சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்
ஒருங்கிணைப்பும் தொகுப்பும் கவிஞர் சேரன்  

"எல்லோரும் அடுத்த சந்திக்குப் போய்விட்டார்கள். புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சோஷலிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், தீவிரவாதிகள், ஆண்கள் பெண்கள். வெற்றியின் கணத்தில் எழுகிற மமதையும் கவர்ச்சியும் ஒன்றுசேர, வீரியம் பெறுகிற காற்றில் கொண்டாட்டத்தின் வெடியோசையும் மத்தாப்பூக்களும். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஆர்வக் கிளர்ச்சியின் மென்சூட்டில் திளைக்கிறார்கள் சிங்களர்கள். இந்தச் சந்தியில் நான் மட்டும் தனியே. கையில் எதிர்ப்புப் பதாகை தாங்கியபடி . . .” முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிராக எழுதப்பட்ட இந்தக் கவிதை வரிகள் மகேஷ் முனசிங்ஹ எனும் சிங்களக் கவிஞருடையவை. கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்பவர். அறச் சீற்றம் பொங்கும் குரலில் தமது கவிதைகளையும் பிற எழு

சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்
 

நீங்கள், இலங்கையில் ஜனநாயகத்திற்கான பத்திரிகையாளர்கள் (Journalists for Democracy in Sri Lanka- JDS) என்ற உங்கள் அமைப்பினர், நண்பர்கள் ஆகியோர் பங்களிப்பு இல்லாமல் சர்வதேசச் சமூகத்தையே உலுக்கிய கைப்பேசி வீடியோவில் எடுக்கப்பட்ட படுகொலைக் காட்சிகள் வெளிச்சத்துக்கு வந்திருக்க மாட்டா. இந்த வீடியோ படங்களை சானல் 4 தொலைக்காட்சிக்குத்தான் வழங்க வேண்டுமென எப்படித் தீர்மானித்தீர்கள்? முதலில் நான் ஒன்றைக் கூற வேண்டும். இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கப்பட்ட பயங்கரமான படுகொலைகளும் குற்றச் செயல்களும் ரகசியமாக நடந்தவையல்ல. சர்வதேச அதிகார சக்திகளைப் பொறுத்தவரை இவ்வாறான இன அழிப்பு நடவடிக்கை இடம்பெறப் போகிறது என்பதை ஏற்கனவே அவர்கள் அறிந்திருந்தார்கள். இந்தப் படுகொலைக் களத்தின் ஆர்வமிக்க பார்வை

சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்
 

அறிமுகம் மக்கள்திரள்மீதான வன்கொடுமைகள் (mass atrocity) பற்றிய எடுத்துரைப்புகள் (representations) சர்வதேசச் சட்டத்தின் வரையறைகளுக்கு ஏற்பப் போர்க்குற்றங்கள், மானிடத்திற்கெதிரான குற்றங்கள், இன அழிப்பு ஆகிய அடிப்படைகளில் வகைப்படுத்தல்களுக்கு உள்ளாக்கப்படுகின்றன. எனினும் இந்தக் கோட்பாட்டுரீதியான வகைப்படுத்தல்கள் குறிப்பிட்ட அரசியல், கருத்தியல் களங்களிலேயே பிரயோகிக்கப்படுவதால் அந்தக் களங்கள் விமர் சனத்திற்குள்ளாக்கப்பட்டு இலங்கையில் இடம்பெற்ற வன்கொடுமைகள் பற்றிய உண்மைகளைக் கூறும் முழுமையான எடுத்துரைப்பு ஒன்று எட்டப்பட வேண்டும். இந்த வன்கொடுமைகள் பற்றிய எடுத்துரைப்புகளை நோக்கினால், எவ்வாறு உண்மைகள் நோக்கப்படுகின்றன என்பதையும், நீதி, புனரமைப்பு (justice and recovery) பற்றிய எதிர்

சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்
சுனந்த தேசப்ரிய  

மே 19, 2009 அன்று கொழும்பில் இருந்தேன். வீட்டிற்கு வெளியே ஒரே ஆரவாரமாக இருந்தது. போரின் முடிவையும் பிரபாகரனின் மரணத்தையும் சிங்கள மக்கள் அமோகமாகக் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். போரின்போது தமிழ் மக்கள் பட்ட அவலங்கள் குறித்தோ பேரழிவு குறித்தோ அவர்களில் மிகப் பெரும்பாலானோர்க்கு எவ்விதமான அக்கறையும் இருக்கவில்லை. அன்று முழுவதும் வீட்டைவிட்டு வெளியேறவில்லை. நிச்சயமின்மையும் புது வகையான பீதியும் இலங்கையைச் சூழ்ந்துகொள்கிற புதிய காலகட்டம் ஒன்றுக்குள் நாங்கள் நுழைவதான உணர்வு எனக்கு ஏற்பட்டது. வழமையாக ராவய இதழுக்கு எழுதும் பத்திக்கென அன்று நான் எழுதிய கட்டுரையின் தலைப்பு ‘மே, 19’ என்பதாகும். அந்தக் கட்டுரையில் மிகவும் தெளிவாக நான் குறிப்பிட்டிருந்ததை இந்தக் கணம் நினைவுக

சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்
 

போருக்குப் பிற்பாடு தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் என்ன நடக்கிறதென ஜேர்மன் சஞ்சிகையொன்று அண்மையில் என்னைக் கேட்டிருந்தது. டிசம்பர் 2009க்குப் பிற்பாடு என்னால் இலங்கைக்குச் செல்ல முடியவில்லை. எனினும் என்னுடைய நூலான The Cageஇன் இறுதி அத்தியாயம், போருக்குப் பின் தமிழர்களுக்கு என்ன நடக்கலாம் என்பதைப் பற்றிப் பேசுகிறது எனச் சஞ்சிகை ஆசிரியருக்குத் தெரிவித்தேன். என்னென்னவெல்லாம் நிகழக்கூடும் என்று ஊகித்திருந்தேனே அவ்வளவும் அந்த மக்களுக்கு நிகழ்கிறது என்பதை அன்றாடம் நாளிதழ்கள், இணையதளங்கள் வழியாகப் பரவும் தகவல்கள் உறுதிப்படுத்துகின்றன: தமிழர் பிரதேசங்களில் தொடர்ச்சியாக ராணுவமயமாக்கம் நடை பெற்றுவருகிறது; தமிழ் மக்களுடைய நிலங்கள், அவை தொடர்பான உரிமைகள் சிக்கல்களுக்குள்ள

சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்
ஒருங்கிணைப்பும் தொகுப்பும் கவிஞர் சேரன்  

"எல்லோரும் அடுத்த சந்திக்குப் போய்விட்டார்கள். புத்திஜீவிகள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சோஷலிஸ்டுகள், ஜனநாயகவாதிகள், தீவிரவாதிகள், ஆண்கள் பெண்கள். வெற்றியின் கணத்தில் எழுகிற மமதையும் கவர்ச்சியும் ஒன்றுசேர, வீரியம் பெறுகிற காற்றில் கொண்டாட்டத்தின் வெடியோசையும் மத்தாப்பூக்களும். கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க ஆர்வக் கிளர்ச்சியின் மென்சூட்டில் திளைக்கிறார்கள் சிங்களர்கள். இந்தச் சந்தியில் நான் மட்டும் தனியே. கையில் எதிர்ப்புப் பதாகை தாங்கியபடி . . .” முள்ளிவாய்க்கால் இனப்படுகொலைக்கு எதிராக எழுதப்பட்ட இந்தக் கவிதை வரிகள் மகேஷ் முனசிங்ஹ எனும் சிங்களக் கவிஞருடையவை. கனடாவில் புலம்பெயர்ந்து வாழ்பவர். அறச் சீற்றம் பொங்கும் குரலில் தமது கவிதைகளையும் பிற எழு

