கட்டுரை
 

இது அமெரிக்காவின் முறை, ஆம் இது அமெரிக்காவின் வசந்த காலம். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வட ஆப்பிரிக்க நாடான டுனீசியாவில் தொடங்கி எகிப்து, லிபியா, பஹ்ரைன், சிரியா, ஏமன் எனப் பரவிய அரேபிய வசந்த காலத்தைத் தொடர்ந்து இந்தியாவின் வசந்த காலம் அண்ணா ஹஜாரே வடிவில் வந்தது. வட ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு ஆகிய நாடுகளில் எழுந்த மாபெரும் மக்கள் போராட்டங்களைப் போன்ற ஒன்று தனது நாட்டிலும் உருவாகுமென்று அமெரிக்கா எதிர்பார்த்திருக்காது. ஒருவகையில் மக்கள் போராட்டங்களும் புரட்சிகளும் கோடை மழையைப் போன்றவை, எப்போது வரும் என்று சொல்ல முடியாது. எந்தப் பொறி பெரும் காட்டுத் தீ உருவாகக் காரணமாக இருக்கும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. இதன் காரணமாகவே, பெரும் அமைப்புகளாலும் கட்சிகளாலும் தெளிவான கோரிக்

கட்டுரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

(பாப்பாபட்டி, கீரிப்பட்டி ஊராட்சிகளின் ஐந்தாண்டுக் கால அனுபவமும் தற்போதைய உள்ளாட்சித் தேர்தல் நிலைமையும்) உசிலம்பட்டியிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தபோது வழியில் பாப்பாபட்டியைப் பார்த்துச் செல்லலாம் என்ற எண்ணம் தோன்றியது. பாப்பாபட்டி பஞ்சாயத்துத் தலைவர் பெரிய கருப்பன் வீட்டில் இல்லாததால் பொழுது மறையத் தொடங்கியிருந்த சமயத்தில் பஞ்சாயத்து அலுவலகத்தைச் சென்றடைந்தோம். இரண்டு அறைகள் கொண்ட அலுவலகத்தில் ஒன்றில் மரவேலை நடந்துகொண்டிருந்தது. உள்ளேயும் வெளியேயும் ஆட்கள். பஞ்சாயத்துத் தலைவரைப் பார்க்கணும் என்று சொன்னதும் “ஹேய் பிரசண்டு ஒன்னப் பாக்கணும்மா” என்று சத்தமிட்டார் அவரைவிட வயது குறைந்த இளைஞர் ஒருவர். நாங்கள் சென்ற வாகனம், எங்களின் தோற்றம், கேமரா ஆகியவற்றைப் பார்த்தத

கட்டுரை
மண்குதிரை  

அணு உலை வெடித்துக் கண்ணுக்குப் புலப்படாத கதிர்கள் காற்றிலேறி வருகின்றன. அபாய ஒலியைக் கேட்ட பெரும் மக்கள்திரள் வெளியேறிக்கொண்டிருக்கிறது. கூட்டத்தினிடையே தத்தளிக்கும் குடும்பத்தினருகே காட்சி மாறுகிறது. அதன் தலைவன் புகையாக வடிவமடைந்து வெளியேறும் அக்கதிர்களைக் காண்கிறான். அதனிடமிருந்து தன் குழந்தைகளைக் காப்பதற்காக மேலாடையைக் களைந்து அக்கதிர்களை அகற்ற முயன்று இயலாமையில் திணறித் தோற்றுக்கொண்டிருக்கிறான். “அணுமின் நிலையம் பாதுகாப்பானதென்று சொன்னவர்கள் தூக்கிலிடப்படவில்லை என்றால் அவர்கள் ஒவ்வொருவரையும் நானே கொல்வேன்’’ எனத் தன் குழந்தைகளைக் காப்பாற்றப் போராடும் குடும்பத் தலைவியின் குரல் ஒலிக்கும் அகிரா குரசோவாவின் புகழ்பெற்ற திரைப்படமான ட்ரீம்ஸ்இன் காட்சியை இச்சூழல

