கட்டுரை
 

‘‘நாம் வெறுக்கும் மக்களுக்கான கருத்துச் சுதந்திரத்தில் நமக்கு நம்பிக்கை இல்லையெனில் கருத்துச் சுதந்திரத்திலேயே நமக்கு நம்பிக்கை இல்லை என்பதே அதன் பொருள்’’ - நோம் சோம்ஸ்கி உரிமைகளில் சில அரசுகளால் தங்கள் குடிமக்களுக்கு வழங்கப்படுபவை; சில இயற்கையானவை. இயற்கையான உரிமைகள் மனிதர்களிடமிருந்து பிரிக்கப்பட முடியாதவை, பறிக்கப்பட முடியாதவை. அரசுகளுக்குக்கூட இவற்றைப் பறிக்கும் உரிமை இல்லை. இவை ஆங்கிலத்தில் natural rights அல்லது inalienable rights என்று அழைக்கப்படுகின்றன. உயிர் வாழ்வதற்கான உரிமை, கருத்துச் சுதந்திரம் ஆகியவை இவற்றுள் முக்கியமானவை. அறி வொளி காலகட்டப் புரட்சியின் விளைவாக மனித குலத்திற்குக் கிடைத்த கொடை இது. சிந்தனையும் பேச்சும் மனிதனுக்கு மட்

கட்டுரை
 

கேரளத்தில் அரசியல் படுகொலைகள் சகஜம். மாற்றுக் கருத்துக் கொண்டிருப்பவர்களை வன்முறை மூலம் அழித்தொழிப்பது எளிய அரசியல் தந்திரமாக அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. எதிராளியின் சதை, எலும்புகளை உரமாக்கி உண்டும் ரத்தத்தை நீராக்கி உறிஞ்சியும்தான் இங்கே அரசியல் அதிகாரம் தழைத்து வளர்ந்திருக்கிறது. இது கேரள அரசியலுக்கு மட்டுமல்ல தேசிய அரசியலுக்கும் பொருந்தும். இதில் எந்தக் கட்சியும் விதிவிலக்கானதல்ல. பல பதிற்றாண்டுகளாகக் கேரளத்தில் தொடரும் இந்த அரசியல் நடைமுறை கடந்த இரு பதிற்றாண்டுகளில் உச்ச கட்டத்தை எட்டியிருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்குப் பெரும் செல்வாக்குள்ள வட கேரளப் பகுதிகளான கண்ணூர் தலைசேரி வட்டாரங்களில் இம்மாதிரியான கொலைகள் தொடர்ந்து அரங்கேறிக்கொண்டிருக்கின்றன. இந்தப்

கட்டுரை
 

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறையின் என்சிஇஆர்டி வெளியிட்ட சிபிஎஸ்இ பாடநூலில் இடம்பெற்றிருந்த அம்பேத்கர் தொடர்பான கார்ட்டூனையடுத்து இந்தி எதிர்ப்பு போராட்டம் பற்றிய கார்ட்டூனும் எதிர்ப்புக்கு இலக்காகியுள்ளது. தமிழகத்தில் பெரும் அரசியல் மாற்றங்களை ஏற்படுத்திய இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி ஆங்கில நூல்களிலோ பாடநூல்களிலோ தவறாகச் சித்தரிக்கப்படுவதாகக்கூறும் நம்மிடையே அதைப் பற்றிச் சரியான தகவல்களைக் கொண்ட நூல்கள் கூடக் கிடையாது. போராட்டம் பற்றிக் கிடைப்பவையெல்லாம் அரைகுறையாக - மிகையாக எழுதப்பட்ட மிகச் சில நூல்களே. 1938-39ஆம் ஆண்டுகளில் தமிழ்ப் பகுதியில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் பலவகைகளில் அரசியல்ரீதியான திருப்பங்களை உருவாக்கியது. பெரும்தேக்கத்தை எட்டியிருந்த நீதிக்கட