சிறப்புப் பகுதி: போரும் வாழ்வும்: முள்ளிவாய்க்கால் நினைவுகள்
பா. செயப்பிரகாசம்  

உலகமயச் சூறாவளியில் தேசிய இனங்கள், ஒடுக்கப்படும் மக்களின் விடுதலை எனும் வாழைத் தோட்டங்களின் வாழ்வு கேள்விக்குறியாகியுள்ளது. பூமிக்கு மேல் நிகழும் காற்றசைவு, பருவநிலை, கடல் என அனைத்தும் இன்றைய நாளில் உலகமய வானத்தால் இயக்கப்படுபவையாக ஆகியுள்ளன. எங்கோ பனிமூட்டத்தின் இடுக்கில் ஒற்றைக் கீற்றுப்போல, உலகமயக் கருணையாலே தேசிய இனங்கள் விடுதலையை எட்டிப் பார்க்கின்றன. முப்பது நாற்பது ஆண்டுகளுக்கு முன் சொல்லி வைத்தது போல் நடந்த தேசிய விடுதலைகள் இப்போது வழமையாக இல்லை. கொசவா, கிழக்கு தைமூர், தெற்கு சூடான் விடுதலைகளும் ஒற்றை மைய அரசியல், நிதி மூலதன, தகவல் ஆதிக்க அரசியல் ஆகியவற்றின் கருணையால் நடந்தவையாக ஆகிவிட்டன. இடதுசாரி முகாம் என்று சொல்லப்பட்ட வல்லரசுகள் இது போன்ற மக்கள் விடுதலைக்கு எதிர

சிறுகதை
 

வெற்றிச்செல்வி அலுவலகத்திற்குச் செல்லத் தயாராகிக்கொண்டிருந்தாள். மருத்துவக் கல்லூரியும் பொறியியல் கல்லூரியும் அவள் நிர்வாகத்தின் கீழ் இயங்கிவருகின்றன. வேலை எனப் பெரிதாக ஒன்றும் இல்லை. அலுவலகத்திற்குச் சென்று அமர்ந்தால்தான் அனைத்து நிறுவனங்களும் கட்டுக்கோப்புடன் நடக்கும் என்று நினைப்பதால் தினமும் அலுவலகத்திற்குச் செல்கிறாள். கணவர் கோயிலுக்குச் செல்லத் தயாராகிவிட்டாரா என்று அறைக்குள் எட்டிப்பார்த்தாள். அப்போது அவர் பிரா அணிந்துகொண்டிருந்தார். ‘இந்நேரம் நிறைய பக்தர்கள் வந்திருப்பாங்க. சீக்கிரம் கிளம்புங்க’ என்றாள். மூட்டுவலி அதிகரித்துள்ளதாகக் கணவர் கூறினார் . . . ‘தினமும் செல்வதைத்தான் புதன், சனி, ஞாயிறு என்று குறைத்தாகிவிட்டதே . . .’ என்று அவள் கூறினாள

கட்டுரை
சச்சிதானந்தன் சுகிர்தராஜா  

தொலைக்காட்சிச் செய்திகளின் முடிவில் வரும் வானிலை அறிவிப்புகளில் நான் அதிகம் மெனக்கெடுவதில்லை. செய்திகள் முடிந்தவுடன் தொலைக்காட்சியை அணைத்துவிடுவேன். வானிலை அறிக்கையையும் வெற்றிலையில் மைபோட்டு அறியும் தகவலையும் ஒரே நிலையில் வைத்திருப்பேன். என்னைப் பொறுத்த அளவில் இரண்டுமே குருட்டு ஊகங்கள். அன்று இரவு பலமான காற்றும் மழையும் வரும் என்று சொன்னதை நான் அறிந்திருக்கவில்லை. அடுத்த நாள் காலையில் யன்னல் திரைச்சீலையை விலக்கிப் பார்த்தேன். எங்கள் தோட்டத்தின் நடுவில் நின்றிருந்த சிறிய மரம் முந்தைய நாள் இரவு அடித்த புயலில் சரிந்து அடுத்த வீட்டு வேலிமேல் சாய்ந்துகிடந்தது. தோட்டம் என்றால் ஏதோ உயர்ந்த மரங்களும் வண்ணப் பூக்களும் நிறைந்த பங்களூரு லால் பாக் அல்லது கண்டி பேரதேனியா மாதிரி பூந்தோட்

