கட்டுரை
பூமா சனத்குமார்  

‘அரசியல் நாடகத்தை நிறுத்திக்கொள்ளுங் கள்!’ தில்லிக்கு அருகிலுள்ள நொய்டா பகுதியில் நிலங்கள் பறிக்கப்பட்டதற்கு எதிரான விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவளித்துக் கலந்துகொண்டவரும் நிலம் கையகப்படுத்தல் (திருத்தல்) மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றவுள்ள மத்திய அரசை ஆளும் காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளருமான ‘யுவராஜ்’ ராகுல் காந்தியை, போராடும் விவசாயிகள்மீது துப்பாக்கிச் சூடு நடத்திய உத்திரப் பிரதேசத்தின் தலித் பெண் முதல்வரான மாயாவதி இப்படித் தான் எச்சரித்தார். அதே நாட்களில் தான் மம்தா பானர்ஜி நந்திகிராமில் முன்பு தொடங்கிய நாடகத்தின் இறுதிக் காட்சிகளை மேற்கு வங்காள முதல்வரின் முடிசூட்டு விழாவாகக் கொல்கத்தாவில் அரங்கேற்றிக்கொண்டிருந்தார். தில்லியின் புறநகர்

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

ரோமாபுரி எரிந்தபோது நீரோ மன்னன் பிடில் வாசித்துக்கொண்டிருந்தான் என்று பாடப்புத்தகங்களில் படித் திருப்பீர்கள். லண்டனும் பார்மீங்கமும் தீக்கிரையானபோது நான் அந்த அரசன் போல் இசைக்கருவியில் மெனக்கெடவில்லை. எல்லாரையும் போல் ஆங்கிலக் கலவரத்தைத் தொலைக்காட்சியில் பார்த்துக்கொண்டிருந்தேன். இவ்வளவுக்கும் நான் வசிக்கும் இடத்திலிருந்து பத்துப் பேருந்து நிற்குமிடங்களைத் தாண்டியிருக்கும் நகர் மையக் கடைகள் சூறையாடப்பட்டுக்கொண்டிருந்தன. என்னுடைய இங்கிலாந்து வாழ் நாள் அனுபவத்தில் இது நான் பார்க்கும் இரண்டாவது பெரிய கலவரம். முதலாவது 1981இல் நடந்தது. இவை இரண்டுக்குமிடையே சில இணைவுகளும் வேறுபாடுகளும் உண்டு. அவற்றை இக்கட்டுரையில் இணைத்திருக்கிறேன். ஏழு நாட்களாகத் திக்குத்தெரியாமல் நடந்த இந்தக்

கட்டுரை
மு.புஷ்பராஜன்  

ஐ.நா.சபையின் நிபுணர் குழு அறிக்கையும் அதை உறுதிப்படுத்துவதுபோல் வெளிவந்த சானல்4இன் ‘இலங்கையின் கொலைக்களங்கள்’ காணொளியும் உலகம் முழுவதிலும் அதிர்வுகளை ஏற்படுத்திவருகிறது. குறிப்பாகக் காணொளிக்குப் பிறகுதான் இலங்கையின் முகத்தை, வடகிழக்கு மக்களைத் தாண்டி உலகம் முழுவதிலுமுள்ள மக்கள் அறிந்துகொண்டார்கள். கடந்த அறுபதாண்டுகளுக்கு மேலாக இனக் குரோதத்திலும் வன்மையிலும் ஊறியிருந்த சிங்கள அரசுகளினதும் அதன் ராணுவ கட்டமைப்புகளினதும் உள்மன ஆசைகளின் வெளிப்பாடுதான் முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை. இது யூதர்களைக் கொன்றொழிக்க முனைந்த நாசிகளின் மன நிலையேதான். ஒரு பாதுகாப்பற்ற இனம் சிங்கள மேலாதிக்கத்தின் உள்மன ஆசையில் சிதைக்கப்பட்டுவிட்டது. தம் கண்முன்னால் ஒளிபரப்பப்பட்ட காணொளியில், தமது

