கட்டுரை: தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்
பூமா சனத்குமார்  

இந்தியப் பொருளாதாரத்தின் சமீபகால ‘வளர்ச்சி’ குறித்துச் சந்தர்ப்பம் கிடைக்கும்போதெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் பிரதமர் மன் மோகன் சிங்கிற்கு ஒரு மாறுபட்ட தருணத்தைக் கடந்த ஜனவரி மாதத்தில் ‘இந்தியாவின் பட்டினியும் சத்துக்குறைபாடும் அறிக்கை’யின் (HUNGaMA) வெளியீட்டு விழாவில் நாந்தி பவுண்டேஷன் வழங்கியது. அவ்வறிக்கையின்படி இந்தியாவின் ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 42 சதவீதத்தினர் பட்டினியாலும் ஊட்டச்சத்துக் குறைபாட்டாலும் எடை குறைந்து அவதிப்படுவதை ‘முதலைக்கண்ணீர்’ கசிய ‘ஒரு தேசிய அவமானம்’ எனப் பிரதமர் வருத்தத்துடன் குறிப்பிட்டார். ஏதோ முதன்முறையாகக் கேள்விப்படுவதைப் போல ‘இதை ஏற்றுக்கொள்ளவே முடியாது’ என அவர் வெட்கப்பட

கட்டுரை
 

புரட்சித் தலைவன் ‘போராடும் கூடங்குளத்து மக்களுடன் இரண்டு நாட்கள்’ என்ற பதிவை அக்டோபர், 2011இல் தனது இணையதளத்தில் அ. மார்க்ஸ் எழுதியிருக்கிறார். இது வெளிவந்த நேரத்திலேயே அதில் காலச்சுவடு பற்றி அவர் குறிப்பிட்டிருந்த மானங்கெட்ட பொய்களைப் பற்றி நண்பர் ஒருவர் என்னிடம் கவனப்படுத்தினார். ஒரு மாபெரும் மக்கள் போராட்டம் எழும்பிவரும் காலகட்டத்தில் அற்பத்தனங்கள் பற்றிய விவாதங்களுக்கு இடமில்லை என்று அப்போது புறக்கணித்துவிட்டேன். இதை அறிந்த பின்னர் நான்கைந்து முறை நண்பர் உதயகுமாரைச் சந்தித்துவிட்டேன் என்றாலும் இது பற்றிக் கேட்கவில்லை. அவ்வாறு கேட்பதே நண்பரை அவமதிப்பதாக இருக்கும் என்று தோன்றியது. அ. மார்க்ஸ் எழுதியிருப்பது இதுதான்: “கனிமொழி பாராளுமன்றத்தில் பேச

நேர்காணல்
அ. முத்துலிங்கம்  

சமீபத்தில் அமெரிக்க எழுத்தாளர் டேவிட் டங்கனுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவருடைய They River Why நாவல் புகழ்பெற்றது. பொதுவாக மொழிபெயர்ப்புகள் பற்றிப் பேசியபோது அவர் சொன்ன ஒரு விடயம் ஆச்சரியம் தந்தது. அவர் எழுதிய புத்தகம் ஒன்றைப் பிரெஞ்சில் மொழிபெயர்த்திருக்கிறார்கள். அவருடைய ஆங்கில நாவலையும் பிரெஞ்சு மொழிபெயர்ப்பையும் படித்தவர்கள் பிரெஞ்சு மொழியில் நாவல் மேலும் சிறப்பாக வந்திருப்பதாகச் சொன்னார்கள் என்றார். நான் கேட்டேன் ‘உங்களுக்கு வருத்தமாய் இருந்திருக்குமே?’ அவர் ‘ஏன் வருத்தமாக இருக்க வேண்டும்? பிரெஞ்சிலும் புகழ் எனக்குத்தானே?’ என்றார். அவர் அப்படிச் சொன்னது நான் பலகாலமாக நினைத்துவந்த ஒரு விடயத்தை உறுதிசெய்தது. எத்தனை மொழியில் ஒரு நாவல் மொழிபெயர்க்கப