கட்டுரை
பழ. அதியமான்  

ஒரு எழுத்தாளருக்குத் தன் படைப்பின் மீது பொருளாதாரம், அறம் சார்ந்து இரண்டுவித உரிமைகள் இருக்கின்றன. படைப்பைப் பதிப்பித்தல், மக்களிடம் பரப்புதல், வேறுவடிவத்துக்கு மாற்றுதல், மொழிபெயர்த்தல் போன்றவற்றின் மூலம் வருமானம் பெறுதல் ஆகியன பொருளாதார உரிமைகள். ஆசிரியநிலையை நிறுவிக்கொள்ளுதல், முழுமையைப் பாதுகாத்தல் அறவுரிமையில் பிரதானமானவை. நூலில் ஆசிரியர் தம் பெயரைப் பொறித்துக்கொள்ளுவது இந்தவகை அறவுரிமை சார்ந்தது. தமிழ்நாடு அரசு கண்ணகி சிலையை (2001ஆம் ஆண்டு) மக்கள் பார்வையிலிருந்து நீக்கியது. அப்போது, அந்தச் சிலையை உருவாக்கிய சிற்பி முழுமை உரிமை (integrity) சிதைவுபடுவதாகக் கூறி அணுகியிருந்தால் மனுவை வழக்குமன்றம் விசாரணைக்கு ஏற்றிருக்கும் எனக் கேரள வழக்கறிஞர் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்

ஓவியங்கள்: ஞானப்பிரகாசம்  

நிரம்பித் ததும்பும் நீர் உங்கள் கிணற்றிலிருந்து தூர் வாரி வெளியேற்றப்படும் வெற்று மண்ணாய்க் கொட்டப்படுகிறேன் நான். என் கிணற்றில் எப்போதும் நிரம்பித் ததும்பும் நீராக இருக்கிறீர் நீங்கள். இறகுகள் உதிர்ந்துகிடக்கும் ஏரி திருப்பித் துரத்தும் பேராறு எதிர்பாரா தருணத்தில் சாபச் சாம்பலை வீசிமறையும் வரம் கேட்ட தெய்வங்கள் புழுதி மண்ணில் புரண்டழுது அடம்பிடிக்கும் குளிப்பாட்டி துடைத்தெடுத்த நினைவுகள் தனித்தனியே விழிப்பைச் சுற்றிலும் பசித்த மலைப் பாம்புகளாகத் தொங்கிக்கொண்டிருக்கும் பயத்தின் நாவுகள் இருள் வனத்தில் மின்மினிப் பூச்சிகளாகிப் பறந்துகொண்டிருக்கும் உயிர் மனம் கவ்விப் பறக்கும் பெரும் பறவையொன்றின் வெளிர் வண்ண இறகுகள் உதிர்ந்து கிடக்கும் வற்றிய ஏரியில் வானம் உரசிப் ப

கட்டுரை
 

திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள கூடங்குளத்தில் இந்திய அணுமின் நிறுவனம் 1000 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட இரண்டு தண்ணீர் உயர் அழுத்த அணு உலைகளை நிறுவியுள்ளது. முதலாம் அணு உலை 2011 டிசம்பரில் செயலுக்குக் கொண்டுவரப்படவிருந்தது. தங்கள் வாழ்க்கைச் சூழலுக்குப் பாதிப்பு ஏற்படும் எனப் பயந்த அப்பகுதி மக்கள், அணு உலை இயக்கப்பட இருப்பதைத் தடுத்து நிறுத்தினர். தெரியவருகின்ற ஆவணங்களை ஆராயும்போது அணு உலையின் மையப்பகுதியையும் எரிந்து முடிந்த யுரேனியத்தையும் குளிர்விப்பதற்குத் தேவையான கையிருப்புத் தண்ணீர் அணுமின் நிலையத்தில் இல்லை என்பது தெரியவருகிறது. கூடங்குளம் அணுமின் திட்டத்தில் தண்ணீர் வெப்பக் குறைப்பானாகவும் (moderator) குளிர்விப்பானாகவும் தேவைப்படுகிறது. இத்திட்டத்தில் தண்ணீரு

