கட்டுரை
க. திருநாவுக்கரசு  

ஊழலுக்கு எதிரான, வலுவான லோக்பால் மசோதாவை நிறைவேற்றக்கோரி அண்ணா ஹஜாரே நடத்திய பன்னிரண்டு நாள் உண்ணாவிரதப் போராட்டம் தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ளது. இப்போராட்டம் பெரும் வெற்றி என ஊடகங்கள் கொண்டாட, சிலரோ இது எந்த வகையிலும் வெற்றியே அல்ல, ஏனெனில் நாடாளுமன்றம் அண்ணா குழுவின் ஜன் லோக்பால் மசோதாவை ஏற்பதாகக் கூறவில்லை எனக் கூறியுள்ளனர். ஆனால் உண்மை இரண்டிற்கும் நடுவில் இருக்கிறது. அதைப் பிறகு பார்ப்போம். இப்போராட்டத்தின் வெற்றி தோல்வியைப் பற்றிய விவாதங்களைவிட இதன் தன்மை - அதாவது இந்தப் போராட்டம் எத்தகையது, யாருக்கானது, இதன் நன்மை தீமைகள் என்னென்ன, இதை ஆதரிக்கலாமா கூடாதா என்பவை - பற்றிய விவாதங்கள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவை. ஏறக்குறைய ஒட்டுமொத்த இந்தியாவே அண்ணா தலைமையிலான

கட்டுரை
 

கடந்த சுதந்திர தினத்தன்று மதியம் முன்னறிவிப்பு எதுவுமின்றித் திடீரென அண்ணா ஹஜாரே மகாத்மா காந்தி சமாதிக்குச் சென்றுள்ளார் என்ற அறிவிப்பு வந்ததும் வழக்கமாக நம் தலைவர்கள் அஞ்சலி செலுத்தும் காட்சியாகவே அது இருக்கும் என நினைத்திருந்தேன். ஆனால் அவரோ காந்தி சமாதியின் முன்பு மணிக்கணக்கில் கண்மூடித் தியானக் கோலத்தில் அமர்ந்தார். அந்தக் காட்சி தொலைக்காட்சிகளில் மீண்டும் மீண்டும் காட்டப்பட்டு, அவரைக் காண்பதற்காக வந்த பொது மக்கள் கூட்டம் பெருகத் தொடங்கியது. அண்ணாவின் தியானத்திற்கு இடையூறு செய்யாதவண்ணம் அங்கு வந்திருந்த பொதுமக்கள் சதுக்கத்திற்கு வெளியே அமர்ந்தனர். தனியாக அண்ணாவும் அவரைச் சுற்றிப் பொதுமக்களும் அமர்ந்திருந்த அந்தக் காட்சி எனக்குள் பெரிய நிகழ்வு ஒன்று நடக்கப்போவதை முன்னறிவ

நேர்காணல்: சுதா ராமலிங்கம்
 

நாடாளுமன்றத்தில் தாக்கல்செய்யப்படவிருக்கும் வகுப்புவாத வன்முறைத் தடுப்புச் சட்ட மசோதாவின் பொதுவான சிறப்பம்சங்கள் என்ன? பாதிக்கப்பட்டோருக்கான நீதி, அவர்களுக்கு அளிக்கப்பட வேண்டிய இழப்பீடு பற்றிய அட்டவணை இச்சட்டத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இது வரவேற்கப்பட வேண்டிய அம்சம். மற்ற சட்டங்களிலும் இந்த அம்சம் உண்டு. ஆனால் வன்முறையால் பாதிக்கப்பட்டோருக்கான இழப்பீடு, மீண்டு வருவதற்கான உதவிகள் ஆகியவை பற்றி இதில் உள்ளதுபோல் தெளிவான வரையறை வேறு எந்தச் சட்டத்திலும் இல்லை. இதுவரை பரிந்துரையாக மட்டுமே இருந்துவந்த இவ்விழப்பீட்டு முறை இப்போது அதிகாரபூர்வமான சட்டமாகப்போகிறது. வகுப்புவாத வன்முறைக்குப் பொறுப்பிலுள்ள அதிகாரிகளின் கடமை தவறல் காரணமாக இருந்தால் அவர்கள் தண்டிக்கப்பட வேண்

