கட்டுரை
யதீந்திரா  

எல்லா உண்மைகளும் மூன்று கட்டங்களைத் தாண்டிச் செல்கின்றன. முதலாவது அது பரிகசிக்கப்படுகிறது. இரண்டாவது அது வன்மையாக எதிர்க்கப்படுகிறது. மூன்றாவது அது சுயசான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. - Arthur Schopenhauer 1 சமாதானத்திற்கான கையாளுகை: 1997- 2009 வரையான நோர்வேயின் சமாதானத்திற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் குறித்த மதிப்பீடு - (Pawns of Peace - Evaluation of Norwegian Peace Efforts in Sri Lanka, 1997-2009) என்னும் அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. 183 பக்கங்களாக விரிந்திருக்கும் மேற்படி அறிக்கையில், 1999இல் நோர்வே ஒரு சமாதான இலகுபடுத்துநராக (facilitator) (அரசு மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளால்) அழைக்கப்பட்டதிலிருந்து, 2009இல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு, அரசால் முழுமை

கட்டுரை
யதீந்திரா  

எல்லா உண்மைகளும் மூன்று கட்டங்களைத் தாண்டிச் செல்கின்றன. முதலாவது அது பரிகசிக்கப்படுகிறது. இரண்டாவது அது வன்மையாக எதிர்க்கப்படுகிறது. மூன்றாவது அது சுயசான்றாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது. - Arthur Schopenhauer 1 சமாதானத்திற்கான கையாளுகை: 1997- 2009 வரையான நோர்வேயின் சமாதானத்திற்கான ஒருங்கிணைந்த முயற்சிகள் குறித்த மதிப்பீடு - (Pawns of Peace - Evaluation of Norwegian Peace Efforts in Sri Lanka, 1997-2009) என்னும் அறிக்கை கடந்த மாதம் வெளியிடப்பட்டது. 183 பக்கங்களாக விரிந்திருக்கும் மேற்படி அறிக்கையில், 1999இல் நோர்வே ஒரு சமாதான இலகுபடுத்துநராக (facilitator) (அரசு மற்றும் தமிழீழ விடுதலைப்புலிகளால்) அழைக்கப்பட்டதிலிருந்து, 2009இல் தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு, அரசால் முழுமை

கானகன்  

பத்து அல்லது பன்னிரெண்டு வருடங்களுக்கு முன் நடந்தது இது. சென்னையில் செய்தித் துறையில் அதிக மலையாளிகள் காணப்படுவது குறித்து, “ஆர்ம்ஸ்ட்ராங்குக்கு டீ குடுத்த நாயர் கதையா எல்லா எடத்துக்கும் வந்துடறீங்க” என ஒருவர் தன் நண்பரைக் கிண்டல்செய்ய, பொதுவாக இனிமையாகப் பேசும் அவர் சூடாகி, “ஒங்களால் முடியல்லேன்னுதானே எங்களைக் கூப்பிட்றாங்க” என்றார். தர்மசங்கடமான மௌனம் நிலவியது. அப்புறம் பேச்சு வேறெங்கோ திரும்பியது. இன்று அப்படி யாராவது ஒரு தமிழர் கிண்டல் செய்தால், தமிழகத்தில் உள்ள மலையாளிகள் அப்படிப் பதிலடி கொடுக்கத் துணியமாட்டார்கள். கோபம் வந்தாலும் நகர்ந்துவிடுவார்கள். அப்படியாகிவிட்டது நிலைமை. பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் சொந்த மாநிலத்தில் இல்லாத நிலையில் தி

சிறப்புப் பகுதி : முல்லைப் பெரியாறு
தமிழில்: அரவிந்தன்  

இந்தியாவில் நதிநீர் மோதல்கள் குறித்த கொள்கைகளின் உரையாடலுக்கான அமைப்பு (The Forum for Policy Dialogue on Water Conflict) கடந்த பல ஆண்டுகளாக முல்லைப் பெரியாறு பிரச்சினையை உன்னிப்பாகக் கவனித்துவருகிறது. இப்பிரச்சினை குறித்த கண்ணோட்டங்களில் ஏற்பட்டுள்ள வேறுபாடுகள் கடந்த சில ஆண்டுகளில் இறுக்கமடைந்து வருகின்றன. முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பானது என்றும் ஒப்பந்தப்படி அணையின் நீர்மட்டம் அதிகபட்ச அளவில் பராமரிக்கப்பட வேண்டுமென்றும் தமிழ்நாடு அரசு வலியுறுத்துகிறது. தற்போதுள்ள அணை பாதுகாப்பற்றது என்பதால் அந்த அணையின் கீழ்ப்பகுதியில் புதியதொரு அணை கட்டப்பட வேண்டுமென்று கேரள அரசு வலியுறுத்துகிறது. அணைக்கு அருகே உள்ள நிலநடுக்க மையங்களில் சமீபத்தில் ஏற்பட்ட நில அதிர்வுகளாலும் இரு தரப்ப