கட்டுரை
ஜே. ஆர். வி. எட்வர்ட்  

1980களின் பிற்பகுதியில் நடந்த கல்லூரி ஆசிரியர்களுக்கான பயிற்சிமுகாம் ஒன்று இத்தருணத்தில் என் நினைவுக்கு வருகிறது. நான் பணியில் சேர்ந்து அப்போது இரண்டு ஆண்டுகளே ஆகியிருந்தது. நான் பயின்ற கல்லூரியில் பணியாற்றிய, நான் பெருமளவு மதிப்பு வைத்திருந்த பேராசிரியர் ஒருவர் பன்னாட்டு நிறுவனங்கள் நம் நாட்டில் நுழைய அனுமதிக்கப்பட்டால் ஏற்படும் விளைவுகள், அபாயங்கள் மற்றும் அவற்றின் சுரண்டல்கள் குறித்தெல்லாம் அம்முகாமில் தெளிவாகவும் விரிவாகவும் பேசினார். சமூக உணர்வு மிக்க செயல்பாட்டாளர் அவர். பன்னாட்டு நிறுவனங்களுக்கு அப்போது அதிக அளவில் இந்தியாவில் இடம் இல்லாதிருந்தது. ஆனால், ‘உலகமயமாதல்’ என்னும் பெயரில், அவை இங்கே கடைவிரிப்பதற்கு வசதிகள் செய்துகொடுப்பதில் ஆர்வமாயிருந்தது மத்தி

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

கிரேக்கத் தத்துவ ஞானி பிளேட்டோ கனவு கண்ட அந்த லட்சியக் குடியரசில் அவர் கவிஞர்களுக்கு இடம் தரவில்லை. ஆனால் நிஜக் குடியரசுகளை நிறுவிய சர்வாதிகாரிகள் தங்களைக் கவிஞர்களாகவும் கதாசிரியர்களாகவும் ஆக்கிக்கொள்ள முயன்றிருக்கிறார்கள். அல்பேனியாவின் Enver Hoxha முதல் ருஷ்யாவின் Vladimir Lenin வரை இலக்கியம் படைத்திருக்கிறார்கள். இந்தச் சர்வாதிகாரிகளில் மிகப் பெரிய இலக்கியச் சாதனை புரிந்தவர் வடகொரியாவின் Kim Jong II. கடைசிக் கணக்குப் படி இவர் 1,500 புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார். இவர் கைவைக்காத விஷயங்களே இல்லை. Opera பற்றியும் இவர் எழுதியிருக்கிறார். ‘காதல் இலக்கியம்’, ‘புனைவியல்வாத இலக்கியம்’, ‘கொலை இலக்கியம்’, ‘பெண்னிய இலக்கியம்’ போ

 

அய்யப்பமாதவன் வசன கவிதைகள் ஹெச். ஜி. ரசூல் கவிதைகள்

சிறுகதை
அ.முத்துலிங்கம்  

அவனுடைய பெயர் என்னவென்று யாராவது கேட்டால் அவன் ‘மார்ட்டென்’ என்றே சொன்னான். அது பிலிப்பினோ பெயர். ஆனால் அவர்கள் அழைக்கும்போது ‘மார்ட்டின்’ என்றே அழைத்தார்கள். ஒன்றிரண்டுமுறை தவறைச் சுட்டிக் காட்டினான். பின்னர் திருத்துவது அலுத்துப்போய் அவனும் தன் பெயரை மார்ட்டின் என்று சொல்லத் தொடங்கியிருந்தான். ஒரு வருடத்திற்கு முன்னர் பழைய சந்தையில் வாங்கிய கோட்டை அணிந்திருந்தான். வயது ஏறும்போது கோட்டும் வளரும் என்று எண்ணினானோ என்னவோ அது அவன் உடம்பைத் தோல்போல இறுக்கிப் பிடித்துக்கொண்டது. விளிம்புவைத்த வட்டத் தொப்பி ஒன்றைத் தரித்திருந்தான். சாமான்கள் நிரம்பிய முதுகுப்பை பாரமாகத் தொங்கியது. லராமி ஆற்றை ஒட்டிய பாதையில் நடந்து போனால் மார்க் ஓகொன்னருடைய பண்ணை வரும் என்று

