அயல் தமிழ் இலக்கியம்
அந்துவன் கீரன்  

ஸ்ரீலங்கா இனவாத அரசு தமிழ்த் தேசத்தின் இருப்பைச் சிதைத்து, தமிழ்ப் போராளிகளை நிராயுதபாணியாக்கி, தனது ஆயுத பலம் கொண்டு அடக்கிவிடக் கடுமையாகப் பிரயத்தனப்பட்ட சூழலில் தமிழ், சிங்களப் பேரினவாதத்தின் கால்களுக்குக் கீழே துப்பாக்கி முனையில் நசுக்கப்பட்டு, ஒடுக்கப்பட்டு உரிமைகள் மறுக்கப்பட்ட இனமான முஸ்லிம்களின் வலிகளும் அலறல்களும் 1980களின் பிற்பகுதியில் நவீனக் கவிதையாகப் பரிணமித்தது. வதையுண்ட மனித வாழ்வின் அவலங்களைப் பாடும் இக்கவிதைகள் வாழ்வுக்கும் இறப்புக்குமிடையிலான மையத்திலிருந்து எழுகின்றன. துயருற்று அலையும் மனித ஆன்மாக்களின் குரலாக ஒலிக்கும் இவை கொடுமைகள் நிறைந்த அவலப்பரப்பின் அனுபவங்களையும் அவற்றை எதிர்கொண்ட முறைகளையும் எடுத்துரைக்கின்றன. மீள முடியாத புதைகுழிக்குள் சிக்குண்ட

அயல் தமிழ் இலக்கியம்
சு. யுவராஜன்  

முதலில் 2000ஆம் ஆண்டுக்கு முன்பான மலேசிய இலக்கியப் போக்குகளைப் பார்ப்பதன் மூலம் அதற்குப் பின்பான மாற்றங்களைத் தெளிவாக அறிந்துகொள்ளலாம். 2000ஆம் ஆண்டுக்கு முன்பான மலேசிய இலக்கியத்தின் போக்குகள் எழுபதுகள்வரை யதார்த்த எழுத்துக்களை ஒட்டியே இருந்தன. கூலிகளாக மலேசியாவிற்கு வந்த தமிழர்கள் பெரும்பாலானோர் எழுபதுகள்வரை தோட்டப்புறங்களை நம்பியே வாழ்ந்தனர். பல்கலைக் கழகம்வரை தமிழ்ப் பட்டப்படிப்பு இருந்தாலும், அதைக் கற்று இலக்கியம் படைக்க வந்தவர்களின் எண்ணிக்கை சொற்பமே. இன்னொரு பக்கம் எழுதியவற்றை வெளியிட நாளேடுகளையும் வெகுஜன இதழ்களையுமே நம்பியிருக்க வேண்டிய சூழல். அதுவும் நாளேடுகளில் படைப்புகள் ஞாயிறுக்கிழமைகளில் மட்டுமே வெளிவரும். இவை தமிழர்களின் பிரச்சினைகளை முன்வைக்கும் எழுத்துக்களையே

அயல் தமிழ் இலக்கியம்
மு. பொ.  

இன்றைய ஈழத்து இளந்தலைமுறை எழுத்தாளர்களுள் மிக முக்கியமானவர்களாக நான் கருதுவது இருவரை. ஒருவர் இராகவன். அடுத்தவர் திசேரா. இவ்விருவரும் தாம் எழுதும் விஷயங்களை ஆழமான தளங்களுக்கு எடுத்துச் செல்வதாலும் அதற்கேற்ற முறையில் வித்தியாசமான எடுத்துச் சொல்முறையைக் கையாள்வதாலும் இன்றைய தீவிர வாசகர்களின் கவனத்துக்குள்ளாகின்றனர். இவர்களுள் இராகவன் ஒரு படி மேலே போய் வழமையான எழுத்தாளர்கள் “கலையற்றவை”யென எவற்றையெல்லாம் ஒதுக்கிவைக்கிறார்களோ அவற்றையெல்லாம் கலைத்துவப்படுத்திக் காட்டியுள்ளார். குறிப்பாக நம் எழுத்தாளர் கையாளச் சங்கோஜப்படும் பாலியல் விஷயங்களை இவர் எடுத்தாண்ட முறை பலவகையான அபிப்பிராயங்களை மேலாட வைத்துள்ளன. சிலரை இது ‘அசிங்கம்’ என அலற வைத்துள்ளது. விஷயமறிந்த இள