கட்டுரை
பெருமாள்முருகன்  

நீதிமன்ற நடவடிக்கைகள் ஒருவழியாக முடிந்து சமச்சீர்க் கல்விப் பாடத் திட்டம்தான் என்பது முடிவாகிவிட்டது. திமுக தொடர்பானவை எனக் கருதப்படுபவற்றை நீக்கிப் பாட நூல்கள் விநியோகம் நடைபெறுகின்றது. அதேசமயம் தனியார் பள்ளிகள் தங்கள் நலன் சார்ந்து என்னென்ன செய்வது என்பதைத் திட்டமிடத் தொடங்கிவிட்டன. தங்கள் வியாபாரம் எந்தெந்த வழிகளில் பாதிக்கப்படும் எனக் கண்டறிந்து அவ்வழிகளை அடைப்பதற்குத் தங்கள் பெருத்த கைகளை விரித்துவிட்டனர். பெயரிலிருந்து தொடங்குகின்றன அவர்களின் தற்காப்பு நடவடிக்கைகள். ‘சமச்சீர்க் கல்வியை அமல்படுத்துவதை அடுத்து மெட்ரிகுலேஷன் என்ற பெயரை எந்தக் காரணம் கொண்டும் மாற்றக் கூடாது. அவ்வாறு மாற்றினால் அதை எதிர்த்து நீதிமன்றம் செல்வோம்’ என்று சொல்லிவிட்டார்கள். பெய

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

ஒரேவிதமான காரணம், சம்பவம், சேதங்களின் பட்டியல், கொலையுண்ட உடல் என்று சொல்லப்படுவதால் சாதாரண செய்தியாகிப் போன சாதிய வன்முறைகளை எல்லோரும் எளிமையாகக் கடந்துபோகப் பழக்கப்பட்டுவிட்டோம். ஆனால் சாதி அதன் கொடிய இருப்பை மறுவுறுதி செய்துகொள்ளும் அனுபவத்தைத் தினமும் சந்தித்துக்கொண்டுதான் இருக்கிறோம். மதுரை திருமங்கலம் அருகிலுள்ள வில்லூர் கிராமத்தில் ஒடுக்கப்பட்ட தலித் வகுப்பினர்மீது பெரும்பான்மை ஆதிக்க வகுப்பினர் ஏவிய பொது உரிமைகளுக்கு எதிரான தடையால் ஆதிக்க வகுப்பினருக்கும் காவல் துறைக்குமான மோதலாக அது மாறி நிற்கிறது. நவீன ஜனநாயக வடிவங்கள் நுழைவதன் மூலம் சாதித் தனித்துவம் கலைந்துவிடாமல் பாதுகாக்கும் பகுதி இது. தங்களுக்குள்ளேயே கூட்டங்களாகவும் திருமண உறவுகொள்ள முடியாத பிரிவுகளாகவும் வா

சிறுகதை
 

நீ ஆற்றில் குளித்துக் கரையேறிய பகல் பொழுதை என்னால் மறக்க முடியாது செண்பகா. உனது நீள் கூந்தலும் வெளிர் நிறத்தில் மினுங்கும் சருமமும் விஷம் தடவிய குறு வாளைப் போல என்னைப் பய முறுத்துகிறது செண்பகா. உன்னுடன் ஒருமுறை கூடிவிட்டால் போதும் செண்பகா. இனி நெஞ்சை நிமிர்த்தி ஈட்டிகாணச் செல்வேன். மரண பயம் எனக்கில்லை. இந்த ஜமீனுக்கு என்னைவிடத் தைரியமான பட்டயக்காரர்கள் இருக்கிறார்கள். ஒருவருக்குப் பின் ஒருவராக வந்துகொண்டே இருப்பார்கள். வாளேந்துவார்கள். குதிரையில் காடு, கரை, வனம், மேடு என்று ஜமீனுக்குப் பின்பாகச் சுற்றுவார்கள். ஜமீனுக்கு முன் மண்டியிட்டு உண்டு விஷமிட்ட உணவு, விஷமிடாத உணவு என்பதை அறிந்து அவருக்கு உண்ணத் தருவார்கள். விஷமிட்ட உணவை உண்டவன் இறந்ததும் அடக்கத்திற்கு முன்பே தமுக்கடித