கட்டுரை
அனிருத்தன் வாசுதேவன்  

பாலியல் தொழில்: உடல், உரிமை, வாழ்வாதாரம் பாலியல் தொழிலாளர்கள்மீதான வன்முறை என்றைக்கும் நிகழ்ந்துவரும் ஒன்று. எனினும் சில நேரங்களில் அவர்கள் வழக்கத்திற்கு அதிகமான வன்முறையைச் சந்திக்க நேரிடுகிறது. குறிப்பாகக் காவல் துறையினரிடமிருந்து. ‘வன்முறை எப்பொழுதையும்விட அதிகமாகியிருக்கிறது’ என்று ஒருவர் கூறுவது அவரது வாழ்வில் வன்முறை ஏதோ ஒரு வடிவத்தில் நிரந்தரமான இடம் பெற்றிருப்பதைச் சுட்டிக்காட்டுகிறது. அத்தகைய வன்முறையை அவர் வழக்கமான ஒன்றென normalize செய்திருக்கக் கூடிய நிலையையும் அது காண்பிக்கிறது. சென்னை பிராட்வே பேருந்து நிலையம் பகுதியில் கடந்த ஒரு வருடமாகப் பாலியல் தொழில் செய்யும் பெண்கள்மீதான தங்களுடைய வன்முறையைக் காவல் துறையினர் அதிகப்படுத்தியுள்ளனர். காவல் துறையின

மலையாளச் சிறுகதை
 

இரண்டு மூன்று நாட்களுக்கு முன்பு எனது பால்ய நண்பரும் பக்கத்து வீட்டுக்காரரும் பஞ்சாயத்து உறுப்பினருமான நீங்கள், நான் குடியிருக்கும் இந்தக் குவார்ட்டர்ஸுக்கு வந்தீர்கள். அப்போது இங்கு நடந்ததை மறந்திருக்க முடியாது. இருந்தாலும் நான் அதை இன்னொரு தடவை சொல்லிவிடுகிறேன். ஒரு சம்பவத்தைக் குறைந்தது இரண்டு நபர்களாவது தங்கள் கண்களாலோ கண்ணாடிகளாலோ பார்த்தால்தான் அதன் பொருளின் தும்பாவது கிடைக்கும். அதனால் இப்போது என்னுடைய வார்த்தைகளுக்கு நீங்கள் காதுகொடுத்தே ஆக வேண்டும். நீங்களும் உங்கள் கூட்டமும் அன்று காலையில்தான் இங்கே வந்து கதவைத் தட்டினீர்கள். நான் கதவைத் திறந்தேன். நீங்களும் உங்கள் கிங்கரர்களும் தண்ணீரைத் திறந்துவிட்டதுபோலப் பேசினீர்கள். நான் கொஞ்சம் பதறித்தான் போனேன். பதற்றம் மட