சிறப்புப் பகுதி : முல்லைப் பெரியாறு
 

கள்ளர் சமூகத்தினர்மீது பிற சாதியினர் கொண்டிருந்த அச்சத்தையும் வெறுப்பையும் பற்றி இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியிலிருந்த அரசாங்க அதிகாரிகள் பலர் அடிக்கடிக் குறிப்பிடுகின்றனர். தொழிலாளர் துறை ஆணையராக இருந்த டி. ஈ. மோயர் கள்ளர்களின் கிராமங்களில் பிற சாதியினர் வசிப்பதில்லை என்றும் இவ்வாறு “பிற சமூகத்தினரிடமிருந்து தனிமைப்பட்டு வசிப்பதால்” கள்ளர்கள் பிறரைத் தங்களுக்குப் “பாத்தியப்பட்ட பலிகளாக” எண்ணுகின்றனர் என்றும் குறிப்பிடுகிறார். கள்ளர் சீர்திருத்தம் (Kallar Reclamation) வெற்றிபெற வேண்டுமென்றால் கள்ளர்கள் பிறர் தம்மீது கொண்டுள்ள அச்சத்தைப் பற்றிப் பெருமைப்படுவதை விட்டுவிட்டுத் தங்களைப் பிறர் எவ்வாறு பார்க்கின்றனர் என்பதை உணரத் தலைப்பட வேண்டும். &ldq

சிறப்புப் பகுதி: புதிய திணைக்களம்
அ. முத்துலிங்கம்  

நான் ஆப்பிரிக்காவில் வசித்த காலத்தில் அங்கேயிருந்த கிழவர் ஒருவரிடம் என்னை அழைத்துப்போனார்கள். சுருட்டையான வெள்ளைத் தலைமுடி. கண்களும் உள்ளங்கைகளும் மஞ்சள் நிறம். அவர்தான் அந்தக் கிராமத்துக் கணக்காளர். அங்கு எந்தக் கணக்குப் பிணக்கு வந்தாலும் அவர்தான் தீர்த்துவைப்பார். நான் போனபோது ஏதோ முணுமுணுத்துக்கொண்டிருந்தார். வயல் கணக்குகள், ஆடு மாடு கணக்குகள், குழந்தைகள் கணக்குகள் எல்லாம் அவரிடம்தான் இருந்தன. முக்கியமாகப் பெண்சாதிக் கணக்குகள். ஒருவருக்கு நாலு பெண்சாதிகள்வரை அனுமதிக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஒருத்தியை விலக்கிவிட்டு இன்னொரு பெண்ணை மணமுடிப்பார்கள். அந்தப் பெண் வேறு ஒருவரை மணந்துகொள்வாள். மறுபடியும் விலக்கு ஆகலாம். ஆகவே அந்தக் கணக்குகள் முக்கியம். உண்மையில் அவர்தான் கிராம

சிறப்புப் பகுதி: புதிய திணைக்களம்
பெருந்தேவி  

“அந்நியமாதல் நாடகத்தின் அங்கமாய் இனி நாம் ஒருபோதுமில்லை. நாம் தொடர்புறுத்தலின் பரவசத்தில் வாழ்கிறோம்.” ழான் போத்ரியார் காலமென்றே ஒரு புனைவும் காட்சியென்றே சில நினைவும் நேசிப்பதை அல்லது வேண்டியதை நோக்கிய பயணம் உலகம் முழுவதும் காலங்காலமாய்ப் பதிவுசெய்யப்பட்டிருக்கும் ஒன்று. தமிழிலக்கியத்தில் வீடுநோக்கித் தேரை வேகமாகச் செலுத்தும் - தலைவியைப் பிரிந்திருந்த தலைவன்; மெய்யெனத் தாம் கொள்ளும் பரம்பொருளைத் தேடித், தலம் தலமாக யாத்திரிகர்களாக அலையும் பக்திக் கவிஞர்கள்; நவீன இலக்கியப் புனைவுகளில் ஞானம் / காதல் / உண்மை / பொருள் போன்றவை நாடிப் புவியியல் பரப்புகளில் பயணிப்பவர்கள்; முடிவில்லா இந்த வரிசையில் பலவகைப் பயணிகளையும் பயணங்களையும் நம்மால் சந்திக்க முடியும். அதேபோ