குறிப்பு
சுகுமாரன்  

‘நான் யார்? பின் இருக்கையில் விழித்து பதற்றத்துடன் முறுக்கிக் கொள்ளும் சாக்குப் பைக்குள்ளிருக்கும் பூனையைப் போன்ற ஏதோ ஒன்று. யாராம்?’. . . ஸ்வீடிஷ் மொழியில் எழுதும் ஸ்காண்டிநேவியக் கவிஞரான தாமஸ் ட்ரான்ஸ்ட்ரோமர் ஊடகங்களில் பேசப்படுவதும் கவிதை வாசகர்களால் மறுவாசிப்புச் செய்யப்படுவதும் இலக்கிய வட்டாரங்கள் அவரை முன்னிருத்தி உரையாட முற்படுவதும் இரண்டாம் முறையாக நிகழ்கிறது. சென்றமுறை அவர் பேசு பொருளாக இருந்ததும் இம்முறை இருப்பதும் நோபெல் இலக்கியப் பரிசுத் தருணங்களால். 2008ஆம் ஆண்டு நோபெல் இலக்கியப் பரிசுக்குரிய போட்டியாளர்களின் இறுதிப் பட்டியலில் இருந்தவர்களில் இருவர் கவிஞர்கள். சிரியாவைச் சேர்ந்த அடோனிஸும் ஸ்வீடனைச் சேர்ந்த ட்ரான்ஸ்ட்ரோமரும். இருவரில் ட்ரான்ஸ்ட்ர

சிறுகதை
 

மகாசன்னிதானம் இதற்கு முன்பும் தோல்விகளைச் சந்தித்திருக்கிறார். விழுந்த வேகத்தில் எழுந்துமிருக்கிறார். இம் முறை மனமல்லவோ விழுந்திருக்கிறது. இனி கற்பதற்கு எதுவுமில்லையென இறுமாந்திருந்தபோது, மிகப்பெரிய பாடத்தை வாழ்க்கை போதித்திருக்கிறது. குடும்ப வாழ்க்கையிலும் நெளிவு சுளிவுகளை உணர்ந்து, நுகத்தடியில் எருதுகளை வலம் இடம் அறிந்து பூட்டியவர் இப்போது சாட்டையைக் கையிலெடுக்கப் பயம். சாட்டையைக் கையிலெடுத்துப் பழகிய கைக்குச் சோர்வு ஒருபக்கமெனில் ஓங்கிய கையைத் தடுத்து ஓரிரு வார்த்தைகளை இவருக்கு எதிராக உதிர்த்தாலும் போதும், உடல் கூசிப்போகும். குருபீடத்திலிருத்து இவர் இறக்கப்பட்டது குறித்த கவலைகளோடு வாரிசுகளின் பார்வையில் தெறிக்கிற கோபமும் துச்சமும் வேறு கழுத்தை அன்றாடம் நெறிக்கின்றன. எல்ல

 

20.08.98 அன்புள்ள யேசு, வணக்கம். உங்கள் 30.07.98 கடிதம் கிடைத்தது. நான் 6ஆம் தேதி புதுதில்லி போய்விட்டு 16ஆம் தேதிதான் திரும்ப வந்தேன். ஐம்பதாவது இந்திய சுதந்திர தினவிழாவை ஒட்டி தில்லியில் சாகித்ய அகாதெமியினர், அனைத்திந்தியக் கவிஞர்கள் 50 பேர்களை அழைத்து கவிதை வாசிப்பு, கருத்தரங்குக் கூட்டம் நடத்தினர். இவை மூன்று நாட்கள் நடந்தன. தில்லியில் என் இளைய சகோதரி இருக்கிறாள். அவளுடன் ஒரு வாரம் இருந்தேன். அத்துடன் அங்கு எனக்குப் பத்துப் பதினைந்து தமிழ் நண்பர்கள் இருக்கிறார்கள். எல்லோரையும் ஒரு சுற்றுப் பார்த்தேன். திருவனந்தபுரத்தில் உங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினையை விட்டுவிட்டால் மற்றபடி நீங்கள் சௌகரியமாகப் போய்ச் சேர்ந்திருக்கிறீர்கள் என்றுபட்டது. இந்திய அலுவலகங்களில்தான் மீண்டும் ம

