் அற்புதம் அம்மாளைச் சந்திக்க நேர்ந்தது. மருத்துவமனையில் கடந்து செல்லும் ஆயிரக்கணக்கான முகங்களில் எந்த விசேஷ கவனமும் கோரக்கூடிய முகம் அல்ல அற்புதம் அம்மாளுடையது. முதுமையும் துயரமும் அவரது தோலில் சமமாக வரிகளை நெய்திருந்தன. யாரிடமாவது துயரத்தை இறக்கிவைக்க முடியாதா என்கிற கவலை அவரிடம் எப்போதும் இருக்கும் போல. இறக்கிவைக்க இறக்கிவைக்க, சுமை குறைவது போலவும் தெரியவில்லை. அற்புதம் அம்மாளின் துயரத்துக்கு வயது 20. 1991இல் அது போல ஒரு ஜூன் மாத மதிய பொழுதில் தான் சும்மா விசாரணைக்கு என்று அவர் மகன் பேரறிவாளனை அழைத்துச் சென்றது காவல் துறை. விசாரணைக்கென்று சென்ற அறிவு இன்னு

கட்டுரை
தீபச்செல்வன்  

அண்மையில் யாழ்ப்பாணத்திலுள்ள நாக விகாரை பௌத்த சங்கம் அதிர்ச்சிகரமான ஓர் அறிவித்தலை வெளியிட்டிருந்தது. யுத்தம் காரணமாக வீடழிந்த மக்கள் தமது காணிகளில் புத்த விகாரைகளை அமைக்க இடமளித்தால் அவர்களுக்கு மிக வசதியாக ஆறு லட்சம் ரூபா செலவில் வீடு அமைத்துத் தருகிறோம் எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. யாழ்ப்பாண நகரத்தில் உள்ள நாக விகாரையும் ராணுவத்தினரும் இதன் அனுசரணையாளர்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது. யுத்தம் காரணமாக நொந்து நலிந்து வீடற்று அழிவின் வெளியில் தவிக்கும் ஈழத்து மக்களை இப்படியும் ஏமாற்றலாம் என்பது வெளிப்படையாக அறிவிக்கப்பட்டது. புத்தர் சிலைகளைப் பரவலாக நட்டு பௌத்தத்தைப் பரப்பும் இந்த நடவடிக்கை எத்தகைய கொடுமையானது? இதை அறிவிக்கும் அளவிற்குத் தமிழர் நிலத்தில் சிங்கள இனவாதம

கட்டுரை
ஆ. இரா. வேங்கடாசலபதி  

வரலாற்றுப் பேரறிஞர் தர்மானந்த தாமோதர் கோசாம்பியின் தந்தை என்பதற்கும் மேல் நினைவுகொள்ளப்பட வேண்டிய ஓர் ஆளுமை தர்மானந்த கோசாம்பி (1876-1947). இந்தியாவில் பௌத்த மறுமலர்ச்சிக்கு அடிக்கல் நாட்டியவர்களில் ஒருவர் தர்மானந்த கோசாம்பி. அவர் எழுதிய ‘கௌதம புத்தர்’ இன்றளவும் (தமிழிலும்) வாசிக்கப்படும் நூலாகும். போர்த்துகீசிய ஆளுகைக்குட்பட்ட கோவா பிரதேசத்தில், கௌட சாரஸ்வத் பிராமண குலத்தில் பிறந்த தர்மானந்த கோசாம்பி, இந்தியா, நேப்பாளம், பர்மா, இலங்கை முதலான இடங்களுக்கும் பயணித்து பௌத்தம் பற்றி அறிந்துகொண்டார். பாலி மொழி கற்றுத் தேர்ந்து, பௌத்த மூல நூல்களைப் பயின்றார். பௌத்த ஆய்வு தொடர்பாக ஹார்வார்டு பல்கலைக் கழகத்துக்குப் பலமுறை சென்றுவந்தார். ஹார்வார்டு பல்கலைக்கழகம் வெளியிட்ட &