சிறப்புப் பகுதி: புதிய திணைக்களம்
பி. ஏ. கிருஷ்ணன்  

எனக்கு நன்றாக நினைவிருக்கிறது. எண்பதுகளின் இறுதியில் என் நண்பன் ரகு ஆஸ்திரேலியாவிலிருந்து தில்லிக்கு வந்திருந்தான். அவன் அங்கு மென்பொருள் வல்லுநராகப் பணியாற்றிக்கொண்டிருந்தான். கணினியின் பெருமைகளை அவன் என்னிடம் சொல்லிக்கொண்டிருந்தபோது மின்னஞ்சலைப் பற்றிக் குறிப்பிட்டான். ‘உனக்கு நான் கடிதம் எழுதினால் அது உன்னை வந்தடைவதற்கு ஒரு விநாடிகூட ஆகாது’ என்றான். ‘நான் எப்படிப் படிப்பேன்?’ ‘கணினி மூலம்.’ ‘கணினியின் ஆனா ஆவன்னாகூட எனக்குத் தெரியாதே?’ ‘கணினியை எல்லோரும் எளிதாகப் பயன்படுத்தும் காலம் ஒன்று வரும். கடிதங்கள் மட்டும் அல்ல. உலகத்தின் எல்லா அறிவுக் கருவூலங்களையும் கணினி மூலம் நீ வீட்டிலிருந்தே திறந்து, பார்த்து, பயனடைய முடிய

சிறப்புப் பகுதி: புதிய திணைக்களம்
தமிழ்நதி  

ஈழத் தமிழர்கள் தாய்மண்ணைவிட்டு வெளியேறுவதற்கு முதன்மைக் காரணியாக அமைந்தது இலங்கைத் தீவின் அரசியல் சூழலே. பொருள் தேடலை நோக்கிய பெயர்தல் என்பதையும் அரசியல் சிக்கலின் உபவிளைவாகவே பார்க்க வேண்டியிருக்கிறது. 1983ஆம் ஆண்டு நடந்தேறிய இனக்கலவரத்திற்குப் பின்னர் கணிசமான தமிழர்கள் நாட்டைவிட்டு வெளியேற ஆரம்பித்தார்கள். இன்று போர் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டுவிட்டதாகச் சொல்லப்படும்போதிலும், புலம்பெயர்தல் நின்றபாடில்லை. இந்நிலையில், உலகெங்கிலும் பரந்து வாழும் தமிழர்களை ஒருங்கிணைக்கும் இழையாக வலைத்தளங்களும் வலைப்பூக்களும் தொழிற்படுகின்றன. அவர்களது கருத்துப் பரப்பல் மற்றும் பரிமாற்றம், ஆவணப்படுத்தல் நிகழ் வரலாற்றைப் பதிவுசெய்தல் ஆகியவற்றில் வலைத்தளங்களின் பங்களிப்பு அளப்பரியது. ஆரம்ப

சிறப்புப் பகுதி: புதிய திணைக்களம்
விமலாதித்தமாமல்லன்  

வெகுஜனப் படைப்பிலிருந்து வெகுதூரம் தள்ளியிருப்பதே இலக்கியப் படைப்பு என்பதைக் காலச்சுவடு வாசகர்களுக்கு விரித்து எழுத வேண்டியது அவசியமல்ல. இரண்டும் ஒரே மொழியில்தான் எழுதப்பட்டிருக்கின்றன என்றபோதிலும் படைப்பைப் போலவே வாசிப்பும் இரண்டு வகைப்பட்டதாகவே இருக்கிறது. இலக்கியத்தின் மொழி கடினமாகவோ எளிமையாகவோ வார்த்தைகளில் நுட்பங்களை வெளிப்படுத்துவதாகவோ விளங்குகிறது. ஆனால் வெகுஜனப் பத்திரிகைகளின் மொழி ஜனநாயகப்பொதுமை கொண்டது. அதன் எழுத்தாளர்களிடம் வெளிப்பாட்டில் தனித்துவம் இருந்தாலும் மெனக்கெடலே தேவைப்படாத மேலோட்ட வாசிப்பை மட்டுமே பொதுமையாகக் கொண்டது. காரணம் பெரும்பான்மையினரின் தேர்வு அதுதான் என்னும் நம்பிக்கை. பெரும்பாலும் அது உண்மை. நுட்பமே விற்கும் சரக்காக ஆகிப்போகும் எதிர்காலக்