கட்டுரை
தீபச்செல்வன்  

ஈழத்தின் வடக்கு-கிழக்கு நிலப்பகுதியின் இடையில் இருதய பூமியாக உள்ள கொக்கிளாய்ப் பிரதேசத்தில் அரங் கேற்றப்படும் விடயங்கள் ஒட்டுமொத்த ஈழத்தையும் அதிரப் பண்ணியுள்ளன. துண்டிக்கப்பட்ட பகுதியைப் போலவும் ராணுவத்தினரால் மூடிவைக்கப்பட்டு ஆளப்படும் பகுதியைப் போலவும் இருக்கும் கொக்கிளாயில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் பெருந்துன்பங்களை அனுபவிக்கிறார்கள். வடக்கு-கிழக்கு நிலத்தின் இணைவிடம் என்பதால் அந்த இருதய நிலத்தில் ஈழத் தமிழர்களின் இருப்பைச் சிதைத்து அதைக் கொள்ளையடிக்கும் நோக்கத்துடன் அரசு முழுநடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது. ராணுவத்தின் கோட்டையாக 28 வருடங்களாக இருந்த கொக்கிளாய்ப் பிரதேசம் அழிந்து, பேரழிவுகளைச் சுமந்த நிலத்தைப் போலுள்ளது. அழிந்த நிலத்தில் மீள்குடியேறும் மக்களின் கதையோ பெர

சிறுகதை
பெருமாள்முருகன்  

ஊர் முழுக்கச் சாக்குருவியின் ஓலம். ஒரு மாதத்திற்குள் இது ஆறாவது சாவு. பெரியகாட்டுச் சொங்காக் கவுண்டர் கட்டுத்தரையில் தொடங்கி ஒவ்வொன்றாகப் பரவி மணக்காட்டு ராமசாமிக் கவுண்டர் காடுவரை வந்துவிட்டது. அரக்கத் தவளையின் தாவல்போலச் சாக்காடு. ராமசாமிக் கவுண்டர் பெண்டாட்டி பாவாயி வைத்த ஒப்பாரி இருளைக் கிழித்துக்கொண்டு போயிற்று. துக்கம் ஒவ்வொரு வீட்டுக் கதவின் முன்னும் நாயாய் முடங்கிப் படுத்துக்கொண்டு ஊளையிட்டது. சாக்காட்டின் அடுத்த தாவல் தம் வீட்டுக்குள்ளாக இருக்குமோ என்னும் கலக்கம் எல்லாரிடத்திலும் இருந்தது. பொழுது சாய்ந்த வேளையில் நடந்ததால் ஒரு எட்டில் போய் விசாரித்துவிட்டு வரலாம் என்று அந்த முன்னிரவிலேயே கையில் லாந்தரை எடுத்துக்கொண்டு போனார்கள். பாவாயியின் விரிந்த தலையும் அழுத கண்

பத்தி
கண்ணன்  

முள்ளி வாய்க்கால் 2008ஆம் ஆண்டு ஜூலை முதல் வாரம் கவிஞர் தீபச்செல்வனைத் தொடர்புகொண்டேன். அந்த வாரம் தி இந்துவில் என். ராம் இலங்கை வவுனியாவில் இருக்கும் முகாம்களுக்குச் சென்றுவிட்டு அதை uplifting experience (மேன்மையான அனுபவம்) என்று எழுதியிருந்தார். எனக்கு மிகுந்த எரிச்சலைத் தந்தது இந்தக் கட்டுரை. தி இந்துவின் இலங்கைத் தமிழர் தொடர்பான 20 ஆண்டுக்கால மன்னிக்க முடியாத அநீதிகளின் முத்தாய்ப்பு இந்தப் பதிவு. இலங்கை முகாம்களின் நிலை பற்றிய அசலான பதிவைக் காலச்சுவடில் வெளியிட நினைத்தேன். தீபனிடம் ‘முகாமிலிருக்கும் ஒருவரிடமிருந்து முகாம் நிலை பற்றிய பதிவைப் பெற முடியுமா?’ என்றும் ‘கருணாகரன் இப்போது எங்கே இருக்கிறார்?’ என்றும் கேட்டேன். ‘கருணாகரனிடம் கேட்கலா