அயல் தமிழ் இலக்கியம்
கருணாகரன்  

(காவுகொள்ளப்பட்ட வாழ்வு முதலாய கவிதைகள் - 2002, ஆயிரம் கிராமங்களைத் தின்ற ஆடு - 2005, ஈதேனின் பாம்புகள் - 2010, ஈ தனது பெயரை மறந்துபோனது - 2012 ஆகியவற்றை முன்வைத்து) 1990களின் நடுப்பகுதியில் ஈழத்தில் எழுதத் தொடங்கியவர் றஷ்மி. அவர் ஓவியத் துறையிலும் இயங்கினார். கலையின் இரண்டுவகைச் சாத்தியங்களிலும் தொடர்ந்து இயங்கும் அவர் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்குள் இரண்டிலும் தன்னைத் தனித்து அடையாளப்படுத்தியிருக்கிறார். கூடவே இரண்டு சாத்தியங்களிலும் தன்னை நகர்த்திக்கொண்டேயிருக்கிறார். நகர்ந்து கொண்டிருக்கும் கலைஞனால் ஒரே விதமாக இருக்க முடியாது. ஒரே புள்ளியிலும் நிற்க முடியாது. றஷ்மியின் முந்தைய ஓவியங்களுக்கும் பிந்தைய ஓவியங்களுக்கும் இடையில் உள்ள வேறுபடும் தன்மைகளை வைத்து இதைப் புரிந்து

அயல் தமிழ் இலக்கியம்
க. மோகனரங்கன்  

தனக்குத்தானே சொல்லிக்கொள்வதுதானாலும் சரி, பிறரை விளித்துச் சொல்வதாக அமைந்தாலும் சரி, கவிதையின் குரல் எப்போதுமே தனிமையானதுதான். அதன் காரணமாகவே அக்குரலுக்கு ஒருவித அந்தரங்கம் கூடிவருகிறது. அதனாலேயே கவிதையின் வரிகள் பல சமயங்களில் உணர்ச்சியின் ஆழமும் உண்மையின் ஒளியும் கூடியவையாக நமக்குத் தென்படுகின்றன. தவிர ஒரு கவிஞரின் பால், மொழி, இன, சமய, பிரதேச அடையாளங்களும் கரு மற்றும் உரிப்பொருளாக அவருடைய படைப்புகளில் வெளிப்படுவதும் இயல்பானதே. எனினும் அந்த அடையாளங்களைக் கடந்து, காலத்தின் வெளிப்பாடாக, மனசாட்சியின் குரலாக, மேலான நீதியுணர்வுடன் வெளிப்படும்போதே அது அசலானதொரு கவிதையாகிறது. ஆதித்துயர் ஃபஹீமாஜஹான் பக். 136 விலை: ரூ.100 (2010) வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி)லிட். 669

