கட்டுரை
பா. செயப்பிரகாசம்  

உலகளவில் பூகம்ப வாய்ப்புள்ள பகுதிகள் ஒன்பது பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. பிரிவு நான்கிற்கு மேல் உள்ள பகுதிகள்தாம் பூகம்ப அபாயம் உடையவை. இந்திய நிலப்பகுதிகள் முதல் நான்கு பிரிவுகளில்தாம் உள்ளன. இரண்டு, மூன்று ஆகியவை குறைந்தபட்ச அபாயம் உள்ள பகுதிகளாகும். கூடங்குளம் அணு உலை பூகம்ப அபாயம் குறைந்த பிரிவு இரண்டில் வருவதால் இங்கு நில நடுக்கம் ஏற்பட வாய்ப்பில்லை. மேலும் அணு உலை அமைந்துள்ள இடம், கடல் மட்டத்திலிருந்து 13.5 மீட்டர் உயரத்திலுள்ளது. இதனால் பூகம்பம், சுனாமி ஆகியவற்றால் கூடங்குளம் அணு மின்நிலையத்துக்கு ஆபத்தில்லை. சப்பான் நாட்டில் அணு உலைகள் பிரிவு ஏழு, எட்டு, ஒன்பது ஆகிய பகுதிகளில் அமைந்துள்ளதால் பாதிக்கப்பட்டன. ஆனால் கூடங்குளம் அணுமின் நிலையம் நிலநடுக்கம், சுனாமி

கட்டுரை
செல்லப்பா  

எப்போதும்போல் மலர்ந்த அந்த நாள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத் (த. அ. ப. தே.) தலைவருக்கும் உறுப்பினர்களுக்கும் வழக்கமான நாளாக முற்றுப்பெறவில்லை. அவர்கள் புரிந்திருந்த ஊழல்களும் முறைகேடுகளும் கடந்த அக்டோபர் 14 அன்று வெளியுலகுக்குக் காட்சியாகத் தொடங்கியது. த. அ. ப. தே. தலைவர் ஆர். செல்லமுத்து, உறுப்பினர்கள் 13 பேர் ஆகியோர் வீடுகளிலும் அரசுப் பணியாளர் தேர்வாணையத்திலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் நிகழ்த்திய திடீர்ச் சோதனை பற்றிய தகவல் செய்தியாகத் தொலைக்காட்சி அலை வரிசைகளில் ஒளிபரப்பானதைக் கண்டபோது அரசுப் பணியாளர் தேர்வாணையத்தைப் பற்றி அறிந்திருந்தோர், பணி நியமனத்திற்கெனக் காத்திருந்தோர் மத்தியில் அதிர்ச்சி அலைகள் பரவத் தொடங்கின. லஞ்ச ஒழிப்பு இயக்குநர் மகேந்திரனின் தலைமையி

கட்டுரை
யதீந்திரா  

                                 எங்கே அது எம்மைக் கொண்டுசேர்க்கும்                                  என்றறியாமலே                                  இருளில் நாங்கள்        &nb

கட்டுரை
ஜெயன் தேவா  

பொதுமன்னிப்புக்கான இறுதி இரங்கல் கோரிக்கையும் இந்தோனேசிய ஜனாதிபதியால் நிராகரிக்கப்பட்டு விட்ட நிலையில் எதிர்வரும் சில வாரங்களுள் ஒரு நாளில் பாலித் தீவில் உள்ள மனித நடமாட்டம் தடைசெய்யப்பட்ட கடற்கரையொன்றில் மயூரன் சுகுமாரன், அண்ட்றூ சான் ஆகிய இருவரும் இதயப் பகுதியில் சிவப்பு நிறத்தில் துப்பாக்கியால் சுடுவதற்கான இலக்கு வரையப்பட்ட வெள்ளை நிற மேலாடைகள் அணிவிக்கப்பட்டுத் தனித்தனிக் கம்பங்களுடன் சேர்த்துக் கைகள் விலங்கிடப்பட்ட நிலையில், பன்னிரு துணை இராணுவ பொலிசார் பத்து மீற்றர் தூரத்தில் வைத்துத் தமது துப்பாக்கிகளை இயக்குவதன் மூலம், அவ்விருவருக்குமான மரண தண்டனையை நிறைவேற்றுவர். 2005ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்தோனேசியாவின் பாலித் தீவில் இருந்து அவுஸ்திரேலியாவுக்கு ஹெரோயின் எனப