கட்டுரை
 

‘இருளும் ஒளியும் சமமானவையல்ல; நிழலும் ஒளியும் சமமானவையல்ல; உயிருள்ளவையும் இறந்தவையும் சமமானவையல்ல’ - ‘என் பெயர் சிவப்பு’ (தமிழாக்கம் - பக்கம். 605) இரண்டாயிரத்து ஆறாம் ஆண்டு பெற்ற நோபெல் இலக்கியப் பரிசு மட்டுமல்ல துருக்கி எழுத்தாளரான ஓரான் பாமுக்கின் இன்றைய புகழுக்குக் காரணம்; உலக இலக்கியத்தில் கீழைத் தேய நவீனப் படைப்பாற்றலின் திறப்பாகவும் இருக்கிறார் என்பதும் நவீனத்துவமும் பின்நவீனத்துவமும் ஐரோப்பிய, லத்தீன் அமெரிக்க மொழிகளில் மட்டுமே சாத்தியமாகக் கூடியவை என்ற கடந்த நூற்றாண்டின் இலக்கிய மூடநம்பிக்கையைப் புரட்டித் தள்ளிய படைப்பாளிகளில் பாமுக்கும் ஒருவர். மதத்தின் பிடி இறுக்கமாக உள்ள கலாச்சாரத்தில் நவீனச் சிந்தனைகளும் மாற்றுப் போக்குகளும் உள் நுழைய

துருக்கிச் சிறுகதை
 

அவர் இறுதியாகச் சிறையில் கழித்த காலம் மிகவும் கொடுமையானது. சிறையிலிருந்து விடுதலை பெற்ற பிறகு மிகவும் தொலைதூரத்திலிருந்த ஒரு பிரதேசத்திற்கு அவர் நாடு கடத்தப்பட்டார். அந்தப் பிரதேசத்துக்கும் அம்மக்களுக்கும் அவர் புதியவர். அவர் சிறையிலிருந்தபோது அவருடைய மனைவியால் அவர் விவாகரத்து செய்யப்பட்டிருந்தார். அவரது எல்லா எதிர்பார்ப்புகளும் சிதறுண்டு போயிருந்தன. வாழ்க்கையைக் கொண்டுசெல்லப் போதுமான பணம்கூட அவரிடமிருக்கவில்லை. வேலையொன்றைத் தேடிக்கொண்டு, அமைதியான வாழ்க்கையொன்றைக் கழிப்பதற்கு அவர் நிரந்தரமாக அரசியல் வெளியிலிருந்து விலகிக்கொள்வாரா? எல்லாவற்றுக்கும் முதலில் அவர் ஓர் இருப்பிடம் தேடி நடந்தார். அவர் நாடுகடத்தப்பட்டிருக்கும் பிரதேசத்திலிருந்த நகரத்தில் மட்டுமல்ல, நகருக்கு வெளியேய

ஓவியங்கள்: ரோஹிணி மணி  

எனது மதுக்குடுவை என்னிடமுள்ள இக்குடுவை என் மூதாதையரிடமிருந்து வந்தது நூற்றாண்டுகளாக உன்மத்த வாசம் வீசுமது எம் பெண்களின் முத்தத்தால் நிரம்பியிருந்தது அதன் ரேகைகளில் ஒளிந்திருக்கும் அமுதின் ஊற்று என்னைக் காணும்போதெல்லாம் பிள்ளைச் சூரியனாய் வழிந்தது கள்ளுடன் சுட்டக்கருவாடும் மாசிமாதக் கூத்துமாய் களைகட்டிய இளமையின் நினைவைப் பருகுகிறாள் குடுவையைப் போலிருக்கும் பாட்டி ஊர்ச்சுற்றி மீன் விற்கும் நெடிய அலைச்சலுக்குப்பின் அவளின் மாலைப் பெரும்பொழுதுகள் பொங்கும் மதுவுடன் காதலும் நுரைத்து வழிந்ததாம் அவளின் பேரானந்தத்தின் குளம் எப்போதும் நிரம்பித் தளும்பியபடியிருந்தது எங்களின் தாழ்ந்த எரவாணத்தில் சொருகிய மீன்பரிக்கு அருகில் கயிற்றில் ஊஞ்சலாடும் சுரக்குடுவை ஒரு குட்டித் தேவ