க.நா.சு.100
 

நவீனத் தமிழ் இலக்கியத்தை வடிவமைத்தவர்களுள் ஒருவரான க. நா. சுப்ரமண்யம் நூற்றாண்டையொட்டி வெளியிடப்படும் கட்டுரை இது. க.நா.சுவின் படைப்புலகம் அவர் குறித்த மதிப்பீடுகள் தொடர்ந்து இடம்பெறும். - பொறுப்பாசிரியர் என்னைப் பற்றி அக்கப்போர்கள் அவ்வப்போது எழுந்து அடங்கி யிருக்கின்றன. யார் யாரோ அந்தந்தச் சமயத்துக்கு ஏதோ சொல்லிப் பார்த்திருக்கிறார்கள். இன்றும் சொல்கிறார்கள். நான் அவர்களுக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டும் என்று எண்ண வில்லை. காலம் பதில் சொல்லட்டும். என் அபிப்பிராயத்தில் வலுவில்லாவிட்டால் காலம் அடித்துக்கொண்டு போய்விடும். வலுவிருந்தால் என் அபிப்பிராயம் தானாக நிற்கும். - க.நா.சு. இலக்கிய வாசிப்பு முக்கால் நேரத் தொழி தொழிலாக இருந்த நாட்களில் க.நா.சுவின் எழுத்துக்களை வாசித்

சிறுகதை
 

இன்னும் எட்டு மணியாகவில்லை. தொழிற் சாலையின் பெரும் வாயிற்கதவுகள் அடைத்துவைக்கப்பட்டிருந்தன. மனோகரன் ஓட்டிவந்த இரு சக்கர வாகனத்திலிருந்து ஒலி எழுப்பினான். உடனே இரும்புக் கதவுகள் வேகமாகத் திறந்தன. அவற்றினருகில் நின்று கன்னங்கள்வரை கத்தையாக மீசை வளர்த்திருந்த காவலாளி விறைப்புடன் சல்யூட் அடித்தார். அவனும் வணங்கிவிட்டு உள்ளே நுழைந்து தன்னுடைய வாகனத்தைக் கொட்டகையில் நிறுத்தினான். தொழிலாளர்கள் யாரும் வந்திருக்கவில்லை. இன்று விடுமுறை. வேலை தொடங்கத் தாமதமாகும் என்று நினைத்தான். எந்த அவசரமுமில்லாத அவன் அங்கேயே கொஞ்சம் நேரம் நின்றான். சற்றுத் தொலைவில் தொழிற்சாலைக் கட்டடம் பிரம்மாண்டமாக நின்றிருந்தது. அதற்குப் பக்கத்தில் சிமெண்ட் கற்களாலான மேலும் இரு கட்டடங்கள் வளர்ந்துகொண்டிருந்தன. உ

சிறுகதை
 

ஒத்தவீட்டு முத்துதான் முதலில் அவ்வுருவைப் பார்த்தான். சம்மாரம் விலக்கில் அசைந்துகொண்டிருந்தது. ஒரு மனிதனாக உருவம்கொள்ளத் தொடங்கிப் பிறகு புகைபோல நிலவொளியில் மங்கிக்கொண்டிருந்த அந்நிழலுருவைக் கண்டு சற்றுப் பதற்றமடைந்த முத்து, வீட்டு நிலையில் செருகியிருந்த பேட்டரி லைட்டை எடுத்துக் கொண்டு திரும்பினான். அதற்குள் அது அந்தச் சாலையிலிருந்து விலகிச் சென்றிருந்தது. தொலைவிலிருந்த வேலிச்செடிகள் சிறு சுழல் ஒன்றில் சிக்கி லேசாக அசைந்து ஓய்ந்ததைக் கண்டதும் அது காற்றினுள் ஒளிந்துகொண்டதாகக் கற்பிதம்கொண்டான். அதற்குத் தோதாகப் பழங் கதைகளின் பெருங்கொத்தை அசைத்துப் பார்த்தான். தேடலில் தீவிரமடைந்த அவன் மேற்குப் பக்கமாக பேட்டரி அடித்தான். வெட்டக் கரிசலுக்கு அப்பாலிருந்த சிறிய கருவேலமொன்றும் இலந