கட்டுரை
 

ஓட்டு தேடும் அதிகார வெறியர்களும் பரபரப்புச் செய்திகளில் மயங்கும் ஊடகங்களும் சேர்ந்து அவிழ்த்துவிட்டிருக்கும் மிதமிஞ்சிய பீதியில் உருவான பதற்றத்தை முல்லைப் பெரியாறு அணைக்கட்டு முதல் எர்ணாகுளம் வரையிலான பகுதியில் வாழும் மலையாளிகள் இன்று அனுபவித்துக்கொண்டிருக்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணையின் வரலாற்றையும் அதன் மூலம் உண்டான நன்மை தீமைகளையும் புறவயமாகப் பார்த்தும் இன்றைய சிக்கலான நிலைமையில் மாற்றத்தை ஏற்படுத்த என்னசெய்ய முடியுமென்று சிந்தித்தும் அவசியமான செயல்களை நோக்கிச் செல்வதே இன்றைய தேவை. அதைப் போலவே பழமையான அணை தொடர்பாகச் சில நியாயமான அச்சங்கள் மலையாளிகளுக்கு உள்ளன என்பதை அணையின் மூலம் பயன் பெறும் தமிழ் மக்களுக்குப் புரியச் செய்து அவற்றைப் போக்கவும் தயாராக வேண்டும். இந

சிறுகதை
 

குயிலாத்தாள் (எ) மயிலாத்தாள் பொழுது உச்சிக்கு ஏறுவதற்கு முன்பே திண்ணைக்கு வந்துவிடுவாள். ஓட்டுச்சாய்ப்புக்குக் கீழே வெயில் திண்ணையின் மேல் ஏறியும் ஏறாமலும் அலைந்துகொண்டிருக்கும். முன்னாலிருந்த இரண்டு வீடுகளும் இடிந்து குட்டிச் சுவராகிவிட்ட பின்பு ஊரின் தலைவாசல் தெளிவாகத் தெரிகிறது. அங்கே நினைவு தெரியத் தொடங்கும்போது சிறு கொம்புகளாய் இருந்த வேம்பும் பூவரசும் காலத்தின் வடுதாங்கிப் பெரிதாய்க் கிளை பரப்பி நிற்கின்றன. விநாயகனுக்குக் கோவில் கட்டியபோது வேம்பை உள்வைத்து சுற்றுத் திண்ணையும் கோவில் வாசலில் நீண்ட கல் திண்ணைகளும் அமைத்த நாட்கள் நினைவுக்கு வந்தன. உட்கார்ந்து கால் மரத்துப் போகையில் தடியூன்றிக்கொண்டு தலைவாசலுக்குப் போய்விடுகிறாள். தெற்கே பார்த்தால் கண் மங்கும் தூரத்தில் ச

திரை
ரதன்  

சுமார் 15 வருடங்களுக்கு முன்னர் ஒரு கோடை நாளில் கியுபெக் நகருக்குச் சற்றுத் தள்ளி உள்ள Obedjiwan First Nation பூர்விக இந்தியரின் கிராமத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு எங்களுக்குப் பல விடயங்களைத் தெரியப்படுத்திய அதிகாரி எங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்டார். ‘என் நிறம் ஏன் வெள்ளையாகவுள்ளது?’ நாங்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டபோது அவரே பதிலையும் கூறினார். ‘என் மூதாதையர் பிரெஞ்சுப் படைகளால் பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டனர். அதன் வழியில் வந்தவன் என்பதால் என் நிறம் வெள்ளையாகவுள்ளது. அது மட்டுமல்ல எங்களின் பல சந்ததிகளை அழித்துவிட்டார்கள். எங்களது தொகை குறைவாக இருப்பதற்குத் திட்டமிட்ட இன அழிப்பே காரணம்’ எனத் தெரிவித்தார். வட அமெரிக்கப் பூர்விக இந்திய