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

பத்திரிகைகளில் செய்தி வரும் என்பது எல்லாருக்கும் தெரிந்த விஷயம். இப்போது பத்திரிகையே செய்தியாக இருக்கிறது. தலையங்கம் எழுதியவர்களே இப்போது தலையங்கமாக ஆகியிருக்கிறார்கள். 168 வருடத் தொடர்ச்சியான பிரசுரிப்புக்குப் பின் ஆங்கில வார இதழான News of the Worldஇன் இறுதிப் பதிப்பு 10.07.2011 அன்று வெளிவந்திருந்தது. இந்த ஞாயிறு இதழைத் திடீரென்று மூடுவதற்குப் படிப்பவர்களின் எண்ணிக்கை குறைந்துபோனதோ வாசகர்களுக்கு இணையம் தரும் இலவசத் தகவல்களால் அச்சு இதழ்களின் ஈர்ப்பு தேய்ந்துவிட்டதோ காரணங்கள் அல்ல. ரூபர்ட் மொர்டோக்கின் ஊடகப் பத்திரிகைகளில் நியூஸ் ஒவ் த வோல்ட் தான் அதிக ஆதாயமானது. இதன் லாபத்தால்தான் நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் மொர்டோக்கின் இதர செய்தித்தாள்களான The Times, Sunday Times இன

சு.ரா.80 பதிவு
அ. ராமசாமி  

மேற்கத்தைய நிகழ்த்துக் கலைகளின் தயாரிப்பு மற்றும் நிகழ்த்து முறைகளுக்கும் இந்திய நிகழ்த்துக் கலைகளின் தயாரிப்பு மற்றும் நிகழ்த்து முறைகளுக்கும் இடையே வேறுபாடுகள் இருப்பதைப் பலர் எழுதியுள்ளனர்; பேசியுள்ளனர்; விளக்கியுமுள்ளனர். அத்தகைய வேறுபாடுகள் பார்க்கும் முறையிலும் பார்வையாளர்களாக ரசிக்கும் முறையிலும்கூட இருக்கின்றன. நிகழ்த்துக் கலைகளின் இந்தியப் பார்வையாளர்கள் புதியன பார்த்துத் திகைப்பவர்களோ அதன் வழிக் கிடைக்கும் அனுபவம் அல்லது சிந்தனைசார்ந்து குழப்பிக்கொள்பவர்களோ அல்ல. நன்கு அறிமுகமானவற்றை மறுபடியும் மறுபடியும் பார்த்துப் பாராட்டுவதும் ஒப்பிட்டுப் பேசுவதும்தான் இந்தியப் பார்வையாளர்களின் பொது மன அமைப்பு. இந்தக் கூறுகள் செவ்வியல் கலைகளான நடனம், நாடகம், இசைக் கச்சேரி முதல

சு.ரா.80 பதிவு
கி. பார்த்திபராஜா  

கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாக அரங்கில் சு.ரா. 80 நினைவு விழாவையொட்டிக் கூத்துப்பட்டறையின் அக்கரைச் சீமையிலே, பிரசாதம் ஆகிய நாடகங்களைப் பார்க்கக் கிடைத்த வாய்ப்பு சற்றே வித்தியாசமானது. விழாவின் மூன்றாம் நாள் காலையில் இந்நாடகங்கள் நிகழ்த்தப்பட்டன. வழக்கமாக மாலை வேளை மயக்கங்களுடனேயே நாடகம் சம்பந்தப்பட்டிருப்பது உண்டு. ஆனால் இவ் விழாவில் காலை, மதியம், மாலை என்று முக்காலத்திலும் நாடகங்கள் திட்டமிடப்பட்டுச் செவ்வனே நிகழ்ந்தேறின. முதல் நாடகமான அக்கரைச் சீமையிலே ஒரு தனிநபர் நாடகம். சுந்தர ராமசாமி 1953இல் எழுதி சாந்தி இதழில் வெளிவந்த சிறுகதை அதே பெயரில் நாடகமாகியிருக்கிறது. ஆப்பிரிக்காவின் தென் ரொடீஷ்யாவின் தலைநகரத்திற்கு அருகிலுள்ள புலுவாயோறாவுக்கு ரயிலில் செல்கிறான் கதைச

 