 

எம். ரிஷான் ஷெரீப் கவிதைகள் சக்தி ஜோதி கவிதைகள் தேவதேவன் கவிதைகள்

கட்டுரை
பக்தவத்சல பாரதி  

இரண்டாயிரத்து ஒன்பது நவம்பரில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் செல்ல நேர்ந்தது. அங்கு இரண்டு வாரங்கள் தங்கிச் சமூகவியல் துறையில் பயிற்றுவிக்கவும் கூடவே பேராசிரியர் கைலாசபதி நினைவுப் பேருரை ஆற்றவும் அழைக்கப்பட்டிருந்தேன். இலங்கையின் உலகப் புகழ்பெற்ற மானிடவியல் அறிஞர் கணநாத் ஒபயசேகராவின் தலைமாணாக்கர் பேராசிரியர், கலாநிதி என். சண்முகலிங்கன் அங்குத் துணை வேந்தராக இருந்து என்னை அழைத்தார். அந்தப் பயணத்தின்போது யாழ்குடா நாட்டின் சமூகத்தையும் பண்பாட்டையும் பற்றி நான் தெரிந்துகொண்டவை ஏராளம். எனது நினைவுக் குறிப்புகளிலிருந்து சிலவற்றை இங்குப் பதிவுசெய்ய விரும்புகிறேன். 1 இலங்கையின் சமூக, சமய, மொழி, பண்பாட்டு உருவாக்கம் மிகவும் சிக்கலானது. அதை இனச்சார்பற்ற நிலையில் அறிவுபூர்வமாகவே அணுக

கட்டுரை
பூமா ஈஸ்வரமூர்த்தி  

பத்து அல்லது பதினோரு வயதிற்குள்ளேயே பூக்களும் பூக்களை விற்பவர்களும் எனக்கு அறிமுகம். சைவம் சார்ந்த நடுத்தரக் குடும்பத்தில் ஆணிவேராக உள்ள நம்பிக்கையால் கடவுளின் பிரதிபிம்பங்களும் அவற்றுக்கான வழிபாடுகளும் கடவுள் மறுப்பும்கூட இயல்பானதே. அடர்சிவப்பில் செம் பருத்தியும் தளுதளுக்கும் மஞ்சள் நிறத்தில் தங்கரளிப்பூக்களும் (தங்கரளிப்பூக்களில் இன்றும் குழந்தைகள் தேன் உறிஞ்சுகிறார்கள்) எளிய சுபாவமுள்ள சங்குப் புஷ்பங்களும் மௌனம் மிக்க நந்தியாவட்டைப் பூக்களுமே என் முதற்பூக்கள். மாலைநேரத்தில் விளக்குச்சரம் கொண்டுவரும் பெண்ணே நான் அறிந்த முதல் பூ வியாபாரி. (என் அம்மாவின் சிநேகிதிகளின் வட்டத்தில் இவளுக்கென்று தனியிடம் உண்டு.) மார்கழிமாதம் வாசலில் சாணத்தில் செருகிவைக்கும் பூக்கள் பரவசம். அத