 

அனார் கவிதை ஸர்மிளா ஸெய்யித் கவிதைகள் சுகிர்தராணி கவிதைகள்

கட்டுரை
வே. வசந்தி தேவி  

2011 ஆண்டின் நம்பிக்கையூட்டும் நட்சத்திரங்கள் எவை? சில மெல்லிய ஒளிக் கீற்றுகளைப் பற்றிப் பேசுவோம். ஆண்டுதோறும் மனித உரிமை தினமான டிசம்பர் 10க்கு முன் ஐக்கிய நாடுகள் சபையிலிருந்து சிந்தனைக்கான ஒரு செய்தி அனுப்பப்படுவதுண்டு. அதன் மனித உரிமைக் கழகத் தலைவர் நவனீதம் பிள்ளை இவ்வாண்டின் வரலாற்று மகத்துவம் ‘அரேபிய வசந்தம்’ ‘Arab Spring’ என்றும், அதன் மூலம் ‘அதிகாரம்’ என்பதே இடம்பெயர்ந்தது என்றும் கூறுகிறார். “சிறப்புமிக்க இவ்வாண்டில் அதிகாரம் என்பது பளிங்கு மாளிகைகளில் வீற்றிருக்கும் வல்லமைமிக்க நிறுவனங்களின் கைகளிலிருந்து, தங்கள் உரிமைகளைப் பெறத் துணிந்தெழுந்த சாதாரண மக்களின் கைக்கு மாறியது”. எதிர்பாராத அந்த எழுச்சி மாற்றத்திற்கான உல

சிறப்புப் பகுதி
தொகுப்பு: கானகன்  

தற்போது ஆஸ்திரேலியப் பாதுகாப்புத் துறையில் பணியாற்றும் கார்டன் வெய்ஸ் சர்வதேச உறவுகளில் முதுகலைப் பட்டம் பெற்றவர். தீவிரவாதம் மற்றும் மனிதநேயச் சட்டத்தைச் சிறப்புப் பாடமாகப் பயின்றவர். இயற்கைப் பேரிடர்களுக்கும் போர்ச் சிக்கல்களுக்கும் உள்ளான போஸ்னியா, கொஸாவா, ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், டார்ஃபூர், காங்கோ, வடக்கு உகாண்டா, காஸா, அஸே, ஹைட்டி போன்ற பல பகுதிகளில் பணியாற்றியவர். வானொலி மற்றும் அச்சு ஊடகங்களுக்குச் சுயேச்சையான செய்தியாளராகவும் இருந்தவர். ஸ்ரீலங்காவில் ஐக்கிய நாடுகள் சபையின் செய்தித் தொடர்பாளராக 2007 முதல் 2009வரை வெய்ஸ் செயல்பட்டார். அப்பாவி வெகுமக்களை இலங்கைப் படையினர் கொன்றுகுவித்ததற்கான ஆதாரங்களைச் செயற்கைக்கோள் படங்கள் உள்ளிட்ட ஏராளமான தளங்களிலிலிருந்து திரட்டி

சிறப்புப் பகுதி: புத்தகம்
 

அக்கரைப்பற்றில் உள்ள சந்தை அது. எல்லாச் சந்தைகளுக்குமுரிய உயிர்த் துடிப்புடன் இயங்கிக்கொண்டிருக்கும் இச்சூழலில்தான் அங்குள்ள அன்றாடங்காச்சிகளின் வாழ்வின் வேரும் ஊடுரு வியுள்ளது. அன்றாட விளைபொருட்களையே மூலதனமாகக் கொண்ட உதிரி உழைப்பாளிகளுக்கான பொருளாதார மையமும் இதுதான். இந்த அன்றாடங்காச்சிகளின் நாளாந்த வாழ்வையும் அவர்கள் புறச் சூழலால் எதிர்கொள்ளும் நெருக்கடிகளையும் மிகுந்த செறிவுடன் தன் கசகறணம் நாவல்மூலம் காட்சிப்படுத்தியுள்ளார் விமல் குழந்தைவேல். நாட்டார் பாடல்கள் மூலம் நெத்தியடியாகப் பதில் சொல்லும் வெள்ளும்மாவுக்கு, ‘ஆஸ்பத்திரிக் கட்டிலுக்கு விரிக்கிற வெள்ளைச் சீலை’ போன்ற துணிதான் ஆடை. அவளுடைய சுருக்குப் பைகளில் எந்தெந்தப் பையில் என்னென்ன இரகசியங்கள் இருக்கின்றன