கே. சச்சிதானந்தன், விருது வழங்கிய கமலா சுந்தர ராமசாமி, முத்து நெடுமாறன், கண்ணன் மலேசியாவைச் சேர்ந்த முத்து நெடுமாறன் தமிழ் இணையப் பரப்பில் முக்கியமானதொரு ஆளுமையாக விளங்குகிறார். 2001ஆம் ஆண்டுமுதல் முரசு குழுமத்தின் தலைவராகப் பணியாற்றும் இவர் கணினிகளில் தமிழை உள்ளீடு செய்யும் முரசு அஞ்சல், குறுஞ்செய்திகளுக்குத் தமிழைப் பாவிக்கும் செல்லினம் போன்ற மென்பொருள் தயாரிப்பை முன்னின்று நடத்தியவர். முத்து நெடுமாறன் கணினிப் பொறியியல் துறையில் 1985ஆம் ஆண்டு பட்டம் பெற்றவர். 2002ஆம் ஆண்டு, மலேசியத் தமிழ்ப்பள்ளிகளுக்கான அதிகாரபூர்வ மென்பொருளாக முரசு அஞ்சல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதைத் தொடர்ந்து 2009ஆம் ஆண்டு சிங்கப்பூர் கல்வி அமைச்சு அவர்களுடைய தமிழ்ப் பயன்பாட்டிற்காக அரசாங்கத்தின் சார்

மதிப்புரை
கோவைவாணன்  

திணைக்கோட்பாடும் தமிழ்க் கவிதையியலும் க. ஜவகர் பக். 336. விலை ரூ. 250 (2010) வெளியீடு காவ்யா 16, குறுக்குத் தெரு டிரஸ்ட்புரம், கோடம்பாக்கம் சென்னை-600024 28.3.2011 அன்று ஒரு கல்லூரித் தமிழ்த் துறையில் முனைவர் பட்ட வாய்மொழித் தேர்வு நடைபெற்றது. ஆய்வாளரை நோக்கி எந்தக் கோட்பாட்டு அடிப்படையில் இந்த ஆய்வை நீங்கள் நிகழ்த்தினீர்கள் என்று கேட்டேன். ஆய்வாளரிடமிருந்து பதில் இல்லை; மௌனம் சாதித்தார். அடுத்து ஒரு பேராசிரியர் எழுந்து, “இலக்கியத்தைக் கோட்பாட்டு அடிப்படையில் எல்லாம் ஆய்வுசெய்ய வேண்டியதில்லை” என்று கூறினார். அம்மாணவரின் நெறியாளரும் இறுதியில் பேசும்போது, “கோட்பாடுகளை வைத்துக்கொண்டு தான் இலக்கியத்தை ஆராய்ச்சி செய்ய வேண்டும் என்றெல்லாம் இல்லை; உ.

 

11.11.04 அன்புள்ள செந்தில்*, உங்கள் கடிதம் கிடைத்து நாளாகிவிட்டது. நவம்பர் மாதத்திற்குள் நான் ஐந்து புத்தகங்களை அச்சுக்கு அனுப்பும்படி இறுதிப் பார்வை செய்ய வேண்டியிருக்கிறது. கடினமான வேலை தான். அதிக நேரம் அதையே செய்கிறேன். என் எழுத்துப் பற்றி உங்கள் அபிப் பிராயங்களையெல்லாம் விரிவாக எழுதியிருக்கிறீர்கள். படிக்க மகிழ்ச்சியாக இருந்தது. என் எழுத்துக்கள் சார்ந்த முரண்பாடுகள், ஏமாற்றங்கள், கருத்து வேற்றுமைகள் பற்றியும் வெளிப்படையாக நீங்கள் என்னுடன் பகிர்ந்துகொள்ளலாம். என் வளர்ச்சிக்கு அவை பயன்படும். தவறாக எண்ணிக்கொள்ள மாட்டேன். ஒருவர் மாறுபட்ட கருத்தைச் சொல்கிறபோது அவருடைய நோக்கம் எனக்கு முக்கியமானது. அவருடைய நோக்கத்தில் நான் நம்பிக்கை கொள்ளவில்லையென்றால் அவரை எதிர்கொள்ளும் முறை