சிறுகதை
 

அமெரிக்காவில் ஹார்ட்ஃபோர்ட் நகர மையத்தில் இருக்கும் கேப்பிடல் டவர்ஸ் அப்பார்ட்மெண்ட்டில் குடியேறியபோதுதான் ஜோஸலினைப் பார்த்தேன். பார்த்தவுடனேயே அவளைப் போன்ற அழகி உலகில் இருக்க முடியாது என்ற நிச்சயம் ஏற்பட்டுவிட்டது. குறிப்பாக அவள் உதடுகள். அவளை முத்தமிடக் கொடுத்துவைத்தவன் அதிர்ஷ்டசாலி. மெல்லிய புன்னகையுடன் அப்பார்ட்மெண்டை எனக்கு வாடகைக்குத் தருவதில் உள்ள சிக்கல்களை எடுத்துச் சொன்னாள். நான் அமெரிக்கா வந்து ஒரு மாதமே ஆகியிருந்தது. இந்தக் கட்டட வாசலில் கீழிறங்கிப் போகும் அசைலம் அவென்யுவில் இரண்டு ப்ளாக்குகள் தொலைவில் இருக்கும் ரமடா இன் என்னும் பாடாவதியான ஒரு ஹோட்டலில் தங்கியிருந்தேன். என் அலுவலகம் ஹார்ட்ஃபோர்ட் நகரிலிருந்து அரை மணித் தொலைவில் வெஸ்ட்பரி என்னும் புறநகர

 

 (அ) சம்ஷாபாத் விடுதியின் கதவுகள் மிக அலங்காரமானவை அழகிய சிற்பங்கள் கொண்டவை உனது சொற்களைப் போன்ற தேர்ந்த கவனத்துடன் துல்லியமாகச் செதுக்கப்பட்ட சிற்பங்கள் கச்சிதமான இடத்தில் எவரையும் மெல்லத் தொட்டுவிடுபவை அதன் பிறகு ஒன்றுமேயில்லை கரைந்து கரைந்து மிக ஆழத்தின் துக்கங்களுக்கான பெருகி வழியும் கண்ணீருடன் இந்த உலகமே அரவணைக்கக் கதறுகிறார்கள் மிகமிக லேசான மனத்துடன் தங்கள் சின்னஞ்சிறு கரங்களால் உலகத்தைத் தழுவிக்கொள்கிறார்கள் நீயோ இந்த உலகத்துக்கு வெளியே நிறைந்த கவனத்துடன் ஒளிந்துகொள்கிறாய் அழகிய சிற்பங்கள் கொண்ட இந்த அகன்ற கதவுகள் தங்களுக்குப் பின்னே அறைகளெவையுமற்றிருப்பது போலவே மறைந்துபோகிறாய் நீயும் (ஆ) இலக்குகளற்ற இந்தப் பயணத்தில் நகர்ந்து செல்லப் புதிய திசையின்

கட்டுரை
மு. புஷ்பராஜன்  

சென்ற இதழில் (எண்:149) முள்ளிவாய்க்கால் நினைவுகள் சிறப்புப் பகுதியில் இடப்பற்றாக்குறை காரணமாக விடுபட்ட கட்டுரைகளும் கவிதைகளும் இவ்விதழில் இடம்பெறுகின்றன. பொறுப்பாசிரியர் முள்ளிவாய்க்கால் என்பது அதன் அமைவிடம் சார்ந்த பெயரை இழந்து, மாபெரும் தோல்வியைக் குறிக்கும் பெயராக இன்று மாறியிருக்கிறது. தொடர்ந்தும் அரசியல் அர்த்தத்தில் இதுவே நிலைத்திருக்கப்போகிறது. இது தமிழர்களுக்கான குறியீடு என்பதற்கும் அப்பால் ஆசியாவிற்கான குறியீடாகவும் சில வேளைகளில் அதையும் தாண்டி, உலகப் பரப்பிலும் உயிர்வாழக்கூடிய சாத்தியத்தையும் கொண்டிருக்கிறது. தனது வீரத்தால், தோற்கடிக்கப்பட முடியாதவன் என்ற கருத்தை உருவாக்கிய நெப்போலியன் பெனபாட், தோல்வியைச் சந்தித்த இடமான ‘வாட்டர்லூ’ தோல்வியின் குறிய

