கட்டுரை
கோ. சுந்தர்ராஜன்  

“அறிவியலின் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்க முனைந்தால், புதியதாகப் பத்துப் பிரச்சினைகள் உருவாகும்” இது ஜார்ஜ் பெர்னார்ட்ஷாவின் கூற்று. உலகெங்கும் அணுசக்திக்கு எதிராக நடக்கும் போராட்டங்கள் இக்கூற்றை மெய்ப்பிக்கின்றன. மின்சாரம் என்னும் இந்தப் பிரச் சினையைத் தீர்ப்பதற்குக் கண்டு பிடிக்கப்பட்ட அணுமின் உலைகள் எதிர்பார்த்தபடி மின்சாரத் தேவையையும் நிறைவேற்றவில்லை என்பது கூடுதல் பிரச்சினை. இந்தப் புரிதலின் தொடர்ச்சியாகத்தான் நாம் கூடங்குளம் அணு மின்நிலையத்திற்கு எதிரான போராட்டத்தைப் பார்க்க வேண்டும். கூடங்குளம் அணு மின்நிலையத்தை மூட வலியுறுத்தி மக்கள் நடத்திவரும் போராட்டம் இதுவரை இத்தேசம் காணாத ஓர் எழுட்சி. தன்னெழுச்சியாக மக்கள் திரண்டு நடத்தும் இந்தப் போராட்டம் இப்போது ஒ

கட்டுரை
செல்லப்பா  

மின்பற்றாக்குறையால் தமிழகம் பெரும் நெருக்கடியைச் சந்தித்துள்ளது. பற்றாக்குறையைத் தீர்க்கவியலாமல் தமிழக அரசு தவிக்கிறது. தமிழக மக்களும் இந்தச் சிக்கலைக் கடந்துசெல்லும் வழி தெரியாமல் திண்டாடுகின்றனர். தமிழகத்தில் அமைந்துள்ள பஞ்சாலைகள், நூற் பாலைகள் போன்ற சிறு, குறு, நடுத்தரத் தொழிற்சாலைகள் தொடர்ச்சியான மின்வெட்டால் உற்பத்தித் தேக்கம் கண்டுள்ளன. விவசாயம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதில் தொழில் வளமும் விவசாய வளமும் மிகுந்த கொங்கு மண்டலம் அதிகப் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. கோடிக்கணக்கான ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. அறிவிக்கப்பட்ட மின்வெட்டல்லாமல் அறிவிக்கப்படாத மின்வெட்டாலும் தமிழகத்தின் தொழில்நடத்துநர்களும் தமிழக மக்களும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளனர். முறைப்படுத்த

கட்டுரை
பா. செயப்பிரகாசம்  

உலக அரங்கில் தேசிய இனங்களின் விடுதலைப் போராட்டங்கள் முற்றுப் பெற்றுவிட்டனவா என்னும் பொதுப்படையான ஒரு கேள்வியிலிருந்து தொடங்கலாம். அரசியல், பொருளாதார வல்லரசுகள் அவ்வப்போது புதிய உலக அரசியல் ஒழுங்கைத் தோற்றுவிக்க முயன்று வருகின்றன. உலகின் பொதுவான இயங்குதிசை வல்லரசுகளால் தலைமை தாங்கப்படும், அவற்றின் நலன்களை முன்னிறுத்தும் சக்திகளால் இயக்கப்படுவதாகவே இருந்து வருகிறது. அதை மக்கள் நலனை முன்னிறுத்தும், மக்களால் தலைமை தாங்கப்படும் சக்திகளால் இயக்கப்படுவதாக மாற்ற வேண்டிய கடப்பாடு நமக்குள்ளது. 2011இல் தெற்கு சூடானின் விடு தலையை உள்ளடக்கிய அண்மைக் காலம்வரையிலான நிகழ்வுகள் உலக அரங்கில் தேசிய இன விடுதலைப் போராட்டங்கள் இன்னும் முற்றுப் பெறாதவை என்பதை நிரூபிக்கின்றன. 1990களில் ஸ்லேவேனியா,

 

