மதிப்பீட்டு அடிப்படையில் முடிவுசெய்வதில் உறுதியற்ற நிலை உன்னதங்கள் பற்றிய நிரந்தரமின்மை போன்றவற்றுக்கு நாம் பயந்துசாகிறோம். விஸ்லாவா சிம்போர்ஸ்க்கா 1 எனக்கு இப்போதும் நன்றாக நினைவிருக்கிறது - அது 1990 - விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் கோபால சாமி மகேந்திரராஜா எனப்படும் மாத்தையா எனது சொந்தக் கிராமமான தம்பலகமத்திற்கு வருகிறார். ஊரே திரண்டு அவரை வரவேற்கிறது. வீதிகள் தோறும் நிறைகுடம் சகிதமாக மக்கள் அவரை மலர் தூவி வரவேற்றனர். எங்கள் முறையின் போது நான் மாத்தையாவிற்குச் சந்தனப் பொட்டு வைத்த நினைவுகள் இப்போதும் பசுமையாகவே இருக்கின்றன. அப்போது இயக்கம் என்ற சொல்லைத் தவிர வேறு ஏதும் அறிந்திராத வயது. தமிழ்த் தேசியம் என்னும் சொற்தொடரை நான் ஒருபேச்சுக்குத்தானும் கேள்வுற்றிராத கா

 

கடற்படையின் முன்னாள் தலைவரும் அவர் மனைவியும் (இருவருக்கும் 70க்கு மேல் வயதாகிறது) மகாராஷ்டிராவின் ஒரு கிராமத்திலிருந்து இந்தியாவின் தென் கோடியில் உள்ள ஒரு கிராமத்துக்கு எதற்காகப் பயணம் மேற்கொள்ள வேண்டும்? இரண்டு காரணங்கள்: அங்குள்ள மக்களுக்கு எங்கள் ஆதரவைத் தெரிவிக்கவும் கூடங்குளத்திலும் இடிந்தகரையிலும் உண்மையில் என்ன நடக்கிறது என்பதை அறிந்துகொள்ளவும் சென்றோம். குறிப்பாக மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளரான எஸ். பி. உதயகுமார் தாராப்பூரில் இருந்து ஜெய்தாபூர் வரை கடந்த ஏப்ரலில் யாத்திரை மேற்கொண்டதற்குப் பின்னர் இங்கு வரவேண்டுமென்ற எண்ணம் உறுதிப்பட்டது. உதயகுமார் உத்வேகமூட்டும் ஒரு தலைவர் என்பதில் சந்தேகமில்லை. போக்ரான்-மிமிக்குப் பிறகு மினியா போலிஸ் பல்கலைக்கழகத்தில் உரைய

 

I ஒரு செஞ்சோளம் அதன் இனிப்பை விளைவிக்கும்போது எனது கிழவி அந்த முரட்டுக் கிழவனை முத்தமிடுகிறாள் கிழவன் விரிசல்விட்டு காய்த்துப்போன விரல்களை அல்லது அவளது கருவை மழைக்காலத்தில் பெரும்பாறைகளை நகர்த்திய நிலத்தின் உதிரக் கசிவோடு விரும்புகிறான் அவளது சிசுவே தானியமென்கிறான் மழை பொழிகின்றது அவர்கள் முட்செடிகளை அகற்றுகிறார்கள் ஒரேயொரு பூசணிக்காய்க்கு அல்லது நாய்கள் தின்ன மறுக்கும் புடலங்காய்க்கு கிழவன் உறங்கும்போது பெரும்பாறைகளை முதுகில் சுமந்திருப்பவனைப் போல கிழவியைப் புணருகிறான் அவள் சிறு தானியங்களால் உயிர்பெற்ற வளர்ப்புப் பறவையை அவனுக்கு உணவாக்குகிறாள் இப்படித்தான் நண்பர்களே இந்த நிலத்தில் காதல் வளர்ந்தது ஒரு மொழியுங்கூட II கொடும் கோடையின் நீண்ட வறட்சியில் குழந