 

கோகுலக் கண்ணன் கவிதைகள் மண்குதிரை கவிதைகள்

சிறுகதை
 

அவர்கள் மால்மோவிலிருந்து கோட்போர்க் வழியாக, வடக்குப் புறமாகக் கடற்கரையை ஒட்டி, எல்லையை நோக்கிப் பயணித்தார்கள். இரண்டு வயதான ஒரு காரில் இருந்த அவர்கள் சிபேலியஸின்* இசையைக் கேட்டுக்கொண்டிருந்தார்கள். அவர்கள் காட்டின் வழியே சென்றபோது அவள் காட்டையே பார்த்துக்கொண்டிருந்தாள். தனி மரங்கள் மிகவும் உயரமாகவும் நேராகவும் அடர் பச்சை நிறம் கொண்டவையாகவும் இருந்தன. சற்றே நீல நிறம் கொண்டவையாகவும் அவை தோற்றம் அளித்தன. அண்மையில் ஒரு குழந்தையை இழந்திருந்த அவர்கள் அதற்கான துக்கத்தில் இருந்தார்கள். காரினுள் தத்தமது ஜன்னலின் வழியே வானத்தின் அடர்த்தியான வெண்மையை அவர்கள் பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்கள் குழந்தையைத் தொலைத்திருப்பது இது முதல்முறையல்ல. பலமுறை தொலைத்திருக்கிறார்கள். சிறிய சதைத் த

கட்டுரை
களந்தை பீர்முகம்மது  

இப்போது அந்தத் தீர்ப்பு வந்துவிட்டது. கவிஞர் ஹெச். ஜி. ரசூலுக்குப் பத்மனாபபுரம் முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் நீதி வழங்கியிருக்கிறது. தக்கலை அஞ்சுவண்ணம் பீர்முகம்மதியா முஸ்லிம் அசோஷியேஷன் முஸ்லிம் ஜமாத் கவிஞர் ரசூலை ஊர்விலக்கம் செய்தது சட்டப்படி ஏற்கப்படக்கூடியதாக இல்லையென்று முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி கூறியிருக்கிறார். மனித உரிமை ஆர்வலர்கள், தமிழ் இலக்கியவுலகம் மற்றும் பத்திரிகையாளர்கள் ஆகியோர் மத்தியில் தக்கலை அபீமுஅ ஜமாத் உண்டாக்கிய அதிர்வலைகள் இப்போது வெறும் நுரைகளாகப் படிந்துவிட்டன. ஊர்விலக்கத்தை எதிர்த்துத் தமிழகத்தில் - இந்தியாவின் வேறுசில பகுதிகளில் நடைபெற்ற கருத்துப்போராட்டம் முதல் வெற்றியை அடைந்திருக்கிறது. நடந்தது இதுதான். 2006ஆம் ஆண்டு டிசம்பர் மாதம

 

மனித உயிரைப் பறிப்பது மனிதநேயத்துக்கும் மானுட குல அறத்துக்கும் எதிரானது என அனைவரும் அறிவோம். மனித உயிரைப் பறிப்பதற்குத் தனி மனிதருக்கோ சமூகத்துக்கோ அரசுக்கோ எந்த உரிமையும் இல்லை. ஆனால் மரண தண்டனையை அல்லது தூக்குத் தண்டனையை அரசே நிறைவேற்றுகிறபோது அது அறச் செயலாகவும் சட்டரீதியாகவும் கருதப்படுவது எவ்வகையில் நியாயம்? நியாயமில்லை எனப் பதில் கூறும் முகமாக மரண தண்டனையை உலகில் 135 நாடுகள் ரத்துசெய்துள்ளன. காந்திதேசம் என்னும் கிரீடத்தைப் பெருமையாகச் சூடிக்கொண்டிருக்கும் இந்தியா இதுவரை மரண தண்டனையை ரத்துசெய்யவில்லை. மேற்கு வங்கத்தில் 2000ஆம் ஆண்டில் கடைசியாய் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 1995க்குப் பின் நிறைவேற்றப்படவில்லை. இப்போது ராஜீவ் காந்தி கொலைவழக்கில் பேரறி