கட்டுரை
 

வரலாற்றில் அதிகமாகத் தண்டனைகள் வழங்கப்பட்ட பூமியை அணைத்தபடி ஏ9 வீதி சாய்ந்திருக்கிறது. பாரிய கலவரமொன்றில் யுத்த டாங்கிகளாலும் கனரக வாகனங்களாலும் துளைக்கப்பட்ட காயங்கள் எக்கணத்திலும் மீண்டும் கிளரப்பட இடமிருக்கிறதெனத் துப்பாக்கிகளும் பங்கர்களும் இராணுவ முகாம்களும் எதிர்வு கூறுகின்றன. முட்புதர்களிடையே ஒளிந்திருக்கும் நிலக்கண்ணி வெடிகள் குறைந்தபட்சம் ஒரு பனங்காயாவது தனது உடலின் மீது விழும்வரை காத்திருக்கின்றன. நாற்புறத்திலும் கேட்கும் சிங்களக் குரல்கள் ‘இம்முறை வந்திருப்பது விருந்தாளிகளாகவல்ல, நிரந்தரமாகத் தங்குவதற்கே’ எனக் கத்திச் சொல்கின்றன. ‘மனிதாபிமான நடவடிக்கை’யின் பின்னணியில் வந்திருக்கும் வியாபார நிறுவனங்கள், வாழ்க்கைப் போராட்டமானது இன்னும் முடிவு

கட்டுரை
தீபச்செல்வன்  

ஈழம் என்கிற தமிழர்களின் வாழ்நிலத்தில் இலங்கை இராணுவத்தினர் தொடங்கிய பூத நடவடிக்கை தற்போது தோல்வி அடைந்துள்ளது. உலகத்தின் எந்த மக்களும் பார்த்திருக்காத பூதங்களை ஈழத்து மக்கள் எதிர்கொண்டிருக்கிறார்கள். ஈழத்தில் கடந்த மூன்று மாதங்களாகப் பூதங்கள் தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தித் தமிழ் பேசும் மக்களை அச்சம் மிகுந்த வாழ்க்கைக்குள் தள்ளியிருந்தன. இலங்கை - ஈழ அரசியலின் முரண்பாட்டு ஆயுதமாகவும் போராடும் மக்களின் மன நிலைகளைக் குழப்பிச் சிதைக்கும் உளவியல் கருவியாகவும் அச்சம் மிகுந்த வாழ்க்கைக்குள் தள்ளுவனாகவும் பூதப்படை நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன. மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உலகின் பல்வேறு மூலைகளிலிருந்தும் கேள்வி எழுப்பப்படும் நிலையில் இலங்கை அரசாங்கம் இந்தப் பூதங்களை உருவாக்க

கட்டுரை
பூமா சனத்குமார்  

வங்காள தேசத்திற்கு இரண்டு நாட்கள் (செப்டம்பர் 6-7) பயணமாகச் சென்ற இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் அந்நாட்டுப் பிரதமர் ஷேக் ஹசீனாவுடன் (வங்காளத்தின் தந்தை எனப் போற்றப்படும் ஷேக் முஜ்புர் ரஹ்மானின் மகள்) கையெழுத்திட்ட ஒப்பந்தங்களை டாக்காவில் முதல் நாளன்று பரிமாறிக்கொண்டிருந்தார். ஷேக் ஹசீனா நிருபர்களிடம் அதை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது எனப் புகழ்ந்தார். அரசியல் அறிஞரும் வங்காளப் பிரதமரின் ஆலோசகருமான கோவர் ரிஜ்வி இந்த இருதரப்பு உறவைத் தெற்கு ஆசியாவிற்கே முன்மாதிரியெனக் கூறினார். இரண்டாம் நாளான புதன்கிழமையன்று நம் பிரதமர் “இந்தப் பயணம் உணர்வுபூர்வமானது” என நிருபர்களுக்குச் சொல்லிக்கொண்டிருந்த போதுதான் தில்லி உயர்நீதிமன்ற வளாகத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்துப

திறந்த வெளி
சீனிவாச கண்ணன்  

தமிழக வரலாற்றில் சங்கத்திலிருந்து நடந்த பல்வேறு நிகழ்வுகளை இலக்கியங்கள், கல்வெட்டுகள், வெளிநாட்டார் குறிப்புகள், அகழ்வாய்வுக் கண்டுபிடிப்புகள் ஆகியன உறுதிப்படுத்துகின்றன. ஆயினும் தமிழகத்திற்குப் புறத்தே நடந்த தமிழர் தொடர்பான நிகழ்வுகள் (போர், படையெடுப்பு, வெற்றி முதலியன) அனைத்திற்கும் சான்றுகள் கிடைக்கவில்லை. நம்முடைய அனைத்து இலக்கியங்களுக்கும் இத்தகைய உறுதிப்பாட்டுச் சான்றுகளை எதிர்பார்க்க வேண்டிய அவசியமும் இல்லை. பிற்காலச் சோழர்கள் தூரக்கிழக்கு நாடுகளுக்குக் கடல்வழிச் சென்றதை, அப்பகுதியில் கிடைக்கும் கல்வெட்டுகள், அப்பிரதேசத்தில் வழக்கில் இருக்கும் ஊர்ப்பெயர்கள் ஆகியன உறுதி செய்கின்றன. சிலப்பதிகாரத்தில் இடம்பெறும் வடநாட்டு வேந்தர்களான கனக விசயரை வென்றமைக்கு வடஇந்தியப் பகுத