பதிவு: காலச்சுவடு நூல் வெளியீட்டு விழாக்கள்
 

தன் காலத்தை எதிர்கொள்வதில் மற்றவர்களிடமிருந்து ஒரு எழுத்தாளன் அல்லது அறிவுத்துறைச் செயல்பாட்டாளன் எப்படி வேறுபடுகிறான் எனக் கேள்வியெழுப்பினால் அவன் தன் காலத்தின் மீதான உரையாடல்களை உண்மை சார்ந்து முன்வைப்பதன் மூலம் என்பதே முக்கியமான பதில்களில் ஒன்றாக இருக்கக்கூடும். கடந்த பல பத்தாண்டுகளின் தமிழ் அறிவுத் துறை, படைப்புத் துறைச் செயல்பாடுகள் இதற்கான சான்றுகளாக உள்ளன. கடந்த கால் நூற்றாண்டுக் கால இடைவெளியில் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட எல்லாவகையான-அரசியல், பண்பாட்டு - நெருக்கடிகளுக்கும் படைப்பாளிகளும் அறிவுத்துறையினரும் தீவிரமான எதிர்வினைகளை ஆற்றியிருக்கின்றனர் எனத் தயக்கமின்றிச் சொல்லலாம். தமிழ்ச் சமூகம் முழுவதையும் தீவிரமாகப் பாதித்த ஈழப் பிரச்சினையில் தொடங்கி, தலித்துகள், பழங்

பதிவு
 

அது புத்தாண்டின் முதல் வேலை நாளைய மாலைப் பொழுது. சென்னைப் புத்தகக் காட்சியை முன்னிட்டு வெளியிடப்பட்ட கவிதை நூல்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட நிகழ்வது. கடந்த வருடம் இத்தகைய வெளியீடு கள் சென்னைப் புத்தகக் காட்சி அரங்கிலேயே நிகழ்த்தப்பட்டன. இவ்வருடம் அது சாத்தியப்படாததால் எழும்பூர் கன்னிமாரா நூலக அரங்கில் புத்தகங்கள் வெளியாயின. இளங்கோ கிருஷ்ணனின் பட்சியன் சரிதம், பூமா ஈஸ்வரமூர்த்தியின் நீள் தினம், இசையின் சிவாஜி கணேசனின் முத்தங்கள், குவளைக் கண்ணனின் கண்ணுக்குத் தெரியாததன் காதலன், தேவேந்திர பூபதியின் ஆகவே நானும் . . ., லாவண்யா சுந்தரராஜனின் இரவைப் பருகும் பறவை, மண்குதிரையின் புதிய அறையின் சித்திரம் ஆகிய ஏழு கவிதை நூல்கள் அன்று வெளியிடப்பட்டன. மெல்ல

பதிவு: காலச்சுவடு நூல் வெளியீட்டு விழாக்கள்
 

தன் காலத்தை எதிர்கொள்வதில் மற்றவர்களிடமிருந்து ஒரு எழுத்தாளன் அல்லது அறிவுத்துறைச் செயல்பாட்டாளன் எப்படி வேறுபடுகிறான் எனக் கேள்வியெழுப்பினால் அவன் தன் காலத்தின் மீதான உரையாடல்களை உண்மை சார்ந்து முன்வைப்பதன் மூலம் என்பதே முக்கியமான பதில்களில் ஒன்றாக இருக்கக்கூடும். கடந்த பல பத்தாண்டுகளின் தமிழ் அறிவுத் துறை, படைப்புத் துறைச் செயல்பாடுகள் இதற்கான சான்றுகளாக உள்ளன. கடந்த கால் நூற்றாண்டுக் கால இடைவெளியில் தமிழ்ச் சமூகம் எதிர்கொண்ட எல்லாவகையான-அரசியல், பண்பாட்டு - நெருக்கடிகளுக்கும் படைப்பாளிகளும் அறிவுத்துறையினரும் தீவிரமான எதிர்வினைகளை ஆற்றியிருக்கின்றனர் எனத் தயக்கமின்றிச் சொல்லலாம். தமிழ்ச் சமூகம் முழுவதையும் தீவிரமாகப் பாதித்த ஈழப் பிரச்சினையில் தொடங்கி, தலித்துகள், பழங்