அஞ்சலி: கார்த்திகேசு சிவத்தம்பி (10.05.1932 - 06.07.2011)
பொ. வேல்சாமி  

1982ஆம் ஆண்டு பேராசிரியர் கா. சிவத்தம்பி தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்திற்கு ஆராய்ச்சியாளராக வருகின்றார் என்ற செய்தியைக் கேட்டேன். அந்தக் காலகட்டங்களில் பா. மதிவாணன், அ. மார்க்ஸ் போன்றவர்களுடன் முற்போக்கு எழுத்தாளர் சங்கக் கூட்டங்களில் பங்குபெற்று வந்தேன். இந்தத் தொடர்பால் க. கைலாசபதி, கோ. கேசவன் போன்றவர்களின் நூல்களைப் பயிலும் வாய்ப்பு ஏற்பட்டது. அதில் கைலாசபதியின் நூல்கள் என்னுள் பெரும் கிளர்ச்சியை ஏற்படுத்தின. அதுவரை வழவழா கொழ கொழா என்று எழுதப்பட்ட ஆய்வுகளைப் படித்துவந்த எனக்குத் தமிழாய்வு என்பது ஒரு சலிப்பூட்டும் விசயமாக என் மனத்தில் பதிந்துவிட்டிருந்தது. இந்த எண்ணத்தை மாற்றி உயிர்த்துடிப்பான ஆய்வுகளைத் தமிழில் நடத்த முடியும் என்பதைக் கைலாசபதியின் நூல்கள் எனக்கு முதன்

அஞ்சலி: கார்த்திகேசு சிவத்தம்பி (10.05.1932 - 06.07.2011)
ந. ஜயபாஸ்கரன்  

‘மதநிலை எடுகோள்களை வினாவுக்கு உட்படுத்தாது, தமிழ் இலக்கியம், மத உணர்வு வெளிப்பாட்டால் எவ்வாறு செழுமையுறுகிறது என்பதனை, மிகுந்த ஒரு மேலோட்டமான முறையிலே இவ்வுரையில் எடுத்துக் கூறலாம் என்று கருதுகிறேன்’- என்று மிதமான குரலில் தொடங்கும் ‘மதமும் கவிதையும்’ என்ற சிறிய புத்தகத்தின் வாயிலாகத் தான் பேராசிரியர் கார்த்திகேசு சிவத்தம்பியின் விமர்சன உலகினுள் நுழைய நேர்ந்தது. துருவ நிலைப்பாடுகளை எடுக்காமல், கிடைத்துள்ள சகல தரவுகளையும் முன்வைத்து, தருக்க நெறியில் தான் பெற்ற முடிவுகளைத் தெளிந்த மொழியில் சொல்லிச் செல்லும் அவருடைய ஆய்வு முறை, மிகுந்த மனக்கிளர்ச்சி தருவதாக இருந்தது. தனிப்பட்ட முறையில் சொல்வதானால், மத பரமான தமிழ்க் கவிதையை இலக்கியமாக மட்டும் அல்லாமல், சம

எதிர்வினை
கடற்கரய்  

தனது உணர்வை நிரூபிக்கும் பொருட்டுப் பள்ளிக்கூட வாத்தியார் கரிகாலன் எழுதியிருந்த எதிர்வினை (ஜூலை, 2011) படித்தேன். அவரோடு இணைந்து நான் ஒரு காலத்தில் இலக்கியத் தளத்தில் செயல்பட்டதாக விருப்பத்தோடு தெரிவித்திருந்தார். அத்தகவலில் திருகல் உள்ளது. இருவரும் இணைந்து செயல்பட்டோம் என்பதே மிகச் சரி. ஏதோ இலக்கிய உலகில் பெயரோடும் பெரும் புகழோடும் அவர் இருந்த காலத்தில் அடையாளமற்ற ஒருவனைத் தன்னோடு இணைத்துக்கொண்டு செயல்பட்டதைப்போல் பேசியிருக்கிறார். எனக்கும் அவரது இலக்கிய ரசனைக்கும் ஏழாம் பொருத்தம். அவர் ஈசான மூலை என்றால், நான் அக்னி மூலை. ஊரிலிருந்த காலங்களில் அவரோடு எனக்கு எவ்வித அறிமுகமும் உருவாகவேயில்லை. நான் சென்னை வந்து, ஒரு வாரப் பத்திரிகையில் இரண்டு வருடங்கள் பணியாற்றிய பின்னர்தான