மண்குதிரை  

அடவி சிற்றிதழ்களின் எண்ணிக்கை பெருகி வரும் இன்றைய சூழலிலும் பொருளாதாரச் சிரமங்களுக்கு அப்பாற்பட்டு எந்தச் சமரசங்களுக்கும் இடமளிக்காமல் தொடர்ந்து ஒரு தீவிர இலக்கிய இதழாகத் தன்னை நிலைநிறுத்துக்கொள்வதென்பது எளிய காரியமல்ல. அடவி அதைச் சாத்தியப்படுத்திக்கொண்டிருக்கிறது. படைப்பிலக்கியம் சார்ந்து இயங்கிவரும் இவ்விதழ் செறிவான அரசியல் கட்டுரைகளுக்கும் இடமளித்து வருகிறது. சென்ற இதழில் த கேரவேனில் வெளிவந்த ராமச்சந்திர குஹாவின் கட்டுரையை மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தகுந்தது. செப்டம்பர் இதழ் சிறுகதைக்கான சிறப்பிதழ்போல் வெளிவந்திருக்கிறது. எளிய விவரணைகளையும் நுட்பமும் ஆழமும் மிக்க படிமமாக மாற்றும் தேவிபாரதியின் கதை சிறந்த வாசிப்பனுபவம் தருகிறது. ஸீஷீஸீ-றீவீஸீமீணீக்ஷீஇல்

 

தமிழக அரசின் சிறந்த நூல் விருதைப் பெற்ற பெருமைக்குரிய தகவல் தொழில்நுட்பப் புத்தகம் தமிழும் கணிப்பொறியும். தமிழ்க் கணினி அறிவியல் உலகின் முன்னோடி ‘கணியரசு’ மா. ஆண்டோ பீட்டர் எழுதிய இந்நூலின் நான்காம் பதிப்பை சாஃப்ட்வியூ பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இந்நூலின் வாழ்த்துரையைக் கடந்த அதிமுக அரசில் சபாநாயகராக இருந்த டாக்டர் காளிமுத்து எழுதியுள்ளார். தமிழ் எழுத்துக்களை வடிவமைப்பது எப்படி, தமிழ் எழுத்துருக்கள் பொருத்தும் முறைகள், தமிழ் எழுத்துரு வடிவமைப்பதில் சிக்கல்கள், யுனிகோட் ஆகிய பாடங்கள் கம்ப்யூட்டரில் ஃபாண்ட்ஸ் அடிப்படைகள் மற்றும் பயன்படும் விதத்தை விளக்குகிறது. முக்கிய தமிழ் இணையங்கள், தமிழ் இணையங்கள் அமைப்பதற்கான வழிமுறைகள் ஆகிய பாடங்கள் தமிழ் இணையங்களின் சிறப்ப

மதிப்புரை
கடற்கரய்  

ஆ. இரா. வேங்கடாசலபதியின் பரம்பரையில் வரும் தேர்ந்த ஆய்வாளராகப் பழ. அதியமானைச் சொல்லலாம். தமிழ் மறுபதிப்பியல் ஆய்வில் அதியமானின் பங்களிப்பு கவனிக்கத்தக்கது. வ. ரா. ஆராய்ச்சி வழியே ஆய்வுலகத்திற்குள் அடியெடுத்து வைத்தவரான அதியமான், வரலாற்றில் பெரும் பாய்ச்சலை ஏற்படுத்திய முன்னோடிகள் குறித்துச் சில முதல் நூல்களைப் படைத்துள்ளார். அப்படியான ஆய்வு நூல்களில் ஒன்றே சக்தி வை. கோவிந்தன்: தமிழின் முன்னோடிப் பதிப்பாளுமை எனும் அரிய நூல். வை. கோவிந்தன்: அச்சுப் பண்பாட்டின் நவீன அரிச்சுவடி ஆசிரியர்: பழ. அதியமான் பக். 232, விலை ரூ.175 (2008) வெளியீடு காலச்சுவடு பதிப்பகம் 669, கே.பி. சாலை, நாகர்கோவில். 2008ஆம் ஆண்டு காலச்சுவடின் வெளியீடாக வந்த இப்புத்தகம் பெரிய அளவில் கவன