சிறுகதை
 

என் வாழ்க்கையில் அந்த அதிசயமான, அபூர்வமான நிகழ்ச்சி நடந்தது! மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு வேலையாக நான் பாரிஷால் பகுதிக்குப் போக வேண்டியிருந்தது. இந்தப் பகுதியின் படித்துறையிலிருந்து, பன்னிரண்டு மணியளவில் படகில் புறப்பட்டேன். பாரிஷால் பகுதியில் வசித்த ஒருவரும் என்னுடன் படகில் வந்தார். ஏதோ பேசிக்கொண்டே வந்ததில் நேரம் கழிந்தது! அப்போது துர்க்கா பூஜை முடிந்திருந்தது. வானத்தில் மேகங்கள் கூட்டம் கூட்டமாகத் தவழ்ந்துகொண்டிருந்தன. இடையிடையே மழைத் தூறலும் விழுந்துகொண்டிருந்தது. சந்தியாக் காலத்திற்குச் சற்று முன்பு, வானம் சற்றே வெளிறிப் போயிருந்தது. உடைந்த மேகங்களுக்கிடையே சதுர்த்தசியின் நிலவு லேசாக மின்னிக்கொண்டிருந்தது. சந்தியாக் காலம் நெருங்கியதுமே நாங்கள் நதியின் முக்கியமான அகலமா

கட்டுரை
அம்ஷன் குமார்  

1927இல் வெளிவந்த சார்லஸ் சாப்ளினின் புகழ்பெற்ற திரைப்படமான ‘மார்டன் டைம்’ஸின் 75ஆவது ஆண்டைச் சிறப்பிக்கும் வகையில் இக்கட்டுரை வெளியிடப்படுகிறது. ஒவ்வொரு வருடமும் அதே கிறிஸ்துமஸ் தாத்தா கிறிஸ்துமஸ் நள்ளிரவில் சார்லஸ் சாப்ளினின் சுவிட்சர்லாந்து வீட்டிற்குத் தவறாமல் வந்து அவருடைய பேரக்குழந்தைகளுக்குப் பரிசுப் பொருட்களை விட்டுச் செல்வார். அவர் வரும்வரை விழித்திருந்து விட்டுப் பின்னரே சாப்ளின் தூங்கச் செல்வார். முப்பது வருடங்களுக்கும் மேலாக இவ்வழக்கம் நீடித்தது. ஆனால் சாப்ளின் அந்தக் கிறிஸ்துமஸ் தாத்தாவை ஒருதடவைகூட ஒப்பனைகளின்றிப் பார்த்ததில்லை. அதாவது அந்த ஆசாமியை வருடத்திற்கு ஒருமுறை கிறிஸ்துமஸ் தாத்தாவாக மட்டுமே பார்ப்பார். விரும்பியிருந்தால் சாப்ளின் அவரைக் கிறிஸ்

 