கட்டுரை
ஏ. ஆர். எம். இம்தியாஸ்  

இலங்கையின் தமிழ் - சிங்களத் தேசிய இனங்களுக்கிடையிலான அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார முரண்பாடுகளை வன்முறையற்ற வகையில் தீர்க்க முடியவில்லை. இதனால் ராணுவத் தீர்வுகளை நோக்கிய சூழ்நிலை மேலெழுந்தது. யுத்தம் இதனுடைய தர்க்கரீதியான தொடர்ச்சிதான். எனினும் யுத்தம் தமிழ் மக்களின் பிரச்சினைக்கு எந்த வகையிலும் நியாயம் வழங்கிவிடவில்லை. பல்வேறு இனக்குழுமங்களுக்கிடையே உருவாகும் தேசிய இனச் சிக்கல்களுக்கு வெவ்வேறு வகையான தீர்வுகளே சாத்தியம். இத்தகைய பிரச்சினைகள் எழுவதற்குப் பல் வேறு தர்க்கபூர்வமான காரணங்களை தேசிய இனப் பிரச்சினை தொடர்பான ஆய்வுகள் அடையாளம் காண்கின்றன. அந்தக் காரணங்களில் முக்கியமான ஒன்று தேசிய இனமுரண்பாடுகளை ஊக்குவிப்பதில் அரசியல், பொருளாதார மற்றும் சர்வ தேசச் சூழல் என்பனவற்

கட்டுரை
 

இப்போதெல்லாம் எனது பிறந்த தினம் வரும் மே மாதம் அவ்வளவு விருப்பத்திற்குரியதாக இல்லை. அது துர்ச்சகுனமான மாதமாகவே இருக்கிறது. நான் முல்லைத் தீவு ஆஸ்பத்திரியில் பிறந்தேன். அப்படியே பிஞ்சுக் குழந்தையாக கொண்டுவந்து வளர்த்தியது முள்ளியவளை வீட்டில். அப்போதிருந்தே வன்னி மண் என் வாழ்வோடு ஒட்டிக்கொண்டுவிட்டது. நான் வன்னியில் பிறந்தவன். முள்ளியவளையில் இருந்து அய்யா அம்மாவை விட்டுவிட்டுப் போய்விட்டார். அய்யாவின் பிரிவுக்குத் தங்கச்சி பிறந்ததுதான் காரணம் என்று என் கிராம மக்கள் பேசிக்கொண்டனர். எங்கள் ஒட்டுசுட்டான் புளியங் குளம் கிராமம் எவ்வளவு அருமையானது. அதனோடு வாழ்ந்த வாழ்வைத்தான் இன்னும் நினைத்துக்கொண்டிருக்கிறேன். எழுதும்போதும் படிக்கும்போதும் அடிக்கடி நினைவுக்கு வருவது எனது கிரா

 

கால் மனிதர்கள் சுவாசிக்க முடியாதவொரு காலை எடுத்துவந்தார்கள் இன்று தற்காப்புப் படைகள் தரித்த பின் ஒழுகும் சீழுக்கு ஒரு கிண்ணமும் சிதம்பிய தசைக்கு இன்னொரு பாத்திரமும் வைத்தபின் பிடுங்கியுடன் அமர்ந்து நெளியும் புழுக்களைப் பிடுங்கத் தொடங்கினேன். அதிசயம் தெரியுமா? காலுக்கு ஒரு தலையும் தலைக்கு இரண்டு கண்களும் இருந்தன. பிண இலக்கம் 178 இரத்த விளாறாய்க் கிடந்தான்: பாதித்தலை பிளந்த நெஞ்சறையில் நூலிட்டு இறங்க திரவமாய்க் கசிந்தது இருள் தடுமாறிக் கடந்தால் காத்துப் பசித்தவொரு முதிய தாய் ஒரு நோயாளித் தந்தை மாலையிட்ட சில புகைப்படங்கள் தேகத்தின் பாதாளத்துள் இறங்க முதல் முற்றிலாக் கேவலால் துரத்துண்டோம் முள்ளாள் கிடந்த கனத்தது கண்ணீர் அவசரமாய் வெளியேறிய பின் மூடி துணிப் பந்தொன்றை அ

 

1988இல் ஒரு இலக்கிய இதழாக சுந்தர ராமசாமியால் நிறுவப்பட்ட காலச்சுவடு 24 ஆண்டுகளின் பயணத்திற்குப் பிறகு தற்போது தன் 150ஆம் இதழை வெளியிடுகிறது. இந்த நீண்ட பயணத்தில் ஒரு இதழாகக் காலச்சுவடு தமிழ் மனங்களில் பல அழுத்தமான தாக்கங்களை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை அதன் வாசகர்கள் அறிவர். பெரிதும் இலக்கியம், கலை சார்ந்து தொடங்கப்பட்ட அந்தப் பயணம் காலத்தின் தேவைகளை ஏற்று அரசியல், சமூகம், சூழலியல், மானுடவியல் என விரிவடைந்து சமகாலம் பற்றிய தீவிரமான உரையாடல்களுக்கான களமாக விரிவடைந்திருக்கிறது. தமிழின் முக்கியமான ஆளுமைகள் பலரின் விரிவும் ஆழமும் கூடிய நேர்காணல்கள் வழியாகவும் சிறப்புப் பகுதிகள் வழியாகவும் முன்னெடுத்து வந்துள்ள விவாதங்கள் ஒரு எழுத்தியக்கமாகக் காலச்சுவடு மேற்கொண்டுள்ள காத்தி