 இந்தக் கடிதம்தான் நான் உங்களுக்கு நேரே உங்கள் சொந்த முகவரிக்குத் தமிழில் எழுதும் கடிதமாகும். பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் உங்களுக்கு நேராக எழுதிய முதலாவது தமிழ்க் கடிதம் இதுவாகத்தான் இருக்கும் என்று எண்ணுகிறேன். நீங்கள் பாராளுமன்றத்தில் 23-3-67 அன்று பேசும்பொழுது ஆங்கிலம் தெரிந்த நான் உங்களுக்குத் தனித் தமிழில் கடிதம் எழுதுவதாகவும் நீங்கள் எனக்குத் தனிச் சிங்களத்திற் கடிதம் எழுதுவதாகவும் குறிப்பிட்டீர்கள். நீங்கள் இவ்வாறு பேசும்பொழுது நான் சபையில் இருக்கவில்லை. இருந்திருந்தால் உங்கள் கூற்று பிழையான கூற்று என உடனே சுட்டிக் காட்டியிருப்பேன். நான் பிரதம அமைச்சர் என்று முகவரியிட்டுத் தமிழில் கடிதங்கள் அனுப்பியிருக்கிறேன் . . . நீங்கள் அவற்றுக்குச் சிங்கள மொழியிலும் தமிழ்

எதிர்வினை
 

நாரதர்கள், சகுனிகள், கூனிகள் “யானை குழியில் விழும்போது தவளைகூடப் பின்னாலிருந்து ஓர் உதை கொடுக்கும்” என்றொரு பழமொழி உண்டு. இங்கே யதீந்திரா விடுதலைப் புலிகளுக்கு எதிரான தம் பங்களிப்பைச் செய்திருக்கும் நிலை அதை நினைவுபடுத்துகிறது. கட்டுரையாளர் குறிப்பிடும் நாரதர்களைவிட ஈழப்பிரச்சினையில் இந்தியாவின் தலைமையிலான சகுனிகள் நிறையவே உள்ளனர். ராமாயணக் கூனிக்குச் சற்றும் குறையாமல் சோனியாவின் செயல்பாடு அமைந்தது. “எனது அவதானிப்பிற்கு உட்பட்ட வகையில் ஈழப் போராட்டம் குறித்து சுயவிமர்சனத்துடன் கூடிய அரசியல் உரையாடல்கள் எவையும் தமிழகச் சூழலில் இடம்பெற்றதற்கான சான்றுகள் மிகவும் குறைவே.” யதீந்திராவின் இக்கூற்று அவருக்குத் தமிழகச் சூழல் குறித்த விஷய ஞானம் குறைவு என்பதையே

 

றஷ்மி கவிதைகள் ரவிசுப்ரமணியன் கவிதை விஸ்வாவா சிம்போர்ஸ்கா கவிதைகள்

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

‘நிலா, நிலா, ஓடிவா நில்லாமல் ஓடிவா மலைமேல் ஏறிவா மல்லிகைப் பூ கொண்டுவா’ இந்தப் பாட்டைப் பாடி எத்தனையோ தமிழ்ப் பெற்றோர்கள் குழந்தைகளுக்குத் தங்கள் கைகளால் உணவு ஊட்டியிருக்கிறார்கள். பரம்பரையாக இந்தியர் செய்துவந்த இந்தக் காரியம் இப்போது நோர்வேயில் பிரச்சினையை ஏற்படுத்தியிருக்கிறது. அழ. வள்ளியப்பாவின் இந்தப் பாட்டுக்கு ஒத்த வங்காளக் கவிதை இருக்கிறதா தெரியாது. ஆனால் தன்னுடைய சொந்தக் குழந்தைக்குக் கைகளால் உணவளித்ததால் நோர்வேயில் வசிக்கும் மேற்கு வங்காளத் தாய் ஒருவரிடமிருந்து அவருடைய குழந்தையைப் பிரித்து வளர்ப்புப் பெற்றோரிடம் ஒப்படைத்ததை ஊடகச் செய்திகள் மூலமாக அறிந்திருப்பீர்கள். அந்த நாட்டுக் குழந்தை வளர்ப்பு விதிகளை அனுரூப்-சாகாரியா பட்டாச்சாரியா தம்பதிகள் மீறிவிட்

கட்டுரை
பெருமாள்முருகன்  

சென்னையிலுள்ள ஆங்கிலோ இந்தியத் தனியார் பள்ளி ஒன்றில் இந்தி ஆசிரியர் உமா மகேஸ்வரியை ஒன்பதாம் வகுப்பு மாணவன் கத்தியால் குத்திக் கொலைசெய்த சம்பவம் தமிழ்ச் சமூகத்தின் பொதுமனத்தில் மிகப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதை வைத்துத் தலையங்கம், தலைப்புக் கட்டுரை, புலனாய்வுக் கட்டுரை எனப் பத்திரிகைகள் பரபரப்புச் செய்திகளை வெளியிடுகின்றன. தொலைக்காட்சி அலைவரிசைகள் அரை மணிநேரம், ஒரு மணிநேரம் என ‘நடந்தது என்ன?’ என்று துப்புத்துலக்கும் வேலையில் இறங்கியிருக்கின்றன. இந்த ஊடகங்கள் அனைத்தும் மொத்தமாக இப்போது கட்டமைத்திருக்கும் சித்திரம் இதுதான்: ஆசிரியர் உமா மகேஸ்வரி தமக்குக் கிடைத்த வங்கி வேலையை உதறிவிட்டு ஆசிரியப் பணியில் ஈடுபாட்டோடு சேர்ந்தார். அவர் மிகவும் அர்ப்பணிப்பு உண