கவிதை: புத்தகங்களின் கூட்டறிக்கை எம். யுவன் கவிதைகள் தேவேந்திர பூபதி கவிதைகள்

க.நா.சு.100
பழ. அதியமான்  

தமிழ் நவீன இலக்கியத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவரான க. நா. சுப்ரமண்யம் நூற்றாண்டையொட்டி வெளியிடப்படும் கட்டுரை இது. க.நா.சுவின் படைப்புலகம், அவர் குறித்த மதிப்பீடுகள் தொடர்ந்து இடம்பெறும். - பொறுப்பாசிரியர் க. நா. சுப்ரமண்யம் (1912- 1988) எழுதிய நூல்களை நாவல்கள், சிறுகதைகள், கவிதைகள், நாடகங்கள், கட்டுரைகள், மொழிபெயர்ப்புகள் என ஆறு வகையாகப் பிரிக்கலாம். இலக்கிய வரலாறு அவரை விமர்சகராகவும் மொழிபெயர்ப்பாளராகவும் பதிவு செய்துகொண்டு அவரது மற்றவகைப் படைப்புகளைப் பின்னுக்குத் தள்ளியிருக்கிறது. என்றாலும் நாவல்களும் மொழிபெயர்ப்புகளும் எண்ணிக்கையில் முதலிரு இடங்களைப் பெற்றுவிடுகின்றன. சிறுகதைகள், கட்டுரைகள், கவிதைகள், நாடகங்கள் என்ற வரிசையில் எண்ணிக்கை வகையில் மற்ற படைப்புகள் அமையும்.

நாவல் பகுதி
 

அத்தியாயம் ஆறு 1 ஹோட்டல் பிரம்மபுத்திராவின் புல்வெளி நதியின் விளிம்புவரை நீள்கிறது. மழை அப்போதுதான் நின்றிருக்க வேண்டும். புல்வெளியில் இடையிடையே சிறு குட்டைகள். மழை படைத்த குட்டைகள். பச்சையை வெல்ல முடியாதவை. மழை மறைந்த மகிழ்ச்சியில் மற்ற இடங்களில் புற்கள் தலைநிமிர முயன்றுகொண்டிருக்கின்றன. அவற்றின் நுனியிலிருந்து அடிவரை ஒட்டிக்கொண்டிருந்த நீர் முத்திரைகள் சூரியனின் ஒளியில் வைரப் பொட்டுகளாகப் பளீரிடுகின்றன. அற்பாயுள் வைரங்கள். நதியின் கோபத்தைச் சூரியன் தணித்திருக்க வேண்டும். பெருக்கம் இருந்தாலும், கரையை உடைத்து ஊருக்குள் வருவேன் எனப் பயமுறுத்தும் உக்கிரம் இல்லை. அப்போதுதான் விழித்துக்கொண்டதுபோல ஒரு தோற்றம். நீராவிப் படகுகள் பழுப்புப் பரப்பைக் கிழித்துக்கொண்டு செல்கின்

திரை
ஸ்டாலின் ராஜாங்கம்  

இன்றைய நவீன மருத்துவத்தால் போலி மருத்துவர் என்று புறந்தள்ளப்பட்ட சித்தவைத்தியரின் மகள் ஒருத்தி நவீன அறிவியல்சார்ந்த மரபணுப் படிப்பில் ஆய்வு மேற்கொள்கிறார். அறிவியல் மாணவியான அப்பெண் தமிழ் வரலாறு தமிழ் அறிவு மற்றும் தான் தமிழ்ப்பெண் என்பன குறித்த ஓர்மை கொண்டவள். ஆராய்ச்சியின் மூலம் கி. பி. ஆறாம் நூற்றாண்டில் காஞ்சிபுரத்தில் இருந்து சீனா சென்ற போதிதருமன் என்னும் தமிழனின் உயிர்க்கூறை எடுத்துத் தற்காலத்தில் வாழும் அவன் வம்சாவளியைச் சேர்ந்தவனுக்குச் சிகிச்சை அளித்து மரபணுவைத் தூண்டிவிட்டுத் தமிழனின் பாரம்பரிய ஆற்றலை மலரச்செய்து அதன் மூலம் சீனாவிடமிருந்து இந்தியாவுக்கு வரும் ஆபத்தைத் தடுப்பதுதான் ஏழாம் அறிவு திரைப்படத்தின் கதை. உலகத் திரைப்படங்கள் பலவற்றிலும் காட்டப்பட்ட மரபணு