காலச்சுவடு-150, தொடரும் பயணம்
 

(பத்மநாப ஐயருக்கு 2005இல் இயல் விருது வழங்கப்பட்டதை அடுத்து திட்டமிடப்பட்டிருந்த புகழேந்தல் மலருக்காக எழுதப்பட்ட கட்டுரை. தற்போது வெளிவருகிறது.) 1990களின் தொடக்கம். நவீனத் தமிழ் இலக்கிய உலகில் ஒரு தேக்கம் உணரப்பட்ட காலம். காலச்சுவடு மலர் (1991) சிறுபத்திரிகைகளுக்கு இறுதிச் சடங்கைச் செய்துவிட்டதாகக் கல்குதிரை அறிவித்திருந்தது. அன்னம் பதிப்பகத்தின் தேய்வும் தமிழ்ப் புத்தக வெளியீட்டுத் துறையின் நலிவைக் காட்டுவதாக இருந்தது. அப்பொழுதெல்லாம் சென்னைப் புத்தகக் கண்காட்சியின் பாதைகள் காதலர் பூங்காவைப் போல் இருக்கும். பெங்களூரில் பொறியியல் படித்து முடித்து விட்டு வந்திருந்த கண்ணன் (இது ஓர் ஐதீகம். இதுவரை அந்தப் பட்டத்தைப் பார்த்தவர் யாருமில்லை. ‘கண்ணன் பேச்சில் “நட்

காலச்சுவடு-150, தொடரும் பயணம்
பழ.அதியமான்  

காலச்சுவடு பதிப்பகத்தின் ஆரம்ப கால முயற்சிகளை உள்ளிருந்து பார்த்து உணர்ந்ததை விவரிப்பது ஆ. இரா. வேங்கடா சலபதியின் மேற்கண்ட குறிப்பு. அது எழுதப்பட்டும் ஆறாண்டுகள் ஓடிவிட்டன. இன்று காலச்சுவடு பதிப்பகம் தன் காலை நன்றாக ஊன்றிவிட்டது எனச் சொல்லலாம். நவீன இலக்கியப் பதிப்புகளின் முன்னோடியாகவும் இடைநிலைப் பதிப்பகங்களில் குறிப்பிடத்தக்கதாகவும் அது வாசகர் மனத்தில் ஆழமாக ஊடுருவிவிட்டது. நவீன எழுத்தாளர்களின் படைப்புகளைக் கேட்டு வாசகர்கள் தேடிவருகிறார்கள். செய்ய வேண்டிய கடமையை நினைவூட்டுவது போன்ற உரிமையோடு இவ்வகைப் படைப்புகளை அவர்கள் கேட்பது முன் சொன்ன வரியை நியாயம் செய்கிறது. செலவைப் பற்றிக் கவலைப்படாமல் பதிப்பில் காட்டும் செய்நேர்த்தியும் உள்ளடக்கங்களு

கட்டுரை
வி. சுஜாதா  

இந்தியாவின் மருத்துவ முறைகளில் பல சிறந்த சிகிச்சை முறைகள் மட்டுமன்றி அவற்றோடு பிணைந்த அரிய தத்துவங்களும் நோயாளிக்கும் வைத்தியருக்குமுள்ள உறவு பற்றிய நெறிகளும் பொதிந்திருப்பதைக் காணலாம். நவீனச் சிகிச்சைகள் மலிந்துவிட்ட இக்காலகட்டத்திலும் இம்முறைகள் வழங்கிவருவது பழமையின் மீதான வெறும் பிடிப்பாலல்ல; அவற்றிலுள்ள சிகிச்சை முறைகளின் சிறப்பாலும் வைத்தியத்தில் நோயாளிக்கும் முக்கியப் பங்கு வழங்கப்படுவதாலும்தான். ஆசிய மருத்துவ முறைகள் பற்றிக் கடந்த முப்பதாண்டுகளாக மானுடவியல், சமூகவியல் ஆய்வுகள் பல வெளிவந்துள்ளன. மேலைநாடுகளில் கிட்டத்தட்ட 60 சதவீதத்தினர் மாற்று மருத்துவ முறைகளை நாடுவதால் சமீபத்தில் ஆய்வுகள் பெருகியுள்ளன. அலோபதி முறையின் செயல்பாடுகளைப் பற்றியும் மருத்துவர்கள் நோயாளிகள் ப