எதிர்வினை
பா. மதிவாணன்  

(காலச்சுவடு, ஜூலை 2011, ப்ரவாஹனின் எதிர்வினை குறித்து . . ) தமிழ்ப் பண்பாடு பற்றிய பிரபஞ்சன் கட்டுரைக்கு விரிவாக எதிர்வினையாற்றியுள்ளார் ஸ்ரீமாந் ப்ரவாஹன் (திரு. பிரவாகன் என எழுத இயல்பாக என் கை முனைந்தாலும் அவரை அவர் விரும்புமாறு சுட்டும் நாகரிகம் கருதியும் தமிழுக்கேயுரிய ‘ன’கரம் தம் பெயரில் இருக்க இசைந்துள்ள அவரது பெருந்தன்மை கருதியும் நானும் அவ்வாறே எழுதியிருக்கிறேன். விவாதத் தொடர்ச்சியில் ‘ன’ கரமும் ஆரிய எழுத்தே என அவர் நிறுவக் கூடும்.) ப்ரவாஹன் கருத்துகளைத் தொகுத்துச் சொல்லி விவாதிக்கலாமென்றால், நான்குபக்க எதிர்வினையில் ஏறத்தாழப் பதினைந்து அமிசங்களைச் சுட்டியாக வேண்டும்; விரிப்பிற் பெருகும்; பலவற்றில் எனக்கும் உடன்பாடே. ஆரிய/ பிராமணர் வருகைக்கு ம

கே. முரளிதரன்  

நான் சில புத்தகங்களை மொழிபெயர்த்திருப்பது உண்மைதான். ஆனால் ஆங்கிலத்தில் எழுத்துகளைப் பார்த்தாலே அதைத் தமிழில் மாற்றித் தீருவேன் என்ற வெறி எனக்குக் கிடையாது. காலை ஆறே முக்காலுக்கு நண்பரிடமிருந்து தொலைபேசி அழைப்பு. எனக்கு அது மூன்றாம் ஜாமம். ஓர் உதவி என்றார் நண்பர். அந்த மூன்றாம் ஜாமத்திலும் விழிப்புத் தட்டியது. மொழிபெயர்ப்பு தவிர வேறு எதுவாக இருந்தாலும் செய்யத் தயார் என்றேன். நான் சுதாரித்ததில் நண்பருக்கு ஆச்சரியம்தான் என்றாலும் விடாமல், மூன்று பக்கம்தானே 10 மணிக்குள் முடித்துவிடலாமே என்றார். இன்னொரு நண்பர் ஆயிரம் பக்க புத்தகத்தைப் பற்றி விரிவாகப் பேசி, நீங்கள் இதைக் கண்டிப்பாக மொழிபெயர்த்தாக வேண்டும் என்றார். “சார், உங்களுக்குத் தமிழும் ஆங்கிலமும் நன்றாகத் தெரியுமே. நீ

தலையங்கம்
 

தேர்தல் தோல்வி எதிர்பார்த்ததைப் போலவே திமுகவுக்குப் பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. ஜெயலலிதா தன் தேர்தல் சூளுரைகளை நிறைவேற்றும் விதத்தில் திமுக ஆட்சிக் காலத்தில் நடைபெற்ற நில அபகரிப்பு தொடர்பான புகார்களின் மீது அதற்கென உருவாக்கப்பட்டுள்ள தனிப்பிரிவால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் கடந்த ஆட்சிக் காலத்தில் ஆளுங்கட்சியினரால் சட்டவிரோதமாக மேற்கொள்ளப்பட்ட நில அபகரிப்பு பற்றிய தகவல்களை உறுதிப்படுத்தியுள்ளன. மு.க. அழகிரி, வீரபாண்டி ஆறுமுகம், கே.என். நேரு உள்ளிட்ட திமுகவின் முன்னணித் தலைவர்கள், அவர்களுடைய ஆதரவாளர்கள் மீது இது தொடர்பான வழக்குகள் பதிவாகியுள்ளன. பெண்கள், விதவைகள், முதியோர்கள் போன்ற பிரிவினரின் நிலங்களே திமுக கிரிமினல்களால் அதிகமும் பறிக்கப்பட்டுள்ளன. பாதி