அறிக்கை
 

அண்ணா நூற்றாண்டு நினைவு நூலகம் இடம் மாற்றப்படப்போவதாக வெளிவந்த அதிர்ச்சிகரமான அறிவிப்புக்கு எப்படி எதிர்வினையாற்றுவது என்ற கேள்வியுடன் இருந்த நிலையில் அகமதாபாத்தில் மேப்பின் என்ற மிக முக்கியமான பதிப்பகத்தின் எடிட்ட ரான வினூதா மல்யாவிடமிருந்து எனக்குத் தொலைபேசி அழைப்பு வந்தது. மேற்படிச் செய்தி பற்றி மிகுந்த அக்கறையுடன் அவர் பேசியது வியப்பாகவே இருந்தது. அகில இந்திய அளவில் அறியப்பட்ட சில முக்கியமான ஆளுமைகளிடமிருந்து கையெழுத்துப் பெற்று அண்ணா நூலகத்திற்குப் பங்களித்திருக்கும் UNESCO, UNICEF போன்ற நிறுவனங்களுக்கு அனுப்புவது என முடிவு செய்தோம். பின்னர் திரு. ஹென்றி திபேனின் ஆலோசனைப்படி மனித உரிமை ஆணையத்திற்கும் அனுப்ப முடிவுசெய்தோம். தகவலுக்காக இந்த அறிக்கையை முகநூலில் வெளியிட

பதிவு: நூல் அறிமுகக் கூட்டம், புதுவை. 9.10.2011
பழ. அதியமான்  

முத்தொள்ளாயிரம் நூலின் - ஆங்கில மொழிபெயர்ப்பு Red Lilies and Frightened Birds ஆகஸ்ட் 2011இல் வெளிவந்துவிட்டது. ம. இலெ. தங்கப்பாவின் மொழிபெயர்ப்பில், ஆ. இரா. வேங்கடாசலபதியின் அறிமுகத்துடன் பெங்குவின் இந்நூலை வெளியிட்டுள்ளது. இந்நூலின் அறிமுகக் கூட்டம் புதுவையில் 9 அக்டோபர் 2011 அன்று நடைபெற்றது. 20ஆம் நூற்றாண்டில் டி.கே. சிதம்பரநாத முதலியாரால் முன்னெடுக்கப்பட்டுப் பரவலாக்கப்பட்ட இப்பழந்தமிழ் நூலின் காலம் ஒன்பதாம் நூற்றாண்டு என்பது வையாபுரிப் பிள்ளையின் கருத்து. சதாசிவ பண்டாரத்தார் ஆறாம் நூற்றாண்டு என்பார். 900 பாடல்களின் தொகுப்பாகக் கருதப்படும் முத்தொள்ளாயிரத்தில் இப்போது கிடைப்பவை 130 மட்டுமே. இவை அனைத்தின் மொழிபெயர்ப்பைக் கொண்ட நூல் இது. பாண்டிய, சோழ, சேர அரசர்களின் புகழ

பதிவு: அற்றைத் திங்கள், மதுரை, 16.10.2011
வெ. முருகன்  

மதுரையில் தொடர்ந்து காலச்சுவடு, கடவு மற்றும் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் இணைந்து நடத்திவரும் அற்றைத் திங்கள் நிகழ்வில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார் சாதி, அரசியல் அதிகாரம், ஆதிக்க நடைமுறைகள் ஆகியவற்றுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொண்டுவரும் வழக்கறிஞர் பொ. ரத்தினம். அவரைப் பள்ளியில் சேர்த்தபோது பெற்றோர்களுக்குத் துல்லியமாகத் தேதி சொல்லத் தெரியாததால் பள்ளியிலேயே 10.01.1944 எனத் தோராயமாக எழுதிக்கொண்டார்கள். அதுவே இன்றுவரை அவர் பிறந்த தேதியாக இருக்கிறது. ஆரம்பக் காலங்களில் திராவிட இயக்கத்தினரின் வசீகரமான பேச்சுகளில் கவரப்பட்டுப் பிறகு இடதுசாரி இயக்கக் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு நக்சல்பாரி இயக்க நண்பர்களோடு இணைந்தார். அதனால் தன் வாசிப்புத் தளம் விரிவடைந்ததையும் தன் இளமைப்பருவ அனுபவங்க