சிறப்புப் பகுதி : புத்தகம்
 சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

உண்மைச் சொல்லிவிடுகிறேன். சென்ற ஆண்டு நான் வாங்கிய புத்தகங்களில் எல்லாவற்றையுமே முதல் பக்கத்திலிருந்து கடைசிவரை வாசித்ததாகச் சொல்லமாட்டேன். பத்தாம் பக்கத்திலும் பாதியிலும் நிறுத்திவிட்ட நூல்கள் அநேகம். அவற்றை ஏன் அரைவாசியில் விட்டுவிட்டேன் என்பதைப் பற்றி ஒரு கட்டுரையே எழுதலாம். ஆனால் இப்போதைக்கு நான் முழுக்க வாசித்து முடித்த நூல்களில் ஐந்தைப் பற்றி இங்கே எழுதுகிறேன். இவை என்னுடைய சொந்தத் தெரிவுகள். இவற்றைச் சென்ற ஆண்டின் சிறந்த நூல்களாகச் சொல்லமாட்டேன். இவற்றை நான் இங்குச் சேர்த்திருப்பதற்கான காரணங்களையும் கூறியிருக்கிறேன். இந்தப் பட்டியலை நீங்கள் படிக்கும்போது இரண்டு காரியங்கள் உங்களுக்குப் புலனாகும். ஒன்று இவை எல்லாம் ஆங்கிலேயரல்லாதவர்களால் எழுதப்பட்ட கதைகள். மற்றது இந்த

அஞ்சலி
 

நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு தேவ் ஆனந்த் சென்னை வந்திருந்தார். இரு கூட்டங்கள். ஒன்று சினிமாத் துறையினர் நடத்தியது. இரண்டாவது, கிட்டத்தட்டப் பொதுக்கூட்டம் போல. அன்றுதான் சென்னையில் அவரால் படைக்கப்பட்ட ரொமான்சிங் வித் லைஃப் (வாழ்க்கையோடு விளையாடியபடி) நூல் வெளியிடப்பட்டது. அதில் புகைப்படங்கள் இருந்தன. முன்னூறு பக்கப் புத்தகத்தில் இருபது படங்கள்; மிகுந்த கவனத்துடன் எழுதப்பட்ட குறிப்புகள். நூலே பொறுப்போடு எழுதப்பட்டிருந்தது. தேவ் ஆனந்தின் நீண்ட வாழ்க்கையில் பல ஏமாற்றங்கள் இருந்திருக்கும். வாக்கு கொடுத்தவர்கள் மீறியிருப்பார்கள். முப்பது முப்பத்தைந்து ஆண்டுகளாக அவருடைய எந்தப் புதுப்படமும் ஒழுங்காக ஓடவில்லை. ஆனால் புத்தகத்தில் ஓரிடத்தில்கூடக் கசப்பு இல்லை. குறைகூறல் இல்லை. அவரு

பதிவு : புக் பாயிண்ட், சென்னை, 11.12.2011
சி. கார்த்திகேயன்  

கிரிஷ் கார்னாடின் நாகமண்டலா நாடகத்தை நாடகத் திறனாய்வுப் பாடத்திற்காகவும் பலிபீடம் நாடகத்தை அரங்க வடிவமைப்புப் பாடத்திற்காகவும் முழுமையாகப் படித்தறியும் வாய்ப்பு புதுச்சேரி சங்கரதாஸ் சுவாமிகள் நிகழ்கலைப் பள்ளியில் முதுகலை நாடகவியல் படித்தபோது எனக்குக் கிடைத்தது. பனுவல் வாசிப்பால் என்னுள் எழுந்த புரிதலும் விரிவுரையாளர் பிரேமின் (ரமேஷ்) திறனாய்வு எடுத்துரைப்பும் என்னுள் நவீனப் பனுவலாக்கச் சிந்தனையையும் கிரிஷ் கார்னாடின் படைப்புகளை அறியும் ஆவலையும் தூண்டின. காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பாகக் கடந்த 11.12.2011 மாலை சென்னை புக்பாயின்ட் அரங்கில் நடைபெற்ற கிரிஷ் கார்னாடின் ஆறு நாடகங்கள் அடங்கிய அக்னியும் மழையும் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வில் கார்னாட், கன்னடத்திலிருந்து அவற்ற