திரை
செல்லப்பா  

திரைப்படம் வெளிவருவதற்கு முன்பு வெளியாகும் முன்னோட்டக் காட்சிகளும் ஊடகங்களில் கசியவிடப்படும் தகவல்களும் படம்மீதான பார்வையாளனின் கவனத்தைக் கோரி அவனைத் திரையரங்கிற்கு வரவழைக்கும் முயற்சிகளே. அவற்றை முழுவதுமாகப் புறக்கணித்துவிட்டு முன் அவதானிப்பு எதுவும் இன்றித் திரைப்படத்தை எதிர்கொள்வது சாத்தியமல்ல. களவாணி என்னும் பொழுது போக்குத் திரைப்படத்தின் மூலம் தனது திரைப் பயணத்தைத் தொடங்கியிருந்த இயக்குநர் சற்குணம் திரைப்படமாக்கலில் கடைப்பிடித்திருந்த செய்நேர்த்தியின் காரணமாக அவர்மீது கவனம் பதிந்திருந்தது. தன்மீது குவிந்த கவனத்தைக் கருத்தில்கொண்ட அவர் அதற்கான காரணத்தை உள்வாங்கிக்கொள்ளவில்லையோ என எண்ணவைத்துள்ளது வாகை சூட வா. இப்படத்தின் காட்சியமைப்புகள் 1966இல் நடப்பதாகச் சித்தரிக்கப

மதிப்புரை
கடற்கரய்  

நெஞ்சில் ஒளிரும் சுடர் ஆசிரியர்: கமலா ராமசாமி பக். 160. நன்கொடை:100 (2011) வெளியீடு காலச்சுவடு அறக்கட்டளை, 669 கே.பி.சாலை, நாகர்கோவில் 629001 சுயசரிதை பிரதிக்கென்று தற்கால தமிழ் இலக்கியத்தில் தனித் தேவை இருக்கிறது. 90களுக்குப் பிறகு இவ்வெற்றிடத்தை வேறுவகையில் தலித் புனைவிலக்கியங்கள் நிரப்ப ஆரம்பித்தன. இப் பிரதிகளுக்கு வரலாற்று அங்கீகாரத்தை வழங்குவதில் நடமுறைசார்ந்து சில சிக்கல்கள் உள்ளன. ஆகவே புனைவென்ற அர்த்தத்தில் மட்டுமே இவற்றை வரவேற்றோம். தமிழ் நினைவோடை வகை எழுத்துக்கும் சுயசரிதை வகை எழுத்துக்குமிடையில் சிறுகோடு ஒன்று வேறுபட்டுப் பிரிந்துசெல்கிறது. இரண்டிற்கும் பொதுப் பண்பு என எடுத்துக்கொண்டால், இவை இரண்டும் ஞாபகங்களைப் பிரதானமாக வைத்து எழுதப்படுகி

பதிவு
ச. அன்பு  

எழுத்தாளர் பாமா எழுதி, ஸ்ரீஜித் சுந்தரம் இயக்கி, ஒருங்கிணைத்த மொளகாப் பொடி என்னும் சமூக விழிப்புணர்வு நாடகம், கடந்த ஒன்பதாம் தேதி அன்று, மாலை 6:30 மணியளவில் செய்யாறு, ஆர். சி. எம். பள்ளி வளாகத்தில் பிரக்ஞை சமூகக் கலை இலக்கிய அமைப்பின் சார்பில் நிகழ்த்தப்பட்டது. இந்நிகழ்வில் எழுத்தாளர் பவா செல்லதுரை தலைமையேற்றுப் பேசினார். அவரைத் தொடர்ந்து ‘மொளகாப்பொடி’யின் கதையாசிரியரான பாமா அக்கதை உருவான சூழல் குறித்துப் பேசினார். இக்கதை பாமாவின் “ஒரு தாத்தாவும் எருமையும்” என்னும் சிறுகதைத் தொகுப்பில் இடம்பெற்றிருக்கிறது. கதையில் வரும் கெங்கம்மா கதாபாத்திரம் மூலம் சமூகத் தளத்தில் மேல்மட்டத்திலிருக்கும் நிலவுடைமையாளர்களது குணம் விளக்கப்படுகிறது. கெங்கம்மா ஊரையே அலைக்