பதிவு
 

காலச்சுவடு பதிப்பகத்தின் ஒன்பது நூல்கள் வெளியீட்டு நிகழ்வு ஜனவரி எட்டாம் தேதி புக் பாயிண்ட் அரங்கத்தில் நடந்தது. ஒன்பது நூல்களில் நான்கு இலங்கையைச் சேர்ந்தவர்களின் ஆக்கங்கள். அவற்றில் ஒன்று சிங்களத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட புதினம். புத்தகக் காட்சி தொடங்கி மூன்றாம் நாள் நடைபெற்ற இந்த நிகழ்வுக்கு எதிர்பாராத அளவுக்குப் பார்வையாளர்கள் வந்திருந்தனர். எந்தப் பரபரப்பும் இன்றி நடந்து முடிந்திருக்கிறது இந்தப் புத்தகக் காட்சி. திரைத் துறையினர், அரசியல்வாதிகள் பங்குபெறும் ஆடம்பரமான வெளியீட்டு நிகழ்வுகள், இலக்கிய சர்ச்சை எதுவும் இல்லை. புத்தகக் காட்சியில்கூட எழுத்தாளர்களை அதிகம் காண இயலவில்லை. முன்பைவிட வியாபாரரீதியிலும் இந்தப் புத்தகக் காட்சி தோல்வியைத் தந்திருப்பதாகச்

பதிவு:
க. திருநாவுக்கரசு  

‘‘நீதி மறுக்கப்பட்ட கதை: டாக்டர் பினாயக் சென்னின் போராட்டம்’’ நூல் ஜனவரி 20 அன்று மாலை 6 மணிக்குப் புது தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடந்த விழாவில் உச்ச நீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞரான பிரஷாந்த் பூஷனால் வெளியிடப்பட்டுத் தில்லி பல்கலைக்கழகப் பேராசிரியர் நந்தினி சுந்தரால் பெற்றுக்கொள்ளப்பட்டது. பல்கலைக் கழகப் பேராசிரியர்கள், மாணவர்கள் மற்றும் தில்லி வாழ் தமிழர்கள் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டனர். இந்நூலைத் தமிழில் மொழி பெயர்த்துள்ள க. திருநாவுக்கரசு இதே பல்கலைக்கழகத்தில் முனைவர்பட்ட ஆராய்ச்சியை மேற்கொண்டவர் என்பதால் இந்த விழா இங்கு நடப்பது மிகவும் பொருத்தமானதே என்றார் விழாவிற்குத் தலைமை ஏற்ற பேராசிரியர் கி. நாச்சிமுத்து. டாக்டர் சென்னின் மரு

 

எனக்குச் சின்ன வயதிலேயிருந்து சண்டைக்குச் செல்வதென்றால் மகிழ்ச்சியாக இருக்கும். ஒரு நிலையில் சண்டைக்கான புள்ளி உருவாகும். அப்படியே அதைப் பற்றி ஏறுவேன். சண்டை முகிழும் கணத்தில் எனக்குப் பரவச உணர்வு ஏற்படும். முடிந்தவரை மத்தியஸ்தர்களும் என்மேல் குறை சொல்லாத அளவுக்கு சூழ்நிலையை உருவாக்கிவிடுவேன். எங்கள் ஏரியாவில் சைட் அடிக்க வந்தவர்கள்மீதுதான் என் முதல் தாக்குதல் அமைந்தது. அதற்கு முன் படிக்கும்போது, சின்னச் சின்ன சண்டைகள். அவை எல்லாம் தற்போது சேர்த்தியில்லை. சைட் அடிக்க வந்தவர்களைப் பார்த்துக்கொண்டிருந்த நான், அவர்களைத் தனியாக நெருங்கினேன். அவர்கள், டைப் இன்ஸ்டியூட்டிற்குச் சென்று திரும்பும் செட்டியார் வீட்டுப்பெண் மீனலோசனியின் பின்னாலேயே வந்துகொண்டிருப்பவர்கள். அவர்கள் டீக்க

 

முன்பெல்லாம் நான் இப்படி ஒரு கனவு காண்பதுண்டு. ஓர் ஊர் அல்லது ஒரு நகரம். நான் அங்கே நடந்து சென்றுகொண்டிருப்பேன். அந்தச் சாம்பல் நிறக் கனவில் ஊர் நகரமாக அல்லது நகரம் ஊராக நொடிப் பொழுதில் மாறிக்கொண்டேயிருக்கும். கட்டடங்களின் அளவும் மனம் துணுக்குறா வண்ணம் மாறிக்கொண்டேயிருக்கும். அங்கு நிறைய மனிதர்கள் இருப்பார்கள். அவர்கள் எதையோ உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருப்பார்கள். நான் அவர்கள் அருகில் சென்று, என்ன செய்கிறார்கள் என்று வினவினால் பதில் சொல்லமாட்டார்கள். என்னைக் கண்டுகொள்ளவேமாட்டார்கள். அத்தோடு கனவு முடிந்துவிடும். அல்லது அதனுடன் வேறொரு கனவு தன்னைப் பிணைத்துக்கொள்ளும். கனவில் கண்ட நகரம் லாஸ் வேகாஸ்தான் என்பதை நான் அங்கே சென்றிருந்தபோது உணர்ந்தேன். லாஸ் வேகாஸில் உள்ள மனிதர