செர்பியச் சிறுகதை
 

டேவிட் அல்பாஹரி (David Albahari - 1948) செர்பிய எழுத்தாளரான டேவிட் அல்பாஹரி கொஸாவோ பிரதேசத்தைச் சேர்ந்த யூத மரபில் பெஜ் நகரத்தில் பிறந்தார். பெல்கிரேட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றார். யூகோஸ்லாவியாவிலிருந்து புலம்பெயர்ந்த யூதர்களுக்கான மறுவாழ்வுப் பணிகளில் ஈடுபாடுகொண்டவர். தற்போது கனடாவில் வசிக்கிறார். டேவிட் அல்பாஹரி செர்பிய மொழியில் குறிப்பிடத் தகுந்த சிறுகதைகளும் பத்துக்கு மேற்பட்ட நாவல்களும் எழுதியிருக்கிறார். ஆங்கிலத்திலுள்ள முக்கிய நூல்களை செர்பிய மொழியாக்கம் செய்திருக்கிறார். அவரது ஆறு நூல்கள் ஆங்கில மொழிபெயர்ப்பில் வெளியாகியுள்ளன. ‘லியோன் பேராலயம்’ (The Basilica in Lyon) சிறுகதை எல்லன் எலியாஸ் புர்சாஜின் மொழியாக்கத்தில் அலெக்சாண்டர் ஹேமன் பதிப்பித்

 

4.09.99 அன்புள்ள லக்ஷ்மி, உங்கள் 18.08.99 கடிதம் கிடைத்தது. முதலில் புதுமைப்பித்தனைப் பற்றிச் சில விஷயங்கள்: ‘துன்பக்கேணி’ சிறந்த கதைதான். மேல் ஜாதியினர் கீழ் ஜாதியினருக்கு இழைக்கும் கொடுமை அக்கதையில் பதிவாகியிருக்கும் விதம், பதினெட்டு வயதளவில் நான் படித்தபோது எனக்கு மிகுந்த அதிர்ச்சியைத் தந்தது. சக மனிதனை/மனுஷியை ‘மூதி’ என்று கூப்பிட முடியும் என்று என்னால் நம்பவே முடியவில்லை. சுமார் 65 வருடங்களுக்கு முன்னால் புதுமைப்பித்தன் தன் ஜாதியினரின் ஜாதிக் கொடுமையை - பழக்கமாகிவிட்டதில் அக்கொடுமை முற்றாக அழிந்துபோய்விட்ட அவலத்தை - சகஜமாகச் சொல்லிவிடுகிறார். வெளிப்படுத்தும் விதத்திலுள்ள சகஜம்தான் நம்மை அதிக அதிர்ச்சிக்கு ஆளாக்குகிறது. (பு. பி. கதைகளில் அவருடை

சு.ரா. 80
சோ. பூமிநாதன்  

ஜூன் 3, 4, 5இல் காலச்சுவடு நடத்திய சுந்தர ராமசாமியின் 80ஆம் ஆண்டு நினைவுவிழாக் கருத்தரங்கில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. கவிதை வாசிப்பு, விமர்சனங்கள், நாடகங்கள் ஆகியன அதன் நிகழ்வுகள். சுந்தர ராமசாமியின் ‘எந்திரத் துடைப்பான்’, ‘பல்லக்குத் தூக்கிகள்’ ஆகிய சிறுகதைகளைப் பரீக்ஷா மேடையேற்றியது. பரீக்ஷா நாடகக்குழு சென்னையை மையமாகக் கொண்டு 33 வருடங்களாக இயங்கிவரும் நவீன நாடகக்குழு. இதன் இயக்குநர் ஞாநி பத்திரிகையாளர், நாடக இயக்குநர். ‘எந்திரத் துடைப்பான்’ நாடகம் கருத்தரங்கின் முதல்நாள் பிற்பகல் 2:45 மணியளவில் மேடையேற்றம் செய்யப்பட்டது. சாமியாருக்கும் எந்திரத்துடைப்பான்விற்கும் பிரதிநிதிக்குமிடையில் நடை பெறும் காட்சிகளே இந்நாடகம். அரங்கத்தில்