ஓவியங்கள்: ஞானப்பிரகாசம்  

1. உனது ரகசியங்களை வெறுக்கவும் தவிர்க்கவும் துவங்கினேன் அவை என் கண்களுக்குப் பின்னால் தனக்கு விருப்பமானதை தேடிக்கொள்வதை அறிவேன் எனது பனி உன் கிளைகள் மேல் பொழிந்ததையும் நித்திரை உன் வீட்டின் உச்சியில் தங்குகிற மேகத்தொடு தவித்ததையும் இளமை யாராலும் மீட்டெடுக்க இயலாத வெறுமைக்குள் இடறியதையும் ஒரு மெல்லிய அப்பத்தை விழுங்குவதெனச் சுவைத்துக்கொள் இரகசியங்களையே நெய்யென உருக்கி என்றேனும் எனக்குப் பரிமாறுவாய் நீ என் நினைவோடு இருப்பாய் அல்லது வேறு யாரின் நினைவிலும் கூட எனக்காக வாழ்ந்தான் இவன் - என எந்த மனிதனையும் யாராலும் காட்ட இயலாது நான் என் நாய்க் குட்டிகளின் கண்களுக்குள் வசிப்பதில் நிறைவுருகிறேன் எனது அறைக்குள் நுழைந்த தனித்த காற்றில் அகலின் நிழல் வவ்வாலாய் அலைகிறது 2. உன் காதலியி

மண்குதிரை  

ஒரு புனைவின் உரையாடலுக்கும் வாசகனுக்கும் உள்ள இடைவெளியை நவீன மொழியின் விவரணைகள்தாம் நிரப்புகின்றன. அதுபோல உரையாடல்களுக்கு இடையிலான திரைமொழி நுட்பமானது; பார்வையாளனை ஒன்றிணைக்கக்கூடியது. அம்மொழியை ஒரு திரைப்பிரதிக்குக் கடத்துவது சுலபமல்ல. ஆனால் அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறது அவள் அப்படித்தான் திரைக்கதைத் தொகுப்பு. எழுபதுகளின் இறுதியில் வெளிவந்த இப்படம் தமிழ்த் திரையில் புதிய சலனங்களை ஏற்படுத்தியது. திரைப்படக் கல்லூரி மாணவரான ருத்ரய்யா இயக்கிய இப்படத்தின் வசனத்தில் இயக்குனர் கே. ராஜேஸ்வரும் பங்காற்றியுள்ளார். அதில் பங்கெடுத்த மற்றொருவர் எழுத்தாளர் வண்ணநிலவன். மௌனத்தின் இடைவெளியையும் பார்வையாளர்களின் கோணத்தையும் கவனமாகத் தொகுத்துள்ளார் யுகன். தியாகு, அருண் என்னும் பாத்திரப்ப

மதிப்புரை
உமா வரதராஜன்  

நிழலின் தனிமை தேவிபாரதி் பக். 176. விலை: ரூ.125 (2011) வெளியீடு: காலச்சுவடு பப்ளிகேஷன்ஸ்(பி)லிட். 669, கே. பி. சாலை நாகர்கோவில் - 629 001 அண்மையில் வெளியான புனைவுகள் பலவும் அயர்ச்சியான வாசக அனுபவங்களையே எனக்குத் தந்துகொண்டிருந்தன. சில புதினங்களில் கதை என்ற அம்சத்துக்குத் தந்த முக்கியத்துவத்தில் ஒரு சதவிகிதத்தைக்கூட அழகியலுக்கும் மொழியின் செழுமைக்கும் வழங்க படைப்பாளிகள் அக்கறை எடுத்துக்கொண்டதாகத் தெரியவில்லை. இன்னும் சிலவற்றில் வண்டியோட்டி இல்லாமல் மொழியின் அலங்காரமும், வித்துவ கர்வமும் இரு மாடுகளைப் போல படைப்பை நகர்த்திச் சென்றன. இவற்றுக்கு நடுவில்தான் தேவிபாரதியின் நிழலின் தனிமை நாவல் தனித்துவமான அடையாளத்தைப் பெறுகிறது. தேவிபாரதியின் இந்நாவல் ஜீவகளையிழந்த சொற்கள