 

அனுபவம், அனுபவத்தின் உள்வாங்கல், உள்வாங்கல்களின் கனிவுத்தன்மைக்குரிய காலங்கள், அதன் பின்னரான இயல்பான வெளிப்பாடு ஆகியன ஒரு படைப்பின் செழுமைக்குரிய ஆதாரங்கள். கற்பனைக் குதிரையைத் தட்டிவிடுதல் என்னும் இலக்கிய வழக்கு எப்போதும் போலிகளுக்குரியது. போலிகள் நம்பகமின்மைக்குரியவை. இந்தப் போலிகளின் அதீதக் கற்பனையின் விரிவு விக்கிரமாதித் தன் கதை, மதனகாமராசன் கதை போன்றவற்றின் எல்லைகளையே இறுதியில் வந்தடையும் தன்மை கொண்டவை. இதனால் யதார்த்தப் படைப்பிலக்கியத்தில், அதன் கருவறை சுமந்துள்ள வாழ்வின் உக்கிரங்களிலும் வெம்மையிலும் அதீத ஈடுபாடு இருந்துவந்தது. தீர்மானகரமான முடிவுகள் எப்போதும் கலை இலக்கியங்களால் தோற்கடிக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றன என்பதைச் சமீப காலத்திய வாசிப்பு அனுபவம் மீண்டும்

 

இந்த வசீகரமான புத்தகத்தின் ஒரு பகுதி தோமஸ் என்ற சிறுவனின் பார்வையில், அவனுடைய மொழியில் சொல்லப்பட்டிருக்கிறது. தன் பைஜாமாவின் இடுப்பு எலாஸ்டிக் அறுந்துவிட்ட நிலையில், தன்னுடைய தந்தை உயிர் பிழைக்கும் வாய்ப்பற்ற நோய்வாய்ப்பட்ட நிலையில் தோமஸ் தன் அத்தை மார்ட்டினாவின் வீட்டிற்கு வந்துசேர்கிறான். அவனுடைய வயதிற்கே உரித்தான சூதுவாதற்ற எளிமையுடனும் கவர்ந்திழுக்கும் தனித்துவத்துடனும் தன்னைச் சுற்றி நடப்பவற்றைக் கூர்ந்து அவதானிக்கும் சிறுவனாக தோமஸ் வெளிப்படுகிறான். பூச்சிகளை ஆராயும் அவனது ஒன்று விட்ட அக்காவின் துணிகரமான செயல்களுக்குத் துணைபோகிறான். எண்ணிக்கையில் அருகிவரும் அபூர்வ நீலத்தும்பி வேட்டையில் அவளுடன் பங்கெடுத்துக்கொள்கிறான். அந்தக் கண்டுபிடிப்பு தன்னை உலகம் போற்றும் பேரறிவா

 

1 திருவனந்தபுரம் வாசியாக மாறிய இரண்டாயிரமாவது ஆண்டு முதல் - இடையில் சென்னைவாசம் காரணமாக விடுபட்டுப்போன ஒரு வருடத்தைக் கணக்கிலிருந்து கழித்தால் - பத்தாண்டுகளாக இங்கே நடைபெற்றுவரும் சர்வதேசத் திரைப்பட விழாவின் நிரந்தரப் பார்வையாளன் நான். எனினும் திரைப்பட விழாவின் இலட்சியப் பார்வையாளனல்லன். பெரும்பான்மையான திரைப்பட விழாப் பார்வையாளர்களைப் போலப் பசிநோக்காமல் கண் துஞ்சாமல் படம் பார்த்துத் தள்ளுபவனல்லன். மாநிலத்தின் வெவ்வேறு மாவட்டங்களிலிருந்தும் நாட்டின் பிற பகுதிகளிலிருந்தும் அபூர்வமாக வெளி நாடுகளிலிருந்தும் படம் பார்த்துக் கொண்டாடவே வரும் பார்வையாளர்களின் உற்சாகம் தொடர்ந்து வியப்பளிப்பதாகவே இருக்கிறது. கடந்த டிசம்பர் மாதம் நடைபெற்ற பதினாறாவது உலகப் பட விழா தொடர்பான அறிவிப்பு