கட்டுரை
 

சற்று யோசிக்கையில் ஹாலிவூட் சினிமாக்கள் ரம்போ 1, ரம்போ 2 போல் கடைசியாகக் காலச்சுவடில் எழுதிய பத்தியின் கட்டுரைத் தலைப்பையே இதற்கும் கொடுத்துப் ‘படிவார்ப்புகள் சிதைந்த கதை 2’ என எழுதியிருக்கலாம் எனத் தோன்றுகிறது. தலிபான்கள் என்றால் இறுக்கமான எண்ணம் நமக்கு இருக்கிறது. அவர்கள் கவிதை எழுதுவார்கள் என்று யாராவது உங்களுக்குச் சொன்னால் நம்புவீர்களா? தலிபான்கள் கவிதை எழுதுவது ராஜபக்ஷ ஈழ உரிமைக்காக உயிர்கொடுப்பார் என்று சொல்வதைப் போன்றது. அப்படிச் சொல்பவரை இரண்டுதடவையாவது மேலும் கீழும் கட்டாயம் பார்ப்பீர்கள். அவர் உங்களுக்கு வேண்டியவராக இருந்தால் அவரது புத்தி சுவாதீனம் பற்றி உங்களுக்குக் கவலையும் ஏற்படலாம். கட்டுங்கடங்காத தாடி, ஊத்தையான தலைப்பாகை, கசங்கிய நீண்ட உடுப்பு,

நாவல் பகுதி
 

அந்தப் பிற்பகலில், அம்மு ஒரு கனவின் வழியாக மேல்நோக்கிப் பயணம் செய்துகொண்டிருந்தாள். ஒரேயொரு கரத்தையுடைய ஓர் இனிய மனிதன் அவளை ஓர் எண்ணெய் விளக்கின் ஒளியால் தன்னோடு சேர்த்தணைத்துக்கொண்டிருந்தான். தரையில் அவனைச் சுற்றித் தோன்றி மறையும் நிழல்களுடன் போராடுவதற்கு இன்னொரு கை அவனுக்கில்லை. அவனால் மட்டும் பார்க்க முடிகிற நிழல்கள். அவன் வயிற்றின் தசை மடிப்புகள் தோலுக்கடியில் ஒரு சாக்லெட் பாளத்தின் பிரிவுகளைப் போல எழும்பின. அவளை ஓர் எண்ணெய் விளக்கொளியால் தன்னோடு சேர்த்துப் பிடித்திருந்தான். மெழுகுப் பாலீஷ் இட்டது போல் மினுமினுத்தான். அவனால் ஒரு நேரத்தில் ஒரு விஷயம்தான் செய்ய முடிந்தது. அவளை அவன் பிடித்துக்கொண்டிருந்தால், அவளை முத்தமிட முடியாது. அவளை முத்தமிட்டால் அவனால் அவளைப் பார்க

பத்தி: பல நாடு நெஞ்சினேம் - 1
பயணி  

முகத்தைத் தீய்த்த தீப்பந்தம் விலகியதைப் போல் இருக்கிறது எனக்கு. கை தட்டுகிறேன். நாடகம் முடிந்துவிட்டதென்ற ஆசுவாசம். ஆனால் வரலாறும் வலியும் கற்பனையும் கருத்தும் கொதித்த சாறு மனத்தில் அமிலமாய்ச் சொட்டிய இரண்டு மணி நேரம் இன்னும் இன்னுமென எனக்குள் விகசிக்கிறது. தில்லியிலுள்ள தேசிய நாடகப் பள்ளியில் நாடகம் பார்ப்பது பெரும்பாலும் மோசமாகாது. மாணவர்களுக்கு நாடக இலக்கியம் சொல்லித்தரும் நண்பர் ராஜேந்திரன் இயக்கும் ஜெர்மனிய நாடகம் என்பதால் கூடுதல் நம்பிக்கை. நாடகம் பார்க்கப் போகுமுன் அதைப் பற்றிக் கிடைத்தவரை படித்துவிட்டுப் போகும் வழக்கத்தில் தான் இதைத் தொடங்கினேன். இழுத்துக்கொண்டது. ஆச்சர்யமும் அதிர்ச்சியும் கன்னத்தில் மாறிமாறி அறைவது மரத்துப்போக நாடகம் பற்றிய தகவல்களின் ஆழத்தில் இருக