நாடகப் பதிவு
கி. பார்த்திபராஜா  

ரோமானியப் பேரரசின் பெருமை மிக்க ஆட்சிக்காலத்தில் விலங்குகளைவிடக் கேவலமாக நடத்தப்பட்ட அடிமைகளிலிருந்து முளைத்து எழுந்தவன் ஸ்பார்டகஸ். கிறித்து பிறப்பதற்கு முந்தைய எழுபத்தோராம் ஆண்டில் ரோமானிய அடிமைகளின் உரிமையாளர்களுக்கு எதிராக முதன்முதலில் தலைநிமிர்த்தி, கரம் உயர்த்திக் குரல் கொடுத்தவன் அவன். வாய்திறக்கவும் உரிமையற்றிருந்த அடிமைகளைத் திரட்டிய எழுச்சியின் நாயகனாக வரலாறு அவனை வரவுவைத்திருக்கிறது. சந்தையில் ஆடு மாடுகளைப் போல விலைக்கு வாங்கப்பட்டு உயிர்போகும்வரை முரட்டுத்தனமாக உழைக்க நிர்ப்பந்திக்கப்பட்ட அடிமைகள் கலகம் செய்த வரலாற்றுக் காலப் பகுதியின் உணர்ச்சிகரமான உந்துசக்தியாக அமைந்த ஸ்பார்டகஸ் அடிமை, கிளாடியேட்டர். பிரபு குலத்தினர், உயர்குடியினர் கூடியுள்ள அரங்கில் ஓர் அட

பதிவு: அற்றைத் திங்கள், மதுரை 21.8.2011
எஸ். செந்தில்குமார்  

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ், கடவு ஆகியவற்றுடன் காலச்சுவடு மாத இதழ் இணைந்து நடத்தும் அற்றைத் திங்கள் நிகழ்வில் மாதந்தோறும் சிறப்புரையாற்றும் ஆளுமைகளின் வரிசையில் ஆகஸ்ட் மாதம் எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் கலந்துகொண்டு உரையாற்றினார். மதுரை இந்திய மருத்துவக் கழக அரங்கில் இந்நிகழ்வு நடைபெற்றது. ஐம்பதுக்கும் மேற்பட்ட பார்வையாளர்களோடு கவிஞர்கள் சமயவேல், கலாப்ரியா, எழுத்தாளர்கள் சுரேஷ் குமார இந்திரஜித், சோ. தர்மன், கல்லூரி பேராசியர்கள், மாணவர்கள் ஆகியோரும் கலந்துகொண்டனர். ஸ்டாலின் ராஜாங்கம் வரவேற்புரையுடன் பா. செயப்பிரகாசத்தைப் பற்றிய அறிமுக உரையையும் நிகழ்த்தினார். பா. செயப்பிரகாசம் தன் உரையை மூன்று பகுதிகளாக முன்வைத்தார். முதலில் தன் பால்ய கால அனுபவம். இந்தி எதிர்ப்புக் காலத்தில் தன

பதிவு: மீரா நினைவு - நவீன இலக்கிய அரங்கம், சேலம், 13-14.8.2011
ஆனந்த்  

ஆகஸ்ட் 13, 14 நாட்களில் சேலம் தமிழ்ச் சங்கம் நடத்திய ‘கவிஞர் மீரா நினைவு - நவீன இலக்கிய அரங்கம்’ தமிழ் இலக்கியப் பரப்பில் புதியதொரு மைல்கல்லாக அமைந்தது. முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு மாணவ மாணவியர் பெருமளவில் கலந்துகொண்ட நிகழ்ச்சியாகவும் அமைந்தது. கல்விப் புலத்தில் தம் கவிதைகள் மூலமாக நன்கு அறியப்பட்டவரும் நூல் வெளியீட்டில் புதுமைகளைச் செய்தவருமான மீராவின் நினைவைப் போற்றும் விதத்தில் அவர் பெயரால் அமைந்த அரங்கில் ஏறக்குறைய நானூற்றுக்கும் மேற்பட்ட இளைய தலைமுறையினர் கலந்துகொண்டு சிறப்பித்த நிகழ்ச்சி இது. பொதுவாக அரசியல் பிரமுகர்களை இலக்கியவாதிகளென முன்வைக்கும் தமிழ்ச் சங்கங்களின் பாரம்பரியத்தை விட்டுப் பெருமளவுக்கு விலகி, புதியதொரு திசையில் சேலம் தமிழ்ச் சங்கம்