சிறுகதை
எஸ். செந்தில்குமார்  

நான் உன்னைத் தேடி வந்திருக்கிறேனா நீ என்னை வரவழைத்திருக்கிறாயா? இப்போதும்கூட இக்கேள்வியின் புதிர் அவிழ்க்க முடியாத முடிச்சைப் போலிருக்கிறது. உன்னருகில் நிற்பதும் உனது வீட்டு வாசற்கதவை உரிமைப்பட்டவனைப் போலத் திறந்து வருவதும் வெளியேறுவதும் எதன் பொருட்டு? எந்தப் புதிரின் சூட்சுமம் எனத் தெரியவில்லை. கேள்விகள் தாம் எத்தனை விதமானவையாக இருக்கின்றன. நமக்கான பதில்கள் யாவையும் ஒன்று தானே? உனது நொம்பலத்தின் புரிதலற்றவனாக வாசற்கதவை மூடி வந்திருப்பதாக நீ நினைத்துக்கொண்டிருக்¢கிறாயா? நூறு பேரின் கண்கள் உன்னைத் தொடர்வதுபோலத்தான் என்னையும் துரத்துகின்றன. எனது வழியாக உன்னைப் பற்றிய கேள்விகளுக்கான, ஐயங்களுக்கான பதிலை அடையவும் இல்லை. எனது வழியாக உன் இருப்பிடம் வந்தடையவும் துரத்துகின்றன.

கட்டுரை: விஸ்வாவா சிம்போர்ஸ்கா (1923 - 2012)
அனிருத்தன் வாசுதேவன்  

“தினசரி வாழ்வில், நாம் நின்று நிதானமாக ஒவ்வொரு சொல்லையும் கருதாத நிலையில் ‘சாதாரண உலகம்’, ‘சாதாரண வாழ்க்கை’, ‘சாதாரண நிகழ்வுகள்’ போன்ற சொற்றொடர்களை அனைவரும் பயன்படுத்துகிறோம். ஆனால் ஒவ்வொரு சொல்லும் கவனமாக அளவிடப்படும் கவிதையின் மொழியில் எதுவுமே சராசரியானதோ சாதாரணமானதோ அன்று. எந்தச் சிறு கல்லும் அதன் மேலுள்ள எந்த மேகமும் சாதாரணமன்று. எந்த பகலும் அதைத் தொடர்ந்து வரும் எந்த ஓர் இரவும்கூட. எல்லாவற்றுக்கும் மேலாக எந்த வாழ்வும் சாதாரணமன்று. உலகில் எவருடைய வாழ்வுமே சாதாரணமன்று.” விஸ்வாவா சிம்போர்ஸ்கா நோபல் பரிசு ஏற்புரை, 1996 போலிஷ் மொழிக் கவிஞர் விஸ்வாவா சிம்போர்ஸ்கா கடந்த பிப்ரவரி ஒன்றாம் நாள் மரணமடைந்தார். இந்த அற்புதமான கவிஞர

புத்தகப் பகுதி
பழ. அதியமான்  

டாக்டர் பெருமாள் வரதராஜுலு நாயுடு (1887-1957) நவீன தமிழகத்தின் சமூக, அரசியல், பத்திரிகை உலகில் அரை நூற்றாண்டுக் காலம் பல முன்னோடிச் செயல்களை ஆற்றிய பேராளுமை. சமூக சமத்துவம் நோக்கி சேரன்மாதேவி குருகுலம் தொடங்கிக் குலக்கல்வித் திட்டம்வரை; நாட்டுவிடுதலைக்காக ஹோம்ரூல் தொடங்கி சென்னை மாகாண சங்கம், சைமன் குழு விலக்கு, நீல் சிலை அகற்றம் உப்புச் சத்தியாகிரகம்வரை இந்நூற்றாண்டின் முதல் அரைப் பகுதியின் அனைத்துப் போராட்டங்களிலும் முதல் கொடி உயர்த்திய முன்னணிப் போராளி. தென்னாட்டுத் திலகர் என வ. உ. சியும், தமிழ்ப் பெரியார் என வ. ரா. வும் இவரைக் கொண்டாடினர். அரசியலையும் மொழியையும் ஜனநாயகப்படுத்திய செயலாளுமை. பிரபஞ்சமித்திரன், தமிழ்நாடு பத்திரிகைகளின் ஆசிரியர். இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழைத்