காலச்சுவடு-150, தொடரும் பயணம்
ஜே.பி.சாணக்யா  

சுந்தர ராமசாமி வெளியிட்ட காலச்சுவடு சிறப்பிதழைச் சென்னை வந்த புதிதில் மதியப்பொழுதொன்றில் நண்பர் ஒருவர் வீட்டில் பார்த்தேன். ஆதிமூலத்தின் ஓவியத்தால் அது நேர்த்தியாக அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஓவியத்தோடு பிணைப்பு கொண்டிருந்த என்னை அது ஈர்த்தது. காலச்சுவடு என்று ஒரு பத்திரிகை இயங்கிக்கொண்டிருந்தது என்பதையே அதன் பின்புதான் தெரிந்துகொண்டேன். அடிப்படை வாசிப்பனுபவம் பெற்றிருந்த நான் பல்வேறு எழுத்தாளர்களின் கதைகளை அதில் படித்தேன். அந்தக் கதைகள் அதுவரை நான் படித்திராத ஆழத்தைக் கொண்டிருந்தன. ஒருவிதமான ‘ருசி’க்கு ஆட்பட்டேன். காலச்சுவடு இதழைத் தேடும் ஆர்வத்தில், பழவந்தாங்கல், திரிசூலம் ரயில் நிறுத்தங்களைத் தவிர்த்து (அங்குப் புத்தகக் கடைகள் இல்லை) - நுங்கம்பாக்கத்தில் மட்டும

கட்டுரை
அசோகமித்திரன்  

காலம் ஜூன் 2012 இதழில் சச்சிதானந்தன் சுகிர்தராஜாவின் சமீபத்திய நூலாகிய பண்பாட்டுப் பொற்கனிகளின் மதிப்புரை வெளிவந்திருந்தது. தனியாக சுகிர்தராஜாவே உருக்கமான கட்டுரை ஒன்றும் எழுதியிருந்தார். அவருடைய அம்மா இந்த மார்ச் மாதத்தில் (உத்தேசமாக பிப்ரவரி - மார்ச் 2012) மதுரையில் இறந்துவிட்டார். வயதைக் கூற வேண்டுமானால் தமிழ்நாட்டின் முந்தைய முதலமைச்சர் வயது. மனிதர்கள் எழுதத் தொடங்கிக் குறைந்தது மூவாயிரம் ஆண்டுகள் ஆகியிருக்கும். இதிகாசங்களிலும் நாடகங்களிலும் எவ்வளவு விதவிதமான பொருள்கள் பற்றி எழுதியிருக்கிறார்கள்! சாபங்கள், வீரர்கள், தெய்வப் பிரசன்னம், அற்புதங்கள், பேச்சுகள், துவேஷம், பொறமை, காருண்யம், தியாகம் எனப் பல நிலைகளும் நிகழ்வுகளும் உணர்வுகளும் பதிவுசெய்யப்பட்டிருக்கின்றன. அநேகமா

கட்டுரை
ஸர்மிளா ஸெய்யித்  

மூன்று வருடங்களுக்கு முன்னர் இலங்கை வாழ் மக்களில் 90 சதவீதமானவர்கள் அறியாத முள்ளிவாய்க்கால் இன்று உலகப் பிரசித்தம் பெற்றதாகிவிட்டது. உலகத்தின் கவனத்தை ஈர்த்ததும் தமிழ் மக்களின் அரசியல், சமூக வாழ்விலிருந்து பிரித்து நோக்கவும் முடியாத இடத்தை முள்ளிவாய்க்கால் பெற்றுள்ளது. இலங்கைச் சிறுபான்மைத் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு குறித்த பிரக்ஞைகளைப் பல்வேறு காலகட்டங்களாகப் (1983 - 2009) பிரித்து நோக்க முடிந்தபோதும், முக்கியமாகப் போருக்கு முன்னர் - போருக்குப் பின்னர் அல்லது ஜெனீவாப் பிரகடனத்திற்கு முன்னர் - ஜெனீவாப் பிரகடனத்திற்குப் பின்னர் என இருவேறு கண்ணோட்டங்களில் பார்க்க வேண்டிய தேவைப்பாடு எழுந்துள்ளது. மே 2009இல் முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதிப்போரின் போதான கொலைக்குற்றங்கள