பதிவு: நாரத கான சபா, சென்னை (12.8.2011 - 17.08.2011)
கே. பாரதி  

பரதநாட்டியக்கலை இன்றுவரை அதன் தொன்மை மாறாமல் ஒரு குறிப்பிட்ட வரையறைக்குள் இயங்கிவருகிறது. புராணக்கதைகளும் அவற்றை விவரிக்கும் பாடல்களும்தாம் பரத நாட்டியத்தின் பலம். சந்திரலேகா போன்ற நாட்டியக் கலைஞர்களின் நவீன முயற்சிகள் அபூர்வமாக நிகழ்பவை. நாரத கான சபா அறக்கட்டளை ஆண்டுதோறும் நடத்தும் நாட்டியரங்கம் நிகழ்ச்சியில் சில புதிய முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். இந்த ஆண்டு பரதம் - கதைகதையாம் என்னும் தலைப்பில் தமிழ் இலக்கிய ஆளுமைகள் சிலரது சிறுகதைகளுக்கு நாட்டிய வடிவம் தரப்பட்டது. சென்னை நாரத கான சபாவில் ஐந்து நாட்கள் நடைபெற்ற நிகழ்ச்சியில் இலக்கிய ஆர்வலர்கள் வெகு சிலரே தென்பட்டார்கள். டிசம்பர் மாதம் கச்சேரி ஸீசனுக்கு வருகிற கூட்டம் தான் அதிகமாக இருந்தது. முதலில் சிறுகதை வாசிக்கப்பட்

பதிவு: அற்றைத் திங்கள், மதுரை 19.6.2011
கார்த்திக்குமரன்  

மதுரையில் ஒவ்வொரு மாதமும் மூன்றாம் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்று வரும் அற்றைத் திங்கள் நிகழ்வின் ஜூன் மாத நிகழ்வில் வாசகர்களுடன் எழுத்தாளரும் பத்திரிகையாளருமான ஞாநி உரையாடினார். அவர் தன் சாதனையெனக் கூறிக்கொள்வதற்கு எதுவுமில்லையென ஓர் எளிய பகிர்தலாகத் தன் உரையைத் தொடங்கினார். எழுத்தாளராக, பத்திரிகையாளராக, நாடகக் கலைஞராகத் தான் பெற்ற அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார். பகிர்ந்துகொள்ளும் விதத்தில் எளிமை தென்பட்டாலும் அவரது பயணத்தின் அடர்த்தியை உணர்த்திச் செல்லும் நுட்பம் கொண்டதாக இருந்தது அவரது உரை. பத்திரிகையாளனால் தாம் விரும்பியதை எழுத முடியாத சூழலில் தான் விரும்பியதை மட்டுமே எழுதியதாகக் குறிப்பிட்ட ஞாநி பத்திரிகையாளனாக மட்டுமல்ல ஒரு மனிதனாகவும் ஒவ்வொருவரும் நேர்மையைக் கடைப

 