 

கருணாநிதியின் தோல்விக்கு மிக முக்கியக் காரணமாக இருந்தவர் அவருடைய அருமைப் புதல்வி கனிமொழிதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. ஆரம்ப காலத்தில் கவிஞராக வலம்வந்த கனிமொழி, ஆட்சி அதிகாரம் கையில் இருக்கிறதென்ற மமதையில் முறைகேடுகளுக்குத் துணைபோகும் இழிநிலைக்கு ஆளானார். தமிழக இலக்கிய ஆளுமைகளில் மிகச் சிறந்தவராகப் பரிணமித்திருக்க வேண்டிய ஒருவர், திகார் சிறைக்குள் அடைக்கப்பட்டிருப்பது அவலத்திற்குரியது, வெட்கத்திற்குரியது. ஆ. ராசாவில் தொடங்கி இன்று மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் வரை ஊழலின் கொடுங்கரங்கள் நீளும்போது தமிழகத்தின் மிகப் பெருந்தலைவரான கருணாநிதி தன்னைத் ‘தூய்மை’யானவராகக் காட்டிக்கொள்ள முயல்வது அவரது பலவீனத்தைப் பகிரங்கமாகத் தெரியப்படுத்துகிறது. இப்போதைக்குச் சீரழ

 

K. சந்துரு ஹரிபரந்தாமன் 2008இல் காலச்சுவடு இதழ் தமிழக நூலகங்களில் தடை செய்யப்பட்டது. அரசாங்கம்மீது வைக்கப்பட்ட விமர்சனங்களே காரணம் என்பது வெளிப்படை. 2008 பிற்பகுதியில் மதுரை உச்ச நீதிமன்றத்தில் இத்தடைக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தோம். வழக்கு முடியும்வரை காலச்சுவடை நூலகங்களில் வாங்க வேண்டுமென நீதிபதி 30.09.2008 அன்று இடைக்கால ஆணை வழங்கினார். இதை ரத்துசெய்யக் கோரி தமிழக அரசு விண்ணப்பித்தது. கூடுதல் அட்டானி ஜெனரல் திரு. ராமசாமி மூன்று முறை சென்னையிலிருந்து மதுரை நீதிமன்றத்திற்குப் பறந்து வந்து அரசுக்காக வாதாடினார். அரசுக்கு எதிராக ஊடகங்கள் வழக்குத் தொடுப்பது அரிதிலும் அரிது என்பதால் அரசு தீவிரமாகவே செயல்பட்டது. இவ்வாண்டு ஏப்ரல் மாதம் வழக்கு விசாரணைக்கு வந்து ஜூன்

 

சு.ரா. 80 நிகழ்வுக்காகக் காலச்சுவடு அறக்கட்டளைக்கு நன்கொடை அளித்தவர்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். என் சகோதரிகள் தைலாவும் தங்குவும் தேவையான உதவிசெய்யத் தயாராக இருந்தமை இந்நிகழ்ச்சியை நம்பிக்கையுடன் திட்டமிடக் காரணமாக அமைந்தது. ‘ஸ்ரீராம் சிட்ஸ்’ தலைவர் தியாகராஜன் அவர்கள் தாராளமாக உதவினார். ‘ஆரெம்கேவி’ சிவக்குமார் அவர்கள் செய்த உதவியை மறைந்த நண்பர் விஸ்வநாதன் செய்ததாகவே நினைத்து மனநிறைவடைந்தேன். தினமலர் கிருஷ்ணமூர்த்தி அவர்கள், ‘கடவு’ தேவேந்திர பூபதி, ‘கோயம்புத்தூர் காப்பிடல்’ D. பாலசுந்தரம் அவர்கள், ‘சேலம் தமிழ்ச் சங்கம்’ க. வை. பழனிசாமி, நண்பர் கோகுலக்கண்ணன் ஆகியோருக்கு மனமார்ந்த நன்றி.கா

உள்ளடக்கம்