திரை
அரவிந்தன்  

தமிழ்ச் சமூகம் முழுமையும் ஒரே குரலில் பாலாஜி சக்திவேலுக்கு வாழ்த்துப்பா பாடிக்கொண்டிருக்கிறது. சில விதிவிலக்குகள் தவிர எங்குத் திரும்பினாலும் யாரைப் பார்த்தாலும் எந்த இதழைப் பிரித்தாலும் வழக்கு எண்: 18/9 திரைப்படம் பற்றிய உணர்ச்சிவசப்பட்ட பாராட்டுதல்களைக் காண முடிகிறது. நெகிழ்ச்சிமிக்க வரிகள் இணையதளங்களிலும் முகநூல் பக்கங்களிலும் கைப் பேசிகளின் குறுஞ்செய்திகளிலும் நிரம்பி வழிகின்றன. பொதுவாகவே ‘நல்ல’ செய்தி சொல்லும் படங்கள் தமிழ்ச் சூழலில் பெரும் பாராட்டுகளைப் பெறும். அவற்றில் கொஞ்சம் நேர்த்தி, சற்றே சுவாரஸ்யம், ஓரள வேணும் நடிப்பு, பாராட்டத்தக்க ஒளிப்பதிவு போன்ற விஷயங்கள் சேர்ந்துவிட்டால் கேட்கவே வேண்டாம். ஆட்டோகிராஃப், மொழி, தவமாய்த் தவமிருந்து, நான் கடவு

மதிப்புரை
அம்ஷன் குமார்  

திருச்சி சினி ஃபோரம் முழுவீச்சில் இயங்கிக்கொண்டிருந்த காலகட்டம். பிரெஞ்சு, ஜெர்மன், ருஷ்ய, ஜப்பான் உள்ளிட்ட பல உலக மொழிப் படங்களெல்லாம் அதன் அங்கத்தினர்களுக்காகத் திரையிடப்பட்ட - ஆனால் பக்கத்து மாநிலங்களில் எப்படிப்பட்ட படங்கள் தயாராகின்றன என்பதை அறிந்துகொள்ள முடியாத - நிலை. சமகாலத்தில் கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் எடுக்கப்பட்ட வித்தியாசமான படங்கள் விநியோகத்திற்கு மட்டுமே கிடைத்தன. அவற்றை விலைகொடுத்து வாங்கினால் சினிமா சங்கத்து அங்கத்தினர்களுக்குக் கட்டணம் வசூலித்துத்தான் திரையிட வேண்டும். சினிமா சங்கங்கள் டிக்கெட் விற்கக் கூடாது என்று விதிமுறை. பிற மாநிலங்களில் சினிமா சங்கங்களுக்கு அரசாங்கத்தின் வாயிலாகப் பல சலுகைகள் கிடைத்தன. தமிழ்நாட்டில் எந்தச் சலுகையும்

அஞ்சலி: கார்லோஸ் ஃபுவான்டெஸ் (11 நவம்பர் 1928 - 15 மே 2012)
என்னெஸ்  

லத்தீன் அமெரிக்க இலக்கியப் பேராசிரியரும் பின்னாளில் தனது வாழ்க்கை வரலாற்றை எழுதியவருமான ஜூலியோ ஆர்தெகாவுடன் இணைந்து தொகுத்த ‘பிகாடோர் புக் ஆஃப் லத்தீன் அமெரிக்கன் ஸ்டோரிஸ்’ (The Picador Book of Latin American Stories - 1997) நூலுக்கு மெக்ஸிக எழுத்தாளர் கார்லோஸ் ஃபுவான்டெஸ் ‘கதைசொல்லி’ என்னும் தலைப்பில் எழுதியிருக்கும் மூன்றரைப் பக்க முகப்புரை மிக நேர்த்தியானது, ருசிகரமானது, அகப் பார்வை கொண்டது. நாவலையும் சிறுகதையையும் ஒப்பிட்டு எழுதப்பட்டிருப்பது அந்த முகப்புரை. ‘நாவல் சமுத்திரத்தை ஊருருவிப் போகும் கப்பல். சிறுகதை கரையைத் தழுவிச் செல்லும் படகு. ஒருவன் அல்லது ஒருத்தி ஒற்றையானவர்கள். ஆனால் அவனோ அவளோ நாவலெழுத முற்பட்டால் துணைக்கு ஓர் ஒலிம்பிக்