மதிப்புரை
கமலா ராமசாமி  

நெஞ்சில் ஒளிரும் சுடர் எழுதி முடித்ததும் இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறீர் என்று ஒரு படைப்பாளியிடம் கேட்பதைப் போல் நண்பர்கள் பலர் என்னை எழுதத் தூண்டிக்கொண்டிருந்தனர். இந்த ஊக்கம் தந்த நம்பிக்கை, சமீபத்தில் வாசித்த முத்தம்மாள் பழனிசாமியின் நாடு விட்டு நாடு வந்து நூல் பற்றி எழுதிப் பார்க்கலாம் என்னும் எண்ணத்தை ஏற்படுத்தியது. சுருக்கமாகச் சொல்லப் போனால் வாசிப்பாளராக மட்டும் இருந்துகொண்டிருந்த நிம்மதி இப்போது போய்விட்டது. நாடு விட்டு நாடு ஆசிரியர்: முத்தம்மாள் பழனிசாமி பக். 288. விலை: ரூ.180 (2007) வெளியீடு யுனைடெட் ரைட்டர்ஸ் 63, பீட்டர்ஸ் சாலை ராயப்பேட்டை சென்னை 600014 முத்தம்மாள் இந்நூலை முதலில் ஆங்கிலத்திலும் பின்னால் தமிழிலும் எழுதியிருக்கிறார். அவ

 

தலையங்கத்தில் குறிப்பிட்டுள்ளபடி உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்று, வந்தாலும் மக்களுக்கு எந்தளவு பணியாற்றப் போகிறார்கள் என்ற ஐயம் எழுந்துள்ளது கவலை தரக்கூடியது. போட்டிபோட்டுக்கொண்டு பணம் செலவிட்ட கதை ஊருக்கு ஊர் தெருவுக்குத் தெரு கேட்டுக்கொண்டுதான் இருக்கிறது. சிற்றூர் நிலையே இப்படியெனில் பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என்று வரும்போது அச்சமூட்டுவதாக இருக்கிறது. சாதாரண சிற்றூரிலிருந்து, சென்னை, மும்பை, தில்லிவரை இதுதான் நிலைமை. அமெரிக்க வசந்தம் வால் ஸ்ட்ரீட் போராட்டம் க. திருநாவுக்கரசு விவரமாகப் பதிவுசெய்திருக்கிறார். உலகெங்கும் ஜனநாயகத்தைக் காப்பதாக முரசுகொட்டும் அமெரிக்கா தன் நாட்டு மக்களுக்கு என்ன செய்கிறது என்பதை வால் ஸ்ட்ரீட் போராட்டம் அம்பலப்படுத்துகிறது. எந்தக் கட

தலையங்கம்
 

நிதிச்சுமையைக் காரணம் காட்டிப் பேருந்துக் கட்டணம், பால் விற்பனை விலை ஆகியவற்றைக் கடுமையாக உயர்த்தியிருக்கிறது தமிழக அரசு. மின் கட்டணம் உயர்த்தப்படும் என்னும் அதிகாரபூர்வமான அறிவிப்பும் வந்துள்ளது. இலவசங்களில் திளைத்துக்கொண்டிருக்கும் மக்களுக்கு இது பேரதிர்ச்சியூட்டியுள்ளது. பயணங்களுக்குப் பொது வாகனங்களை நம்பியிருக்கும் ஏழை, நடுத்தர மக்களைப் பேருந்துக் கட்டண உயர்வு கடுமையாகப் பாதிக்கும் நடவடிக்கை. அன்றாட வாழ்வின் தவிர்க்க முடியாத தேவையாக உள்ள பாலின் விலை உயர்வால் அதிகம் பாதிக்கப்படப்போவது ஏழை, நடுத்தர வர்க்கத்தினர்தாம். அடித்தள மக்களின், குறிப்பாக குழந்தைகளின் ஊட்டச்சத்தில் ஏற்படக்கூடிய பாதிப்பு பற்றிய கரிசனம் அரசுக்கு ஏற்பட வேண்டும். கடந்த பத்தாண்டுகளில் பேருந்து, மின் கட்