பதிவு: வேலூர் இலக்கியப் பேரவை, வேலூர், 17.09.2011
செவ்வேள்  

வேலூர் இலக்கியப் பேரவையும் ஆழி பதிப்பகமும் இணைந்து இரண்டாம் ஆண்டாக வேலூர் கோட்டை மைதானத்தில் 8.9.11 முதல் 18.9.11 வரை புத்தகக் கண்காட்சியை நடத்தின. அதையொட்டி இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் வேலூர் இலக்கியப் பேரவை விருது ஒன்றை வழங்குகிறது. தமிழ் மொழிக்கு வளம் சேர்க்கும் வகையில் செயல்பட்டு வரும் படைப்பாளர், அறிஞர்களில் ஒருவரைத் தேர்வுசெய்து அவருக்கு ரூபாய் ஐம்பதாயிரம் வழங்குவது இவ்விருதாகும். முதல் ஆண்டாகிய இவ்வாண்டு விருதுக்குத் தேர்வு செய்யப்பட்டவர் பேராசிரியர் ம. இலெ. தங்கப்பா ஆவார். அழகியபெரியவன், செ. ச. செந்தில்நாதன், ச. சிவகுமார், அருள் ஜோதி அரசன் ஆகியோர் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்தனர். நெல்லை மாவட்டத்தில் பிறந்த ம. இலெ. தங்கப்பா புதுச்சேரி அரசு கலைக்கல்லூரிகளில் தமி

மண்குதிரை  

படப்பெட்டி மாற்று சினிமாவுக்கான களமாக வந்துகொண்டிருந்த படப்பெட்டி நீண்ட இடைவேளைக்குப் பிறகு தன்னைப் புதுப்பித்துக்கொண்டு வெளிவந்திருப்பது நம்பிக்கையளிக்கிறது. டிராட்ஸ்கி மருதுவின் எழுத்தில் அறிமுகமாகும், புகைப்படக் கலையை வாழ்வின் விருப்பமாகக்கொண்டிருந்த விவியன் மையர் சுவாரசியமளிக்கிறார். நாற்பதுகளிலே ஹாலிவுட்டில் தடம்பதித்த சாபுதஸ்தகீர் என்னும் இந்தியரைப் பற்றி எஸ். ராமகிருஷ்ணனின் கட்டுரை மூலம் அறிய முடிகிறது. புலிகளின் சினிமா முயற்சிகள் பற்றிய சோமிதரனின் கட்டுரை முக்கியமான முதற்பதிவு. தனித்துவமான சினிமா ஆளுமை தார்க்கோவ்ஸ்கியின் கட்டுரை ஒன்றைச் செழியன் மொழிபெயர்த்திருக்கிறார். ஆரண்ய காண்டத்தை மாமல்லன் கார்த்தி பிரத்யேகமான சொற்களைக்கொண்டு ஆராய்ந்திருக்கிறார். இன்னும் பல ஆக்

மதிப்புரை
மண்குதிரை  

ஜீ. சௌந்தரராஜனின் கதை ஆசிரியர்: எஸ். செந்தில்குமார் பக். 152. விலை ரூ. 90 (2007) வெளியீடு உயிர்மை பதிப்பகம் 11/29, சுப்பிரமணியம் தெரு அபிராமபுரம், சென்னை-18 நூற்றாண்டைக் கடந்துவிட்ட தமிழ் எழுத்து அதன் பரவசங்களிலிருந்தும் அமைப்புகளுக்காக உருவாக்கப்பட்ட விழுமியங்களிலிருந்தும் இப்புதிய தலைமுறை எழுத்தாளர்களால்தாம் மீண்டுகொண்டிருக்கிறது. முதல் தலைமுறைக் கதைகளுக்குள் வாசக வெளியையும் ஆக்கிரமித்தமர்ந்திருந்த ஸ்திரமான கதை சொல்லி இன்றைய கதைகளுக்குள் இல்லை. அதற்குப் பிறகு வந்தவர்கள் மேற்கின் சித்தாந்தங்களையும் உலக இலக்கியத்தையும் உள்வாங்கிக்கொண்டு தமிழின் நவீன மொழியைச் செறிவாக்கினர். அவர்களுள் சிலர் இங்குள்ள கதைகளையும் காப்பியங்களையும் மீள்புனைவுக்குட்படுத்தினர். சிலர் வரலாற்றுத்