மதிப்புரை
பழ. அதியமான்  

“மக்களைப் பாகுபடுத்தும் எதுவும் சமத்துவத்தைக் குலைக்கிறது” - உச்ச நீதிமன்ற தீர்ப்பொன்றில் நீதியரசர் எஸ். முரளிதர் (2009) எதிர்பாலின ஈர்ப்பைத் தவிர்த்தவர்கள் மனித வர்க்கத்தில் சிறுபான்மையினராகக் கருதப்பட்டு ஒடுக்கப்படுகிறார்கள். பொட்டை, அலி, ஒன்பது, இஜரா, அரவானி, திருநங்கை என்னும் சொற்களால் அழைக்கப்படும் இவர்களுக்கு இப்போது சமூக ஏற்பு கூடிவருவது மகிழ்ச்சி தருகிறது. இப்பெயர் வரிசையே இதற்கு ஒரு சான்று. வசைச் சொல்லிலிருந்து மரியாதை கொண்டதாகப் பெயர் மாறிவருகிறது. வெள்ளை மொழி (அரவானியின் தன்வரலாறு) ரேவதி விலை: ரூ. 200 ( 2011) வெளியீடு அடையாளம் 1205/1, கருப்பூர் சாலை புத்தநத்தம்-621310 எதிர்பாலின ஈர்ப்பு தவிர்த்தவருள் ஒரு பகுதியினர் பொதுவாக மேற்கண்ட பெயர

பதிவு: திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக் கல்லூரி , கருத்தரங்கம் 10, 11 பிப்ரவரி, 2012
களந்தை பீர்முகம்மது  

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் உத்தமபாளையத்தில் இருந்து பேரா. அப்துல்சமது என்னைத் தொடர்புகொண்டபோது ஒரு நல்ல செய்தி அவரிடமிருந்து கிடைக்கும் என்பது தெரியாது. இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் புதிய பொதுச்செயலாளராக அவர் அப்போது பொறுப்பேற்றிருந்தார். அதன் பயனாகக் கழகத்தின் நெறியாளர் கவிக்கோ அப்துல் ரகுமானிடம் வலியுறுத்தி நவீனத் தமிழ் இலக்கியங்களில் இஸ்லாமிய வாழ்வியலைப் பதிவுசெய்து வரும் படைப்பாளிகளைக் கழக மாநாட்டிற்கு அழைப்பது என முடிவெடுத்திருந்தார். எங்களின் பல்லாண்டு கால ஏக்கம் அது. ‘இனி இதைப் பேசாமல் தீராது’ என்பது அவர் வாதம். இதையடுத்துக் கடந்த ஆண்டு செப்டம்பர் 30 மற்றும் அக்டோபர் 1 தேதிகளில் குற்றாலம் செய்யது ரெஸிடன்ஸியல் பள்ளியில் பயிலரங்கம் தொடங்கியது. அதன் தொடக்க உரையை

பதிவு
கண்ணன்  

அனைவருக்கும் மாலை வணக்கம். காலச்சுவடு பிரசுரித்துள்ள இஸ்லாமியர்களின் படைப்பு நூல்கள் தொடர்பான என்னுடைய சிந்தனைகளை இன்று மாலை இங்கே பகிர்ந்துகொள்ள வேண்டும் என நண்பர் மீரான் மைதீன் கேட்டுக்கொண்டார். இந்த வாய்ப்புக்கு அவருக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். இன்றைய என்னுடைய உரை ஒரு பதிப்பாளர் - ஆசிரியரின் பார்வையில் அமைகிறது. இது இலக்கிய விமர்சனம் அல்ல. காலச்சுவடு இதழ் மீண்டும் தொடங்கப்பட்ட ஆண்டு 1994. பதிப்பகம் தொடங்கப்பட்ட ஆண்டு 1995. அக் காலகட்டம் முதல் இன்றுவரை இஸ்லாமியச் சமூகம் எதிர்கொள்ளும் நெருக்கடிகளைத் தொடர்ந்து கவனப்படுத்திப் பதிவுசெய்துவந்திருக்கிறோம். கட்டுரைகள், தலையங்கம், பதிவுகள், படைப்புகள், கண்காட்சி, பொதுக் கூட்டம் எனப் பல தளங்களிலும் இந்த அக்கறை வெளிப்பட்டுவந்