அஞ்சலி: ஹெப்ஸிபா ஜேசுதாசன் (09.04.1925 - 10.02.2012)
அம்பை  

ஹெப்ஸிபா ஜேசுதாசன் மறைந்த தருணத்தில் காலஞ்சென்ற தன் அன்புக் கணவர் பேராசிரியர் ஜேசுதாசனைப் பற்றிக் கட்டாயம் நினைத்திருப்பார். பேராசிரியரைத் தவிர ஹெப்ஸிபாவின் மனத்தை முற்றிலும் வியாபித்த நபர் ஒருவர் உண்டென்றால் அது கம்பன்தான். வெகு ஆண்டுகளுக்கு முன் நான் அவரிடம் பேசிய போதும் 2003இல் ஸ்பாரோவுக்காக மங்கை அவரை பேட்டிகண்டபோதும் அவர் உருகி உருகிப் பேசியது கம்பனைப் பற்றித்தான். இந்தக் கம்பன் ஆராதனை தொடங்கியது அவர் பேராசிரியர் ஜேசுதாசனை மணந்த பிறகுதான். பேச ஆரம்பிக்கும்போதே கம்பன் பேச்சில் நுழைந்துவிடுகிறார். அந்தப் பேட்டியில் கங்கை காண் படலம் பற்றிப் பேச ஆரம்பிக்கிறார். ‘நம்பியும் என் நாயகனை ஒக்கின்றான் . . .’ என்னும் பாட்டில் ஆரம்பித்துத் தன் கணவர் மூத்த மகனுக்கு நம்பி எ

பதிவு: இந்திய மருத்துவக் கழக அரங்கு. அற்றைத் திங்கள், மதுரை, 20.11.2011
குமரன்  

மதுரையில் காலச்சுவடு, கிருஷ்ணா ஸ்வீட்ஸ், கடவு இணைந்து நடத்தும் சாதனையாளர்களைச் சந்தியுங்கள் அற்றைத் திங்கள் நிகழ்ச்சியில் நவம்பர் மாதச் சிறப்பு விருந்தினராகப் பேராசிரியர் க. பூர்ணச்சந்திரன் கலந்துகொண்டார். தமிழில் அழுத்தமான பங்களிப்புகளைச் செய்திருந்தும் அதிகமாக அறியப்படாத, தன்னை முன்னிறுத்திக்கொள்ளாத ஆளுமையான பூர்ணச்சந்திரனின் பங்கேற்பு முக்கியமானதாகப்பட்டது. தான் கவனிக்கப்படவில்லை என்பது உண்மைதான். அதேவேளையில் கவனிக்கப்பட வேண்டிய வேலைகளையும் தான் செய்துவிடவில்லை எனத் தன்னடக்கத்தோடு தொடங்கிய அவருடைய உரை பல்வேறு விஷயங்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. தன் இளமைப் பருவம், கல்விப் பயணம், மொழிபெயர்ப்புப் பணி, தமிழாய்வின் இன்றைய நிலை போன்றவற்றை இயல்பாக அமைதியான தொனியில் வெளிப்ப

பதிவு: தில்லித் தமிழ்ச் சங்கம், புதுதில்லி, 25.02.2012
மு. இராமனாதன்  

தில்லித் தமிழ்ச் சங்கமும் காலச்சுவடு பதிப்பகமும் இணைந்து நடத்திய “வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை- கவித்தொகை - சீனாவின் சங்க இலக்கியம்” என்னும் நூலின் வெளியீட்டு விழா பிப்ரவரி 25 அன்று தில்லித் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் நடந்தது. இந்தியப் பிரதமரின் தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் நூலை வெளியிட்டார். இந்தியாவிற்கான சீனாவின் துணைத் தூதர் வாங் ஸ்ஷுவேஃபங் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டார். சீன நூல்களில் மிகத் தொன்மையான ‘ஷிழ் சிங்’ (Shi Jing) சீனாவின் முதல் நூல். ஏறத்தாழ 2500 ஆண்டுகளுக்கு முற்பட்டது. பலவகையில் தமிழின் சங்க இலக்கியங்களுக்கு ஒப்பானது. ‘ஷிழ் சிங்’ என்பதற்குப் ‘பாடல்களின் தொகுப்பு’ எனப் பொர