கட்டுரை
நாகரத்தினம் கிருஷ்ணா  

கபி க்ரெஸைச் (Gaby Kretz) சந்திப்பதற்கு முன்பு அவருடைய குழந்தைகளைச் சந்திக்க நேர்ந்தது. முதல் சந்திப்பு ஒரு பிற்பகலில் ஜீவனுள்ள அந்தி வெயிலின் திரைமறைவில் ஒரு தேவாலயத்தில் நிகழ்ந்தது. அவருடைய குழந்தைகள் குழப்படியற்ற குழந்தைகள். பிரபஞ்சம் அங்கே படிமங்களாக உயிர்பெற்று அசைந்தன. மானுட உயிரியக்கத்தின் குறியீடுகளாகக் காபி கிரெட்ஸ் என்ற பெண் சிற்பக் கலைஞர் சமைத்திருந்த சிற்பங்கள் இருக்கக் கண்டேன். கலை நுணுக்கமும் அழகியல் பார்வையும் ஒருங்கே அமைந்த படைப்புகளென அவற்றைச் சொல்ல வேண்டும். அமைதியும் சன்னமான மின்சார ஒளியும் குடிகொண்டிருந்த சூழலில் நீந்தியபடி சிற்பங்களை வரிசையாக நண்பருடன் பார்த்து முடித்து நிமிர்ந்தபோது சிட்டுக் குருவிகள் முணுமுணுப்பதுபோலக் குரல்கள். நண்பர் அவர்தான் என்றார்

பதிவு: அற்றைத் திங்கள், மதுரை, 18.12.2011
ஆத்மார்த்தி  

காலச்சுவடு - கிருஷ்ணா ஸ்வீட்ஸ் மாதா மாதம் மதுரையில் நடத்திவரும் அற்றைத்திங்கள் நிகழ்வில் தவறாது கலந்துகொள்ளும் எனக்குச் சென்ற மாதம் சூழலியல் ஆய்வாளரும் பல்வேறு புத்தகங்களை எழுதியுள்ளவரும் திரைப்படக்கலை ஆய்வாளருமான தியடோர் பாஸ்கரன் கலந்துகொண்ட நிகழ்வு உன்னதமான அனுபவத்தைத் தந்தது. நிரம்பிய அரங்கின் முன் மேடையில் பாஸ்கரன் தன் வாழ்க்கைப் பதிவைச் சுருக்கமும் தெளிவுமாக முடித்துக் கொண்டு நேரடியாக சினிமா பற்றிய தனது தனிப்பொழிவைத் தொடங்கினார். பல வருட காலக் கண்டறிதலும் நிராசைகளும் கலந்ததொரு குரலில் அவர் “தமிழ் சினிமாவில் அன்றிலிருந்து இன்றுவரை பாடல்களின் ஆதிக்கம் பெருமளவு இருக்கிறது என்றே நான் கருதுகிறேன். திரைப்படத்தில் பிம்பங்களின் மூலம் கதை சொல்லல் அவசியமாகிறது. ஆனால் பெர

சிற்றிதழ் அறிமுகம்
மண்குதிரை  

தேய் வழக்கிலிருந்து விடுபட்டுத் தமிழ்ப் புனைவு வெளி ஓர் ஆரோக்கியமான இடத்திற்கு நகர்ந்துகொண்டிருக்கிறது. புனைவுக்கான சரடை நாம் விதந்தோம்பிய முந்தைய தலைமுறைப் பார்வைகளால்தாம் முன்வைக்கிறோம். அதைத் தவிர்த்து ஒரு புனைவை எழுத்தாக்குவதில் உள்ள புதிய தொழில்நுட்பம்தான் இன்றைக்கு அவசியமாக இருக்கிறது. பதினைந்து நாடுகளின் குறிப்பிடத்தக்க ஆக்கங்களோடு வெளிவந்திருக்கும் வலசை, கதையைச் சொல்வதில் உள்ள புதிய அம்சங்களை தமிழ்ச் சூழலுக்கு அளிக்கிறது. ஏற்கனவே தமிழ்ச் சூழலுக்கு அறிமுகமாகியுள்ள ஜோஸா சரமாகுவின் பார்வையின்மை நாவல் பகுதியை வி. பாலகுமார் மொழிபெயர்த்துள்ளார். ஜ்யோவ்ராம் சுந்தர் மொழிபெயர்த்துள்ள புக்கோவெஸ்கியின் கவிதை சுவாரசியமளிக்கிறது. கவிதா முரளிதரன் மொழிபெயர்த்துள்ள அரேபியப் பெண் கவ