எழுத்தாளரும் ஊடகவியலாளருமான தீபச்செல்வனுக்கு 2010ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியலாளருக்கான இரண்டு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கைப் பத்திரிகை ஸ்தாபனம் இந்த விருதுகளை வழங்கியுள்ளது. நெருக்கடிச் சூழலில் செய்தித் தேடலுக்கான 2010ஆம் ஆண்டின் சிறந்த ஊடகவியலாளர் என்ற விருது வழங்கப்பட்டது. அதோடு 2010ஆம் ஆண்டின் சிறந்த புகைப்பட ஊடகவியலாளர் என்ற விருதையும் தீபச்செல்வன் பெற்றுள்ளார். கொழும்பு கல்கிசையில் உள்ள மவுன்லேனியா விடுதியில் நடைபெற்ற நிகழ்வில் இந்த விருது வழங்கப்பட்டது. வன்னியில் ஏற்பட்ட நிலப் பிரச்சினைகள் பற்றிய கட்டுரைக்கு விருதுகள் வழங்கப்பட்டுள்ளன. தீபச்செல்வன் 1983இல் கிளிநொச்சி யில் பிறந்தவர். கிளிநொச்சி மத்தியக் கல்லூரியில் பாடசாலைக் கல்வியைக் கற்ற இவர் யாழ்ப்பாணப் பல்கலைக

சு.ரா. பக்கங்கள்
தமிழில்: சுகுமாரன்  

அண்மையில் மறைந்த மலையாள எழுத்தாளரும் மொழிபெயர்ப்பாளருமான பிரேமானந்தகுமார் தேர்ந்தெடுத்து மொழியாக்கம் செய்த தமிழ்ச் சிறுகதைகளின் தொகுப்பு 13 தமிழ்க் கதைகள் என்னும் பெயரில் 2000இல் வெளியானது. அத்தொகுப்புக்கு சு.ரா. எழுதிய முன்னுரை இது. கேரளத்தில் பல இலக்கிய மேடைகளிலும் மலையாளத்தில் உரையாற்றியிருக்கிறார் சு.ரா. ஆனால் அவர் கட்டுரையாக மலையாளத்தில் எழுதிய முதல் ஆக்கம் இது. சுப்ரமணியபாரதிதான் நினைவுக்கு வருகிறார். இந்தியாவில் ஒரு கவிஞன் சிறுகதையிலோ நாவலிலோ அக்கறை காட்டாமலிருப்பது சாதாரணம். கவிதையில் ஈடுபாடுகொண்ட கவிஞனுக்கு வேறு அக்கறைகள் தேவையில்லை என்று நம்புகிறவர்கள் நாம். பாரதிக்கு ஈடுபாடில்லாத துறைகள் எதுவுமில்லை. பாரதிக்கு இருந்த ஆர்வங்களைக் கணக்கிலெடுத்தால் சென்ற நூற்றாண்ட

அஞ்சலி: பிரேமானந்தகுமார்
சுகுமாரன்  

மலையாள எழுத்தாளரும் கவிஞரும் மொழிபெயர்ப்பாளருமான டி. பிரேமானந்தகுமார் கடந்த ஜூலை மாதம் மறைந்தார். குட்டி எழுத்தாளர்கள் கூட மரணத்துக்குப் பிறகு இலக்கியக் காரணவர்களாகப் போற்றப்படும் கேரளச் சூழலில் அதிகம் கவனிக்கப்படாமலும் பேசப்படாமலும் போன மரணம் அவருடையது. நண்பர் என்று உரிமை பாராட்டிக்கொள்ளும் நெருக்கமில்லை. தெரிந்தவர் என்று விலக்கிச் சொல்லும் அந்நியமுமில்லை. இந்த இரண்டையும் தாண்டிய ஒரு தோழமை பிரேமானந்தகுமாருக்கும் எனக்குமிடையில் இருந்தது. இலக்கியம்தான் அந்தத் தோழமையின் இணைப்புக் கண்ணி. அந்த இலக்கியம் தமிழா மலையாளமா என்று பலமுறை யோசித்திருக்கிறேன். எங்களுக்கிடையில் நடந்த ஐந்துக்கும் குறைவான சந்திப்புகளில் ஒன்றில் அவரிடம் கேட்டுமிருக்கிறேன். சவைத்துக்கொண்டிருந்த முறுக்கானைத் து