பெருமாள்முருகன்  

மாவட்டத் தலைநகர் ஒன்றில் இரண்டாம் ஆண்டாக நடைபெற்ற புத்தகத் திருவிழாவிற்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது. பொதுவாகச் சில கடைகளுக்குள் உற்சாகமாகவும் சிலவற்றுக்குள் தயக்கத்தோடும் நுழைய வேண்டியிருக்கும். சில கடைகளைக் காணாததுபோல் நகர்ந்துவிடுவதுண்டு. இவற்றைத் தீர்மானிப்பவை அங்கே இருக்கும் புத்தகங்கள் அல்ல. ஆட்கள்தாம். பழைய இலக்கியங்களை வெளியிடும் பதிப்பகம் ஒன்றின் உரிமையாளர் எழுத்தாளரும்கூட. அவர் இருந்தால் உள்ளே நுழையாமல் ஓடிவிடுவேன். இந்தமுறை கூட்டம் குறைவாக இருந்த நேரத்தில் சென்றதால் அவரிடம் வசமாகச் சிக்கிக்கொண்டேன். காட்சிக்கு வைத்திருந்த புத்தகம் ஒன்றைக்கூட அவர் பார்க்கவிடவில்லை. தான் எழுதிய புத்தகங்களை ஒவ்வொன்றாக எடுத்து அதன் சிறப்புகளைச் சொல்லிக்கொண்டிருந்தார். சில பக்கங்க

தலையங்கம்
 

அக்டோபர் மூன்றாம் வாரம் நடைபெற்ற தமிழக உள்ளாட்சித் தேர்தல் வெற்றியின் மூலம் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பெற்ற வெற்றியைத் தக்க வைத்துக்கொண்டுள்ளது அஇஅதிமுக. நிலமோசடி வழக்குகளில் திமுக முன்னாள் அமைச்சர்கள், முன்னணித் தலைவர்கள்மீது அதிமுக அரசால் எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகளுக்காக இத்தேர்தலில் ஜெயலலிதா அரசுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்னும் மு. க. ஸ்டாலினின் கனவு பொய்த்துப் போயிருக்கிறது. திமுக முன்னாள் அமைச்சர்கள்மீதான நிலமோசடி வழக்குகளைக் கையாள்வதில் அரசு பழிவாங்கும் போக்குடன் நடந்துகொள்வதாக இக்கைது நடவடிக்கைகளை முன்வைத்து அனுதாபம் தேட முயன்ற திமுக பெரும் ஏமாற்றத்தைச் சந்தித்திருக்கிறது. கருணாநிதி முன்வைத்த குற்றச்சாட்டுகளை மக்கள் ஏற்கவில்லை என்பதை இத்தேர்தல் முடிவு

 

அக்டோபர் காலச்சுவடின் ‘அரசு இயந்திரத்தின் வன்முறை’ வரவேற்கத்தக்க தலையங்கம். ‘இடதுசாரிகளின் முன்னுள்ள சவால்’ இவ்விதழின் முக்கியமான கட்டுரை. அதன் இறுதிவரிகள் மனத்தில் கொள்ள வேண்டியவை. தூய புரட்சிக்காகக் காத்திருப்பதைவிட இந்தப் போராட்டங்களைத் தங்கள் பக்கம்வென்று எடுப்பதே, இடதுசாரிகள் செய்யக்கூடியதாக இருக்கும். மக்கள் இயக்கங்களை நம்பியிருக்கும் இடதுசாரிகள் இந்த இயக்கத்தை எள்ளி நகையாடுவதும் அதைப் புறக்கணிப்பதும் கண்ணாடி வீட்டிற்குள்ளிருந்து கல்லெறிவதைப் போன்றதெனக் கட்டுரையாளர் கூறுவது நாட்டு நலனில் அக்கறையுள்ள வரலாற்று ஆய்வாளர்களால், மக்களால் ஏற்கத்தக்கதாகும். இடதுசாரிகளின் இன்றைய நிலவரம் என்னவெனில் இந்தியாவில் இடதுசாரிகள் தனிநபர்களாகவும் குழுக்களாகவும