 

ஜனவரி 22, காலை ஜெய்ப்பூர் இலக்கிய விழாவில் ஒரு புறம் Oprah Winfreyயின் திருவிளையாடல்கள் நடந்துகொண்டிருக்க அரங்கின் மறுபுறமாகக் கருத்தரங்கு ஒன்றை நடத்தும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. ‘இரண்டாவது சூரிய உதயம்: எதிர்ப்பு இலக்கியம்’ என்ற தலைப்பில் இடம்பெற்ற அக்கருத்தரங்கில் தெலுங்கானாவைச் சேர்ந்த தலித் எழுத்தாளர் சியாமளா, ஈழக் கவிஞர் சேரன், தமிழக எழுத்தாளர் சாரு நிவேதிதா, மலையாளக் கவிஞர் சச்சிதானந்தன் ஆகியோர் பங்கேற்றனர். அரங்கின் தொடக்கத்தில் கீழ்வரும் பத்தியை நான் வாசித்தேன். “நீ எந்த வகையான கருத்தோடு இருக்கிறாய்? சமரசம்செய்வதும், சமூகத்துடன் ஒத்துப்போவதாக இணங்கிப்போவதும், தப்பிப் பிழைப்பதற்காக உனக்கான சிறுவெளியைத் தேடுவதும் ஒருவகை அல்லது உறுதிகொண்ட நெஞ்சுட

 

"உண்மையைக் காண முயலும் தனி மனிதன் சமூகத்தின் விதிவிலக்கு: வாழ்க்கையின் பலிபீடம்"                                                  - புதுமைப்பித்தன் திரைப்பட வரலாற்றில் தனக்கென ஓரிடம்பிடித்துவிட வேண்டுமென்ற விருப்பம்தான் திரைப்பட இயக்குநர்களின் உந்துசக்தி. அதுதான் அவர்களைப் படத்தை இயக்கவைக்கிறது. அந்த உந்துசக்தியின் வீரியம் எப்போதுமே காத்திரமானதுதான். என்றபோதும் எல்லாப் படங்களும் வரலாற்றுப் பக்கங்களின் வரிகளாக மாறிவிடுவதில்லை. தங்களது மனத

 

தமிழ் எழுத்தாளர்கள் ‘பத்தி’ எழுதுவது என்பது அரிதாக இருந்த 1970களில், வாசகர்களின் கவனத்தைப் பெற்ற பத்திகள் என்று, ஜெயகாந்தன் வெகுஜனப் பத்திரிகைகளில் எழுதிவந்த ‘நினைத்துப் பார்க்கிறேன்’ ‘முன்னோட்டம்’ போன்றவற்றையும் கணையாழியில் என்.எஸ். ஜகந்நாதன் எழுதிய ‘என்னைக் கேட்டால்’ பத்தியையும் சுஜாதாவின் ‘கடைசிப் பக்க’த்தையும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். பரந்துபட்ட வாசிப்பு அனுபவம், நுட்பமான அவதானிப்பு, தெளிவும் வசீகரமும் முயங்கும் மொழி - ஆகியவற்றை என்.எஸ். ஜகந்நாதனின் எழுத்து - ஆஸ்திகள் என்று சொல்லலாம். புத்தியுள்ளவனுக்குத் தெளிவும், அறிவைப் பெற விரும்புகிறவனுக்கு யதார்த்தமும் ஆக இருக்கும் சாலொமோனின் நீதிமொழிகள் போன்றவை என்

 