பதிவு: பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு
மு.ராமநாதன்  

பழ. அதியமானின் பெரியாரின் நண்பர்: டாக்டர் வரதராஜுலு நாயுடு வரலாறு நூலின் வெளியீட்டு விழா ஏப்ரல் 14 அன்று சென்னை புக்பாயிண்ட் அரங்கில் நடந்தது. பேராசிரியர் சுப வீரபாண்டியன் நூலை வெளியிட்டார். வரதராஜுலு நாயுடுவின் மூத்த மகன் டாக்டர் வ. கிருஷ்ணதாஸின் மனைவி இந்து ராணியும் வரதராஜுலுவின் இளைய மகன் தயானந்தனும் நூலின் முதல் பிரதியைப் பெற்றுக்கொண்டனர். டாக்டர் பெருமாள் வரதராஜுலு நாயுடு (1887-1957) தமிழகத்தின் சமூக அரசியல் பத்திரிகை உலகில் அரை நூற்றாண்டு காலம் பல முன்னோடிச் செயல்களை நிகழ்த்தியவர். சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், சைமன் கமிஷன் எதிர்ப்பு, தமிழ்நாடு பத்திரிகை, குலக்கல்வித் திட்ட எதிர்ப்பு போன்றவை வரதராஜுலுவை நினைவில் நிறுத்துவன. பெரியாரின் நண்பராக விளங்கிய சேலம் வரதராஜு

 

திருவிதாங்கோடு முஸ்லிம் கலைக்கல்லூரியில் “சமகால இலக்கியங்களில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள்” என்னும் தலைப்பில் நடைபெற்ற இரண்டு நாள் கருத்தரங்க நிகழ்வுகளின் பதிவைச் சிறப்பாக வெளியிட்டதற்கு நன்றி. இஸ்லாமிய எழுத்தாக்கங்களுக்குக் காலச்சுவடின் இடையறாத பங்களிப்பு இதன் மூலம் மீண்டும் வெளிப்படுகிறது. கருத்தரங்க நிகழ்வுகளைக் களந்தை பீர்முகம்மது அவருக்கே உரிய பாணியில் சிறந்த பதிவாக்கியிருந்தார். மாற்றுக் கருத்துகளை எதிர்கொள்வதிலும் எதிர் வாதங்களை முன்வைப்பதிலும் இன்னும் ஜனநாயகத் தன்மையுடன் சமூகம் இயங்க வேண்டியது குறித்த களந்தையின் கூற்று கவனத்தில் கொள்ளப்பட வேண்டியது. கருத்தரங்கில் அவர் சொல்ல நினைத்தும் சொல்ல முடியாதுபோன “படைப்பாளிகளும் சமூக நல ஆர்வலர்களு

தலையங்கம்
 

ராகுல் காந்தியின் சகாவான நாடாளுமன்ற காங்கிரஸ் உறுப்பினர் மீனாட்சி நடராஜன் ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் தனிநபர் மசோதாவொன்றை நாடாளுமன்றத்தில் முன்மொழிந்ததை அடுத்து ‘ஊடகக் கட்டுப்பாடு’ மீண்டும் சர்ச்சைக்கு உள்ளாகியிருக்கிறது. அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அமைப்பின் வழி ஊடகங்களைக் கட்டுப்படுத்த இந்த மசோதா முனைகிறது. தேசிய பாதுகாப்பிற்கு முரணான செய்திகளைத் தடை செய்வது, ரூ.50 லட்சம் வரை ஊடகங்களுக்குத் தண்டம் விதிப்பது, தவறிழைக்கும் ஊடக நிறுவனத்தின் செயல்பாடுகளை 11 மாத காலம்வரை நிறுத்தி வைப்பது, அதன் உரிமத்தையே ரத்துசெய்வது போன்ற பல நடவடிக்கைகளை இந்த மசோதா முன்மொழிகிறது. பிரஸ் கவுன்சில் ஆப் இந்தியாவின் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்சுவும

உள்ளடக்கம்