பதிவு: அற்றைத் திங்கள், 22 ஜனவரி, 2012
ஆத்மார்த்தி  

கடந்த ஜனவரி, 2012 மாத அற்றைத் திங்கள் நிகழ்ச்சியில் சல்மா கலந்துகொண்டார். அவர் கவிஞர், எழுத்தாளுமைச் செயல்பாட்டாளர் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லாவிட்டாலும், சாதனையாளராக அம்மேடையேறும் அளவுக்கு முதிர்ந்த அனுபவம் பெற்றவரல்ல என்னும் எண்ணம் பார்வையாளர்கள் அனேகரின் முகங்களிலும் தென்பட்டது. சாதனையாளர் என்னும் நிலையில் அக்கூட்டத்தின் முன்னால் தான் நிற்கவில்லை என்றும் ஒரு பெண் அதோடு எழுத்தாளர் என்னும் வகையில் தன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதற்காகவே வந்திருந்ததாகவும் சொல்லித் தன் உரையைத் தொடங்கினார். தான் எழுதிக் கடந்த தூரத்தையோ எட்டிப்பிடித்த உயரத்தையோ மிகையாக்கித் தூவாமல், தான் தொடங்கிய சிறு புள்ளியிலிருந்து தன்னைச் செலுத்திக்கொண்டிருக்கும் எழுத்தைத் தள்ளி நின்று எடுத்துரைக்கும்

அஞ்சலி: சண்முகம் சிவலிங்கம் (1939-20.04.2012)
 

ஈழத்தின் முக்கியமான கவிஞர்களில் ஒருவரான சண்முகம் சிவலிங்கம் கடந்த 20. 04. 2012 அன்று மறைந்தார். 1939இல் கிழக்கிலங்கையில் பிறந்த சண்முகம் சிவலிங்கம் 1960 முதல் கவிதைகளும் சிறுகதைகளும் இலக்கிய விமர்சனங்களும் எழுதிவந்தார். ஆங்கிலம் வழி பிறமொழிக் கவிதைகள் பலவற்றை மொழிபெயர்த்துள்ளார். 1988இல் இவரது முதலாம் கவிதைத் தொகுதி ‘நீர் வளையங்கள்’ தமிழியல் வெளியீடாக வெளிவந்துள்ளது. எம். ஏ. நுஃமான், அ. யேசுராசா தொகுத்து (1984 க்ரியா, 2003 காலச்சுவடு பதிப்பகம்) வெளியிட்ட பதினொரு ஈழத்துக் கவிஞர்கள் தொகுப்பில் இவரும் இடம்பெற்றார். 2010இல் காலச்சுவடு-தமிழியல் வெளியீடாக வந்துள்ள சிதைந்துபோன தேசமும் தூர்ந்துபோன மனக்குகையும் என்னும் இவரது கவிதைத் தொகுப்பு பரவலான வாசகக் கவனம் பெற்றது.

தலையங்கம்
 

சமீபத்தில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் நான்கு வருடங்களுக்கு முன்பு இளம் பெண் ஒருத்தி கொல்லப்பட்ட சம்பவத்தில், அப்பெண்ணின் தாயாரையும் தந்தைவழிப் பாட்டியையும் காவல்துறை கைதுசெய்திருக்கிறது. 17 வயது திருச்செல்வி குடும்ப எதிர்ப்பை மீறிக் காதலருடன் சென்றதால் கொல்லப்பட்டிருக்கிறார். திருமணத்தை நடத்திவைப்பதாகப் பெற்றோர் தந்த உறுதியின் அடிப்படையில் வீடு திரும்பிய திருச்செல்வியை அவருடைய பாட்டி இறுக்கமாகப் பிடித்துக்கொள்ள, அம்மா விஷம் புகட்டியிருக்கிறார். இதில் திருப்தி அடையாமல் தலையணையை முகத்தில் அழுத்தியும் கொலைசெய்திருக்கிறார்கள். பெரியம்மை தாக்கி மகள் இறந்துவிட்டதாகச் சொல்லி அவசர அவசரமாகப் புதைத்துவிட்டார்கள். சுமார் நான்கு வருடங்கள் கழித்துத் திருச்செல்வியின் சடலத்தில் ந

உள்ளடக்கம்