இயல் விருது 2012
 

கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் இயல் விருது விழா டொரொண்டோவில் ஜூன் 16ஆம் தேதி ராடிஸன் ஹோட்டலில் நடைபெற்றது. இவ்வாண்டு வாழ்நாள் இலக்கியச் சாதனைக்கான இயல் விருது எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது. எழுத்தாளரும் இயக்குநருமான மகேஷ் டத்தானி பரிசை வழங்க எஸ். ராமகிருஷ்ணன் பெற்றுக்கொண்டார். புனைவு இலக்கியப் பிரிவில் பயணக் கதை (காலச்சுவடு வெளியீடு) நாவலுக்காக யுவன் சந்திரசேகருக்கும் அபுனைவு இலக்கியப் பிரிவில் கெட்டவார்த்தை பேசுவோம் (கலப்பைவெளியீடு) நூலுக்காகப் பெருமாள் முருகனுக்கும் கவிதைப் பிரிவில் இரண்டு சூரியன் (உயிர்மை வெளியீடு) தொகுப்புக்காகத் தேவதச்சனுக்கும் எனக்குக் கவிதை முகம் (காலச்சுவடு வெளியீடு) தொகுப்புக்காக அனாருக்கும் மொழிபெயர்ப்பு பிரிவில் என் பெயர் சிவப்

மதிப்புரை
மணி வேலுப்பிள்ளை  

பி. ஏ. கிருஷ்ணன் திரும்பிச் சென்ற தருணம் என்னும் தமது கட்டுரைத் தொகுப்பில் ‘தமிழ் அளித்த நண்பர்’ என்று ஒருசிலரை மெச்சியுள்ளார். எனக்கோ தமிழ் அளித்த நண்பராகத் தென்படுபவர் கிருஷ்ணனே! காலம் ஆசிரியர் செல்வம் மேற்படி நூலை என்னிடம் அக்கறையுடன் கையளித்தபோது, வேண்டா வெறுப்பாகவே அதைப் புரட்டிப் பார்த்தேன். எனினும் கிருஷ்ணன் கையாண்ட மொழி உடனடியாகவே என்னை ஈர்த்துக்கொண்டது. சுந்தர ராமசாமி குறிப்பிட்டவாறு ஆழ்ந்து, விரிந்து, பரந்த ஆளுமை படைத்தவர் கிருஷ்ணன் என்பது புலப்பட்டது. கல்யாணராமன் தமது முன்னுரையில் குறிப்பிடுவதுபோல் “. . . ஒரு பொது வாசகன் புரிந்துகொள்ளக்கூடிய மொழியில், சுவிசேஷத் தொனியை அறவே தவிர்த்து எழுதும் அவரது அணுகுமுறை, வாசகனிடம் ஈர்ப்பையும் ஈடுபாட்டையும்

பதிவு: அற்றைத் திங்கள், மதுரை, மார்ச் 18, 2012
வெ. முருகன்  

ஏழஞ்சு வருசமா ஒழைச்சு என்னத்தக் கண்டோம் ஏறுபுடுச்சு ஒழைச்சு என்னத்தக் கண்டோம் என்று 18.03.2012 அன்று மதுரை அற்றைத்திங்கள் நிகழ்வில் பங்கேற்று உரத்தக் குரலில் பாடி தன் பேச்சைத் தொடங்கினார் முனைவர் கே. ஏ. குணசேகரன். அனுபவங்களைப் பாடல்களோடு சுவாரஸ்யமாகத் தொகுத்து வழங்கினார். நாட்டுப்புற பாடகர், நாடக நடிகர், நாடக ஆசிரியர், ஆட்டக்கலைஞர், எழுத்தாளர், நாட்டுப்புறவியல் ஆய்வாளர், விமர்சகர் என பல்துறை ஆளுமை கொண்ட கே.ஏ. குணசேகரன் கர்வமின்றி எளிமையாகப் பேசினார். எந்த எளிய மனிதனும் வாழ்க்கையில் உயர்ந்து செல்ல முடியும் என்ற உணர்வை அவரது உரை தந்தது. “ஒருவன் வாழ்வில் முன்னேற வேண்டுமானால் உழைத்தால் மட்டும் போதும் ஆனால் ஒடுக்கப்பட்டவனாகப் பிறந்தவன் மற்றவரைக் காட்டிலும் இரண்டு மூன்று மடங