கண்ணன்  

அக்கா சௌந்தராவுக்குத் திருமணம். அப்பா முகூர்த்தச் சடங்குகளில் இருந்தார். நல்ல கூட்டம். நெரிசலாகவே இருந்தது. எங்கள் உறவினர், வயதில் பெரியவர், அப்பாவை நெருங்கக் கூட்டத்திற்குப் பின்னாலிருந்து முண்டியடித்துக்கொண்டிருந்தார். ஏதோ கேட்க வேண்டிய அவசரம் முகத்தில் தெரிந்துகொண்டிருந்தது. அப்பாவும் அவரைக் கவனித்துவிட்டார். சடங்குகளுக்கிடையில் அடிக்கடித் திரும்பிப் பார்த்துக்கொண்டிருந்தார். அவரும் அடிஅடியாக முன்னேறிக்கொண்டிருந்தார். கனத்த சரீரம். மூச்சிரைந்து வியர்த்து ஊற்றிக்கொண்டிருந்தது. ஆஸ்துமா பிரச்சினை உண்டு. ஒரு வழியாகப் பெரியவர் மேடையை நெருங்கிவிட்டார். அப்பா குனிந்ததும் அவர் கேட்டார்: ‘ராமசாமி, சவரம் பண்ணிக்க ஒரு பிளேடு இருக்குமா?’ சில மாதங்களுக்கு முன்னர் இஸ்தான்

தலையங்கம்
 

வலுவான லோக்பால் சட்டத்தை நிறைவேற்றக்கோரி புதுதில்லியின் ராம்லீலா மைதானத்தில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அன்னா ஹசாரே நாட்டின் புதிய அடையாளமாகவும் ஊழலின் பல அடையாளங்களைக் கண்டு வெதும்பியிருக்கும் மக்களுக்கு ஊழலுக்கு எதிரான நம்பிக்கை நட்சத்திரமாகவும் உருவெடுத்துள்ளார். சில மாதங்களுக்கு முன்புவரை சமூக சேவகராக மட்டுமே அறியப்பட்டிருந்த அன்னா தற்போது மகாத்மா காந்திக்கு இணையான ஓர் ஆளுமையாகப் போற்றப்படுகிறார். தமது வெளிறிய கன்னங்களில் மூவர்ணக்கொடியை வரைந்துகொண்டு ‘அன்னாவே இந்தியா’ என்னும் முழக்கத்துடன் பேரணிகளிலும் ஆர்ப்பாட்டங்களிலும் ஈடுபட்டுவரும் மாணவர்களும் இளைஞர்களும் போராட்டக் களங்களைக் கவர்ச்சிகரமானவையாக மாற்றியிருக்கின்றனர். போராட்டக் களங்கள் கிரிக்கெட

 

ஆகஸ்ட் 2011 இதழில் தலையங்கப் பகுதியில் நேர்மையாக ஒரு கருத்து முன்வைக்கப்பட்டுள்ளது. குடும்ப ஆதிக்கத்தாலும் ஊழல் நாற்றத்தாலும் சீரழிந்துபோன முந்தைய ஆட்சியைப் பற்றிய விமர்சனங்களை வைக்கிறபோதே சமச்சீர்க் கல்வி பற்றிய இன்றைய அரசின் வரட்டுப் பிடிவாதப் போக்கையும் அது மாணவர்களின் எதிர்காலத்தோடு விளையாடுவதையும் விமர்சனம் செய்வது கவனத்துக்குரியது. ஓர் இலக்கிய இதழுக்கு அரசியல் பார்வை அவசியமானதே என்ற காலச்சுவடின் கருத்து முக்கியமானது. நேர்மையானது. காலச்சுவடும் தமிழக அரசியலும் கட்டுரை சிறப்பாக இருக்கிறது. காலச்சுவடுமீதான தடை நீக்கப்பட்டது குறித்த நீதிமன்றத் தீர்ப்பு மகிழ்ச்சியளிக்கிறது. சோமிதரனுடனான நேர்காணல் ஈழத்தின் இன்றைய நிலையை யதார்த்தத்துடன் வெளிப்படுத்துகிறது. குறைந்தபட்ச அதிகார

உள்ளடக்கம்