ஸ்டாலின் ராஜாங்கம்  

ஆகஸ்ட் மாதம் மதுரையில் ‘ஊழல் எதிர்ப்புக்காகத் தீபமேந்தி போராட்டம்’ என்னும் சுவரொட்டி ஒட்டப்பட்டிருந்தது. போராட்டத்தை நடத்தும் கட்சிகளென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆகியவற்றோடு பார்வார்டு பிளாக் கட்சியும் சொல்லப்பட்டிருந்தது. இயக்கமொன்று இடத்திற்கேற்ப, காலத்திற்கேற்ப வெவ்வேறு அடையாளங்களைப் பெற்றுவிடுவதுண்டு. தமிழ்நாட்டில் பார்வார்டு பிளாக் கட்சி மதுரைப் பகுதியில் மட்டுமே உண்டு. காங்கிரசுக்கு எதிராக முத்துராமலிங்கத்தேவர் பார்வார்டு பிளாக் கட்சியை ஆதரித்ததால், அக்கட்சி அவர் சார்ந்த சாதியின் கட்சியாகிவிட்டது. இப்போதிருக்கும் கட்சியினரில் பலருக்கு அது இடதுசாரிக் கண்ணோட்டமுடைய கட்சி என்பதே தெரியாது. அப்படித்தான் அக்கட்சி வளர்க்கப்பட்டு

தலையங்கம்
 

சாதியாதிக்கத்திற்கு எதிராகப் போராடியதால் 1957இல் கொல்லப்பட்ட இமானுவேல் சேகரனின் நினைவிடம் அமைந்துள்ள பரமக்குடியில் அவரது நினைவு நாளான கடந்த செப்டம்பர் 11ஆம் நாள் ஏராளமான தலித் மக்கள் அஞ்சலி செலுத்தத் திரளவிருந்த நிலையில் காவல் துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஆறு பேர் வரை இறந்துள்ளனர். இறந்தோர், காயமடைந்தோர் எண்ணிக்கையைச் சரியாகச் சொல்ல முடியாத அளவிற்கு இத்தாக்குதல் கடுமையானதாக இருந்திருக்கிறது. அத்துடன் துப்பாக்கிச் சூடு நடந்த காலை 11 மணிக்குப் பின்னரும் மாலை 5 மணி வரை காவல் துறையினர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். சாதுரியமாகக் கையாண்டிருக்கக்கூடிய பிரச்சினையைத் தவறாகக் கையாண்ட காவல் துறையினரால்தான் இந்த வன்முறை நடந்திருப்பதாக இப்பிரச்சினை குறித்த ஆய்வுகள் தெரிவிக்கின்

 

காலச்சுவடு செப்டம்பர் 2011 இதழில் ‘தனிமனித உரிமையை நிலைநாட்டிய தீர்ப்பு’ என்னும் தலைப்பிலான களந்தை பீர்முகம்மதுவின் எழுத்துப் பதிவு மிகவும் நியாய பூர்வமாக அமைந்திருந்தது. ஒரு படைப்பாளியின் வலியைத் தனது வலியாக உணர்ந்து எழுதியதாக உணர்கிறேன். சிறுபான்மை முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவும் அதிகாரத்தின் வன்மத்தை வாசகர்களின் கவனத்திற்குக் கொண்டுவந்த காலச்சுவடுக்குப் பாதிக்கப்பட்டவன் என்ற நிலையிலிருந்து உள்ளபடியே நன்றி கூறிக்கொள்கிறேன். இப்பிரச்சினை குறித்து இன்னும் சில கூடுதலான தகவல்களைப் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். பத்மநாபபுரம் உரிமையியல் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகு தக்கலையில் நடைபெற்ற சூபிஞானி பீரப்பா விழாவில் நானும் என் குடும்பமும் கலந்துகொள்வதைத் தடுக்கும் நோக்

உள்ளடக்கம்