வெளி ரங்கராஜன்  

இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டம்வரை நம்முடைய நாட்டுப்புற நாடகங்களின் வடிவாக்கத்தையே சார்ந்திருந்த இந்திய நாடகம் நகர்ப்புறங்களின் உருவாக்கம், மேற்கத்திய நாடகங்களின் அறிமுகம் மத்தியதர படித்த வர்க்கத்தின் எழுச்சி IPTA தோற்றம் ஆகிய காரணிகளால் நம்முடைய கலை இலக்கியப் பார்வைகளிலும் அணுகு முறைகளிலும் ஏற்பட்ட பல மாற்றங்களை உள்வாங்க நேர்ந்தது. வங்கத்தில் பாதல் சர்க்காரும் மராட்டியில் விஜய் தெண்டுல்கரும் இந்தியில் மோகன் ராகேஷூம் இந்தப் புதிய உணர்வுகளுக்கு வடிவம் கொடுத்ததுபோல் கன்னடத்தில் கிரிஷ் கார்னாட் இந்தியச் சூழலில் நாடக உருவாக்கம் குறித்து ஒரு புதிய எழுத்து முறையும் நவீனப் பார்வையும் ஏற்படக் காரணமாக இருந்தார். நம்முடைய வரலாற்றுப் பின்புலம் மற்றும் சூழல் தன்மைகளின் அடிப் படையி

பதிவு : மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகம் 3.12.2011 - 3.1.2012
கலையரசி  

சமூகத்தளத்தின் வாழ்வாதாராத்தோடும் உற்பத்தியோடும் இறுக்கமான உறவைக் கொண்டுள்ளவர்கள் அடித்தள மனிதர்கள். அவர்களின் சமூக, பண்பாட்டு, உளவியல் ஆகிய கட்டமைப்புகளில் ஆழமாகப் பதிந்திருக்கும் நாட்டுப்புறவியல் துறையும், மனிதர்களின் உணர்வுகளுடனும் வெளிப்பாடுகளுடனும் கருத்தியல்ரீதியாகத் தமது ஆளுமையைச் செலுத்திக்கொண்டிருக்கும் நாடகமும் இணைந்திருப்பது மிகவும் முக்கியமான சமூகக் கலைச் செயற்பாடு. அவ்வகையில் புதுதில்லி தேசிய நாடகப் பள்ளியும் மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் நாட்டுப்புறவியல் துறையும் நிகழ் நாடக மய்யமும் இணைந்து நாடக உருவாக்கப் பயிலரங்கை மதுரை காமராஜர் பல்கலைக்கழக வளாகத்தில் நடத்திவருகின்றன. இப்பயிலரங்கு 03. 12. 2011 தொடங்கி 03. 01. 2012 வரை ஒருமாத காலம் நடைபெறுகிறது. இப்பயிலர

மதிப்புரை
செல்லப்பா  

“பிறப்பு, இறப்பு என்னும் இரண்டு பெரும் தனிமைகளுக்கு இடைப்பட்ட சிறிய சாகசமே வாழ்க்கை. நம் இருப்பை வடிவமைக்கும் முழுமையிலிருந்து விலகுவதுதான் மானுடத்தின் கதை. ஓர் உடம்பிலிருந்து பிறப்பதன் மூலம் பெரிய முழுமையிலிருந்து விலகுகிறோம். இப்படியாகத் தொடங்கும் அந்தச் சாகசம் மரணம் எங்கே நமக்காகக் காத்திருக்கிறதோ அங்கே முடிவடைகிறது” என்கிறார் துருக்கி எழுத்தாளர் அய்ஃபர் டுன்ஷ். இவரது அஸீஸ் பே ஹேடசேசி என்னும் சிறுகதைத் தொகுப்பிலுள்ள கதையே அஸீஸ் பே சம்பவம். துருக்கிய கதைசொல்லும் திறனின் செவ்வியல் உதாரணமான இந்தச் சிறுகதை அய்ஃபர் டுன்ஷுக்கு மிகப் பரவலான வாசகர்களை உருவாக்கித்தந்துள்ளது. அஸீஸ் பே சம்பவம் ஆசிரியர்: அய்ஃபர் டுன்ஷ் தமிழில்: சுகுமாரன் பக். 96. விலை: ரூ.50 (