பதிவு: தில்லி தமிழ்ச் சங்கம், புதுதில்லி, பிப்ரவரி 25, 2012
 

வாரிச் சூடினும் பார்ப்பவரில்லை நூல் உருவானவிதம் வித்தியாசமானது. அதன் உள்கதையின் சில பகுதிகளை நான் அறிவேன். அவற்றைக் குறித்தும் நூலாசிரியரைக் குறித்தும் சில செய்திகளை உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். ஒரு சிறிய கதையிலிருந்து தொடங்கலாம். டீன் கில்மோர் நடிகர், நாடக ஆசிரியர், இயக்குநர், கனடாவில் இருக்கும் டொரன்டோவில் வசிக்கிறார். அ. முத்துலிங்கம் இலங்கைத் தமிழ் எழுத்தாளர். அவரும் டொரன்டோவில் வசிக்கிறார். கில்மோரின் நாடகங்களைப் பார்த்துப் பிரமித்த முத்துலிங்கம், அவரைச் சந்தித்து உரையாடுகிறார். அது 2004ஆம் ஆண்டு. அப்போது ரஷ்ய மேதை செக்கோவின் ஆறாம் வார்டு என்னும் நீண்ட சிறுகதையை கில்மோர் நாடகமாக்கி மேடையேற்றியிருந்தார். ஒரு காட்சியில் மனநல மருத்துவமனைக் கட்டிலொன்று

 

மூத்த பத்திரிகையாளர் சின்னக்குத்தூசி நினைவு அறக்கட்டளையின் சார்பாக ஆண்டுதோறும் வெளியாகும் சிறந்த கட்டுரைகளுக்குப் பரிசு வழங்கப்பட உள்ளது. இந்த ஆண்டு முதன்முறையாக பழ.அதியமான், கி.இலக்குவன், இரா. உமா ஆகியோர் சிறந்த கட்டுரையாளர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்களில் பழ.அதியமான் எழுதிய ‘இறப்பில் உயிர்க்கும் பண்பாடு’ என்னும் கட்டுரை காலச்சுவடு மார்ச், 2011 இதழில் வெளியாகியிருந்தது. ஜூன் 15, 2012 அன்று சென்னையில் நடைபெற்ற எளிய விழாவில் கட்டுரையாளர்கள் பரிசுகளைப் பெற்றுக்கொண்டனர். ஒவ்வொரு கட்டுரைக்கும் ரூ. 10,000 பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது.

தலையங்கம்
 

விருதுநகர் மாவட்டம் கொட்டகச்சியேந்தல் கிராம ஊராட்சித் தலைவர் கருப்பன் தலித் என்பதற்காகத் தான் இழிவுபடுத்தப்படுவதாகவும் ஊராட்சிமன்றக் கூட்டங்களின்போது ஆதிக்கச் சாதியினர் தன்னைத் தரையில் உட்கார வைத்து அவமானப்படுத்துவதாகவும் குற்றம் சுமத்தினார். ஊராட்சித் தலைவர் என்ற முறையில் தன்னால் எவ்விதமான கடமைகளையும் ஆற்றமுடியவில்லை எனவும் ஆதிக்கச் சாதியைச் சேர்ந்த துணைத் தலைவர் ஆர். உமாமகேஸ்வரியின் கணவரும் ஊராட்சி அலுவலக எழுத்தரும் தன்னைப் பணிசெய்யவிடாமல் தடுப்பதாகப் புகாரளித்த கருப்பன் அவர்கள் தன்னைத் தொகை நிரப்பப்படாத காசோலைகளில் கையொப்பமிடும்படி நிர்பந்தப்படுத்துவதாகவும் மன்ற ஆவணங்கள், கணக்குப் புத்தகங்கள் போன்றவற்றைப் பார்வையிடுவதற்குக்கூட அனுமதிப்பதில்லை எனவும் கூறியிருக்கிறார்.

உள்ளடக்கம்