காலச்சுவடு, கிருஷ்ணா ஸ்வீட்ஸ், கடவு இணைந்து மதுரையில் நடத்தும் அற்றைத்திங்கள் சாதனையாளர்களைச் சந்தியுங்கள் செப்டம்பர் மாத நிகழ்ச்சியில் திரைப்பட இயக்குநரும் எழுத்தாளருமான அம்ஷன் குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டார். சிறுபத்திரிகை வாசகர்கள் தனது எழுத்துகளைப் படித்திருக்கும் அளவிற்குத் தனது படங்களைப் பார்த்திருக்க வாய்ப்பில்லை என்பதால் அவற்றிலிருந்து சில காட்சிகளைத் திரையிட்டுப் பின்னர் தனது உரையைத் தொடங்கினார். திருச்சியில் பிறந்து வளர்ந்த தனக்குச் சிறு வயது முதலே படிக்கிற ஆர்வம் இருந்து வந்ததாகவும் கல்லூரியில் படித்த நாட்களில் சில சிறுகதைகள் எழுதியதாகவும் அவை தினமலரில் வெளிவந்ததாகவும் கூறினார். பின்னர் சிறுபத்திரிகைகள் படிக்க நேர்ந்ததையும் அதே காலகட்டத்தில் உலகத் தி

 

முன் சென்ற காலத்தின் சுவை எஸ். செந்தில்குமார் பக். 96. விலை: ரூ.75 (டிசம்பர் 2010) வெளியீடு காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி)லிட். 669, கே. பி. சாலை நாகர்கோவில் - 629 001 இன்றைக்குக் கவிதை விமர்சனம் என்பது மிகச் சிக்கலானதாக இருக்கிறது. விமர்சனம் என்பது கவிதைக்கும் வாசகனுக்குமான உறவு என்பதைவிட விமர்சகனுக்கும் கவிஞனுக்குமான உறவின் அளவுகோலாகிவிடும் துக்கங்களை எதிர்கொண்டிருக்கிறோம். சமூக ஊடகங்களின் ஆக்கிரமிப்பிற்குப் பிறகு கவிதை என்ற பெயரில் முன்வைக்கப்படும் தட்டையான அல்லது கவித்துவ மற்ற வரிகளைக் கொண்டாட வேண்டும் அல்லது மௌனமாக இருக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தங்கள் வாசகனுக்கு உருவாகிவிடுகிறது. கவிதையின் மீதான எந்த எதிர்மறையான விமர்சனத்தையும் பல கவிஞர்கள் ஏற்றுக்கொள்ளத் தயாரா

 

முல்லைப் பெரியாறு அணை தொடர்பாகத் தமிழகம், கேரளம் ஆகிய இரு மாநிலங்களில் பதற்றமான சூழ்நிலை உருவாக்கப்பட்டுள்ளது. இரு மாநில மக்களையும் ஒருவர்மீது ஒருவர் பகையுணர்வு கொண்டவர்களாக மாற்ற அரசியல்வாதிகள் முனைந்திருப்பது கண்டனத்திற்குரியது. இரு மாநில அரசுகளின் உரிமைப் பிரச்சினையாகக் கருதப்பட வேண்டிய முல்லைப் பெரியாறு விவ காரத்தின் வழி இரு மொழி பேசும் மக்களை எதிரிகளாக மாற்றும் அரசியல் தந்திரத்தை எழுத்தாளர்களாகிய நாங்கள் கண்டனம் செய்கிறோம். முல்லைப் பெரியாறு சிக்கல் நிர்வாகத் துறைகளாலும் பொறியியல் திறனாலும் நீதித் துறையாலும் தொலைநோக்கு அரசியலாலும் தீர்க்கப்பட வேண்டிய ஒன்று என்று கருதுகிறோம். ஒரே நாட்டின் இரு அண்டை மாநிலங்களின் பரஸ்பர எல்லையின் மறுபுறம் பேசும் மொழி சற்றே மாறிவிடுவதால்

 

‘திரைப்பட இயக்குநர்களான ஜேடி-ஜெர்ரி ஆகியோரது தந்தையரின் நினைவாக ராபர்ட்-ஆரோக்கியம் அறக்கட்டளை சார்பில் ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்படும் சாரல் இலக்கிய விருது இவ்வருடம் எழுத்தாளர்கள் வண்ணநிலவன் மற்றும் வண்ணதாசனுக்கு வழங்கப்பட்டது. இவ்விருது இதற்கு முன் எழுத்தாளர்கள் திலீப்குமார், ஞானக்கூத்தன், அசோகமித்திரன் ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ளது. எழுபதுகளின் மிக முக்கியமான சிறுகதைக் கலைஞர்களாக அறியப்பட்ட வண்ணநிலவனும் வண்ணதாசனும் குறிப்பிடத்தகுந்த கவிஞர்களுமாவர். தன் முதல் நாவலான கடல்புரத்தில் மூலம் முக்கியமான நாவலாசிரியர்களில் ஒருவராக அறியப்பட்ட வண்ணநிலவன் கம்பாநதி, ரெய்னீஸ் அய்யர் தெரு ஆகிய குறிப்பிடத்தகுந்த நாவல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளையும் எழுதியவர். தன் இலக்கிய