எதிர்வினை
 

ஆசிரியர் கொலைச் சம்பவம் நடந்து கிட்டத்தட்ட எல்லா ஊடகங்களும் விவாதித்து முடித்துவிட்ட நிலையில் எல்லோரும் ஆசிரியர் சார்பாக மிகவும் தட்டையாக விவாதத்தைக் கையாண்டதாகச் சொல்லி பெருமாள்முருகனின் எழுதிய கட்டுரை எவ்வளவு தட்டையாக இருக்கிறது என்பதை அவர் கொஞ்சம் கவனித்திருக்கலாம். ஊடகங்கள் இதை ஆசிரியர், மாணவர், பெற்றோர், கல்வித் துறை, பள்ளி நிர்வாகம், கல்வித் திட்டம் மற்றும் உளவியல் என்று எல்லாக் கோணங்களிலும் இருந்தே அணுகியது. இதைத் தட்டையானது என்று பெருமாள் முருகன் கூறுவதற்கு முன்வைத்த காரணம் சம்பந்தப்பட்ட ஆசிரியரையும் மாணவனையும் நேரெதிர் கோணத்தில் வைத்துக் கருத்தாக்கம் உருவாக்கப்பட்டது என்பது. பல வருடங்கள் ஆசிரியராக இருக்கும் ஒருவரிடம் பயின்ற மாணவர்களில் பலர் இன்று நல்ல நிலையில்

தலையங்கம்
 

சங்கரன்கோவில் சட்டப்பேரவைத் தொகுதிக்கான இடைத்தேர்தல் முடிந்த கையோடு கூடங்குளம் அணுமின்நிலையத்தைச் செயல்படுத்துவதற்கு இசைவு தெரிவித்துள்ளது தமிழக அரசு. கடந்த 19ஆம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா தலைமையில் அவசரமாகக் கூடிய தமிழக அமைச்சரவை கூடங்குளம் அணுஉலை பாதுகாப்பானது எனத் தமிழக அரசால் அமைக்கப்பட்ட நிபுணர் குழு அளித்த அறிக்கையை ஏற்றுக் கொண்டதுடன் அணுஉலைக்கு எதிரான போராட்டங்களை ஒடுக்க சுமார் 5000க்கும் மேற்பட்ட போலீசாரையும் துணை ராணுவப் படையினரையும் இடிந்தகரை மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளுக்கு அனுப்பிவைத்துள்ளது. போராட்டக் குழுத் தலைவர்களில் 11 பேர் உடனடியாகக் கைதுசெய்யப்பட்டு, அவர்கள்மீது தேசவிரோதக் குற்றச்சாட்டுகள் உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடரப்பட்டுள்ளத

 

ஓர் அபத்தமான சாகசம் தலையங்கம் கண்டேன். கொள்ளைக்காரர்களுடன் மோதும்போது காவல் துறையினர் கொல்லப்பட்டால் அப்போது விமர்சனம் எவ்வாறு இருக்கும் என எண்ணிப் பார்க்கிறேன். கொள்ளைக்காரர்களை ஒடுக்கத் துப்பில்லாத அரசு என்றும் சொதப்பலான காவல் துறை என்றும்தானே எழுதுவார்கள். மிருகத்தனமான கொள்ளைச் சம்பவங்களைத் தடுக்கச் சில துணிகர நடவடிக்கைகள் தேவை என்பதை இங்குப் பதிவுசெய்கிறேன். மாற்றுச் சிந்தனை மாற்று எரி பொருள் என்னும் சிந்தனையின் பின்புலத்தில் “பொருள் கனம்” பொதிந்திருப்பதை உணரமுடிகிறது. மின் சிக்கனச் சேமிப்பு குறித்த விழிப்புணர்வு தற்போது பெரிதும் தேவையே! கா. இர. குப்புதாசு செங்சிக்கோட்டை விஸ்வாவா சிம்போர்ஸ்கா குறித்து ஏற்கனவே காலச்சுவடில் படித்திருந்தது நினைவுக்குவருகிற

உள்ளடக்கம்