திரை
செல்லப்பா  

தேசிய விருது பெற்ற பசங்க திரைப் படத்தை இயக்கியவர் பாண்டிராஜ் என்பதாலும் சின்னத் திரையில் தனது எள்ளல் மிக்க பாணியின் காரணமாகப் பெரும்பாலானோரின் கவனத்தை ஈர்த்திருந்த சிவகார்த்திகேயன் கதாநாயகனாக அறிமுகப்படுத்தப்பட்டிருந்ததாலும் வெளியாவதற்கு முன்பே பிரத்யேகக் கவனம்பெற்றிருந்தது மெரினா. ஒரு திரைப்படம் வெளியாகும் முன்பும் வெளியான பின்பும் அதைப் பற்றிக் கட்டமைக்கப்படும் உரையாடல்கள் சின்னத் திரையில் பரவலாக இடம்பெறுவது வாடிக்கையாகிவிட்டது. இது ஒருவகையான வியாபார உத்தி. பெரிய திரை, சின்னத் திரை இரண்டும் இதனால் பயனடையுமென நம்பப்படுகிறது. அத்தகைய நிகழ்ச்சிகளில் திரைப் படத்தைப் பற்றி வெளிப்படுத்தப்படும் கருத்துகள் அதைச் சந்தைப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருக்கும். மெரினா பற்றிய முன்னோட்

தலையங்கம்
 

‘இருவாரங்களுக்கு முன்னர் நாளிதழ்களில் இடம்பெற்ற இரண்டு செய்திகள் பெண்களின் பாதுகாப்பு குறித்த கவலைகளைத் தீவிரப்படுத்தியிருக்கின்றன. சென்னையைச் சேர்ந்த இளம் பெண் ஒருவர் தன் காதலனாலும் அவருடைய நண்பர்கள் மூவராலும் பாலியல் வன்முறைக்குள்ளாக்கப் பட்டுள்ளார். வறிய நிலையிலுள்ள அவருடைய தாயார் கொடுத்த புகாரின் பேரில் கைதுசெய்யப்பட்டுள்ள நால்வரில் இருவர் 18 வயதுகூட நிரம்பாதவர்கள். மதுரையில் தன் சொந்த மகளைப் பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயன்ற நபரை அவர் மனைவி கிரிக்கெட் மட்டையால் தாக்கிக் கொலைசெய்த நிகழ்வு இரண்டாவது செய்தி. பெண்களின் மீதான வன்முறைகள் குறித்து நாளிதழ்கள் இவற்றைவிட மோசமான செய்திகளைத் தொடர்ந்து பிரசுரித்து வருகின்றன. வட மாவட்டத்திலுள்ள சிறு நகரொன்றில் பள்ளி மாணவிகள்

 

கண்ணோட்டம்: கருத்தும் மறுப்பும் எதிர்ப்பும் கண்ணோட்டம்: இயல் விருதுக்குச் சில பரிந்துரைகள்

 

பிப்ரவரி 2012 இதழில் யதீந்திராவின் ‘துரோகி: ஈழ அரசியலின் பூமறாங்’ என்னும் கட்டுரை ஆழமாகவும் வெகுவான விவரங்களுடனும் இருக்கிறது. ஒரு குறை நடை தடுமாற வைக்கிறது. ஒருமுறைக்கு இருமுறை வாசித்துத் தெளிவுபெற நேரிட்டது. இதோ இங்கே இந்தியாவில் இன்று பார்க்கிறோம். கிழக்கு ஐரோப்பிய நாடுகளில், சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட் கட்சிகள் பதவி இழந்தன. அந்தப் புரட்சி ஒரு துளி ரத்தம் சிந்தாமல் ஒடுங்கி மடிந்தது. காரல் மார்க்ஸ் மறுக்கப் படலானார். கம்யூனிஸப் பதாகையை உயர்த்திப் பிடித்துக் கோஷமிட்டுக் கொண்டிருந்த இந்திய இடதுசாரிகள் வெகுவாகச் சோர்வுற்றனர். உயர்த்திப் பிடிக்க, கோஷமிட ஏதாவது ஒன்று வேண்டுமே! தமிழ்நாட்டுத் தீவிர கம்யூனிஸ்ட்களுக்குக் கிடைத்தவர் பெரியார். எவருடைய சீர்திருத்தக் கொள்கை

உள்ளடக்கம்