 

2011ஆம் ஆண்டுக்கான இயல் விருது எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. கனடாவில் இயங்கும் தமிழ் இலக்கியத் தோட்டம் அளிக்கும் இந்த வாழ்நாள் தமிழ் இலக்கிய சாதனை விருது சுந்தர ராமசாமி, கே. கணேஷ், வெங்கட் சாமிநாதன், பத்மநாப ஐயர், ஜோர்ஜ் எல் ஹார்ட், தாசீசியஸ், லக்ஷ்மி ஹோம்ஸ்ரோம், அம்பை, கோவை ஞானி, ஐராவதம் மகாதேவன், எஸ். பொன்னுத்துரை ஆகியவர்களைத் தொடர்ந்து இம்முறை எஸ். ராமகிருஷ்ணனுக்கு அளிக்கப்பட்டுள்ளது. விருது வழங்கும் விழா வரும் ஜூன் மாதம் டோரோண்டோவில் நடைபெறவுள்ளது. எஸ். ராமகிருஷ்ணனைக் காலச்சுவடு வாழ்த்துகிறது.

தலையங்கம்
 

அணு உலைக்கு எதிரான கூடங்குளம் மக்கள் போராட்டம் நான்கு மாதங்களைக் கடந்து தொடர்ந்து நடைபெற்றுவரும் சூழலில் போராட்டத்தை முறியடிக்க மத்திய அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கைகள் அருவருப்பானவையாக மாறிக்கொண்டிருக்கின்றன. இப்போராட்டத்தை முடக்குவதற்குப் போராட்டத்தை தேசவிரோதச் செயல் என அச்சுறுத்துவது, போராட்டத்துக்குத் தலைமை தாங்கும் சுப. உதயகுமார் உள்ளிட்டவர்கள் மீது அவதூறுகளைப் பரப்புவது, அவர்கள்மீது பொய் வழக்குகள் பதிவுசெய்வது எனப் பல வழிகளில் முயன்றுவரும் அரசு தற்போது போராட்டக்காரர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து பணம் வருவதாகவும் ஒரு தகவலைப் பரப்பிவருகிறது. கிறித்தவ சமயத்தைச் சேர்ந்த தொண்டு நிறுவனங்கள் சிலவற்றில் இரண்டு வாரங்களுக்கு முன்னர் நடத்தப்பட்ட சோதனையில் இது கண்டுபிடிக்கப்பட்டதாகவ

 

தலையங்கம் நம் நாட்டின் தற்போதைய தலை விதியை நொந்து எழுதப்பட்டுள்ளது. சரியான தலைமை இல்லாத நிலை இந்தியாவின் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு நிலையைத் தற்போது தடுமாறவே வைத்துள்ளது. மாநிலத் துவேஷங்களை ஒருபோதும் ஏற்காதவர்கள் தமிழர்கள் என்பது வரலாறு. அமரர் எம்ஜிஆரை எந்த விகற்பமும் இன்றி முழுமையான தமிழராக ஏற்றுக்கொண்டவர்கள் தமிழர்கள். இதைக் கேரள விசுவாசிகள் எண்ணிப் பார்க்க வேண்டும். இரு மாநில மக்கள்மீதும் அக்கறை உணர்வோடு தமிழ்நாடு முதலமைச்சர் இந்தப் பிரச்சினையை உணர்ச்சிப்பூர்வமாக அணுகாமல் உணர்வுபூர்வமாக அணுகிவருகிறார் என்பதே யதார்த்தம். அவரது அணுகுமுறை தொலைநோக்குப் பார்வை கொண்டது என்பதைக் கேரள மக்கள் உணர வேண்டும். இந்தியா புலிகளை அழித்ததா என்னும் கட்டுரை பல்வேறு நிலைகளை அலசினாலும் ஒரு

உள்ளடக்கம்