 

நவீனத் தமிழ்க் கவிதையின் முக்கிய ஆளுமைகளுள் ஒருவரான தேவதச்சனுக்கு 2010ஆம் ஆண்டுக்கான ‘விளக்கு’ விருது வழங்கப்படுகிறது. நாற்பதாயிரம் ரூபாய் பரிசுத் தொகையும் பாராட்டுப் பத்திரமும் அடங்கிய விருது இது. அமெரிக்கா வாழ் தமிழர்களின் பண்பாட்டு அமைப்பான ‘விளக்கு’ புதுமைப்பித்தன் நினைவாக வழங்கும் இந்த விருதை இதுவரை தமிழின் முக்கியமான இலக்கியவாதிகளான சி. சு. செல்லப்பா, பிரமிள், கோவை ஞானி, நகுலன், ஹெப்சிபா ஜேசுதாசன், பூமணி, சி. மணி, சே. இராமானுஜம், ஞானக்கூத்தன், அம்பை, தேவதேவன், வைத்தீஸ்வரன், விக்ரமாதித்யன், திலீப்குமார் ஆகியோர் பெற்றிருக்கின்றனர். எழுபதுகளின் இறுதியில் எழுதத் தொடங்கிய தேவதச்சன் நவீனக் கவிதையின் புதிய வடிவமைப்பைக் கட்டமைத்தவர்களில் ஒருவர். இவரது கவ

தலையங்கம்
 

கடந்த பல ஆண்டுகளாகத் தமிழகம் சந்தித்துவரும் அரசியல், பொருளாதார நெருக்கடிகள் தற்போது தீவிரமடைந்துள்ளன. ராமேஸ்வரம் மீனவர்கள் தாக்கப்படுவதற்கெதிரான மக்கள் போராட்டங்கள், கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கெதிரான கிளர்ச்சிகள், முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் கேரளத்துக்கு எதிராக எழுந்துள்ள கோபம் ஆகியவற்றை இந்த நெருக்கடிகளுக்கான எதிர்வினைகளாகவே கொள்ள வேண்டும். தொடர்ந்துவரும் அரசுகளாலும் அதிகார மையங்களாலும் பல பத்தாண்டுகளாக ஏமாற்றப்பட்டுவரும் மக்கள் மிக உணர்ச்சிகரமாக இப்போராட்டங்களில் பங்கெடுத்துவருகிறார்கள். தம் வாழ்வாதாரங்கள் பாதிக்கப்பட்டுவிடுமோ என்னும் சந்தேகமும் உரிமைகள் பறிபோய் விடுமோ என்னும் அச்சமும் தமிழக மக்களுக்கு ஏற்பட்டுள்ளன. இப்போராட்டங்களின் பின்னுள்ள சந்தேகங்களும் அச

 

விலை கொடுக்கும் மக்கள் தலையங்கம் தமிழகத்தின் தற்போதைய நிலை யைப் படம்பிடித்துக் காட்டியது, இலவசம் என்பது நமது வரிப் பணமே என்பதை மக்கள் உணர்ந்து தெளிதல் நன்று. சென்ற ஆட்சியினர் செய்த நிர்வாகக் குளறுபடிகளைச் சரிசெய்து நல்ல நிர்வாகத்தை நடத்த தமிழக அரசுக்கு இதைத் தவிர வேறு வழியில்லை என்பதே உண்மை. புலிகளின் வீழ்ச்சி குறித்த கட்டுரை பல்வேறு நினைவுகளை அசைபோட வைத்தது. பிரபாகரன் தனது கடைசிக் காலத்திலும் இந்திய அரசை அதுவும் குறிப்பாகத் தமிழக மக்களைப் பெரிதும் நம்பியுள்ளார். அவரது தன்னம்பிக்கை தகர்ந்துபோனதால் தான் வீழ்ச்சி இலகுவாயிற்று. அந்தக் காலக்கட்டத்தில் இந்திய அரசையே மிரட்டிப் பணியவைக்கும் சக்தி தமிழக ஆட்சித் தலைமைக்கு இருந்த போதும், தம் மக்கள் நலன் என்பது மட்டுமே தமிழகத் தலைமைக்க

உள்ளடக்கம்